கேள்வி பதில்கள் :
ஜெயகுமார் சந்திரசேகரன் :
வைணவம் தீவிரமானது தென் இந்தியாவிலா? ஏன்?
இவ்வாறு கேட்க காரணங்கள்
1. வடநாட்டில் விஷ்ணுவின் சயனக்கோலம் உள்ள கோயில்களை காண்பது அரிது. இல்லை என்றே சொல்லலாம். .
2. கிருஷ்ணன், ராமன் என்று அவதாரங்களையே வடநாட்டவர் அதிகமாக வணங்குகின்றனர்.
3. சங்கரமடம் போன்ற மடங்கள் ஆச்சாரியார் இருப்பிடங்கள் வடநாட்டில் காணவில்லை.
பதில் 1: எ பி : # 1& 2. கிருஷ்ணன் ராமன் இரண்டும் விஷ்ணுவின் அவதாரங்கள் என்ற பின் அது வைஷ்ணவம் இல்லை என்று எப்படிச் சொல்ல முடியும் ?
வடக்கே முகலாயர்களின் ஆதிக்கம் மிக தீவிரமாக, பெரிய அளவில் இருந்தபோதும் தெற்கே அதன் பாதிப்பு அந்த அளவு இருக்கவில்லை. ஆழ்வார்கள், ஸ்ரீ ராமானுஜர் தெற்கே பிறந்த வைணவசீலர்கள். வடக்கிலும் ஜயதேவர் மீரா போன்ற பல விஷ்ணு பக்த சிகாமணிகள் இருந்திருக்கின்றனர். இயல்பான தெற்கு வடக்கு கலாச்சார மாறுபாடுகளும் காரணமாக இருக்கலாம்.
3. சங்கரர் நிறுவிய மடங்கள் வடக்கிலேதான் அதிகம். ஆனால் அவர் அத்வைதி.
பதில் 2 : நெல்லைத்தமிழன் :
வைணவத்தின் பிறப்பிடம் தென் இந்தியா, குறிப்பாக தமிழகம். ஆழ்வார்களின் திவ்யப் பிரபந்தங்கள், நம்மாழ்வாரால், நாதமுனிகளுக்கு ஆழ்வார் திருநகரியில் கொடுக்கப்பட்டது. நாதமுனிகள் அவற்றை ஒழுங்குபடுத்தி நாலாயிரம் என்ற நூலாக்கினார். அவரே, முதலாயிரம், இரண்டாமாயிரம்…என்றெல்லாம் பிரித்தவர். அவருக்குப் பிறகு ஆளவந்தார், அவருக்குப் பிறகு ராமானுஜர். இவர்கள்தாம் வைணவம் பரவக் காரணம். அதிலும் இராமானுஜர் காலத்தில் வைணவம் வேகமாகப் பரவியது.
ராமானுஜர் வட நாட்டு திவ்யதேசங்களுக்கெல்லாம் பாதயாத்திரையாகச் சென்றார், முக்திநாத் உட்பட. அங்குள்ள பலரும் வைணவ சமயத்தை ஏற்றுக்கொண்டனர். சைவத்தின் ஆரம்பம் காஷ்மீரம் என்பர்.
வட நாட்டிலும் பல புராதான விஷ்ணு கோயில்கள் உண்டு. முஸ்லீம் படையெடுப்புகளால் அங்குள்ள கோயில்கள் பலவும் பாதிப்படைந்தன. கோயில்களில் இருந்த செல்வங்கள் கொள்ளை போயின. விக்ரஹங்கள் பழுதுபட்டன அல்லது உடைக்கப்பட்டன. அந்த இடங்களில் மசூதி கட்டும் வழக்கம் வந்தது. இவையெல்லாம் தாண்டித்தான் இந்து மதத்தைப் பின்பற்றுபவர்கள் தலைமுறை தலைமுறையாகத் தொடர்கின்றனர்.
கேள்விக்காக இரண்டு உதாரணங்கள். 1 காட்மண்டுவில் உள்ள ஜல நாராயணர் கோயில். 2. தியோதர், உத்திரப் பிரதேசத்தில் உள்ள தசாவதாரக் கோயில். நான் ஜலநாராயணரை இரண்டு முறை தரிசித்திருக்கிறேன். உத்திரப்பிரதேசக் கோயிலுக்கு இன்னும் செல்லவில்லை.
