இதுதான் மராட்டியர்களின் வரலாற்றைப் பார்ப்பதற்கான தகுந்த இடம் என்று எனக்குத் தோன்றுகிறது. தஞ்சையை மராட்டியர்கள், சிவாஜியின் ஒன்றுவிட்ட தம்பியான ஏகோஜி கைப்பற்றியது சூழ்ச்சியினால், நம்பிக்கை துரோகத்தினால் என்றுதான் வரலாறு சொல்கிறது.
விஜயராகவ நாயக்கர் வெற்றி பெற்றதும், போர்ச்செலவுக்கான பணத்தை ஏகோஜி கேட்டதாகவும் அதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் விஜயராகவ நாயக்கர் இறந்ததாகவும் சிலர் எழுதியிருந்தாலும், பீஜப்பூர் சுல்தானின் நம்பிக்கைக்குரிய ஏகோஜி, தந்திரத்தால் துரோகம் செய்து விஜயராகவ நாயக்கரை சுல்தானின் தளபதிகள் துணையோடு கொன்று தஞ்சைப் பகுதிக்கு அரசனானார். (கிபி 1675) துரோகம் செய்த ஏகோஜி, தன் கடைசி காலத்தில் மன அமைதியை இழந்து கிபி 1683ல் மரணமடைந்தார். இதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சிவாஜி இறந்தார்.
1684ல் ஏகோஜியின் மூத்த மகன் சாஹஜி தஞ்சை அரசராக முடிசூட்டப்பட்டார். தஞ்சை மராட்டிய மன்னர்களிலேயே மிகவும் புகழ் பெற்றவர் இவர். சிறந்த கல்விமான். நிறைய புலவர்களை ஆதரித்தவர். இவருடைய காலத்தில் இசை, நாட்டியம் போன்றவை பொற்காலம் கண்டன. 1712ல் இவர் தஞ்சையை அடுத்த வல்லத்தில் இயற்கை எய்தினார். சாஹஜிக்குப் பிறகு அவரது தம்பியான முதலாம் சரபோஜி ஆட்சிக்கு வந்து 16 ஆண்டுகள் அரசாட்சி செய்தார். அதன் பிறகு அவரது தம்பி துளஜா (துக்கோஜி) அரசராக ஆகி சுமார் 7 வருடங்கள் அரசாண்டார். சாஹஜி போலவே துளஜாவும் பன்மொழிப் புலமையும், கலைகளை ஆதரிக்கும் குணமும் கொண்டிருந்தார்.
அரசர் துக்கோஜி மறைந்த பிறகு மூன்று ஆண்டுகள் தஞ்சையில் குழப்பம் நிலவியது. துக்கோஜியின் மூத்த மகன் இரண்டாம் வெங்கோஜி என்ற பெயரில் ஒரு வருடம் ஆண்டார். அப்போது சந்தா சாஹிப்புடனான கடுமையான போரை நடத்தினார். இரண்டாம் வெங்கோஜி மறைந்ததும் அவரது மனைவியான சுஜான்பாயி அரசாட்சி செய்தார். அவரது தளபதியாக செய்யது/சையது என்பவர் இருந்தார். இதற்கிடையில் முதலாம் சரபோஜியின் முறை தவறிய மகனான ‘காட்டுராஜா’ என்றழைக்கப்பட்டவர், அரியணைக்கு உரிமை கோரினார். இதற்காக பிரெஞ்சுக்காரர்களின் உதவியையும், தளபதி செய்யதுவின் உதவியையும் பெற்றுக்கொண்டார். கொஞ்சம் அசந்த நேரத்தில் சுஜான்பாயி ஆட்சியிலிருந்து நீக்கப்பட்டு ‘காட்டுராஜா’, சாகுஜி என்ற பெயரில் அரசரானார். இவர் நடத்தை மிக மோசமாக இருந்ததால், இவர் உண்மையிலேயே சரபோஜிக்குப் பிறந்தவர்தானா என்று அரசவையில் எல்லோருக்கும் ஐயம் ஏற்பட்டது. பிறகு துக்கோஜியின் ஆசை நாயகிக்குப் பிறந்த (துக்கோஜிக்கு ஆறு மனைவியர் உண்டு. அதில் மராட்டியர் வழக்கப்படி மணந்துகொண்ட அன்னபூர்ணா என்பவரின் மகன் பிரதாபசிம்மன். ஆறாவது மனைவி என்பதால் ஆசைநாயகி என்று குறிப்பிடுகின்றனர்) பிரதாபசிம்மன் என்பவரை தளபதி சையது அரசனாக்கினார்.
இந்தக் குறுகிய மூன்று ஆண்டுகளைப் பற்றிப் படிக்கும்போது, அரசன் என்பவன் தகுந்தவனாக இல்லாதிருந்தால், அவனைக் கைப்பாவையாக்கி ஆட்சி புரிய ஏதேனும் அமைச்சரோ இல்லை தளபதியோ முற்படுவான் என்பது தெரிகிறது. பொதுவாக அமைச்சர் என்பவர் அறிவாளியாக இருக்கவேண்டும் என்பதால் வீரம் என்பது முக்கியமான தேவை அல்ல. அதனால் பொதுவாக தளபதிகள்தாம் அரசனைக் கைப்பாவை ஆக்குவதற்கு முயல்வார்கள். அதன்படி தளபதி சையது பிரதாபசிம்மனை மன்னனாக்கினான். (அதற்குத் துணை புரிந்தான்). ஆட்சிக்கு வந்த தும் பிரதாபசிம்மன் நிறைய போர்களைச் சந்திக்க வேண்டிவந்தது. அவனது ஆட்சிக்கு பிரெஞ்சுக்காரர்களும், சந்தாசாகேப் போன்றவர்களும், ஆங்கிலேயக் கம்பெனியும் ஆபத்தாக வந்தன. கிட்டத்தட்ட 24 வருடங்கள் ஆண்ட பிரதாபசிம்மன் ஆட்சி தஞ்சை மராட்டியர்கள் ஆட்சியில் மிக முக்கியமான காலம்.
