வெள்ளி, 23 பிப்ரவரி, 2018

புதன், 21 பிப்ரவரி, 2018

180221 புதிருக்கு அஞ்சேல்


சென்றவாரம்,  நான் நினைத்து கேட்டவை : 


1) மாமியாரும் ஒருவீட்டு மருமகளே


2)  நீலாவுக்கு நெறஞ்ச மனசு 


3) சவரக்கத்தி ( சக்கரவர்த்தி என்பதுதான் சரியான படப் பெயர் . அதை 7 எழுத்துக்களாக சௌகரியத்திற்கு     சுருக்கி   சக்ரவர்த்தி என்று எழுதியவர்கள் எல்லோரும் , மற்றும்  சதிலீலாவதி என்றவர்கள் எல்லாம் ஏறுங்க  பெஞ்சு மேலே) 

   

4) பணம் பந்தியிலே 


5) பூலோக ரம்பை


6) ஸ்கூல் மாஸ்டர் 


7) என் ஆளோட செருப்பக் காணோம்  ( எங்களுக்கும் காலம் வரும் என்பதும் ஏற்றுக்கொள்ள வேண்டிய பதிலே ) 


8) மஹா கவி காளிதாஸ் ( ஹி ஹி கவுண்டிங்ல கோட்டை விட்டுட்டேன்! அதனால் நான் பெஞ்சு மேல ஏறிக்கறேன்!) மலபார் போலீஸ் என்று சொன்னவர்களுக்கு முழு மதிப்பெண் கொடுக்கின்றேன் . மானம் காத்த ம போலீஸுக்கு நன்றி. 


9) எங்க வீட்டுப் பெண் 


10) துகாராம் 


   சரியான  பதில் கூறிய ஒவ்வொருவருக்கும்,  ஒவ்வொரு பதிலுக்கும் நூறு மார்க் . அக்கவுண்ட்ல போட்டு  வச்சிக்குங்க. அப்புறம் வித்டிரா பண்ணிக்கலாம். 



இந்த வாரம்: 


தமிழ்  படப் பாடலின் முதல் வரி ... முதல் எழுத்து, கடைசி எழுத்து ( கவனிக்கவும் : வரியின் கடைசி எழுத்து ) 


நீங்க அந்தப் பாலின் முதல் வரியை எழுதவும் . 


Note: some have more than one right answer.
1). அ .............................   ளே ! 



2). பே ................... யா? 


3).  இ ......................... கை 



4).  ஆ ...................  ரோ 



5).  தை .....................  வ்    


6). டி .....................    லே 


7) லி ................................. டு 


8)  கா ...................... டு 


9)  டோ ......................  ரா 


10) டை .................... வா 



வெள்ளி, 16 பிப்ரவரி, 2018

வெள்ளி வீடியோ 180216 : ஒன்றை விட்டு ஒன்றிருந்தால் தாபம் மனதில் வளருமே


   சச்சின் டெண்டுல்கர் விளையாடும் புயல் விளையாட்டில் அவருடன் விளையாடிய கங்குலியின் ஆட்டமோ, டிராவிடின் ஆட்டமோ கண்ணில், கவனத்தில் படாமல் சென்றுவிடும் பார்த்திருக்கிறீர்களா?  உண்மையில் அதுவும் சிறப்பான விளையாட்டாய்த்தான் இருக்கும்.  ஆனால் இந்தப் புயலில் அது காணாமல் போயிருக்கும்.  

புதன், 14 பிப்ரவரி, 2018

180214 சினிமாப் பெயர் தெரியுமா?



எல்லாம் சினிமாப் படப் பெயர்கள். தமிழ் சினிமா. 

முதல் எழுத்தும் கடைசி எழுத்தும் கொடுக்கப்பட்டுள்ளன.

அடைப்புக் குறிக்குள் மொத்த எழுத்துகள். 

புதன், 7 பிப்ரவரி, 2018

180207. காட்டுத்தனமா ஒரு புதிர்!


Quiz
ஒளிந்திருக்கும் மிருகங்களைக் கண்டுபிடியுங்க.  

1) சேர்க்க வா 

2) பாடு கோந்து 

3) பரிமாற உதவும் கருவியிலிருந்து புள்ளி வெச்ச எழுத்தை 'சுரண்டி' எடுத்துட்டா வருவாரு இந்த டி ஆரு!

4) குங்குமத்தை கொஞ்சம் எடுத்து 'ர'கசியமா பிச்சிப் போட்டா  ....  வருவார்.!   

திங்கள், 5 பிப்ரவரி, 2018

"திங்க"க்கிழமை - கடுகுப் பச்சடி - கீதா ரெங்கன் ரெஸிப்பி


கடுகோரைக்கான கடுகு பச்சடி/கடுகு குழம்பு ஹை! ஃப்ரென்ட்ஸ் வணக்கம். ரொம்ப நாளாச்சோ?! சரி… நாம இன்னிக்கு கடுகு ரெசிப்பி ஒன்னு பார்க்கப் போறோம். கடுகுன உடனே அங்க யாரு ‘கடுகு தாளிக்கத்தான் யூஸ் பண்ணுவம்’னு கடுகு போல வெடிக்கறது!!! ஓ!! நம்ம பூஸார்! நோ கடுகு தாளிப்பு!! இது ரொம்ப நல்லாருக்கும் பூஸார்! நாம புளியோதரை செய்வோம் இல்லையா? நீங்க கூட நெல்லையின் புளியோதரை ரெசிப்பி செய்திருந்தீங்களே!! (நீங்கதானே செஞ்சீங்க?!!! இல்லை நெல்லையோட ஃபோட்டோவா ஹா ஹா) அது போல இது கடுகோரை செய்ய உதவும். தொட்டுக் கொண்டும் சாப்பிடலாம்.  

ஞாயிறு, 4 பிப்ரவரி, 2018

பாம்புப் பாதையில் பரவசப் பயணம்


ஹர்பஜன் மந்திரிலிருந்து கேங்டாக் வரும் வழியில் கடந்து வந்த பாதை.  சுத்தமான மாநிலம் என்று விருது வென்ற சிக்கிம் மாநிலம்.  பிரித்து வேறு இடத்தில கட்டி விடக்கூடிய கட்டிடங்கள்...

வெள்ளி, 2 பிப்ரவரி, 2018

வெள்ளி வீடியோ 18022018 : விரியும் பூக்கள் பாணங்கள் ; விசிறி ஆகும் நாணல்கள்


​     பாடலுக்கேற்ற சூழலை இசையிலேயே கொண்டு வர முடியுமா?  முடியும் என்று பலமுறை நிரூபித்தவர் இளையராஜா.  இந்தப் பாடலும் அதில் ஒன்று.   இசையிலேயே காட்சிகளை உணர வைக்கிறார் இசைஞானி.