இரண்டாவது கேள்வி… இராம கிருஷ்ண அவதாரங்களை வடநாட்டவர் வணங்குவது. இந்த இரண்டு அவதாரங்களும் அயோத்தி, மதுரா என்ற இடங்களிலில் தோன்றி வட நாட்டில் பல இடங்களிலும் வாழ்ந்த இடங்கள். உதாரணமா கிருஷ்ணர், மதுரா, கோகுலம், விருந்தாவன் தொடங்கி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத், தில்லி அருகே குருக்ஷேத்திரம் வரை பல்வேறு இடங்களில் அவரது வாழ்வு நகர்ந்தது. அதுபோலவே ராமாவதாரமும். இதுவே கிட்டத்தட்ட முழு இந்தியாவிலும் அவர்களுடைய கோயில்கள் இருப்பதற்குக் காரணம்
ஆதிசங்கர பகவத் பாதாள், சங்கர மடங்களை ஸ்தாபிதம் செய்தவர் (அவர் மிக க் குறைந்த காலமே இவ்வுலகில் ஜீவித்திருந்தார்). பத்ரி நாராயணப் பெருமாள் கோயிலை ஒழுங்குபடுத்தி அங்கு கேரள நம்பூதிரிகள் வம்சம் பூஜை செய்யும் வழக்கத்தை (ராவல்ஜி என்று சொல்வர்) உண்டாக்கியவரும் அவர்தாம். அவர் நான்கு மடங்களை உண்டாக்கினார். (தெற்கு) கர்நாடகாவில் சிருங்கேரி சாரதா பீடம், (வடக்கு) உத்தராகண்டில் ஜோதிர் மடம், (மேற்கு) குஜராத்தில் துவாரகா காளிகா மடம், (கிழக்கு) ஒடிசாவில் கோவர்தன மடம். கிழக்கில் ஸ்ரீ ஹஸ்தகமலாச்சார்யார், மேற்கில் ஸ்ரீ பத்மபாதாச்சார்யார், வடக்கில் ஸ்ரீ தோடகாச்சார்யார், தெற்கில் ஸ்ரீ சுரேஷ்வராச்சார்யார் அந்த அந்தப் பீடத்தின் முதல் ஆச்சார்யர்களாக வீற்றிருந்தனர்.
காட்மண்ட் – நேபாள் – ஜலநாராயணர் கோயில் (2025ல் எடுத்த படம்)
2008ல் அங்கு சென்றிருந்தபோது எடுத்த படம்.
அனந்த சயனம், சாரங்க், ஒடிசா - 9ம் நூற்றாண்டு.
- - - - - - - - -
கேள்விகள் : நெல்லைத்தமிழன் :
1. ஒன்றும் சாதிக்காத, தெரியாதவனுங்க, பத்திரிகையாளர் என்ற போர்வையில், காசு வாங்கிக்கொண்டு அல்லது தங்களுக்கு வேண்டாதவர்களை மோசமாக எழுதுவதற்காக, கேள்விகள் கேட்பதும், தங்கள் கருத்துக்களை வைத்து யூடியூபில் கதைவிடுவதும் சரியா? இவர்களுக்கும் தேச விரோதிகளுக்கும் என்ன வித்தியாசம் என்று சொல்லமுடியுமா?
# ஊழல் அரசியலின் மிக மோசமான விளைவுகளை சந்தித்துக் கொண்டிருக்கிறோம். கூலிக்கு விலை போகும் மலிவான நபர்கள் பத்திரிகையாளர்கள் என்ற தகுதிக்கு களங்கம் உண்டாக்குகிறவர்கள். இது தேச விரோதமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் நிச்சயமாக ஈனம்.
2. மோசமான பத்திரிகையாளர்கள் என்று நினைத்தால் நக்கீரன் கோபாலும் இந்து ராமும் நினைவுக்கு வருவதுபோல, நல்ல பத்திரிகையாளர்கள் என்று நினைத்தவுடன் உங்கள் மனதில் தோன்றும் நபர்கள் யார் யார்?
# தற்சமயம் பாண்டே, துக்ளக் குருமூர்த்தி ?
3. ஒருவர், ஒரு அரசியல்வாதியையோ இல்லை கட்சியையோ விமர்சனம் செய்யும்போது, இவர் மாத்திரம் என்ன ஒழுங்கு? இவர் இதுவரை சொல்லாததா இல்லை செய்யாததா? என்று மனதில் தோன்றுவதைத் தவிர்க்க இயலவில்லையே. அது ஏன்?
# கிட்டத்தட்ட எல்லாக் கட்சிகளும், எல்லா அரசியல்வாதிகளும் ஒரே பாணியில் இருப்பதுதான் முக்கிய காரணம்.
4. பிச்சைபோடுவது போல போடும் 2-3 சீட்டுகளை வாங்கிக்கொண்டு, பெரியண்ணன் செய்யும் எல்லாவித அக்கிரமங்களையும் சீரணித்துக்கொண்டு, அவருக்கு தொங்குசதையாக கட்சியை நடத்துவதை விட்டுவிட்டு, அந்தக் கட்சியிலேயே இந்த சிறு கட்சிகள் இணைந்துவிடுவது நல்லது என்று உங்களுக்குத் தோன்றியிருக்கிறதா? தனியாக கட்சி நடத்துவதற்கு, தேர்தல் சமயத்தில் பெரிய கட்சியிடம் அவர்கள் கொள்ளையடித்த பணத்தில் ஒரு பங்கு வாங்கிக்கொள்வதைத் தவிர வேறு காரணங்கள் இருக்கிறதா?