பிரதாபசிம்மன் தலையாட்டும் பொம்மையல்ல என்பதை உணர்ந்த தளபதி சையது, ஆர்காடு நவாப் சந்தாசாகிப்புடன் சேர்ந்து சதியில் ஈடுபட்டார். இவர்களுடன் காட்டுராஜா என்றழைக்கப்பட்ட சாகுஜியும் சேர்ந்துகொண்டார். அதனால் முதலில் சையதின் மீது கண் வைத்து, அவரைச் சிறைப்பிடித்து கொன்றுவிட்டார் பிரதாபசிம்மன். தஞ்சை அரசுக்கு உறுதுணையாக தானைத்தலைவர் மானோஜி, டபீர் பண்டிதர் போன்றோர் உதவினர். முகலாயர்களின் நெருக்குதல் அதிகமானபோது, மராட்டியத்திலிருந்து பத்தாயிரம் வீரர்கள் உதவிக்கு வந்தனர். முகலாயர்களிடமிருந்து அரசைப் பாதுகாக்க வேண்டி, பிரெஞ்சுக்காரர்களுக்கு காரைக்காலையும், டச்சுக்காரர்களுக்கு நாகப்பட்டினத்தையும் விட்டுக்கொடுக்கவேண்டிய நிலைமை வந்தது. இதற்கிடையில் கிளைவ் போன்றோர் இரண்டாம் போரில் பிரதாபசிம்மனிடமிருந்து தேவிப்பட்டினத்தைக் கைப்பற்றினர். இதுவே கிழக்கிந்தியக் கம்பெனி தென்னாட்டில் அரசுக்கட்டிலில் ஏற வழி வகுத்தது. பிரதாபசிம்மன் இறுதிக்காலத்தில் தஞ்சை கிழக்கிந்தியக் கம்பெனிக்கு அடங்கிவிட்ட து என்று கொள்ளலாம். 1763ல் பிரதாபசிம்மன் மறைந்தார்.
பிரதாபசிம்மன் மகனான இரண்டாம் துளஜா அரசனாகப் பட்டமேற்றார். இவர் காலத்தில் தஞ்சை கடுமையான சூழல்களைச் சந்தித்தது. கிழக்கிந்தியக் கம்பெனியின் சூழ்ச்சியால் நவாப் தஞ்சைக்கு அரசனான தும், துளஜா மூன்று வருடம் சிறையில் இருந்ததும், பிறகு மீண்டும் ஆங்கிலேயர்களின் கோர்ட் அவரை அரசனாக்கியதும் (கிழக்கிந்தியக் கம்பெனி நவாப்புடன் சேர்ந்து செய்த சதி செல்லாது என்று தீர்ப்பு), அதன் பிறகு திப்புசுல்தான் படையெடுத்து பல பகுதிகளைச் சூறையாடியதும், ஆறு மாதங்கள் தஞ்சைக்கு அரசனானதும், பிறகு துளஜா, ஆங்கிலேயர்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு, தஞ்சையைக் காக்க முயன்றதும் நடந்தது. இதனால் இரண்டாம் துளஜா, பெயருக்கு மாத்திரம் மன்னர், படை ஆங்கிலேயப்படை என்றானது.
1787ல் இரண்டாம் துளஜா மறைந்ததும், பிரதாபசிம்மனின் மற்றொரு மகனான அமரசிம்மன் அரசனானதும், இரண்டாம் துளஜாவின் சுவீகாரபுத்திரன் என்று சொல்லப்பட்ட இரண்டாம் சரபோஜி, பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு, தரங்கம்பாடியிலிருந்த ஜெர்மானிய பாதிரியார் ஸ்வார்ட்ஸின் உதவியுடன் 1798ல் தஞ்சைக்கு அரசனானார். இதற்கு உதவி செய்தது, அமரசிம்மனின் ஆங்கிலேய எதிர்ப்பு உணர்வு. இரண்டாம் துளஜா ஆங்கிலேயர்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தப்படி, தஞ்சை நகரம் மாத்திரம் இரண்டாம் துளஜாவுக்கும், மீதி சோழ மண்டலம் முழுமையும் ஆங்கிலேயர்களுக்குமானது. அதற்கு ஈடாக ஒரு லக்ஷம் வராகனும், வருட வருமானத்தில் ஐந்தில் ஒரு பகுதியும் தஞ்சை அரசருக்கு என்று ஒப்பந்தமானது. இவரது காலத்தில்தான் (இரண்டாம் சரபோஜி) தஞ்சை அரண்மனை விரிவுபெற்றது, நிறைய கட்டிடங்கள் வந்தன, சரசுவதி மஹால் நூலகம் விரிவுபடுத்தப்பட்டது. 1832ல் இவர் மறைந்தார். இவருடைய மகன் இரண்டாம் சிவாஜி என்ற பெயரில் 1832ல் அரசாட்சிக்கு வந்து 23 வருடங்கள் தஞ்சை நகர அரசராக இருந்தார். இவருக்கு வாரிசு இல்லாததால், ஆங்கிலேயச் சட்டப்படி தஞ்சை மராத்திய அரசு முடிவுக்கு வந்து தஞ்சை, சென்னை மாகாணத்துடன் இணைக்கப்பட்டு ஆங்கிலேயர் வசம் வந்தது.
தஞ்சை மராத்திய அரசின் கடைசி அரசர் இரண்டாம் சிவாஜி (1832-1855)
இரண்டாம் சரபோஜி மன்னர் கும்பகோணம் சக்ரபாணி கோயிலுக்கு நிறைய பணிகள் செய்துள்ளார். அவருடைய திருவுருவம் (பக்கத்தில் இருப்பது அவரது மகளா இல்லை மனைவியா என்பது தெரியவில்லை) சக்ரபாணி கோயில் முன் மண்டபத்தில் (கர்பக்ரஹம் முன்பு உள்ள மண்டபம்) இருக்கிறது. கீழே உள்ளவை சக்ரபாணி கோயிலின் தோற்றம்.
கும்பகோணம் சக்ரபாணி கோயில்.
