1) "இங்க படிக்கிற பசங்கள்ல ஹாஸ்டல் சேர முடியாதவங்க
நோட்ஸ், ஃபீஸ் கட்ட முடியாதவங்களுக்கு என்னாலானதைச் செய்கிறேன்
வருஷத்துக்கு ரெண்டுபேரைத் தேர்ந்தெடுத்து அவங்க படிக்க முழு செலவையும்
ஏத்துகிட்டு படிக்க வைக்கிறேன்" என்று சொல்லும் தெய்வப்பிரகாசன்
பிறப்பிலேயே பார்வையில்லாமல் பிறந்து, அடுத்தவர் உதவியுடன் படித்தவர்.
(கல்கி)
2) "உடம்பில்
தெம்பு இருக்கும் வரை உழைக்கணும். யாரிடமும் கையேந்தி நிற்கக் கூடாது. அது,
பெற்ற மகன்களாக இருந்தாலும் சரி.கஷ்டமில்லாத வாழ்க்கையில் கற்றுக் கொள்ள
எதுவும் இருக்காது. கஷ்டங்கள் தான், வாழ்க்கை பாடங்களாக இருக்கும்.." குட்டியம்மாள்.
3) திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆதரவற்ற இல்லங்களை எல்லாம் தத்தெடுத்து
ஆதரவு கொடுத்து வருகிறார் வெளிநாடு வாழ் இந்தியரான கல்ராம். இவர்
யு.எஸ்.ஸில் வேலை கிடைத்து அங்கேயே செட்டில் ஆகிவிட்ட போதிலும் தன்னுடைய
வருமானத்தில் ஒரு பங்கை இந்தியர்களுக்குச் செலவிடுவதை தனது கடமையாக
நினைக்கிறார். இவரது உதவியால் தற்போது கல்வி அறிவு பெற்றுவரும்
குழந்தைகளின் எண்ணிக்கை மட்டும் இரண்டாயிரத்தைத் தாண்டி உள்ளது.
4) 20 ரூபாய் மருத்துவம். மருத்துவர் பத்மினி.
5) இப்படியும் மனிதர்கள் தேவைதான். முன்னர் தனி ஒரு மனிதனாய் ஒரு காட்டை நிர்மாணித்த மனிதர் பற்றி தனிப் பதிவாகவே பார்த்தோம். இப்போது ஒரு தம்பதியர். 23 வருட உழைப்பில் 55 ஏக்கரை 300 ஏக்கராக மாற்றி, வன விலங்குகளுக்கு ஒரு சொர்க்கத்தை நிர்மாணித்துள்ளனர். இயற்கை வாழ இதெல்லாம் எவ்வளவு அவசியம் என்று சொல்ல வேண்டியதில்லை! பமீலா தம்பதியர்.
6) "தனி ஒரு மனிதனுக்கு டாய்லெட் இல்லையெனில், கிராமத்துக்கு 25 டாய்லெட்கள் அமைத்திடுவோம்" ரீஸா மௌர்யா.
7) பெங்களுருவில் எவ்வளவோ அசம்பாவிதங்கள் கேள்விப் பட்டிருக்கிறோம். அங்குதான் இந்த மனிதரும் இருக்கிறார். பாராட்டப்பட வேண்டியவர். அவர் படம் கிடைக்கவில்லை. ஆட்டோ டிரைவர் ஆனந்த குமார்
8) அனுப் விஜாபூர்.
9) நம் வீட்டை நாம் சுத்தமாக வைத்துக் கொண்டால் ஊரே சுத்தமாக இருக்கும் என்று சொல்வார்கள். அதுபோல ஒவ்வொரு ஊர்க்காரர்களும் அவரவர் ஊர்களில் இதுபோல சேவை செய்தால் நாடே சுபிட்சமாகும்.
10) வீட்டைச் சீராக்கி, தெருவைச் சீராக்கி, நாட்டைச் சீராக்கும், குப்பையைக் கூட வீணாக்காமல் பயனுள்ள முறையில் ஏலவழிக்கக் கற்றுக் கொடுக்கும் மங்களம் பாலசுப்ரமணியன். நன்றி வெங்கட்.
11) "மாற்றுத்திறனாளிகள், அவர்களுடைய பிரச்சினைகளுக்கென்றே சில தொன்டு நிறுவனங்கள் சேவை செய்து வருகின்றன. அவற்றைப்பற்றி நிறைய பேருக்கு வெளியே தெரிவதில்லை. நமக்கோ, நமக்கு நெருங்கியவர்களுக்கோ பிரச்சினைகள் வரும்போது தான் நம்மில் பெரும்பாலானோர் மேல் விபரங்களைத் தேட ஆரம்பிக்கிறோம். சமீபத்தில் ஒரு பெண்கள் இதழில் சில முக்கியமான சேவை அமைப்புகள் பற்றிய தகவல்கள் வெளி வந்தன. அவற்றைப்பற்றி கீழே எழுதியிருக்கிறேன். நிச்சயம் யாருக்கேனும் இவை பயன்படும். முக்கியமாய் பாஸிடிவ் செய்திகள் எழுதி வரும் ஸ்ரீராம் அவர்களுக்கும் இத்தகவல்கள் பயன்படும்!" என்று சொல்லி அந்த உபயோகமான சேவை செய்யும் இடங்கள் பற்றிய விவரங்களைத் தந்திருக்கிறார் திருமதி மனோ சாமிநாதன் மேடம்.
12) இந்த மனம் யாருக்கு வரும்? 30 லட்ச ரூபாயை நன்கொடை அளித்து விட்ட சூப்பர் சிங்கர் ஜெஸ்ஸிகா.