நெல்லைத்தமிழன்: 1. ஒரு சலூன்காரர், அவர் முடியை அவரே திருத்திக்கொள்ள முடியாது என்பது போல, திரைப்படத்தைக் குற்றம் குறைகளைச் சொல்லுபவர்கள் அல்லது பிறருக்கு ஆலோசனைகளை அள்ளித் தெளிப்பவர்கள், அவர்கள் தொழிலில் இறங்கும்போது தோல்வியைத் தழுவுவதன் காரணம் என்ன?
# ஆலோசனை சொல்பவர்கள் அந்தத் துறை பற்றி அறிந்தவராக இருக்கலாம், அதில் வல்லவராக இருப்பது உறுதியல்ல. நடிப்பு பாட்டு என்று கற்பிப்பவர்கள் பல மேதைகளை உருவாக்கலாம் மேதைகளாக இருக்க முடியாது. சி.வி.ராமனின் பேராசிரியர் நோபல் பரிசு வாங்கியாக வேண்டும் என்று கட்டாயமில்லை.
# இசை விமரிசகர் சுப்புடு பாடினால் எவன் கேட்பான்!
2. சீனியர் சிடிசன் ஆனால், என்ன என்னவற்றை விட்டுவிடவேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
# ஆசை, கோபம், பொறாமை.
& அது அவரவர்கள் விருப்பம் மற்றும் சூழ்நிலையைப் பொருத்தது.
3. வாழ்க்கையில் எவற்றைத் தவிர்க்கமுடியாது, எவற்றைத் தவிர்க்கலாம்?
# நம்மிடம் பிறர் காணும் குறைகள், பிறர்பால் நாம் காணும் குறைகள்.
4. அரசு எதற்காக, மாதாமாதம் ஒருவருக்கு இலவசமாகப் பணம் தரவேண்டும்?
# வோட் வாங்கத்தான்.
5. பஞ்சு மெத்தை, பஞ்சு தலையணை போன்றவை வழக்கொழிவதன் காரணம் என்ன?
# புதிய பொருளானால் சிறப்பு வாய்ந்தது என்ற மனநிலை மற்றும் அதீத விளம்பரம்.
& அவற்றுக்கு பதிலாக இப்போது எவை வந்துள்ளன? நான் ஸ்பான்ஜ் தலையணை உபயோகப் படுத்தினாலும், பஞ்சு மெத்தையை விடவில்லை.
6. தற்போதுள்ள நடிகைகள், நடிகர்கள், இயக்குநர்களில் உங்களைக் கவர்ந்தவர்கள் யார் யார்? ஒரு தலைப்பில் ஒருவர்தான் சொல்லவேண்டும்.
# நடிகை யாருமில்லை. நடிகர் கமல்ஹாசன், பஹத் பாஸில். இயக்குனர் பெயர் தெரியாத மலையாள இயக்குனர்கள் பலர்.
& படங்கள் பார்த்தே ரொம்ப வருடங்கள் ஆகிவிட்டன. தற்போதைய பிரபலங்கள் யார் என்றே தெரியவில்லை.
== = = = = = = =
படமும் பதமும் :
நெல்லைத்தமிழன் :
முல்லைக் கொடிக்குத் தேரை ஈந்தான் என்று நாம் படித்திருக்கிறோம். நிஜமாகவே ஒரு குட்டி வேனையே அப்படியே விட்டுவிட்டுப் போய்விட்டதால், அதன் மீது கொடிகள் படர்ந்திருக்கின்றன. நிச்சயம் முல்லைக் கொடி அல்ல என்பது மாத்திரம் புரிந்தது. (இடம்: சத்யாகாலம், கொள்ளேகால்)
-= = =--= = = = =
ஆலமரத்தின் விழுதே மிகப் பெரிய கிளையாக உருமாறி இருப்பதைப் பார்க்க ஆச்சர்யமாக இருந்தது. இந்த மாதிரி பல மிகப் பெரிய ஆலமரங்களைக் காணும்போது அவைகள் எத்தனை வயதுடையவை என்று யோசிப்பேன். நம்மைவிட மிகப் பெரியவைகள் அல்லவா? (இடம்: சத்தியாகாலம், கொள்ளேகால்)
= = = = = = = = = = =
KGG பக்கம்.
ஒரு மெமோ தட்டி விட்டுடுங்க !
சென்ற வாரம் நான் சொன்ன விடாக்கண்டன் கொடாக்கண்டன் தலைப்பில் என் அலுவலகத்தில் நடந்த ஒரு நிகழ்வு.
