Brazilian Breakfast Bun
ராதா சுரேஷ்
இந்த பிரேசிலிய காலை உணவு பன்கள் ஒரு சிறந்த க்ளுட்டன் இல்லாத டிஃபன்.
தேவையான பொருட்கள்:
320 கிராம் அல்லது 2 கோப்பைக்கு சற்று அதிகமாக மரவள்ளிக் கிழங்கு மாவு (சபுதானா பீத்),
½ கோப்பை காய்கறி/சூரியகாந்தி எண்ணெய்,
1 கோப்பை பால்,
2 தேக்கரண்டி உப்பு,
2 கோப்பைகள் நன்றாக துருவிய பதப்படுத்தப்பட்ட சீஸ்.
செய்முறை:
எண்ணெயையும் பாலையும் மைக்ரோவேவ் அல்லது அடுப்பில் ஒன்றாக சூடாக்கவும். கொதிக்க விட வேண்டாம்.
இதில் மரவள்ளிக் கிழங்கு மாவு மற்றும் உப்பைச் சேர்த்து நன்கு கலக்கவும்.
இந்தக் கலவையை மூடி, அறை வெப்பநிலைக்கு குளிர்விக்க குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.
குளிர்ந்தவுடன், அதை வெளியே எடுத்து சீஸைச் சேர்க்கவும். நன்றாகக் கலக்கவும்.
மாவு நீர்த்ததாக உணர்ந்தால், கலவை சற்று கெட்டியாகும் வரை சிறிது மரவள்ளிக் கிழங்கு மாவைச் சேர்க்கவும். உருண்டையாக உருட்டும்போது, அது பிடித்துக்கொள்ள வேண்டும்.
அடுப்பை 180° C-க்கு முன்கூட்டியே சூடாக்கவும். உங்கள் உள்ளங்கைகளில் எண்ணெய் தடவி, சுமார் 2.5 செ.மீ அல்லது 1 அங்குல அளவில் உருண்டைகளை உருட்டவும்.
நீங்கள் அவற்றை மிகப் பெரியதாக உருட்டினால், அவை உப்பி வராது.
பேக்கிங் தட்டு அல்லது குக்கீ ஷீட்டில் வைக்கவும். சுமார் 20 நிமிடங்கள் அல்லது மேற்பகுதி பொன்னிறமாகும் வரை சுடவும். உடனடியாகப் பரிமாறவும்.
நடுவில் சீஸ் மற்றும் பச்சை மிளகாய் நிரப்பப்பட்டுள்ளது அதனால் இது கொஞ்சம் காரமாக இருக்கிறது: சுமார் 400 கிராம் மரவள்ளிக் கிழங்கு மாவில் 25 முதல் 30 வரை செய்யலாம்
Urban Platter Tapioca Starch Powder தான் எனக்கு சரியாய் வந்தது. மற்றவை முயற்சித்தபோது சரியாக வரவில்லை.
ஓவன் இல்லாமல் இதைச் செய்ய முடியாதா என்று கேட்டால், குக்கரில் மணல் போட்டு செய்யலாம் என்கிறார் ராதா. கேக் செய்வது மாதிரி என்கிறார்.
=========================================================================================
பாஹே பக்கம் :
அவர் எனக்கு - எங்களுக்கு - எழுதிய கடிதம் ஒன்றிலிருந்து... கடிதங்கள் அந்தரங்கமானவைதான். ஆனால் சில சமயம் அவரை அறிய என்று இதை இங்கு தருகிறேன். தேவையான இடங்களில் எடிட் செய்துதான் தருகிறேன்!
ஹேமலதா பாலசுப்ரமணியம் ஃபண்ட் ,சுருக்கமாக 'ஹேமா ஃபண்ட்' என்று ஒன்று தொடங்கி அதைப்பற்றி எழுதிவிட்டு பிறகு தொடர்கிறார்.. நாள் : 20.06.2002, 7:40 PM (ஆம், நேரமும் குறிப்பிடுவார்!)
