7.9.25

ஞாயிறு பட உலா – நெல்லைத் தமிழன் நான் சென்ற இடங்கள் – மெக்சிகோ - படங்களுடன் - 14

 

இறுதிப்பகுதி – ரிசார்ட் மற்றும் நாடு திரும்புதல்

கான்ஃபரன்ஸ் எல்லாம் இனிதே முடிந்தது. அடுத்த நாள் மதிய விமானத்தில் UK கேட்விக் விமானநிலையம் செல்லணும்.  இந்தப் பயணத்தை, புதிய தேசத்தை நான் ரொம்பவே அனுபவித்தேன். உணவு என்பது மிகப்பெரிய விஷயமாக எனக்கு இல்லை. 

ஒரு தடவை தாய்வான் 6 நாட்கள் பயணமாகச் சென்றிருந்தேன். அங்கு நம் வகை உணவு ஒன்றுமே சாப்பிட்டிருக்கவில்லை. பழங்களும் ப்ரெட்டும் மாத்திரமே. நான் என் வீடு வந்து சேர்ந்தபோது இரவு மணி 8 ½ . உடனே சாதம், வெந்தயக் குழம்பு (வெண்டைக்காய் தான் போட்டு), உருளைக்கிழங்கு கட் பண்ணிச் செய்யும் காரக்கறி, சுடச்சுடச் செய்து 9 ½ மணிக்கு சாப்பிட்டபிறகுதான் கொஞ்சம் உயிர் வந்தது போல இருந்தது. நான் இருந்த தேசத்தில் நம் தமிழக உணவகங்கள் நிறைய உண்டு. இருந்தாலும் நானே பண்ணிச் சாப்பிட்டது எனக்கு மிகவும் திருப்தியாக இருந்தது. (கையில் தொழில் இருக்கும்போது, காரை எடுத்துக்கொண்டு ரெஸ்டாரண்ட் செல்வானேன்? அதுவும் தவிர எனக்கு டிபனில் அப்போது ஆசை இல்லை)

ரெஸ்டாரண்டுகள் பற்றி எழுதும்போது,  எனக்கு சரவணபவன் உணவு மீது இருந்த தீராக் காதல் நினைவுக்கு வருகிறது. 87-90 களில் சென்னையில் தி நகரில் வேலை பார்த்தபோது, உஸ்மான் ரோடில் இருக்கும் சரவணபவனுக்கு மதிய உணவுக்குச் சென்றுவிடுவேன்.  எனக்கு எப்போதுமே, சுடச் சுட இருந்தால்தான் சாப்பிடப்பிடிக்கும் (ஆண்களுக்கு இறைவன் கொடுத்த வரம் அது. அப்போ பெண்களுக்கு? ஆறிச் சாப்பிட்டால்தான் நீ செய்த உணவின் குறைகள் தெரியும், கணவனுக்காக திருத்திக்கொள்ளலாம் என்று நினைத்திருப்பாரோ இறைவன்?...) விளையாட்டுக்காக எழுதியிருந்தாலும், நான் கிச்சன் பொறுப்பை எடுத்துக்கொள்ளும்போதெல்லாம், அதாவது மற்றவர்களுக்கான உணவைத் தயார் செய்ய, அவர்களுக்குப் போடுவதில்தான் எனக்கு எண்ணம் இருக்குமே தவிர நான் சாப்பிடணும் என்று தோன்றாது. அவங்கள்லாம் சாப்பிட்ட பிறகு, சூடு குறைவான உணவை நான் ஆர்வத்தோடு உண்ணுவதில்லை, ஏதோ சாப்பிட்டோம் என்று பேர் பண்ணிடுவேன்). 

காலை வீட்டில் சாப்பாடு சாப்பிட்டிருக்கவில்லை என்றால், 10 ¾ க்கு சரவணபவன் போய்விடுவேன். அப்போதான் அவர்கள் எள்ளோரை, புளியோதரை-ஏதாவது ஒன்று, அனேகமா எள் சாதம்தான், அங்கிருக்கும் தெய்வப் படங்களுக்கெல்லாம் தூப தீபத்துடன் காட்டிவிட்டு, மதிய உணவை ஆரம்பிப்பார்கள். அவங்களுடைய மதிய உணவுக்கு ஈடு இணை கிடையாது என்பது என் அபிப்ராயம். ஒவ்வொரு ஐட்டமும், அதன் ருசியும் இன்னும் என் மனதில் இருக்கிறது. அந்தக் காலத்தில் அவங்க தரம் எப்படி இருந்தது என்றால்,  எந்த ஊர், பிராஞ்ச் சரவணபவன் சென்றாலும் அதே தரம், அதே ருசி. இந்த ‘உயர்தர’ என்ற லேபிளை மற்றவர்களும் உபயோகித்துப் பார்த்தார்கள், ‘பவன்’ஐயும் காப்பியடித்து ‘கணேஷ் பவன்’ என்றெல்லாம் ஆரம்பித்தார்கள். டிபனும் அங்கு நல்லாத்தான் இருக்கும். பாண்டிபஜார் பிராஞ்ச் ஆரம்பித்தபோது அங்கு மாத்திரம் கொஞ்சம் அதிக விலை என்று தோன்றும்.

துபாய் சென்றாலும் அங்கு சரவண பவனில் சாப்பிடுவேன் (அங்க அந்த பிராஞ்ச் வந்தபோது). எந்த நாடு சென்றாலும் அங்கு சரவணபவன் இருந்தால், அங்கு ஒரு வேளையாவது மதிய உணவு சாப்பிடுவேன்.  துபாய் கராமா பிராஞ்சில்தான் ருசி மாற ஆரம்பித்தது (அதாவது மலையாளிகளை ஈர்ப்பதற்காக பூண்டு சேர்ப்பது அதிகமானது என்று நினைவு). நான் இருந்த தேசத்தில் அவங்க பிராஞ்ச் வரப்போகிறது என்று பேச்சாக இருந்தது. என் மனைவியிடம் அப்போதே சொல்லிவிட்டேன், வார இறுதியில் அங்குதான் மதிய உணவு என்று. (நீங்க வர்றீங்களோ இல்லையோ, நான் அங்குதான் செல்வேன்). திறந்த முதல் நாள், மாலை டிஃபனுக்கு எல்லோரும் சென்றிருந்தோம். (என்னப்பா… சாம்பார் இவ்வளவு தண்ணியா இருக்கு? மதியம் வைத்திருந்ததை போடுகிறார்களோ? என் மகள். அதற்கேற்றபடி மதியம் செய்திருந்த பழக் கிச்சிடியைப் போட்டார் சர்வர், நல்லெண்ணத்துடந்தான்). எனக்கும் கொஞ்சம் ஏமாற்றம்தான். மதிய உணவுக்குச் சென்றேன். ருசி மாறுபாடு இருந்தது.  தண்ணீர் காரணம்தான் சார்… சீக்கிரம் சரியாயிடும்…   அது சரியாகவே இல்லை. அப்புறம் சென்னை வந்தபோது ஒரு தீபாவளி அன்று (அப்போதான் நாங்க என் அம்மாவைப் பார்க்கச் சென்றோம். வழியில் சரவணபவனில் சாப்பிட்டுவிட்டுச் செல்லலாம் என்று நினைத்தோம். ) உஸ்மான் ரோடு சரவண பவனில் உணவு சாப்பிட்டுவிட்டு, ஓரிரண்டு தசாப்தத்தில் இந்த அளவுக்கு மோசமாகிவிட்டதா என்று நினைத்தேன். ஒரு தடவை அடையாறில் உள்ள பிராஞ்சில் சாப்பிட்டேன். சரி. இனி சரவண பவன் ஆசைக்கு முழு முற்றுப்புள்ளி வைக்கவேண்டியதுதான் என்று முடிவு செய்துவிட்டேன். 

மெக்சிகோவினர் பெரும் பணக்காரர்கள் கிடையாது. பலரும் சாதாரண நிலையில் இருப்பவர்களே. அதிலும் பெண்கள் ரிசார்ட், ரெஸ்டாரண்ட், கலைப்பொருட்கள் விற்கும் இடம், சுற்றுலாப் பயணிகள் வரும் இடம் என்று பலவற்றிலும் வேலை செய்கிறார்கள்.  இந்தப் பயணத்தின் அவர்கள் மீதான நல்லெண்ணம்தான் எனக்கு வந்தது. 


மோதலில் ஆரம்பித்து நண்பரானவர். 

ஒவ்வொருவருக்குள்ளும் உள்ள நல்ல மனம்/குணம் பழகப் பழகத்தான் தெரிகிறது.

தொடர்ந்த ஜிம், நடைப்பயிற்சி போன்றவற்றால் எடையைக் குறைக்க முடிந்தாலும் தொடர்ந்து உணவில் கவனம் வைக்காவிட்டால் மீண்டும் எடை ஏறிவிடுகிறது. இப்போதெல்லாம் எனக்கு எடையைப் பற்றி ரொம்பவே கவலை. என் பையனோ don’t be obsessed with your weight, பிற்காலத்துல பலவற்றைச் சாப்பிடவே முடியாது, அதனால் இப்போதே சாப்பிடாமல் இருக்காதீங்க என்கிறான்.

இடையில் தர்ப்பண நாளும் வந்தது. அதற்கான ஆயத்தங்களுடன் சென்றிருந்தேன். பாருங்க மெக்சிகோவில் சென்று தர்ப்பணக் கடமையை நிறைவேற்றணும் என்று இருந்திருக்கிறது.

இன்னொரு ரெஸ்டாரண்டில் உணவு


கடலுக்கும் ரிசார்ட்டுக்கும் இடையில் மிகக் குறைவான தூரமே இருக்கிறது என்பது தெரிகிறதா?



கடற்கரைப் பகுதி Waste landஆக இருந்ததை, சுற்றுலாத் தளங்களாக மாற்ற அரசே நிறைய ரிசார்ட்டுகள் உருவாக வழிவகை செய்திருக்கிறது (1970ல்). இதனால் சில ஆயிர மக்களே இருந்த இடத்தில் இப்போது ஆண்டுக்கு 1 கோடி சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.


Water Sportsம் இருந்திருக்கும். அதையெல்லாம் கவனிக்க நேரமில்லை.


பறவைப் பார்வையில் ரிசார்ட் கொள்ளை அழகு இல்லையா?



