கம்பியூட்டர் செய்த குறும்பு என்ன என்று தெரிந்துகொள்ள இந்தப் பதிவின் கடைசியில் பார்க்கவும், படிக்கவும்.
நெல்லைத்தமிழன் :
உகாதி பண்டிகை வாழ்த்துகள். அந்தப் பண்டிகைக்குச் செய்யும் சிறப்பு உணவு என்ன என்ன?
# உகாதி விசேஷம் போளி ஆமவடை வேப்பம்பூ வெல்லப் பச்சடி.
பானுமதி வெங்கடேஸ்வரன் :
ஒரு காலத்தில் தமிழகத்திலும் யுகாதிதான் புத்தாண்டாக கொண்டாடப் பட்டதாம். நாயக்கர்கள் ஆண்ட காலமாக இருக்குமோ?
# இருக்கலாம் என்று தான் தோன்றுகிறது.
குயில் கூவுத்தானே செய்யும்? பாரதியார் கத்தும் குயிலோசை சற்றே வந்து காதில் விழ வேண்டும் என்கிறாரே?
# கவிஞர்களுக்கு இப்படியெல்லாம் கவிதை செய்ய உரிமை உண்டு. சொல்லழகுக்காகவோ கவிதை இலக்கணமீறல் தவிர்க்கவோ இது பயன் படும்..
$ மயில் அகவும், காகம் கரையும் என்றெல்லாம் கவிஞா் எழுத வேண்டும் என்பது ....!!
& குயில் கூவும். காலையில் / மாலையில். ஆனால் குயில் குஞ்சுகள் படிக்கவேண்டிய நேரத்தில் கூவி, பாட்டுப் பாடினால், அம்மா குயில் கோபம் வந்து கத்தும்.
ஏஞ்சல் :
1,போலி உண்மையற்ற கோட்பாடு இதை நம்புகிறவர்களை என்ன செய்யலாம் ? எ .கா= குளோபல் வார்மிங் இல்லைன்னு ஒரு அதிகாரவர்க்க கூட்டம் சொல்கிறது.
# சகித்துக் கொள்ள வேண்டியதுதான். வேறேதும் செய்ய நமக்கு அதிகாரம் இல்லையே.
$ உண்மையில்லாதவற்றை நம்புபவரிடமிருந்து விலகலாம்.
உலகம் உருண்டையில்லை என்போருக்கு அவர்கள சுற்றி இருக்கும் 100 அடி தட்டை பிரதேசம் உலகமாகத் தெரியலாம்.
உலகம் உருண்டையில்லை என்போருக்கு அவர்கள சுற்றி இருக்கும் 100 அடி தட்டை பிரதேசம் உலகமாகத் தெரியலாம்.
2, வாழ்க்கை வட்டமா ? சதுரமா ? அல்லது நேர்கோடா ?
# ஒழுங்கற்ற ஒரேவழிப்பாதை..
$ அது நீங்கள் யார் என்பதைப் பொறுத்தது.
& சமீபத்தில் இருகோடுகள் படம் பார்த்தீர்களா!
3, எதெல்லாம் உலக நியதி ?
# வளர்ச்சி, மாற்றம், தளர்ச்சி, முடிவு எல்லாமுந்தான்.
$ பிறருக்குத் தீங்கு செய்யாத எல்லாம் உலக நியதி தான்.
4, உறவுகளை பராமரிப்பதில் அழகா வழிநடத்தி செல்வதில் முக்கியப்பங்கு வகிப்பது எது ? நேரடி உரையாடலா அல்லது கடிதம், தொலைத்தொடர்பு சாதனங்களா ?
# கடிதம்தான் காணாமல் போய் விட்டதே. சாதனங்கள் வழியே தொடர்பில் இருப்பதுதான் சாத்தியமாக இருக்கிறது.
$ தொலைத் தொடர்பு சாதனங்கள்.
& நேரடி உரையாடல்தான் சிறந்தது. வீடியோ கான்ஃபெரன்சிங் செய்யலாம்.
& நேரடி உரையாடல்தான் சிறந்தது. வீடியோ கான்ஃபெரன்சிங் செய்யலாம்.
5, ஸ்கூல் கல்லூரி நாட்களில் ஆசிரியர் கேள்விக்கு உடனே பதில் சொல்ல முந்தி பிறகு அதற்காக பிற மாணவர்களிடம் குட்டு வாங்கிய அனுபவம் உண்டா ?ஹிஹி :) நம்மை போல் ஓரிருவர் இருக்காங்களான்னு தெரிஞ்ஜிக்க ஆசை.
# பள்ளிநாட்களில் இல்லை. பணிக்கு வந்தபின் சிலர் என் சுறுசுறுப்பை ரசிக்காததை பலமாக முன்னிறுத்தினதுண்டு.
$ குட்டு வாங்கியதில்லை; திட்டு...நிறையவே.
& உண்டு, உண்டு.
6, ஒரு வைரஸிடம் ஆறறிவு படித்த மானிடம் அடிபணிந்து பயந்து நிற்பது பற்றி உங்கள் எண்ணம் கருத்து ??
# அடி பணிவதாவது ? காலக் கிரமத்தில் வெற்றி கொள்வது உறுதி. முற்காப்பு எச்சரிக்கை அடிபணிவதல்ல . அஞ்சுவது அஞ்சாமை பேதைமை.
7, இவ்வளவு நாளா தெரியாமப்போச்சே என்று சமீபத்தில் நினைத்த ஒரு விஷயம் என்ன ?
# சில கணினி யுக்திகள்.
இதுதானோ அது?
8, இந்த பாடங்களை இந்த விஷயங்களை பள்ளிகளில் கற்றுக்கொடுக்கவேண்டும் என்று கட்டாயமாக்கினால் உங்கள் சாய்ஸ் எதுவாக இருக்கும் ?
# பேச்சு எழுத்து வன்மை. சட்ட திட்டங்களை மதித்து நடக்கும் மனப் பாங்கு.
& நீதி போதனை, நல்லொழுக்கம்.
9, நீங்கள் பார்த்த சினிமா படித்த கவிதை படித்த புத்தகம் பார்த்த ஓவியம் இப்படி இவற்றில் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய சிலவற்றை கூறவும் ?
# ஜாக் நிக்கல்சன் படங்கள் சில, சாமர்செட் மாம், தி. ஜானகிராமன் ஜே.கிஷ்ணமூர்த்தி புத்தகங்கள், பற்பல ஓவியர்கள் சிற்பிகளின் படைப்புகள் இப்படி ஒரு நீண்ட பட்டியல் இருக்கிறது.
& Dale Carnegie எழுதிய பல புத்தகங்கள்.
10, உங்களுக்கு தெரிந்த அடிக்கடி சந்திக்கும் மிகுந்த புத்திசாலியான படைப்பாற்றல் அறிவு செறிந்த ஒரே ஒரு பெண்மணியின் பெயரை கூறவும் ?
# அப்படி யாரும் இல்லை. ஏனென்றால் நீங்கள் சொல்லும் வகையில் ஒருவர் இருப்பது அசாத்தியம்.
& என்னுடைய மனைவி. (என்னை வம்புல மாட்டிவிடத்தானே இந்தக் கேள்வி?)
# இது அவரவர் சென்டிமென்ட் என்பதைப் பொருத்தது.
& பொருட்கள் எல்லா காலத்திலும் மங்காமல் மறையாமல் அப்படியே இருக்காது. நினைவுகளை மறவாமல் நெஞ்சில் வைத்திருப்பது நல்லது.
12, நீங்கள் வலையுலகில் அல்லது வேலையிடத்தில் வெளியிடத்தில் சந்தித்த இன்ட்ரெஸ்டிங் பெர்சனாலிட்டி யாரேனும் உண்டா ? இதற்கு பிஞ்சு கவிஞர் என்ற பதில் தடை செய்யப்பட்டுள்ளது :)
# பிரபலமில்லாத பலர் உண்டு. நல்லவரும் உண்டு அல்லாதவரும் உண்டு.
& அ ....அத் .. ... அது வந்து, அதாவது, ஏ .... ஏ .... ஏராளமான பேர் இருக்காங்க.
13, உங்கள் வாழ்க்கையில் கிடைத்த சிறந்த அட்வைஸ் மற்றும் மோசமான அட்வைஸ் எது ?
# சிறந்த அட்வைஸ்- பிறர் சொல்லி யாரும் திருந்த மாட்டார்கள்.
மோசமான அட்வைஸ் - உண்மை பேசத் தயங்காதே.
14, நீங்க காஃபி பிரியரா ? அல்லது தேநீர் பிரியரா ?
# தேநீர் குடிப்பவர் (தினசரி ஒரு கோப்பை போதும்). பிரியர் அல்ல.
& முன்பு காஃபி பிரியராக இருந்தேன். அதை நிறுத்தியபின் இப்போ காலையில் கொஞ்சம் Organic Tulsi Ginger green tea(?) with lime and honey.
15, விக்கல் வந்தா தண்ணி குடிப்பிங்களா இல்லை சர்க்கரை சாப்பிடுவீங்களா ?
# இரண்டும்தான்.
& பேய்க் காட்டினா விக்கல் நின்றுவிடும் என்று சொல்வார்கள். அதனால், கண்ணாடியில் என்னை நானே பார்த்து 'பே ' என்று பயமுறுத்தி, விக்கலை நிறுத்திவிடுவேன்.
16,உங்கள் நட்புகள் அனைவருக்கும் பொதுவாய் அமைந்த நற்குணம் எது ?
# நட்பாய் இருப்பது. கேட்டால் கடன் கொடுப்பது.
& என் கருத்துகளை ஏற்றுக்கொள்வார்கள்.
17, ஒரு காணொளி கொரோனா விழிப்புணர்வுக்கு வெளியிட்டுள்ளனர் சமூக தளங்களில் . ஒரு குழந்தை 10 வயதுக்கும் குறைவுதான் இருக்கும் உங்களுக்கு அறிவில்லையா என்றெல்லாம் பேசுகிறது . இது சைல்ட் எக்ஸ்ப்ளோய்டேஷனுக்கு வழி வகுக்காதா ?சிறுவர் சிறுமியரை பயன்படுத்தி இப்படிப்பட்ட காணொளிகள் தேவையா ?
# காண்போர் ஈர்க்கப் படுவதும் அவர்களுக்கு தகவல் போய்ச் சேர வேண்டும் என்பதும் இதற்கான உந்து சக்தி. இது ஒரு யுக்தி - சூழ்ச்சி யல்ல. பயன் தருமா என்பது முற்றிலும் வேறு விஷயம்.
& குழந்தைதானே சொல்லிவிட்டுப் போகட்டும். யார் சொல்கிறார்கள் என்பது முக்கியமல்ல; என்ன சொல்லப்படுகிறது என்பது முக்கியம்.
1. பெண்கள் தங்கத்தின் மீது ஆசைப்படும் இயல்பு இந்த ஜெனெரேஷனில் குறைந்துள்ளதா?
# குறைந்திருப்பதாகவே தோன்றுகிறது.
$ இயல்பு என்று சொல்லிவிட்டு மாற்றம் எப்படி எதிர் பார்க்கிறீர்கள்?
# படிக்காமல் இருந்துகொண்டு வாழ்க்கையை இயல்பாக வாழ் என்று கைகழுவுவது நல்லதில்லை என்பதால்தான்.
$ செல்வத்துள் செல்வம்...
தானே தேடிக்கொள்ள வகை செய்வதற்குத்தான்.