"இனி என்னை பற்றி.... கடந்த மூன்று நான்கு மாதங்களில் நான் பலவற்றில் மாறி இருக்கிறேன், அல்லது என்னை மாற்றிக் கொண்டிருக்கிறேன். எதேச்சையாக சில, விரும்பிச் சில. எவ்வளவு யோசித்தாலும் 13/2 க்கு முன்பு நான் எப்படி இருந்தேன் என்பது நினைவு வரமாட்டேன் என்கிறது. எல்லாம் மறந்து விட்டது. இது 13/2 பின் 27/ 3 ஏற்பட்ட தீவிர பாதிப்புகளின் தாக்கம. அந்த அளவு 13/2 முதல் 26 /3 மற்றும் 27/ 3 முதல் இன்றளவும் நான் தலைகீழாக புரட்டிப் போடப்பட்டிருக்கிறேன் என்பது புரிகிறது. மாற்றம் என்பது தான் என்ன? டெய்லி ரொட்டின்ஸ் என்று சில 13 /2 வரை இருந்தது அவை இப்போது இல்லை.
ஒன்று - காலை, முதல் வேலையாக நியூமராலஜி நம்பிக்கையில் குறிப்பிட்ட ஸ்பெல்லிங்கில் தினம் இத்தனை எண்ணிக்கை என்று கையெழுத்து. ii) எட்டு (8)நடை போடுவது. iii) ஸ்ரீராமஜெயம் எழுதுவது. iv) குளித்து பூஜை செய்வது. v) தினசரி டயரி எழுதுவது vi) வந்தவர் சந்தித்தவர் பற்றி குறித்துக் கொள்வது.
இதெல்லாம் எதுவுமே இப்போது அறவே இல்லை. வரவு செலவு கணக்கு, இன்கமிங் அவுட்-கோயிங் கடிதக் குறிப்புகள், ஃபோன் குறிப்புகளை தொடர்கிறேன். 2) தினம் காலை மாலை இரவு ஊரில் உள்ள எல்லா கடவுள்களையும் ஒவ்வொருவராக ஒவ்வொன்றாக பிரார்த்திப்பது எல்லாம் அறவே நிறுத்தி விட்டேன். எந்த கடவுள் மீதும் இப்போது நம்பிக்கை இல்லை. இது ஒரு பக்கம். இன்னொரு பக்கம் காலை குளித்தபின் மாலை விளக்கு வைத்த பின், வேறு வழியின்றி தீபமேற்றி, வத்தி கொளுத்துவது முன்னதாக காலை மட்டும். சாமி (?) படங்களின் முன் தண்ணீரால் துடைத்து, கோலம் போட்டு, நைவேத்தியம் செய்து, தீபாராதனை காட்டி, ஒரு பத்து பதினைந்து நிமிஷம் தியானம். ஹேமா பற்றி ஹேமாவுக்காக.
இது இரட்டை வேஷமானாலும் பரவாயில்லை என்று. அப்படி ஒன்று நிஜமானால் அது இருக்கட்டும் என்று செய்து வருகிறேன். காலை மாலை கேசட்டுகள் கடவுள் தோத்திரங்கள் போடுகிறேன். நம்பிக்கை என்பதை விட சந்தேகம், பயம் என்று வேறு வார்த்தைகள் பொருத்தமாக இருக்கும்.
டயட் பழைய மாதிரியான வேலைகளில் மாற்றமில்லை. அளவை திட்டமிட்டே குறைத்து விட்டேன். வேண்டுமென்றே முற்பகல் முழு சாப்பாட்டிலும், இரவு சிற்றுண்டியிலும். எட்டு நடை ஸ்டாப்ட். நல்ல உடைகள் அணிவது நாட்டமில்லை. மாற்றி மாற்றி இரண்டு மூன்று வேட்டிகளே. ஷேவிங், ட்ரிம்மிங் க்கும் நோ. டிவி பார்த்து நான்கு மாதமாகிறது. மியூசிக் கேசட் கேட்பதில்லை.