முன்னுரை :
தொழிற்சாலையில், எல்லோரும் பங்கேற்கும் வகையில், யோசனை திட்டம் (Suggestion scheme ) அறிமுகம் செய்தார்கள். (1975). எனக்கு அப்போது ஒரே ஒரு பாஸ்.
அந்தத் திட்டத்தின் ஆரம்ப காலம் முதல், (அதாவது திட்ட அறிமுக போஸ்டர் தயாரிப்பிலிருந்து ஆரம்பித்து) மாற்றத்திற்கான இறுதி வடிவ உற்பத்திப் பொருட்களின் விலை அல்லது தயாரிப்பு வழிகளில் செலவுகளைக் குறைப்பது பற்றிய யோசனைகளை, அந்தந்த பிரிவு அதிகாரிகளின் ஆலோசனைகளைப் பெற்று, யோசனையை அனுப்பி வைத்த (அப்போது தொழிற்சாலையின் பயிற்சி மையத்திடம் அந்தப் பொறுப்பு இருந்தது) துறைக்கு பதில் அனுப்புவோம்.
இந்த திட்டம் ஆரம்ப காலத்தில் அதிகம் சூடு பிடிக்கவில்லை. முதல் நூறு யோசனைகள் பெறப்பட்டு, அவற்றை பரிசீலித்து, அவற்றில் பன்னிரெண்டு யோசனைகள் ஏற்கப்பட்டு, பரிசுகள் அறிவித்தார்கள்.
பரிசு எந்த அடிப்படையில் அறிவிக்கப்பட்டது என்றால், கொடுக்கப்பட்ட யோசனையின் மூலம், ஒரு வருடத்தில் என்ன தொகை தொழிற்சாலை செலவில் குறைகிறதோ அதில் பத்து சதவிகிதம் பரிசு என்று தீர்மானித்தார்கள்.
அந்த அடிப்படையில், ஒருவர் கொடுத்த யோசனையில், ஆண்டுக்கு 12 இலட்ச ரூபாய் செலவு குறைவு என்று கணக்கிடப்பட்டது. ஆக, யோசனை கொடுத்தவருக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசு. 1975 கால கட்டத்தில் அது மிகவும் பெரிய தொகை. அந்தக் கால கட்டத்தில், என்னுடைய மாதாந்திர மொத்த சம்பளமே ஆயிரம் ரூபாய்க்குள்தான்!
அந்த யோசனையை செயலாக்க வடிவமைப்பு, புதிய பகுதிகள், எல்லாவற்றையும் வடிவமைத்து, மாற்றங்களை கொண்டு வந்ததோடு, எனக்குக் கொடுக்கப்பட்ட metrication, value engineering, standardisation என்பவைகளையும் செயல்படுத்தி, நான் செய்த மாற்றங்கள் மூலம் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 18 லட்ச ரூபாய் செலவு குறைத்தேன். ஆனால் எனக்கு பரிசு எதுவும் கிடையாது :(((.
முதல் batch பரிசு அறிவிக்கப்பட்டவுடன் புற்றீசல் போல யோசனைகள் குவிய ஆரம்பித்தன.
-------------
விடாக்கண்டன் :
இவைகள் ஒருபுறம் இருக்க, திட்டம் ஆரம்பித்து சில வருடங்கள் கழித்து, நேரடி உற்பத்திப் பிரிவில் இல்லாத ஒரு டிபார்ட்மெண்டிலிருந்து பொறியியல் பட்டம் பெறாத ஒருவர், என்னைப் பார்க்க வந்தார்.
தன்னிடம் சில யோசனைகள் வைத்திருப்பதாகவும், அவை குறித்து பேசி, என் அபிப்பிராயத்தைத் தெரிந்துகொள்ள வந்திருப்பதாகவும் கூறினார்.
நான் அவரிடம், 'யோசனைகளை அதற்குரிய படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்புவது நல்லது. யோசனைகளின் மீது முடிவு எடுக்கும் அதிகாரம் எனக்குக் கிடையாது' என்று கூறினேன்.
அவரோ விடாமல், 'நான் சொல்லுகின்ற யோசனைகளில் எதெது workout ஆகும் என்று சொல்லுங்கள், அவற்றை மட்டும் நான் எழுதிப் போடுகிறேன்' என்றார்.
' சரி ஒவ்வொன்றாக சொல்லுங்கள்' என்றேன்.