கடல் நீர் பொங்கினால் அந்தப் பகுதியிலும் கடல் நீர் புகும் (பொதுவாக அங்கெல்லாம் கடல் நீர் போகும் என்றே நினைக்கிறேன்)





கடற்கரை மணலில் வாலிபால் விளையாடிக்கொண்டிருந்தார்கள் (பெண்கள், உங்களுக்கே தெரிந்திருக்கும் பிகினியில்).  என்னையும் விளையாட்டில் கலந்துகொள்ளச் சொன்னார்கள். நானும் வாலிபால் விளையாடுவேன். ஆனாலும் தயக்கம். அவர்களைப் புகைப்படம் எடுக்கவும் தயங்கிவிட்டேன். கேட்டிருந்தால் சரி என்று சொல்லியிருப்பார்கள்.

அலையே போய்வரவா? அழகே போய்வரவா… என்றெல்லாம் எழுத எனக்கு யாரேனும் பணம் கொடுத்தால்தான் கற்பனை சுரக்க ஆரம்பிக்கும்.


ரிசார்ட்டில் பூக்களையே காணோமே என்பவர்களுக்காக. நிறைய பூக்கள் இருந்தன  (கீதா ரங்கன் இவற்றை இட்லிப் பூக்கள் என்பார்… உணவே அவர் நினைவில் இருப்பதாலா இல்லை இதுதான் அவற்றின் பெயரா?)

ரிசார்ட்டிலிருந்து கிளம்பத் தயாராகிவிட்டேன்.

இது மெக்சிகோ ஏர்போர்ட் லாஞ்சில் காத்திருந்தபோது. 

மெக்சிகோ கான்கன் விமான நிலையத்திலிருந்து லண்டன் கேட்விக் விமான நிலையம், பிறகு அங்கிருந்து பேருந்தில் ஹீத்ரூ விமான நிலையம். அங்கிருந்து நான் வசித்துவந்த தேசம். 

இங்கிலாந்தின் வானம், மேலே பறக்கும் விமானம்.


இனி செக்கின் பண்ணவேண்டியதுதான் பாக்கி.


இதெல்லாம் அப்போது எனக்கு பிரமிப்பாக இருந்தது. தற்போது எல்லா இடங்களிலும் வந்துவிட்டது. ஆனாலும் சில எஸ்கலேட்டர்கள் மிக மிக உயரமானவை, நீளமானவையும்கூட. இதை வெளிநாடுகளில்தான் நான் பார்த்திருக்கிறேன்.


லண்டன் ஹீத்ரூவிலிருந்து கிளம்பப் போகிறேன். இங்கு ஒரு விஷயம் எழுதலாம் என்று நினைக்கிறேன். முதன் முதலில் (2002) பிரிட்டனுக்குப் பிரயாணப்பட்டு, அந்த மண்ணில் காலடி வைத்தபோது ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டது. நம்மை ஆண்டவர்களின் தேசத்துக்குச் செல்லும்படியான வாய்ப்பு கிடைத்திருக்கிறதே என்று. 

நான் வசித்துவந்த தேசத்துக்கு வியாழன் இரவு வந்துசேர்ந்தேன். மறுநாள் விடுமுறை தினம்… ஆனாலும் பசங்க பள்ளிக்கூடத்திற்குச் சென்று, அவங்க கலந்துகொண்டிருந்த எக்ஸிபிஷன் பார்க்கச் சென்றிருந்தோம்.  ஒவ்வொரு மாணவரின் திறமை வியக்கச் செய்தது. இந்தத் தொடரை நிறைவு செய்ய அதிலிருந்து இரண்டு படங்களைப் பகிர்ந்துகொள்கிறேன். 



பள்ளிக்கூட மாணவர்களின் கைத்திறன் அருமை என்றாலும், உணவுப் பொருளை அதற்குரிய விதத்தில் பயன்படுத்தாமல், இந்த மாதிரி டிசைன் போடுகிறேன் என்று வீணாக்குவதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?

வேலைப்பளு நிறைய இருந்ததாலும் என்னுடைய இயற்கையான சுபாவத்தினாலும் ரிசார்ட்டின் பல்வேறு சௌகரியங்கள் பக்கம் என்னால் செல்ல முடியவில்லை. கிடைத்த நேரத்தில் பார்த்தவையே இதுவரை எழுதியவை. எடுத்த படங்களில் பாதிக்கு மேல் இங்கு பகிர்ந்துகொண்டுள்ளேன். உங்களுக்கு அவை பிடித்திருக்கும் என்று நம்புகிறேன்.

இந்த எனது மெக்சிகோ பயணத் தொடர் ஒரு வழியாக நிறைவடைந்தது. இந்தத் தொடரை நான் ஆரம்பிக்கக் காரணம், சோழ வரலாறு/தாராசுரம் சிற்பங்கள் என்று தொடர்ந்து படிக்க ரொம்பவே போரடித்துவிடக் கூடாது என்பதற்காக. அதிலும் கௌதமன் சார் சொல்லியிருந்த பாண்டிச்சேரி ரிசார்ட் எனக்கு நான் மெக்சிகோவில் தங்கியிருந்த ரிசார்டை நினைவுபடுத்திவிட்டது.  ஒரு வாரம் நான் மெக்சிகோவில் தங்கியிருந்த பயணத்தைப் பற்றி எழுதிய இந்தத் தொடரைத் தொடர்ந்து வந்தவர்களுக்கு நன்றி. 

மீண்டும் ஒரு வெளிநாட்டுப் பயணப் பதிவோ இல்லை வெறும் படங்களுடனோ உங்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கணும்.

மெக்ஸிகோ பயணக் கட்டுரை நிறைவு. 

அடுத்த வாரம் சோழர் கால சிற்பங்கள் தொடரும். 

= = = = = = = = = = = = =

84 கருத்துகள்:

  1. (ஆண்களுக்கு இறைவன் கொடுத்த வரம் அது. அப்போ பெண்களுக்கு? ஆறிச் சாப்பிட்டால்தான் நீ செய்த உணவின் குறைகள் தெரியும், கணவனுக்காக திருத்திக்கொள்ளலாம் என்று நினைத்திருப்பாரோ இறைவன்?...)//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் மனித சமூகம் நாம செய்துவிட்டு எதுக்கு இறைவன் மீது பழி போடறீங்க!!!!!!!!!!!!!!!!!இறைவனுக்கும் இதற்கும் எந்த நடப்பிற்கும் சம்பந்தம் இல்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா ரங்கன் க்கா. நான் இறைவனுக்கு உணவைப் படைப்பதற்கு முன்பு எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்ப்பேன். மனைவி உட்பட பலர் இப்படிச் செய்வதில்லை. பிறகு உணவில் ஒருவேளை உப்பு போன்ற குறைகள் இருந்தால் சரி செய்வார்கள். எது சரியான செயல்?..

      நீக்கு
  2. விளையாட்டுக்காக எழுதியிருந்தாலும், நான் கிச்சன் பொறுப்பை எடுத்துக்கொள்ளும்போதெல்லாம், அதாவது மற்றவர்களுக்கான உணவைத் தயார் செய்ய, அவர்களுக்குப் போடுவதில்தான் எனக்கு எண்ணம் இருக்குமே தவிர நான் சாப்பிடணும் என்று தோன்றாது. //

    இது பாயின்ட்! அப்படி வாங்க நெல்லை. எனக்குமே அப்படித்தான்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதைதான் 'அரைச்சவளுக்கு அம்மி' என்று அடிக்கடி சொல்வார் என் அம்மா.  அதற்கான உண்மையான அர்த்தம் வேறாயிருந்தாலும்.

      எல்லோரும் மீண்டும் மீண்டும் கேட்டு சாப்பிட்டது போக அம்மாவுக்கு கொஞ்சம்தான் மீதி இருக்கும்.  நான் பார்த்து வருத்தப்பட்ட போது சொன்னார்.   விரும்பிச் சாப்பிட்டதைவிட என்ன சந்தோஷம் வேண்டும் அதைச் செய்பவர்களுக்கு...   குறிப்பாக அம்மாக்களுக்கு!

      நீக்கு
    2. மனைவியின் கிச்சன் வீட்டு வேலைகளில் உள்ள கஷ்டங்கள் எனக்குத் தெரியவே தெரியாது, நான் 2012ல் வீட்டை நிர்வகிக்க ஆரம்பித்ததிலிருந்து. என் பெரியம்மாவிற்கு அடுப்பிலிருந்து இறக்கிய சூட்டில் (அதை அவர் ஒட்டிக்க ஒட்டிக்க என்று குறிப்பிடுவார்) சாப்பிடணும் என்ற ஆசை கடைசிவரை அவருக்கு நிறைவேறவேயில்லை.

      நீக்கு
    3. வாங்க ஶ்ரீராம். எனக்குப் பிடிக்காதவைகள் இரண்டு. ஒன்று சமைத்தவருக்குத் தனக்குத் தேவையானதை எடுத்துவைத்துக்கொள்ளாமல் இருப்பது. இரண்டு, மிஞ்சினவற்றை காலி செய்யும் நோக்கில் அவர்கள் அடுத்த வேளை சாப்பிடுவது. மூன்றாவது, கணவன் முதலில் சாப்பிட்ட்டும் எனக் காத்திருப்பது. இவை மூன்றுக்குமே தடா என திருமணம் ஆனபிறகு மனைவியிடம் கண்டிப்பாகச் சொல்லியிருந்தேன். மிஞ்சினதைச் சாப்பிடுவதை நிறுத்த முடியலை. நான் பொதுவே நாலு மணி நேரம் ஆனால் சாப்பிடமாட்டேன்.

      நீக்கு
    4. என் அப்பா, உணவுப் பொருளை எப்போது வாங்கிவந்தாலும் (இனிப்பு காரம். இவை விசேஷ வீட்டிலிருந்து வந்தவையாகவும் இருக்கலாம்) ஐந்தாகப் பங்கிட்டு அவரவரிடம் கொடுத்துவிடுவார். அம்மா, பசங்களுக்குத் தன் பங்கிலிருந்து கொடுப்பதை அனுமதிக்க மாட்டார்.

      நீக்கு
  3. அப்போது சரவணபவன் நன்றாக இருந்தது என்பது உண்மை எந்தக் கிளைக்குச் சென்றாலும் நன்றாக இருந்தது. எப்போதாவது வெளியில் சென்று சாப்பிட்டால் சரவண பவன் அப்ப. அதன் பின் சங்கீதா. அதுவுமே எப்போதாவதுதான். அங்குதான் கடுபு இட்லி இதெல்லாம் தெரிந்து கொண்டு வீட்டில் செய்யத் தொடங்கினேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிறகு வந்த சங்கீதாவும் நன்றாக இருந்தது. இது பற்றி விரைவில் எழுதப்பார்க்கிறேன், தி பகுதியில் ஶ்ரீராம் இடமளித்தால்.