இவற்றில் ஒரு வாரமாக சிறு மாற்றம். கொஞ்சம் கொஞ்சம் மேகசின் படிக்கிறேன். அந்த நேரம் டைவர்ஷன் கிடைப்பதால். ஆனால் அதிலும் சில தாக்குதல்கள், மனக் கஷ்டங்கள் நேர்கின்றன. எங்காவது, ஏதாவது ஒரு வாக்கியம், அல்லது ஒரு வரி என்னை குறி பார்ப்பது போல வரும்போது மனம் சஞ்சலப்படுகிறது. எழுதுவதில் நாட்டம் செல்கிறது. எழுதும் போதும் டைவர்ஷன் கிடைக்கிறது. கவிதைகளாக எழுதும் போது மனபாரம் குறைவது போல உணர்கிறேன். இம்மாதிரி கடிதங்களாக எழுதும் போது கனம் குறைவதாக தோன்றுகிறது வீக்னஸ் ஆப் மைண்ட்.
அன்றைய மனநிலையில் ஒரு வேகத்தில் ஹேமாஞ்சலி முயற்சி அவசர அவசியமாகப் பட்டது. இவ்வளவு நாள் கழித்து அம்மாதிரி செய்திருக்க வேண்டாமோ என்று தோன்றுகிறது. என் ஹேமாவை எனக்கே தெரியாமல் காட்சி பொருள் ஆக்கி விட்டேனோ என்று தோன்றுகிறது.
முழுக்க முழுக்க அச்சிறு நூல் என் மன அவஸ்தைகளின், என் பாதிப்புகளின் என் மன வலிகளின் பிரதிபலிப்பு மட்டுமே. இதை அத்தனை பேர் மத்தியில் கொண்டு சென்றது எத்தனை பேர் அதன் தீவிர தாக்கத்தை உணர்ந்தார்கள், மதித்தார்கள் என்பதெல்லாம் சந்தேகமாக இருக்கிறது. 90% பேர் புத்தகம் கிடைத்தது என்று ஒரு வரி கடிதம், போன் கூட செய்யவில்லை என்பது என் மனசை மிகவும் பாதித்திருக்கிறது. சிலர் கடிதங்கள் எழுதினார்கள், போன் செய்தார்கள் என்பதும் உண்மைதான் என்றாலும் புத்தகம் அனுப்பப்பட்டவர்களில் 10% கூட அவர்கள் சேர மாட்டார்கள். இதற்கு மேல் என்னை வருத்துவது எத்தனை பேர் புத்தகத்தை முழுக்க படித்தார்கள், எவ்வளவு பேருக்கு புரிந்து கொள்ள முடிந்தது, (நம் குடும்பத்துக்குள்ளேயே இந்த சந்தேகம் எனக்கு இன்னும் உண்டு) யாரிடம் இருந்தும் நான் விமர்சனத்தை எதிர்பார்க்கவும் இல்லை. விரும்பவும் இல்லை என்பது போல அவர்கள் படிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் தவறில்லை தானே...
என்ன இன்னைக்கு உணவுக்கு பிரேசில் போய்ட்டீங்க?
பதிலளிநீக்குவாங்க நெல்லை... எடுத்து வச்ச வேற ரெண்டு மனசுக்கு தோதுப்படலை! அதான்...!
நீக்குஇதைச் செய்து பார்த்துவிட வேண்டியதுதான். நல்லா இருந்தா ஓகே. பிடிக்கலைனா ஸ்ரீராம் ட்ட கொரியர் சார்ஜ் வாங்கி ஸ்ரீராம் க்கு அனுப்பிடலாம்
பதிலளிநீக்குஅனுப்புங்க.. அனுப்புங்க... கணக்குல எழுதிக்குங்க...
நீக்குஉங்கள் கணக்குல ஹேப்பிமேன் முந்திரி அல்வா ஏற்கனவே எழுதியிருக்கேன். விசுவாவசு முடியறதுக்குள்ள அனுப்சிடுங்க அல்லது இன்விடேஷன் லெட்டரோட
நீக்குஅவ்ளோவாட்டி மருத போயும் அத சாப்பிடாம கொள்ளாம வந்தா எப்பிடி?
