திங்கள், 4 டிசம்பர், 2017

"திங்க"க்கிழமை : கீரை வடை - அதிரா ரெஸிப்பி


கீரை வடை - அதிராஸ் ஸ்பெஷல்:)  

சமைக்க முதல், கையை வடிவாக் கழுவோணும் என அம்மம்மா சொல்லித் தந்தவ :)

ந்தக் கீரை வடைக்குப் பின்னால பாருங்கோ பெரிய ஸ்டோரியே ஒளிச்சிருக்கு:)... எனக்கு கீரை வடை ரொம்பப் பிடிக்கும்... எனக்கு மட்டுமே பிடிக்கும்:) அதனால வீட்டில் சுட நினைப்பதில்லை:). கனடா போனால் எல்லாத் தமிழ்க் கடைகளிலும் கிடைக்கும், ஆசைக்கு வாங்கிச் சாப்பிடுவேன். அங்கு ஒவ்வொரு வடையும் ஒரு உலக உருண்டை அளவு சைஸ்ல இருக்கும்.. அப்படித்தான் சுடோணுமாக்கும்.

இம்முறை போனபோது கீரை வடை என வாங்கினால்.. அது எப்படி இருந்ததெனில், மிஞ்சிய மரக்கறிகள் எல்லாம் போட்டுச் சுட்டதுபோல, பீற்றூட்கூட உள்ளே இருந்துது. சரி இப்போ என் கதைக்கு வாறேன்.

நான் கீரை வடை செய்வேன் என நினைச்சிருக்கவே இல்லை, ஆனா 2,3 நாட்களுக்கு முன்பு ஏகாந்தன் அண்ணனின் புளொக்குக்குப் போகலாமே கொமெண்ட்ஸ் போடலாமே.. என நினைச்சு.. எங்கள் புளொக்கில் அவரின் பெயரை டச்சுப் பண்ணினேனா... அது கூகிள் பிளஸ் ல கொண்டு போய் விட்டுது.. சரி வந்ததுதான் வந்திட்டோம்... இருப்பதைப் படிப்போமே எனத் தேடினால்....

அவர் எழுதியிருக்கிறார்.. தனக்கு கீரை வடை ரொம்பப் பிடிக்கும் தான் சென்னையில் ஒரு கடைக்கு ரெகுலராப் போய்ச் சாப்பிடுவேன் என்பதுபோல.... அதைப் பார்த்ததும், புளொக்கைத் தேடுவதையும் விட்டிட்டு, ஏகாந்தன் அண்ணனுக்காக கீரை வடை சுட்டுக் கொடுக்கலாமே என ஓடி வந்தால், பிரிஜ்ல பெரீய ஸ்பினாஜ் கீரை பக்கட் வாங்கி இருந்துதா..

உடனே உளுந்தை ஊறப்போட்டிட்டேன்...

<><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><>
சரி இப்போ ஒரு குட்டி இடைவேளை எடுக்கலாமோ?:).... இடைவேளையில் எதுக்குச் சும்மா இருக்கோணும்?:) அதனால நெல்லைத்தமிழனின், புளியோதரை சாப்பிடலாம் வாங்கோவன்.

ச்ச்ச்ச்சும்மா சொல்லப்பூடாது, இப்படி சுசி:) ல நெல்லைத்தமிழன் கூடச் செய்ய மாட்டார்:) அவ்ளோ சுவை தெரியுமோ?... உப்பு, காரம், அனைத்தும் கரெக்ட்டா இருந்துது...[நம்மளை நாமளேதான் புகழோணும்:) பின்ன அடுத்தவங்களோ வந்து புகழுவினம்?:)]

<><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><>

அதிரா செய்த கீரை வடைக்குத் தேவையான பொருட்கள்.............
உழுந்து , ஸ்பினாஜ் கீரை, றவ்வை, வெங்காயம், பச்சை மிளகாய்..

ஒரு கப் உளுந்தெனில், 3,4 ஸ்பூன்கள் றவ்வை சேர்த்தால் போதும். இதனை ஏன் சேர்க்கிறோம் எனில், வடை கிரிஸ்பியாக வரும்.

ப்போ உளுந்தை ஆகவும் மைபோல அரைக்காமல்.. 90 வீதம் அரைத்தால்தான் சுவை நன்றாக வரும், கீரையைக் குட்டியாக கட் பண்ணி, அனைத்தையும் சேர்த்து....

ப்பூடிக் குழைக்கோணும்:)... குழைத்த மாவை.. அடிச்சுப் பிடிச்சு.. அலுவலை முடிச்சிடோணும் என உடனே சுட்டிடாமல், .. குறைந்தது அரை மணித்தியாலமாவது பிரிஜ்ஜில் வைக்கோணும். உழுந்து வடையை இப்படி பிரிஜ்ஜில் வச்சுச் சுட்டால்... சூப்பராக இருக்கும். இப்போ கிளவி எழுமே.. எண்ணெய் குடிக்காதோ என?.. இல்லை குடிக்காது.. அதுக்கு குடிக்கத் தெரியாது:).. ஹா ஹா ஹா:).

பின்பு எடுத்து பெரிய பெரிய உலக உருண்டைகளாக்கிச் சுட்டால்.. என்னா சுசி தெரியுமோ?.. ச்ச்சும்மா பொது பொது என.. முத்தாச்சிக் கிழவி:) மாதிரி இருந்துது தெரியுமோ?:).. ஹா ஹா ஹா.., இந்த வடையை நீங்க சாப்பிட்டால்.. இதன் சுவையில்.. காணி, பூமி,, ஏன் வைர அட்டியலைக்கூட வித்து உளுந்து வாங்கிச் சுடுவீங்கள்:) அவ்ளோ சுசி:)..  இதில நடுவில் இருக்கும் வடையை ஏகாந்தன் அண்ணனுக்கு வச்சிடோணும் சொல்லிட்டேன்:)..ஸ்ஸ்ஸ் ஸ்ரீராம் நீங்க இப்போ டச்சுப் பண்ணக் கூடாது கர்ர்ர்ர்ர்ர்ர்:)... முதல் கொமெண்ட் போடுபவருக்கே முதலாவது:).

ஊசி இணைப்பு:
””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””





இன்று தனது  ...... வது பிறந்தநாளைக் கொண்டாடும் ஏஞ்சலினுக்கு அப்பா, அம்மா, பாட்டி, அப்பப்பா, அம்மம்மா, சகோதர, சகோதரிகள் வாழ்த்துத் தெரிவிக்கின்றனர்.  அவர்களுடன் எங்கள் குழுவும் அஞ்சுவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.




133 கருத்துகள்:

  1. ஏஞ்சலின் பல்லாண்டு பல்லாண்டு நலமுடன் வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. ஏஞ்சலின் பிறந்த நாளன்று இனிப்பு இல்லையா!..

    கீரை வடை தானா??..

    பதிலளிநீக்கு
  3. இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

    பதிலளிநீக்கு
  4. ஓ! ஏஞ்சல்!! யு ஆர் ஆல்வேஸ் அன் ஏஞ்சல்!!

    எங்கள் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள்!!! இறைவனின் அருள் என்றென்றும் நிறைந்திருக்கட்டும்!

    பதிலளிநீக்கு
  5. காலை வணக்கம் துரை சகோ அண்ட் ஸ்ரீராம்...

    அதிரா அது என்ன கீரை வடைனு போட்டுட்டு என் கீரை வடையைச் சாப்பிட்டா உங்களுக்குப் புளியோதரை கிடைக்கும்னு புளியோதரை??!!! கொடுத்துருகீங்களா!! ஹா ஹா ஹா

    இன்னும் வரேன் .....

    கீதா

    பதிலளிநீக்கு
  6. எனது பிறந்த நாள் வாழ்த்துக்களையும்இணைத்துக்கொள்ளுங்கள்
    தம+1

    பதிலளிநீக்கு
  7. கீரை வடை - பார்க்கவே யம்மியா இருக்கு. என்ன சைஸ் சின்னதா இருக்கு. மொறுமொறுப்பா வந்த மாதிரி தெரியலையே.

    பதிலளிநீக்கு
  8. ஏஞ்சலின் அவர்களுக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  9. சூப்பர் கீரை வடை!!! பார்க்கும் போதே சாப்பிடணும்னு தோணிடுச்சு. கோங்குரா/புளிச்ச கீரையில் செய்து பாருங்கள் அதிரா அதுவும் நன்றாக இருக்கும். அங்கு கிடைக்கிறதா என்று தெரியவில்லை. ஒரு சிறு புளிப்புடன் கூடிய சுவை. யும்மி உங்கள் வடை!!! லவ் இட்!!!