உணவு உடை வீடு இவற்றில் தன்னிறைவு பெற்றோரின் எண்ணம் மாறுபடலாம்..
3. முப்பது ரூபாய்கள் மட்டும் உங்களுக்குக் கொடுத்து, மதிய உணவு உண்டுவிட்டு வாருங்கள் என்றால், உங்கள் ஆப்ஷன்கள் என்ன என்ன? தானே தேடிக்கொள்ள வகை செய்வதற்குத்தான்.
உணவு உடை வீடு இவற்றில் தன்னிறைவு பெற்றோரின் எண்ணம் மாறுபடலாம்..
# இட்லி அல்லது தயிர் சாதம்.
$ பரோட்டா.
& அரைக் கிலோ வெண் புழுங்கல் அரிசி வாங்கி, அதை வறுத்து எடுத்து, மிக்சியில் லேசாக ஒன்றிரண்டாக உடைத்து, எடுத்துக்கொள்வேன். ஒரு பங்கு உடைத்த அரிசிக்கு ஐந்து பங்கு தண்ணீர் சேர்த்து, உப்பு, நாலு பல் பூண்டு சேர்த்து, குக்கரில் நான்கு விசில் வரும் வரை வைத்து எடுத்துக்கொள்வேன். ஆறிய பிறகு, மோர் சேர்த்து, அதில் மணத்தக்காளி வத்தல் மைக்ரோ வேவ் ஓவனில் பொரித்ததை கலந்து, குடித்தோம் என்றால், ஆஹா - பிரமாதமான மதிய உணவு.
4. உயர்ந்த கருத்துக்களை எழுதியும் பேசியும் வருபவர்கள், சொந்த வாழ்க்கையில் அப்படி நடந்துகொள்வதில்லை என்று தெரியும்போது நமக்கு வருவது எரிச்சலா இல்லை கோபமா?
# அதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்.
& வருத்தம்.
================
இங்கே இல்லே போலிருக்கு . நடுவுல தேடிப்பாருங்க!
================
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று...
பதிலளிநீக்குநலம் வாழ்க...
வாழ்க நலம்.
நீக்குநன்றி.
நீக்குஅனைவருக்கும் அன்பின் வணக்கம்...
பதிலளிநீக்குவணக்கம் துரை செல்வராஜூ ஸார்... வாங்க...
நீக்குவணக்கம்.
நீக்குகௌ அண்ணா ஸ்ரீராம் மற்றும் எல்லோருக்கும் இனிய காலை வணக்கம்!
பதிலளிநீக்கு//குயில் கூவும். காலையில் / மாலையில். ஆனால் குயில் குஞ்சுகள் படிக்கவேண்டிய நேரத்தில் கூவி, பாட்டுப் பாடினால், அம்மா குயில் கோபம் வந்து கத்தும். //
ஹா ஹா ஹா ஹா
கீதா
வாங்க கீதா... காலை வணக்கம்...
நீக்குஇரசிப்புக்கு நன்றி.
நீக்குஅன்பு துரை, அன்பு ஸ்ரீராம் மறும் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குபுதன் கேள்விகளும் பதில்களும் அருமை. குறிப்பாக வெண்புழுங்கலரிசி+மணத்தக்காளி
மிகப் பிடித்தது.
மீண்டும் வருகிறேன். இன்னாள் நன்னாளாகட்டும்.
வாங்க வல்லிம்மா... இனிய காலை வணக்கம்.
நீக்குமீண்டும் வருக. நன்றி.
நீக்குஎனக்கு மண்டையில் ஓடிக் கொண்டிருக்கும் ஒன்னு இங்கு கேள்வியாக.
பதிலளிநீக்குஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் போது என்னாகப் போகுதோன்னு மனசுல ஒரு கவலை இருந்துகிட்டே இருக்கு. கொரோனா இன்னும் அடங்காத நிலையில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டால் எல்லா மக்களும் முண்டியடித்து தியேட்டர் கடைகள், மால், ரயில் பேருந்துனு அதே பழைய கூட்டம் சேருமே..அதுவும் முண்டியடித்துதானே நம் பழக்கம்...அப்போ என்னாகும்? அதுவும் அப்பாவி ஜனங்கள் அவர்கள் வியாபரத்தையும், தொழிலையும் பார்க்க வேண்டுமே அவர்களின் நிலை.?
இதைக் கேள்வியாகவும் எடுக்கலாம்.
கீதா
இது இயல்பான சுதந்திரம் கிடைத்த மனது அதீதமாக நடந்துகொள்வது போன்றது.
நீக்குஎக்சாம் முடிந்த மறுநாள் கட்டுப்பாடுகள் அவிழ்ந்துவிடுவதால் சினிமா போவது, ஊர் சுற்றுவது போன்றது.
அரசு மெதுவாகத்தான் கட்டுகளைத் தளர்த்தும் என நினைக்கிறேன்.
முண்டியடித்து முட்டிக் கொள்ளும் எவரும் ஒருநாளும் திருந்த மாட்டார்கள்....
நீக்குநெ த, துரை சார் இருவருமே சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
நீக்குஎங்கள் பதில்கள் அடுத்த வாரப் பதிவில்.
நீக்கு//முண்டியடித்து முட்டிக் கொள்ளும் எவரும் ஒருநாளும் திருந்த மாட்டார்கள்....// இது நம் ஜீனிலேயே இருக்கிறதே துரை சார்.
நீக்குஅனைவருக்கும் வணக்கம். கீதா அவர்களே, அப்படி படார் என்று ஊரடங்கு உத்திரவு விலக்கப் படும் என்று தோன்றவில்லை. பகுதி பகுதியாகத்தான் (in phases) விலக்கப் படும் என்று நினைக்கின்றேன். முதலில் இது மேலும் நீட்டிக்கப் படுமா என்பதுதான் நிதர்ச்சனமான எண்ணம். நீட்டிக்கப் பட வேண்டும் என்பதும் என் கருத்து. ஏழைகள் வருந்தினாலும் நாம் உயிருடன் இருப்பது இப்போது முக்கியம். மிக வெளிப்படையாக பேசுவதற்கு மன்னிக்கவும். ஆனால், அதுதான் உண்மை. முதலில் இக்கொடிய நோயை விரட்டி விட்டே ஊரடங்கை விலக்க வேண்டும் என்பது நியாயமான கருத்து என்றே நினைக்கின்றேன்.
நீக்குஎல்லோரும் நலமாக வாழவேண்டும்.
நீக்குஅதோ அந்தப் பறவை போல வாழவேண்டும்..!
நீக்கு-இன்ஃபெக்ஷன் ஏதுமில்லாமல்.
நாட்டின் ஏழைபாழைகள் உட்பட எல்லோரின் நலம் கருதி, ஏப்ரல் இறுதிவரை நீட்டித்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்றுகிறது. மக்களின் ஒத்துழைப்பு அவசியம். அவர்கள் ஒத்துழைக்க முயன்றாலும், அதைக் கலைத்துக் குட்டிச்சுவராக்க முயற்சிகள் நடப்பதாய்த் தெரிகிறது.
ஆம். உண்மை.
நீக்குநெல்லை அண்ட் ரமா நானும் அப்படித்தான் நினைக்கிறேன் கொஞ்சம் கொஞ்சமாகத்த்டான் தளர்த்துவார்கள் என்று. துரை அண்ணா பானுக்கா சொன்னது போல் அப்படியே தளர்த்தினாலும் முண்டியப்பது என்பது நம் ரத்தத்தில் ஊறிய ஒன்று. சாதாரணமாகவே ஒரு வரிசையில் நிற்பது என்றால் கூட நாம் இடைவெளி விட்டு நிற்பதில்லை. எனவே அப்படியுமே நம்மூரில் மக்கள் தொகையும் அதிகம் என்பதால் எப்படி இருந்தாலும் கையாள்வது கொஞ்சம் கடினம் தான் என்று அரசுப் பணியில் இருக்கும் சிலர் எனக்குத் தெரிந்தவர்கள் சொல்கிறார்கள்.
நீக்குஏகாந்தன் அண்ணா சொல்லியிருப்பதை அப்படியே டிட்டோ செய்கிறேன்.
கீதா
நன்றி.
நீக்குஅனைவருக்கும் காலை வணக்கம்.
பதிலளிநீக்குஇன்றைய புதன் கேள்வி பதிலை ரசித்தேன். படங்கள் இடையில் கோர்க்கணும். மாறுதலுக்கு ஒரு எக்ஸ்ட்ரா பகுதி இருக்கணும்னு நினைக்கறேன்.
வாங்க நெல்லை.. காலை வணக்கம்.
நீக்குயோசிக்கிறோம்.
நீக்குசமீபத்தில் இருகோடுகள் படம் பார்த்தீர்களா! //
பதிலளிநீக்குவாழ்க்கை அதே. ஒன்னு வாட்டிக் கொண்டிருக்கும் போது அடுத்தது வந்து அதைவிடப் பெரிதாக மனதை ஆக்ரமித்துக் கொள்ளும்...முதல் சுரத்து இழந்து போகும். வாழ்க்கைச் சுழல் கோடுகள் சுழற்றி சுழற்றி வந்து கொண்டேதான் இருக்கும் எனக் கொண்டால் வட்டாகிடுமோ?!!!!! ஹிஹிஹி...
கீதா
வாழ்க்கைச் சுழல் ...
நீக்குசுழற்றிக் கொண்டேதான் இருக்கும்...
நேராக ஓடும் ஆற்று நீரிலும்
இப்படியான சுழல்களைக் காணலாம்....
ஆஹா தத்துவ மழைகள் நன்றாக இருக்கின்றன. இரசித்தேன்.
நீக்கு//அரைக் கிலோ புழுங்கல் அரிசி....//
பதிலளிநீக்குபுழுங்கல் தவிர்த்து ஒரு குவளை பச்சரிசி...அதனுடன் சிறிது பருப்பு... மற்றபடி எல்லாம் அதே.. அதே...
மைக்ரோ வேவ் எல்லாம் கிடையாது...
இஞ்சி தொக்கு... இது தான் விரதச் சாப்பாடு.. ஒருவேளை மட்டும்...
அறைக்குள்ளேயே செய்து கொள்வேன்...
இதைத் தான் - நாறுகிறது என்ற் எதிர்க்கட்டில் குஜராத்தி முஸ்லீம் தகராறு செய்து அவமதித்து விட்டான்... பத்தாவது மாடியின் ஜன்னலைத் திறந்து வைத்துக் கொண்டு பிரச்னை செய்கிறான்...
நேற்று முன் தினம் நடந்த சம்பவம்...
நேற்று ஏதும் சமைக்கவில்லை..
ஆனாலும் ஜன்னல் கதவு (இப்போது விடியற் காலை 3:15) திறந்தே தான் இருக்கிற்து...
விஷ ஜந்து தலைமாட்டில் இருக்கிறது...
மேலிடத்தில் முறையிட்டால் அவன் வேறொரு வழியில் வருவான்...
நான் அறைக்குள் விளக்கேற்றி
வைத்து வணங்குகிதேன்.. என்று!..
அவனோடு எனக்கு எவ்வித தொடர்பும் கிடையாது...
கைப்பிடி சோறு எடுக்கும் போதெல்லாம் அவன் சொன்னது தான் நினைவுக்கு வருகிறது..
அடக்கடவுளே! இப்படியும் மனிதர்கள்!
நீக்குதுஷ்டனைக் கண்டால் தூர விலகத்தான் வேண்டும். குவைத்தில்தான் இத்தகைய மனிதர்களைச் சந்தித்திருக்கிறேன்.