நீக்கு1960 கலில் ரோலர் பிளவர் மில்ஸ் இந்தியாவில் அறிமுகமானபின் ரவை, மைதா, ஆட்டா என்கிற கோதுமை பண்டங்கள் புதிதாக அறிமுகமாகின. அதில் மைதா (அ)மெரிக்கன் மாவு என்ற பெயரால் மக்களிடையே பிரபலமானது. மைதா என்பது மரவள்ளி கிழங்கு மாவு என்றும் கருதப்பட்டது. FCI தான் இவற்றை சந்தைப்படுத்தியது. ரவை, மைதா வாங்க ரேஷன் கடையில் கூட்டம் அலை மோதியதும் உண்டு. அப்படி பரோட்டாவின் தாத்தா மைதா ஆகியது.
பதிலளிநீக்குJayakumar
Aah.. JKC Sir is back...
நீக்குசூப்பராக வந்திருக்கு. செய்முறையும் நன்றாக இருக்கிறாது.
பதிலளிநீக்குகீதா
ராதாவுக்கு நன்றி. இது நான் சாப்பிட்டதே இல்லை. யாராச்சும் செஞ்சா எனக்கும் அனுப்புங்க ப்ளீஸ்... வாங்க கீதா.
நீக்குநான் செய்தாலும் உங்களுக்கு அனுப்பினா கெட்டுப் போய்தான் வரும்!
நீக்குகீதா
எங்கள் ஊரில் மரவள்ளிக் கிழங்கு மாவு ரொம்பவே சல்லிசாகக் கிடைக்கும். நாரோயில் கேரளத்தைச் சொல்கிறேன்.
பதிலளிநீக்குஎனவே அங்கு மரச்சீனி அப்பளம் ரொம்பப் பிரபலம்.
நம் வீட்டிலும் கிழங்கு, ஜவ்வரிசி, இந்த மாவின் பயன்பாடு இருந்துவந்தது.
ஆனால் இனியவர்களுக்கு இது ஒத்துப் போகாது என்பதால் இவற்றின் பயன்பாடு அபூர்வமாகிவிட்டது.
நான் கிழங்கு சமைக்கும் போது அன்று அது மட்டும் ஒரு வேளை மட்டுமே சாப்பிடுவேன் மற்ற வேளைகளில் சும்மா பேருக்கு சாலர், அல்லதுதயிர்ப்பச்சடி இப்படி ஒப்பேற்றிவிடுவேன். எல்லாம் கலோரிக்காக (எடைக்காக இல்லை) சர்க்கரை அளவு கூடாம இருக்கணும் என்று!!!!
கீதா
நா இதமாதிரி குக்கிங்ஸ்லேருந்து ரொம்ப தூரம்...
நீக்குஇப்படியான பன்கள் கோதுமையில் செய்திருக்கிறேன். சிறுதானிய மாவிலும் கூடச் செய்து பார்த்தேன். பரவால்ல நல்லாவே வந்தது. அடுத்த முறை செய்யும் போது புகைப்படங்கள் எடுத்து இங்கு போட முயற்சி செய்யறேன்.
பதிலளிநீக்குஆனால் மரவள்ளிக் கிழங்கு மாவில் செய்ததில்லை.
கீதா
செய்ங்க... செஞ்சு பாருங்க... பார்த்துட்டு சொல்லுங்க...
நீக்குஇந்தச் செய்முறை பார்த்ததும் ஒரு முறை முயற்சி செய்துவிடலாம்னு தோன்றுகிறது.
பதிலளிநீக்குநான் பன்கள் செய்யும் போது ஈஸ்ட் பயன்படுத்துவேன் இல்லைனா புளிச்ச தயிர். கலவை கொஞ்சம் பொங்கி உப்பி வருவதற்கு. அது மென்மையாக வரும் என்பதால்
ஆனால் செய்முறையில் ஈஸ்ட் பயன்படுத்தலை போலத் தெரிகிறது. விட்டுப் போனதா இல்லை சேர்க்கவில்லையா?
ஸ்ரீராம் கொஞ்சம் கேட்டுச் சொல்ல முடியுமா?
