சனி, 31 மே, 2014

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்



1) மனிதநேய மருத்துவர் இளையபாரி.
 

2) சென்னை மற்றும் அதன் சுற்றுப் புறங்களில் அதன் காரணமாக கைவிடப்பட்ட, ஞாபக
மறதி, மற்றும் மொழி தெரியாத நிலையில் தொலைந்துபோய்த் தெருவில் அல்லாடிக் கொண்டிருக்கும் நபர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் அரசு ஊழியர் வெங்கடேஷ் பற்றி 1 ஜூன் கல்கி இதழில்.



3) இவரைப் பற்றிக் கூட முன்னரே படித்திருக்கிறோம். மழைநீர் வரதராஜன் 



 

 

6) இயற்கை விவசாயத்தில் சாதித்துக் காட்டியிருக்கும் காளிமுத்து.
 

7) தெய்வமகன் ஸ்ரீதர்.
 

8) அரசுப்பள்ளியிலிருந்து ஒரு அசுர சாதனை. பாத்திமா 



9) If Papa had not picked me up from the dustbin, I would have died, choking in the bag. If I can do at least a fraction of what he does, I would consider my life worthwhile. I don't want this life given to me to go to waste!"  உதவும் கரங்கள் வித்யாகரும் அபிலாஷ் வித்யாகரும்


10) இந்த வயதிலும்.....விவசாயிகளின் தோழர் நயினார் குலசேகரன் 




11) நல்ல மதிப்பெண் இருந்தும் படிப்பு தொடரும் பணம் இல்லாததால் வந்த அழுகையை மாற்றிய நல்ல உள்ளங்கள்.






12) ஆற்றில் மூழ்கிய 3 குழந்தைகளைக் காப்பாற்றிய மீனவரின் 12 வயது மகன் முகமது இன்சான் அலி 


14) கருணை உள்ளம். அருண் 


15) விவசாயி... விவசாயி...





புதன், 28 மே, 2014

அனோஸ்மியா


                             
 
நமக்கு சாதரணமாக நிறைய விஷயங்களை அருமை தெரியாமலே அனுபவிக்கிறோம். பேச்சு, கண்பார்வை, ஊனமில்லா உடல்... ஏதாவதொன்று இல்லாமல் போகும்போதுதான் அதன் அருமை தெரியும்.


என் பதின்ம வயது நண்பர் ஒருவரை சமீபத்தில் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. பயங்கரமாக இளைத்திருந்தார். அவ்வப்போது பார்த்துக் கொள்வதுதான். ஆனால் நீண்ட இடைவெளிகளில். 

சுவையான பிரியாணி தயாராகிறது. கலர்புல் ஸ்வீட் தயாராகிறது. ஹோட்டலுக்குள் நுழைந்ததுமே சாம்பார், குருமா தோசை, எண்ணெய் வாசனை மூக்கைத் துளைக்கிறது. சுவை நரம்புகள் தூண்டப்பட்டு ஆர்வப்பசி வருகிறது.

                                                              
 
ம்யூட் ஆன டிவி பார்த்திருக்கிறோம். காது கேளாதோருக்கு உலகமே ம்யூட்டில்தானே இயங்குகிறது. அது போல இந்த உணவுப்பொருள்களின் மணம் நம் நாசிகளுக்குத் தெரியாவிட்டால்...
                                                                 
                                       

என் நண்பர் முன்னரே சர்க்கரை வியாதிக்காரர் என்று தெரியும். கிட்னி பாதிக்கப்படப் போகிறது, கண்கள் பாதிக்கப்படப் போகிறது என்று எச்சரிக்கையாக அவப்போது சோதனை செய்துதான் வருகிறார்.


அவர் வந்த நேரம் வீட்டில் மணக்க மணக்க முருங்கைக்காய் வெந்தியக் குழம்பு வைத்திருந்தோம். அவரைச் சாப்பிடச் சொன்னதும் ஒன்றும் சொல்லாமல் கொஞ்சம் சாப்பிட்டார். பின்னர் பேச்சுவாக்கில்  குழம்பு வாசனை பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோதுதான் அவர் தனக்கு கடந்த இரண்டு வருடங்களாக எந்த வாசனையுமே தெரிவதில்லை என்றார். 


அதிர்ச்சியாக இருந்தது. 

சாப்பாட்டின் மீதான ஆர்வமே குறைந்து, சும்மா பசிக்குச் சாப்பிட்டு வந்திருக்கிறார். எனவேதான் அநியாயமாக இளைத்திருக்கிறார். 
 