நீக்குபொதுவாக அரபிக்கள் இஸ்லாம் புரிதலுள்ளவர்கள். திடீர் முஸ்லீம்கள் (சுல தலைமுறையில் கன்வர்ட் ஆனவங்க) அதிலும் பங்களாதேசிகள், சில பாகிஸ்தானியர்கள் இவ்வாறு நடந்துகொள்வர். மற்ற நாட்டு முஸ்லீம்கள் அதிலும் மேற்கத்தைய முஸ்லீம்கள் அவ்வாறு நடந்துகொள்வதில்லை.
ஆம்.
நீக்குசுவாரஸ்யமாக இருந்தது ஜி கேள்வி பதில்கள்.
பதிலளிநீக்குமிக்க நன்றி. வித்தியாசமான கேள்விகள் கேட்டவர்களுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும்.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பிரார்த்தனைகளுக்கு நன்றி.
நீக்குஅனைவருக்கும் காலை வணக்கம். கேள்வி பதில்களை மேலோட்டமாக பார்த்தேன். ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு வருகிறேன்.
பதிலளிநீக்குநன்றி, மீண்டும் வருக.
நீக்கு//..& அரைக் கிலோ வெண் புழுங்கல் அரிசி வாங்கி, அதை வறுத்து எடுத்து, மிக்சியில் லேசாக ...குடித்தோம் என்றால், ஆஹா - பிரமாதமான மதிய உணவு. //
பதிலளிநீக்குஇன்று பு த ன் கிழமை !
ஹா ஹா ! புதன் என்றால் 'திங்கா'ம இருக்கமுடியுமா!
நீக்குவாரத்தில் ஒரு கிழமையை திங்காத கிழமையாக ஆக்கியிருந்தால், வைரஸ் தன் விளையாட்டைக் காண்பிக்க இயலுமா?
நீக்குஇயலும் என்றே தோன்றுகிறது. பக்கத்து நாட்டுப் பாவி பல்லி, பாம்பு, நாய், பூனை. வௌவால் எனத் திரும்பவும் விரித்துவிட்டானே கடையை ?
கோடைக்கேற்ற குளுமையான, அருமையான உணவு. புழுங்கரிசி கஞ்சி.
நீக்குநன்றி.
நீக்குஎனக்கு இனிப்பு சேர்க்காத கஞ்சி எதுவும் பிடிக்காது. எங்கப்பாவுக்கு புழுங்கரிசி கஞ்சி பிடிக்கும். எனக்கு உடம்பு சரியில்லைனா பாசிப்பருப்பு வெல்லம் போட்ட கஞ்சி (பாயசம்.... போனால் போறதுன்னு முந்திரி வறுத்துப்பொடச் சொல்ல மாட்டேன்)
நீக்குபத்தியத்திலும் பரமானந்தமா!
நீக்குஇயலும் என்றே தோன்றுகிறது. பக்கத்து நாட்டுப் பாவி பல்லி, பாம்பு, நாய், பூனை. வௌவால் எனத் திரும்பவும் விரித்துவிட்டானே கடையை ?//
நீக்குஹா ஹா ஹா ஹா...அதான் அந்த கடை விரித்த ஊரிலிருந்து 23 ஓ 29 ஓ நாடுகளுக்குப் பறந்து பறந்து பரப்பிட்டு அந்த ஊரை மூடினா? அதான் உலகம் முழுசும் பரவிடுச்சே..பரவியதற்கு என்ன காரணம் சொல்லப்ட்டாலும் சரி பரவி மக்களை வாட்டுவதோடு உலகப் பொருளாதாரத்தையும் குலைய வைத்துவிட்டதே.
கீதா
கோடைக்கேற்ற குளுமையான, அருமையான உணவு. புழுங்கரிசி கஞ்சி.//
நீக்குஹைஃபைவ் பானுக்கா!
//அரைக் கிலோ வெண் புழுங்கல் அரிசி வாங்கி, அதை வறுத்து எடுத்து, மிக்சியில் லேசாக ஒன்றிரண்டாக உடைத்து, எடுத்துக்கொள்வேன். ஒரு பங்கு உடைத்த அரிசிக்கு ஐந்து பங்கு தண்ணீர் சேர்த்து, உப்பு, நாலு பல் பூண்டு சேர்த்து, குக்கரில் நான்கு விசில் வரும் வரை வைத்து எடுத்துக்கொள்வேன். ஆறிய பிறகு, மோர் சேர்த்து, அதில் மணத்தக்காளி வத்தல் மைக்ரோ வேவ் ஓவனில் பொரித்ததை கலந்து, குடித்தோம் என்றால், ஆஹா - பிரமாதமான மதிய உணவு. //
கௌ அண்ணா அதே அதே அதே..இங்கும் இப்ப சில நாட்கள் காலைல இது குடிக்கிறோம்...
சளி தொண்டை வலி என்றால் இதிலேயே பூண்டுடன், சுக்கு மிளகு, இஞ்சி கறிவேப்பிலையைப் பொடி செய்து போட்டு வெந்தயம் போட்டு, சின்ன வெங்காயம் 5,6 போட்டு அப்படியே குக்கரில் வைத்து எடுத்து உப்பு சாப்பிட்டால் சளிக்கான கஞ்சி. இதுவும் இடையில் குடித்தோம்.
திருனெல்வேலி பக்கத்தில் இப்படிச் செய்வதில் கொஞ்சம் கருப்பட்டி சேர்த்து சளிக்கான கஞ்சியாகக் குடிப்பார்கள்.
கீதா
தகவல்களுக்கு நன்றி.
நீக்குகணினி குறும்பு தேடினால் இதுதான் கிடைக்கிறது.
பதிலளிநீக்கு404. That’s an error.
இதுதான் புதிதாக கற்றுக் கொண்ட குறும்போ?
404. That’s an error.
இதுதான் புதிதாக கற்றுக் கொண்ட குறும்போ? .
Jayakumar
ஹா ஹா !
நீக்குஇப்போ க்ளிக் பண்ணினால் வருதா பாருங்க!
நீக்குஹா ஹா ஹா 1ம் திகதியை எல்லோருக்கும் கொரொனா மறக்கடித்துவிட்டது போலும்:))
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்குநான் பதிவைப் படிக்கையில் நடுவிலேயே க்ளிக் செய்து என்னனு பார்த்துட்டேன். எரர் எதுவும் வரலை. ஸ்ரீராம், கமலா ஆகியோரின் முந்தைய பதிவுகளில் வந்த கருத்துகள் வருகின்றன.
நீக்குகாலையிலிருந்து நேரம் கிடைக்காமல் கணினியில் உட்கார்ந்தால் தகராறு செய்கிறது! :(
நீக்குக்ளிக்கியதற்கு நன்றி!
நீக்கு//2, வாழ்க்கை வட்டமா ? சதுரமா ? அல்லது நேர்கோடா ?
பதிலளிநீக்கு# ஒழுங்கற்ற ஒரேவழிப்பாதை.. // கரெக்ட்!.
தொலைதூர தனிவழி நடைப்பயணம்
துணைக்கு யார்?
உனக்கு நீயும், எனக்கு நானும்.
இது நான் எப்போதோ கிறுக்கியது.
சூப்பர்.
நீக்குசுவாரஸ்யமான கேள்வி பதில்கள்...
பதிலளிநீக்குநன்றி.
நீக்குசில கணினி யுக்திகள் : (பலருக்கு[ம்] தெரிந்தாலும்)
பதிலளிநீக்கு1) அடுத்த tab-ல் https://photos.google.com/ என்று மட்டும் போட்டு பாருங்கள்... (வலைப்பூவில் பகிர்ந்த படங்கள் அனைத்தும் வருகிறதா...?)
2) நாம் எடுத்த புகைப்படங்கள் அனைத்தையும் சேமித்துக் கொள்ளலாம்... (இதெற்கென்று இதுவரை கட்டணம் இல்லை)
3) நாம் மட்டுமே காண முடியும்... (பகிர்ந்து [share] கொண்டால் அவர்களும் காண முடியும்)
4) https://drive.google.com/drive/my-drive இங்கேயும் சேமிக்கலாம்... (Create Folder வருடம்/மாதம் வாரியாக )
5) ஒரு மின்னஞ்சல் முழுமை பெற்று விட்டால், இன்னொரு மின்னஞ்சல் உருவாக்கி, அதில் சேமித்துக் கொள்ளலாம்... (1 ஜிமெயில் = 15gb)
6) படங்கள் மட்டுமல்ல... காணொளிகளும்... (தரவேற்றம் [upload] செய்யத்தான் பொறுமை வேண்டும்)
7) கைபேசியில் இருந்து நம் வீட்டு TV-யிலும் காணலாம்... (கைபேசியிலும் TV-யிலும் share செய்வதை வீட்டில் இருக்கும் குழந்தைகள் ஒரு நொடியில் செய்து விடுவார்கள்)
இன்னும் பல நன்மைகள் உண்டு...
நன்றி, நன்றி, நன்றி!
நீக்கு//1) அடுத்த tab-ல் https://photos.google.com/ என்று மட்டும் போட்டு பாருங்கள்... (வலைப்பூவில் பகிர்ந்த படங்கள் அனைத்தும் வருகிறதா...?)
நீக்கு2) நாம் எடுத்த புகைப்படங்கள் அனைத்தையும் சேமித்துக் கொள்ளலாம்... (இதெற்கென்று இதுவரை கட்டணம் இல்லை)
3) நாம் மட்டுமே காண முடியும்... (பகிர்ந்து [share] கொண்டால் அவர்களும் காண முடியும்)///
இதிலதான் நானும் தேடிப்படங்கள் எடுப்பேன், ஆனா எப்பவும் ஒரு டவுட் இருந்தது, இது நமக்கு மட்டும்தானோ இல்ல எல்லோருக்கும் காட்டுமோ என:)) இப்போ தெளிவாச்சு நன்றி டிடி.
நன்றி DD
நீக்குகேள்வி பதில்கள் அருமை.
பதிலளிநீக்குஇந்த "//404. அது ஒரு பிழை//" - இதையா தெரிஞ்சுக்க முடியாம போச்சுன்னு வருத்தப்பட்டீங்க?
அதானே!
நீக்குஇப்போ க்ளிக் பண்ணினால் வருதா பாருங்க!
நீக்குஇனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குகேள்வி பதில்கள் ஸ்வாரஸ்யம்.
எரர்! :)
:)
நீக்குஇப்போ க்ளிக் பண்ணினால் வருதா பாருங்க!
நீக்குஹா ஹா ஹா:))
நீக்குஅனைவருக்கும் வணக்கம். கீதா அவர்களே, அப்படி படார் என்று ஊரடங்கு உத்திரவு விலக்கப் படும் என்று தோன்றவில்லை. பகுதி பகுதியாகத்தான் (in phases) விலக்கப் படும் என்று நினைக்கின்றேன். முதலில் இது மேலும் நீட்டிக்கப் படுமா என்பதுதான் நிதர்ச்சனமான எண்ணம். நீட்டிக்கப் பட வேண்டும் என்பதும் என் கருத்து. ஏழைகள் வருந்தினாலும் நாம் உயிருடன் இருப்பது இப்போது முக்கியம். மிக வெளிப்படையாக பேசுவதற்கு மன்னிக்கவும். ஆனால், அதுதான் உண்மை. முதலில் இக்கொடிய நோயை விரட்டி விட்டே ஊரடங்கை விலக்க வேண்டும் என்பது நியாயமான கருத்து என்றே நினைக்கின்றேன்.