கீதா
செய்ங்க... செஞ்சு பாருங்க... பார்த்துட்டு சொல்லுங்க...
நீக்குகேட்டு சொல்றேன்.
நீக்குஇதுக்கு அவன் தான வேணும்னு இல்லை. "இவன்"இல் கூடப் பண்ணலாம். ஹிஹிஹி, குக்கர் அல்லது சீனாச்சட்டியில் மணல் போட்டு முன்னாடியே சூடு பண்ணிக் கொண்டு எண்ணெய், நெய் தடவிய தட்டில் உருட்டி வைத்து வேக விடணும். இம்முறையில் பல்வேறு விதமான பிஸ்கட்டுகள், பண்ணி இருக்கேன். இதெல்லாம் பண்ணிப் பார்க்கலை.
நீக்குஈஸ்ட் இல்லைனாலும் பரவாயில்லை. பேகிங் பவுடர் மட்டும் இருந்தால் போதும். பெரும்பாலும் டோக்ளா பண்ணும்போதெல்லாம் நான் பேகிங் பவுடரே சேர்க்கிறேன். அதென்னமோ ஈஸ்ட் வாசனை பிடிப்பதில்லை. :(
நீக்குமுருகா சரணம்
பதிலளிநீக்குவாங்க முருகு செல்வாண்ணா,, வணக்கம்.
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்கு:(
நீக்குஎவ்வித சத்தும் இல்லாதது மைதா
பதிலளிநீக்குஎன்கின்றர்...
மைதா மாவு பண்டங்களை
ஒதுக்கி விட்டோம்...
நல்ல செயல்தான்.
நீக்கு½ கோப்பை காய்கறி/சூரியகாந்தி எண்ணெய், //
பதிலளிநீக்குகாய்கறி அலல்து சூரிய காந்தி எண்ணெயா?
புரியலை.
//குளிர்ந்தவுடன், அதை வெளியே எடுத்து சீஸைச் சேர்க்கவும். நன்றாகக் கலக்கவும். //
முதலில் சீசை மாவோடு கலக்கச் சொல்லப்பட்டிருக்கிறது
//நடுவில் சீஸ் மற்றும் பச்சை மிளகாய் நிரப்பப்பட்டுள்ளது //
கடைசில இப்படிச் சொல்லப்பட்டிருக்கு. அப்படினா சீசைக் கலக்கவும் வேண்டும் உள்ளே வைக்கவும் வேண்டுமா?
விளக்கம் ப்ளீஸ்.
கீதா
OMG... கேட்டு சொல்றேன்.
நீக்குஹிஹிஹி ஸ்ரீராம், பின்ன செய்முறைனா நாங்க அக்கு வேறு ஆணி வேறா பிரிச்சிட மாட்டோம் அதுவும் மற்ற சமையல் போல் இல்லை பேக்கிங்! மிகச் சரியாக இருக்க வேண்டுமாக்கும்! இல்லைனா புட்டுக்கும்!
நீக்குகீதா
விளக்கம் எல்லாம் தேவை இல்லை. முதலில் மாவோடு சீஸைச் சேர்த்துப்பிசைந்து வைத்துக் கொண்டு பின்னர் உருண்டைகளின் உள்ளே துருவிய சீஸ், பச்சை மிளகாய்க் கலவையை வைக்கணும். இது தான் என்னோர புரிதல். ஆனால் ராதா முன்னரும் சமையல் குறிப்புக் கொடுத்திருந்தப்போ சிலவற்ற ஊகமாகத் தான் சொல்லி இருந்தார். புரிஞ்சுப்பாங்கனு நினைச்சிருப்பாரோ?
நீக்குசிறுதானிய மாவில் செய்த போது இங்கு படத்தில் உள்ளது போலக் கொஞ்சம் cracks ஒடுதான் வந்தது. காரணம் gluten இல்லாதஹால் ஆனால் சுவை நன்றாக இருந்ததுதான்.....நான் காய் மற்றும் சீஸ் இரண்டையும் உள்ளே வைத்தும் மாவுடன் சீஸ் கொஞ்சம் கலந்தும் செய்தேன்
பதிலளிநீக்குஎண்ணெய் மட்டுமில்லாமல் வெண்ணை சேர்த்துச் செய்தேன். கூடவே புளிச்ச தயிர் ஈஸ்டும் சேர்த்துக் கொண்டேன்.