# சிறு கட்சி ஜாதிக்கட்சி இரண்டுமே காற்றுள்ள போது தூற்றிக் கொள்ளும் சாமர்த்தியம் படைத்தவை.
5.பத்திரிகைகளோ இல்லை ஊடகங்களோ இல்லை யூடியூபிலோ, இவர்கள் நம்பகமானவர்கள் என்று சொல்லக்கூடியவர்கள் யார் யார்?
# முன்பே மேலே சொன்னபடி...
6. ஒன்றுக்கும் வாய்ப்பில்லாத ஒருவன், நான் எந்த தகிடுதத்தமும் செய்ததில்லை, எனவே நல்லவன் என்று சொல்வதும், ஒரு கவுன்சிலராகக் கூட தேர்ந்தெடுக்கப்படாத தோழர் நல்லகண்ணு, கைச்சுத்தம் மிக்கவர் என்று பெருமைப்படுத்துவதும் சரியாகுமா? இல்லை இதற்கெல்லாம் வாய்ப்புகள் இருந்தும், நம்ம பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நிதியமைச்சராக இருந்தும் எந்த லஞ்சமும் வாங்காது இருந்தது பெருமைப்படும் விஷயமா? ஒருவர் செத்துப்போய்விட்டார் என்பதற்காக பொருத்தமில்லாத பெருமைகளை ஒருவர் மீது சுமத்துவதும் ஆபாசமான விஷயம்தானே.
# இறந்தவர்களை விமர்சிப்பதோ அளவுக்கு மீறிப் புகழ்வதோ சரியல்ல. என்றாலும் சிறு அளவில் கூட "கெட்ட பெயர்" வாங்காத பொதுப் பிரமுகர்கள் பலத்த பாராட்டுக்குத் தக்கவர்கள்தான்.
= = = = = = = = =
படமும் பதமும் :
நெல்லைத்தமிழன் :
காங்க்டக் அருகில் (சிக்கிம்) நாதுல்லா பகுதிக்குச் செல்லும் வழியில் (50 கிமீ மலைப்பகுதி) பார்த்த யாக் வகை எருமை. இதில் ஏறி சிறிது தூரம் சென்று பார்க்க 100 ரூபாய் கட்டணம் என்று நினைவு. மனதில் பாவம் என்று தோன்றியதால் பயணித்துப் பார்க்கவில்லை. மிக மிகக் குளிரான பிரதேசம் அது. இதுபோல நிறைய எருமைகளைப் பார்த்தேன்.
பனிமலைப் பகுதியிலும், பனி சூழ்ந்த சாலைகளிலும் பயணித்தது அதுதான் முதல் தடவை. இத்தனைக்கும் பனி குறைவான ஏப்ரல் இரண்டாம் வாரம். மார்ச்சுக்கு முன்பு இந்தப் பகுதிக்கு அனுமதியில்லையாம், அவ்வளவு பனியும், பனிச்சரிவுகளும் இருக்குமாம். ஏரியும் உறைந்துவிடுமாம். நம் இராணுவ வீரர்களின் கஷ்டம் நமக்குப் புரியாது. அவர்களைப் பற்றி நாம் எண்ணுவதோ கவலைப்படுவதோ இல்லை (பொதுவாக). என்ன அநியாயம் பாருங்கள்!
டார்ஜீலிங்கை நோக்கிச் செல்லும் பேருந்துச் சாலயில் நம்முடன் பயணிக்கும் இரயில் தண்டவாளங்கள். பல இடங்களில் அவை சாலைகளைக் கடந்து செல்லும். நம் ஊட்டி மலைப்பாதை இரயில் போல. அதில் ஒரு நாள் பயணிக்கணும் என்று எண்ணியிருக்கிறேன்.
அந்த இரயில் இதுதான். பார்த்தாலே பயணிக்கவேண்டும் என்ற ஆசை உண்டாகிறதல்லவா?
இதுல பிரச்சனை என்னன்னா, எப்போதாவது தடம் புரண்டாலோ இல்லை வழியில் பிரச்சனை வந்தாலோ, பேருந்துகளும் சாலயில் பயணிக்க முடியாதபடி போக்குவரத்து நெரிசல் அதிகமாகிவிடும். சாலை சீராக மணிக்கணக்கில் ஆகிவிடும்.