பதிலளிநீக்குஇக்கருத்து மிகச் சரியானதே...
நீக்குஆம்.
நீக்குலிங்குல க்ளிக் பண்ணியவர்கள் இப்போது க்ளிக் பண்ணிப்பார்த்து எப்படி வருதுன்னு சொல்லுங்க.
பதிலளிநீக்குகுழப்பம்தான்..! மெயில் ஐடி வருகிறது. மேற்கொண்டு என்ன செய்வதென்று தெரியவில்லை.கம்யூட்டர் குறும்பும் புரியவில்லை. ஒரு வேளை இது 2020 ஏப்ரல் 1 ன் தலை சிறந்த ஐடியாவோ?
நீக்குஅதில் தங்களின் கருத்துரையும் உள்ளது கமலா அம்மா...!
நீக்குஓ.. நன்றி. நன்றி. சகோ. மறுபடி போய் கேள்விக்குறி உள்ள கருத்துக்களை தெரிந்து கொண்டேன்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇந்த வார கேள்வி பதில்கள் எப்போதும் போல் அருமை. அனைத்தும் ரசித்தேன்.
/உலகம் உருண்டையில்லை என்போருக்கு அவர்கள சுற்றி இருக்கும் 100 அடி தட்டை பிரதேசம் உலகமாகத் தெரியலாம்./
இப்போது வீட்டிலிருந்தபடியே எங்கும் செல்லாமல் வீட்டு பால்கனியிலிருந்து சுற்றிப்பார்த்துக் கொண்டு இருக்கும் போது உலகம் நீங்கள் கூறுவது போலத்தான் உள்ளது. எல்லோரும் அரசாணைக்கு அடங்கிதான் இருப்பது போலவும் தெரிகிறது. ஆனால்,வரும் செய்திகள்தான் பயமுறுகின்றன.
10 எண் கேள்விக்கு பதிலை படித்ததும் வாய் விட்டு சிரித்து விட்டேன்.
15ல் விக்கலுக்கு அதிர்ச்சி வைத்தியம் தருவது விக்கலை நிறுத்தி விடும். தெரிந்ததுதான்..ஆனால் இவ்வளவு சிறந்த வைத்தியம் உடனடி பலனைத்தரும் என இன்றுதான் தெரிந்து கொண்டேன். ஹா. ஹா. ஹா. நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இரசிப்புக்கு நன்றி!
நீக்குவிக்கலுக்கு நாங்களும் பயமுறுத்தித் தான் நிறுத்துவோம்.
நீக்கு/ஆனால் இவ்வளவு சிறந்த வைத்தியம் உடனடி பலனைத்தரும் என இன்றுதான் தெரிந்து கொண்டேன்./
நீக்குதன் முகத்தை தானே கண்ணாடியில் பார்த்துக் கொள்வது...
புரிந்துகொண்டேன், நன்றி!
நீக்கு//கம்பியூட்டர் செய்த குறும்பு என்ன என்று தெரிந்துகொள்ள இந்தப் பதிவின் கடைசியில் பார்க்கவும், படிக்கவும். //
பதிலளிநீக்குஅதுசரி குகு என்ன ஆனார்ர்? அதிரா விசாரித்ததாகச் சொல்லிடுங்கோ கெள அண்ணன்:)))
அவர்தான் இந்த ஐடியா கொடுத்தவர்.
நீக்கு//நெல்லைத்தமிழன் :
பதிலளிநீக்குஉகாதி பண்டிகை//
எனக்கொரு உண்மை தெரிஞ்சாகோணும் புத்தாவே:)).. இது உகாதியோ? யுகாதியோ?:))
யுக + ஆதி = யுகாதி.
நீக்குயு என்ற எழுத்தில் தமிழில் ஆரம்பமாவதில்லை என்பதால் உ என்று ஆரம்பிக்கும். (நீங்க ஆங்கில வார்த்தை சூப்பரை யூப்பர் என்று எழுதறீங்க... அப்படி எழுதுவதும் தமிழ் இலக்கணப்படி தவறுதான்)
நீக்குஉடனே யுத்தம் என்ற வார்த்தை இருக்கே என்று சொல்லாதீர்கள். அது தமிழல்ல. போர் என்பதுதான் தமிழ். யுத்தம் - சமஸ்கிருதம்.
இதில் தவறிருந்தால் யாரேனும் சொல்லலாம்.
யுகாதி என்பதுதான் சொல்லும் போது ரசிக்க முடிகிறது என நான் நினைக்கிறேன். சில வார்த்தைகள் பேச்சு வழக்கில் சொல்லும் போது மாறுபட்டு போகின்றன. சில வார்த்தைகளை உச்சரிப்புடன் சொல்லும் போது அதன் அர்த்தம் நிலையாக நின்று அந்த வார்த்தைக்கு மெருகேற்றி தருகின்றன.
நீக்குகருத்துரைகளுக்கு நன்றி நெ த மற்றும் க ஹ .
நீக்கு//
நீக்குநெல்லைத் தமிழன்1 ஏப்ரல், 2020 ’அன்று’ பிற்பகல் 2:52
யு என்ற எழுத்தில் தமிழில் ஆரம்பமாவதில்லை என்பதால் உ என்று ஆரம்பிக்கும். (நீங்க ஆங்கில வார்த்தை சூப்பரை யூப்பர் என்று எழுதறீங்க...///
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) தப்புத்தப்பா எழுதிப்போட்டு பின்பு முழங்காலுக்கும் மொட்டந்தலைக்கும் முடிச்சுப் போடுறார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) என்னை ஆரும் பேய்க்காட்ட முடியாதூஊஊஊஊ:)).. இதை நம்பி நான் ஓடிப்போய்.. “யுவன் சங்கர் ராஜா” வைப்பார்த்து.. “உவன் சங்கர் ராஜா” என்றால், என்னைத் தேம்ஸ்ல தள்ளிட மாட்டார்ர்:))..ஹா ஹா ஹா அதிராவை எப்பூடியாவது தேம்ஸ்ல தள்ளிடோணும் எனும் எண்ணம்தானே கர்ர்:)).. மீ ரொம்ப ஸ்ரெடியாக்கும்:)).. தமிழ் எனச் சொன்னாலும், சிலதை மாற்றிப் பேசக்கூடாதாக்கும்:))
அதானே! யாரு கிட்ட பேய்க் காட்டுறாங்க ! அதிராவா கொக்கா !
நீக்குஹலோ மேடம்..... யுவன் - சமஸ்க்ரிதம். இளைஞன். சங்கர் - சமஸ்க்ருதம். சிவனின் பெயர். தமிழ்ல சங்கரன். ராஜா - சமஸ்கிருதம். அரசன்.
நீக்கு//நெல்லைத் தமிழன்1 ஏப்ரல், 2020 ’அன்று’ பிற்பகல் 8:08
நீக்குஹலோ மேடம்..... யுவன் - சமஸ்க்ரிதம்.//
இவிக ஆரைக் கூப்பிடுகிறாக:)) ஹா ஹா ஹா நமக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:)))
https://media1.tenor.com/images/86a675bd72b52fc4127cde9c6ecbc348/tenor.gif?itemid=6094987
ஏஞ்சல் :
பதிலளிநீக்கு2, வாழ்க்கை வட்டமா ? சதுரமா ? அல்லது நேர்கோடா ?///
ஹையோ ஆண்டவா லாபிங் புத்தாவே.. விடிய எழும்பிவந்து இதை எல்லாம் என்னைப் படிக்க வைக்கிறீங்களே வெள்ளை வைரவா...:))..
வாழ்க்கைதான் ஒரு வட்டம்.. அதில சில கொம்பு எண்டாகிப்போச்சே:)) ஹா ஹா ஹா..
ஹா ஹா ஹா !
நீக்கு///4, உறவுகளை பராமரிப்பதில் அழகா வழிநடத்தி செல்வதில் முக்கியப்பங்கு வகிப்பது எது ?///
பதிலளிநீக்குகொமெண்ட்ஸ் போடுவோரை எல்லாம் அன்பா வரவேற்று, ரீ, வடை குடுத்து அழகாக உபசரிச்சு அனுப்புவது:)) ஹா ஹா ஹா..
ஆஹா ! யாரு கொடுப்பாங்க?
நீக்கு//5, ஸ்கூல் கல்லூரி நாட்களில் ஆசிரியர் கேள்விக்கு உடனே பதில் சொல்ல முந்தி பிறகு அதற்காக பிற மாணவர்களிடம் குட்டு வாங்கிய அனுபவம் உண்டா ?//
பதிலளிநீக்குஆஆஆஆஆஆஆ மீயும் மீயும் கொஞ்சம் சொல்லப்போறேன்ன்.. 7,8 ஆம் வகுப்பில் கொஞ்ச நாட்கள் மட்ஸ் ரியூசன் போனேன், நான் பாருங்கோ குட்டி வயசில இருந்தே மட்ஸ் ல ரொம்பக் கெட்டிக்காரி.. உண்மையாத்தான் நம்போணும் ஜொள்ளிட்டேன்.
அப்போ ஒரு குட்டி மாஸ்டர்தான் பாடம் நடத்தினா, கணக்கை எழுதியவுடன், நான் டக்க்கெனச் செய்துபோட்டு, இருந்தபடியே துள்ளித்துள்ளி கையை தூக்குவேன்.. என்னிடம் விடை கேட்கச்சொல்லி..
ஒருநாள் மாஸ்டர் சொன்னார்.. “எனக்கும் அதிராவிடம் விடை கேட்க ஆசைதான், ஆனா அடுத்தவர்களுக்கும் சான்ஸ் குடுக்கோணுமெல்லோ, அதனால ஏனையோரிடமும் கேட்கிறேன்” என... அந்த வயசில எவ்ளோ ஹப்பியாக இருந்தது தெரியுமோ.. ஹா ஹா ஹா
தெரிஞ்சாப்போல மூஞ்சிய வெச்சுகிட்டு, கையைத் தூக்கி "ஸ் ஸ் ஸ் ... சோ ஈஸி " என்று சொல்லுபவர்கள் சிலர், ஆசிரியர் தன்னிடம் பதில் கேட்கக்கூடாது என்று தந்திரம் செய்பவர்கள். நீங்க எப்புடி?
நீக்குகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அப்பூடி எனில் மாஸ்டர் கண்டுபிடிச்சிடுவார்:))
நீக்குபல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்!
நீக்குஸ்கூல் கல்லூரி நாட்களில் ஆசிரியர் கேள்விக்கு உடனே பதில் சொல்ல முந்தி பிறகு அதற்காக பிற மாணவர்களிடம் குட்டு வாங்கிய அனுபவம் உண்டா ?ஹிஹி :) நம்மை போல் ஓரிருவர் இருக்காங்களான்னு தெரிஞ்ஜிக்க ஆசை.//
நீக்குபளஸ் 1 இந்தக் கூட்டத்துல.ஹிஹிஹி
கீதா
ஹூம், சண்டையே போடுவார்கள், நீ மட்டும் தான் சொல்லணுமானு! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
நீக்குபாருங்க, அறிவாளிகளுக்கு வாழ்க்கையில் எவ்வளவு சோதனைகள்!