கும்பகோணம் சக்ரபாணி கோயில் உட்புறம். இங்கும் சார்ங்கபாணி கோயிலில் இருப்பதுபோன்றே கர்பக்ரஹத்துக்கு மூலவரைச் சேவிக்கச் செல்ல இரு வாயில்கள் உண்டு. ஆறு மாதம் ஒரு வாசலும், அடுத்த ஆறு மாதம் இன்னொரு வாசலும் திறப்பார்கள். (இதனைப் பற்றி வேறு ஒரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன். இது சூரியனின் பாதையை ஒட்டி நடக்கும் மரபு. தட்சிணாயனம், உத்தராயணம் என்று குறிப்பிடுவர். இது போன்று இரண்டு வாசல்கள் உள்ள கோயில்கள் சில உண்டு. திருவெள்ளறை புண்டரீகாட்சர் கோயில், கும்பகோணம் சார்ங்கபாணி கோயில் என்ற இரண்டு வைணவ திவ்யதேசங்கள் சட் என்று என் மனதில் தோன்றுகின்றன)
தஞ்சை மராட்டிய அரசர்களின் வரலாற்றைப் படித்து அதை மிகச் சுருக்கமாக எழுதுவதற்குள் தாவு தீர்ந்துவிட்டது (அப்படீன்னாக்க?). தஞ்சை அரசர்களின் (மராத்திய, அனேகமாக அதற்கு முந்தைய நாயக்க மன்னர்களும் இங்குதான் இருந்திருக்க வேண்டும்) அரண்மனை வளாகத்தில் உள்ள தர்பார் ஹால் என்று சொல்லப்படும் அரசவையின் படங்களைத்தான் இந்த வாரம் நாம் காணப்போகிறோம்.
தஞ்சை அரண்மனை நுழைவாயில். ரொம்ப பெரிய வளாகம்.
நான் எங்கு இருந்தாலும், என் தலைவன் சிவனைப் பார்த்துத்தான் இருப்பேன். இவங்க என்னடான்னா வெட்ட வெளியில் என்னை உட்கார வைத்துவிட்டார்கள்.
ஆளரவமற்ற மைதானமாக இருக்கிறதே என்று பார்க்கிறீர்களா? இங்கு ஏகப்பட்ட படைவீரர்கள், குதிரையிலும் நடந்தும் காவல் காத்துக்கொண்டிருந்ததைப் பல நூற்றாண்டுகளாகப் பார்த்திருக்கிறோம். இப்போதான் சப்தம் இல்லாமல் கொஞ்சம் அமைதியாக இந்த இடம் இருக்கிறது என்று அந்தக் கட்டிடங்கள் சொல்கின்றனவோ?
நூல்கள் ஏட்டுச் சுவடிகள் போன்றவற்றைச் சேகரிக்கவேண்டும் என்று
சரபோஜி மன்னருடைய எண்ணத்தால் ஏற்பட்ட நூலகம் இது
காலத்தால் பழைய தோற்றம் தருகிற அரண்மனை.
நான் எங்கிருந்து வந்தேன் என்பது உங்களுக்குத் தெரியுமா?
மண்டபத்தில் இருக்கும் ஓவியங்கள் எல்லாமே மராத்தியர் காலத்தைச் சேர்ந்தவை.
மாட த்தின் விதானம் எவ்வளவு அழகாக அமைக்கப்பட்டிருக்கிறது.
தர்பார் ஹாலில் பார்க்கவேண்டியவை இன்னும் இருக்கின்றன. அடுத்த வாரம் தொடர்வோம்.
(தொடரும்)
நம்பினால் நம்புங்கள் முடிஞ்சு போச்சா?
பதிலளிநீக்குகீதா
வாங்க கீதா ரங்கன். மூன்று வாரங்கள் போதாதா?
நீக்குஅப்படி இல்லை நெல்லை, நமக்கெல்லாம் அங்க போய் பார்க்கும் வாய்ப்புகள் கிடைக்கப் போவதில்லை. ஸோ இங்க பாத்துக்கலாமேன்னுதான். இந்தா... கிட்ட இருக்க இடத்துக்கே போவ முடியலை...
நீக்குகீதா
மூன்று வாரங்களுக்கு மேல் ரசிக்கமாட்டார்கள் என்று நினைத்தேன். இன்னொரு மியூசியத் தொடரை எழுத ஆரம்பிக்கிறேன்.
நீக்குநெல்லை, மராத்தி அரசர்கள் இங்கு வந்து தமிழ் கற்றார்களோ? தமிழ் நிலத்தில் எப்படி மொழி தெரியாமல் அரசாண்டார்கள் என்று எனக்குத் தோன்றும்.
பதிலளிநீக்குசிறந்த கல்விமான். நிறைய புலவர்களை ஆதரித்தவர். இவருடைய காலத்தில் இசை, நாட்டியம் போன்றவை பொற்காலம் கண்டன. //
அப்படி என்றால் நம் மொழியும் கற்றிருப்பார்கள்னு தோன்றுகிறது.
கீதா
அரசர்களுக்கு மண்ணின் மொழியைக் கற்றுத்தந்திருப்பார்கள். அதுவும் தவிர அரசரனுக்கு கலைகளில் ஆர்வம் இருந்தால் அவைகளை வளர்ப்பதில் நேரம் செலவழிந்திருக்கும்.
நீக்குபடங்கள் அருமை நெல்லை! ஓவியங்கள் சற்றும் மங்காமல் இருக்கின்றனவே.
பதிலளிநீக்குவாங்க சூர்யா சார். இப்போ இன்னும் அந்த இடத்தைச் சீர்படுத்துகிறார்கள்.
நீக்குகாஞ்சி கைலாசநாதர் கோயில் மற்றும் பல கோயில்களில் இத்தகைய ஓவியங்கள் அழிந்துபட்டிருக்கின்றன. ஓவியர் மணியம் வரைந்ததுபோல மிக அழகிய பெண்ணின் முகத்தை கைலாசநாதர் கோயிலில் பார்த்தேன் (ஓவியமாக. மற்றப் பகுதிகள் அழிந்துவிட்டன)
/தஞ்சை மராட்டிய அரசர்களின் வரலாற்றைப் படித்து அதை மிகச் சுருக்கமாக எழுதுவதற்குள் தாவு தீர்ந்துவிட்டது (அப்படீன்னாக்க?). /
பதிலளிநீக்குடிக்ஷனரி கொடுக்கும் அர்த்தம் கீழே!
தாவு2 பெ. [வ.வ.] 1: (ஒருவருடைய) பலம்; சக்தி; strength; energy. வேலையை முடிப்பதற்குள் தாவு தீர்ந்துவிடும் போலிருக்கிறது.
ஹா ஹா ஹா. இது எந்த மொழியிலிருந்து வந்திருக்கும்?
நீக்குசரபோஜி மன்னர் பெயர் மட்டும் ஆங்காங்கே தென்பட்டு பரிச்சயமான பெயர்!