டார்ஜீலிங் தேயிலைத் தோட்டத்தின் மத்தியில். எனக்கென்னவோ மூணாறு தேயிலைத் தோட்டங்கள்தாம் மிகவும் அழகாக இருந்ததுபோன்ற எண்ணம்.
கண்மூடிக் கண் திறப்பதற்குள் ஏப்ரல் மாதம் வந்துவிடும். பிறகென்ன, கடற்கரையில் காயும் மீன்களுக்கும், சென்னையில் வசிப்பவர்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். பனி சூழ்ந்த காட்டுப் பகுதியை இப்போது பார்த்துக்கொள்ளுங்கள்.
= = = = = = = = = = = = = = =
என்ன... இன்று யாரையும் காணோமே...
பதிலளிநீக்குகீதா ரங்கன் வந்து ஒரு மேஜரைக் குறிப்பிட்டு, எனக்குப் பிடித்த யூடியூபர் என்றுசொல்லுவார் என எதிர்பார்த்தேன்.
பார்ப்போம்!
நீக்குகேவலமான யூட்யூபர்கள் / பத்திரிக்கையாளர்கள்: மூத்த பத்திரிக்கையாளர்கள் என்ற அடைமொழியுடன் ஆனந்தவிகடனில் அடிக்கடி வரும் "பிரியன்" போன்றவர்கள்
நீக்குநல்ல பத்திரிக்கையாளர்கள்: துக்ளக் ரமேஷ், டெல்லி ராஜகோபாலன்
கருத்துரைக்கும நன்றி.
நீக்குசூர்யா சார்... எல்லோரும் காசுக்கு அடக்குமுறைக்கு விலைபோய்விட்டார்களே என்ற ஆதங்கம்தான். செய்திகளும் அவர்களுக்கு ஏற்றமாதிரி எழுத இவர்களுக்கு கேவலமாக இல்லையா எனத் தோன்றுகிறது.
நீக்குபிரியன் மட்டுமல்ல அனேகமா எல்லோருமே காசு வாங்கிக்கொண்டு குரைப்பவர்கள்தாம். துக்ளக் ரமேஷ், ரங்கராஜ் பாண்டே (இவரும் சிலரைப் பற்றி உண்மையை உடைத்துப் பேசுவதில்லை. புழுவை விட மோசமான வைகோவை பாராட்டிப் பேசும் நிலைமை அவருக்கு) மேஜர் மதன்குமார் (போர் நாட்டுச் செய்திகள்) போன்றோர் நன்று.
விளக்கமான கருத்துரைக்கு நன்றி.
நீக்குஅல்லது ஜெயகுமாராவது வந்து கௌதமன் சாரும் அதே மாதிரி சிவப்பு டி ஷர்ட்டா எனச் சொல்லுவாரோ என நினைத்தேன்.
பதிலளிநீக்குஎல்லோரும் அண்ணாமலை வரவை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்!! :))))
நீக்கு/அந்த வெளிநாட்டு ட்ரிப்பில் எடுக்கப்பட்ட சில படங்கள் இப்போது உங்கள் பார்வைக்குக் கொடுக்கிறேன்.
பதிலளிநீக்குஎந்த நாடு என்று உங்களால் ஊகிக்க முடிகிறதா என்று பாருங்கள். /
வெளிநாடா? உள்நாடு போலல்லவாத் தோன்றுகிறது. ஒரு வேளை யாருக்குமேத் தெரியாமல் மாநில சுயாட்சி வாங்கி, வெளியூரிலிருந்து சென்னைக்கு வருபவர்கள் விசா வாங்க வேண்டுமென்று ரூல் கொண்டு வந்து விட்டார்களோ?
:))))
நீக்குமுருகா சரணம்
பதிலளிநீக்குசரணம் முருகா.
நீக்குஎன்னுடைய கேள்விகளுக்கு பதில் தந்ததற்கு நன்றி. சைவம் வடக்கிலிருந்து தெற்கே பரவியது என்றும், வைணவம் தெற்கிலிருந்து வடக்கே பரவியது என்றும் அனுமானித்துக் கொள்கிறேன். நன்றி.
பதிலளிநீக்குkgg சென்றது தாய்லாந்து என்று ஊகிக்கிறேன். சரியா?
Jayakumar
ஆம். நன்றி.