நீக்குஸ்ஸ் இத்தன பேரா :) நம்மைப்போல் பலர் :) என்னை தண்டவாளத்தில் தள்ளி விட்ருவேன்னு ஒரு பொண்ணு மிரட்டுச்சி 6 த் ஸ்டாண்டார்டில் .அப்புறம் பல்கலைக்கழகம் படிக்கும்போதும் பலர் மிரட்டிருக்காங்க வாயை திறந்தா ஒதைப்பேன்னு :) இதுக்கு பயந்து பதிலை நோட்டில் எழுத ப்ரொபஸர் பார்த்து கேட்டார் :) நானா காட்டிகொடுக்கலை .எந்த பக்கம் பார்த்தாலும் கண்ணாலேயே எரிப்பாங்க கூட படிக்கிறவங்க :)
நீக்குபாவம் நீங்க. எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கீங்க!
நீக்குயேஸ்ஸ் கெள அண்ணன் அஞ்சு ரெம்ம்ம்ம்ம்பப் பாவம்:)) ஹா ஹா ஹா இப்பூடிச் சொல்லாட்டில் கூடை வராது ஜொள்ளிட்டேன்ன்ன்:))
நீக்கு//7, இவ்வளவு நாளா தெரியாமப்போச்சே என்று சமீபத்தில் நினைத்த ஒரு விஷயம் என்ன ?//
பதிலளிநீக்குஅதுவோ அது அஞ்சு பற்றிய ஒரு ரகசியம்:)) ஹா ஹா ஹா ஹையோ இதைவிடக் கொரொனா பெட்டர் என நினைக்கப்போறா:))
வரட்டும் அவங்க - உங்களை ஒரு வழி பண்ணிடுவாங்க!
நீக்குஇதோ ஐ ஆம் ட்ராவலிங் டு ஸ்கொட்லான்ட் கார் கியர் போட்டாச்சு :) ஸ்பீடா வந்து ஒரு ஹக் :) அதிரா ஐ லவ் yooooo
நீக்கு//Angel1 ஏப்ரல், 2020 ’அன்று’ பிற்பகல் 6:06
நீக்குஇதோ ஐ ஆம் ட்ராவலிங் டு ஸ்கொட்லான்ட் கார் கியர் போட்டாச்சு :) ஸ்பீடா வந்து ஒரு ஹக் :) அதிரா ஐ லவ் yooooo //
ஐயா ஜாமீஈஈஈஈஈஈஈஈ லாபிங் புத்தாவேஏஏஏஏஏஏஏ நான் சைனாவுக்கே வந்திடுறேன்ன்:))..
https://media.giphy.com/media/3ov9k53PdxeLXjnpIs/giphy.gif
//& பொருட்கள் எல்லா காலத்திலும் மங்காமல் மறையாமல் அப்படியே இருக்காது. நினைவுகளை மறவாமல் நெஞ்சில் வைத்திருப்பது நல்லது.//
பதிலளிநீக்குஆவ்வ்வ் இதையேதான் நானும் நினைத்தேன்.
நன்றி.
நீக்குஎனக்கெல்லாம் பிறந்த நாள், கல்யாணத்தின் பின் மண நாள் எனக் கொண்டாடிய வழக்கம் இல்லை. ஆனால் எங்க குழந்தைகள் விபரம் தெரிஞ்சப்புறமா எங்களோட பிறந்த நாள், மண நாளுக்காக வாழ்த்து அட்டை அனுப்புவாங்க. சந்தோஷமாக இருக்கும். அவற்றை எல்லாம் சேகரித்தும், சேமித்தும் வைத்திருக்கேன். முடிஞ்சப்போ எடுத்துப் பார்த்து அந்த வருஷத்து அன்றைய நிகழ்வை நினைவுக்குக் கொண்டு வருவேன்.
நீக்கு//இதையேதான் நானும் நினைத்தேன்.// - என்னவோ... கேஜிஜி சார்தான் 'உணர்ச்சி' இல்லாம சொல்றாருன்னு நினைத்தால் நீங்களும் அப்படி இருக்கீங்களே..... நினைவுகள் மங்கிப்போகும். பொருட்கள் அதை நமக்கு (அந்த நினைவை) மீட்டுக்கொடுக்கும்.
நீக்குநான் அந்தப் பொருட்கள் தரும் நினைவுக்காகவே, போட்டோக்கள், பசங்க உபயோகித்த ஒரு செட் யூனிஃபார்ம் (இது ஆங்கிலச் சொல். யூ ல ஆரம்பிக்குதுன்னு சொல்லாதீங்க) இவைகளைச் சேகரித்து வைத்திருக்கிறேன். அப்படி சேகரித்து வைக்க முடியாத பொருட்களை போட்டோ எடுத்து ப்ரிசர்வ் செய்துகொள்வேன் (அப்பா, ஐ.சி.யூவில் இருந்தபோது அங்கிருந்த பேப்பரில் தன் உடல் நிலையைப் பற்றி எழுதிக் காண்பித்தது, பசங்கள்ட, சின்ன வயசுல ஒரு புதுப் பொருள்-அவங்க பழசைத் தொலைத்ததாலோ இல்லை சரியா வச்சுக்காததாலோ, வாங்கிக்கொடுக்கும்போது-அவங்க கேட்டு, அவங்கள்ட இத்தனை மாதம், வருடம் பத்திரமா வச்சுப்பேன் என்று எழுதச் சொல்லி கமிட்மெண்ட் வாங்குவேன். அவங்களும் பர்த்டே வாழ்த்துகள் எழுதித்தரும்போது அவைகளையும், அந்தப் பேப்பரெல்லாம் என் பிற்கால நினைவுக்காக போட்டோ எடுத்து வைத்துக்கொள்வேன்.)
வெறும் நினைவு மட்டும் நெஞ்சில் இருக்க வாய்ப்பு உண்டா, அந்தப் பொருட்களையோ இல்லை அந்தப் படங்களையோ பார்க்காமல்?
நீங்கள் சொல்வது சரிதான். ஆனால், பொருட்களைப் பார்த்ததும் வருவதும் நினைவுகள்தானே? நினைவுகளுக்கு வயதாகாது, மங்காது. ஆனால் பொருட்கள் மங்கும். எப்போதும் நெஞ்சில் இருப்பது நினைவுகள்தான். பொருட்கள் இல்லாமல் கூட நினைவுகளை சேமிக்க இயலும்.
நீக்கு//நெல்லைத் தமிழன்1 ஏப்ரல், 2020 ’அன்று’ பிற்பகல் 3:00
நீக்கு//இதையேதான் நானும் நினைத்தேன்.// - என்னவோ... கேஜிஜி சார்தான் 'உணர்ச்சி' இல்லாம சொல்றாருன்னு நினைத்தால் நீங்களும் அப்படி இருக்கீங்களே.....//
ஹையோ ஆண்டவா.. வெள்ளை வைரவா.. இந்தக் கொரொனா நேரத்திலயும் கலைச்சுக் கலைச்சுக் களைப்பில்லாமல் அடிக்கிறாரே ஒரு பிஞ்சுப் பிள்ளையை:)).. இருந்தாலும் நாம ஆரூ 1500 மீட்டரில 2 வதா வந்ததைக் காட்டிட மாட்டேன்:)).. ஜமாளிச்சிடலாம்ம்:))..
ஆங்ங்ங்.. பொருட்களைப் பாதுகாப்பதைக் கைவிட்டால்ல் அப்போ எல்லாத்தையும் மறந்திடுவோமே.. ஆனா மனதில போட்டு வச்சால் கடசிவரை இருக்குமெல்லோ:))..
ஆங்ங்ங் கெள அண்ணன் சொல்றதும் கரீட்டே....
அதாவது, கிட்ட இருந்தால்தான் பாசம் இருக்கும், தூரப்போயிட்டால் இருக்காது என்பதைப்போல வருது, பொருளைப்பார்த்து வரும் நினைவுகள்..
பொருளைப் பார்க்கும்போது மகிழ்ச்சி அதிகமாகும் எனச் சொல்லலாம் மற்றும்படி மனதில பொதிச்சு வச்சிருந்தால் அது அழியாதெல்லோ..
சரியான கருத்து.
நீக்குஉங்க அப்பா அம்மாவைப் பற்றி நினைவுகள் உங்கள்ட இருக்கும். அதுபோலவே 'அந்த இஸ்லாமிய அக்கா' பற்றியும். ஆனால் அந்த நினைவைத் தூண்ட ஒரு பொருள் தேவை. டக்குனு பழைய ஆட்டோகிராஃப் புத்தகம் பார்த்து உடனே அந்த ஹாஸ்டலில் இருந்த பெண்ணைப்பற்றிய நினைவுலாம் வரும். ஒரு திருவலகையை உபயோகித்து தேங்காய் திருவும்போது கையில் பட்டுவிட்டால், சின்ன வயசில் ஊரில் தேங்காய் திருவ முயற்சித்தபோது அம்மா பதறியது நினைவுக்கு வரும். ஒரு ஊறுகாய் சாப்பிடும்போது, அப்பாவுக்கு ரொம்பப் பிடிக்குமே என்று அது தொடர்பான அப்பா நினைவுலாம் வரும்.
நீக்குநினைவில் எல்லாம் இருக்கும். ஆனால் ஒரு பொருள்தான் நினைவைத் தூண்டிவிடும்.
இந்த கேஜிஜி சார் எல்லாத்துக்கும் 'சரியான கருத்து' என்று பின்னூட்டம் போடறார். ஹா ஹா ஹா.
கெள அண்ணன், நெ தமிழனின் இந்தக் கொமெண்ட் பார்த்துப் பயந்துபோய் சரண்டராகிட்டீங்களோ கர்ர்:)..
நீக்குமீண்டும்,ஐ ஒப்ஜக்ஸன் யுவர் ஆனர்.. எதிர்தரப்பு வக்கீல், கேள்வியையே திசை மாற்றப் பார்க்கிறார்ர்.. கேள்வி என்னவென்றால், ஒருவரின் நினைவாக அவர் தந்த பொருளைப் பாதுகாப்பதாஅ, இல்லை அதனை மனதில நிலை நிறுத்தி வச்சிருப்பதோ சிறந்தது என்பதே:)))..
எல்லாப் பொருளையும் எப்படிப் பாதுகாக்க முடியும்?.. இப்போ என் போன்ற இலங்கையரை எடுத்துக் கொண்டாலே, நான் சின்ன வயசிலிருந்தே சேகரித்த பொக்கிசம் எல்லாம் போச்சே... 5,6 வயசிலிருந்தே அப்பா டயறி எழுதச் சொல்லித் தந்து, எழுதத் தொடங்கினேன்.. அந்த டயறிகள் எல்லாம் பொக்கிசமாக சேர்த்து வச்சிருந்தேன், அவை எல்லாம் போச்சே... இப்போ நினைச்சுப் பார்ப்பது மனதில சேமித்திருக்கும் நினைவுகள்தானே..
நினைவுகளாக மனதில் இருப்பதனால், அவை நீறு பூத்த நெருப்பாக உள்ளே இருக்கும்... ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் எதையாவது பார்த்ததும், பாடல் கேட்டதும் வெளியே வரும்... இவை எல்லாம் நினைவுகளைச் சுமப்பதனலதானே..
சிலரிடம் ஒரு பொருளைக் காட்டிக் கேழுங்கோ.. இது நினைவிருக்கோ என.. இல்லை என்பினம், பின்பு நாம் தான் சொல்லோணும், சின வயசில புஸ்பா அங்கிள் கடையில டெய்லி வாங்கிச் சாப்பிடுவோஒமே மறந்திட்டியா என:))..