பதிலளிநீக்குசந்தா சாஹிப்பு// இதுவும் பரிச்சயமான பெயர். ஆனால் தொடர்புப்படுத்திப் பார்க்க முடியலை.
‘காட்டுராஜா’ // அட அழகான பெயராக இருக்கிறதே!!! நாட்டு ராஜா இல்லைன்றதால காட்டில் காட்டை ஆண்டு இருந்தாரோ?!! முறைதவறிய என்றும் இருக்கிறதே.
எல்லா ஜி க்களும் குழப்புகிறார்கள்! ஹாஹஹாஹா
கீதா
//எல்லா ஜி க்களும் குழப்புகிறார்கள்! //அதனால்தான் இங்கே யாரோ ஒருவர் உங்களை கீதாஜி என்று அட்ரஸ் பண்ணினார்போலும் ;-)
நீக்குசிரித்துவிட்டேன்!!! வாங்க திவாமா அண்ணா! பார்த்து ரெண்டு மூணு நாளாச்சோ? அந்த யாரோ ஒருவர் அது நீங்கதான்னு எல்லாருக்கும் தெரியுமே!!!!
நீக்குஆ! அப்ப நான் குழப்பவாதியா!!!!! ...என்ன குழப்பமோ?! சபையைக் கூட்டி ஆலோசனை நடத்தணும்......ஹாஹாஹா
ஏன்னா இங்க யாரும் என்னை 'ஜி' போடமாட்டாங்களே. நான் ரொம்பச் சின்னப் பொண்ணு!
கீதா
எந்த மன்னர் நிறைய செயல்களைச் செய்திருக்கிறாரோ, அவரது பெயர் எல்லோருக்கும் பரிச்சயமாகத்தான் இருக்கும். அரசனுக்கு ராஜகுடும்பம் அல்லாத ஆசைநாயகிகள் இருந்து அவர்களுக்குக் குழந்தை பிறந்தால், பொதுவாக அழித்துவிடுவதுதான் வழக்கம்.
நீக்குஎனக்குத் தெரிந்து கீதா ரங்கனை, கீதாஜி என அழைப்பவர் தில்லி வெங்கட் நாகராஜ்.
நீக்குஹலோ நெல்லை, வெங்கட்ஜி அப்படி என்னை அழைப்பதற்குக் காரணம் (பாருங்க நானும் அவரை அப்படித்தானே அழைக்கிறேன்!!!!) சின்னப்பிள்ளைங்களா இருந்தாலும் 'ஜி' போட்டு இலங்கைத் தமிழர் போல சொல்லிக்கொள்வது அம்புட்டுத்தானுங்கோ!
நீக்குநம்ம திவாமா அண்ணனும் என்னை 'ஜி' சொன்னாராக்கும் அதுக்குத்தான் அவரை சும்மா வம்புக்கிழுத்தேன். யாரையாச்சும் இழுக்கலைனா நமக்குத்தான் தூக்கமே வராதே!!!!!
கீதா
அரசன் என்பவன் தகுந்தவனாக இல்லாதிருந்தால், அவனைக் கைப்பாவையாக்கி ஆட்சி புரிய ஏதேனும் அமைச்சரோ இல்லை தளபதியோ முற்படுவான் என்பது தெரிகிறது.//
பதிலளிநீக்குஇது இப்போதைய காலத்துக்கும் பொருந்தும்.
'தளபதி' என்ற சொல்லைப் பார்த்ததும் என்னென்னவோ வருது!!!! ஹிஹிஹி
கீதா
நான் சமீபத்தில் தெரிந்துகொண்ட விஷயம் இது. விஜயகாந்தின் சாயலில் நடிக்கவந்த சரவணனுக்குத்தான் முதலில் இளைய தளபதி பட்டம் சேலத்தில் வழங்கப்பட்டது. அந்தப் பட்டத்தின் கவர்ச்சியால் மற்றவர்களும் அதனை எடுத்தாண்டுகொண்டார்கள்.
நீக்குகாலை வணக்கம், வாத்யாரே!
பதிலளிநீக்குபடங்கள், விளக்கங்கள், வரலாறு எல்லாமே ஒன்றை ஒன்று மிஞ்சிய அபாரம்!
BTW, தாவு என்பது இந்த இடத்தில் Strength. தாவு தீர்ந்து விட்டது- Got fatigued, tired
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்குவாங்க ஶ்ரீநிவாசன் சார் மிக்க நன்றி. ஒவ்வொரு அரச குலத்தின் வரலாறும் ரசனையாகத்தான் இருக்கு, இவங்களும் சாதாரணவர்களே என்ற எண்ணமும் வருகிறது. உறவைப் பயன்படுத்த மனைவியைத் தூதனுப்புவதும் நடந்திருக்கிறது..
நீக்குஅனுமன், கடலைத் தாவுவதற்குள் தாவு தீர்ந்துவிட்டது என எண்ணியிருப்பாரோ
அனுமன் தூய தமிழ் பேசியிருந்தால் அப்படி சொல்லியிருக்கக்கூடும் :-) தாவு- வலிமை (என்ற பொருளில்; தொல்காப்பியம் சொல்லதிகாரம் 344 வது வரி, apparently).
நீக்கு//இவங்களும் சாதாரணவர்களே என்ற எண்ணமும் வருகிறது.// வாத்யாரே, எல்லா காலத்திலும், அரசன் என்பவன் ஊரிலேயே அல்லது நாட்டிலேயே ஆகப்பெரிய ரௌடி! எவ்வளவு பூசி மெழுகினாலும், உண்மை இதுதான். அதனால்தான், ஒரு அரசன் கொஞ்சம் டீசெண்டாக இருந்துவிட்டால், ஆஹா ஓஹோ பொற்காலம் என்றெல்லாம் தலையில் வைத்து கொண்டாடுகிறார்கள்; அரசனில்லாமல் தலைக்குத்தலை ரவுடித்தனம் செய்வதை அ'ராஜ'கம் என்று வடமொழியில் சொல்கிறார்கள்.
அட! ஹைஃபைவ்! மீக்கும் இந்தக் கருத்து உண்டு. இதை இப்போதையதற்கும் ஒப்பிட்டுப் பார்த்ததுண்டு. காலத்தின் அடிப்படையில் செயல்பாடுகள்தான் மாறுபடுகின்றன ஆனால் அடிப்படை என்னவோ அதேதான்.