      நீக்கு
    2. யாரும் எதுவும் அனுப்பாததால் தான் நான் அட்டகாசம் செய்து கொண்டிருக்கிறேன் என்பதை அறிக!! யாராவது ஏதாவது அனுப்பினால், சந்தோஷமாக கைதட்டி விட்டு, விலகி வழி விடுவேன்.

      நீக்கு
  4. ஒவ்வொருவருக்குள்ளும் உள்ள நல்ல மனம்/குணம் பழகப் பழகத்தான் தெரிகிறது.//

    பழகப் பழகத்தான் தெரியும். இரண்டாவது எவரையும் நாம் ஜட்ஜ்மென்ட் செய்யாவிட்டால் உறவும் நட்பும் பிரச்சனை இல்லாமல் போகும்.

    படங்கள் எல்லாம் சூப்பர். கடலுக்கும் ரெசார்ட்டுக்கும் இடையில் இடைவெளி குறைவு என்பது தெரிகிறது. அழகா இருக்கு. சுனாமி எல்லாம் வராதோ?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //எவரையும் நாம் ஜட்ஜ்மென்ட் செய்யாவிட்டால் // என் மகள் இதை என்னிடம் சொல்லிக்கொண்டே இருப்பாள். Why should we judge others என்பது அவள் கருத்து.

      சுனாமி வந்தால்?....... ரிசார்ட்டின் அழகை வசதிகளை அனுபவித்த கையோடு சொர்க்கம்தான்.

      நீக்கு
  5. கடற்கரை waste land இப்ப அங்கிருக்கும் சில மக்களுக்கும் வரும்படி கிடைக்குமே சுற்றுலாப் பயணிகளால்.

    பறவைப்பார்வையில் - இந்தப் படம் செம அழகு. அதுவும் கடல் அருகில் பார்த்துக் கொண்டே அப்பகுதியில் இருக்கலாம் போல இடையில் தடுப்பு எதுவுமே இல்லையே!

    கடல் நீர் பொங்கினால் - கண்டிப்பாகப் புகும். இந்தப் படத்தில் இடப்பக்கம் ஒரு பறவை பறப்பதும் வந்திருக்கு அழகா இருக்கு. பறவைகள் பறப்பதை எடுக்க எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஆனா அதுக்குச் சரியான கேமரா வேண்டும் தூரத்தில் பறப்பதை எடுக்கணும்னா.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிறகு படித்த செய்திகள், அந்தப் பகுதியையே மாஃபியாக்கள்தாம் ஹோட்டல் ரிசார்ட் போன்றவைகளை நடத்தித் தங்கள் ஆளுகைக்குள் கொண்டுவந்துவிட்டார்கள் என்று.

      பறவைகள் பறப்பதைச் சரியாக எடுக்க, பல படங்கள் எடுக்கவேண்டும். அவற்றில் ஓரிரண்டு சரியாக வந்திருக்கும்.

      நீக்கு
  6. Stand at ease, attention அதாங்க நெல்லை நீங்க நிற்கும் படம் சூப்பர்.

    வாலிபால் விளையாடியிருக்கலாமே!

    நான் எங்க ஸ்கூல் டீமில் இருந்தேன். என் விளையாட்டைப் பார்த்து எடுத்துக் கொண்டார் கேம்ஸ் டீச்சர். ஆனா போட்டிக்கெல்லாம் வீட்டில் விடவே இல்லை. கேம்ஸ் டீச்சர் எவ்வளவோ வற்புறுத்திக் கேட்டும்

    அலையே போய்வரவா? அழகே போய்வரவா… என்றெல்லாம் எழுத எனக்கு யாரேனும் பணம் கொடுத்தால்தான் கற்பனை சுரக்க ஆரம்பிக்கும்.//

    ஹாஹாஹா சிரித்துவிட்டேன் நெல்லை. அதுசரி! வைரமுத்துவுக்குப் போட்டியா இருந்திருப்பீங்க. அப்ப அந்தக் காலகட்டத்துல.

    உங்க கருத்துக்கு அப்பாற்பட்டு இது - நம் திறமை பணம் கொடுத்தால்தான் வெளிவரும் என்றால் அது திறமையா? திறமை எப்போது வேண்டுமானாலும் அதற்கான நம் மூட் சரியாக இருந்தால் தானெ வரும் இல்லையா?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாலிபால் ஆடியதை அவர் படம் எடுக்கவில்லை என்பதை நீங்கள் நம்புகிறீர்களா? நாராயணா.. நாராயணா...

      நீக்கு
    2. // அலையே போய்வரவா? அழகே போய்வரவா… என்றெல்லாம் எழுத எனக்கு யாரேனும் பணம் கொடுத்தால்தான் கற்பனை சுரக்க ஆரம்பிக்கும்.//

      சிறப்பாக எழுதியிருந்தால் ஒரு ரூபாய் பரிசளித்திருப்பேன்.

      நீக்கு
    3. வாலிபால் விளையாடியிருக்கலாம். ஏனோ தோன்றவில்லை.

      திறமை தானாகவே வரும். பணம் கொடுத்தால் வருவதற்கு அது குழாய்த் தண்ணீர் இல்லை என்பது உண்மைதான்.

      சிலருக்குத் திறமை இருந்தும் வாய்ப்புகள் கிடைப்பதில்லை. இந்தப் பிறவியில் கொடுத்துவைக்கவில்லை என எடுத்துக்கொள்ள வேண்டியதுதான்.

      நீக்கு
    4. வாலிபால் ஆடியதைப் படமெடுக்கவில்லை. ஆனால் சில பல சந்தர்ப்பங்களில் ஏடாகூடமான படங்களை எடுத்திருக்கிறேன். பகிராமலா இருக்கப் போகிறேன்? - அதற்கு சென்சார் அதிகாரி கேஜிஜி லீவு போடற சமயமாப் பார்த்து அனுப்பணும்.

      நீக்கு
    5. //சிறப்பாக எழுதியிருந்தால் ஒரு ரூபாய்//- இது எனக்கு எட்டாம் வகுப்பு திருக்குறள் போட்டியை நினைவுபடுத்துகிறது. இரண்டாவதாக வந்த நான் அறுபது குறள்களும் முதலாவதாக வந்தவர் தொண்ணூறு குறள்களும் ஒப்பித்தோம். பிறகு ஹெட்மாஸ்டர் யாரேனும் நூறு குறள்களை ஒப்பித்திருந்தால் நூறு ரூபாய் பரிசளித்திருப்பேன் என்றார் (போட்டிக்கு முன்பாகச் சொல்லியிருந்திருக்க வேண்டாமோ? 1976)

      நீக்கு
  7. ரிசார்ட்டில் பூக்களையே காணோமே என்பவர்களுக்காக. நிறைய பூக்கள் இருந்தன (கீதா ரங்கன் இவற்றை இட்லிப் பூக்கள் என்பார்… உணவே அவர் நினைவில் இருப்பதாலா இல்லை இதுதான் அவற்றின் பெயரா?)//

    நினைச்சேன் என்னடா நம்மளை இன்னும் வம்புக்கிழுக்கலையேன்னு.

    தித்திப்பூ, இக்சோரா.....ஆனா வழக்கு மொழியில் இதை இட்லிபூன்னு சொல்வாங்க சில அடர்த்தியா வட்டமா புஸ்னு இருக்கறதுனால. பள்ளியில் அப்படி என் நட்புகள் சொல்லித்தான் தெரியும்!

    பூச்செண்டுனு கூடச் சொல்லலாம் இல்லையா? முன்னொரு காலத்தில் ரிசெப்ஷனுக்குக் கையில் பூச்செண்டு கொடுத்து நிக்க வைப்பாங்களே. அதுக்கு கடைல போய் வாங்குவதற்குப் பதில் இதையே கொடுத்திடலாம் போல இருக்கும்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த இட்லிப்பூக்களை நான் முதன் முதலாகப் பார்த்தது நான் 2ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது. அன்று சுதந்திரதினம். என் அப்பா ஹெட்மாஸ்டராக இருந்த பள்ளிக்கு (எங்கள் பள்ளியின் சுதந்திர தின விழா முடிந்து) சென்றிருந்தேன். சாக்லேட் வாங்கிக்கொண்டபின் அப்பாஅறைக்குப் பின்புறம் இருந்த தோட்டத்தில் நடந்தபோது இந்தப் பூக்களில் இருந்த தேனி முகத்தில் கொட்டிவிட்டது. அப்பா பிறகு மருந்துபோட்டுவிட்டார்.

      நீக்கு
  8. இங்கிலாந்தின் வானம், மேலே பறக்கும் விமானம். - நல்ல ஷாட். சூப்பரா இருக்கு

    பசங்களின் வெஜிட்டபிள் ஷோ சூப்பர். வாவ் போட வைத்தன.

    எங்க கல்லூரில இதுல நான் பங்கேற்றிருக்கிறேன். முதலில். முதலை வடிவம், தாமரை வடிவம், போட் என்று பல செய்திருக்கிறேன். ஆனால், அதை நான் போட்டி முடிந்ததும் குப்பையில் போடாமல் குடிசை வீட்டில் வசிப்பவருக்குக் கொடுத்துவிடுவேன். அதன் பின் இப்படி வீணாக்குவது சரியல்ல என்று - பொருளாதாரமாச்சே நான் படிச்சது - நாங்க போராட்டம் செய்து அப்போட்டியை நீக்கினோம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பள்ளியில் பசங்களின் ஓவியங்கள் மற்றும் வெஜிடபிள் ஷோ மிகவும் நன்றாக இருந்தன.

      நீங்களும் செய்திருக்கிறீர்களா? பாராட்டுகள். எனக்கும் செய்ய ஆசை. ஆனால் எதுக்கு ஒரு பழத்தைக் கெடுப்பானேன் என்ற எண்ணம்தான் செய்யவிடாமல் தடுக்கிறது (காசு வேஸ்ட் ஆகிவிடுமே)

      நீக்கு
  9. இந்த மாதிரி டிசைன் போடுகிறேன் என்று வீணாக்குவதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?//

    உடனே சப்பிடுவது என்றால் ஓகே. அதுவும் வேறு கலரோ இல்லை கெமிக்கலோ கலக்காமல் இருக்க வேண்டும். ஆனால் சும்மா அழகுக்காக - இப்பலாம் கல்யாண மண்டபத்தில் காட்சிப் பொருளாக வைக்கிறாங்களே அதில் உடன்பாடு இல்லை. வன்மையாக எதிர்க்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உணவுப் பொருளை யார் வீணாக்கினாலும் வன்மையாக எதிர்க்கணும். அதிலும் பஃபே முறையில் காணாத்தைக் கண்ட பிச்சைக்கார்ர்கள் மாதிரி எல்லாத்தையும் அதிகமாக வாங்கிக்கொண்டு வீண்டிப்பவர்களுக்கு பல குழந்தைகள் பிறந்து கலியாணச் செலவு வைத்தால்தான் புத்தி வரும் என நினைத்துக்கொள்வேன்.