                  

குருமாவோ, சரவணபவன் சாம்பாரோ நாக்கில் படும்போதுதான் சுவை மணம் என்று நமக்குத் தோன்றும். ஆனால் வாசனையே தெரியாமல் என்ன சுவை இருந்து என்ன பயன்? சுவையே அறியாமல் போய்விடும்.
                                                    
                        
 
மருத்துவர்களிடம் சரியாகி விடுமா என்று கேட்டால், 'பார்ப்போம்' என்றும் மருத்துவம் பார்த்தாலும், இவருக்கு சர்க்கரை நோயினால் இந்நிலை வந்திருந்தாலும், இது கூட ஒரு முன்னோடி தான் சீக்கிரமே உங்களுக்கு பராலிட்டிக் அட்டாக் வரும் வாய்ப்பு இருப்பதாகக் கூறி பயமுறுத்தி இருக்கிறார்கள். 
 

 
 
 
மிக நெருங்கிய சிலர் தவிர மற்றவர்களுக்கு இவரின் இந்த பாதிப்பு தெரியாமல் வைத்திருக்கிறார்.

பஸ்ஸில் போனால், கூட்டத்தில் இருந்தால் வியர்வை நாற்றம், மற்ற வாயு நாற்றங்களினால் பாதிக்கப்பட மாட்டார் என்று பேசிக் கொண்டோம். அதே போல, வீட்டில் கேஸ் லீக்கானால் கூடத் தெரியாது என்பதும் உரைத்தது. 
 
 
                                                


மூக்கு என்பது சுவாசிக்க மட்டுமே... மற்றபடி பயனில்லை என்பது என்ன கொடுமை?

திங்கள், 26 மே, 2014

திங்க கிழமை 140526 :: ஸ்வீட் எடு, கொண்டாடு!

                
ஓட்ஸ் பாயசம். 
          

நூறு கிராம் ஒயிட் ஓட்ஸ் எடுத்துக்கொள்ளவும்.
            

ஒரு வாணலியில் சிறிது நெய் விட்டு, ஓட்ஸை சிவக்க வறுத்துக்கொள்ளவும்.
        
வறுத்தாச்சா?
              
வெரி குட். இப்போ இரண்டு கப் தண்ணீர் விட்டு, ஓட்ஸ் நன்றாகக் கரையும் வரை வேக விடவும் 
            
விட்டாச்சா? 
       
   
இந்தக் கலவையில் நூறு கிராம் சீனியைப் போட்டுக் கரையவிடவும். (இதுதான் காகத்திற்கும் சீனிக்கும் உள்ள ஒற்றுமை. இரண்டுமே கரையும்!) 
            
கரைச்சாச்சா?
         

இப்போ கால் லிட்டர் பாலை ஓட்சில் சேர்த்து, கொதிக்க வைக்கவேண்டும். 
           
கொதிச்சுடுச்சா?
           
கீழே இறக்கி வைக்கவும். 
           
இருங்க அவசரப்படாதீங்க! 
            

ஐந்து கிராம் பிஸ்தாப் பருப்பு, மூன்று நான்கு முந்திரிப் பருப்புகள் ஆகியவற்றை பொடிப் பொடியாக நறுக்கி, நெய்யில் வறுத்து, பாயசத்தில் போடுங்கள். 
            

ஜாதிக்காய் அரை மட்டும் எடுத்து, நெய்யில் வறுத்துப் பொடி செய்து, பாயசத்தில் போடவும். கலக்கவும். 
             
இருபது நிமிடங்கள் ஆற விடுங்கள்.  
             
ஓட்ஸ் பாயசம் ரெடி. அனைவரும் பகிர்ந்து அருந்துங்கள். 
             

ஞாயிறு, 25 மே, 2014

ஞாயிறு 255:: நாற்காலிகள் தயாராகின்றன!

                   
    
எல்லோரும் காத்திருங்கள்! பதவி நாற்காலிகள் ஒவ்வொன்றாக உள்ளே வந்துகொண்டிருக்கின்றன! 
              