கீதா
TVO கடவுள்களையும்//
பதிலளிநீக்குவிளக்கம் ப்ளீஸ், ஸ்ரீராம்
கீதா
கீதா... அதற்கு விளக்கம் சொல்ல முடியாது!!!
நீக்குஓ! ஓகே....ஆனால் அர்த்தம் புரிகிறது அடுத்து வரும் வரிகளில்
நீக்குகீதா
விரக்தி யில் இல்லையா? கடிதத்தின் வெளிப்பாடு
பதிலளிநீக்குகீதா
ஆம். அம்மா மறைந்து நான்கைந்து மாதங்களுக்குள்...
நீக்குஆனால் யதார்த்தம் பல வரிகளில், ஸ்ரீராம்.
பதிலளிநீக்குகீதா
எங்காவது, ஏதாவது ஒரு வாக்கியம், அல்லது ஒரு வரி என்னை குறி பார்ப்பது போல வரும்போது மனம் சஞ்சலப்படுகிறது. //
பதிலளிநீக்குஇயல்பு அதுவும் மனச்சோர்வு இருக்கும் போது டைவெர்ஷன் என்று செய்யப் போக சில வேண்டாததைக் கிளறிவிட்டுவிடும். வேலில போற....
கீதா
90% பேர் புத்தகம் கிடைத்தது என்று ஒரு வரி கடிதம், போன் கூட செய்யவில்லை என்பது என் மனசை மிகவும் பாதித்திருக்கிறது. //
பதிலளிநீக்குரொம்ப மனசுக்குக் கஷ்டமானது இந்த வரி.
இதன் பின்னான வெளிப்பாடும் ...
கடைசி வரி யதார்த்தம்
விரக்தியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக யதார்த்தத்துக்கு வருவது தெரிகிறது
கீதா
ஆமாம். 2002 ல் அம்மா மறைந்தார். அப்பா மதுரையை விட்டு கிளம்பவே இல்லை. 2009 ல் சென்னைக்கு ஒரு வழியாய்வரவழைத்தோம். அதைக் கொண்டாடும் வகையில் என் மாமாக்கள் மூவர், ஒன்று விட்ட அண்ணன், என் தங்கை, நான், பாஸ் எல்லோரும் ரயில்வே ஸ்டேஷன் சென்றிருந்தோம். அனைவரும் வீட்டில் கொண்டு வந்து விட்டு ரொம்ப நேரம் பேசிக்கொண்டிருந்த விட்டுச் சென்றார்கள்.
நீக்குlovely and memorable moments!
நீக்குகீதா
பாஹேயின் நினைவலைகள் கண்ணீரில் மிதக்கிறது. என்ன செய்ய முடியும்? :( ரொம்பவே பித்துப் பிடித்தாற்போல் இருந்திருக்கார். அவருக்கு அவர் மனைவியைத் தவிர்த்து வேறு யார் ஆறுதல் சொன்னாலும் புரிஞ்சுட்டு இருந்திருக்க மாட்டார். யாருக்கும் புரியவும் புரியாது? எந்த துக்கம் அதிகம்? மனைவி கணவனை இழப்பதா? கணவன் மனைவியை இழப்பதா என்று கேட்டால், பதில் சொல்லுவது கஷ்டம். ஆனால் பெரும்பாலான ஆண்கள் சரியான கவனிப்பில்லாமல் தவிப்பதையும் பார்க்கிறேன். ஸ்ரீராம் குடும்பம் போல் விதிவிலக்குகள் உண்டு.