    கீதா

    பதிலளிநீக்கு

  10. பிறந்த குழந்தை எங்கே போயிடுச்சு......... வந்தா இந்த மதுரைத்தமிழன் வாழ்த்தினான் என்று மறக்கமா சொல்லிடுங்க.... பிறந்த குழந்தையை சந்தோஷப்படுத்தவாவது அதிரா தேம்ஸ் நதியில் குதிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுவிக்கிறேன்.... இதை மற்றவர்களும் ஆமோதித்து ஏஞ்சலை சந்தோஷப்படுத்த வேண்டும் அதிரா தேம்ஸ் நதியில் குதிக்கும் முன் அந்த வைர நெக்லைஸை ஏஞ்சலிடம் கொடுக்கவும்

    பதிலளிநீக்கு
  11. மலையாளத்தில் கூட "கலந்து" என்று சொல்வதைக் "குழைத்து" என்றுதான் சொல்வார்கள். சப்பாத்திக்குக் குழைச்சு, வடை மாவில் இப்படிப் போட்டுக் குழைக்கணும் என்றுதான் சொல்வதுண்டு..

    அது சரி அது என்ன உழுந்து??!!!! பூஸார் விழுந்தடித்து எழுந்து வந்து வடை தின்றார் என்பது கை ஸ்லிப்பாகி உழுந்து என்று வந்துவிட்டதோ..ஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு

  12. என் குழந்தையும் Sagittariusதான் ஏஞ்சலும் Sagittariusதான்

    பதிலளிநீக்கு
  13. அதிரா உங்கள் கீரை வடை இன்று நன்றாகப் போணியாகும்னு நினைக்கிறேன்...

    மதுரை ...ஹா ஹா ஹா ஹா அதிரா இல்லை மதுரை... அவங்க இப்ப புயல் தெரியும்ல!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  14. கடலைபருப்பு வடையில்தான் இப்படி கீரை போட்டு சுடுவோம் இப்பதான் உளுந்துவடையிலும் கீரை போட்டு சுடுவது பற்றி அறிந்து கொண்டேன்.. குட் அதிரா நல்ல இம்ப்ருவ்மெண்ட்....

    பதிலளிநீக்கு
  15. மதுரை தேம்ஸ்ல குதிக்கறதுக்குப்பதிலா இப்ப உங்க ஊருக்குப் புயலா வந்து மையம் கொண்டு விடாமல்...பார்த்துக்கோங்க...

    கீதா

    பதிலளிநீக்கு
  16. என் குழந்தைக்கு( அதிரா)பாட்டி வடை சுட்ட கதையை இதை படித்துதான் சொல்ல வேண்டும்

    பதிலளிநீக்கு
  17. பூஸார் படம் செம அதிரா...ரொம்ப க்யூட்...

    ஏஞ்சலின் வயதை ..... போட்டு ஸ்ரீராம் மறைமுகமாக...ஹிஹிஹி...சரி சரி ஏஞ்சல் எப்போதுமே 16 தான் தேவதை நா அப்படித்தானே இல்லையா?!!!! இப்ப பூஸாருக்கு வேர்க்கும்...புயல் வரும்பாருங்க...ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  18. என் குழந்தைக்கு( அதிரா)பாட்டி வடை சுட்ட கதையை இதை படித்துதான் சொல்ல வேண்டும்//

    ஹா ஹா ஹா ஹா செமையா சிரிச்சுட்டேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
  19. ஸ்ரீராம் இந்த பாட்டி வடை சுட்ட கதையை மறந்தார் போல திங்கள்கிழமை பதிவிட்டு இருக்கிறார்.இந்த பதிவு கதைகள் வரும் தினத்தில் அல்லவா வந்து இருக்க வேண்டும்.. தவறுகள் மன்னிக்கப்படும்

    பதிலளிநீக்கு
  20. என் குழந்தையும் Sagittariusதான் ஏஞ்சலும் Sagittariusதான்//

    ஹை அப்ப நிறைய sagi இருக்காங்க...என் பையன், நெல்லையின் மகன், கௌதம் அண்ணா, ஏஞ்சல் உங்கள் மகள்...சூப்பர்...இனியும் இருப்பார்கள் குழுவில் தெரியலை..

    கீதா

    பதிலளிநீக்கு
  21. வடை பக்கத்தில் கேன் இருந்ததும் ஆகா பீர் கேன் என்று பார்த்து ஏமாந்துவிட்டேன்

    பதிலளிநீக்கு
  22. மிமா ஆமாம் ல உப்பே போடலை...நானும் மீண்டும் வாசித்து வந்தேன்...உப்பில்லா வடை ஃபார் ஒப்பில்லா உப்பிலியப்பனுக்கோ?!!!! விரதமா அதிரா??!!!! இல்ல உப்பு போடாமத்தான் சுடணுமோ?!!! ஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
  23. புயலின் கூட தினமும் வாழ்க்கை நடத்து எனக்கு அதிரா புயல் எல்லாம் ஒன்றுமே இல்லை.. தினம் தினம் இங்கே இடி(அடி) இடித்தாலும் என்னை சுழற்றி சுழற்றி அடித்தாலும் அசராமல் இருப்பேன் ஹீஹீ

    பதிலளிநீக்கு
  24. மதுரை...ஹா ஹா ஹா கே வா போ ல போடணும்னு...ஹா ஹா கண்டிப்பா புயல் கர்ர்ர்ர்ர்ர்ர் தான் ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  25. .என் பையன், நெல்லையின் மகன், கௌதம் அண்ணா, ----- இவர்கள் அனைவ்ருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கெளதம் சாருக்கு வாழ்த்து பேஸ்புக்கில் வாழ்த்து சொல்லிவிட்டேன்

    பதிலளிநீக்கு
  26. நான் Scorpio என்னைப் போல மோசமான ஆள் இங்கே இருக்க மாட்டார்கள் என நினைக்கிறேன்

    பதிலளிநீக்கு

  27. இங்கே வந்து இருக்கும் இதே ஏஞ்சல் படத்தை ஆர்குட்டில் 10 வருடம் முன்னே பார்த்து இருக்கிறேனே.. அதே போட்டோவையே மீண்ண்டும் மீண்டும் போடடுவது குற்றம் அல்லவா

    பதிலளிநீக்கு
  28. துரை சகோ நல்லா கேட்டீங்க...நான் கேக்கணும்னு நினைச்சு மேல வந்தா நீங்க கேட்டிருக்கீங்க..அதானே இனிப்பு இல்லையா...பூசாரே!!

    கீதா

    பதிலளிநீக்கு
  29. ஏஞ்சலினுக்கு இங்கும் பிறந்தநாள் வாழ்த்துகள்.

    எனது வீட்டில் வாழைப்பூ வடை அடிக்கடி செய்வார்கள்.

    பதிலளிநீக்கு
  30. ஏஞ்சல் நமக்காக கிச்சனில் ஸ்வீட் பண்ணிக் கொண்டிருப்பார்கள் யாரும் டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்...

    பதிலளிநீக்கு
  31. ஆஹா இந்தப் புயல் இப்ப இங்க கீரை வடை போட்டுட்டாங்கனு மாஸ்டர் செஃப் ஆமே!!! அட! ஹா ஹா ஹாஹா...ஏஞ்சல் வாங்க சீக்கிரம்

    கீதா

    பதிலளிநீக்கு
  32. மதுரை உங்கள் கண்ணில் இன்னும் மாஸ்டர் செஃப் படலியா..

    கீதா

    பதிலளிநீக்கு
  33. புயலின் கூட தினமும் வாழ்க்கை நடத்து எனக்கு அதிரா புயல் எல்லாம் ஒன்றுமே இல்லை.. தினம் தினம் இங்கே இடி(அடி) இடித்தாலும் என்னை சுழற்றி சுழற்றி அடித்தாலும் அசராமல் இருப்பேன் ஹீஹீ//

    ஹா ஹா ஹா ஹா....

    கீதா

    பதிலளிநீக்கு
  34. கீரை வடைன்னா மொறு மொறுனு இருக்க வேண்டாமோ? நானும் உளுந்து வடையில் தான் கீரை போட்டுச் செய்வேன்! ஆனால் மொறுமொறு! எப்படினு இப்போச் சொல்ல மாட்டேனே!

    பதிலளிநீக்கு
  35. கில்லர்ஜிக்கும் இந்த மாதம் தான் பிறந்த நாளாம் அதிராவும், தனிமரம் நேசனும் சொல்லிருக்காங்க...

    ஸோ கில்லர்ஜிக்கும் எங்கள் அனைவரது பிறந்த நாள் வாழ்த்துகள்!

    கீதா

    பதிலளிநீக்கு
  36. ஏஞ்சலினுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  37. கில்லர்ஜிக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  38. ஏஞ்சலினுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    பூனைகள் தண்ணீரைக் கண்டாலே தலைதெறிக்க ஓடுமே. அதிராவின் பூனைமட்டும் கையெல்லாம் கழுவுதே..கடவுளே – இப்படியெல்லாமா உன் திருவிளையாடல் ?

    கீரைவடை பிடிச்ச சங்கதிதான். புளியோதரை இலவச இணைப்போ?

    பதிலளிநீக்கு
  39. @ Avargal Unmaigal said...