ஒவ்வொன்றாக சொன்னார்.
அவற்றில் சில ஏற்கெனவே சொல்லப்பட்டு பல காரணங்களால் நிராகரிக்கப்பட்டவை. இன்னும் சில, மற்றவர்கள் ஏற்கெனவே கூறி, நிறைவேற்றம் வெவ்வேறு நிலைகளில் இருப்பவை.
சில யோசனைகளால் ஆண்டு சேமிப்பு சில நூறுகள் மட்டுமே - அதையும் உறுதியாக கூற இயலாது.
ஆக, அவர் கூறியவற்றில் எதுவுமே தேறவில்லை.
யோசனைகள் எதுவுமே workout ஆகாது என்று தெரிந்துகொண்டார்.
இறுதியாக, அவர் என்னிடம் கூறியதுதான் highlight.
" சார் - நான் சொன்ன யோசனைகளையும், அதற்கு நீங்கள் சொன்ன பதில்களையும் பட்டியல் இட்டு, எனக்கு ஒரு மெமோ தட்டிவிடுங்கள் " என்று சொல்லி, கிளம்ப எழுந்தார்.
நான், " சார் எனக்கு நீங்க சொன்ன யோசனைகளை பட்டியல் இட்டு ஒரு மெமோ தட்டுங்க. அதற்கு நான் பதில்கள் எழுதி உங்களுக்கு ஒரு மெமோ தட்டுகிறேன். ஒரு base document இல்லாமல் நான் எதையும் தட்ட மாட்டேன்" என்றேன்.
" நான் சொன்னபடி மெமோ தட்டுவதற்கு உங்களுக்கு என்ன பிரச்சினை"
" நான் கேட்டபடி மெமோ தட்டுவதில் உங்களுக்கு என்ன பிரச்சினை? "
" நான் மெமோ தயார் செய்து அனுப்ப எனக்கு சில நாட்கள் ஆகிவிடும். அப்போ சீனியாரிட்டி போயிடும். "
" நீங்கள் சொன்ன யோசனை எதுவுமே ஏற்கப்பட இயலாதவை. இதில் சீனியாரிட்டி ஜூனியாரிட்டி எங்கிருந்து வந்தது?"
இறுதிவரை அவரும் மெமோ தட்டவில்லை; நானும் மெமோ தட்டவில்லை!
அடுத்த வாரம் : ரயிலில் நான் பார்த்த (பைத்தியக்கார!) துப்பறியும் நிபுணர்!
= = = = = = = = = = = = =
இந்த வார கேள்வி பதில் சிறப்பாக உள்ளது. குறுக தரித்த குறள் போன்ற நறுக் விடைகள் நச்சென்று உள்ளன. பாராட்டுகள். கேள்வியின் நாயகன் யார்? கேட்டவர் பெயர் இல்லையே!
பதிலளிநீக்குJayakumar
கேள்விகள் கேட்டிருப்பவர் நெல்லைத்தமிழன்.
நீக்குவிட்டுப் போனதை சுட்டிக் காட்டியதற்கு நன்றி .
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் தீபத்திருநாள் நல்வாழ்த்துகள்.
இன்றைய கேள்வி பதில்கள் அனைத்தும் எப்போதும் போல் அருமை. மூன்றாவது கேள்வியும், அதற்குரிய பதிலையும் ரசித்தேன்.
படமும் பதிவும் படங்கள் அழகாக இருக்கிறது. கலியுக மக்களின் தேரும், இயல்பை மீறிய ஆலமரத்தின் வேரோடிய விழுதுகளும் மனதை கவர்ந்தன. நெல்லைத்தமிழர் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பாராட்டுக்கு நன்றி.
நீக்குஆசை, கோபம், பொறாமை இவைகளை முதியவர்கள் மட்டும்தான் விட வேண்டுமா? ஆசை சிறிய வயதில் இருப்பது தவறில்லை, கோபமும் பொறாமையும் எந்த வயதிலும் கூடாது. குறிப்பாக பொறாமை கூடவே கூடாது. ரத்தத்தில் திமிர் இருக்கும் இளமையில் பொறாமை எந்த தீங்கை வேண்டுமானாலும் செய்யத் தூண்டும்.
பதிலளிநீக்குஉண்மைதான்.
நீக்குஎ.பி. சகோதரர்களுக்கு கார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துகள்!
பதிலளிநீக்குவாழ்த்துவோம்.
நீக்குகீர்த்தி சுரேஷ், தனுஷ், தனுஷ்
பதிலளிநீக்குஆஹா.