பதிலளிநீக்குசில நாட்கள் இரவில் தூக்கிவாரிப் போட்டு விழித்துக் கொண்டு படுக்கையில் தடவிப் பார்க்கிறேன். மாமாவின் செருமல் சப்தம் கேட்டாப்போல் இருக்கும். சில சமயம் பசிக்கிறது என்று சொல்கிறாப்போல் இருக்கும். நேத்திக்கெல்லாம் கடைசி நாளின் கடைசி மணித்துளிகளில் பேசிக் கொண்டது தான் நினைவில்.
பதிலளிநீக்குமரவள்ளிக்கிழங்கு மாவில் பண்ணாமல் இங்கே மருமகள் நல்ல சிவந்த சர்க்கரைவள்ளிக்கிழங்கை அரை வேக்காடாக வேகவிட்டுப் பின்னர் சிறுதானிய மாவு ஏதானும் சேர்த்துப் பண்ணுகிறாள். நான் சாப்பிட்டுப் பார்க்கலை. ஆனால் கு.குவுக்கு இது பிடிக்கிறது. குழந்தைக்குனு பண்ணுவதால் சீஸ் உண்டு பச்சை மிளகாய் இல்லாமல். நேத்திக்கு வேறே ஏதோ மாதிரியில் பண்ணி உ.கி. ஃபிங்கர் சிப்ஸ் மாதிரி உருட்டி க்ரில்லரில் வைத்து எடுத்துக் கொடுத்தாள். நான் ஹாட் டாக், பன், பாவு பாஜிக்கான பாவு, பிட்சா பேஸ் வாங்கி பிட்சா போன்றவையும் ப்ளம் கேக்குவகைகள், கப் கேக் வகைகள் தான் பண்ணி இருக்கேன். க்ரீம் கடையில் விற்கும். அதை வாங்கி அலங்காரம் செய்துட வேண்டியது தான். கலர் வேணும்னால் சேர்த்துக்கலாம்.
பதிலளிநீக்குராதா சுரேஷ், ஸ்ரீராமின் உறவினர் தானே? இதில் சீஸோடு பச்சை மிளகாய் சேர்த்திருப்பதால் காரமாக இருக்கும். குழந்தைகளுக்குப் பச்சை மிளகாய் இல்லாமல் தான் ப்ண்ணிக் கொடுக்கணும்.
பதிலளிநீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குநானும் ஒரு காலத்தில் பன் செய்யும் முறைகள் எல்லாம் எழுதி வைத்தேன், ஆனால் செய்யவில்லை.
பதிலளிநீக்குராதா சுரேஷ் அவர்கள் சொன்ன செய்முறை மற்றும் படம் அருமை.
அப்பாவின் நினைவலைகள் மனதை கனக்க வைக்கிறது.
பதிலளிநீக்குதுணையை பிரிந்து இருப்பது மிகவும் வலியை தரும்.
நினைவுகள் வந்துகொண்டேதான் இருக்கும்.
அவர்கள் எழுதிய புத்தகத்தை பெற்றுக் கொண்டவர்கள் படித்து மன் வலியை புரிந்து கொண்டு ஆறுதல் வார்த்தைகளை எழுதி அனுப்பி இருக்கலாம் வலிக்கு மருந்து தடவியது போல இருக்கும்.
நிறைய பேர் சின்ன வயதிலா இருந்து போனார்கள் இப்படி வருந்து கிறார்களே ! என்கிறார்கள்.
எத்தனை வயதில் நம்மை விட்டு பிரிந்தாலும் இழப்பின் வலி இருக்கும்.
//அன்றைய மனநிலையில் ஒரு வேகத்தில் ஹேமாஞ்சலி முயற்சி அவசர அவசியமாகப் பட்டது. இவ்வளவு நாள் கழித்து அம்மாதிரி செய்திருக்க வேண்டாமோ என்று தோன்றுகிறது. என் ஹேமாவை எனக்கே தெரியாமல் காட்சி பொருள் ஆக்கி விட்டேனோ என்று தோன்றுகிறது//
ஆமாம், அந்த நேரமனம் புலப்பும் , அதை புத்தக வடிவாக்கி விட்டது அவர்களுக்கு ஒரு ஆறுதல் கிடைத்து இருக்கும். நெஞ்சு வெடித்து விடும் வேதனையிலிருந்து விடுபட்டு இருப்பார்கள்.