நீக்குதுக்ளக்கில் பல வருடங்கள் முன்னர் அதாவது எழுபதுகளில் எழுதி வந்த தில்லி ஸ்ரீநிவாசன் போன்ற பத்திரிகையாளர்கள் கிடைப்பது அரிது. அவர் ஒரே மகன் எமர்ஜென்சி கால கட்டத்தில் கொல்லப்பட்ட போதும் அவர் மனம் தளரவில்லை. பின்னர் துக்ளக்கில் சோ ராமசாமி, துக்ளக் சத்யா, போன்றோரும் ரங்கராஜ் பாண்டே பரவாயில்லை ரகமும் ஆகும். மற்ற பத்திரிகையாளர்கள் எவரும் உண்மையான செய்தியைப் பகிருவதில்லை.
பதிலளிநீக்குஉண்மைதான்.
நீக்குகே.ஸ்ரீனிவாசன் எங்கள் ஊர்(கண்டமங்கலம்). எங்கள் மாமா வீட்டிற்கு நெருங்கிய தாயாகி.
நீக்குAda!!!!!!!!!!!!!!! You are related to most of the popular persons. Great Family indeed!
நீக்குஆதி சங்கரர் போலவே ஸ்ரீராமாநுஜரும் வடமாநிலங்கள் முழுவதும் பயணித்து வைணவத்தைப் பரப்பி இருக்கிறார். உத்தரப் பிரதேசத்தில் வால்மீகி ஆசிரமத்திலோ என்னவோ நினவில் வரலை ஸ்ரீராமாநுஜரின் வரவைக் குறித்துச் சொல்லும் ஓர் கல்வெட்டு உள்ளது. அதோடு இல்லாமல் அத்வைதம் போல வைணவமும் ஓர் தத்துவம். அதைப் பின்பற்றிய பலரும் வட மாநிலங்களில் உண்டு. வைஷ்ணவ ஜனதோ பாடலை எழுதிய நரசி மேத்தா ஓர் தீவிர வைணவர் தான். உடனே இங்கே இருக்கும் ஐயங்கார்கள் போலனு நினைக்கக் கூடாது. பக்த மீரா, ஒரிசாவின் கிருஷ்ண சைதன்யர் ஆகியோருமே இந்த வைணவர்கள் பட்டியலில் வருவார்கள். வடக்கே பிராமணர்கள் என்னும் சொல்லை அதிகம் பார்க்க முடியாது. ஆனால் பிராமணர்களின் ஓட்டல்கள் என்பதைக் குறிப்பிட வடமாநிலங்கள் முழுவதிலும் வைணவ் போஜனாலய என்னும் பெயரிலேயே காணப்படும். இங்கே நம்பி உணவு உண்ணப் போகலாம். வெங்காயம், பூண்டு, காரமான மசாலாப் பொருட்கள் இல்லாமல் சமைத்திருப்பார்கள். சுவையாகவும் இருக்கும். பொதுவாகவே ராஜஸ்தான், குஜராத் சமண மக்கள் அதாவது ஜைனர்கள் அதிகம் வாழும் மாநிலங்கள் என்பதால் அசைவ உணவு கிடைப்பதே அரிது.
பதிலளிநீக்குதகவல்களுக்கு நன்றி.
நீக்குவடக்கே மற்ற மாநிலங்களில் ஒருவரை ஒருவர் பார்க்கும்போது "ஜெய் ஸ்ரீராம்" என்றோ "ஜெயராம் ஜீக்கு" என்றோ சொல்லுவார்கள். ஆனால் குஜராத்தில் ஒருவரை ஒருவர் பார்க்கையில் "ஜெய் ஸ்ரீகிருஷ்ணா" தான். எங்களுக்கு இது பழகக் கொஞ்சம் நாட்கள் ஆனது.
பதிலளிநீக்குமம்தா தேசத்தில் ஜெய் காளி மாதா?
நீக்குஹிஹிஹி அது என்னமோ கல்கத்தாவும் வங்காளமும் என்னை அவ்வளவாக் கவரவில்லை. 2015 ஆம் ஆண்டில் முதல் முறையாகக் கல்கத்தா போனோம். ட்ராஃபிக்கில் காத்திருந்து காத்திருந்து மயக்கமே வந்து விட்டது. அதோடு இப்போதைய அரசியல் சூழலில் ஜெய் காளி மாதா நு சொல்ல மம்தா அனுமதி கொடுக்கணும்னு நினைக்கிறேன். ஒரு குறிப்பிட்ட ஊரில் நவராத்திரி காளி பூஜை செய்யவே முதலில் அனுமதி கொடுக்காமல் கோர்ட் உத்தரவு பிறப்பித்து அனுமதிச்சாங்க எனக் கேள்வி. எவ்வளவு உண்மைனு தெரியாது.