    >>> ஏஞ்சல் நமக்காக கிச்சனில் ஸ்வீட் பண்ணிக் கொண்டிருப்பார்கள் யாரும் டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்..<<<

    கடவுளே.. எங்களைக் காப்பாத்துங்கோ!..

    ராக்காயி கடை ஊத்தப்பம் ராமசேரி இட்லி ஆன மாதிரி....
    ஸ்வீட்(!?).. வேறெது மாதிரியும் ஆகிடக் கூடாது... வைரவா!!...

    பதிலளிநீக்கு
  40. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  41. மதுரைத் தமிழன் - பிறந்த தினம் மாதம் என்ன?

    பதிலளிநீக்கு
  42. ஆஹா.. எங்க வீட்டிலும் இன்று கீரை வடைதான். ஆனால் கடலைப்பருப்புடன். :) அதிராவின் கைவண்ணத்துக்குப் பாராட்டுகள்.

    ஏஞ்சலின்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

    முந்தைய பின்னூட்டத்தில் பெயர் மாறிப்போய்விட்டது. :)

    பதிலளிநீக்கு
  43. பூனைகள் தண்ணீரைக் கண்டாலே தலைதெறிக்க ஓடுமே. அதிராவின் பூனைமட்டும் கையெல்லாம் கழுவுதே..கடவுளே – இப்படியெல்லாமா உன் திருவிளையாடல் ?//

    ஹா ஹா ஹா ஏகாந்தன் சகோ பூஸார்கள் தேம்ஸில் குதித்து நீந்துமே நீங்களும் இங்கு பார்த்திருப்பீங்களே! அதான் அடிக்கடி பூஸார் தேம்ஸில் குதிக்கறேனு சொல்லுறது

    (பூனைகள் நீந்தும் தன்மை கொண்டவை..புலி ஃபேமிலிதானே!!..பைரவர்கள் கூட தண்ணீரில் நீந்துகின்றன. பொதுவாக நீர் அவர்களுக்குப் பிடிப்பதில்லை என்றாலும்.)..கடலோரப் பகுதியில் வாழும் பைரவர்கள் கடல் நீரில் நன்றாக நனைந்து சுகிப்பதைப் பார்த்திருக்கேன் புகைப்படம் எடுத்திருக்கேன்...வீடியோவும் எடுத்திருக்கேன்...வைசாக் கடற்கரையில், அப்புறம் இங்கு கிழக்குக் கடற்கரைச் சாலையில் என்று....என்னவோ இன்னும் தளத்தில் போட ஒரு சுணக்கம்...

    ஓ நீங்கள் அவங்களை கலாய்க்கறதுக்காகச் சொல்லிருக்கீங்க இல்லையா!

    கீதா

    பதிலளிநீக்கு
  44. கடவுளே.. எங்களைக் காப்பாத்துங்கோ!..

    ராக்காயி கடை ஊத்தப்பம் ராமசேரி இட்லி ஆன மாதிரி....
    ஸ்வீட்(!?).. வேறெது மாதிரியும் ஆகிடக் கூடாது... வைரவா!!...//

    ஹா ஹா ஹா ஹா...

    கீதா

    பதிலளிநீக்கு
  45. கீதாக்கா, நெல்லை வடை படத்துல அப்படித் தெரியுது அது வேறஓன்னும் இல்லை பூஸார் வடையொடு சேர்ந்து தேம்ஸ்ல குதிச்சுட்டாங்க....போல..(கீரை பருப்பு வடை மொறு மொறு என்று இருப்பது படத்தில் தெரியும்...உளுந்தில் செய்யும் கீரைவடை மொறு மொறு என்று இருப்பது படத்தில் தெரியுமா?!!!! அடுத்த முறை நான் செய்யும் போது ஃபோட்டோ எடுத்துப் பார்க்கணும்...ஒரு வேளை அவங்க டிஷ்யு பேப்பர்ல வைச்சுருக்கறதுனால் அப்படித் தெரியுதோ!!!?

    கீதா

    பதிலளிநீக்கு
  46. @ கீதா:

    //பூனைகள் நீந்தும் தன்மை கொண்டவை..புலி ஃபேமிலிதானே!!.//

    பூனையும் புலியும் ஒரே கோத்ரம்னு நீங்க சொல்றது உங்களோட புரிதல். பூனைக்குப் புரியுமா? அது பயம் அதுக்கு!

    இப்ப கீரையப் பத்தியும் வடையப்பத்தியும் பேசாம, பூனை, புலி-ன்னு ஆரம்பிச்சிட்டமே.. இந்த அதிரா ஏதாவது எழுதினா, ஏதாவது ஆயிருது..!

    பதிலளிநீக்கு
  47. ஏகாந்தன் சகோ!!!! ஹா ஹா ஹா ஒரே கோத்ரம் ஹா ஹ ஹா ஹா...

    //இப்ப கீரையப் பத்தியும் வடையப்பத்தியும் பேசாம, பூனை, புலி-ன்னு ஆரம்பிச்சிட்டமே.. இந்த அதிரா ஏதாவது எழுதினா, ஏதாவது ஆயிருது..!//
    ஹா ஹா ஹா ஹா..

    இப்ப அவங்க மாஸ்டர் செஃப் தெரியுமா...சகோ..பாருங்க இன்னிக்கு வரும் போது மாஸ்டர் செஃப்னு அவதாரத்துலதான் வருவாங்க....

    கீதா

    பதிலளிநீக்கு
  48. பிறந்தநாள் வாழ்த்துக்கள் அஞ்சு...

    வடை சூப்பரா இருக்கு அதிரா...

    நானும் வடையும் சுட்டு...படமும் சுட்டு வச்சு இருக்கேன்..ஆன அடுத்த மாதம் தான் ரிலீஸ்...

    பதிலளிநீக்கு
  49. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அஞ்சு.

    கீரை வடை சூப்பர் அதிரா. நானும் கடையில் இருப்பது போல் பெரிசா வருவதில்லை. நீங்க செய்திருப்பது நல்லா வந்திருக்கு.. நானும் ப்ரிட்ஜ் ல வைச்சுதான் பின் செய்வேன்.
    ஆனா நீங்க அஞ்சுவுக்கு கீரை வடை செய்து கொடுத்து ஏமாற்றிவிடமுடியாது... பேச்சு பேச்சா இருக்கோனும்.... அஞ்சு நோட் திஸ்ட்..

    பதிலளிநீக்கு
  50. ஏஞ்ஜலினுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். இன்று பிறன்தநாள் காணும் யாவருக்கும் வாழ்த்துகள். கீரை வடைக்கு மற்ற கீரை வகைகளும் இளசாக இருந்தால் போட்டுச் செய்யலாம். சற்று உளுந்தைக் கொரகொரப்பாக அரைத்ததில், வறுத்தறைத்த உளுத்தம் மாவு கடைசியில் சிறிது சேர்த்தால் கூட வடை கிரிஸ்பாக வரும். கீரை வடையெல்லாம் சூடு ஆறினபின் கரகரப்பை எதிர்பார்க்கக் கூடாது. அதிரா ரெஸிப்பி என்றால் பின்னூட்டங்கள் கூட ஸ்பெஷலா இருக்கு. பின்னூட்டங்கள் அள்ளுகிறது. அன்புடன்

    பதிலளிநீக்கு
  51. புளியோதரை படம் நல்லா வந்திருக்கு. மேல் கார்னர்ல உள்ள கறுப்பு நிற பழமும் இலையும் என்ன? முந்திரி வறுத்துப் போட்டீர்களா?

    பதிலளிநீக்கு
  52. ஆஆவ் !!! நான் வந்திட்டேன் !!!
    கீரை வடையை வச்சி tennikoit ரிங் விளையாட்டு விளையாடலாம்னு வந்தா :) மாபெரும் இனிய அதிர்ச்சி :) உலகமே என் பெர்த்டேவை கொண்டாடுது :))))) ஸ்ரீராம் கிட்டருந்து இன்னிக்கு ஒரு நாள் இந்த வார்த்தையை copy அடிச்சிக்கிறேன் ..தன்யனானேன் :)

    feeling blessed for birthday wishes

    மிக்க நன்றி ஸ்ரீராம் அன்ட் எங்கள் பிளாக் குழுவினர் அனைவருக்கும் .

