8.4.26

என்னத்த சாப்பிட்டு.. என்று எந்த வயதில் தோன்றும்?

 

கேள்வி பதில்கள் :

பானுமதி வெங்கடேஸ்வரன்: 

பள்ளியில் படிக்கும்பொழுது அவ்வளவு சுவாரஸ்யமாக தோன்றாத சரித்திரம் பற்றி ஓரளவு வயதான பிறகு விரும்பி படிக்கிறோம், கேட்கிறோம். ஆனால் பள்ளிக்கூட காலத்தில் சுவாரஸ்யமாக இருந்த விஞ்ஞானம், கணிதம் சம்பந்தப்பட்ட தகவல்களை பின்னாளில் படிக்க முடியவில்லையே? அது ஏன்?

# வாழ்வாதாரத்துக்கு வேண்டியிருந்தால் நிச்சயம் எதையும் படிப்போம். 

பிற்காலத்திலும் வரலாறு படிக்க ஆர்வம் இருப்பது  நமது பாரம்பரியத்தை அறிந்து கொள்ளும் திசையில் நமது ஊக்கம்.  ( எல்லாரும் அப்படி நினைப்பதில்லை. )

Platonic love என்பது சாத்தியமா?

# ஃப்ராய்டின் கருத்துப்படி அறிவின் தாக்கத்தால் அடக்கி வைக்கப்படும் இனக்கவர்ச்சிதான் Platonic love.  இதன் உண்மைத்தன்மையை அவரவர் ஆத்ம பரிசோதனை செய்து கொண்டுதான் கண்டு பிடிக்கவேண்டும்.

& எனக்குத் தெரிந்து, துவாபர யுகத்திற்குப் பிறகு, ( ராதா & கிருஷ்ணர்  + கோபியர்கள் & கிருஷ்ணர் ) காலத்துக்குப் பிறகு Platonic love எனப்படும் ஆன்மீகக் காதல் எங்கும் காணப்படாதது. 

நீங்கள் வேண்டுமானால் குணா (கமல்) & அபிராமி (கற்பனைப் பாத்திரம் ) platonic love க்கு உதாரணம் என்று நினைக்கலாம். ( மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல அதையும் தாண்டி புனிதமானது!) 

நெல்லைத்தமிழன் : 

நெல்லைத்தமிழன் :

1. இப்போவும் பெரியவங்க அதாவது 40+ தியேட்டர் போய் படம் பாக்கறாங்களா? 

# 1. பார்க்காமலா இருப்பார்கள் ? நான் " பொன்னியின் செல்வன் " பார்த்தேனே !

2. குழந்தைகளுக்கு சின்ன வயசிலேயே மனசுல பதியவைக்க மூன்று முக்கிய அறிவுரைகள் என்னென்ன?  

# முதலாவது பணிவு, பெரியவர்களிடம் மரியாதை.  இரண்டாவது பிறர்க்கின்னா செய்யாமை.  மூன்று கல்வி கற்பதில் கவனம்+ஆர்வம்.

3. என்னத்த சாப்பிட்டு.. என்று எந்த வயதில் தோன்றும்? 

# 90ஆக இருக்கலாம். ஏனென்றால் எனக்கு இன்னும் தோன்றவில்லையே!

4. இப்போவும் ஹோட்டல் போய் சாப்பிடும் ஆசை இருக்கா? என்ன என்ன சாப்பிட ஆசை? 

# ஹோட்டல்களில் காண இயலாத கத்தரிக்காய் பஜ்ஜி.

5. என்னைக் கேட்காமல் மனைவி இதை இதை செய்யக்கூடாது என நீங்கள் நினைத்தவை என்னென்ன?