நீக்குகீதா
ஶ்ரீநிவாசன் சார்.. சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள். வரலாற்றை எழுதுபவர்கள் கொஞ்சம் பூசி மெழுகி அரசனுக்குப் பெருமை வருவதற்காகச் சொல்லியிருந்தாலும் அரசன் என்பவன் சூரியனைப் போன்றவன். ரொம்ப நெருங்கினாலும் மிக தூரத்தில் இருந்தாலும் ஆபத்துதான். தவிர, அவர்களுக்கு இருக்கும் அதிகாரம், கோள் சொல்பவர்களால் ஏற்படும் தவறான முடிவு, இருப்பைத் தக்கவைத்துக்கொள்வது என பல அராஜகங்களை அரசன் செய்திருக்கத்தான் வேண்டும்.
நீக்குஶ்ரீநிவாசன், கீதாரங்கன்... ஒரு கம்பெனியில் துறைத் தலைவனாக இருக்கும்போதே எவ்வளவு தவறுகள் செய்யவேண்டி வருகிறது, எவ்வளவு பாலிடிக்ஸுக்கு ஆட்படவேண்டியிருக்கிறது. நாட்டுக்கு தலைமை என்றால் எவ்வளவு பிரச்சனைகள், ஆலோசனைகளைச் சந்திக்கணும்? அதனால்தான் நாட்டின் அரசனும் நரகத்தைக்குச் செல்லணும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.
நீக்குபொதுவாக அமைச்சர் என்பவர் அறிவாளியாக இருக்கவேண்டும்//
பதிலளிநீக்குநெல்லை, சிரித்துவிட்டேன் இப்போதைய நிலை மனதில் வந்ததும்!
ஆட்சிக்கு வந்த தும் பிரதாபசிம்மன் நிறைய போர்களைச் சந்திக்க வேண்டிவந்தது. அவனது ஆட்சிக்கு பிரெஞ்சுக்காரர்களும், சந்தாசாகேப் போன்றவர்களும், ஆங்கிலேயக் கம்பெனியும் ஆபத்தாக வந்தன. //
இப்போது இந்த சாந்தாசாகேப்பின் பங்கு வாசித்தது நினைவுக்கு வந்துவிட்டது. அது உங்களின் அடுத்த வரியில் வந்துவிட்டது
//பிரதாபசிம்மன் தலையாட்டும் பொம்மையல்ல என்பதை உணர்ந்த தளபதி சையது, ஆர்காடு நவாப் சந்தாசாகிப்புடன் சேர்ந்து சதியில் ஈடுபட்டார்.//
கீதா
அரசனுக்கு ஆலோசனைகள் அளிக்கவேண்டும் என்பதால் அமைச்சர்கள் அறிவாளிகளாக இருக்கவேண்டும், அந்தக் காலத்தில். இப்போ, கலெக்ஷன் ஏஜெண்டுகளின் காலம்.
நீக்குஅதற்குப் பின்னான வரலாறு நினைவுக்கு வரத் தொடங்கியது, நெல்லை. ஹப்பா கொஞ்சம் பரவால்லைனு தோன்றியது. உங்கள் வரிகளும் தொடர்ந்ததா....
பதிலளிநீக்குஇவரது காலத்தில்தான் (இரண்டாம் சரபோஜி) தஞ்சை அரண்மனை விரிவுபெற்றது, நிறைய கட்டிடங்கள் வந்தன, சரசுவதி மஹால் நூலகம் விரிவுபடுத்தப்பட்டது.//
இதுவும் ஓரளவு நினைவில்..
கீதா
இன்னும் எந்தக் காலத்திலோ படித்தது நினைவில் இருக்கு என்றால், புதியவைகளைப் படித்து அந்த இடத்தில் நிரப்பவில்லை என்று அர்த்தம் வருகிறதோ கீதா ரங்கன்?
நீக்குசாஹூஜி பெயரைப் பார்த்ததும் சாம்பார் னு பெயர் வந்த கதை நினைவுக்கு வருது. பாருங்க எப்பவும் 'திங்க' தான் மனசுல!
பதிலளிநீக்குகீதா
எனக்கு சாஹு என்ற பெயரைக் கேட்டாலே இங்கு பூரிக்குத் தரும் சாஹுதான் நினைவுக்கு வருது. நான் பல்லியா (மசால்) தான் கேட்பேன், சாஹு வேண்டாம்னு சொல்லிடுவேன்
நீக்குமுருகா சரணம்
பதிலளிநீக்குசரணம் கதிர்வேலா
நீக்குதஞ்சை மராட்டிய மன்னர்கள்
பதிலளிநீக்குவரலாறு அருமை..
நலம் வாழ்க
வாங்க துரை செல்வராஜு சார்... உங்க ஊரைப் பற்றித்தான் தொடர்
நீக்கு//பொதுவாக அமைச்சர்
பதிலளிநீக்குஎன்பவர் அறிவாளியாக
இருக்கவேண்டும்///
ம்....
இன்றைக்கு!?
கட்சி நிதி, தேர்தல் நிதி போன்றவைகளுக்கு கலெக்ஷன் பண்ணத் தெரிந்தவராக இருக்கணும் என்று நினைக்கிறீர்களா? இல்லை ஜாதிவாக்குகளை வாங்கத் தெரிந்தவராக இருக்கவேண்டுமா?
நீக்குசக்கரபாணி கோவிலின் முன் உள்ள அந்த வட்ட வடிவ மண்டபம் அழகு சேர்க்கிறது.
பதிலளிநீக்குதஞ்சை மராட்டிய அரசர்களின் வரலாற்றைப் படித்து அதை மிகச் சுருக்கமாக எழுதுவதற்குள் தாவு தீர்ந்துவிட்டது (அப்படீன்னாக்க?). //
சுருக்கமா நீங்க எழுதினதை வாசிக்கவே குயப்பமா கீது.....உங்களுக்கு எழுத ரொம்பவே எனர்ஜி தேவைப்பட்டிருக்கும், நெல்லை. Kudos!
//நான் எங்கு இருந்தாலும், என் தலைவன் சிவனைப் பார்த்துத்தான் இருப்பேன். இவங்க என்னடான்னா வெட்ட வெளியில் என்னை உட்கார வைத்துவிட்டார்கள்.//
நெல்லை, அங்க மட்டுமில்லை இங்கயும் கூட ஆங்காங்கே பார்க்க முடிகிறது தனியாக. இங்கே நம்ம ஏரியாவில் முன்னாடி கோவில் இருந்திருக்கும் போல நந்தியாண்டவரை மட்டும் நடைபாதையிலிருந்து எடுக்காமல் ரோட்டில் வண்டிகள் ஒதுங்கும் இடத்தில் விட்டு வைச்சிருக்காங்க. ஒரு கடையின் முன்னர். நம்ம பார்த்து நடக்கலைனா மோதிக் கொள்ளும் வாய்ப்பு.