நீக்குநம்ம ரங்க்ஸ் உத்தியோக பூர்வமாகக் கல்கத்தா, பெண்களூர் எல்லாம் அடிக்கடி போயிருக்கார். பெண்களூருக்கு நானும் நிறையப் போயிருக்கேன். ஆனால் என்னமோ தெரியலை கல்கத்தாவுக்கு நான் பலமுறை கேட்டும் கூட்டிப் போகலை. பணி ஓய்வு பெற்றதுக்குப் பின்னரே கூட்டிப் போனார். அதுவும் ஒடிஷாவில் என் பெரிய நாத்தனார் இருந்ததால் போனோம். அங்கிருந்து விமானம் மூலம் கல்கத்தா பயணம். சென்னையில் தண்ணீர் வந்த ஆண்டு.
நீக்குசென்னையில் வெள்ளம் வந்த ஆண்டை மறக்க முடியாது. நான் சென்னைக்கு வந்து எல்லோரும் மூணாறு செல்ல புக் பண்ணியிருந்தோம். பிறகு அது கேன்சலாகி எல்லோரையும் பஹ்ரைன் வரச் சொன்னேன்.
நீக்குபொதுவாக பரந்தாமன் எனப்படும் ஸ்ரீமந்நாராயணனையே பரம்பொருள் எனவும் முத்தொழில் செய்பவர் எனவும் சொல்லுவார்கள். இந்தத் தத்துவம் அத்வைதைகளிடமும் உண்டு. அதனாலேயே ஆதி சங்கரர் பத்ரிநாத் போன்ற இடங்களில் பூஜைகள் செய்வதற்கான வழிமுறையை உண்டாக்கித் தந்தார். இன்றளவும் கேரளப் போத்திகள் தான் அங்கே வழிபாடு செய்யும் உரிமை பெற்றவர்கள்.
பதிலளிநீக்குதகவலுக்கு நன்றி.
நீக்குகௌதமன் சார் போயிருக்கும் ஊர் எது எனக் கண்டுபிடிக்க முடியலை. ஆனால் தாய்லாந்து எனக் கருத்தில் ஜேகேசி சொல்லி கௌதமன் அதை ஆமோதித்தும் இருக்கார். முற்றிலும் புதிய இடம். முதல் முதலாக (?) வெளிநாடு சென்றதுக்கும் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநன்றி!
நீக்குஊட்டி ரயிலில் நாங்க பயணித்திருக்கிறோம். ஆனால் கீழே இருந்து வந்ததில்லை. குன்னூரிலிருந்து ஊட்டிக்கோ அல்லது அரவங்காட்டில் இருந்து ஊட்டிக்கோ அல்லது அரவங்காட்டிலிருந்து குன்னூருக்கோ போவோம். இந்த ஸ்டேஷன்களில் லவ்டேல் எனக்குப் பிடிச்சது. முன்னால் நன்றாக இருந்தது. இப்போ எப்படியோ?
பதிலளிநீக்குடர்ஜிலிங் மலை ரயில் பாதை "ஆராதனா:" படத்தையும் "மேரே சப்னோ கி ராணி" பாடலையும் ராஜேஷ் கன்னா, ஷர்மிலா டாகூரையும் நினைவூட்டியது. இன்னும் சில படங்களிலும் இந்த ரயில்/பேருந்துப் பாதைகள் இடம் பெற்றிருக்கின்றன. ஆனால் நினைவில் இருப்பது இந்த ஆராதனா படம் தான். மதுரை மீனாக்ஷி தியேட்டரில் காலைக்காட்சியாகப் பார்த்திருக்கேன்.
ஆம். நல்ல காட்சியமைப்பு & படப்பிடிப்பு! நான் ஆராதனா படத்தை (1970?) திருச்சியில், நண்பர்களோடு பார்த்தேன். அந்தப் படத்தில் காஜலின் அம்மா (பரீதா ஜலால் ) மிக அழகாக இருப்பார்!
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஐஆர்சிடிசியின் பாரத் தர்ஷன் யாத்திரைகளில் சிக்கிம் உண்டு. ஆனாலும் நம்ம ரங்க்ஸ் ஏனோ வரமாட்டேன்னு சொல்லிட்டார். அந்தச் சுற்றுலாப் பார்வையிடங்களில் அஸ்ஸாமின் காமாக்யாவும் இருந்தது. என்னமோ தெரியலை அவர் அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை. விமானங்களிலும் அழைத்துச் செல்வார்கள். முன்னால் எல்லாம் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானங்கள். இப்போ உண்டா என்பதோ விமான சேவை உண்டா என்பதோ தெரியலை. ஆனால் தாராளமாக நம்பிப் போகலாம். ஏற்பாடுகள் எல்லாம் நன்றாகச் செய்திருப்பார்கள்.
பதிலளிநீக்குதகவலுக்கு நன்றி.