    பதிலளிநீக்கு
  53. வாழ்த்துக்களுக்கு மிக நன்றி துரை அண்ணா :) ஆமா நல்லா கேளுங்க பூசாரை :) வடையோடுபாயாசமும் செஞ்சிருக்கனுமில்லையா :)

    பதிலளிநீக்கு
  54. துளசி அண்ணா .தேங்க்ஸ் தாங்க்ஸ் ..வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி அண்ணா

    பதிலளிநீக்கு
  55. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் அண்ணா

    பதிலளிநீக்கு
  56. ஹாஹா நெல்லைத்தமிழன் குறுக்கால வந்து டவுட் சிரிப்பு காட்டறார் :) இருங்க கடைசீல வந்து கும்மிபோடறேன் பூனையை

    பதிலளிநீக்கு
  57. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி நெல்லை தமிழன் :)

    பதிலளிநீக்கு
  58. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி மிகிமா :) மாதவி

    பதிலளிநீக்கு
  59. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி அன்பு நண்பர் ட்ரூத் :)
    உங்க குழந்தையும் டிசம்பரா !! அட்வான்ஸ் வாழ்த்துக்களையும் ஆசீர்வாதங்களையும் சொல்லிடுங்க செல்லத்துக்கு
    அது நேற்று சர்ச்சில் நிறைய செலிப்ரேஷன்ஸ் அட்வென்ட் அப்புறம் சில கெட் டு கெத்தார்னு அதில் தூங்கிட்டேன் அதான் வர லேட்டாகிடுச்சி :)

    பதிலளிநீக்கு
  60. கீதா அன்ட் துளசி அண்ணா :) அன்பு வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  61. அன்பு வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஏகாந்தன் சார் :)

    பதிலளிநீக்கு
  62. அன்பு வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி கீதா சாம்பசிவம் அக்கா :)

    பதிலளிநீக்கு
  63. வாவ் !! கீதா மஞ்சரி எவ்ளோ நாளாச்சு வலைப்பக்கம் பார்த்து ..மிக்க நன்றிப்பா அன்பான வாழ்த்துக்களுக்கு

    பதிலளிநீக்கு
  64. அஆவ் !! ப்ரியா மிக்க நன்றிப்பா வாழ்த்துக்களுக்கு :) விட மாட்டோம் வைர மோதிரம் தந்தாத்தான் விடுவோம் நானும் சொல்லிட்டேன் பூனைக்கிட்ட

    பதிலளிநீக்கு
  65. அன்பு வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி காமாட்சி அம்மா :)

    பதிலளிநீக்கு
  66. அன்பு வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி அனுராதா பிரேம் :)

    பதிலளிநீக்கு
  67. மக்களே எல்லாரும் ஒரு பக்கம் என்னை வாழ்த்தினாலும் காரியத்தில் கருத்தா கண்ணா இருக்கணும் சொல்லிட்டேன் :)
    அந்த மாஸ்டர் செஃப் அடைமொழி பார்த்து எத்தினி பேர் மயக்கமாகிட்டாங்களோ :) கணக்கெடுத்து கவர்ன்மெண்டுக்கு அனுப்பனும் சொல்லிட்டேன்
    அந்த கீரை வடையை சுழட்டி அடிக்க கொஞ்ச நேரத்தில் வரேன் :)))

    பதிலளிநீக்கு
  68. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி கில்லர்ஜி ..அஆவ் !! மாஸ்டர் செஃப் என்ற வார்த்தை என் கண்ணை குழப்புது ..வடையும் தலை மேலே அடிக்குது பூமராங் மாதிரி பாருங்க கில்லர்ஜிக்கு நன்றி சொல்ல மறந்துட்டேன் :)

    பதிலளிநீக்கு
  69. நம்ம ஏரியாவில்..

    இப்போது வெளியாகியிருக்கிறது.

    ​க க க போ 5 ; கதை 1​

    https://engalcreations.blogspot.in/2017/12/blog-post.html

    பதிலளிநீக்கு
  70. ஆவ்வ்வ்வ் மீயும் லாண்டட்ட்ட்ட்:) எங்கே எங்கே என் கீரை அடை சே..சே வடை எங்கே?:)) ஆரும் டச்சுப் பண்ணினவையோ.. கர்ர்ர்:))..

    /////
    இன்று தனது ...... வது பிறந்தநாளைக் .///

    எதுக்கு இந்த இடைவெளி ஸ்ரீராம்?:).. அஞ்சு ஒண்ணும் தப்பா நினைக்க மாட்டா:).. 66 என தெளிவா இடைவெளியை நிரப்பியிருக்கலாமே:) அது படம் 35 வருடத்துக்கு முன்னாடி எடுத்தது:))

    ///கொண்டாடும் ஏஞ்சலினுக்கு அப்பா, அம்மா, பாட்டி, அப்பப்பா, அம்மம்மா, சகோதர, சகோதரிகள் வாழ்த்துத் தெரிவிக்கின்றனர்////

    ஐ ஒப்ஜக்‌ஷன் யுவ ஆரர்:)))... சுவீட் 16 தங்கை அதிராவும் வாழ்த்துகிறார் எனப் போட்டிருக்கோணும்:)..

    பதிலளிநீக்கு
  71. //அஞ்சு ஒண்ணும் தப்பா நினைக்க மாட்டா:).//
    garrrrrrrrr :)

    பதிலளிநீக்கு
  72. ஹா ஹா ஹா பாருங்கோ வைரவர் எப்பவும் அதிரா பக்கம்தேன்ன்ன்ன்:).. என் கீரை வடை ரெசிப்பிக்கு பொல்லு, கத்தி கோடாரி எடுத்துக்கொண்டு ஓடி வந்தோரெல்லாம் அதைக் கீழே போட்டிட்டு திட்டுவதை மறந்து அஞ்சுவை வாழ்த்தி விட்டுச் செல்கின்றனர்:)... ஹா ஹா ஹா..

    பிள்ள உனக்குச் சனிமாற்றம் உச்சியில கொண்டுபோய் விடப்ப்போகுது என முச்சந்திச் சாத்திரியார் சொன்னது கரீட்டா நடக்குதே:)..

    என் கீரை வடையை சாப்பிட்டு வாழ்த்திய அனைவருக்கும், வெளியிட்ட எங்கள் புளொக்கின் மூன்றாவது:) ஆசிரியர்.. ஸ்ரீராமுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  73. நெல்லைத்தமிழன்... மிகவும் சொவ்ட்டாக உள்பக்கமும், வெளிப்பக்கம் மொறுமொறு எனவும் இருந்துது, இதைவிடப் பெரிய உருண்டை பிடிக்க முடியல்ல என் கையால:).. வழமையாக நான் சுடுவதை விட இது பெரிசு.. நன்றி.

    பதிலளிநீக்கு
  74. கீதா///

    ஓ கொங்குரா, எங்கள் தமிழ்க்கடைக்கு இடைக்கிடை வரும்.. வாழ்க்கையில் முதேல் தடவையா வாங்கி வந்து.. சமைசுச்ப் பார்த்தேன் புடிக்கவில்லை விட்டிட்டேன்ன்.. வடைக்குப் போடலாம் எனத் தெரியாமல் போச்ச்சே...

    //அது சரி அது என்ன உழுந்து??!///

    ஹா ஹா ஹா கீதா, இது பலதடவை திருத்தியிருக்கிறார்கள் ஆனா எழுதும்போது ஒரு ஃபுளோவா வந்திடுதே கர்:))

    பதிலளிநீக்கு
  75. மூன்றாவது ஆசிரியர்....

    கிர்ர்ர்ர்ர்ர்!

    // வழமையாக நான் சுடுவதை விட//

    எப்படி? கைத்துப்பாக்கியாலா? இயந்திரத் துப்பாக்கியாலா? இன்று மதுரைத் தமிழன் Full Formல வந்திருக்கார்!

    பதிலளிநீக்கு
  76. //middleclassmadhavi said...///
    Intha vadaiku uppe vendama? :)))///

    ஹா ஹா ஹா மி கி மாதவியையும் பழக்கிட்டாங்கோ அதிராவில பிழை கண்டு பிடிக்க:).. ஹையோ கூட்டுச் சேர்ந்திட்டாங்கம்மா கூட்டுச் சேர்ந்திட்டாங்க:)).. எப்பூடித்தான்.. எங்கின வச்சுத்தான் ரெயினிங் குடுத்து பழக்கி எடுக்கினம் எல்லோரையும்:) அதிராவை அடிக்க.. ஹா ஹா ஹா:).. உப்பைச் சொல்ல எப்பூடி மறந்தேன்:).. சரி ஜமாளிச்சிடலாம்:)..

    அது ஏகாந்தன் அண்ணனுக்கு உப்பு ஆகாதாக்கும்:) அதனால போடல்ல:))

    பதிலளிநீக்கு
  77. //Avargal Unmaigal said...//

    பிறந்த குழந்தையை சந்தோஷப்படுத்தவாவது அதிரா தேம்ஸ் நதியில் குதிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுவிக்கிறேன்.... இதை மற்றவர்களும் ஆமோதித்து ஏஞ்சலை சந்தோஷப்படுத்த வேண்டும் அதிரா தேம்ஸ் நதியில் குதிக்கும் முன் அந்த வைர நெக்லைஸை ஏஞ்சலிடம் கொடுக்கவும்/////

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் * 4563745. ஸ்ஸ்ஸ்ஸ் நான் என்ன மாட்டேன் எண்டா ஜொள்றேன்ன்:) இல்ல எனக்கென்ன பயமோ?:). அது இண்டைக்கு பிறந்தநாள்ல குதிக்கப்பூடாது எனும் நல்லெண்ணத்தில மீ ஒத்தி வச்சுட்டேன்ன் குதிப்பதை:)..