நீக்குஅலுவலகத்தில் எழுத்தில் ஒரு முடிவைச் சொல்லுமுன் ஆயிரம் தடவைகள் யோசிக்கணும். வாய்மொழியா என்ன சொன்னாலும் நிர்பந்தம் ஏற்பட்டா மாற்றிக்கொள்ள முடியும். இல்லை ஞாபகம் இல்லைனு சொல்லிடலாம்
பதிலளிநீக்குஅதுவும் சரிதான்.
நீக்குநடிகரில் தனுஷ். நடிகையைக் குறிப்பிட முடியலை. (நல்லாருக்கான்னு நினைத்தால் அடுத்தபடத்தில் 70 எம்எம் ஆகிடறாங்க இல்லை யாரேனும் மேக்கப் இல்லாத மூஞ்சியைப் படமெடுத்துப் போட்டுடறாங்க வெற்றிமாறன் நல்ல இயக்குநர்.
பதிலளிநீக்கு:)))
நீக்குமுருகா சரணம்
பதிலளிநீக்குஓம் சரவணபவ
நீக்கு/// அது அவரவர்கள் விருப்பம் மற்றும்
பதிலளிநீக்குசூழ்நிலையைப் பொருத்தது. ///
சிறப்பு
நன்றி.
நீக்குமொத்தத்தில் நல்ல பதிவு
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஇங்கே இரவில் இருந்து மழை
பதிலளிநீக்குஇப்போது தான் ஓய்ந்துள்ளது...
நெல் அறுவடையை நோக்கிப் போகும் நேரமல்லவா? வயல்கள் பாதிப்படைந்திருக்குமா?
நீக்குவடிகால் வசதிகளை
நீக்குஅடியோடு மறந்தாயிற்று...
இன்னும் சில நாட்களுக்கு மழை எனில் பிரச்னை தான்..
//வடிகால் வசதிகளை
நீக்குஅடியோடு மறந்தாயிற்று...// எப்போ கிராமக்கணக்குப் பிள்ளை, மணியக்காரர், பட்டாமணியார் போன்றவர்களை அழித்து ஒழித்தார்களோ அப்போதிலிருந்து இந்தத் தூர் வாருதல், வடிகால்களைச் சரி செய்தல், முள் செடிகளை வெட்டுதல் போன்றவை அறவே நின்னு போயாச்சு. முன்னெல்லாம் வீட்டுக்கு வீடு வரி போட்டு, வீட்டுக்கு ஒருத்தர் முன்னெடுத்துக் கொண்டு அவங்க பக்கம் உள்ள கிராமத்துப் பொதுவான வாய்க்கால்கள், வடிகால்கள், வயலுக்கு நீர் பாயும் கால்வாய்கள் போன்றவை சுத்தம் செய்யப்படும். எனக்குத் தெரிந்து எழுபதுகளின் கடைசி வரை இது இருந்து வந்தது. பரம்பரை பரம்பரையாகக் கிராமத்தில் இருந்து வரும்/வாழ்ந்து வரும் கணக்குப் பிள்ளைகள், மணியக்காரர்கள் போன்றவர்களை அழித்ததில் கிராமத்துப் பொதுப்பயன்பாட்டுச் சாதனங்களின் பராமரிப்பு என்பது சுத்தமாக நின்னு போச்சு. பழைய ஆட்களுக்கு யார், யார் நிலம் எங்கெங்கே இருக்கிறது என்பதிலிருந்து, கிராம எல்லைகள், கிராமத்துப் பொதுச்சாலைகள், அவற்றின் பராமரிப்பு எப்போச் செய்யணும் என்பதெல்லாம் தெரியும். கிராமத்துப் பொது நலனுக்காகப் பாடுபட்டார்கள். இப்போ இந்த விஷயங்களெல்லாம் தெரிந்தவர்களே இருந்தால் அதிசயம். இப்போத் தெரிந்ததெல்லாம் நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணமும், ரேஷனும் வாங்கிக் கொண்டு குடித்துவிட்டு வீட்டில் உட்கார்ந்திருப்பது ஒன்று தான். மற்றதெல்லாம் அரசே செய்யணும். இவங்களுக்குப் பொறுப்பு ஏற்க மனதில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில கிராமங்கள் நன்றாகப் பராமரிக்கப்பட்டாலும் அவை எல்லாம் ஒரு விரல் விட்டு எண்ணும் அளவுக்குத் தான்.
