1990 இல் வெளிவந்து காணாமல்போன படம் கவிதை பாடும் அலைகள். ராஜ்மோகன் ஜனனி நடிப்பில் வெளிவந்த படம். ஜனனி பின்னர் ஈஸ்வரி ராவ் என்கிற பெயரில் பிரபலமானார். பல தமிழ்ப்படங்களில் நடித்தார். காலாவிலும் ரஜினியின் மனைவியாக நடித்திருக்கிறார்.
k. சங்கர் இயக்கத்தில் 1965 ஆம் வருடம் வெளியான திரைப்படம் பஞ்சவர்ணக்கிளி. இரட்டையர்களான விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் மிக இனிமையான பாடல்களைக் கொண்ட படம்.
எச்சரிக்கை: இந்தக் கதை 55 வருடங்களுக்கு முன் பிரபல பத்திரிகை ஒன்றில் பிரசுரமான கதை. மனித மன உணர்வுகள் என்னவாக இருந்தாலும் அதை அச்சு அசலாகப் பிரதிபலித்த எழுத்துக்கள் சிறந்திருந்த காலம் அது. அதனால் தான் அம்மா வந்தாள் போன்றவான எந்தப் பொய்மைப் போர்வையைப் போட்டும் போர்த்தி மறைக்கத் தேவையில்லாத கதைகள் வாசகர்களின் வாசிப்புக்கு உள்ளாகின. இப்பொழுதோ கதா பாத்திரங்களின் உணர்வுகளை அவர்தம் உரையாடல்கள் மூலம் வெளிப்படுத்தாத, ஏதோ விக்கிரமாதித்தன் கதையை குழந்தைகளுக்குச் சொன்ன அந்நாளைய பாட்டிமார்கள் போல எழுத்தாளர்களும் கதை சொல்லிகளாகி விட்டனர்.
1980 இல் வெளிவந்த இந்தத் திரைப்படம், ஹிட்ச்காக் திரைப்படமான சைக்கோவை பெருமளவு தழுவி எடுக்கப் பட்டிருந்தாலும், 1978 இல் வெளியான ராஜேந்திர குமாரின் நாவலான 'இதுவும் விடுதலைதான்' நாவலுக்குதான் க்ரெடிட் கொடுத்திருந்தார் பாலு மஹேந்திரா.