    ஹையோ நாங்க ஒருகாலமும் பருப்பில் கீரை வடை சுவதில்லை.. கீரவடை எனில் அது உளுந்தாகத்தான் இருக்கும் ட்றுத் நம் நாட்டில்.. இனி முயற்சிக்கிறேன்ன்.. வேணுமெண்டால் ட்றுத்ட பேர்த்டேக்கு சுட்டுப் போட்டிடலாம்ம்.. முதலில் ஆண்டைச் சொல்லி:) பின்பு திகதி மாதம் நேரம் ஜொள்ளுங்கோ:) ஹா ஹா ஹா:)..

    பதிலளிநீக்கு
  78. ///Avargal Unmaigal said...
    ஸ்ரீராம் இந்த பாட்டி வடை சுட்ட கதையை மறந்தார் போல திங்கள்கிழமை பதிவிட்டு இருக்கிறார்.இந்த பதிவு கதைகள் வரும் தினத்தில் அல்லவா வந்து இருக்க வேண்டும்.. தவறுகள் மன்னிக்கப்படும்///

    ஹா ஹா ஹா நாளைய தினத்தை நினைச்சேன்ன்ன்ன்ன்ன் சிரிச்சேன்ன்ன்ன்ன்ன்:)).. ஹா ஹா ஹா நாளைக்கு ஒரு பாட்டி வடை சுடுவா பாருங்கோ:))

    பதிலளிநீக்கு
  79. //Geetha Sambasivam said...
    கீரை வடைன்னா மொறு மொறுனு இருக்க வேண்டாமோ?//

    இதுவும் ஒருவித மொறுமொறுத்தான் கீதாக்கா.. ஒருதடவை செய்து பாருங்கோ.. பிடிச்சிடும் உங்களுக்கு...

    ரகசியத்தை விரைவில் அவிட்டு விடுங்கோ:)

    பதிலளிநீக்கு
  80. ///ஏகாந்தன் Aekaanthan ! said...

    பூனைகள் தண்ணீரைக் கண்டாலே தலைதெறிக்க ஓடுமே. அதிராவின் பூனைமட்டும் கையெல்லாம் கழுவுதே..கடவுளே – இப்படியெல்லாமா உன் திருவிளையாடல் ?///

    நான் மட்டுமில்லை பூஸும் எப்பவும் எதிலயும் வித்தியாசமா இருக்கோணும் எனத்தான் நினைப்பேன்ன்:))

    ///கீரைவடை பிடிச்ச சங்கதிதான். புளியோதரை இலவச இணைப்போ?///
    இது, உங்கள் புளொக் தேடி அலைஞ்ச காலத்தில் சுட்ட வடை:).. இப்போதான் வெளிவந்திருக்க்குது:)..

    இடைவேளையில் சாப்பிடப் புளி.. தரை செய்தேனாக்கும்...

    பதிலளிநீக்கு
  81. ///கீத மஞ்சரி said...
    ஆஹா.. எங்க வீட்டிலும் இன்று கீரை வடைதான். ஆனால் கடலைப்பருப்புடன். :) அதிராவின் கைவண்ணத்துக்குப் பாராட்டுகள். //

    நீண்ட இடைவேளையின் பின் கீதா..!!!..
    நானும் ஒரு தடவை பருப்பில் ,கீரை வடை செய்து பார்க்கோணும்..

    பதிலளிநீக்கு
  82. //ஒரு வேளை அவங்க டிஷ்யு பேப்பர்ல வைச்சுருக்கறதுனால் அப்படித் தெரியுதோ!!!?///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கீதா நான் எங்க ரிஸ்யூ பேப்பரில வச்சேன்ன்:))..

    @ ஏகாந்தன் Aekaanthan ! said...///இப்ப கீரையப் பத்தியும் வடையப்பத்தியும் பேசாம, பூனை, புலி-ன்னு ஆரம்பிச்சிட்டமே.. இந்த அதிரா ஏதாவது எழுதினா, ஏதாவது ஆயிருது..!///

    ஹா ஹா ஹா இப்பூடி டைவேர்ட் ஆவதினாலதானே அப்பப்ப மீ தப்பிச்சு ஓடிடுறேன்ன்:))

    பதிலளிநீக்கு
  83. //இப்ப அவங்க மாஸ்டர் செஃப் தெரியுமா...சகோ..பாருங்க இன்னிக்கு வரும் போது மாஸ்டர் செஃப்னு அவதாரத்துலதான் வருவாங்க....

    கீதா///

    ஹா ஹா ஹா கீதா:)).. மாஸ்டர்செஃப் என ஒரு அவோர்ட் இருக்கு இங்கெல்லாம்:).. அது கிடைபது ரொம்பக் கஸ்டம் தெரியுமோ?:) மீக்குக் கிடைச்சிருக்கே:)) [எனக்கு நானே கொடுத்தேனாக்கும் ஹா ஹா ஹா].

    //Anuradha Premkumar said...//

    போடுங்கோ பார்ப்போம் உங்கள் ரெசிப்பியை..

    பதிலளிநீக்கு
  84. @ priyasaki said...

    ஆனா நீங்க அஞ்சுவுக்கு கீரை வடை செய்து கொடுத்து ஏமாற்றிவிடமுடியாது... பேச்சு பேச்சா இருக்கோனும்.... அஞ்சு நோட் திஸ்ட்..///

    ஹா ஹா ஹா அந்த வைர நெக்லெஸ் சமாச்சாரம்தானே?:).. அது பொறுங்கோ அந்த உண்டியல் முட்டட்டும்:) ஏமாத்தாமல் செஞ்சு குடுத்திடுவேன்ன்:))

    @ 1:57 AM
    காமாட்சி said...
    சற்று உளுந்தைக் கொரகொரப்பாக அரைத்ததில், வறுத்தறைத்த உளுத்தம் மாவு கடைசியில் சிறிது சேர்த்தால் கூட வடை கிரிஸ்பாக வரும். கீரை வடையெல்லாம் சூடு ஆறினபின் கரகரப்பை எதிர்பார்க்கக் கூடாது. அதிரா ரெஸிப்பி என்றால் பின்னூட்டங்கள் கூட ஸ்பெஷலா இருக்கு. பின்னூட்டங்கள் அள்ளுகிறது.///

    ஓ காமாட்ஷி அம்மா, உங்கள் ரிப்ஸ் ஐ மனதில் வைத்துக்கொள்கிறேன், அடுத்ததடவை பயனாகும்...

    பதிலளிநீக்கு
  85. ///நெல்லைத் தமிழன் said...
    புளியோதரை படம் நல்லா வந்திருக்கு. மேல் கார்னர்ல உள்ள கறுப்பு நிற பழமும் இலையும் என்ன? முந்திரி வறுத்துப் போட்டீர்களா?//

    முந்திரி, கச்சான் சேர்த்தேன் நெ.தமிழன்... கறுப்புப் பயம்:) அது ஹா ஹா ஹா ச்ச்ச்சும்மா அலங்கரிச்சேன்ன் அது கிரேப்ப்ப்ப்ப்சூஊஊஊஊஊ அண்ட்டு புதினா இலை வச்சிருக்கிறேன்ன் படத்தை அயகாக்கிப் போட்டால்தானே ஒரு கவர்ச்சி இருக்கும்:))

    பதிலளிநீக்கு
  86. //Angelin said...
    ஆஆவ் !!! நான் வந்திட்டேன் !!!
    கீரை வடையை வச்சி tennikoit ரிங் விளையாட்டு விளையாடலாம்னு வந்தா :) மாபெரும் இனிய அதிர்ச்சி :) உலகமே என் பெர்த்டேவை கொண்டாடுது :)))))//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஓவரா துள்ளப்பூடாது:) உலகம் ரொம்பப்ப்ப்ப் பெரிசூஊஊஊ:) இதை கண்டுகொள்ளாமல் விட்டல்ல். இனி தான் தான் எலிசபெத் குயின் எனச் சொன்னாலும் ஜொள்ளிடுவா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அது கூட ஓகே.. வயசில ஒண்டுதானே:).. சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ் மீ ரொம்ப பிஸி:)..

    என் கீரை வடை பற்றி சொல்லவே இல்ல கர்ர்ர்ர்ர்:)

    பதிலளிநீக்கு
  87. ///ஸ்ரீராம். said...
    மூன்றாவது ஆசிரியர்....

    கிர்ர்ர்ர்ர்ர்!////

    ஹா ஹா ஹா 2 வது ஆசிரியருக்கு 2ம் திகதி பிறந்தநாள் வந்திட்டுது எனச் சொன்னீங்க:) அதனாலதான் கண்டுபிடிச்சேன் நீங்க மூணாவது என்பதை ஹா ஹா ஹா:))..

