திங்கள், 29 ஜூன், 2009

maalu maalu maalu - chromepetta aalu!

தமிழ் நாட்டின் பல பகுதிகளில் வசித்திருந்தாலும் - நான் அதிகம் குப்பை கொட்டியது, குரோம்பேட்டையில்.
இரயில்வே ஸ்டேஷனில் "கிரோம்பேட்டை" என்று பார்த்த ஞாவகம்.
இங்கு வீட்டுக்கு அடையாளம் சொல்பவர்கள், "ஜெயராம் ஸ்வீட்ஸ்" பக்கத்தில்தான் வீடு என்று சொன்னால்
உடனே கிளம்பி வந்து விடாதீர்கள். அந்தப் பெயரில் குரோம்பேட்டையைச் சுற்றி ஒரு
டஜனுக்கு மேல் கடைகள் உள்ளன.
"விலாசம் கொடுங்க ஆட்டோ அனுப்பனும்" என்று யாரவது கேட்டால் மட்டும், ஜெயராம் ஸ்வீட்ஸ் பக்கத்தில்தான் வீடு
என்று சொல்லி விடுங்கள். யாரவது ஒரு அப'பாவி' குரோம்பேட்டை GH இல் அனுமதிக்கப் படுவார்.

குரோம்பேட்டைக்கு சிறப்பு எவைகளால்? இதோ டாப் 10.

ஒன்று : தோல் தொழில். (அசைவ அர்த்தங்கள் எதுவும் இல்லை)
இரண்டு: வெற்றி தியேட்டர்.
மூன்று: MIT
நான்கு: நாயுடு ஹால்
ஐந்து: Over bridge
ஆறு: அஸ்தினா புரம் தொடங்கி வெங்கடராமன் நகர் வரை சுற்றுப் பக்க 18 பட்டிகள்.
ஏழு: கல்யாண மண்டபங்கள்.
எட்டு: மோர் - தயிர் - ரிலையன்ஸ் போன்று நாகப் பழத்தைக் கூட கூசாமல் நாற்பது ரூபாய் என்று விற்கும் விற்பன்னர்கள்.
ஒன்பது: என்னுடைய உடன்பிறப்புகளும், உற்ற நண்பர்களும், பெற்றவரும், சந்திக்கும்போது புன்னகைப் பூக்களை சிந்துபவர்களும்
பத்து: ................................................... (நீங்கள் - இது இடம் பெறவில்லையே என்று எதையாவது நினைத்திருந்தால் - அது!)

அன்புடன்
கௌதமன்.


narukkunu 2

இரண்டு வார்த்தைகள்
கொடுப்பேன்.
அதைப் பார்த்தவுடன்
உங்களுக்கு என்ன ஞாபகம் வருகிறதோ
அதை,
comments click செய்து, பதிவு பண்ணுங்கள்.
குறிப்பு : கமெண்ட் பண்ணுபவர்கள்,
anonymous என்கிற முகமூடி கூட அணியலாம்.-
(உங்களை தேடி ஆட்டோ வரக் கூடாது என்றால்!)
இதோ இரண்டு வார்த்தைகள்:
"தொட்டால் சுணங்கி"

super sabi

உங்கள் கவனத்திற்கு:
கீழே கொடுக்கப்பட்டவை அனைத்தும் சிரிப்பதற்கு மட்டுமே. எக்காரணத்தைக்கொண்டும் எந்த குற்றச்சாட்டும் ஏற்கப்பட மாட்டாது.

பே. ஆசிரியர் (பேத்தல் ஆசிரியர்!)

tel-g-net மக்களின் ஒரு வரி முகவரி:

KGG : (1) scientist - புது புது ஃபார்முலா அவுத்து வுட்டுகினே இருப்பாரு
(2) பட்டணம் பொடி ஐயர் - புதுசா இல்லாதப்ப புதிராப்பேசுவாரு
KGY : archaeologist - அடிக்கடி "in those days" நு கடிப்பாரு
KG(S): dictionar"iyer" (dictionaryக்கு noun form) - நாலு விதமா விளக்கி, எல்லாரையும் குழப்பி வேடிக்கை பாப்பாரு
KGJ: crestroughist - மூடு இருந்தா peak formல இருப்பரு, இல்லைன்னா down ஆயிடுவாரு
Banu: Newton's 3rd lawyer - ஒரு மெயிலையும் விடாம ஒடனே பதில் குடுப்பாரு
Sujatha: anecdotist - எல்லாத்துக்கும் ஒரு side story வுடுவாரு
SB : ev'ANJALI'ist - அப்பப்போ Harry Potter மாதிரி Hemanjali release பண்ணிகினே இருப்பார்
YGK : Vishamapi'CHO' - நமுட்டு பதில் மட்டும்தான் குடுப்பாரு
MALI: Rashiklal - எல்லரையும் எல்லாத்தையும் ரசிப்பாரு
Shyam: Travelogger - எப்போ பாத்தாலும் ஊர சுத்திக்கிட்டே இருக்கறதோட சும்மா இல்லாம நமக்கு பொறாம வர்ரா மாதிரி நீட்டி மொழக்குவாரு
Thyagu : Shockley - திடீர் திடீர்னு ஒரு punch line மட்டும் வுடுவாரு
Sriram: Neutron - பொதுவா பேசுவாரு
Radha : Borrowsil - யாராவது அனுப்பின mailலாம் forward பண்ணி நம்ம download சில்லரையெல்லாம் காலி பண்ணிடுவாரு
Ramana: Wellwisher - ஒரு விசேஷம்னா வாழ்த்து மட்டும் அனுப்பிட்டு கழட்டிக்குவாரு
Niru - Hanger - ஏடாகூடமா mail அனுப்பி மாட்டிக்குவாரு
Sabitha - Sorry ! இவரை பேர் சொல்லி வாழ்த்த யோக்யதை இல்லை, வணங்குகிறோம்.

Sabitha

ஞாயிறு, 28 ஜூன், 2009

சுற்றமும் நட்பும்!

நம் உறுப்பினர்கள் தாராளமாக
இங்கே பரிமாற்றங்கள் செய்யலாம்.
தமிழ், English, Tanglish, Talugu, Telish --
எதுவாக இருந்தாலும் OK.
நண்பர்களே, உறவினர்களே,
படிப்போரே, நகைச்சுவையாளர்களே,
வாருங்கள் - ஒன்றாய் இங்கே கூடுவோம்;
உலகிற்கு நம்மை உணர்த்துவோம்!