      நீக்கு
  10. இப்போதெல்லாம் ஹோட்டலில் சுடச்சுட கிடைப்பதில்லை.  ஏ டு பியில் கொழுக்கட்டை, இட்லி சமாச்சாரங்களை அவனில் வைத்து சூடாக்கி தருகிறார்கள்.  தோசை ஆர்டர் செய்தால் கூட அவர்கள் கொண்டு வந்து வைக்கும்போது சூடு இருப்பதில்லை.  என்ன மாயமோ...

    மதிய சாப்பாட்டில் கூட சாதமே சூடாக இருப்பதில்லை.  அதெல்லாம் சரவணபவனோடு போச்சு.  சாதமே சூடாக இல்லாத போது சாம்பாரும் ரசமும் எப்படி சூடாக இருக்கும்!  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹோட்டல்களின் தகிடுத்த்தங்களைக் கண்டிருக்கிறேன். காலை ஐந்து மணிக்கு டிபன் சாம்பார் தயாரித்துவிடுவார்கள். பிறகு 11 1/2 வரையில் அதே சாம்பார் தொடர்ந்து சூடாக்கிக்கொண்டிருப்பார்கள், சிலர் சுடுநீரில் சூடாக்குவார்கள்.

      நீக்கு
  11. சென்னை கே கே நகர் மற்றும்  தி நகர் சரவணபவனில்  வாரநாட்களில் சிலபேருக்கு, வார இறுதியில் நிறையபேர்களும் சாம்பார், ரசம், பொரியல் வாங்கிச் செல்ல பில் போட்டுக் கொண்டு வந்து பெரிய பாத்திரங்களுடன் வரிசையில் நின்று வாங்கிச் செல்வதைப் பார்த்திருக்கிறேன்.  சாம்பார் அவ்வளவு சுவையாக இருக்கும் அப்போது.  நான்கூட சரவணபவன் சாம்பார் என்றே பதிவிட்டிருந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அங்கு, விலைக்கு சாம்பார், ரசம், பொரியல் கொடுத்தார்களா? ஆச்சர்யம்தான். ஆனால் சரவணபவன் ருசி (90களில்) அடித்துக்கொள்ள முடியாது. நல்லா விளையாடும், அதிலும் நாலாம் இன்னிங்சில் சூப்பராக விளையாடும் கோஹ்லி, தொடர்ந்து சொதப்பும்போது வரும் கோபம் சரவணபவன் மீதும் வந்தது. அவர்களுக்கு கஸ்டமர்கள் பற்றி என்ன கவலை?

      நீக்கு
  12. அங்கு தர்ப்பணம் செய்யும்போது சுய அறிமுகத்தை எபப்டி சொல்வீர்கள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுய அறிமுகம் மாறாது ஆனால் இட அறிமுகம் மாறும். ஜம்பு த்வீபே பாரத வருஷே பரத கண்டே போன்றவை இடத்துக்கு ஏற்றார்ப்போல் மாறும். கயா, பத்ரி போன்ற பல இடங்களுக்கும் இதில் மாறுதல் உண்டு.

      நீக்கு
    2. அதை தான் கேட்டேன். என்ன சொல்வீர்கள், எப்படி மாற்றி சொல்வீர்கள் என்று எனக்கு வாட்ஸ் அப்பில் சொல்லலாம்!!

      நீக்கு
  13. ​படங்கள் அழகு. குறிப்பாக பறவைப் பார்வை, மற்றும் `சிவந்த வானம், விமானம் படங்கள் நன்றாக உள்ளன.
    பறவைப் பார்வையெல்லாம் எப்படி படம் எடுத்தீர்கள்? drone எல்லாம் அப்போது கிடையாதே!.
    மெக்ஸிகோவின் பிரத்தியேக அம்சங்கள் சிலவற்றை விரிவாக கூறியிருக்கலாம். ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு தனி சிறப்பு உண்டல்லவா?
    தொடர் படங்களால் மிகவும் சிறப்பாக அமைந்தது. பாராட்டுக்கள்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜெயகுமார் சார். மெக்சிகோவின் பிரத்யேக அம்சங்கள் எனக்குத் தெரிந்தால்தானே. விக்கியைப் பார்த்து எழுதுவதில் எனக்கு அவ்வளவாக விருப்பம் இல்லை. ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டுதான்.

      பாராட்டுக்கு நன்றி.

      நீக்கு
  14. இந்த ஞாயிற்றுக் கிழமையில் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    மெக்சிகோ பயணத் தகவல்கள், நிழற்படங்கள் ena அனைத்தும் நன்று. தொடரட்டும் பயணங்களும் பதிவுகளும்.

    சரவணபவன் - சில சமயங்கள் சென்னையில் உள்ள கிளைகளில் அவர்களின் உணவை ருசித்து இருக்கிறேன். தில்லியின் இரண்டு கிளைகள் உண்டு. அங்கேயும் உணவு உண்டதுண்டு. தற்போது தரம் மிகவும் குறைந்துவிட்டது. ஆனாலும் அதிக அளவில் கூட்டம் - வட இந்தியர்கள் சாம்பார் குடிக்கவே வருகிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க தில்லி வெங்கட். என்னவோ... வட இந்தியாவிற்கு இரயிலில் பயணம் செய்யும்போது எல்லா நிறுத்தங்களிலும் இட்லி சாம்பார் விக்கறாங்க. தில்லி சரவணபவன் வேறு மேனேஜ்மெண்ட் என்று நினைவு. நன்றி

      நீக்கு
  15. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  16. மெக்சிகோ பயணக்கட்டுரை இனிதாக நிறைவு பெற்றது.
    படங்களும் விவரங்களும் அருமை.
    நீங்களே அருமையாக சமைத்து சாப்பிட்ட விவரம் அருமை.
    என் கணவருக்கு சுடச்சுட உணவு வேண்டும். சினிமா மற்றும் கடைகளுக்கு வெளியே போய் வந்தபோதும் இரவு உணவை வந்து சமைத்து கொடுப்பேன்.

    (அப்போது இரவு சாதம் குக்கரில் சூடாய் வைத்து ஒரு துவையல் அப்பளம், வற்றல் என்று செய்து மதிய குழம்பை சூடு செய்து சாப்பிடும் வழக்கம்) டிபன் சாப்பிட ஆரம்பித்தபின்னும் அதை சூடாய் தான் சாப்பிடும் வழக்கம். குக்கர் போடு சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் "எங்காவது ஓட்டலில் சாப்பிட்டு விட்டு வர வேண்டியது தானே" என்பார்கள். மாதம் ஒரு சினிமா, ஓட்டல் என்று போவோம் அடிக்கடி போவது இல்லை.

    எங்களுக்கும் உணவை வீணாக்குவது பிடிக்காது. அளவாக பிடித்தவற்றை ஆர்டர் செய்து சாப்பிடுவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதி அரசு மேடம்.... நாமே சமைத்துச் சாப்பிட்டால் (அதிலும் குறைந்த வகைகளோடு) அதன் ருசியே தனி. நானும் அங்கிருந்தபோது-தனியாக, மாதம் ஒரு சினிமா போய்வருவேன். ஹோட்டலுக்கு வாரம் ஒரு முறையாவது செல்வோம்.

      நீக்கு
    2. நான் சீரியஸாக டயட்டில் இருந்தபோதும் வீட்டில் கேசரி அதிக அளவில் செய்து அதனை ஆபீஸில் என்னுடன் பணியாற்றுபவர்களுக்குக் கொடுப்பேன். எனக்கு யாரேனும் இனிப்பைக் கொடுத்துவிட்டால், வேண்டாம் என்று சொல்லும் மனம் வருவதில்லை. அதுதான் என் வீக்னெஸ். உணவை வீணாக்குவதை நான் விரும்புவதில்லை (சமீபத்தின் யாத்திரை முடிவில் பிரயாணத்திற்கு மி.பொடி தடவிய இட்லி கொடுத்தார்கள். எண்ணெய் குவாலிட்டி சரியில்லை. இட்லி ஆறுவதற்கு முன்னமே அதன் மீது தடவியிருந்ததால் சரியாகவும் இல்லை. ஆனால் எனக்கு மி.பொடி தடவிய இட்லி ரொம்பவே பிடிக்கும். இரண்டு சாப்பிட்டவுடன் மனைவி, இது உங்களுக்கு ஒத்துக்கொள்ளாது என்றாள். அதனால் அந்த பாக்கெட்டை வீணடித்தேன். பொதுவாக உணவை வீண் செய்யமாட்டேன், வாங்கிக்கொள்ள மாட்டேன்)

      நீக்கு
  17. இங்கிலாந்தின் வானம், மேலே பறக்கும் விமானம் மற்றும் கடல் அலைகளின் படம் எல்லாம் அருமை.
    இட்லி பூவின் பெயர் வெட்சிப்பூ. இதை பொறுமையாக மலர் மாலை கட்டி அழகாய் இறைவனுக்கு போடுவார்கள் பார்க்க மிக அழகாய் இருக்கும். எங்கள் வளாகத்தில் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெட்சிப்பூ... இந்தப் பெயரை எங்கோ கேட்டிருக்கிறேன். அந்த மாலை மிகப் பெரியதாகத் தோன்றும்.

      நீக்கு
  18. அடடா, ரெயின் சொந்த ஊரைத் திரும்ப அடையமுன்னர் ஓடிவந்து கார்ட்:) பெட்டியில ஏறிட்டேன்.....
    பச்சுலர் போல:) மெக்ஸிகோ சென்று கலக்கிட்டு வந்திருக்கிறீங்க, இதில, அந்த பிகினி போட்ட பெண்கள் வொலிபோல் வெளாடக் கூப்பிட்டும் வெளாடாமல் வந்திட்டனே எனும் கவலை வேறு... இத்தனை வருடமாகியும் மனதின் எங்கோ ஓர் மூலையில இருந்து வருத்தத்தைக் கொடுக்கிறது என்பது தெரியுது ஹா ஹா ஹா...
    சந்தர்ப்பங்கள் எப்பவும் ஏற்படாது நெல்லைத் த:)))) ஹா ஹா ஹா என்னால சிரிச்சு முடியுதில்லை:)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அப்பாவி அதிரா..இன்னொன்றை இங்கு எழுதலாமா என்று தெரியவில்லை. தாய்வானில் கம்ப்யூட்டர் எக்சிபிஷன் பார்த்துவிட்டு வெளியில் வரும்போது ஒரு பெண் கேட்டது... ஹா ஹா ஹா... (என்ன என் அழகைப் பார்த்து...... No No.. இந்தியர்கள் அப்படி நினைக்கமாட்டார்கள் என்றேன்..)

