தண்ணி இல்லாமல் துணி துவைக்கும் எந்திரம் வந்தேவிட்டது - அப்பாதுரை மற்றும் கீதா சந்தானம் கேட்டுள்ள விஷயம்! மிக சிறிய பிளாஸ்டிக் மணிகள் போன்ற துகள்களை துவைக்கவேண்டிய துணிகளுடன் சேர்த்து மெஷினில் போட்டால் தண்ணீர் இல்லாமலே துவைக்கும் சிஸ்டம் இன்னும் இரண்டு வருடங்களில் வீடு தோறும் காணப்படும்!
சூரிய சக்தியில் மின்சாரமும் கனவு அல்ல - வாழ்க்கையில் நடக்கக் கூடிய - நடந்து கொண்டிருக்கிற விஷயம் தான்.
ஆனால் 10000 ருபாய் செலவில் ஒரு நாளுக்கு 2 யூனிட் தயாரிக்க முடியும் சுடுநீர் இயந்திரங்களும் அப்படித்தான் - சுமார் 1௦௦ லிட்டர் சுடுநீருக்கு முதலீடு 25௦௦௦ வரை!
படிக்கும் பழக்கம் என்பது காகிதப் புத்தகமாகத்தான் இருக்க வேண்டுமா?
கணினியிலும் படிக்கலாமே!
முதியவர்களுக்கு மரியாதை பற்றி இலங்கையை சேர்ந்தவர் சொல்வது புதுமையாக இருக்கிறது இலங்கையிலிருந்து சென்னைக்கு வந்தவர்களிடம் காணப்பெறும் ஒரு நல்ல விஷயம் அவர்கள் யாரையும் 2 வயதுக் குழந்தையாக இருந்தால் கூட நீங்கள் வாருங்கள் போங்கள் என்று பேசுவதைத்தான் பார்க்கிறோம் மதுரைக்காரர்களிடமும் இந்த பழக்கம் உண்டு.
வாலிபந்தனில் வித்தை கற்க வேண்டும் - கற்ற வழியில் நிற்க வேண்டும் என்பதெல்லாம் சங்க காலத்துக்கு மட்டும் தான் பொருந்துமோ ?
தொப்பையைக் குறைக்க கொஞ்சம் வில் பவர் கொஞ்சம் அவகாசம் நடை பயில போதும் இல்லையா? எந்திரங்கள் தேவையா? எல்லோரும் தொப்பை இல்லாமல் இருந்துவிட்டால், போலீஸ்காரர்களை எப்படி அடையாளம் காண்பது?
உன்னையே நீ அறிவாய் என்றார் சாக்ரடிஸ். அது இல்லாமல் மற்றவர் மனதை அறிய பிரயத்தனம் [முயற்சி] வீண் என்று தோன்றுகிறது/ நம்மிடம் " வாங்க சார் வாங்க! வீட்டிலே குழந்தைகளை எல்லாம் கூட அழைத்து வந்திருக்கலாமே" என்பவர் மனதுக்குள் " ஆமாம் இவன் எழுதப் போற மொய்க்கு 2 பங்கு சாப்பிட்டுடுவான்/////" என்று நினைப்பது நமக்குத் தெரிந்தால் ????
அரவங்காடு தொழிற்சாலையில் சிதம்பரம் என்று ஒரு தலைமை குமாஸ்தா இருந்தார். அவர் துர்காபவனில் ஈவினிங் டிஃபன் சாப்பிட வந்து விட்டு பஜ்ஜி சட்னி சாப்பிடும் பொழுது 'ஐயரே! இன்னும் கொஞ்சம் சட்னி போடேன். இன்று நல்லா இருக்கு' என்று சொல்வார் பிறகு தனக்குத்தானே 'ஆமாம் இப்போ நல்லா இருக்குனு ஒரு வார்த்தை சொல்லிட்டாப் போதுமே - ஒரு பிடி உப்பை அதுலே சேர்த்துடுவாரு" என்று அவர் சொல்வது நமக்கும் கேட்கும்!
எனவே, (மற்றவர் மனதை அறியும்) ஆசையை அழித்து விடுங்கள் - அது துன்பத்தை மட்டுமே கொடுத்து நம் நிம்மதியைக் கெடுத்து விடும்!
என் விருப்பங்கள் :-
1. ஓர் ஏக்கருக்கு வருடத்துக்கு 10 டன் அதற்கு மேலும் விளைச்சல் கொடுக்கும் தானியப் பயிர்.
3. வீட்டிலிருந்தே வேலை - உடற்பயிற்சிக்காக பக்கத்திலிருக்கும் பூங்காவில் நடந்தால் போதும்.
4. எந்தப் புத்தகமாக இருந்தாலும், பாட்டாக இருந்தாலும், செய்தித் தாளாக இருந்தாலும் நீங்கள் சம்பாதித்த பணத்துக்கு வரி கட்டியிருப்பின், இலவச டௌன்லோடு வசதி இந்த மாதிரி பைல்கள் கண்ட்ரோல் எக்ஸ் கண்ட்ரோல் வி மட்டுமே செய்ய முடியும் !
5. எல்லாக் கோவில்களுக்கும் பிரார்த்தனைக் கூடங்களுக்கும் நுழைவு வரி. அதில் வருகின்ற வருமானம், வருமானக் கோட்டிற்குக் கீழே உள்ள மக்களின் மேம்பாட்டுக்கு.
இன்னும் நிறைய உண்டு - சாப்பாடு அழைக்கிறது.