சனி, 24 மே, 2014

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்



1) அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாத மனது அமைவது வரம். சென்னை ஓட்டேரியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பாஸ்கர்,
 
 
 
2) பிளாஸ்டிக் கழிவுப் பொருட்களிலிருந்து எரிபொருள் தயாரிக்கும் முறையைக் கண்டு பிடித்திருக்கும் சென்னைப் பொறியாளர் சித்ரா தியாகராஜன் 
 
 
 

 
 
 3) பதிலுக்கு பதில் நல்லது .ஜீவன் 
 
 
 
4) “ஓராயிரம் வெற்று வார்த்தைகளை விட ஒரு துளி அளவுள்ள செயல் சிறந்தது’’ என்று சொன்னார் விவேகானந்தர். அவரது பெயரில் சேவை அமைப்பு நடத்தும் பெரியசாமியும் அவரது நண்பர்களும் இதை மெய்யென நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.
 
 


5) பியூஷ் மானுஷ். பற்றி முன்னர் விகடனில் கட்டுரை வெளிவந்து பகிர்ந்திருக்கிறோம். என்றாலும் மறுபடி இதுமாதிரி மனிதனை நினைவூட்ட...
 
 
 


 
6) ரங்கசாமியின் தன்னம்பிக்கை.
 
 


7) ஆனைமலையில் ஒரு அற்புத ஆஸ்ரமம். ரங்கநாதன் 
 

 




செவ்வாய், 20 மே, 2014

தஞ்சாவூர்



கல்யாணமகாதேவி வேலைகள் முடிந்தபின் அங்கிருந்து நேராக தஞ்சாவூர் என்றபோதே ஒரு மகிழ்ச்சி பரவியது மனதில்! "பள்ளி சென்ற கால முல்லைகளே" என்று பாடல் வரிகளை முணுமுணுத்தது உதடுகள்!

                                                 


எங்கள் குழுவில் ஒவ்வொரு ஊரிலும் வழி சொல்ல ஒருவர் இருந்தாலும் தஞ்சை பற்றி யாரும் அறியவில்லை என்பதால் வழி தேட அலைபேசியில் பேசத் தொடங்கியவர்களை இடைமறித்தேன். "இனி வழிக்கு நான் பொறுப்பு" என்றேன்! இத்தனைக்கும் நாற்பது வருடங்களுக்கு முன் தஞ்சையை விட்டுச் சென்றது.

பெரிய மாற்றமில்லை. பைபாஸ் ரோடிலிருந்து திரும்பிய இடம் நாஞ்சிக்கோட்டை ரோட் என்று அறிந்ததும் முதல் மகிழ்ச்சி. நான் படித்த பள்ளியைத் தாண்டித்தான் செல்ல வேண்டும். 


பள்ளியின் மேரிஸ் கார்னர் காம்பவுண்ட் கண்ணில் பட்டபோது சந்தோஷம் பொங்கியது! அந்த அருள் தியேட்டர் இன்னும் அங்கே! "நினைத்தாலே இனிக்கும்" பல லாரல் ஹார்டி நினைவுகளை உண்டாக்கியது அந்தத் தெரு.
இந்த சர்ச்சுக்குள் எத்தனை முறை சென்று வந்திருப்பேன். இந்த கேட்டுக்கு அருகில் எத்தனை குச்சி ஐஸ், பால் ஐஸ் சாப்பிட்டிருப்பேன்!
                    
உள்ளே சென்று திரும்பினேன்.

                


அங்கு நின்றிருந்தவரிடம் 'நீங்கள் இங்கு வேலை பார்க்கிறீர்களா?' என்று கேட்டபோது, மறுத்து, தான் ப்ளஸ் டூ பேப்பர் வேல்யுவேஷனுக்காக வந்ததாகச் சொன்னார்.


பள்ளிக்குள் சென்று புகைப்படம் எடுத்ததும், ப்ளஸ் டூ விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்றதால் அங்கிருந்த வெளி அலுவலர் ஆயுதம் தாங்கிய காவலருடன் வந்து மிரட்டியதும், என் உணர்ச்சிவசப்பட்ட நிலை கண்டு, என் தோளைத் தட்டிக் கொடுத்து விலகியதும்...

என்னுடைய ஆசிரியர்கள் என்று நான் நினைவு கூர்ந்த தொண்ணூறு சதவிகித ஆசிரியர்கள் காலமாகி விட்டதாக அலுவலக உதவியாளர் சொன்னபோது கஷ்டமாக இருந்தது. பின்னே இத்தனை வருடங்கள் இருப்பார்களா என்ன என்ற எண்ணமும் எழுந்தது.
                         

வசித்த ஓல்ட் ஹவுசிங் யூனிட், மருத்துவக்கல்லூரி சாலை, வ வு சி நகர் என்று தாண்டிச் செல்லத்தான் நேரம் இருந்தது. 
               