பஞ்சு மெத்தை, பஞ்சு தலையணை போன்றவை வழக்கொழிவதன் காரணம் என்ன? //
பதிலளிநீக்குஇலவம் பஞ்சு மரம் வேணுமே. அதுக்கு இடம் எங்க இருக்கு? இருப்பதும் அழிந்துவருகின்றனவே!
கீதா
இலவ மரங்களை 99%
நீக்குஅழித்தாயிற்று..
சீனியர் சிடிசன் ஆனால், என்ன என்னவற்றை விட்டுவிடவேண்டும் என்று நினைக்கிறீர்கள்? //
பதிலளிநீக்குபுலம்பலை....எதிர்மறை எண்ணங்களை....எங்க காலத்துல என்று பேசுவதை
கீதா
சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்ல ஆரம்பித்துவிட்டால் நமக்கு வயசாகிவிட்டது என்று அர்த்தம். புலம்பல், எங்க காலத்துல என்று பேச ஆரம்பித்தாலே அனைவரும் ஓடிப்போயிடுவாங்களே
நீக்குநியாயமான கருத்து.
நீக்குபல விஷயங்கள், நிகழ்வுகள் மறக்க முடியாமல் நினைவில் வந்து மோதுகின்றன. அதிலும் இரவு நேரத்தில் தான் அதிகமாக இருக்கின்றன. எப்படி மறப்பது என்பதே எனக்கு ஒரு பெரிய சவாலாக இருக்கு. மற்றபடி நான் எதிலும் தலையிடுவதில்லை என்பதால் வேறே பிரச்னைகள் இல்லை. என் வரையில் பத்தியச் சாப்பாடு, நானே சமைச்சுப்பேன், ஒரு ரசம், (தக்காளிச் சாறு என்பதே உண்மை) ஒரு கறி, ஒரு கைப்பிடி சாதம் இவையே என் மதிய உணவு. உண்மையில் ப்ரஞ்ச் என்று சொல்லணும். மாலை சில நாட்கள் காஃபி, சில நாட்கள் எதுவும் குடிக்காமல் கழியும். இரவு ஏழு மணிக்கு மெலிதாக இருந்தால் 2 தோசை/அல்லது சப்பாத்தி(தொட்டுக்க ஒரு கரண்டி கூட்டு/கறி ஏதேனும் ஒன்று) பெரும்பாலும் எனக்குக் கொடுத்திருக்கும் அறையிலேயே ஒவ்வொரு நாளையும் கழிக்கிறேன். பையர், மருமகள், குழந்தை இவங்களுக்குள்ளே இடி இடிச்சாலும் மின்னல் மின்னினாலும் என் வரையில் காது செவிடு, கண் தெரியாது, வாய் பேசாது. நான் உண்டு, கணினி உண்டு அல்லது புத்தகங்கள்.
நீக்குபையருக்குக் கல்யாணம் ஆகி இருபது வருஷங்களாக இப்படித்தான்.
நீக்குவாழ்க்கையில் எவற்றைத் தவிர்க்கமுடியாது, எவற்றைத் தவிர்க்கலாம்? //
பதிலளிநீக்குடெக்னாலஜியை தவிர்க்க முடியாது. இமயமமலை சாமியார்கள் கூட இணையவழி ஆன்மீகம் பேசுகிறார்கள்.
நல்ல மனநிலைக்கும், உடல் நலனுக்கும் எதிரியாக இருப்பவற்றைத் தவிர்க்கலாம்.
கீதா
நல்ல கருத்து.
நீக்கு//அவற்றுக்கு பதிலாக இப்போது எவை வந்துள்ளன? நான் ஸ்பான்ஜ் தலையணை உபயோகப் படுத்தினாலும், பஞ்சு மெத்தையை விடவில்லை. //
பதிலளிநீக்குநாங்க எப்போவுமே இலவம்பஞ்சு மெத்தை தான். காதி பண்டாரில் தைக்கச் சொல்லித் துணி எடுத்துக் கொடுத்து ஆர்டர் கொடுப்போம். தலையணைகள் உள்பட. அவை தான் ஸ்ரீரங்கத்திலும் பயன்பாட்டில் இருக்கின்றன. நம்மவருக்கு உடல் நலமில்லாமல் இருக்கையில் கட்டிலில் இருந்து எல்லாவற்றையும் மாற்ற வேண்டிய கட்டாயம். மருத்துவமனையில் பயன்படுத்தும் கட்டில், காற்று நிரப்பிய மெத்தை, அதன் மேல் ஃபோம் மெத்தை, தலையணைகள் மட்டும் பஞ்சுத் தலையணைகள். அந்தக் கட்டிலிலோ, மெத்தையிலோ படுக்கவே பிடிக்காது அவருக்கு. என்னோட கட்டிலில், என்னோட மெத்தையில் படுத்துக்கணும் என்றே புலம்புவார். :(
கஷ்டம்தான்.
