என்னைப் பொறுத்தவரை பாகற்காய் பிட்லேயே பிட்லேயன்றி
மற்றெல்லாம் பிட்லேயல்ல!
எங்கள் வீடுகளில் பெரும்பாலும் உ.கி, சேம்பு போன்ற கிழங்கு வகையறாவை வைத்து குழம்பு வகைகள் செய்வதில்லை. ரொம்ப ரொம்ப ரொம்ப ரேர்! அவியலில் போடுவது, கருணை மசியல் செய்வது வேறு கதை!
முட்டைக் கோசை வைத்துப் பெரும்பாலும் கறி வகைகள்தான். ஃபிரைட் ரைஸில்போடுவது உண்டு.
சரி, செய்முறைக்கு வருகிறேன்.
நான்கு பேர்கள் சாப்பிடத் தேவையான அளவு என்று வைத்துக் கொள்வோம்!
கால் கிலோ முட்டைகோஸ், மற்றும் சிறிய வகை உருளைக் கிழங்கு இரண்டு ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்வோம்.
துவரம் பருப்பு இரண்டு கரண்டி குக்கரில் வைத்து, நன்றாக வேக வைத்து எடுத்துக் கொள்வோம்.
நிறைய கறிவேப்பிலை, கொத்துமல்லி கிள்ளிப் போட்டுக் கொள்வோம்.
கடுகு, வெந்தயம் தாளித்து விட வேண்டியதுதான்.
சாதம் பிசைந்து சாப்பிடவும், சப்பாத்திக்குத் தொட்டுக் கொள்ளவும் சுவையான கூட்டுக் குழம்பு தாயார்... ச்சே... தயார்!
நன்றி : படங்கள் இணையத்திலிருந்து.