அந்தக் கலை அரங்கத்தில்தான் எத்தனை நிகழ்ச்சிகள் பார்த்திருக்கிறேன்... என் நண்பன் கலந்து கொண்ட மாறுவேடப் போட்டி முதல், எங்கள் பள்ளி ஆசிரியர் பாடிய இசை நிகழ்ச்சி வரை... அந்த உடைந்த பின் ஜன்னல் கூட சரி செய்யப்படவில்லை! இதன் நேர்பின்னே என் வீடு!

இத்தனை வருடங்கள் கழித்தும் நிறம் மாறாத, கூரை மாறாத பாலர்பள்ளி, அருகிலேயே லைப்ரேரி... இந்த லைப்ரேரி எத்தனை நினைவுகளை மீட்டெடுக்கிறது எனக்குள்! நானே லைப்ரேரியைப் பார்த்துக் கொண்ட நாட்கள், கையெழுத்துப் பத்திரிக்கை நடத்திய நாட்கள்...இன்னும் இன்னும்...

              


மருத்துவக்கல்லூரி சாலையில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவில் மறுநாள் அதிகாலை சென்றால், அங்கு ஏற்கெனவே காத்திருந்த பக்தர்கள், கோவில் இன்னும் திறக்கவில்லை, இன்னும் அரைமணி நேரம் ஆகலாம் என்றனர். நான் இருந்தபோது சாலைகள் மிகவும் குறுகலாக இருக்கும். இப்போது நல்ல முறையில் இருந்தது. இந்த ஆஞ்சநேயர் கோவிலுக்கும், அருகிலேயே இருக்கும் மசூதிக்கும் அடிக்கடி வருவோம். இரண்டுக்கும் இடையேதான் எங்கள் ரேஷன் கடை இருந்தது. அந்தக் கடையை ஒட்டி சந்தில் நடந்தால் ராஜேந்திரா (டூரிங்) டாக்கிஸ் வரும்!
           



கொஞ்சம் அஜாக்கிரதையாக சைக்கிள் ஓட்டினால் ஓரத்தில் இருக்கும் சரிவில் விழுந்து கீழே சென்றுவிடும் அபாயமாக இருந்த மேம்பாலம் இப்போது நான்கு வழிச்சாலையாக அழகாக இருந்தது. எங்கள் 'வெண்சங்கு' பஸ் ஒருமுறை இந்த மேம்பாலத்திலிருந்து கவிழ்ந்து விழுந்திருக்கிறது!

                                        


மேலவீதியில் நண்பரைப் பார்க்க சங்கர மடம் சென்றபோது காமாட்சி அம்மனின் அற்புதத் தரிசனம் கிடைத்தது. 


மேம்பாலம் கிட்டத்தட்ட ராணி பேரடைஸ் தியேட்டர் தாண்டி முடிவைடைகிறது. பெரிய கோவிலைச் சுற்றி வந்தோம். மாலை 6.30 மணிக்கு மேல் ஆகி விட்டதால் நிறைய புகைப்படங்கள் இங்கு எடுக்க முடியவில்லை.

                            



சிவகங்கைப் பூங்கா செல்லும் ஆசையும் நேரமின்மை காரணமாக முடியாமல் போனது. சென்ட்ரல் லைப்ரேரி, திருவள்ளுவர் தியேட்டர் வழியாக (ஓல்ட்) பஸ் ஸ்டேண்ட் சென்று திரும்பி கும்பகோணம் செல்லும் சாலையைப் பிடித்தோம்.




முன்பு சாந்தி ஸ்டோர்ஸ் எதிரே, ஆனந்தபவன் அருகே இருந்த ரயில்வே ஸ்டேஷன், இப்போது மேரிஸ் கார்னரில் இருந்தது ஆச்சர்யம். அந்தப்பக்கமாகச் சென்று ஈவினிங் பஜார், சாந்தப்பிள்ளை கேட், யாகப்பா தியேட்டர், ஞானம் தியேட்டர் (இப்போது ஹோட்டலாக மாறியிருக்கிறதாம்) ராஜா கலையரங்கம் தியேட்டர், மங்களாம்பிகா ஹோட்டல், மணிக்கூண்டு இவற்றை மனக்கண்களால் பார்த்தபடியே கும்பகோணம் சாலையில் விரைந்தோம்!


"தஞ்சைக்கு மறுபடி வரவேண்டும்"