      எனக்கு அவர்களை புகைப்படம் எடுக்காததுதான் குறை

      நீக்கு
    2. //இன்னொன்றை இங்கு எழுதலாமா என்று தெரியவில்லை.//
      ஹா ஹா ஹா அதெல்லாம் எழுதலாம் ஶ்ரீராம் ஒண்ணும் கோபிக்க மாட்டார் ஹா ஹா ஹா கோர்த்து விட்டாச்சு:))..

      இது பற்றி நிறைய எழுதலாம்... ஏன் இப்போதைய மாதம்பட்டிப்பிரச்சனையைக்கூட ஒரு பட்டிமன்றம் நடத்தலாம்:) மனதில நிறைய ஓடுது:) ஆனா அடக்கி வாசிக்கிறேன்:))...

      என்ன தெரியுமோ.. நாங்க இங்கின 4,5 பேர்தான் பேசிக்கொண்டிருக்கிறோம் என நினைச்சு அனைத்தையும் எழுதுகிறோம் ஆனா உள்ளே சென்று புளொக் வியூஸ் இல் பார்த்தால்... அந்தாட்டிக்கால இருந்துகூடப் பார்க்கினம் எனக் காட்டும் ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).

      //எனக்கு அவர்களை புகைப்படம் எடுக்காததுதான் குறை///
      ஆஆஆஆஆஆ அணிலை மரமேறவிட்ட... நிலைமையாப்போச்சே உங்கட நிலைமை ஹா ஹா ஹா...

      நீக்கு
    3. நான் பாரீஸில் இருக்கும் மியூசியத்துக்கு (லூவர் போன்று) மூன்று முறைகள் சென்றிருக்கிறேன். பல படங்களும் எடுத்திருக்கிறேன். ஒரு சில samples கௌதமன் சாருக்கு அனுப்பினேன். எனக்கு அது பற்றி ஒரு தொடர் எழுத ஆசை. ஆனால் அவரோ..... எங்கள் பிளாக் வாசகர்கள்/வாசகிகள் தாங்கமாட்டார்கள் என்று சொல்லிவிட்டார். எந்த புகழ்பெற்ற சிற்பங்களை எடுத்துக்கொண்டாலும் இல்லை ஓவியங்களை எடுத்துக்கொண்டாலும், அவை ஓரளவு nudeஆகத்தான் இருக்கும். நம் கோயில்களிலும் இத்தகைய சிற்பங்கள் உண்டு. ஆனால் அவர் இன்னும் இசைவு தரவில்லை.

      ஒருவேளை ஸ்ரீராம் அனுமதிக்கலாம். தெரியாது.

      மாதம்பட்டி பிரச்சனை பட்டிமன்றத்துக்கு உரியதல்ல. ஒருவருக்கு அளவுக்கு மீறி பணம் வரும்போது, அது எல்லா தவறான வழிகளையும் கொண்டுவந்து சேர்க்கும். பாருங்க... ஒரு டின்னர் பார்ட்டிக்கு (அதாவது திருமண வரவேற்பு நிகழ்வு, 2000 பேர் வருவார்கள் என்று எண்ணம்), 50 லட்ச ரூபாய் அவர் சார்ஜ் செய்கிறார். இப்படி கோடிக்கணக்கான பணம் சேர்ந்தால் ஏன் தவறான வழிகளில் அவை செல்லாது?

      நீக்கு
  19. எஸ்கலேட்டர்கள் முதன் முதலில் கல்கத்தாவில் ஏறி இருக்கிறேன். 1977ல் . இப்போது பல முறை ஏறி போகிறேன். (முன்பு முதன் முதல் ஏறும் போது பயந்து இருக்கிறேன்.)
    இந்த தடவை வீல் சேர் என்பதால் Electric Lift ல் தான் அழைத்து சென்றார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் எஸ்கலேட்டர்களை 90க்குப் பிறகுதான் உபயோகித்திருக்கிறேன். 'வீல் சேர்'.... கவலையை உண்டாக்குகிறது.

      நீக்கு
    2. நெல்லைத்தமிழன், நீங்கள் கோமதி அக்கா சொன்ன வீல் செயாரை தப்பாக நினைக்கிறீங்கள், இப்போ தனியே பிரயாணம் பண்ணுவோர் பெரும்பாலும் வீல் செயார் புக் பண்ணிப் போகின்றனர்.. அதுவாகத்தான் இருக்கும்.

      நீக்கு
    3. இல்லை. அதிரா... அதுபற்றி எனக்குத் தெரியும். இப்போ சமீப வருடங்களாக தினமும் 10 கிமீ நடக்கிறேன், அதுவும் வேகமாக. சிலமுறை நினைப்பேன்..வயதாகிவிட்டால் நடக்கமுடியாமல் போய்விடுமோ... விமான நிலையங்களில் வீல் சேர் வேண்டும் என்று சொல்லவேண்டிய நிலை வந்துவிடுமோ என்று.....

      நீக்கு
  20. அப்பப்பா.. மெக்ஸிகோ போனாலும் புளியோதரையை மட்டும் விடமாட்டார் ஹா ஹா ஹா..
    உண்மைதான் இப்போ வீகன் என பொதுவா எங்கும் வெஜ் உணவு கிடைக்குது, முன்பு கஸ்டம் தான், ஏன் இப்பவும்கூட சில இங்கு மேற்கத்தைய கிராமப் பகுதிகளுக்குச் சென்றால், இனிப்பு ஐட்டங்கள்[பேகரி ஐட்டம்] தவிர, உணவாக சைவம் கிடைப்பது கஸ்டம்.

    இப்ப வெள்ளிக்கிழமை கேம்பிரிஜ் போய் சின்னவரை அழைச்சு வந்தோம், வெள்ளியில அவசரத்துக்கு கிடைச்சது சீஸ் அண்ட் ரெட் ஒனியன் சான்விச் தான்.. ரவலிங்கில்.

    இப்படி சைவம் எனில் கொஞ்சம் வாய்க்கு சுவையாக கிடைப்பது கஸ்டம்... ஆனா அந்த நேரம் பார்த்துத்தான் எனக்கு உறைப்புப் புளிப்பா எங்கட ஊர்ச் சாப்பாட்டை வாய் தேடும்... இல்லை எனில் வயிற்றைப் பிரட்டிக்கொண்டே இருக்கும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் பழங்களை வைத்துச் சமாளித்துக்கொள்வேன். இருக்கவே இருக்கு, தேவை என்றால் பிரட் மற்றும் கொண்டு சென்றிருக்கும் எலுமிச்சை ஊறுகாய். என் மகளிடமும் மகனிடமும் சொல்லியிருக்கிறேன். அவங்க ஊருக்கு நான் வரும்போது புத்தம் புதிய இங்க்லீஸ் ப்ரெட் வாங்கித்தரணும் என்று.

      எனக்கு பேக்கரி ஐட்டம் சாப்பிடப் பிடிப்பதில்லை, அதிலும் டோனட் போன்றவை என் விருப்பம் அல்ல.

      நீக்கு
    2. நீங்கள் இங்கு வந்தால், மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சர்/ செயின்பெரிஸ், ரெஸ்கோ... இந்த மூன்று சூப்பர்மார்க்கட்டிலும் சூப்பர் பேக்கரி இருக்கு ஏனையதைவிட, இங்கு விதம் விதமாக பன் வகைகள் பாண்..பிரெட் வகைகள் கிடைக்கும் சாப்பிட்டுப் பாருங்கோ.இப்படி வேறிடத்தில் எனக்குப் பிடிச்சதில்லை, பிரெட் வாங்கிக் கனடாவுக்குக்கூடக் கொண்டு போயிருக்கிறோம்..

      அதிலும் சொல்ட் அண்ட் பெப்பர் என ஒரு பெரிய முட்டை வடிவில் அல்லது, பிரெஞ் பிரெட்டாக கிடைக்கும் அதுதான் நம் பேவரிட்... சும்மாவே சாப்பிடலாம், ஆனா அது வைட் பிரெட்..

      அதனால இப்போ சாப்பிடுவதில்லை, ஆனா எப்பாவது ஒருநாள் எனக்கொரு ஆசை வரும்பாருங்கோ.. அப்போ போனாப்போகுதென வாங்கி வந்து நல்ல ஊர்ச்சம்பல் போல இடிச்சு அல்லது பச்சைமிளகாய்ச் சட்னி செய்து, அப்படியே சாப்பிடுவோம் ஹா ஹா ஹா.. பின்பு டயட்டைக் கொண்டினியூ பண்ணுவதுதான்..:)

      நீக்கு
    3. //மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சர்/ செயின்பெரிஸ், ரெஸ்கோ... // எனக்கு பழைய நினைவுகளைக் கிளறிவிட்டுவிட்டீர்கள். அதிலும் டெஸ்கோ..... இவையெல்லாம் என் அலுவலக வேலையுடன் தொடர்புடையவை. பிறகு எழுதுகிறேன். உங்களுக்குத் தெரியுமா? நான் இவை மூன்றுக்கும் சென்றிருக்கிறேன், லண்டன் வந்திருந்த பயணங்களில். நான் வேலை பார்த்த கம்பெனி வைத்திருந்த பெரிய சூப்பர் மார்க்கெட்டுகள், டெஸ்கோவை மனதில் வைத்து வடிவமைக்கப்பட்டவை.