அது அவர்கள் மனதில் அந்த நினைவைக் காவவில்லை என அர்த்தமாகுதெல்லோ:))..
ஹையோ மீ புறப்படுறேன்ன் ரெயிலுக்கு நேரமாச்சு:)) ஹா ஹா ஹா..
ஏஞ்சல்
பதிலளிநீக்கு12, நீங்கள் வலையுலகில் அல்லது வேலையிடத்தில் வெளியிடத்தில் சந்தித்த இன்ட்ரெஸ்டிங் பெர்சனாலிட்டி யாரேனும் உண்டா ? இதற்கு பிஞ்சு கவிஞர் என்ற பதில் தடை செய்யப்பட்டுள்ளது :)///
கேள்வி கேட்குபோதுகூட, எவ்ளோ தெளிவாக் கேக்கிறா பாருங்கோ கர்ர்ர்ர்ர்ர்:))..
//& அ ....அத் .. ... அது வந்து, அதாவது, ஏ .... ஏ .... ///
ஹையோ எல்லோரும் கொஞ்சம் பொறுமையா இருங்கோ.. கெள அண்ணன் ஏதோ ஜொள்ள வாறார்ர்.. கமோன்.. கமோன் கெள அண்ணன்... ஆஆஆஆ தொண்டை வரை வார்த்தை வந்திட்டுதூஊஊஊஉ கமோன் ஜொள்ளிடுங்கோ....:))..
////ஏராளமான பேர் இருக்காங்க. //
ஹையோ கர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஸ்ரீராம் எதிரில வந்திட்டார்ர்:)) ஸ்ரீராமைப் பார்த்துப் பயந்து வார்த்தையை மாத்திட்டாரே:)) சேஎ..சே.... ஹா ஹா ஹா:))
'அ'திரா ..... 'ஏ'ஞ்சல் என்று சொல்ல வந்திருப்பாரோ?
நீக்குஹா ஹா ஹா :) சொல்லிட்டார்ர்ர்:))
நீக்குநெல்லைத் தமிழன்:
பதிலளிநீக்கு1. பெண்கள் தங்கத்தின் மீது ஆசைப்படும் இயல்பு இந்த ஜெனெரேஷனில் குறைந்துள்ளதா? ///
ஐ ஒப்ஜக்ஸன் யுவர் ஆனர்ர்ர்ர்:)).. கேள்வியிலேயே தப்பு உள்ளது:))... எந்தக் காலத்தில் பெண்கள்.. தங்கத்தின் மீது ஆசை வைத்தார்கள்?:)).. தங்கத்தின் மீது ஆசை வைத்திருப்போர் ஆண்கள்தான்:)).. ஆண்களின் ஆசைக்குக் கட்டுப்பட்டே பெண்கள் நகை போடுகின்றனர்:)) மற்றும்படி எங்களுக்கு அதில் ஒன்றும் ஆசை இல்லையாக்கும் கர்ர்ர்:))..
நகை போடுவது என்பது யும்ம்ம்மா இலகுவான விசயமோ?:)).. கழுத்தில 15 பவுண் போட்டு கை முட்ட காப்புப் போட்டு, காது அறுந்துபோகுமளவு தூக்கணம் போட்டு, விரல்ல மோதிரமும் போட்டுக் கொண்டு உங்களால ஒரு மணித்தியாலம் ... வேலை எல்லாம் செய்ய வேண்டாம்ம்:)) ச்ச்ச்சும்மா இருக்க முடியுமோ?:)) .. ஆனா இவற்றைப் போட்டுக் கொண்டுதான் பெண்கள் கொண்டாட்டங்களுக்கு வரோணும், வீட்டிலயும் போட்டிருக்கோணும் என்பதெல்லாம் எதுக்காக தெரியுமோ?:)..
அப்போதான் அந்தக் கணவரை உலகம் மதிக்கும், கணவர் நிறைய வாங்கிக் கொடுத்திருக்கிறார் என உலகம் போற்றும்:)) இப்படியான கொள்கையாலதானே...? ஆராவது சொல்லுவீங்களோ மனைவியிடம்.. நகை எல்லாம் எதுக்கு யும்மா வாங்கோ வெடிங்குக்கு என கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))....ஹா ஹ ஹா
இதைவிடக் கொடுமை, நகை போடவில்லை எனில். அடி உதை.. வீட்டுக்குப் போய் வாங்கி வா என அனுப்புகிறார்கள்.. அப்போ இதுக்குப் பயந்துதான் பெண்ணுக்கு நகை போட்டு அனுப்புகின்றனர்.....[லக்ஸ்மி மேடத்தின் புரோகிராம் பார்த்துப் பொது அறிவை வளர்க்க நினைச்சாலும்:), இங்கின அடிக்க வருகினம்:)) ஹா ஹா ஹா]
இப்பூடி பண்ணுவதெல்லாத்தையும் ஆண்களே பண்ணிப்போட்டுப் பின்னர் பெண்களுக்கு நகையில ஆசையாம்ம்ம்ம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. ஆண்களை.. அதாவது கணவரை.. அப்பாவைக் கெளரவப்படுத்தத்தான் நாங்கள் நகை போடுறோமே தவிர எங்களுக்கொண்டும் ஆசை இல்லையாக்கும்:)) ஹா ஹா ஹா..
உஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஸாப்ப்பாஆஆஆ நில்லுங்கோ மீ ஒரு நெஸ்டமோல்ட் ரீ குடிச்சிட்டு வாறேன்ன்:)).. சே..சே.. கீசாக்காவும் இப்போ நல்ல நிலைமையில் இல்லை.. இல்லை எனில் இதனை கொண்டினியூ பண்ணுவா:)) ஹா ஹா ஹா மீ எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்:)) என்னை ஆரும் தேட வேண்டாம்ம்ம்ம்:))
நல்ல ஆர்குமெண்ட் - எதிர்கட்சி வக்கீல் என்ன சொல்கிறார் பார்ப்போம்.
நீக்குஹா ஹா ஹா :)) அவர் இண்டைக்கு லீவாம்ம்:))
நீக்குஇதைவிடக் கொடுமை, நகை போடவில்லை எனில். அடி உதை.. வீட்டுக்குப் போய் வாங்கி வா என அனுப்புகிறார்கள்.. //
நீக்குஹலோ பூஸார் அதைச் சொல்லுவதும் ஒரு பெண் தானே!!!!
சோசியஸ் ஸ்டேட்டஸ், அடுத்த வீட்டவர் என்ன நகை போட்டிருக்கார் என்று வாங்குதல் என்றாலும் இதில் எனக்குச் சில சமயம் தோன்றுவது சோசியல் ஸ்டேட்டஸ் ஹையோ நாம் போடலைனா பிறர் என்ன எண்ணுவாங்களோன்னு நினைப்பது...
கீதா
இல்ல கீதா, அந்தக் கணவன் நினைச்சால் தாயை அடக்கிட முடியாதோ?... அம்மாவைச் சாட்டிக்கொண்டு கணவன் தான் பின்னணிப்பாடகர் பல வறிய குடும்பங்களில்....
நீக்குஎன்னிடம் இவற்றுக்கெல்லாம் பஞ்சமே இல்லை. ஆனால் என் வரையில் நான் போட்டுக்கொண்டதே இல்லை. கல்யாணம் ஆன புதுசில் எல்லாம் மாமியாரிடம் கொடுக்கச் சொல்லுவார் நம்ம ரங்க்ஸ். அவங்க போட்டுக்குவாங்க. அதன் பின்னர் வீடு கட்டுகையில் சில நகைகளை விற்றோம். அதன் பின்னர் எந்த நகையும் போட்டுக்கொள்வதில்லை, புன்னகை தவிர்த்து. புடைவைகளுமே இப்போதெல்லாம் உண்மையான கைத்தறிப் பட்டு மட்டுமே கட்டுவேன். இல்லைனா பருத்திச் சேலைகள் தான் கல்யாணங்களுக்கும்.
நீக்குஎன்னிடம் இவற்றுக்கெல்லாம் பஞ்சமே இல்லை. ஆனால் என் வரையில் நான் போட்டுக்கொண்டதே இல்லை. கல்யாணம் ஆன புதுசில் எல்லாம் மாமியாரிடம் கொடுக்கச் சொல்லுவார் நம்ம ரங்க்ஸ். அவங்க போட்டுக்குவாங்க. அதன் பின்னர் வீடு கட்டுகையில் சில நகைகளை விற்றோம். அதன் பின்னர் எந்த நகையும் போட்டுக்கொள்வதில்லை, புன்னகை தவிர்த்து. புடைவைகளுமே இப்போதெல்லாம் உண்மையான கைத்தறிப் பட்டு மட்டுமே கட்டுவேன். இல்லைனா பருத்திச் சேலைகள் தான் கல்யாணங்களுக்கும்.
நீக்குஎன்னிடம் இவற்றுக்கெல்லாம் பஞ்சமே இல்லை. ஆனால் என் வரையில் நான் போட்டுக்கொண்டதே இல்லை. கல்யாணம் ஆன புதுசில் எல்லாம் மாமியாரிடம் கொடுக்கச் சொல்லுவார் நம்ம ரங்க்ஸ். அவங்க போட்டுக்குவாங்க. அதன் பின்னர் வீடு கட்டுகையில் சில நகைகளை விற்றோம். அதன் பின்னர் எந்த நகையும் போட்டுக்கொள்வதில்லை, புன்னகை தவிர்த்து. புடைவைகளுமே இப்போதெல்லாம் உண்மையான கைத்தறிப் பட்டு மட்டுமே கட்டுவேன். இல்லைனா பருத்திச் சேலைகள் தான் கல்யாணங்களுக்கும்.
நீக்கு//என்னிடம் இவற்றுக்கெல்லாம் பஞ்சமே இல்லை.// - கீசா மேடம்... இதில் எங்களுக்கு சந்தேகமே இல்லை. அதுக்காக மூணு தடவை ஒரே கமெண்டைப் போடணுமா?
நீக்கு@அதிரா - நீங்க எழுதினதில் உண்மை இருக்கு. 'நகை' என்பதே 'சொத்து' என்பதாகத்தான் பொதுவா குடும்பத்தில் பாவிக்கிறாங்க. எந்த விழாக்களுக்கும் மனைவி நன்றாக நகையுடன் பளிச் என்று வரணும் என்று கணவன், தன் ப்ரெஸ்டிஜுக்காகவும் மனைவியை நல்லா வச்சிருக்கோம் என்று பிறர் தெரிஞ்சுக்கணும் என்பதற்காகவும் வரச் சொல்வது உண்மைதான். நானுமே (ஆண்களுமே) ஒரு சில மோதிரங்களை அணிவது 'பந்தா'விற்கு என்பதும் உண்மைதான்.
நீக்குஆனால் நான் எனக்கு அடுத்த ஜெனெரேஷனில், பெரும்பாலும் தங்க நகைக்கு ஆசைப்படாதவர்களைத்தான் பார்க்கிறேன். அதுக்கு ஒருவேளை, சேஃப்டி என்பதும் அவங்க மனசுல தோன்றி, அதையும் ஒரு காரணமாக ஆக்கியிருக்கலாம்.