அதே போல பல இடங்களில் பார்க்க முடிகிறது.
இப்படிச் சொல்லலாம், தலைவன் ஏரியாங்கோ...அதுக்கு அத்தாட்சியா நான்!
கீதா
//இவங்க என்னடான்னா வெட்ட வெளியில் என்னை உட்கார வைத்துவிட்டார்கள்.//. அதுல பாருங்க... மாடு அசையலைன்னா புல்லுக்கு கூட தைரியம் வந்து, கால் கிட்ட வளந்து சவால் விடுது!! குளிர் விட்டுப்போச்சு, துளிர் விட்டுப்போச்சு!
நீக்குவரலாற்றுச் செய்திகளைப் படிக்கும்போது, யார் யாருடன் போரிட்டாங்க, அதுல தெரிந்த பெயர்கள் என்ன என்ன என்பதையெல்லாம் அறிந்துகொண்டு கொஞ்சம் சுருக்கி எழுத வேண்டியிருக்கு. அவ்ளோதான்.
நீக்குபெங்களூரில் இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால் கோயில்கள் இடத்தில் வீடுகளைக் கட்டி நந்திதேவரை அம்போ என்று விட்டுவிட்டார்கள்
திரையுலகில் காலாட்டிக்கொண்டே படுத்திருக்கவில்லை என்றால் ஆள் போயிட்டான் என்று நினைத்து வாய்ப்புகளே கொடுக்க மாட்டார்கள் என்பர்.
நீக்குமனிதனுக்கே இப்படீன்னா, மற்றவைகளுக்கு?
அந்தக் கட்டிடங்கள் நிறைய வரலாற்று நினைவுகளைத் தாங்கி நிற்கின்றன. அவற்றைப் பார்க்கும் போதே சிலவற்ற உணரமுடியும். அந்தப் பழமை தான் என்ன அழகு இல்லையா?
பதிலளிநீக்குஅரண்மனையின் அழகு, தர்பார் ஹாலின் கலைவடிவம், ஓவியங்கள், விதானம் எல்லாம் மனதைக் கவர்கின்றன.
எப்பவோ பார்த்தது....நெல்லை, உடனே கணக்குப் போடாதீங்க!!!!!
படங்கள் எல்லாம் சூப்பர், நெல்லை.
கீதா
அந்தப் பழமையை இன்னும் சிறப்பா வைத்துக்கொள்ள முயல்கிறார்கள். நாம உள்ள போகும்போது, பழையகால நைந்துபோன அரண்மனைப் பகுதி என்ற எண்ணம் தோன்றும்.
நீக்குநன்றி கீதா ரங்கன், படங்களை ரசித்தமைக்கு
மராட்டியருடைய காலத்தில் இசை, நாட்டியம் போன்றவை
பதிலளிநீக்குசிறப்பிடம் கண்டன...
தஞ்சை பாணி என்றே மலர்ந்தன
ஆமாம். பல வித்துவான்களை அவர்கள் வளர்த்தனர். கலைக்குச் சேவை புரிந்தனர். இதை மறுக்க இயலாது
நீக்குஅரண்மனை படங்கள் அனைத்தும்
பதிலளிநீக்குஅற்புதம்...
நன்றி. இருந்தாலும் அரண்மனையை இன்னமுமே சிறப்பாக வைத்துக்கொள்ளலாம். இவையெல்லாம் வரலாற்றின் எச்சங்கள் அல்லவா?
நீக்குசிறப்பான பதிவும்..
பதிலளிநீக்குநெல்லை அவர்களுக்கு நன்றி..
நன்றி துரை செல்வராஜு சார்.
நீக்குசிறப்பான படங்கள் மற்றும் தகவல்கள்... தஞ்சைக்கு செல்லும்போதெல்லாம் ஆலயம் மட்டுமே சென்று வந்திருக்கிறேன். இது வரை அரண்மனை, நூலகம் சென்றதில்லை. அடுத்த முறை செல்ல வேண்டும்......
பதிலளிநீக்குவாங்க தில்லி/திருவரங்கம் வெங்கட் நாகராஜ். தஞ்சையில் இன்னும் புகழ் வாய்ந்த ஆலயங்கள் இருக்கின்றன. அரண்மனையில் நூலகம் மற்றும் சிற்பக்கூடம் பார்க்கவேண்டிய ஒன்று
நீக்குசரபோஜி மன்னர் சத்குரு தியாகராஜரை தஞ்சாவூர் அரண்மனை
பதிலளிநீக்குஅரசவை கவிஞராக சம்பளத்திற்கு வேலை பார்க்க
அழைத்தார் என்று படித்துள்ளேன்.
தியாகராஜர் அந்த ஆஃபரை மறுத்து,
' நிதி சால சுகமா - ராம நீ
சன்னிதி ஸேவ சுகமா '
என்று கல்யாணி ராகத்தில் கிருதி
இயற்றினார் என்றும் படித்துள்ளேன்.
வாங்க கௌதமன் சார். சில மாதங்கள் முன்பு, ஆதிபராசக்தி படத்தைச் சில நிமிடங்கள் பார்த்தேன். சொல்லடி அபிராமி பாடலுக்கு முன்பு அவர்கள் சொன்னது, சரபோஜி மன்னரிடம்தான் இன்று பௌர்ணமி என்று தவறுதலாகச் சொன்னார் என்று. அந்த சரபோஜி மன்னர் யார்னு தெரியலை.
நீக்குநிதி சால சுகமா கீர்த்தனை பிறந்த விதத்தைப் படித்திருக்கிறேன். அவருக்கு மூன்று முறை இராமர் காட்சி தந்திருக்கிறார். அவருடைய பிருந்தாவனத்திற்கும் சென்றிருக்கிறேன் (அங்குதான் வருடா வருடம் கச்சேரி நடக்கும்)
சரஸ்வதி மஹாலுக்குக் கடைசியாப் போனது நாங்க ரெண்டு பேர் மட்டும், 2007 அல்லது 2008 இல். தஞ்சைப் பெரிய கோயிலுக்குப் பல முறை போயிருக்கோம். திருவையாறுக்கும் பல முறை போயிருக்கோம். தியாகராஜரின் நினைவிடமும் பல முறை போனோம்.
