சிநேகிதியின் வீட்டில் போட்ட கத்திரிக்காய் ஊறுகாய் ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
பி டி கத்திரிக்காய் எல்லாவிதத்திலும் பயமுறுத்திக் கொண்டு இருக்கும் போது ஊறுகாய் போடும் யோசனை வந்தது.
கத்திரிக்காய் ஊறுகாய்க்கு தேவையான பொருட்கள்:
*********************************************************************
கத்திரிக்காய் ....இது ரொம்ப அவசியம்.
ஊறுகாய்னு போடறதுனால உப்பு ,மிளகாய்ப் பொடி,பெருங்காயப் பொடி, மெந்தியப் பொடி,மஞ்சள் பொடி எல்லாம் அளவோடு இருக்கணும். எண்ணெயும் நிறைய வேண்டும்.
இல்லாவிட்டால் ரொம்ப நாள் தாக்குப் பிடிக்காது.
இப்ப எங்க வழிக் கத்திரிக்காய் ஊறுகாய் பார்க்கலாமா.
பரிசோதனையாச் செய்யறவங்களுக்குக் குறைந்த அளவு ஊறுகாய்ப் போடும் அளவுகளைச் சொல்கிறேன்.
கத்திரிக்காய். அதுவும் இந்த பச்சைக் கலரில்
இருக்குமே அந்த கத்திரிக்காய்.
தேவையான அளவுகள்
***************
1, 6 எண்ணம் பெரிய இளம் பச்சை வண்ண நீளக் கத்திரிக்காய், பிஞ்சா இருக்கிறதாப் பொறுக்கி எடுத்துக்கணும். சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளணும்.
2,இந்த அளவுக்குத் தேவையான
உப்பு...................அரைக் கப்,
3. புளிக்கரைசல்.........அரைக் கப் (கெட்டியாக இருக்கணும். கப் இல்லைங்கோ - புளிக்கரைசல்! )
4. மிளகாய்ப்பொடி......அரைக் கப்
5. மஞ்சள் பொடி.........இரண்டு டீ ஸ்பூன்
6. வெல்லமும் பொடித்துப் போட்டுக் கொள்ளலாம்...சிறிதளவு.
7. நல்லெண்ணெய்..........400 கிராம்
8. கட்டிப் பெருங்காயத்தை வறுத்துப் பொடித்த தூள் மூன்று தேக்கரண்டி,
9. வறுத்துப் பொடித்த வெந்தயம்.............ஒரு தேக்கரண்டி பொடி.
10. வெள்ளைப்பூண்டு நறுக்கினது ஒரு கப்.
11. சின்ன வெங்காயம் நறுக்கினது இரண்டு கப்.(நிறைய இருக்கேன்னு தோணினால் ,கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாம்) .ஆனால் இந்த வெங்காயம் அவசியம்.
இப்ப செய்முறைக்குப் போகலாமா.
கொஞ்சம் பிரார்த்தனை செய்து கொள்ளுங்க.
smile emoticon
நல்ல சுத்தம் செய்த இரும்பு வாணலில செய்தால் சுவை கூடும். இல்லைன்னால் கனமான வேற வாணலிலயும் செய்யலாம்.
அடுப்பில் வாணலியை ஏற்றிக் காய்ந்ததும் கொஞ்சமாக நல்லெண்ணெயை விட்டுக் கொண்டு, அது காய்ந்ததும் நறுக்கின வெங்காயத்தையும், பூண்டுத் துண்டுகளையும் போட்டு நன்றாக வதக்க வேண்டும்.
வதங்கி முடியும் நேரம் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள்,பெருங்காயத்தூள்
மூன்றையும் சேர்த்து நன்றாகப் பிரட்டி எடுக்க வேண்டும்.
இந்தக் கலவை ஒரு அரைகுறையாக அரைத்த சட்டினி ஸ்வரூபத்தில் வந்துவிடும்.
அப்பொழுது நாம் நறுக்கி வைத்த கத்திரிக்காயை இந்தக் கலைவையில் சேர்க்கணும். அடுப்பை அணைத்து விட்டு, இன்னோரு வாணலியில் மிச்சமிருக்கும் எண்ணெயை விட்டுக் காய்கிற வரை பொறுமை காத்துக் கொஞ்சம் கடுகு போட வேண்டும். வெடித்ததும் (கடுகு அடுத்த வேலை புளிக்கரைசலயும்,உப்பையும் சிறிதளவு வெல்லத்தையும் சேர்த்து, (அடுப்பை சிம்மரில் வைத்துக் கொண்டு பிறகுதான் புளிக்கரைசலை விடணும்)
கொதிக்க வைக்கணும்.
இது புளி வாசனை போகக் கொதித்ததும் இந்த அடுப்பை அணைத்து , கத்திரிக்காய் இருக்கும் அடுப்பை ஏற்றணும். கத்திரிக்காயும் மற்ற எல்லா உட்பொருள்களும் கலந்து ஒரே கலவையாகத் தெரியும் வரைக் கிளற வேண்டும்.
முக்கால் பதம் வந்ததும் புளிக் கலவையை ஊற்ற வேண்டும்.
அடுப்பு சிறிய அளவில் எரியட்டும்.
எண்ணெய் பிரிய ஆரம்பிக்கும் போது,நன்றாக ஊறுகாயின் மேல் மிதக்கும் அளவில் அடுப்பை அணைத்துவிடலாம்.
ஆறிய பிறகு நல்ல ஜாடியோ, இல்லை கண்ணாடி பாட்டிலிலோ முக்கால் அளவுக்கு நிரப்பி வைக்க வேண்டும்.
ஒரு சிறிய சுத்தமான வெள்ளைத்துணியினால் வேடு கட்டி ,நல்ல இறுக்கமான மூடி போட்டு மூடிவைக்கலாம்.
இது எங்க வீட்டில் மிகப் பிடித்த ஊறுகாய்.