பொதுவா பெண்கள், நகைக்கடை, துணிக்கடை, செருப்பு கடை, காதணி கடை போன்றவற்றிர்க்குள் உள்ளே நுழைந்தால், அனேகமா கணவன் ஒரு படத்திற்குப் போய் வந்தாலும், அவங்களுக்கு கடையை விட்டு வெளியே வர மனம் வராது என்பது என் அபிப்ராயம் (வாங்கறாங்களோ இல்லையோ அந்தக் கடைகளில் ரொரொரொரொம்ம்ம்ம்ம்பவே நேரம் செலவழிப்பாங்க)
//நான் எனக்கு அடுத்த ஜெனெரேஷனில், பெரும்பாலும் தங்க நகைக்கு ஆசைப்படாதவர்களைத்தான் பார்க்கிறேன். //
நீக்குஉண்மைதானே உங்களோட அடுத்த ஜெனரேஷன் எனக்கு சுத்தமா ஆசையையேயில்லை கோல்ட் மேல் :))
@ஏஞ்சலின் - உங்க ஐடியை உபயோகப்படுத்தி உங்கள் பெண் இன்று பின்னூட்டம் இட்டிருக்கிறார். உங்க ஐ.டியை அவங்கள்ட கொடுக்காதீங்க. பெரியவங்க நாம் இரண்டு பேரும் பேசிக்கொண்டிருக்கும்போது உங்கள் பெண் ஏன் கருத்திடுகிறார்? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் (ஹா ஹா ஹா)
நீக்குசுவையான விவாதங்கள். இரசித்தேன்.
நீக்குஆஅ எங்கே என் கமெண்ட் ..//என் பொண்ணுக்கு தமிழ் எழுத படிக்க தெரியாதே ஹே ஹே ஹீஹீ
நீக்கு//நெல்லைத் தமிழன்1 ஏப்ரல், 2020 ’அன்று’ பிற்பகல் 3:03
நீக்கு/ - கீசா மேடம்... இதில் எங்களுக்கு சந்தேகமே இல்லை. அதுக்காக மூணு தடவை ஒரே கமெண்டைப் போடணுமா?//
ஹா ஹா ஹா கீசாக்கா வந்து பெண்களுக்காகப் போராடுவா எனப் பார்த்தால், அவ சுயபுராணம் பாடிட்டுப் போயிட்டாவே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. கீசாக்கா எப்பத்தான் பெண்களுக்கு சப்போர்ட் பண்ணியிருக்கிறா இதுக்குப் பண்ணுவதற்கு:)).. ஹையோ நான் கட்டிலுக்குக் கீழே இப்போ:))
அது நெல்லைத்தமிழன், பெண்களுக்கு புகட்டியாச்சு அதனால அதற்கு அடிமையாகிட்டோம்ம்... இப்போ ரீ எனில் சீனி தான் போடோணும் எனப் பழகிவிட்டோமெல்லோ, ஒருவேளை சீனிக்குப் பதில் உப்புப் போட்டுப் பழகியிருந்தால் அதுவே இப்ப பழக்கமாகி இருக்கும்.. அப்படித்தான் பெண்களும் அலங்கரிப்பும் என்பது வந்துவிட்டது.... அது நம் ஜீன்ஸ் இல் ஊறிவிட்டது... நான் வாங்காவிட்டாலும், மணித்தியாலக் கணக்காக சுத்தி ரசிப்பேன்:)))..
நீக்குநீங்கள் சொன்னதைப்போல முன்பு, ஏன் இப்பகூட கிராமங்களில், சொத்தாக இருக்கட்டுமே என நகை கொடுக்கிறார்கள், ஆனா இப்போதைய காலத்தில் நகையை வச்சுப் பயப்பிட்டுப் பாதுகாப்பதைவிட பணமாக இருந்தால் சேஃப் எனும் நிலைமையாகிவிட்டது.
எனக்கெல்லாம் திருமணத்தில் போட்ட நகைகள், அதன் பின்னர் 2,3 தடவைகள் நெருங்கிய திருமணங்களுக்கு மட்டும் போட்டேன், மற்றும்படி அப்படியே இருக்குது கண்காட்சிப் பொருள்போல... இப்போ நெருக்கமில்லாத உறவு நிகழ்வுகளுக்கு அதிக நகை போடுவதில்லை,..
இன்னொன்று பவுண் போலவே 100 வீதமும் அதேமாதிரி டுப்ளிகேட் நகைகள் மலிவு விலையில் கிடைக்குது, அதனால நாம் என்ன போட்டும் என்ன புரியப்போகுது.. இல்லை எனில் சொல்லிக் காட்டிக் கொண்டிருக்கோணும்.. இது டுப்பிளிகேட் இல்லை 24 கரட் ஆக்கும் என ஹா ஹா ஹா..
தங்கத்தில் இப்போ நாட்டம் குறைந்துவிட்டது பெண்களுக்கு...
//
நீக்குAngel1 ஏப்ரல், 2020 ’அன்று’ பிற்பகல் 6:09
ஆஅ எங்கே என் கமெண்ட் ..//என் பொண்ணுக்கு தமிழ் எழுத படிக்க தெரியாதே ஹே ஹே ஹீஹீ//
ஆங்ங்ன் அஞ்சு கத்தி காட்டி மிரட்டி எழுத வச்சிருப்பா ஹா ஹா ஹா..
உண்மை இப்போதைய பெண்பிள்ளைகளுக்கு பவுண் விருப்பமில்லை... ஒரு துளி தங்கமாவது உடம்பில இருந்தால் தான் நல்லது, ஒரு தோட்டையாவது எடுத்துப் போட்டிருங்கோ என அம்மா பேசிக்கொண்டிருப்பா.. அக்கா அண்ணாவின் மகள்களுக்கு...
//
நீக்குகௌதமன் 1 ஏப்ரல், 2020 ’அன்று’ பிற்பகல் 5:43
சுவையான விவாதங்கள். இரசித்தேன்.//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) விவாதம் ஆரம்பிக்க முன்னமே முடிவுரையை வழங்கிப்போட்டார் கெள அண்ணன்:)).. நித்திரை வந்துவிட்டதுபோலும் ஹா ஹா ஹா...
இதையும் ரசித்தேன்.
நீக்கு///4. உயர்ந்த கருத்துக்களை எழுதியும் பேசியும் வருபவர்கள், சொந்த வாழ்க்கையில் அப்படி நடந்துகொள்வதில்லை என்று தெரியும்போது நமக்கு வருவது எரிச்சலா இல்லை கோபமா?///
பதிலளிநீக்குஇரண்டுமேதான்..
“ஊருக்கு உபதேசம் உனக்கல்லடி மகளே” நிலைமைதான் அது. இதனாலதான் நான் வைத்திருக்கும் கொள்கை “நம்ப நட, நம்பி நடவாதே”.
//================
இங்கே இல்லே போலிருக்கு . நடுவுல தேடிப்பாருங்க!
================///
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))
ஹப்பி ஏப்ரல் ஃபூல்ல்ல்ல்:))
நீக்குஹா ஹா ! அங்கேதான் நிக்கறீங்க!
நீக்குசே சே நான் இன்னும் கொஞ்சம் வெயிட் பண்ணியிருக்கலாமோ?:)).. இப்போ அஞ்சுப்பிள்ளை வந்து, இதை முதலில் படிச்சுப்போட்டு :) தனக்கும் தெரியும் என அடிச்சு விடுவா கர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா:))
நீக்குஓஹோ. இல்லை அவங்க கருத்துரைகளை மேலிருந்து கீழாகத்தான் படிப்பாங்க என்று நினைக்கிறேன்.
நீக்குஅதிரா இதுதான் நூறு.
நீக்கு///
நீக்குகௌதமன் 1 ஏப்ரல், 2020 ’அன்று’ பிற்பகல் 2:11
ஓஹோ. இல்லை அவங்க கருத்துரைகளை மேலிருந்து கீழாகத்தான் படிப்பாங்க என்று நினைக்கிறேன்.//
ஹா ஹா ஹா உங்களுக்குத் தெரியாது கெள அண்ணன்:)... அவ அதிராவைப்போல இல்லையாக்கும்:)... மொத்தமாப் படிச்சுப்போட்டுத்தான் கொமெண்ட்டே போடத் தொடங்குவா ஹா ஹா ஹா:)
நீக்குகௌதமன் 1 ஏப்ரல், 2020 ’அன்று’ பிற்பகல் 2:17
அதிரா இதுதான் நூறு.////
ஓஓஓஒ நோஓஓஒ இது ஏப்ரல் பூல் இல்லையே?:) ஹா ஹா ஹா நான் 3 பெரிசூஊஊஊஉ 103:)
கடைசில போட்டிருந்ததை நானும் கண்டுபிடிச்சுட்டேனாக்கும்!!!!! அதென்னா நடுவில கொஞ்சம் பக்கத்தைக் காணோம் என்பது போல ஏதோ செய்தி சொல்ல ஆங்கிட்டுப் போய் க்ளிக்கிப் பார்த்துவிட்டேனே!!!! ஹா ஹா
நீக்குகீதா
7, இவ்வளவு நாளா தெரியாமப்போச்சே என்று சமீபத்தில் நினைத்த ஒரு விஷயம் என்ன ?
பதிலளிநீக்கு# சில கணினி யுக்திகள்.
இதுதானோ அது? //
நடுவிலே தேடிப் பாருங்க ஹா ஹா ஹா ஹா
ஏஎஃப்!!!! வாழ்த்துகள் !!!
கீதா
ஹா ஹா
நீக்குநான் ஏமாறல்லியே :) இன்னிக்கு கமெண்ட்ஸை கீழிருந்துபதிவை மேலிருந்தும் படிச்சி தெரிஞ்சுகிட்டேன் :)))))))எனது கேள்விகளுக்கு பதிலளித்த நன்றீஸ் :) வருவேன் மீண்டும் வித் மை shopping trolley :)))
பதிலளிநீக்குஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறோம்.
நீக்கு//4. உயர்ந்த கருத்துக்களை எழுதியும் பேசியும் வருபவர்கள், சொந்த வாழ்க்கையில் அப்படி நடந்துகொள்வதில்லை என்று தெரியும்போது நமக்கு வருவது எரிச்சலா இல்லை கோபமா?///
பதிலளிநீக்குஏமாற்றம். அதோடு பெரியோர் எல்லாம் பெரியோர் அல்ல, சிறியோர் எல்லாம் சிறியோர் அல்ல என்னும் ஞானமும் வரும்,
உண்மைதான்.
நீக்குகம்ப்யூட்டரின் குறும்பு -----குசும்பு ? தெரியவில்லை
பதிலளிநீக்குஅங்கே கிளிக்குக!
நீக்கு//கௌதமன் 1 ஏப்ரல், 2020 ’அன்று’ பிற்பகல் 5:25
நீக்குஅங்கே கிளிக்குக!//
ஹா ஹா ஹா கர்ர்ர்:)) பகல் 12 மணியுடன் ஃபூல் பண்ணுவதை நிறுத்திட வேண்டும் தெரியுமோ?:)).. அதுக்கு மேல செல்லாதாம்:))
காலை ஐந்தரையிலிருந்து எவ்வளவு சந்தர்ப்பங்கள் கொடுத்தேன். அதுலே சிக்கவில்லை என்றால் நான் என்ன செய்வது.
நீக்குகேள்விகளும் பதில்களும் அருமை.
பதிலளிநீக்குபின்னூட்ட கருத்துக்களும் அருமை.
கம்பியூட்டர் செய்த குறும்பு என்ன என்று தெரிந்துகொண்டேன்.
இதுதானோ அது?
அதேதான்.
ஹா ஹா வாழ்க!
நீக்குஅனைத்தையும் படித்துப் பார்த்து ரசித்தேன்.