நீக்குதிருவையாறு போன கீதா சாம்பசிவம் மேடம், ஆண்டவர் அல்வாக் கடையில் சாப்பிட்டாரா? அசோகா அல்வா பிடிக்குமா?
நீக்குதமிழகத்தின் மணி மகுடம்
பதிலளிநீக்குதஞ்சை சரஸ்வதி மஹால்...
ஐயையோ.... கலஞ்சர் நூலகம்னு சொல்லாம சரஸ்வதி மஹாலைச் சொல்றீங்களே.. அதிலும் மதச்சார்பின்மைக்கு இடையூறா 'சரஸ்வதி' பெயர் இருக்குதே. மாற்ற இயலுமா?
நீக்கு// பெயருக்கு மாத்திரம் மன்னர், படை ஆங்கிலேயப்படை "
பதிலளிநீக்குதட் "மாப்பிள்ள அவருதான்... அவரு போட்டிருக்கற சட்டை என்னுது" மொமண்ட்!
வாங்க ஸ்ரீராம். மெது மெதுவாக நாடு பிடிக்கும் தந்திரம். அதிலும் நம்முடைய மக்களை வைத்துக்கொண்டே நம் கண்ணைக் குத்தும் தந்திரம். இதோ..இப்போ அவர்கள் அனுபவிக்க ஆரம்பித்துவிட்டார்கள். லண்டன் மேயர் யார் என்று பாருங்கள்
நீக்குநான் தஞ்சையில் தூய அந்தோணியார் பள்ளியில் படித்தபோது ஸ்வார்ட்ஸ் என்று ஒரு P E T மாஸ்டர் இருந்தார்.
பதிலளிநீக்குதஞ்சை மருத்துவக்கல்லூரி குடியிருப்பில் வசித்தபோது அடுத்த தெரிவில் இருந்த ஒரு பையன் பெயர் காட்டு ராஜா. அவர்கள் வீட்டில் ஒரு நாய் வளர்த்தார்கள். பொல்லாத நாய். அதைக் கண்டால் எங்களுக்கெல்லாம் பயம். துரத்தி வரும்!
தஞ்சை நினைவுகளே தனிதான் இல்லைய ஸ்ரீராம்? எனக்கு திருநெல்வேலி செல்லும்போதெல்லாம் பழைய நினைவுகள் வரும். நடந்தே பாளையங்கோட்டைக்கு நெல்லையிலிருந்து சென்று நினைவுகளை அசைபோடுவேன்.
நீக்குஇரண்டாம் சரபோஜியின் மனைவி அல்லது மகள் ரொம்ப குட்டை போலிருக்கே.. ஹிஹிஹி...
பதிலளிநீக்குஅரசனுக்குத்தான் முக்கியத்துவம். பாருங்க...எப்படி மேல் ஷாவனிஸ்டா இருந்திருக்காங்க. ஆனால் திருப்பதியில் தோடர்மால், அவருடைய இரண்டு மனைவிகளுக்கும் ஒரே மாதிரி சிலைகள் துலாபார மண்டபம் பக்கத்துல வச்சிருக்காங்க (செப்புச் சிலைகள்)
நீக்கு// நூல்கள் ஏட்டுச் சுவடிகள் போன்றவற்றைச் சேகரிக்கவேண்டும் என்று சரபோஜி மன்னருடைய எண்ணத்தால் ஏற்பட்ட நூலகம் இது //
பதிலளிநீக்குஇப்போது இருப்பவர்களுக்கு சுற்றிலும் புதர்களை சேர்க்கவேண்டும் என்று எண்ணம் ஏற்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன்!
ஹாஹாஹா... இந்த அரண்மனை மற்றும் நூலகப் பகுதிகளே சுத்தமாக இல்லை. பழையகால வீடு போன்ற தோற்றம் தருகின்றன
நீக்குதஞ்சையில் அவ்வளவு காலம் இருந்திருக்கிறேன். நான் அரண்மனையோ, சரசுவதி மஹாலோ பார்த்ததில்லை. பெரிய கோவில் கோபுரத்தின் உள்ளே மேலே ஏறிப் பார்க்கும் வசதி அப்போது இருந்ததாம். அதுவும் பார்த்ததில்லை.
பதிலளிநீக்குஅப்போ உங்களுக்குத் தெரிந்திருக்காது, பிற்காலத்தில் சிறந்த சிறுகதை மற்றும் பிளாக் பதிவுகள் எழுதும் பெரும் எழுத்தாளராக உருவாகப்போகிறோம் என்று. தெரிந்திருந்தால் இதற்கெல்லாம் சென்று வந்திருப்பீர்கள். என்ன செய்ய?
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாழ்க வளமுடன் கோமதி அரசு மேடம்
நீக்குவரலாறு மிக அருமை. யாருக்கு பின் யார் எவ்வளவு நாள் ஆண்டார்கள் , அவர்கள் ஆட்சி காலத்தில் நாடு எப்படி இருந்தது என்று சரித்திர பாடத்தில் படித்தது.
பதிலளிநீக்குநல்ல விரிவான செய்திகளை திரட்டி தந்தமைக்கு நன்றிகள்.
தஞ்சை அரண்மனை , சரஸ்வதி மஹால் எல்லாம் இரண்டு மூன்று தடவை பார்த்து இருக்கிறேன்.
இங்கு நீங்கள் போட்டு இருக்கும் படங்கள் அவற்றை நினைவு படுத்துகிறது.
படங்கள் எல்லாம் மிக அருமை.
கும்பகோணம் சக்ரபாணி கோயில் படம் மன்னர் படம் எல்லாம் அருமை.
வாங்க கோமதி அரசு மேடம்... இந்த இடங்களுக்கெல்லாம் நீங்கள் இருவரும் சென்றிருந்திருப்பீர்கள். இடங்கள் படங்களைப் பார்த்ததும் நினைவுக்கு வந்துவிட்டதா? நன்றி
நீக்கு/// பெயருக்கு மாத்திரம் மன்னர்,
பதிலளிநீக்குபடை ஆங்கிலேயப்படை ///
குள்ள நரித்தனம்... வயிற்றுப் பிழைப்புக்காக வெள்ளையன்ஸ்
செய்த சதி...