      நீக்கு
  21. ஒரு காலத்தில சரவணபவன் உணவு தான் பெஸ்ட் என்பதுபோல இருந்தது சைவத்துக்கு, ஆனா இப்போ வெளிநாட்டில் அதைவிட எவ்வளவு பெஸ்ட் உணவு, அதுவும் அதைவிடக் குறைவான விலையில கிடைக்குது என்பது என் கருத்து... சரவணபவன் எனும் பெயரை வைத்து அதிகம் விலையைக் கூட்டி வச்சிருக்கினம் போல தோணுது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கட ஊரில் (இல்லை..லண்டனில்) நான் சரவணபவனில் சாப்பிட்டிருக்கிறேன்.ஆமாம் வேறு எங்கெல்லாம் பெஸ்ட் உணவு கிடைக்கிறது என்றும் சொல்லியிருக்கலாம் (சங்கீதாவிலும் சாப்பிட்டிருக்கிறேன்..விரைவில் எழுதுகிறேன்)

      நீக்கு
    2. நான் அதிகம் சாப்பிட்டது சைவம் கனடாவில்தான்:)

      நீக்கு
  22. //ஆண்களுக்கு இறைவன் கொடுத்த வரம் அது. அப்போ பெண்களுக்கு? ஆறிச் சாப்பிட்டால்தான் நீ செய்த உணவின் குறைகள் தெரியும், கணவனுக்காக திருத்திக்கொள்ளலாம் என்று நினைத்திருப்பாரோ இறைவன்?...)///

    இதில் ஆண்கள் பெண்கள் என்பதைத்தாண்டி, என்னைப்பொறுத்து, சில ராசி, நட்சத்திரத்தில் பிறந்தோர் அல்லது சில எண்காரர்கள் மட்டுமே உணவில் அதிகம் நாட்டம் காட்டுவோராக இருக்கின்றனர்.

    ஆனா அதேபோல பலருக்கு ருசி விருப்பம் என்பதும் இருந்தாலும், எப்படிச் சாப்பிட்டாலும் ஓகே என்பதுபோலவும் இருக்கின்றனர்... நானும் + கணவர்+ மூத்தவர்.... இந்த ரகம்தான்:)). எதையும் எச்சூழலிலும் எப்படியும் சமாளிக்க ரெடி..

    ஆனா எனக்குப் பிடிக்காத விசயம் சிலருக்கு உணவு சூடு ஆறிட்டால், அல்லது புளிப்பு உறைப்பு உப்பு சரியாக அமையாட்டில்.. அவர்களின் முகமே மாறிவிடும், அல்லது தப்பித்தவறி ஒரு மண், கல்லு வந்திட்டால் மனைவியை கொலை வெறியுடன் பார்ப்போரையும் பார்த்திருக்கிறேன் ஹா ஹா ஹா இப்படியான கரெக்ட்டர் எல்லாம் எனக்குப் பிடிக்கவே பிடிக்காது, சமாளிக்க முடியாதெல்லோ...

    எப்பவும் பொஸிடிவ்வாக ஆஆஆஅ நேர்மறையாக.. பார்த்தீங்களோ மனதில டமில் பதிஞ்சிட்டுது.. நினைக்கோணும் எனத்தான் வீட்டிலும் சொல்லுவேன்.. சாப்பாடு கிடைச்சிருக்கே என சந்தோசப்படோணும் அதை விட்டுப்போட்டு குறை ஜொள்ளப்பிடாது எனத்தான் வீட்டில சொல்லுவேன் ஹா ஹா ஹா:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சில ராசி, நட்சத்திரத்தில் பிறந்தோர் அல்லது சில எண்காரர்கள் மட்டுமே// அடடே... அவை எவை என்றும் சொல்லியிருக்கலாம். எனக்கு சாப்பாடு உப்பு உரைப்பு சரியாக இருக்கணும் (உரைப்பு அதிகமாக இருந்தால் ஓகே). உப்பு கொஞ்சம் குறைவாக இருந்தால் எப்போதும் குற்றம் சொல்வதில்லை. வெளியில் சாப்பாடு நல்லா இல்லைனா, சரியா சாப்பிடமாட்டேன்.

      எனக்கு சில உறவினர்கள் இருக்கின்றனர். அவங்க எதைப் போட்டாலும் ஆஹா ஓஹோ என்று சொல்லிச் சாப்பிடுவார்கள், சாப்பாட்டைக் குறை சொல்ல மாட்டார்கள். அதனால் அவங்க ஒரு ஹோட்டலில் உணவு நல்லா இருக்கும் என்று சொன்னால் நான் அதை கணக்கில் எடுத்துக்க மாட்டேன்.

      என் மனைவி, இறைவனுக்குப் படைப்பதால் எப்போதும் உணவை ருசி பார்க்கமாட்டாள். நான் ருசி பார்க்காமல் இறைவனுக்குப் படைக்க மாட்டேன். எப்படி வேறுபாடு பாருங்கள்.

      நீக்கு
    2. அப்படி ராசி நட்சத்திரம் தெரியாது, ஆனா நானாக நினைச்சுக் கொள்வேன் அப்படி இருக்கலாம் என, வேறு எப்படி வேறுபாடு இருப்பதை நினைப்பதாம்?:))...

      ஓ அப்போ சொல்லுங்கோ, கடவுளுக்குப் படைப்பதை சுவை பார்க்கலாமா?...
      எங்கள் வீட்டிலும் சின்ன வயசிலிருந்தே பழக்கிப் போட்டினம் சுவை பார்க்கக்கூடாது, படைக்க முன் சாப்பிடக்கூடாது என, அப்படியேதான் நானும் செய்வேன்...
      இதில் நிறைய எழுதலாம், ஒரு பதிவாக இருப்பின் நன்றாக இருக்கும்.
      நாங்கள் பொங்கல், அல்லது வருடப்பிறப்பு அல்லது கோயிலில் படைப்பது, இப்படியான நாட்களில் ரீ தவிர எதுவும் சாப்பிட மாட்டோம், அதிலும் அப்பா அம்மா, குளிச்ச பின் எதுவும் குடிக்கக்கூட மாட்டினம், அப்படியே மயக்கம் வருமளவுக்கு அனைத்தையும் முடிச்சு படைச்ச பின்பே சாப்பிடுவோம்... அது சில சமயம் 2,3 மணிகூட ஆகிடும்[நாம் குட்டீசாக இருந்த காலத்தில்]...
      அதேபோல கோயிலுக்குப் போவதெனில் சாப்பிட மாட்டோம், இரவுக் கோயில் எனில் சாப்பிடத்தான் வேணும் ஆனா இப்படி தேர், திருவிளாக் காலங்களில் கோயில் முடிச்சுத்தான் சாப்பிடுவோம் இப்பவும்...

      ஆனா இந்த யூ ரியூப்பில் பார்க்கிறேன், தைப்பொங்கலுக்கு பானை ரெடி பண்ணிப்போட்டு, வதவத என சாப்பிடுகிறார்கள்.. காலை உணவாம்...
      அதேபோல காலையில் கோயிலுக்குப் போகிறார்கள், வழியில் ஹோட்டலில் வயிறு முட்ட இட்லி தோசை சாப்பிட்டு விட்டுப் போகினம்.... இதை எல்லாம் பார்க்க எனக்கு ஆச்சரியமாக இருக்கும், ஆனா கடவுள் அதையும் ஏற்றுக் கொள்கிறார்தானே.. நாம் தாம் ஓவராக காய்கிறோமோ என நினைப்பதுண்டு ஹா ஹா ஹா...

      நீக்கு
    3. //கடவுளுக்குப் படைப்பதை சுவை பார்க்கலாமா?...// இதை நாம் நம் மனதில் எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பதைப் பொறுத்தது. குழந்தைக்கு கேப்பை/ராகி கஞ்சி செய்தால், அதில் விரல் விட்டு சூடா இருக்கான்னு பார்ப்பீங்க. பிறகு ஒரு ஸ்பூனில் சாப்பிட்டு எல்லாம் சரியா இருக்கான்னு பார்ப்பீங்க. குழந்தைக்குப் பண்ணிப்போட்டு, அம்மா சாப்பிடறாங்களே என்று பிறர் சொன்னால் நீங்க காதுல வாங்கிப்பீங்களா? சரி.. ஒருவேளை நீங்க கடவுளுக்குப் படைத்த புளிசாதத்தில் உப்பு போட மறந்துவிட்டீர்கள் என்றால், பிறகு நீங்க சாப்பிடும்போது உப்பு சேர்ப்பீங்களா இல்லை மாட்டீங்களா?

      //திருவிழாக் காலங்களில் கோயில் முடிச்சுத்தான் சாப்பிடுவோம் இப்பவும்...// அப்படித்தான் பொதுவாக இருப்பார்கள். ஆனால் கால மாற்றத்தால் இப்போவெல்லாம் (20 வருடங்களுக்கு மேலாக) காபி/தேநீர் குடிக்கும் வழக்கம் வந்துவிட்டது. அதைப் பார்த்து பிறரும் உணவைச் சாப்பிட்டுவிடுகின்றனர் போலும்.

      எதுவும் நம் மனதைப் பொறுத்தது. (முஸ்லீம் நாடுகளில் ரமதான் நேரத்தில் காலை 6-மாலை பொதுவா 5 1/2 வரையில் வெளியில் எங்கும் சாப்பிடக்கூடாது. முஸ்லீம்கள் உண்ணாவிரதம். மற்றவர்களும் தண்ணீர் கூட வெளியில் குடிக்கக்கூடாது. அப்படிச் சாப்பிட்டுவிட்டால் ஜெயிலில் போட்டு பிறகு ரமதான் முடிந்ததும் ஊருக்கு அனுப்பிவிடுவார்கள். ஆனால் முஸ்லீம்களிலேயே, வயதான முடியாதவர்களுக்கும் குழந்தைகளுக்கும் விதிவிலக்கு உண்டு)

      நீக்கு
    4. எல்லாம் அவரவர் மனதையும் நம்பிக்கையையும் பொறுத்ததுதான் என நினைக்கிறேன்...

      நீக்கு
  23. //பறவைப் பார்வையில் ரிசார்ட் கொள்ளை அழகு இல்லையா?///

    ஆஆஆ இது என்ன புதுத்தமிழ்? ஆனாலும் அழகாக இருக்கு பறவைப்பார்வை:))).

    படங்கள் அனைத்தும் நன்றாக எடுத்திருக்கிறீங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி அப்பாவி அதிரா. நீங்க பிளாக்கில் எதுவும் எழுதுவதில்லை. அதனால் கனடா எப்போதெல்லாம் சென்றுவந்தீர்கள், அங்கு தண்ணீர் தொட்டியில் (கோயில் திருவிழா) விழுந்து புரண்டீர்களா என்பதெல்லாம் தெரியாமலே வாசகர்கள் பலர் கவலைப்படுகின்றனர்.

      நீக்கு
    2. ஹாஹா ஹா..... இம்முறை ஆசைக்குச் சாறி நிறையக் கட்டிவிட்டேன்.. கோயில்கள் தேர் தீர்த்தம் எனப் போனதால், கனடாவில்தான், திடீர்ப் பயணமாகி விட்டது.
      தண்ணீர்த் தொட்டியில் சாமி தீர்த்தமாகி முடிஞ்சதும் வாழ்க்கையில் முதல் தடவையாக, ஓடிப்போய் முதலாவதாக சாப்பாடு குடுக்கும் பந்தலில் இடம்பிடிச்சு தட்டு வாங்கினேன்... கொஞ்சம் வெட்கத்தோடு ஹா ஹா ஹா...