நீக்குஜல நாராயணர் என நெல்லை சொல்லுபவரை எங்களுக்கு (Budda Neelkand) பூடா நீல்கண்ட் என அறிமுகம் செய்தார்கள். நானும் இந்தப் படங்களைப் பகிர்ந்திருக்கேன். ஜ்யோதிஷ் மட்டின் தோடகாசாரியர் பரம்பரைக்கு "கிரி" என்னும் அடைமொழி உண்டு. திருக்கோவிலூர் தபோவனத்தின் ஆசாரியரான ஞானானந்த கிரி அவர்கள் அங்கிருந்து வந்தவர் தான். அவரின் அத்யந்த சீடர் ஸ்ரீஹரிதாஸ் கிரியும் அந்த மடப் பரம்பரையைச் சேர்ந்தவரே. மற்றபடி துவாரகை மடத்தின் சங்கராசாரியார் போலக் கிழக்கே ஒரிசாவின் சங்கராசாரியரோ, வடக்கே ஜ்யோதிஷ் மடத்தின் ஆசாரியரோ பிரபலமாக இல்லை.
பதிலளிநீக்குநேபாளிகள் அவரை புத்தநீல்கண்ட் என்று சொல்கின்றனர். ஆனால் ஜல நாராயணர் என்றுதான் அங்கு பார்த்தேன்
நீக்கு"புத்த" இல்லை நெல்லை. (Booda) "பூடா" வயதான நீலகண்டர் என்னும் பொருளில் வரும்.
நீக்குஓ அப்படியா? இதுபற்றிய படங்களை, நான் எடுத்தவைகளை இன்றே பார்க்கிறேன்.
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குஇந்த எருமைகள் கயிலை யாத்திரையிலும் கொண்டு வருகின்றனர். ஆனால் நாங்க குதிரையில் தான் போனோம். இந்த எருமை தான் தமிழில் கவரிமா எனப்படும். திருவள்ளுவர் எழுதிய திருக்குறளில் குறிப்பிடப்படும் "மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமா அன்னார்" குறள் இதைக் குறித்துத் தான் என்பார்கள். கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளுக்கு மேலேயே எழுதப்பட்டிக்கும் குறளில் இமயமலைச் சாரலில் வளரும் ஓர் விலங்கினம் பற்றி வள்ளுவப் பெருமான் சொல்லி இருப்பது உண்மையில் ஆச்சரியமான ஒன்று.
பதிலளிநீக்குஆமாம் கீசா மேடம்... ஆனால் நம்மூரு டமிள் வாட்டியார்கள் கவரிமான் என்றே சொல்லிக்கொடுக்கின்றனர்.
நீக்குசில விஷயங்களில், (பெரும்பாலும் எல்லாவற்றிலும்) நாங்கல்லாம் அதிர்ஷ்டம் பண்ணி இருக்கோம். நல்லாசிரியர்கள் பலர். தலைவர்களும் மக்கள் தொண்டையே நினைப்பவர்கள்னு இருந்தது 1970---- 71 ஆரம்பம் வரை. அதன் பின்னரும் பரவாயில்லை தான் எம்ஜிஆர் ஆட்சியில் கூடப் பரவாயில்லை தான். 90களில் சீரழிய ஆரம்பிச்சதோ? என்னவோ? இப்போதைய ஆங்கில/தமிழ் ஆசிரியர்களுக்கு உச்சரிப்பே சரியாய் இல்லை. இதிலே அர்த்தமெல்லாம் எங்கே புரியப் போகுது! :(((( சொல்ல மாட்டாங்க என்பதை இன்றளவும் :"மாட்ராங்க" நு சொல்லி மாட்டியே விட்டுட்டு இருக்காங்க. இது ஒரு உதாரணம் தான். இன்னும் நிறைய இருக்கு. முன்னால் ஒரு பதிவாகவே போட்டிருந்தேன். :(
நீக்குவருத்தமான உண்மை.
நீக்குகேள்வி, பதில்கள் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குநெல்லையின் பதில்கள், காட்மண்ட் – நேபாள் – ஜலநாராயணர் கோயில்
படங்கள் அருமை.
நாங்கள் 2011 ஆம் ஆண்டு போய் வந்தோம்.
படமும் பதமும் பகிர்வில் படங்கள், செய்திகள் அருமை.
//நம் இராணுவ வீரர்களின் கஷ்டம் நமக்குப் புரியாது. அவர்களைப் பற்றி நாம் எண்ணுவதோ கவலைப்படுவதோ இல்லை (பொதுவாக). என்ன அநியாயம் பாருங்கள்! //
எல்லையில் இருக்கும் போர் வீரார்களை பனி பொழிவு அதிகம் இருக்கும் போதும், பனி சரிவுகள் இருக்கும் போதும் கவலை பட்டு இருக்கிறேன், அவர்கள் நலத்துக்கு பிரார்த்தனை செய்து இருக்கிறேன்.