# என்னைக் கேட்டும் செய்ய இயலாத அந்த விஷயம்தான் - என்னை மட்டம் தட்டி உண்மையை உரைப்பது.

= = = = = = = = =

படமும் பதமும் :

நெல்லைத்தமிழன் :


இராஜஸ்தானி உணவகங்களுக்குச் சென்றிருக்கிறீர்களா? பருப்பு, நெய், இனிப்பு என்று ரொம்பவே ஹெவி உணவாக இருக்கும்.  குஜராத்தி உணவகங்களில் அந்த அளவு நெய் சேர்ப்பதில்லை. பொதுவாக பாலைவனப் பகுதி என்பதால் உடலுக்கு கொழுப்பு தேவை என்ற எண்ணத்தில் அமைந்த உணவை, நாட்டுப் பகுதியில் இருந்துகொண்டு நாம் உண்டால் என்னவாகும்?


என் மனைவி ஒரு தடவை எனக்குச் செய்துகொடுத்த லட்டு, பூந்தி மற்றும் முறுக்கு.  எனக்கு பூந்தி ரொம்பவே பிடிக்கும். ஆனால் சிறிய வயதில் திருமணங்களில் சாப்பிட்ட பூந்திபோல தற்காலங்களில் வருவதில்லை. அது நல்லா பூத்து வரும், ரொம்பவே சாஃப்டா இருக்கும்.  இப்போல்லாம் முந்திரி நெய் போன்றவற்றிர்க்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை பூந்திக்கு கடைகள் கொடுப்பதில்லையோ (முந்திரி நெய் போன்றவை வாசனை அலங்காரப் பொருட்கள்) என்று சம்சயம். 


சமீபத்தில் நான் சென்றிருந்த ஹோட்டல் ஒன்றில் விளக்கை ஒரு குரங்கு கையில் பிடித்துக்கொண்டிருப்பதுபோல அமைத்திருந்தது மிக வித்தியாசமாக இருந்தது. 


இந்தோநேஷியா பாலித் தீவுக்குச் சென்றிருந்தபோது (ஒரு கான்ஃபரன்ஸுக்கு), கடலுக்குள் இறங்கி நடக்கும் வாய்ப்பு (சிறிய பகுதிலதான்) கிடைத்தது. அங்கு இருந்த பிள்ளையார் சிலை.

= = = = = = = = = = 
KGG பக்கம்: 

சென்ற வாரம் நான் வெளியிட்டிருந்த படங்கள் சென்னையில் எடுக்கப்பட்டவை என்பதை சென்ற வியாழன் பதிவில் எழுதியிருந்தேன். 

கலைஞர் நூற்றாண்டுப் பூங்கா - கிளாம்பாக்கம் க நூ பேருந்து நிலையம் அருகே உள்ளது. 

அந்தப் பூங்காவில் எடுக்கப்பட்ட மற்ற படங்கள் இன்று காண்போம். 












பூங்கா விசிட் முடித்து, தங்கும் இடத்திற்கு வந்த பின் எனக்குக் கிடைத்த இலவச , மாதாந்திர காலண்டர் இது. 

= = = = = = = = = = = = = = = =


38 கருத்துகள்:

  1. அனைவருக்கும் வணக்கம். பிளாடானிக் லவ் பற்றிய கேள்விக்கு உங்கள் பதில் சூப்பர்.!
    நெல்லையின் இரண்டாவது கேள்விக்கு சரியான பதிலைத் தந்திருக்கிறீர்கள். ஐந்தாவது கேள்விக்கான பதிலை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  2. வானரூவின் மன்னிக்கவும், குரங்கின் (எஸ்.ரா.வின் கதை ஒன்றை படித்த பாதிப்பு) படம் தத்ரூபம்.
    கிளாம்பாக்கம் படங்களில் சிலவற்றை ஏற்கனவே பகிர்ந்து விட்டீர்கள். அல்லது அவை ட்ரைலர், இவைதான் ஒரிஜினல் படங்களோ?