      நீக்கு
    3. நான் பந்திக்கு பெரும்பாலும் வெட்கப்படுவதில்லை. எந்த விசேஷத்திலும் முதல் பந்தியிலேயே (அதிலும் இரண்டு மூன்று பெஞ்சுகளுக்கு உள்ளாக) உட்கார்ந்துவிடுவேன். அதிலும் பஃபே என்றால் முதலில் போய்விடுவேன். கொஞ்சம் தாமதமானால் கசகசவென அந்த இடமே நல்லா இருக்காது, உணவும் சரியா இருக்காது. கோயில்களில் பெரும்பாலும், சாப்பிடுவதற்கு எல்லோருமே முண்டியடித்து இடம் பிடிப்பார்கள். அதனால் நான் கோயிலில் சாப்பிடுவதே இல்லை.

      நீக்கு
  24. /// (கீதா ரங்கன் இவற்றை இட்லிப் பூக்கள் என்பார்… உணவே அவர் நினைவில் இருப்பதாலா இல்லை இதுதான் அவற்றின் பெயரா?)///

    ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) மருவாத:) மருவாத:)... க்கா:) வை எப்பூடி விடலாம் நீங்க :).

    இது தமிழ் நாட்டில் இட்லிப்பூ, இலங்கையில நாங்கள் ஒரு பெயர் சொல்லுவோம் எனக்கு இப்போ நினைக்க நினைக்க வருகுதில்லை, ஊர்ப்பாசைகள் காலப்போக்கில் மறைஞ்சுபோகுது... அது கவலையாகவும் இருக்கும் சில சமயம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஊர்ப்பாசைகள் காலப்போக்கில் மறைஞ்சுபோகுது.// சமீபத்தில் ஒரு யாத்திரை சென்றுவந்தேன். அங்கு வந்திருந்த ஒரு லேடி, பேசியபோது, என் திருநெல்வேலி பாஷையை உணர்ந்தேன். அவரிடம் நீங்க திருநெவேலியா என்று கேட்டேன். என் மனைவி கூட, என்னுடைய கஸின் சிஸ்டர் (திருநெவேலியிலேயே பிறந்து வளர்ந்தவர்) பேசுவது போலவே இருக்கிறது என்றார். எனக்குத்தான் திருநெவேலி பாஷை வருகுதில்லை. நம்ம வீட்டில் உபயோகிக்கும் பெயர்களை என் மகள் உபயோகிப்பாள். சில நேரங்களில் அவளின் கணவன் வீட்டார்கள் சொல்லும் சில சொற்களைச் சொல்லி, நீங்கள் ஏன் உபயோகிக்கவில்லை என்பாள் (உதாரணம், திருப்புள் அல்லது திருப்பம். இதற்கு சமையலறை என்று பெயர். அதுபோல, பட்டாசாலை-பட்டகசாலை, ரேழி போன்றவை. Flatகளில் இவை கிடையாது. சமையலறையை கிச்சன் என்று சொல்லியே பழகிவிட்டோம். ஆனால் மகள் நம்முடைய வழக்கமான சொற்களை உபயோகிக்கும்போது எனக்கு பெருமிதம் ஏற்படும்.

      நீக்கு
    2. //அது கவலையாகவும் இருக்கும் சில சமயம்.// இது பற்றி ஒரு நாள் எழுதுகிறேன். எனக்கு அமெரிக்க வேலை(கள்) வந்தன. ஆனால் நான் அமெரிக்கா செல்ல விரும்பவில்லை. பசங்க கல்சர் மாறிவிடும் என்று. (நான் மாறமாட்டேன் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். கொஞ்சம் இளவயதில் சென்றவர்கள் வீட்டு வேலைகள் எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்கின்றனர் என்பதும் தெரியும். ஆனால் 'மாறமாட்டேன்' என்பது இவை குறித்தல்ல) இதுபற்றி வேறொரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன்.

      நீக்கு
    3. எழுதுங்கோ... உண்மைதான் நம் ஊரில் காதில் விழும் பாசைகள் பலது, இப்போ ஊருக்குப் போனபின் அங்குள்ளோர் பேசும்போது எவ்ளோ இனிமையாக இருந்தது...
      சிம்பிளாக இருப்பினும்.... சவர்க்காரம், பள்ளிக்கூடம்... இதெல்லாம் இங்கு எங்காவது எழுதினால் சரி மற்றும்படி காதில் கேட்க முடிவதில்லை, பேசுவதுமில்லையே...

      அதிலும் பிள்ளைகளுக்குப் புரிவதற்காக ஆங்கிலம் கலந்துதான் பேசவேண்டியிருக்கு.

      நீக்கு
  25. உடம்பை மெலிய வைப்பது, டயட் பற்றி நிறையப் பேசலாம், என்னைப் பொறுத்து உணவைக் கட்டுப்படுத்துவது என்பது முடியாத காரியம், என்னால முடிஞ்ச காரியம் எனில், எவ்வளவு தூரம் முடியுமோ அவ்ளோ தூரம் பட்டினியாக இருப்பேன்.....[இன்றமிட்டென் பாஸ்ரிங்போல]] அதனால மனதைக் கொன்றோல் பண்ண முடியுது,

    உணவைக் குறைச்சுச் சாப்பிடுவோமே என ஒரு குட்டியாக ஏதாவது சாப்பிட்டால் அது போல் இன்சுலினைத் தூண்டி விட்டிடுது, அது கொண்டுவா கொண்டுவா என கூக்குரல்போடும் வாய் வயிறு, அப்போ என்ன கண்டறியாத டயட் என நினைச்சுக்கொண்டு இன்னும் சாப்பிட்டு விடுவேன்... ஆனால் சாப்பிடாமல் இருந்தால் முடியும்வரை இழுத்துக் கொண்டுபோய் 3,4 மணிக்குச் சாப்பிடுவேன், அப்போ பின்பு நைட்டுக்கு 7,8 மணிக்குள் ஏதும் சின்னதாகத்தான் தேவைப்படும் அல்லது பசிக்காது...

    இப்படித்தான் நான் இழுக்கிறேன், இத்துடன் ஒழுங்கா யோகா, ஜிம், டான்சிங் எக்சசைஸ்.. இப்படி எல்லாக் கிளாசுக்கும் போகிறேன்... சமீபத்தில ஒரு 6 மாதத்தில 5 கிலோவிற்ற்கு மேல குறைச்சு வந்திட்டேன்... இதுக்கே எல்லோரும் திட்டுகின்றனர், என்ன இப்படி வயக்கெட்டுப் போயிட்டாய் ஒழுங்கா சாப்பிடு என...கர்ர்ர்ர்ர்ர்ர்:)))

    குண்டாக இருந்தாலும் பேசுவினம் மெலிஞ்சாலும் பேசுவினம் என்ன டிசைனோ இந்தச் சொந்தபந்தத்தின் டிசைன்:))) ஹா ஹா ஹா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அதனால மனதைக் கொன்றோல் பண்ண முடியுது,// - எனக்கு இனிப்புகளையும் நொறுக்குத் தீனிகளையும் மாத்திரம் கண்ட்ரோல் செய்யக் கடினமாக இருக்கிறது. ஒன்றும் இல்லை என்றாலும், செவ்வாழைப்பழம்+தேன் சாப்பிட்டுவிடுவேன். நான் நிறைய தேன் வாங்கிவைத்திருப்பேன்.

      என் மகள் நினைத்தால் ரொம்ப ஸ்டிரிக்டாக இண்டெர்மிட்டண்ட் ஃபாஸ்டிங் செய்வார். சில நேரங்களில் நிறைய விதவிதமாகச் சாப்பிடலாம் என்று நினைத்தால், அதற்குச் சில நாட்கள் முன்னம் இன்னும் டயட் இருப்பார்.

      //குண்டாக இருந்தாலும் பேசுவினம் மெலிஞ்சாலும் பேசுவினம் // பிறருடைய கருத்துக்கு நாம் மதிப்பு கொடுக்கக்கூடாது. நான் தினமும் 10 கிமீ நடந்தால், நடப்பதே தேவையில்லை, சும்மா 10-20 நிமிடங்கள் நடந்தால் போதும், ஆனால் ஜாக்கிங் செய்யலாம் என்பர். இல்லைனா, ஜிம் போகணும், வெயிட் தூக்கணும் என்பர். இல்லைனா யோகா செய்யணும் என்பர். அதாவது நாம் எதைச் செய்கிறோமோ அதை ஒழுங்காகச் செய்யவிட மாட்டார்கள். ஹாஹாஹா

      நீக்கு
    2. அதேதான் அடுத்தவர்களின் அட்வைஸ் ஐ இந்த விசயத்தில் மட்டும் எடுத்துக் கொள்ளக்கூடாது என நினைப்பேன்... ஒவ்வொருவரின் உடம்பும் ஒவ்வொரு மாதிரி.

      இந்த இனிப்பு உறைப்பு நொருக்குத்தீனி சாப்பிடுவதைக் குறைக்க, மெயினாக எதையும் வாங்கக்கூடாது, வீட்டில் எதுவும் இருக்கக்கூடாது:).. செய்யவும் கூடாது, அதை மீறிச் செய்தால் கொஞ்சமாக-கஞ்சத்தனமாக செய்யோணும் ஹா ஹா ஹா.

      நீக்கு
    3. //மெயினாக எதையும் வாங்கக்கூடாது, வீட்டில் எதுவும் இருக்கக்கூடாது:)// ஆமாம். இதுதான் சரியான வழிமுறை. வீட்டில் அல்லது நம் அருகில் இருந்தால், நாம் சாப்பிடாமல் விரதம் காக்க, முனிவராக அல்லோ இருக்கவேண்டும். சமீபத்தில் ஒரு காணொளியில், 102 வயது வாழும் ஒருவர் சொல்லியிருந்தார், நான் மூன்று வேளையும் கொஞ்சமாகச் சாப்பிடுவேன், கடந்த 60 வருடங்களாக, சாப்பாட்டுக்கு இடையில் எந்த வித நொறுக்குத்தீனியும் அது எவ்வளவு பிடித்தமானதாக இருந்தாலும் சாப்பிடவே மாட்டேன் என்று சொல்லியிருந்தார். அதனால்தான் அவர் ஆரோக்கியமாக இருக்கிறார்.