டெல்லிக்கு போகும் போது எல்லை பாதுகாப்பு பணியில் இருக்கும் இராணுவ வீரர் ஒருவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் ரயில் போகும் போது அவரிடம் பேசி கொண்டு போனோம். அவர் பாதுகாப்பு பணியில் இருக்கும் போது ஏற்படும் கஷ்ட நஷ்டங்களை சொன்னார்.
என் கணவர் அவர்களை பாராட்டி பேசினார்கள் உங்கள் பாதுகாப்பில் நாங்கள் நிம்மதியாக இருக்கிறோம் என்று பேசினார்கள். அவர் முகத்தில் பெருமிதமான புன் சிரிப்பு இருந்தது இன்னும் மறக்க முடியவில்லை.
நல்ல நினைவலைகள்! நன்றி.
நீக்குKGG சார் பக்கம் அவருக்கு கிடைத்த வெளிநாட்டு பயணம் மகிழ்வு.
பதிலளிநீக்குபடங்கள் நன்றாக இருக்கிறது.
குழந்தைகள் நம்மை வெளிநாட்டுக்கு அழைத்து செல்வதும் அவர்களுடன் பல இடங்களை சுற்றிப்பார்ப்பதும் மகிழ்ச்சியான விஷயம்.
வாழ்த்துகள், வாழ்க வளமுடன்.
கருத்துரைக்கு நன்றி.
நீக்குஸ்ரீராம் இன்னிக்கு லீவா? அல்லது நாளைய பதிவு எழுதுவதில்/தொகுப்பதில் மும்முரமா? கீதா ரங்கன்/தி/கீதாவும் இன்னிக்குக் காணோமே? யாரானும் ஒருத்தர் வ்ந்திருந்தால் இன்னொருத்தர் பத்திக் கேட்டுக்கலாம். இருவருமே வரலைனா யார் சொல்லுவாங்க??????????
பதிலளிநீக்குஶ்ரீராமை வேறு ஒரு தளத்தில் பார்த்தேன்.
நீக்குOho! I got his message in Whatsapp as usual. Daily coming.
நீக்குகீதா வேறு ஒரு வேலையில் பிசி. ஒன்றன் பின் ஒன்றாக அடுத்தடுத்து வேலை வருகிறது. அதனால் அவர் வருவது குறைந்துள்ளது. இன்று என் அப்பாவின் திதி. இரண்டரை மணிக்கு தான் முடிந்தது. பிறகு தான் சாப்பாடு முடிந்து, சற்று ஓய்வெடுத்து, இப்போதுதான் வலைப்பக்கம் வருகிறேன். நாளைய தினத்துக்கு பதிவு தயார் செய்ய வேண்டும்!
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஸ்ரீராமாநுஜர் ஏன் உடையவர் என அழைக்கப்பட்டார் என்பதற்கான நிகழ்வை இப்போத் தான் முகநூலில் படிச்சுத் தெரிந்து கொண்டேன். உங்களைத் தான் நினைத்துக் கொண்டேன் நெல்லை. இது போல் ஒரு பங்குனி உத்திரநாளில் சுமார் 900 ஆண்டுகள் முன்னர் நடந்த சேர்த்தி சேவை பற்றியும் உடையவர் என்னும் பட்டம் ராமானுஜருக்குக் கொடுக்கப்பட்டதையும் படிச்சேன்.
பதிலளிநீக்குஇன்றைக்கு கத்யத்ரையம் சேவிக்கணும். இன்னும் ஆரம்பிக்கலை.
நீக்குCongrats Nellai.
நீக்குகேள்வி பதில்கள் நன்று
பதிலளிநீக்குகார்மென்ட் படங்கள் நன்றாக இருக்கின்றன.
K gg அவர்களின் தாய்லாந்து பயணம் வாழ்த்துகள். படங்கள் கண்டோம்.
நன்றி.
நீக்குநல்ல பத்திரிகையாளர்கள் என்றால் என் நினைவுக்கு வருகிறவர்கள் கி.வா.ஜகந்நாதன், இந்தியன் எக்ஸ்பிரஸ் கோயங்கோ, தினமணி கே.என்.சிவராமன், மஞ்சுளா ரமேஷ். மாலன் கூட பிடிக்கும். நான் ஒரு பத்திரிகை நடத்தினால் குமுதம் எஸ்.ஏ.பி.யைத்தான் முன்னோடியாக் கொள்வேன்.
பதிலளிநீக்குநல்ல கருத்து. நன்றி.
நீக்கு