21.2.25

வாழ்விலும் தாழ்விலும் விலகிடாத நேசம் வாலிபம் தென்றலாய் என்றும் இங்கு வீசும்

பயணம் இனிதானது.  பகல் பயணத்தைவிட இரவுப்பயணம் மிக இனிமையானது.  இரவின் அமைதியில் பயணம் செய்யும்போது இரவின் குளுமையும், மனதின் நினைவுகளும் கூடவே வருகின்றன.

11.2.25

சிறுகதை : वह कौन है? - ஸ்ரீராம்

 நீண்டு நிமிர்ந்திருந்த அந்தத் தெருவின் கடைசியில் - அல்லது முதலில் என்றும் சொல்லலாம்.  அது நீங்கள் எந்தத் திசையிலிருந்து பார்க்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது - அவன் உதயமானான்.