வியாழன், 9 ஆகஸ்ட், 2012

ஓட்டம்


நின்ற பிறகுதான் தெரிகிறது
ஓட்டத்தின் அருமை
             
ஓடிய காலங்களில்
நிற்பதுதான்
சுகம் என்று
எண்ணியதுண்டு.

நிறுத்தி வைக்கப் பட்டிருக்கும்
என்னை யாரும்
லட்சியம் செய்வதில்லை

சீந்தப் படாமல்
நிற்பவர்கள் அனுபவிக்கும்
சித்திரவதை
தெரியுமா உங்களுக்கு?

என்னால் இப்போதும்
ஓட முடியும்
என்பதையே
மறந்து விட்டேன்.

ஓடிக் கொண்டிருந்த போது
நானும்
யாரையும் லட்சியம்
செய்ததில்லை

அனுபவிக்கும்போதுதானே

தெரிகிறது
அலட்சியத்தின் வேதனை...

ஏற்றிச் சென்றவர்களில்
எந்த
பேதமும் பார்த்ததில்லை

இரு திசைகளிலும்
தாண்டிச் செல்லும்
மின்வண்டிகளிடம்
அலட்சியம்
தெரிந்தாலும்
பயணிக்கும்
பயணிகள் பலரின்
பார்வையில்
பழகிய,
பயணம்
செய்த,
பரிவு தெரிகிறது.

நின்று போன

வண்டியை
நினைத்துப் பார்ப்பவர் யார்
            

 
ஓடி ஓடி
ஓய்ந்து போன
வண்டியை
புதிய வண்டிகளுக்குப்
புரிவதில்லைதான்!
       

           
நீங்களும் கூட

நின்ற பிறகு
ஒருநாள்
நினைத்துப் பார்க்கலாம்....!
                  

16 கருத்துகள்:

  1. கொஞ்ச நாள் பதிவுகள் எழுதாமல் ஓட்டம் எடுத்த பதிவர் தன் பதிவிற்கு வைத்த பெயர் ஓட்டம் ( சும்மா சும்மா கோவ படாதீங்க சார்) .

    நின்ற பின் வலிக்கத் தான் செய்யும் காலில் இல்லை மனத்தில், என்பதை உணர வைத்த வரிகளுக்கு வாழ்த்துக்கள் சார்

    பதிலளிநீக்கு
  2. ஏன்? ஏன்? நல்லாத்தானே போய்கிட்டிருக்குது, அப்புறம் ஏன் கவிதயெல்லாம்?

    கவிதையை, பத்தியா மாத்துறதுக்கு கூகிளில் “ட்ரான்ஸ்லிட்டரேஷன்” எதாவது இருக்கா?

    இப்போதைக்கு நானே, "Find & replace" முறையில், எண்டர் பட்டன்களை நீக்கிவிட்டுப் படிச்சு, புரிஞ்சுட்டேன்.

    ரெயில்வண்டியின் ரிடையர்மெண்ட் லைஃப்!! ரெயிலுக்கும் அப்படித்தான் இருக்கும் போல!!

    ரிடையர் ஆகிறவர்களைவிட, அவர்களைச் சுற்றி இருப்பவர்கள்தான் கவனமாக இருக்க் வேண்டியிருக்கிறது. அறியாமல்கூட சிறிதும் அலட்சியம் காட்டிவிடக்கூடாது என்று. சொந்தக்கார ரயில்களுக்கு அந்தச் சிரமமில்லைதானே!

    பதிலளிநீக்கு
  3. மேல ஓடிட்டு இருக்குற ஆள் ஃபிரேம விட்டு வெளியே போனப்புறம் படிக்கறேன்... ப்ளீஸ் வெயிட்..

    பதிலளிநீக்கு
  4. ஓய்வாக இருந்து கொண்டு புதிய வண்டிகளை ரசிக்கவும், அவை தடம் புரளாமல் பார்த்துக்கொண்டாலே போதுமே...

    தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி…

    பதிலளிநீக்கு
  5. வாழ்க்கை ஓட்டத்தை வரிகளுக்குள் ஓடவிட்ட உங்களுக்குப் பாராட்டுக்கள்.”ஓடிக்கொண்டேயிருக்கிறேன் ஓய்வு கிடைத்தும்”....பழக்கமாகிப்போன ஓட்டம் !