    பதிலளிநீக்கு
  3. //இப்போவும் பெரியவங்க அதாவது 40+ தியேட்டர் போய் படம் பாக்கறாங்களா? // இதென்ன கேள்வி நெல்லை? நீங்கள் தியேட்டருக்குச் செல்ல மாட்டீர்களா? சில படங்களை தியேட்டரில் பார்த்தால்தான் ரசிக்க முடியும். துரந்தர் 1 ஐ தியேட்டரில் பார்க்க முடியாதது கொஞ்சம் வருத்தம்தான். அதுவும் எனக்கு வெள்ளித்திரை டு வெள்ளித்திரை பார்க்க வேண்டும். படம் முடிந்ததும் எல்லோரும் கிளம்பி விடுவார்கள். டப்பிங்க் ஆர்ட்ஸ்டுகள் யார் என்பதெல்லாம் கூட தெரிந்து கொள்ள இருந்து பெயர்களை படித்து விட்டுதான் வருவேன்.

    பதிலளிநீக்கு
  4. கேள்வி பதில்கள் சிறப்பு..

    ஆகாத உணவுகளை விட்டு விலகியாயிற்று...
    நல்ல உணவுகள் .எனினும்
    நான் சற்று ஒதுங்கியிருக்கின்றேன்...

    பதிலளிநீக்கு
  5. தியேட்டரில் பார்த்த படம் விருமாண்டி...

    வீட்டில் பார்த்தது பொன்னியின் செல்வன் 1,2..

    பதிலளிநீக்கு
  6. முதல் கேள்வி ஏற்கனவே வந்திருக்கிறது.

    பதிலளிநீக்கு
  7. ஜுராசிக் பார்க், அவதார், பாகுபலி, பொ செ போன்ற படங்களைத்தான் தியேட்டரில் பார்க்கணும். மற்ற படங்களை ஓடிடியில் பார்த்தாலே யதேஷ்டம் என்பது என் அபிப்ராயம்.ஓடிடியில், வலிப்பு வந்ததுபோல் ஆடும் பாடல்களை, ரம்பங்களை ஓட்டிவிடலாம். உணர்ச்சிகரமான காட்சியை ரீவைண்ட் பண்ணிப் பார்க்கலாம். பாதியில் நிறுத்திவிட்டு, இலவசமா கொறிக்க ஏதேனும் எடுத்துவரலாம், தொந்தரவு இல்லாமல் பார்க்கலாம், அட்டுப் படமா இருந்தால் காசு செலவில்லாமல் தொலைக்காட்சியை அணைத்துவிட்டு தூக்கத்தில் ஆழ்ந்துவிட முடியும்.

    கௌதமன் சார், இரண்டாம் குத்து, முரட்டுக் குத்து போன்ற படங்களை தியேட்டரில் பார்த்தால் என்னாகியிருக்எஉம்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிலைமை மோசமாகியிருக்கும்! கடவுளுக்கு நன்றி!

      நீக்கு
  8. பண விஷயங்களில், அதிலும் கடன் கொடுப்பது வாங்குவது, பசங்களுக்குக் கொடுப்பது போன்ற விஷயங்களில், வீட்டில் இருவரில் யார் பணத்தைக் கருத்தா பாத்துக்கறாங்களோ, அவங்களைக் கேட்காமல் அடுத்தவர் செய்யக்கூடாது. பெரும்பாலான வீடுகளில் கணவர் அந்தப் பொறுப்பை எடுத்துக்கொள்வதால் அவங்களைக் கேட்காமல் செய்யக்கூடாது என்பது என் எண்ணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல கருத்து. இருவரும் சம்பாதிக்கும் குடும்பங்களில் இது நடைமுறைக்கு ஒத்து வராது!

      நீக்கு
  9. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  10. அனைத்து கேள்விகளும் பதில்களும் அருமை.

    படமும் பதமும் பகிர்வில் நெல்லைத்தமிழன் பகிர்ந்த படங்களும், அவர் சொன்ன விளக்கங்களும் அருமை.