நீக்குநெல்லை, இப்படி செடி கொடி பரவும் வரை அங்கு வேன் இருந்திருக்கு என்றால் சந்தேகம் வருதே. போலீஸ் இன்வெஸ்டிகேட் பண்ணலையா?
பதிலளிநீக்குபடம் அழகாக இருக்கு. கூடிய சீக்கிரம் இந்தச் செடிகளை பந்தல் போல ஆக்கி ஒரு உணவகம் வந்தாலும் வந்திடும்.
எங்க ஏரியாவில் ஒரு மினி பஸ்ஸை உணவகம் ஆக்கியிருக்காங்க. படம் எடுத்திருக்கிறேன்...
நானும் இப்படிச் சில கார்கள், வண்டிகள் செடி மூடி இருப்பதைப் பார்த்திருக்கிறேன்.
கீதா
தெரியலை கீதா ரங்கன். ஒருவேளை மிகப் பழைய வேனோ என்னவோ.
நீக்குபடத்தை படமும் பதமும் பகுதிக்கு விவரங்களுடன் அனுப்பவும்.
நீக்குஇங்கே வந்ததில் இருந்து ஃபோம் மெத்தை தான். அதென்னமோ எங்க பையருக்கு பஞ்சு மெத்தை, தலையணை பிடிப்பதில்லை. இத்தனைக்கும் சின்ன வயசில் இருந்து அவற்றில் தான் படுத்து வந்திருக்கார். கல்லூரி ஹாஸ்டலுக்குக் கூட அந்த மெத்தையைத் தான் கொடுத்திருந்தோம். ஆனால் அம்பேரிக்காவில் பரவாயில்லை. பஞ்சு மெத்தையும் கிடைக்கும் என்பதால் எங்க வரைக்கும் அதை வாங்கிப் போட்டிருந்தார். இங்கே ஃபோம் மெத்தை. கிட்டத்தட்ட ஒன்றரை அடி உயரம். வந்த அன்னிக்குக் கட்டிலும் உயரம், மெத்தையும் உயரம் என்பதால் ஸ்டூலில் ஏறித் தான் படுக்க வேண்டி இருந்தது. பின்னர் ஆளைக் கூப்பிட்டு இரவோடு இரவாகக் கட்டில் உயரத்தைக் குறைத்தார் பையர். ஆனால் உள்ளூறக் கோபம். தான் இத்தனை தூரம் பார்த்துப் பார்த்துச் செய்ததை அம்மா ரசிக்கலை என்னும் எண்ணம். ஆனால் இப்போவும் கொஞ்சம் எம்பித் தான் படுக்க வேண்டி இருக்கு. அதோடு தினமும் காலை எழுந்ததும் நடு முதுகில் ஒரு மாதிரிப் பிடிப்பு. எழுந்ததும் உட்காருவது சிரமமாக இருக்கும். கொஞ்சம் இப்படி அப்படித் திரும்பிப் பின்னர் யோகாசனங்கள் செய்யும்போது கவனமாக முதுகுக்குப் பயிற்சி கொடுத்ததும் சரியாகும்.
பதிலளிநீக்குகட்டில் + மெத்தை முழங்கால் உயரத்திற்கு இருந்தால்தான்
நீக்குசௌகரியம்.
ஆலமரத்தின் விழுதே மிகப் பெரிய கிளையாக உருமாறி இருப்பதைப் பார்க்க ஆச்சர்யமாக இருந்தது.//
பதிலளிநீக்குநெல்லை நீங்க அதுக்கு எள்ளுப் பேரன் போதுமா!!!!
நான் அதுக்கும் கீழ சின்ன்ன்ன்ன்ன பேத்தி.
எ ங்கள் ஏரியாவில் இப்படிப் பார்க்கலாம். இதுக்கும் படங்கள் இருக்கு எங்கிட்ட....
நேற்று, திருவாழிமார்பனிடம், பானுக்கா, என்னை மாமின்னே கூப்பிடுங்கன்னு சொல்லிருக்காங்க. நெல்லைக்கும் ஸ்ரீராமிற்கும் "அப்படிப் போடுங்க பானுக்கான்னு" தோணிருக்கும்!