    // வழமையாக நான் சுடுவதை விட//

    எப்படி? கைத்துப்பாக்கியாலா? இயந்திரத் துப்பாக்கியாலா? இன்று மதுரைத் தமிழன் Full Formல வந்திருக்கார்!///
    ஹா ஹா ஹா திங்கட்கிழமை காலையில் அவர் எப்பவும் அப்படித்தான் பாதி மயக்கத்தில் இருப்பார்ர்.. சண்டே நைட் பாட்டி போறவர்போல ஹையோ எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:))

    பதிலளிநீக்கு
  88. முதலாவதா வந்தும் என் கீரை வடைபற்றிச் சொல்லாத துரை அண்ணனையும்.. மற்றும் மூச்ச்ச்ச் காட்டாத ஸ்ரீராமையும் வன்மையாக் கண்டிக்கிறேன் நான்ன்ன்ன்:)..

    பீஈஈஈ கெயாஃபுல்.. ஹையோ இது எனக்குச் சொன்னேன்ன்ன்ன்ன்:))..

    ஆராவது இங்கின கீரை வடை சாப்பிடாமல் ஒட்டி இருந்து பார்த்திட்டுப் போகினமோ?:) விடவே மாட்டேன்ன்ன் இண்டைக்கு...:)

    http://rs982.pbsrc.com/albums/ae309/nikki_jade23/cat-with-gun.jpg?w=280&h=210&fit=crop

    பதிலளிநீக்கு
  89. //மற்றும் மூச்ச்ச்ச் காட்டாத ஸ்ரீராமையும் வன்மையாக் கண்டிக்கிறேன் //

    சிலகாலம் முன்பு என் முதல்தெரிவாக மொறுமொறு உளுந்து வடை இருந்தது. அது எப்பவுமே என் அப்பாவின் ஃபேவரைட்! அப்புறம் நீண்ட நாட்களாக சுவைக்காமல் இருந்த மசால் வடை பக்கம் கவனம் திரும்பியது. ஒரே விஷயத்தில் இருந்தால் போரடித்து விடுமன்றோ?!

    கீரை வடை எப்பவுமே என் மூன்றாவது தெரிவுதான்! இதில் ஒரு உண்மை என்ன என்றால் நானிருக்கும் ஏரியாவில் பெரும்பாலும் கீரைவடை கிடைப்பதில்லை. கீரைவடை எந்த ஏரியாவில் கிடைக்கும் என்பதை நான் அறிந்திருக்கவில்லை. எனவே எனக்கும் அதற்குமான உறவு ரொம்பக் குறைவு. என் வாழ்வில் ஓரிருமுறை சுவைத்திருப்பேன். அவ்வளவே.

    இந்நிலையில் உளுந்து வடையில் கீரைவடை என்கிற அதிர்ச்சியில் - நான் கடலைப்பருப்பில்தான் கீரைவடை கேள்விப்பட்டிருக்கிறேன் - வாளாவிருந்து விட்டேன். மன்னிக்கவும்!

    பதிலளிநீக்கு
  90. "இதைவிடப் பெரிய உருண்டை பிடிக்க முடியல்ல என் கையால" - இதை பிளாஸ்டிக் ஷீட்டில் (அல்லது எண்ணெய் தடவிய தட்டில்) கொஞ்சம் பெரிசாக தட்டையாகத் தட்டி, எண்ணெயில் பொரிச்செடுத்தால் இன்னும் மொறுமொறுப்பா இருக்கும்னு தோணுது. (கீழ்த் திருப்பதில அலர்மேல்மங்கைத் தாயார் கோவில்ல நெய்ல பொரிச்செடுத்த வடை தருவாங்க.. கிட்டத்தட்ட 1/2 அடிக்கு குறுக்குவெட்டு. நல்ல பெருசா மொறுமொறுப்பா இருக்கும்) செய்துபார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  91. உங்க புதுப் பட்டம் 'மாஸ்டர்செஃப்' நல்லா இருக்கு. எந்த எந்தத் திறமை இருக்கவேண்டும் என்று கனவு காண்கிறீர்களோ அந்தப் பெயர்களையெல்லாம் நீங்களும்தான் போட்டுப்பார்க்கிறீங்க. அடுத்தது, 'லேடி ஹுசைன் போல்ட் அதிரா' (அர்த்தம் தவறா வருதோ? சரி. சரி... Florence Griffith-Joyner அதிரான்னு வேணும்னா போட்டுக்கோங்க. நீங்கதானே 1500 மில்லி மீட்டர் ஓட்டப்பந்தயத்துல, ரெண்டுபேர் போட்டியிட்டு, ரெண்டாவதா வந்தீங்க)

    பதிலளிநீக்கு
  92. அச்சச்சோஒ என் கீரை வடைக்கு நானே வோட் போட மறந்திட்டனே:)).. என்பக்க அதிராவும் எங்கள்புளொக் அதிரவும்.. தமிழ்மணத்தில ட்ரோ ல நிக்க்குதூஊஊ ஹா ஹா ஹா:))

    ///ஸ்ரீராம். said...
    //மற்றும் மூச்ச்ச்ச் காட்டாத ஸ்ரீராமையும் வன்மையாக் கண்டிக்கிறேன் /////

    ஒவ்வொருவருக்கும் துவக்கு , கோடாரி, கத்தி காட்டி மிரட்டி எல்லோ கொமெண்ட் வாங்க வேண்டி இருக்கு:).. அப்போ பாருங்கோ அதிராவின் நிலைமை ஹா ஹா ஹா:)..

    எங்களுக்கும் இங்கு எதுவும் கிடைக்காது ஸ்ரீராம், ஆனா கடையில் வாங்குவதை விட கீரை வடை வீட்டில் செய்வதுதான் எனக்கு எப்பவும் சுவையாகத் தெரியுது.

    பதிலளிநீக்கு
  93. //நெல்லைத் தமிழன் said...
    "இதைவிடப் பெரிய உருண்டை பிடிக்க முடியல்ல என் கையால" - இதை பிளாஸ்டிக் ஷீட்டில் (அல்லது எண்ணெய் தடவிய தட்டில்) கொஞ்சம் பெரிசாக தட்டையாகத் தட்டி, எண்ணெயில் பொரிச்செடுத்தால் இன்னும் மொறுமொறுப்பா இருக்கும்னு தோணுது.///

    ஓ இனி இன்னொரு தடவை அப்படி ட்ரை பண்றேன்... ஆனா உண்மையில் இம்முறை வழமையை விட சூப்பரா.. வெளியே மொறுமொறுப்பா வந்துது நெல்லைத்தமிழன். ஆனா உளுந்தை அரைச்சு கொஞ்ச நேரமாவது ஃபிரிஜில் வச்சுச் சுடும்போது சுவை அதிகமாகுது.

    பதிலளிநீக்கு
  94. @ஶ்ரீராம், மயிலை கற்பகாம்பாள் மெஸ்ஸில் (பாரதிய வித்யா பவனுக்கு எதிரே) மத்தியானம்மாக் கீரை வடை போடுவாங்க! அருமையா இருக்கும்! அங்கே சாப்பிட்டுப் பாருங்க! அதே மயிலையில் தெப்பக்குளத்துக்கு அருகே உள்ள சங்கீதாவிலும் கீரை வடை, கொத்துமல்லி வடை போடுவாங்க! இது கிடைக்கச் சாயங்காலம் ஆயிடும்!

    பதிலளிநீக்கு
  95. ///நெல்லைத் தமிழன் said...
    உங்க புதுப் பட்டம் 'மாஸ்டர்செஃப்' நல்லா இருக்கு. எந்த எந்தத் திறமை இருக்கவேண்டும் என்று கனவு காண்கிறீர்களோ அந்தப் பெயர்களையெல்லாம் நீங்களும்தான் போட்டுப்பார்க்கிறீங்க. அடுத்தது, 'லேடி ஹுசைன் போல்ட் அதிரா' (அர்த்தம் தவறா வருதோ? சரி. சரி... Florence Griffith-Joyner அதிரான்னு வேணும்னா போட்டுக்கோங்க.///

    ஹா ஹா ஹா நம்மை நாம்தானே புகழோணும்:)) என்னைச் சின்ன வயதிலிருந்து என் பெயர் சொல்லி யாரும் அழைச்சதில்லை...

    செல்லம், செட்டியார், கிளி, மணி...ஸ்கூலில் பூனை:) இப்படித்தான் ஊரே அழைச்சது:)) ஹா ஹா ஹா:)

    இல்ல எனக்கு ஒரு தடவை பூலாந்தேவி எனப் பெயர்சூட்ட ஆசை:) ஹா ஹா ஹா அவ பற்றிய தொகுப்பு ஒரு புத்தகம் என் கைக்குக் கிடைச்சது... நாட்டு இடம்பெயர்வுகளில் எங்கயோ மிஸ் ஆக்கிட்டேன்ன்ன்:)) ஹா ஹா ஹா கடவுளே படிச்சதும் கிழிச்சிடுங்கோ:)) இல்லை எனில் பேர்த்டேக்காரம்மா இப்போ லாண்ட் ஆகிடுவா:))

    //நீங்கதானே 1500 மில்லி மீட்டர் ஓட்டப்பந்தயத்துல, ரெண்டுபேர் போட்டியிட்டு, ரெண்டாவதா வந்தீங்க)///

    ஹா ஹா ஹா ஹையோ அது கதையே வேற... ஓடியது பலர்தான்:) ஆனா.. மீ ரெண்டாவதா வந்தேனே:)) ஹா ஹா ஹா அதை ஒரு நாளைக்குச் ஜொள்றேன்ன்ன்:))..

