என் மகன் ஒரு சம்பவம் சொன்னான். அவன் நண்பன் ஒரு 'ஸ்பீச்' கொடுக்கத் தயார் செய்திருந்தானாம். நிகழ்ச்சி, காலை என்பதற்கு பதிலாக மாலை என்று மாறியதாம். விருந்தினர் பெயரிலும் இரண்டு மாறுதல்கள் இருந்ததாம். 'அதை மாற்றிப் படி' என்றால், 'ஐயோ... இதுவரை மனப்பாடம் செய்து வைத்தது எல்லாம் மறந்து விட்டதே... இதை மாற்றினேன் என்றால் எல்லாவற்றையும் மறந்து மாற்றி விடுவேன்" என்றானாம்...
இந்த வார தினமணி கதிரில் சிவசங்கரி-தினமணி இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் பி. ரங்கநாயகி எழுதிய ஆறுதல் பரிசு பெற்ற சிறுகதை 'தளை' படித்தேன். ஏனோ ஒன்றிப்போய் படிக்க முடிந்தது. அல்லது ஏனோ படித்த உடன் மனசில் நின்றது. ஏனோ, என்ன ஏனோ? நான் அந்த மாதிரிதான் என்று நினைக்கிறேன். அதனால் ஒன்றிவிட்டேன் என்று நினைக்கிறேன்!
சமீபத்தில் நியூயார்க் பரதேசி பதிவில் ஆலைக்கரும்பு, பொங்கல் விற்பனைக்கு கரும்பு பற்றி எழுதி இருந்தார். அவர் அந்த ஊரில் வளர்ந்தவர் என்பதால் ஆலைக்கரும்பு அவருக்கு கேட்காமலேயே கிடைத்து விட்டது. ஆலைக்கரும்புதான் சுவையாக இருக்கும் என்று எழுதி இருக்கிறார். இது கருப்பு நிறமாக இல்லாமல் சற்று வெளுத்தாற்போல இருக்கும்.
லாரியில் ஏறினோம். எங்களுடன் எங்கள் நாய் டிக்கியும் ஓடி வந்து ஏறியது. லாரியில் இருந்தவர்கள் ஒரே குரலாக அதை ஏற்றிக் கொள்ளக்கூடாது, இடமில்லை என்று தடுத்தார்கள்.
ஹாய்! ஹாய்! ஹாய்! எபி கிச்சன் ஷோ ரசிகர்களுக்கு எங்கள் குழுவின் சார்பில் அன்பான வணக்கங்கள்! கொஞ்ச நாளா எங்கள் குழுவின் அ அ, ஏஞ்சல், ம த, காணாமல் போய்விட்டார்கள். எங்களின் சிறப்பு விருந்தினர் துரை செல்வராஜு அண்ணாவுக்கும் கை வலி வந்திட, அவருக்குக் கொஞ்சம் ஓய்வு கொடுத்துவிட்டு மீண்டும் அவரது உரையாடலைத் தொடரலாம் என்றிருக்கிறோம். என்றாலும் அவரும் எங்களுடன் கலந்து கொள்வார். ஷோ முடிந்ததும் இனிப்பு பற்றி கருத்து சொல்லுவார்.