திருவாழிமார்பன் அப்படி எல்லாம் ஏமாந்துருவாரா என்ன!!!!!!!!!
கீதா
ஆழ்வார் திருநகரியிலிருந்து கிளம்பும்போது பாதையில் ரோட்டின் இருபுறமும் ஒரே ஆலமரம். அதாவது அதன் கிளைக்கு நடுவே செல்லும் பாதை. படம் எடுக்க விட்டுப்போய்விட்டது.
நீக்குமரங்கள் நம்மைவிட வயதில் பெரியவை. ஒரு இடத்தில் நிற்காமல் அங்கயும் இங்கயும் ஓடிக்கிட்டே இருக்கும் பையனை, அம்மா கோபத்தில் திட்டி, அதனால் அடுத்த ஜென்மத்தில் மரமாகப் பிறந்திருப்பானோ?
இந்த மெத்தைப் பிரச்னைகளாலேயே ஓட்டல்களில் தங்கும்போதெல்லாம் முதுகு பிடித்துக் கொண்டு அவஸ்தையாகத் தான் இருக்கும். வேறே வழியே இல்லை. அவற்றை எடுக்கவும் முடியாது. எல்லாம் ஒன்றரை அடி அகலம், ஆறரை அடி நீளத்தில் கனமாகத் தூக்க முடியாமல் இருக்கும். வீட்டுக்கு வந்து படுத்தால் தான் அப்பாடா என்று இருக்கும். :)
பதிலளிநீக்குகீதாக்கா ஹைஃபைவ்! மீக்கும் இந்த ஃபோம் பிடிப்பதில்லை. ஒத்தும் வருவதில்லை. பஞ்சு தான். மிகவும் பிடிக்கும். ஆனால் யார் வீட்டிற்குப் போனாலும் ஃபோம்...ரொம்ப அவஸ்தையாக இருக்கும்.
நீக்குகீதா
இடுப்பு வலியும் வரும், ஃபோம் தலையணை வைத்துக் கொண்டால் கழுத்துவலி தோள்பட்டை வலியும்...
நீக்குகீதா
தற்காலத்தின் திரைப்பட அறிவே எனக்குச் சுத்தமாக இல்லை. இங்கே தோஹாவுக்கு வந்த புதுசில் ஓரிரண்டு புதுப்படங்கள் பார்த்தேன். அவற்றில் கார்த்திக், அர்விந்த்சாமி நடித்த ஒரு படம் நன்றாக இருந்தது நினைவில் இருக்கு. மற்றபடி படங்கள் ஏதும் பார்க்கவில்லை. நடிக, நடிகைகளையோ, இயக்குநர்களையோ, இசை அமைப்பாளர்களையோ தெரியாது.
பதிலளிநீக்குஅதே, அதே.
நீக்குநான் செய்த மாற்றங்கள் மூலம் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 18 லட்ச ரூபாய் செலவு குறைத்தேன். ஆனால் எனக்கு பரிசு எதுவும் கிடையாது :(((. //
பதிலளிநீக்குஅடப் பாவமே! அநியாயமாக இருக்கே.
ஒரு வேளை கம்பெனி இத்தனை யோசனைகள் குவியாது என்ற தைரியத்தில் பரிசு அறிவித்துவிட்டார்கள் போலும்! புத்திசாலி பணியாளர்கள் பெரும்பான்மை இருக்கும் என்று நினைக்காமல்...மதிப்பீடு தப்பாகிடுச்சு! கம்பெனி ரொம்ப சந்தோஷப்பட்டிருக்க வேண்டும். அட நம்ம பணியாளர்கள் நல்ல புத்திசாலிகள் என்று!
கீதா
நான் வடிவமைப்பு & அபிவிருத்தி டிபார்ட்மெண்ட் என்பதால்
நீக்குஎனக்கு பரிசுகள் கிடையாது.
நெல்லையார் அடையாறு தியாசஃபிகல் சொசைடியின் ஆலமரத்தைப் பார்த்ததே இல்லையா? ரொம்பப் பிரபலமானதாயிற்றே? அதைப் பார்க்கையில் நெல்லையின் ஃபோட்டோவில் உள்ள ஆலமரம் ஒன்றுமே இல்லை. கும்பகோணத்திலிருந்து கருவிலி செல்லும் வழியில் இம்மாதிரிச் சில ஆலமரங்கள் கண்களில் படும். சில ரயில்வே ஸ்டேஷன்களிலும் பார்த்திருக்கேன்.