      நீக்கு
  26. ஆனா கஸ்டப்பட்டெல்லாம் இருக்க மாட்டேன், ரீ, கோப்பி[இலங்கை /இங்கிலிஸ் ஸ்டைலில்] குடிப்பேன் தேவைப்படும் போதெல்லாம் அதுவே எனக்கு உணவுபோல தென்பைத் தருது, அது தப்பு குடிக்காதே என்பினம், அதை எல்லாம் நான் கவனிப்பதில்லை, என் உடம்புக்கு என்ன தேவை, எது ஒத்துக்கொள்கிறது என்பதை நான் தான் தீர்மானிக்கோணும்...
    ஆனா பொதுவா இனிப்பு, யூஸ், எடுக்கமாட்டேன் பிடிக்காது, ஒன்றை மட்டும் குறைக்கிறேன் வெள்ளை மா, அரிசி, காபோஹைரேட்... அதிகம் மில்லெட் தான், நானே வீட்டில் மா ரைக்கிறேன், கம்பு, வரகு என.. இதிலேயே புட்டு இடியப்பம், ஏன் இப்போ விநாயகர் சதுர்த்திக்கு கொழுக்கட்டைகூட சாமி மாவுக்கு ஒரு பிடியளவு அரிசிமாச் சேர்த்துச் செய்தேன் சூப்பரா வந்துதே...

    ஆனா அதுக்காக சரியான ஸ்ரிக்ட் ஆகவும் இல்லை, வெளியே போனால், எல்லோரும் வீட்டில் ஒன்றாக சாப்பிடும் நேரம் எனில் சாப்பிடுவேன், என்ன ஒன்று அநேகமாக...அசைவ நாட்கள் எனில், இறைச்சி முட்டை, மரக்கறியோடு விட்டுவிடுவேன் வேறு எந்த அரிசி, மா, மில்லெட்டும் சேர்க்காமல்...

    இப்படி ஒரு பதிவே போடலாம் போல ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //என் உடம்புக்கு என்ன தேவை, எது ஒத்துக்கொள்கிறது என்பதை நான் தான் தீர்மானிக்கோணும்.// இதுதான் சரியான அணுகுமுறை. ஒவ்வொரு டயட், உணவு ஒவ்வொருவருக்குப் பொருந்தும். எனக்கு எப்போதுமே சாலட் பிடிப்பதில்லை. அதைச் சாப்பிடணும் என்று நினைத்தாலே எனக்குப் பிடிக்காது.

      நான் இனிப்பு அதிகமாகச் சாப்பிட்டுவிடுகிறேன் (சில நாட்களில்) பாருங்க இன்று நானே சென்று சேமியா ஜவ்வரிசி பாயசம் செய்தேன் (மனைவி குறைவாகப் போடுங்கள் என்றார். நான் பாயசம் குறைந்துவிடுமோ என்று அதிகமாகப் போட்டுவிட்டேன்)

      நானும் அரிசி உணவு சாப்பிடுவதை வெகுவாகக் குறைத்துவிட்டேன். டயட், எடை குறைத்தது பற்றி நானும் ஒரு பதிவு போடணும் என்று நினைத்துள்ளேன் (என்னிடம் எல்லாவற்றிர்க்கும் படங்கள் உண்டு, ஆனால் உங்களிடம் இருக்காது என்று நினைக்கிறேன்)

      நீக்கு
    2. உங்களுக்காக விரைவில் புதன் அன்று ஒரு படம் பகிர்கிறேன் அதிரா.

      நீக்கு
    3. ஓகே ஓகே வந்து பார்க்கிறேன்...:)

      நீக்கு
    4. //(என்னிடம் எல்லாவற்றிர்க்கும் படங்கள் உண்டு, ஆனால் உங்களிடம் இருக்காது என்று நினைக்கிறேன்)///

      ஹா ஹா ஹா இருக்கு என்னிடமும் ஆனா பகிரமாட்டேனே:)))

      நீக்கு
    5. //இருக்கு என்னிடமும்// நான் முக்கிய நிகழ்வாக (என்னைப் பொறுத்தவரையில்) நினைக்கும் எதையும் புகைப்படம் எடுத்துக்கொள்வேன். சில சந்தர்ப்பங்களில் அவற்றை புகைப்படம் எடுக்க மறந்துவிடுவேன் அல்லது தயங்கிவிடுவேன்.

      உதாரணமா நான் ஓமானுக்குச் சென்றிருந்தபோது, அங்கு தங்கியிருந்த இடத்தில் அலர்ஜி வந்து, குளித்தால் பெட்டரோ என்று நினைத்து குளிக்க ஆரம்பித்து (அது க்யூபிக்கள் மாதிரி குளிப்பதற்கு அமைத்திருப்பார்கள்) அதில் மயங்கிவிழுந்திருக்கிறேன். பிறகு தட்டுத்தடுமாறி எழுந்திருக்கிறேன், அப்படியே படுக்கையில் படுத்துவிட்டேன். சிறிது நேரம் கழித்து எழுந்தால் தலையணையில் இரத்தம். தலையில் அடிபட்டிருந்திருக்கிறது என்று நினைக்கிறேன். உடனே என் அலுவலக நண்பனை அழைத்து ஹாஸ்பிடல் போகணும் என்று சொன்னேன். நினைவுக்காக அந்தத் தலையணையைப் படமெடுக்க மறக்கவில்லை. ஹாஸ்பிடலில் ட்ரிப் ஏற்றியதைப் படமெடுக்கவும் மறக்கவில்லை.

      நீக்கு
  27. நன்றாக எழுதியிருந்தீர்கள் நெல்லை! ஒரே ட்ராக்கில் போகாமல், பல விதமான விஷயங்களையும் கலந்து கட்டி எழுதும் உங்கள் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும். உதாரணம்: மோதலில் ஆரம்பித்து நண்பனானவர் (கற்பனையைத் தூண்டுகிறது...என்ன மோதல்? எப்படி முடிந்தது?).......மெக்ஸிகோவில் அமாவாசை தர்ப்பணம் (ஃபோட்டோ சான்றுடன்). தொடர்ந்து எழுதுங்கள் பயணக் கட்டுரைகளை.

    தொண்ணூறுகளில் எந்த ஊரில் வேண்டுமானால், சரவணபவன் உணவு தரமாக இருக்கும் என்று நம்பிப் போகலாம். அதெல்லாம் அண்ணாச்சி காலம். இப்போது யார் ஓனர் என்று கூட தெரியவில்லை (மாறன் ப்ரதர்ஸாமே? உண்மையா?) அமெரிக்காவில் இருக்கும் சரவணபவன் கிளைகளைப் பெரும்பாலும் தெலுங்கு மக்களே நடத்துகிறார்கள். தரம் சொல்லிக்கொள்ளும் அளவில் இல்லை.

    /இட்லி ஆறுவதற்கு முன்னமே அதன் மீது தடவியிருந்ததால் சரியாகவும் இல்லை/
    ஆறிய பின் தடவினார்களா இல்லையா என்று எப்படிக் கண்டு பிடித்தீர்கள்? துப்பறியும் சாம்புவாக இருப்பீர்கள் போலிருக்கிறதே(:- எங்களுக்கும்தான் சொல்லிக் கொடுங்களேன். அதான் ஸ்ரீராம் "திங்கக்கிழமைக்கு" ஒப்பன் இன்விடேஷன் கொடுத்து விட்டாரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சூர்யா அவர்கள்.இந்த மோதலைப் பற்றி விரைவில் எழுதுகிறேன். சில பல விஷயங்களை எழுதினால் அலட்டிக்கொள்வது போலத் தோற்றம் வந்துவிடும். நம்மால்தான், என்ற நினைப்பே, நாம் தவறு செய்கிறோம் என்ற எண்ணத்தைத் தோற்றுவித்துவிடுகிறது.

      மிகச் சாதாரணமாக இருந்த எனக்கு நல்வழி காட்டியது இறைவன். பிறகு வெளிநாடு செல்லும் சந்தர்ப்பம் வாய்த்தது. ஆரம்பகட்ட சறுக்கல்களுக்குப் பிறகு இறைவன் அருளால் இன்னொரு தேசம் செல்ல நேர்ந்தது. அங்கு சில வருடங்கள் கம்பெனிக்கு விசுவாசமாக இருந்ததால் இன்னொரு பெரிய கம்பெனியில் வேலை கிடைத்தது. அங்கு மூன்று வருடங்கள் ரொம்பவே கஷ்டப்பட்டேன், மனத்தால், பணத்தால்ல்ல. பிறகு நல்ல நேரம் வந்தது. அங்கு துறைத் தலைவனாக ஆனேன். 15 வருடங்களுக்கு மேல் பணிபுரிந்தேன். அதிலும் கடைசி பத்து வருடங்கள் நன்றாக சம்பாதித்தேன். அதிலும் கடைசி இரு வருடங்கள் வேலை மிக்க் குறைவு சம்பாத்யம் அதிகம். நல்ல நேரம் முடிந்ததும் பாதாளத்துக்கு வந்துவிட்டேன். பிறகு முயற்சிகள் பலனளிக்கவில்லை. சட் என ஓய்வுபெற்றுவிட்டேன்-ஐந்து வருடங்களுக்கு முன்பே (வேலையிலிருந்தல்ல. இனி வேலை பார்க்க வேண்டாம் என்று). மனைவி எப்போதும் சொல்லுவாள்.. இது உயரம் இது பாதாளம் என்றெல்லாம் நினைக்கக்கூடாது. உங்களுக்கு என்ன கஷ்டம் நேர்ந்துவிட்டது? இறை பக்தியில் இறங்க வாய்த்திருக்கிறதல்லவா என்பாள்.

      சரவணபவன்... எந்தத் தொழிலும் ஆரம்பித்தவர்களின் கடும் உழைப்பாலும் சின்சியாரிட்டியாலும் நல்லெண்ணத்தாலும் மேன்மை பெறும். ஆனால் அவருக்கு அடுத்த வாரிசுகள் வந்தாலோ இல்லை, அளவுக்கதிகமான பணத்தால் நெறி தவறினாலோ சறுக்கல்களைச் சந்தித்தே ஆகவேண்டும்.

      இட்லி ஆறுவதற்கு முன்பே மிபொடி தடவினால் ஈர்த்துக்கொள்ளும், அதாவது எண்ணெயும் தண்ணீரும் கலந்தால் வழுவழு என இருப்பது போல.அத்தகைய இட்லிகள் ராத்தாங்காது. (இரவு ஆகிவிட்டால் ஊச ஆரம்பித்துவிடும்). இட்லி நன்கு ஆறியபின் மிபொடி எண்ணெய் நன்கு தடவினால் மறுநாள் இரவு வரை நன்றாகவே இருக்கும்.

      மிக்க நன்றி சூர்யா

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!