புத்தகத்தை பெற்று கொண்டவர்கள் எத்தனை பேர் அதை படித்து புரிந்து கொண்டார்கள் என்று சொல்லமுடியாது. பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் அருகில் இருந்தாலே நிறைய பேருக்கு தன் துணையை பற்றி நிறைய விவரங்கள் தெரியாது. தெரிந்து கொள்ள நேரம் இல்லாமல் ஓடி கொண்டு இருந்து இருப்பார்கள்.
துணையின் இழப்பு கடவுள் மேல் உள்ள நம்பிக்கையை நிறுத்தி கொள்ள செய்து இருக்கிறது. ஆனாலும் நிறைந்த அன்புடன் தன் மனைவி செய்து வந்த வழிபாட்டை தனக்கு நம்பிக்கை இல்லையென்றாலும் அன்பு மனைவிக்காக செய்து இருக்கிறார்கள்.
தினம் என் கணவர்தான் பூஜை அறையில் சுவாமி படங்களுக்கு பூக்களை வைப்பார்கள். விழா காலங்களில் சுவாமி படங்களுக்கு பொட்டு வைப்பது , மலர்களை சூடுவது எல்லாம் விருப்பமாய் செய்வார்கள். எனக்கும் பிரசாதங்கள் செய்யும் வேலைகள் இருப்பாதால் அவர்கள் இந்த பணியை செய்வது உதவியாக இருக்கும்.
பதிலளிநீக்குஅவர்கள் இறைவனடி சென்ற பின் சுவாமி படங்களுக்கு பொட்டு வைப்பதை விட்டு விட்டேன். படங்களை சுத்தமாக துடைத்து மலர்களை வைப்பதை மட்டும் செய்தேன், இப்போது அதுவும் கஷ்டமாக இருக்கிறது.
நாள் கிழமைகளில் வைத்தால் போதும் என்று நினைத்தாலும் அவர்கள் தினம் மலர்களை சுவாமி படங்களுக்கு வைத்தார்களே! என்ற எண்ணம் வருகிறது.
பாஹே பக்கம் என் மனதை மிகவும் கவர்ந்தது.
பதிலளிநீக்குஇருந்தாலும் பாஹேயின் உணர்வுகளை மற்றவர்கள் எப்படிப் புரிந்துகொள்வர்? அதாவது அவரது 'ஹேமாஞ்சலி' புத்தகம் மற்றவர்களை, அதாவது மற்ற எல்லோரையும் கவர்ந்திருக்குமா? எனக்குச் சொல்லத் தெரியவில்லை.
ஆனால் அவருடைய தனிமை, மிகவும் கொடியது.
குட்டி பன் பார்க்க நன்றாக இருக்கிறது. செய்து பார்க்க வேண்டும்.
பதிலளிநீக்குலா.ச.ரா. பாணியில் பாஹே பக்கம் மனதில் பாரம் ஏற்றியது. //சாமி (?) படங்களின் முன் தண்ணீரால் துடைத்து, கோலம் போட்டு, நைவேத்தியம் செய்து, தீபாராதனை காட்டி, ஒரு பத்து பதினைந்து நிமிஷம் தியானம். ஹேமா பற்றி ஹேமாவுக்காக.
பதிலளிநீக்குஇது இரட்டை வேஷமானாலும் பரவாயில்லை என்று. அப்படி ஒன்று நிஜமானால் அது இருக்கட்டும் என்று செய்து வருகிறேன். காலை மாலை கேசட்டுகள் கடவுள் தோத்திரங்கள் போடுகிறேன். நம்பிக்கை என்பதை விட சந்தேகம், பயம் என்று வேறு வார்த்தைகள் பொருத்தமாக இருக்கும்.// தொடரவும் பிடிக்காத, விடவும் முடியாத விரக்தியை தெளிவு படுத்தி விட்டார். படித்த உங்களுக்குத்தான் மனசு கஷ்டமாக இருந்திருக்கும். இப்போது எங்களுக்கு.