    கெளதமன் சார் பூங்கா பகிர்வு படங்களும் நன்றாக இருக்கிறது.
    கல்லில் வடித்த பென் குயின்கள் படம் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  11. எனக்குச் சின்ன வயசில் இருந்தே சரித்திரமும், மொழிப்பாடங்களுமே விருப்பம். கணக்கோ, விஞ்ஞானமோ பிடிக்கவும் பிடிக்காது. அவ்வளவாக மதிப்பெண்களும் வராது. கணக்கிலும், அறிவியலிலும் அதிக பக்ஷமாக 70% அல்லது 75% வந்தாலே பெரிது. ஆகவே அந்தச் சரித்திர ஆர்வம் இப்போதும் உண்டு.






































    5

    பதிலளிநீக்கு

  12. 2.மீரா கண்ணனிடம் கொண்ட காதல் இப்படியான ப்ளாட்டோனிக் காதல் தானே! ஆனால் இதைப் புரிஞ்சுக்கறது கஷ்டம். திரு சாவி அவர்கள் எழுதிய "விசிறி வாழை" கிட்டத்தட்ட இப்படியான ஒரு காதல் கதை. ரொம்பப் பிடிச்சதும் கூட.

    3. எங்கே! போக வேண்டிய வயசிலேயே போனதில்லை. கல்யாணம் ஆன புதுசிலே அக்கம்பக்கத்தவரின் வற்புறுத்தலால் ஓரிரு படங்கள் போனோம். சென்னையில் அம்பத்தூரில் இருந்து அயனாவரம் போய்ப் படம் பார்க்கும் செலவு ஒரு வாரத்துக்குக் காய்கறி, பழம் வாங்கலாம் என்னும் உண்மையை உணர்ந்த பின்னால் அதிகம் படங்கள் போனதில்லை. சபாவில் உறுப்பினராக இருந்ததால் அவங்க கூட்டிப் போவாங்க. படம், போக்குவரத்து இலவசம். அப்போவே இலவசம் எல்லாம் உண்டு பார்த்தீங்களோ?

    பதிலளிநீக்கு
  13. இப்போதைய குழந்தைகளின் முக்கியத் தேவை நீதி போதனைகள். முக்கியமாய் ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், நல்வழி போன்றவை பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும். இலங்கையில் பாடத்திட்டத்தில் இருப்பது போல் தேவார, பிரபந்தப்பாடல்களுடன் கம்பராமாயணம், சிலப்பதிகாரம், மஹாபாரதம், மணிமேகலை, மனோன்மணீயம் போன்றவை ஐந்தாம் வகுப்பிலிருந்தே சொல்லிக் கொடுக்கப்பட வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //குழந்தைகளின் முக்கியத் தேவை நீதி போதனைகள். // கீசா மேடம்.. எனக்குத் தெரிந்து நீங்க சின்னவங்கதானே... ஏன் வாத்தியார்களை குழந்தைகள் என்று சொல்றீங்க?

      நீக்கு
  14. சாப்பாட்டில் விருப்பம், பிடித்த உணவைச் சாப்பிடுவது எல்லாம் எனக்கு 30 வயதுக்குள் தோன்ற ஆரம்பித்து விட்டது. ஏனெனில் 27/28 வயதில் தொல்லை கொடுத்த மூல நோயால் நான் பட்ட கஷ்டம், ஏதோ சாப்பிட்டால் போதும்னு ஆயிடுத்து.

    ஓட்டல் போய்ச் சாப்பிடறோமோ இல்லையோ சில சமயங்களில் வலுக்கட்டாயமாக ஓட்டல் உணவைச் சாப்பிட்டே ஆக வேண்டி இருக்கிறது. மருத்துவமனைகளில் வெகு நேரம் காத்திருப்பதும் அதில் ஒரு முக்கியக் காரணம்.