நீக்குஅனைத்து நட்புகளுக்கும் இனிய மாலைக்கான வாழ்த்துகள்.
நாம் எதிர்பார்க்கும்படி பெரியோர்களோ, இல்லை புத்திமதி சொல்பவர்களோ
நடப்பது இல்லை. எதிர்பார்ப்பு என்பதே ஏமாற்றத்தைக் கொடுக்கும்.
வந்தியா சரி வரலியா இன்னும் சந்தோஷம் என்பதே
வாழ்வு.
அதேதான் நம்மிடம் எதிர்பார்த்தவர்களுக்கும். அவர்களாக
ஒரு பிம்பத்தை மனதில் முடித்துவைத்துக் கொண்டு
நம்மை அந்தக் கட்டமைப்புக்குள் நடக்கச் சொன்னால்
அது முடியாது.
சுதந்திரத்தை சுவாசிக்க விரும்பும் யாருமே
அப்படி இஷ்டப்பட மாட்டார்கள்.
வாழ்க்கையில் எல்லோருக்கும் அடங்கித்தான் நடந்தோம்.
இன்றைய என் சிந்தனை போதுமடா சாமி:)
// வந்தியா சரி வரலியா இன்னும் சந்தோஷம் என்பதே
நீக்குவாழ்வு.// மிகவும் சரியான கருத்து.
நானும் அடிக்கடி நினைப்பதுதான்.
'கிடைத்ததா , சரி. கிடைக்கவில்லையா அதை விட சரி. அடுத்த வேலையைப் பாரு' என்று.
//ஒரு வைரஸிடம் ஆறறிவு படித்த மானிடம் அடிபணிந்து பயந்து நிற்பது பற்றி உங்கள் எண்ணம் கருத்து// - அஞ்சுவது அஞ்சாமை பேதமை என்பது மிகச் சரியான பதில். அமெரிக்கா ஜப்பான் மீது அணுகுண்டை வீசியபோது அந்த நாடு உடனடியாக சரணடைந்தது அதற்கு ஒரு உதாரணம். அதுக்கு அப்புறம் அமெரிக்கா சுதாரிச்சுக்கிட்டு, இனி யாருமே அணுகுண்டைப் பயன்படுத்த முடியாதபடி (தன் நாட்டையும் காக்க இயலாது என்பதைப் புரிந்துகொண்டு), அதற்கு ஒரு உலகளாவிய குழு அமைத்து சட்டம் போட்டு தங்களைத் தற்காத்துக்கொண்டார்கள்..ஹா ஹா ஹா
பதிலளிநீக்குஅதே, அதே!
நீக்குஉகாதி பண்டிகை தமிழர்களும் கொண்டாடினர்,
பதிலளிநீக்குமுப்பது ரூபாய்?!
20 ரூபாய்க்கு எங்க ஊரில் புளி சாதம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம், சாம்பார் சாதம்ன்னு வெரைட்டி சாதம் கிடைக்கும். ருசியும் அபாரம், வயிறும் நிரம்பும், மிச்சம் பத்து ரூபாய்க்கு லேஸ் பாக்கெட் 2 வாங்கினால் சைட் டிஷ்சுக்கு உதவும்.
பத்து ரூபாய்க்கு ஒரு சொம்பு கூழ் இருக்கு. ஒரு சொம்பு கூழ் குடிச்சாலே வயிறு நிரம்பிடும். மிச்சம் 20 ரூபாயை உண்டியலில் போட்டு சேமிக்கலாம்
நல்ல யோசனை. நன்றி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குமதிய உணவு குறித்த பதில் சிறப்பு. கண்டமேனிக்கு தின்று வயிறு சரியில்லாமலோ, இல்லை, கால் வயிறு கூட நிரம்பவே இல்லை என அங்கலாய்த்துக் கொள்வதை விட, அரிசி நொய்யில் கஞ்சியும், அதை அழகாக அலங்கரித்த சாமான்களுடன் கூடிய அற்புத மதிய உணவு பட்டியல் வயிற்றை மட்டுமல்லாமல் மனதையும் நிறைத்தது.
அந்த திருப்தி 150 ல் நான் என்ற சந்தோஷத்தையும் தருகிறது. உண்மைதானா என்பதை பதிலிட்டதுந்தான் தெரிந்து கொள்ள முடியும். நன்றி
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி.
நீக்கு& சமீபத்தில் இருகோடுகள் படம் பார்த்தீர்களா! //
பதிலளிநீக்குஹாஆஅஹா இல்லையே :)) எதுக்கு கேக்கறீங்க ..இல்லை வாழ்க்கை வட்டம்ம்ங்கிறாங்க ஆனா ஆரம்பிச்ச புள்ளியிலேயே நாம் முடிப்பதிலையேன்னு சந்தேகம் வந்து :)
இருகோடுகள் படத்தில், வாழ்க்கையை நேர் கோடுகளாகப் போட்டுப் போட்டு படுத்திடுவார் கே பி.
நீக்கு"குயில் கூவத்தானே செய்யும்? பாரதியார் கத்தும் குயிலோசை சற்றே வந்து காதில் விழ வேண்டும் என்கிறாரே?" ... உண்மைதான் ... அவருள் இந்த கவிதை உயிர்பிக்கும்போது அவருடைய குழந்தையை தன் மடியில்வைத்து கொஞ்சி கொண்டு இருந்தாராம் .... அதன் மழலை சொல்லின் முன்னால் குயில் இனிமையான ஓசை கூட இவருக்கு கரகரப்பாக கத்துவதாகவே இருந்துச்சாம் ...
பதிலளிநீக்கு"குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள் மழலைச்சொல் கேளா தவர்" இந்த குறளில் உள்ள நிலைதான் அன்று பாரதிக்கும் ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<
நல்ல கருத்து. நன்றி.
நீக்கு1, மீண்டும் பள்ளி பருவம் செல்ல நேரிட்டால் :) உங்கள் விருப்ப விளையாட்டு எதுவாயிருக்கும் ? கோலி ,கில்லி ,பம்பரம் ?
பதிலளிநீக்கு2, சிலரை புரிந்துகொள்ள முடியாம இருக்கே ஏன் ? இல்லை அவர்கள் அதற்கெல்லாம் அப்பாற்பட்டவர்களா ?
3, ஐம்புலன்களில் மிக சிறந்ததும் அவசியமானதும் இன்றியமையாத புலன் எது ?
4, வாழ்க்கை ..இதனை ஒரே வார்த்தையில் அனைவருக்கும் புரியறமாதிரி கூறவும் ? உதாரணம் எனக்கு வாழ்க்கைன்னா இறைவன் .
5, பணம், அந்தஸ்து , மகிழ்ச்சி இதையெல்லாம் அளவிடக்கூடிய ஒரு சாதனம் கிடைச்ச அதை பயன்படுத்துவீங்களா ? 6, மனசுக்குள் பேசிக்கொண்ட அனுபவம் இருக்கா ?ஒரு நாளைக்கு எத்தனை முறை மனசுக்குள் பேசியிருக்கீங்க ?
7, நிறங்கள்... கோபம் உற்சாகம் சோகம் போன்ற உணர்வுகளை தூண்டுபவையா ?
8, சமீபகாலமா கவலையில் ஆழ்த்தும் ஒரு விஷயம் எது ?
9, ஆரம்பிக்கும்போது மோசமா ஆரம்பிச்சி ஆனா எண்ட் ப்ராடக்ட் சூப்பர்பா வந்த உணவு பதார்த்தம் எது உங்கள் நளபாகத்தில் ?
10, சரியெனப்படும் தவறு எது ? அதாவது அது தப்புதான் ஆனாலும் பரவாயில்லை சரின்னு நீங்க நினைப்பது எதை ?
11, வீட்டம்மாவுக்கு பிடிச்ச பொருளை தெரியாமல் உடைச்சி அதை ஒளித்திருக்கிறீர்களா ?
12, பல திரைப்படங்களை பார்த்திருப்பீர்கள் அதில் இந்த முடிவு தேவையா என்று பதறிய திரைப்படம் எது ? எனது பதில் 1,பருத்திவீரன் ,2, 7g ரெயின்போ காலனி
13, மாந்த்ரீகம் ,பில்லி சூனியம் இவையெல்லாம் நிஜம்மாவே இருக்கா ? அல்லது கட்டுக்கதைகளா ?
14, அந்த காலத்தில் நாங்க .. என்ற வசனம் பெரும்பாலும் கேட்கும்போது என்ன தோணும் ?
15,உங்களை அதிகமா எரிச்சலூட்டும் ஒலி எது ?
எனக்கு செருப்பை வறட்டு வறட்டுன்னு தேச்சி நடந்தா பயங்கர கோபம் வரும்
நன்றி. பதில்கள் அளிப்போம்.
நீக்கு11,ஒரு முகம் ,இருமுகம் என தங்கள் திருமுகத்தை அகத்தின் அழுக்கை வெளிப்படுத்தும் பன்முக மக்களை கண்டா கோபம் வருதே என்ன செய்வது ?
நீக்குஅவர்களை பார்க்காமல் இருக்கலாம் தவிர்க்கலாம் என்ற பதில்களை கூற தடை :)
12, ஒரு நோய் அல்லது எதோ ஒரு சமூக சூழலை அமைதியை பாதிக்கும் விஷயம் ஹை பீக்கில் இருக்கும்போது எல்லாரும் அதையே பற்றி பேசுவது பகிர்வது மன நலத்துக்கு கேடு விளைவிக்காதா ?
13, பெரியவங்க சின்னவங்களுக்கு முன்னோடியா ?? அதாவது நல்ல விஷயங்கள் நல்ல செயல்கள் பேச்சு செயல் எல்லாவற்றிலும் முன்னுதாரணமா இருக்கணும் என்பதை ஆதரிக்கின்றீர்களா ?
14, இருகோடுகள் சௌக்கார் பாட்டி முதல் சிங்கப்பெண் :) BEELA ராஜேஷ் வரை நான் அவதானித்தது ஜப்பானிய ஹை நெக் ப்ளவுஸ் ஸ்டைல் :) இது எதேச்சையா அமைந்ததா அல்லது சிவில் சர்வீஸ் க்கு ஒரு ட்ரெஸ் கோட் இருக்கா ?
15, fortune குக்கீஸ் அளிக்கப்பட்டா அதைப்பிரித்து சாப்பிடும்முன் உள்ளே என்ன quote இருக்கு என்றும் எடை மெஷினில் விழும் அட்டையில் என்ன வாசகம் இருக்கு என்றும் பார்ப்பதில் ஆர்வம் காட்டுவோர் எவ்வகை ??
இந்த fortune குக்கீ னாலே இஞ்சி இடுப்பழகி பட அனுஷ் யாருக்காச்சும் நினைவுக்கு வந்தா நான் பொறுப்பில்ல
நீக்குஇதுதான் லாஸ்ட் கேள்வி :)
நீக்கு16, இந்த டல்கோனா காஃபி எப்பிடி சார் இருக்கும் ?? தன்னை ஸ்வீட் 16 என்று அடிக்கடி சொல்லிக்கொள்ளும் பதிவுலக பட்டப்பெயர் தொடரி இதை பற்றி இன்ஸ்டாக்ராமில் போட்டோவா போட்டு தள்ளுகிறார் ஆகவே டல்கோனா பற்றி என்னைப்போல் அறியாக்குழந்தைகளுக்கு விளக்கப்படுத்தவும் ??
பதில்கள் அளிப்போம்.
நீக்கு