பதிலளிநீக்குநான் சொல்ல வந்தேன், கீதாக்கா நீங்க சொல்லிட்டீங்க. அதேதான்...நான் படங்களும் எடுத்து பதிவு போட வைத்திருக்கிறேன். அது பெரிய எக்ஸ்டர்னல் டிஸ்கில் மாட்டிக் கொண்டிருக்கிறது அதை கணினியில் இணைக்கும் யுஎஸ்பி கேடாகிப் போனதால் வேறு புதியது சரியாகக் கிடைக்கவில்லை
நீக்குகீதா
அதன் வாசல் வழியா போயிருக்கேன். ஆனால் உள்ளே போனதே இல்லை கீதா சாம்பசிவம் மேடம்.
நீக்குஆமாம்... சின்னப் பையனைப் போய், நெல்லையார் என்று சொல்றீங்களே. நியாயமா?
நீக்குசரி. நெல்லையான்!!
நீக்குஇந்த மாதிரி வானில், பழைய அம்பாசடர் காரில் செடி, கொடிகளை ஏற்றிப் பார்த்திருக்கேன்.
பதிலளிநீக்குகௌதமன் சார் பரிசு கிடைக்கலையேனு வருந்துவது நியாயம் தான். அதனால் தானோ என்னமோ எங்கள் ப்ளாக் தொடங்கிய புதுசில் நிறையப் போட்டிகள் நடத்திப் பரிசுகள் கொடுத்துக் கொண்டிருந்தார். எனக்குக் கூடச் சில புத்தகங்கள், ரொக்கமாகப் பணம் ஆகியவை கிடைத்திருக்கின்றன.
பதிலளிநீக்குஅப்புறம் திடும் என்று போட்டிகள் வைப்பதையே நிறுத்திவிட்டார்னு சொல்லி முடித்திருக்கலாமில்லையா கீசா மேடம்
நீக்குயோசிக்கிறோம்!
நீக்குyesso yessu!
நீக்குபுனே சென்றிருந்த பொழுது, நகரத்தின் முக்கிய சாலைகளிலேயே ஆலமரங்கள் இருந்ததைப் பார்க்க ஆச்சர்யமாக இருந்தது.
பதிலளிநீக்குஅட! அப்படியா!
நீக்கு//இசை விமரிசகர் சுப்புடு பாடினால் எவன் கேட்பான்!// இசை விமர்சகர் சாப்புட நன்றாகப் பாடுவார் என்றுதான் கேள்வி
பதிலளிநீக்குநான் பாடினால் எவன் கேட்பான் என்று அவரே இதயம் பேசுகிறது புத்தகத்தில் எழுதியிருந்தார்!
நீக்குகேள்வி பதில் சிறப்பு.
பதிலளிநீக்குகுட்டி வேன் பழுது பட்டதை அப்படியே நிறுத்தி இருக்கலாம்.
ஆதலால் உங்களால் அவர் பாரியானார்.
:)))
நீக்குகேள்வி பதில்கள் நன்று.
பதிலளிநீக்கு"நான் செய்த மாற்றங்கள் மூலம் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 18 லட்ச ரூபாய் செலவு குறைத்தேன். ஆனால் எனக்கு பரிசு எதுவும் கிடையாது: ." அட ...என்ன ஒரு நிறுவனம்.:(
ஆலம் விழுது, வாகனத்தில் வளரும் செடிகள் படங்கள் நன்றாக இருந்தன
பாராட்டுக்கு நன்றி.
நீக்குஸ்ரீராம்ஜி, எதுனாச்சும் எளுதினா உங்குளுக்கு எப்பிடி அனுப்புறது?
பதிலளிநீக்குsri.esi89@gmail.com. or my WhatsApp number 98403 77544
நீக்குவளரே நன்னி, ஆசானே!
நீக்குrather அனுப்புறாங்க?
பதிலளிநீக்கு/3. வாழ்க்கையில் எவற்றைத் தவிர்க்கமுடியாது, எவற்றைத் தவிர்க்கலாம்?
பதிலளிநீக்கு# நம்மிடம் பிறர் காணும் குறைகள், பிறர்பால் நாம் காணும் குறைகள்./
அருமையான கேள்வி....அட்டஹாஸமான பதில். வாழ்த்துகள்.
பாராட்டுக்கு நன்றி.
நீக்கு