    கத்தரிக்காய் பஜ்ஜி நம்மவருக்கு ரொம்பப் பிடிக்கும். என் அம்மாவுக்கும் பிடிக்கும். ஸ்ரீரங்கத்தில் நான் பஜ்ஜி போடும்போதெல்லாம் கத்திரிக்காய் தவறாமல் இடம் பெறும். அதுக்குனு நல்ல பெரிய கத்தரிக்காய் வாங்கி வருவார். அதைச் சுட்டு அரிசி உப்புமாவுக்குக் கொத்சு, அல்லது பைங்கன் பர்த்தாவும் பண்ணிடுவேன். கத்திரிக்காய் பிடித்த காய்களில் முதல் இடம் வகிப்பது.

    பதிலளிநீக்கு
  15. /// முக்கியமாய் ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், நல்வழி போன்றவை பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும்.////

    இதெல்லாம் காலத்துக்குப் பொருந்தாதவை என்று
    முடிவு கட்டி விட்டார்கள்...

    பதிலளிநீக்கு
  16. கடலுக்குள் நடந்த நெல்லைக்கு வாழ்த்துகள். சிலருக்கே வாய்ப்புகள் அமையும். அதைத் திறமையாகப் பயன்படுத்திக்கொள்ளுவது எப்படி என்பதை நெல்லையிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். பிள்ளையார் கடலுக்குள் கிடைச்சதும் ஆச்சரியமே!

    கேஜிஜி பக்கத்தின் படங்கள் எல்லாமே இது வரை பார்த்திராதவை. பென்குயின் சிற்பங்கள் புதுமை. இவை எல்லாம் தமிழகத்தில்/சென்னையில் புதுச் சேர்க்கை போல. நீர் மேலாண்மை எனப் படம் வரைஞ்சிருக்காங்க. எத்தனை பேர் கடைப்பிடிப்பாங்க. அந்தக் காலங்களில் இல்லாத தொழில்நுட்பத் திறன் இப்போது அதிகம்னு பெயர். ஆனால் நீர் மேலாண்மை?

    சிதம்பரம் கோயிலில் நல்ல மழைக்காலத்தில் போய்ப் பார்த்தால் நீர் மேலாண்மை குறித்த புரிதல் ஏற்படும். அருமையாக மழை நீரை வீணாக்காமல் சிவகங்கைக் குளத்திலும், பின்னர் அங்கிருந்து வெளியேயும் செல்ல வழி ஏற்படுத்தி இருப்பார்கள்.

    https://www.bbc.com/tamil/articles/czr8n4123rvo

    பதிலளிநீக்கு
  17. //சாப்பாட்டில் விருப்பம், பிடித்த உணவைச் சாப்பிடுவது எல்லாம் எனக்கு 30 வயதுக்குள் தோன்ற ஆரம்பித்து விட்டது. // இவற்றில் விருப்பமின்மை (இந்த வார்த்தைகள் விடுபட்டிருக்கின்றன.

    சாப்பாட்டில் விருப்பம், பிடித்த உணவைச் சாப்பிடுவது இவற்றில் விருப்பமின்மை எல்லாம் எனக்கு 30 வயதுக்குள் தோன்ற ஆரம்பித்து விட்டது. That sentence should be like this. :(

    பதிலளிநீக்கு
  18. கமலா தான் சுற்றுப்பயணம். மத்தவங்க? ஸ்ரீராம், தி/கீதா, ஜீவி சார், ஜேகேசி சார், ஆகியோர் என்ன ஆனாங்க?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதாக்கா, இன்று மீண்டும் வேலை......இப்ப கொஞ்சம் பார்த்து பதில் கொடுத்துவிட்டுப் போக வேண்டும். ஹியரிங் எய்ட் போட்டுக் கொண்டு வேலை செய்ய வேண்டும் ஏற்கனவே காதில் வேனல் கட்டி சீழ் இப்ப ஓகே கொஞ்சம். எனவே போட்டுக் கொள்ளாமல் இருந்து இன்று கொஞ்சம் போட்டுக் கொண்டு வேலை முடிக்கணும் வேறு வழி இல்லை என்பதால். இப்ப அதைக் கொஞ்சம் எடுத்து வைத்ததால் இங்கு வந்து விசிட் கருத்து கொஞ்சம் போட்டு ஓடிவிடுவேன்!