    பதிலளிநீக்கு
  96. @நெல்லைத்தமிழன்
    //எந்த எந்தத் திறமை இருக்கவேண்டும் என்று கனவு காண்கிறீர்களோ அந்தப் பெயர்களையெல்லாம் நீங்களும்தான் போட்டுப்பார்க்கிறீங்க. அடுத்தது, '//

    அடுத்து அவங்க கமெண்ட்ல சொல்லியிருக்கங்களே அதே பேரை வச்சிருவோம் :)


    //ஓடியது பலர்தான்:) ஆனா.. மீ ரெண்டாவதா வந்தேனே:)//
    100 பேர் ஓடினாங்க மாரத்தான் ரேஸில் அதில் இந்தம்மா கடைசியா தான் வந்தாங்க இவங்களுக்கு முன்னாடி ஓடினவங்க மயங்கி விழுந்ததால் லாஸ்டில் ரெண்டாவதா வந்ததா பெருமை :)))

    பதிலளிநீக்கு
  97. முதலில் ஏஞ்சலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  98. அதென்ன ஸ்ரீராம் மூன்றாவது ஆசிரியர்!!!! ஏஞ்சல் கூட்டுங்க பஞ்சாயத்த...

    கீதா

    பதிலளிநீக்கு
  99. வாழ்த்துக்களுக்கு நன்றிப்பா பூவிழி ..மறக்காம அந்த கீரை வடையை தூக்கி அடிச்சி விளையாடணும் :))

    பதிலளிநீக்கு
  100. ஹான் அது பூஸனார் தானே கழுவினார் ... நீங்க? அவருக்கு அழகுமட்டும்மல்ல ரொம்ப பொறுப்பும் கூட
    ஓ பெயரை வேற மார்றியாச்சா:-))))) சூப்பர்..... எப்படி அதிரா உங்களுக்கு மட்டும் இப்படி தோணுது :-))))) கீரைவடை மொறு மொறுப்பாத்தான் பார்த்திருக்கேன் இப்பதான் புஸு புஸுன்னு உங்க பூஸார் நியாபகத்தில் செய்திட்டீங்களா:-))))) குறிப்புகள் சரிதான் , சகோ நெ.த ரெசிபியையும் இணைத்துவிட்டீர்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  101. ஆஹா!! ஏஞ்சல் அந்தக் குலாப்ஜாமூன் ஆட் ல வரதத் தான் மீ செகண்டு இனு மாஸ்டர் செஃப் சொல்லிக்கிட்டுருக்காங்க....ஹா ஹா ஹா...ஓடினதே 2 பேர்தான்..

    கீதாக்கா யெஸ் அப்போ எனக்குக் கற்பகாம்பாள் மெஸ் டக்குனு ஸ்ட்ரைக் ஆகலை..மைலாப்பூர்ல கோயில் பக்கத்துல சாப்டுருக்கோமேனு தோனிச்சு...

    கற்பகாம்பாள் மெஸ் பத்தி தலைவர் சுஜாதாவும் சொல்லிருப்பார். காபி நன்றாக இருக்கும் என்று சொல்லியிருக்கார் என்ற நினைவு.

    கீதா

    பதிலளிநீக்கு
  102. @Avargal Unmaigal said...

    இங்கே வந்து இருக்கும் இதே ஏஞ்சல் படத்தை ஆர்குட்டில் 10 வருடம் முன்னே பார்த்து இருக்கிறேனே.. அதே போட்டோவையே மீண்ண்டும் மீண்டும் போடடுவது குற்றம் அல்லவா//





    கர்ர்ர்ர் இது போன வருஷம் எடுத்ததுதான் :) இந்த வருஷ போட்டோவில் என்னை பார்த்தா மியாவ் மயங்கி விழுகுவாங்க அதனால்தான் தரலை :)
    அப்புறம் ஆர்குட்ல யாரை பார்த்தீங்க :) இதை முதலில் உங்க வீட்டம்மாவுக்கு இந்த விவரத்தை கன்வே பண்னனும் நான் :)

    பதிலளிநீக்கு
  103. அதிரா மாஸ்டர்ச்செவ் பெயர் வாங்கினவங்க எல்லோரும் சேர்ந்து உங்களை தேடி கொண்டிருக்கிறார்களாம் வாழ்த்துரை படிக்க வர போறாங்க என்று நாளைக்கு தலைப்பு செய்திகள் வர போகிறது உங்கள் மன தைரியத்தை பாராட்டி எப்படியும் இங்க யாரவது உங்க ரெசிபியை பலமா பாராட்டி இருப்பாங்க நீங்க தேமலை குதிக்கிறேன் போயிடாதிங்கஆஆஆ

    பதிலளிநீக்கு
  104. @ அதிரா:

    //..அது ஏகாந்தன் அண்ணனுக்கு உப்பு ஆகாதாக்கும்:) அதனால போடல்ல:))

    அம்மா..தாயி ! எனக்கு உப்பு ஆகும். உப்பிக்கிட்டே போறதுதான் ஆகாது !

    பதிலளிநீக்கு
  105. தேமலை என்று விழுந்துவிட்டது அது தேம்ஸ்

    பதிலளிநீக்கு
  106. ஆவ்வ் இப்போதான் படத்தை பார்க்கிறேன் :) நெல்லைத்தமிழன் நீங்க கவனிக்கலையா இதை ..
    ஹவுஸ் of பார்லியமென்ட் ஸாஸ் ..அதான் HP சாஸை கீரை வடையோட டெஸ்ட் அன்ட் டேஸ்ட் செஞ்ச மெகா செஃப் மியாவாகத்தான் இருக்க முடியும் :)
    இந்த சைசில் டஹ்க்காளி வெங்காயம் ப்ரவுன் சுகர் ஆப்பிள் கொஞ்சம் வினிகரலாம் போட்டு செய்வாங்க :)

    பதிலளிநீக்கு
  107. மை பர்த்டே போயிந்தி....... அதிரா கணக்குல என்னை மாதிரி நீங்களும் வீக்கா நான் ஸ்வீட் 16 என்றால் இந்த வருடத்தில் இருந்து 16 வருடங்களை கழித்து பார்த்தால் என் பிறந்தவருடம் தெரியப் போகுது...ஒரு வேளை அதை எப்படி கழிக்க தெரியவில்லை என்றால் அதை ஒரு பதிவாக போட்டுவிடுங்கள் வரும் மக்கள் கழித்து பதில் சொல்லுவார்கள் என் ராசி ஸ்கோர்பியோ அப்ப கூட என்ன மாதம் என்று தெரியவில்லையா? அட அம்மே எங்க அதிராவை இவ்வளவு அறிவா படைச்சிருக்கியே

    பதிலளிநீக்கு

  108. @ஏஞ்சல்

    நீங்கள் ஸ்விட்டோட வருவீங்க என்று பார்த்தால் வெறும் கையோட வந்திருக்கீங்க ரொம்ப மோசம்... ஆக மொத்தம் நீங்க கிச்சன் பக்கமே போகவில்லைன்னு தெரியுது....

    பதிலளிநீக்கு
  109. @ avargal unmaigal aka truth :))
    ஹாஹா :) எனக்காக கீதா அக்கா ஸ்பெஷலா ஸ்வீட் செஞ்சிருக்காங்க ஸ்வீட் ஜீரா போளி :) ஒடுங்க போய் எடுத்துக்கோங்க :)
    பெர்த்டே பேபிக்கு அவங்க செஞ்சிட்டாங்க :)

    பதிலளிநீக்கு
  110. உளுந்தோடு கீரை வடையை இப்பதான் கேள்விப்படுறேன்.