    பதிலளிநீக்கு
  6. வாழ்க்கை ஓடுவதும் சுகம் நிற்பதும் ஒரு சுகம். புதுவண்டிகள் ஓடட்டும்.நன்றாக இருக்கட்டும். பழகின வண்டியின் சுகங்களை அறிந்தவர்கள் நின்றவகளை மறப்பதில்லை.

    மறப்பவர்களைப் பற்றிக் கவலைபடாமல் ஓய்வை ரசிக்கலாம்.

    பதிலளிநீக்கு
  7. எங்கள் ப்ளாக்9 ஆகஸ்ட், 2012 அன்று 6:04 PM

    ஹா...ஹா..ஹா.. நன்றி சீனு!

    நன்றி ஹுஸைனம்மா... முதற்கண் இதைக் கவிதை என்று சொன்னதற்கு நன்றி. நல்லவேளை அப்புறம் வந்த கவிதாயினி ஹேமா அதற்குக் கோபித்துக் கொள்ளவில்லை! நீங்க சொன்ன மாதிரி போட்டிருந்தா பத்து வரி கூட தேறியிருக்காது!! :))

    நன்றி மாதவன்... போங்க மாதவன்... நீங்க எப்பவுமே குறும்பு...!

    நன்றி திண்டுக்கல் தனபாலன்.

    நன்றி ஹேமா

    நன்றி வல்லிசிம்ஹன்... அழகாச் சொல்லியிருக்கீங்க.

    பதிலளிநீக்கு
  8. ஏதோ சிவாஜி கணேசன் பாட்டு மாதிரியில்லே இருக்கு?

    பதிலளிநீக்கு
  9. தப்பா நினைச்சிக்காதீங்க. பின்னூட்டங்களை மிக ரசித்தேன்

    பதிலளிநீக்கு
  10. மிக அருமை. தொடருங்கள்! [ஓட்டத்தை அல்ல:)! கவிதை எழுதுவதை..]

    பதிலளிநீக்கு
  11. கவிதை ரொம்ப நல்லா இருக்கு.

    முடிஞ்சவரைக்கும் ஓடறது, போதும் என்று நினைக்கும்போது நிற்க வேண்டியதுதான். யார் அலட்சிய படுத்தினா என்ன, புரிஞ்சுக்காம போனா என்ன. நமக்கு தேவைன்னு படறத நாம பண்ணிக்கணும். அது நமக்கு சரின்னு பட்டா போதுமே.

    படத்துல அவர் ஓடரத பாத்தே நான் டயர்ட் ஆயிட்டேன்.

    பதிலளிநீக்கு
  12. வயது முதிர்ந்தவர்களுக்கான கவிதையாகத்தான் இதை எடுத்துக்கொள்கிறேன்.
    ஓடிக்கொன்டிருக்கும்போது நின்றால் ஒரு அயர்வான ஆசுவாசம் இளமையில்!
    நின்றே போகும்போது, ஓட முடியாதா என்ற ஆதங்கம் முதுமையில்!
    நன்றாக எழுதியிருக்கிறீர்கள்!

    பதிலளிநீக்கு
  13. எங்கள் ப்ளாக்11 ஆகஸ்ட், 2012 அன்று 1:08 PM

    நன்றி அப்பாஜி, மோகன் குமார், சிநேகிதி.

    ஊக்கத்துக்கு நன்றி ராமலக்ஷ்மி.

    வெல்கம் பேக் மீனாக்ஷி... இனி உற்சாகப் பின்னூட்டங்களை மீண்டும் எதிர்பார்க்கலாம்னு சொல்லுங்க....!

    நன்றி மனோ மேடம். நினைத்து எழுதியதைச் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்!

    பதிலளிநீக்கு
  14. வணக்கம்
    //அனுபவிக்கும்போதுதானே
    தெரிகிறது
    அலட்சியத்தின் வேதனை...//
    அருமை .........
    தங்கள் வலைப்பதிவு மிக அருமை
    என்னுடைய புதிய வலை பதிவு ( blog ) .
    என் கவிதுளிகளின் தொகுப்பு இங்கே ,
    வாசிக்க இங்கே சொடுக்கவும்
    http://kavithai7.blogspot.in/
    புது கவிதை மழையில் நனைய வாருங்கள்
    நீங்கள் தமிழர் என்ற பெருமிதத்துடன்
    என்றும் அன்புடன்
    செழியன்.....

    பதிலளிநீக்கு
  15. உண்மையை உண்மையாய் சொல்லியிருக்கீங்க!
    -HVL

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!