      கீதா

      நீக்கு
  19. இப்போவும் ஹோட்டல் போய் சாப்பிடும் ஆசை இருக்கா? என்ன என்ன சாப்பிட ஆசை? //

    ஆசை இருந்தாலும், மனம் கட்டுப்பாடு. எனவே தவிர்க்க முடியாமல் போனால்தான் ஹோட்டல் சாப்பாடு. நெல்லை, ஆசை இருந்தாலும் நம்மால் என்னைச் சுற்றி இருப்பவர்களுக்குப் பிரச்சனை வரக் கூடாது என்பதால் கூடியவரை என் பொறுப்பில் இருப்பதை நான் பொறுப்போடு பார்த்துக் கொள்ள வேண்டும் இல்லையா? இல்லைனா எல்லோரது வசவுகளையும் வாங்கிக் கொள்ள வேண்டும். கூடவே மருத்துவச் செலவு???

    கீதா

    பதிலளிநீக்கு
  20. நெல்லை, ராஜஸ்தானி உணவு சூப்பரா இருக்கு பார்க்க...ஹிஹி

    சாப்பிட்டிருக்கிறேன். ஒரிஜினல் சாப்பாடே! அது போல குஜராத்தி சாப்பாடும் ஒரிஜினல் சாப்பாடு...நீங்க இப்ப ஒரே தட்டில் இத்தனையும் காட்டியிருப்பதை அத்தனையும் ஒரே முறை இல்லாமல், அப்பப்ப. ஒரே த்டவையில் என்றால் நீங்க சொல்றாப்ல ஹெவியோ ஹெவி

    ஹோட்டலில் நான் திணறியதுண்டு இப்படிச் சாப்பிட ஆர்டர் செய்துவிட்டு. என்னால் சாப்பிட முடியாது என்பதால்...

    இனிப்புகளை ஒதுக்கிவிட்டு அவங்க உணவு சாப்பிட்டிருக்கிறேன். இரண்டுமே எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  21. முறுக்கு லட்டு படங்கள் சூப்பர், நெல்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
  22. குரங்கு விளைக்கைப் பிடித்துக் கொண்டு வித்தியாசமான படம்!

    கீதா

    பதிலளிநீக்கு
  23. கடலுக்கடியில்...ஆஹா!!!! சுப்பர் வாய்ப்பு. நான் வேற்புறத்திலிருந்து பார்த்திருக்கிறேன் படகில் சென்று கோவளத்தில். எனக்கும் ஆசை உண்டு இப்படிச் சென்று பார்ப்பதில்...ஆனால் வாய்ப்பெல்லாம்?

    கீதா

    பதிலளிநீக்கு
  24. ஓ புதுசா கிளாம்பாக்கம் ல பேருந்து நிலையம் வந்திருக்கிறது என்று சொன்னார்களே அதன் அருகிலா? இப்படியான பூங்கா? அட!

    தங்குமிடம்? அப்படினா இது ரொம்ப தூரமா சென்னையிலிருந்து? புரியலையே. கௌ அண்ணா.

    படங்கள் எல்லாம் நல்லாருக்கு

    கீதா

    பதிலளிநீக்கு
  25. நீர் நிலை மேலாண்மை என்று இனி இப்படிப் பலகையில் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் நாங்க அதுக்கெல்லாம் மெனக்கடமாட்டோம் என்று மறைமுகமாகச் சொல்றாங்களோ?!!!!

    இப்படியான பூங்காக்களில் இப்படிப் பலகைகள் வைத்துச் சொல்வதை செயல்களில் காட்டாமல் இப்படிச் செய்வது எனக்கென்னவோ மனம் ஏற்க மறுக்கிறது. இதுக்குச் செலவு செய்வதை உண்மையிலேயே நிறைய நீர்நிலைகளைத் தூர் வாறி மேம்படுத்தலாம்.

    கீதா

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!