    பதிலளிநீக்கு
  111. ///பூ விழி said...
    அதிரா மாஸ்டர்ச்செவ் பெயர் வாங்கினவங்க எல்லோரும் சேர்ந்து உங்களை தேடி கொண்டிருக்கிறார்களாம் வாழ்த்துரை படிக்க வர போறாங்க என்று நாளைக்கு தலைப்பு செய்திகள் வர போகிறது உங்கள் மன தைரியத்தை பாராட்டி எப்படியும் இங்க யாரவது உங்க ரெசிபியை பலமா பாராட்டி இருப்பாங்க நீங்க தேமலை குதிக்கிறேன் போயிடாதிங்கஆஆஆ///

    ஆஹா நான் இதைப் பார்த்ததும் பியூட்டிப் ஃபாலர் போயிருந்தேன்ன்ன்:)).. பின்ன மேடையில் ஏறிப் பரிசு வாங்கும்போது சும்மா நிண்டபடி ஏறக்குடாதெல்லோ:).. கையில என்வலப்பெல்லாம் தருவினம் தானே பூவிழி?:)))

    பதிலளிநீக்கு
  112. ///ஏகாந்தன் Aekaanthan ! said...
    @ அதிரா:

    //..அது ஏகாந்தன் அண்ணனுக்கு உப்பு ஆகாதாக்கும்:) அதனால போடல்ல:))

    அம்மா..தாயி ! எனக்கு உப்பு ஆகும். உப்பிக்கிட்டே போறதுதான் ஆகாது !///

    ஹா ஹா ஹா என்னால சிரிச்சு முடியுதில்ல:))

    பதிலளிநீக்கு
  113. ///Avargal Unmaigal said...
    மை பர்த்டே போயிந்தி.///

    சே..சே..சே.. இரு தமிழன் களுடையதும் [நெல்லைத்தமிழன், மதுரைத்தமிழன்:)] பேர்த்டெயும் ஒக்டோபர் 23 - நொவெம்பெர் 21] க்குள் வந்து முடிஞ்சு விட்டதே:)) ஜஸ்ட்டூ மிஸ்ட்டூஊஊஊஊ:))

    பதிலளிநீக்கு
  114. கீரை வடை ருசியாகத்தான் இருக்கும் பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  115. //Thulasidharan V Thillaiakathu said...
    அதென்ன ஸ்ரீராம் மூன்றாவது ஆசிரியர்!!!! ஏஞ்சல் கூட்டுங்க பஞ்சாயத்த...

    கீதா///

    ஹா ஹா ஹா பஞ்சாயத்துத் தலைவர் ஆரூ? தமனா ரசிகரோ?:))

    பதிலளிநீக்கு
  116. @ கீதா சாம்பசிவம் மேடம் - @ஶ்ரீராம், மயிலை கற்பகாம்பாள் மெஸ்ஸில் - உங்களுக்கு ஸ்ரீராம் மேல் ஏன் கொலைவெறி? அக்டோபர்ல நான் என் மனைவிக்கு அங்க கீரை வடை வாங்கிக்கொடுத்து அதில் ஒரு விள்ளல் சாப்பிட்டேன். வடை செய்து கனகாலம் ஆயிருக்கலாம் (நான் சாப்பிட்டது 1.30 மதியம்). சவக் சவக் னு இருந்தது. நிச்சயம் ஸ்ரீராம் இதை விரும்பமாட்டார்.

    பதிலளிநீக்கு
  117. @athiraav //என் கீரை வடை பற்றி சொல்லவே இல்ல கர்ர்ர்ர்ர்:)//

    ஸ்ஸ்ஸ்ஸ் இருங்க சொல்றேன் :)
    அந்த கீரை வடை ..இந்த உளுந்து வடையில் ரவையை முதன்முதலா சேர்த்து சுட்ட ஒரே மாஸ்டர் செஃப் நீங்க மட்டுமே :)
    //உழுந்து வடையை இப்படி பிரிஜ்ஜில் வச்சுச் சுட்டா//
    எப்பிடி எப்பிடி மாவைத்தானே பிரிஜ்ஜில் வச்சி சுட முடியும் உளுந்து வடையை எப்படி ப்ரிட்ஜ்ஜில் வச்சி சுட முடியும் :)))))

    //பெரிய பெரிய உலக உருண்டைகளாக்கிச் சுட்டால்//

    அதுக்கு பேரு போண்டா :)




    பதிலளிநீக்கு
  118. ஹையோ ஹையோ இப்போ தான் நினைவுக்கு வருது அதிரா நீங்க செஞ்சது கீரை குணுக்கு :))

    பதிலளிநீக்கு
  119. @ஏஞ்சலின் - அடுத்து அவங்க கமெண்ட்ல சொல்லியிருக்கங்களே அதே பேரை வச்சிருவோம் :) - வேண்டாம். நாங்க எங்க வீட்டுல, யாரு, ரொம்ப அதிக விலைக்கு பொருளை விற்றாலும் (பாலோ, கீரையோ எதுவோ), என் பதின்ம வயதில், 'அவள் இருக்காளே கொள்ளைக்காரி பூலான்தேவி, அவ கடைல வாங்காதே' என்றுதான் சொல்வது வழக்கம். இந்தப் பட்டம் அவங்களுக்குச் சரிப்பட்டுவராது.

    பதிலளிநீக்கு
  120. ஓகே ஓகே இப்போ பாராட்டதுக்கு வரேன் ..அதிரா மாஸ்டர் செஃப் ..பேரை மாற்றினாலும் பேரோட ராசியோ என்னமோ இன்னிக்கு ரெசிப்பி அருமையா வந்திருக்கு வெல்டன் :)
    //

    பதிலளிநீக்கு
  121. ஹா ஹா ஹா என் அடுத்த மெடல்:) எதுக்குக் கிடைச்சதென விரைவில பார்ப்பீங்க:).. பெயர் மாற்றும்போது:) நீங்க ஷொக்க்க்க்க்க்க்க் ஆகிடுவீங்க.. இந்தக் குட்டிப் பிள்ளைக்குள் இவ்ளோ திறமை ஒளிஞ்சிருக்கோ என நினைச்சூஊஊஊஊ:))...

    ///வடை செய்து கனகாலம் ஆயிருக்கலாம்//
    நெல்லைத்தமிழன் இங்கும் ஒரு தமிழ்க் கடை திறந்திருக்கிறார்களே எனக் கேள்விப்பட்டு தேடிப் பிடிச்சு.. போன வேகத்தில் 50-60 பவுண்ட்டுகளுக்கு என நினைக்கிறேன்ன்... வடை, ரோல்ஸ், பிரியாணி, தோசை இப்படி ஆளாளுக்கு விருப்பப்படி கட்டி எடுத்து வந்தால்... அத்தனையும் பழசை கீட் பண்ணிப் பண்ணி.. பாதிக்கு மேல எறிஞ்சிட்டோம்ம்.. அன்றுதான் அக்கடைக்க்குப் போனது முதலும் கடசியும்:(..

    பதிலளிநீக்கு
  122. //இந்தப் பட்டம் அவங்களுக்குச் சரிப்பட்டுவராது.//
    yes yes :) i agree with you

    பதிலளிநீக்கு
  123. உண்மையில பூலாந்தேவி கொள்ளைக்காரியோ? நான் ஒரு தொடர்க்கதையே படிச்சேன் அவ பற்றி, அவ அனுபவிச்ச கொடுமைகள், பின்பு அவ ஒரு பயங்கர ஸ்ரோங் பெண்ணாக மாறி, போலிஸ்காரருக்கெல்லாம் அடிச்சது, மிரட்டியது... அவவாலதான் கொஞ்சம் பெண்களைப் பார்த்து நல்லவிதமாக காவல்துறை எல்லாம் நடந்து கொண்டார்கள் என்றமாதிரி எல்லோ படிச்சதா நினைவாக இருக்கெனக்கு நெ.தமிழன்.

    பதிலளிநீக்கு
  124. கீரை வடை பார்க்க நல்லாவே இருக்கு. சுடச் சுட சாப்பிட இன்னும் ருசி! :)

    பதிலளிநீக்கு
  125. ஏஞ்சலின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்.
    அதிரா பேர் மாற்றம் சூப்பர். சமையல் குறிப்பு போடு போது மட்டுமா அல்லது கொஞ்சநாளுக்கு இந்த பேர் தானா?
    கீரை வடை பார்க்கவே நன்றாக இருக்கிறது, ருசியும் நன்றாக இருக்கும் அன்பாய் செய்தால் அமிர்தம் தான்.

    பதிலளிநீக்கு
  126. மீண்டும் இங்கேயும் வாழ்த்தியதற்க்கு மிக்க நன்றி கோமதி அக்கா :)
    மியாவ் கொஞ்ச நாளில் விரைவில் மாஸ்டர் OF கலைகள் னு பேரை மாத்திடுவாங்க :)

    பதிலளிநீக்கு
  127. வெங்கட், கோமதி அக்கா மிக்க நன்றி:))..

    அது கோமதி அக்கா.. எனக்கு அவோட் கிடைப்பதைப் பொறுத்துப் பெயரை மாத்துவேன்:).. டக்கு டக்கெனக் கிடைச்சால் நானும் டக்கு டக்கென மாத்துவேன் இது இடைக்கிடைத்தானே கிடைக்குது:)).. பட்டம் கிடைச்சல்தானே பெயர் சூட்ட முடியும்?:) நீங்களே சொலுங்கோ.. சும்மா ஆரும் பெயர் சூட்ட முடியுமோ?:).. ஹா ஹா ஹா:)..

    பதிலளிநீக்கு
  128. கடலைப் பருப்போடு கீரை வடை செய்ததுண்டு. உ.பருப்புடன் செய்து பார்க்கிறேன். அருமையான குறிப்பு.

    பிறந்தநாள் வாழ்த்துகள் ஏஞ்சலின்!

    பதிலளிநீக்கு
  129. மிக்க நன்றி அன்பான வாழ்த்துக்கு ராமலக்ஷ்மி அக்கா :)

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!