அவல் உன்னோடது...
உமி என்னோடது...
ஊதி ஊதி நானே தின்பேனாம்!...
அவங்க வந்தது வியாபாரம் செய்ய. லாபத்துடன் தானே எல்லாவற்றையும் செய்திருப்பார்கள்.
நீக்குவெள்ளையன்ஸ் பிரித்தாளும்
பதிலளிநீக்குசூழ்ச்சியில் வல்லவன்ஸ்...
நான் இல்லேன்னா அவன் உள்ளார வந்துடுவான் என்கிற கதைதான்...
பாஜக வந்துவிடும் என்று பயமுறுத்தி வாக்குகளை வாங்குவது பிரித்தாளும் சூழ்ச்சி இல்லையா? ஹாஹாஹா
நீக்குஎப்படியோ இந்திய பாரம்பரியத்துக்கு
பதிலளிநீக்குசல்யூட் அடித்து வயிறு வளத்து இருக்கான் வெள்ளையன்...
எப்படியோ வெள்ளையனுக்கு சல்யூட் அடித்து பலரும் வயிறு வளர்த்திருக்கிறார்களே... நம் மக்களைத் துன்புறுத்தியவர்களும் நம் மக்களே
நீக்குவரலாற்றுப் பேராசிரியர் ஆகி விட்டீர்கள். சரித்திர பாடம் கொஞ்சம், படங்கள் நிறைய என்று பதிவு சிறப்பு.
பதிலளிநீக்குJayakumar
வாங்க ஜெயகுமார் சார்... வரலாற்றை நான் படிக்கும் சந்தர்ப்பம் வந்தது. அவ்ளோதான். நன்றி
நீக்குதஞ்சை மராட்டிய அரசர்களின் வரலாறு அருமை.
பதிலளிநீக்குதஞ்சை அரண்மனை, மண்டபத்தை நேரில் பார்த்து வியந்திருக்கிறோம். ஹால் ஓவியங்கள் வர்ணங்கள் அசத்தலாக இருந்தன.
மீண்டும் உங்கள் படங்களில் கண்டு கொண்டோம். படங்கள் நன்றாக உள்ளன.
வாங்க மாதேவி அவர்கள். எல்லா இடங்களுக்கும் சென்றிருந்திருக்கிறீர்களா? சூப்பர்
நீக்கு/// அதிலும் மதச்சார்பின்மைக்கு
பதிலளிநீக்குஇடையூறா 'சரஸ்வதி' பெயர் இருக்குதே. மாற்ற இயலுமா?///
அதெப்புடி சரஸுவதிய் (!) பேரு வெக்கலாம்...
இது ஓரிய கூர்ப்பண ஜதி !?!...
ஹா ஹா ஹா.... பேசாமல் உங்களை அரநிலையத்துறைல போட்டுவிடலாம் 'அறநிலையம்' அல்ல.
நீக்குசரச்சுவதி மால் ன்னு
பதிலளிநீக்குஇருந்திருக்கலாம்...
என்ன ஒரு அருமையான ஆலோசனை. ஒருவேளை அந்த சரஸ்வதியே வந்து உங்களை கவனிக்கப் போகிறா.
நீக்கு/// இருந்தாலும் அரண்மனையை இன்னமுமே சிறப்பாக வைத்துக்
பதிலளிநீக்குகொள்ளலாம்.///
இதுக்குள்ள வாக்கு வங்கி இல்லியே
உண்மைதான். வாக்கு வங்கி இருப்பதால்தான் சிலருக்கு அதிர்ஷ்டம் அடிக்கிறது. வ.உ.சி போன்றவர்களுக்கு எந்த கௌரவமும் அரசு செய்வதில்லை
நீக்குமராட்டிய வரலாற்றை படித்து, உள்வாங்கி அதை சிறப்பாக, சுருக்கமாக தந்திருக்கும் உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அரண்மணையின் படங்கள் அற்புதம்! zoom lens உபயோகித்தீர்களா?
பதிலளிநீக்குவாங்க பானுமதி வெங்கடேஸ்வரன் மேடம். திருப்பதி மார்கழி மாதப் பிறப்புக்குச் சென்றிருந்ததால் பதிலளிக்க தாமதம். இப்போல்லாம் அலைபேசிதான். கேமரா கொண்டுசெல்வதில் ஆர்வம் குறைந்துவிட்டது. டக் டக் என படமெடுக்கலைபேசிதான் சுலபமாக இருக்கு.
நீக்குநிறையப் போயாச்சு என்றாலும் முதல் முறை குழந்தைகளுடன் போனது, எண்பதுகளின் ஆரம்பத்தில்! இன்னமும் நினைவில் இருக்கு. வீட்டுப் பிரச்னைகளிலிருந்து மீண்டு அங்கே போய் மனதில் ஆறுதலும் புத்துணர்வும் ஏற்பட்ட நினைவுகள். கடைசியாகப் போனது நாங்க ரெண்டு பேர் மட்டும். 2007 அல்லது 2008 இல். தஞ்சைக் கோயிலுக்குக் கடைசியா 2023 இல் கூடப் போனோம். பையர், மருமகள், குழந்தையுடன். ஏகக் கூட்டம். நடக்க முடியாமல் திரும்பி வந்து காரிலேயே உட்கார்ந்துட்டோம். அவங்க மூணு பேரும் மட்டும் போயிட்டு வந்தாங்க. அதுக்கப்புறமா எங்கேயுமே போகலை. 2023 ஆம் ஆண்டிலேயே அந்த வருஷமே நவம்பரில் நம்ம ரங்க்ஸ் படுத்துட்டார்.
பதிலளிநீக்குவாங்க கீதா சாம்பசிவம் மேடம். நீங்கள் பலமுறை பயணப்பட்ட இடங்களாயிருக்கும். சொல்வது எளிது, காலை ஒன்பது மணிக்கெல்லாம் தஞ்சை பெரியகோயிலில் இருந்தால் கூட்டம் இருக்காது, சுடாது, நிம்மதியா பார்க்கலாம். ஆனால் எல்லோரும் சேர்ந்து பயணப்படும்கோது இது சாத்தியமில்லை. 2023ல் போயிருந்தீர்களா?
நீக்குமாமாவைப் பற்றிப் படித்தால் அவரது ஆஜானுபாகுவான தோற்றமும், பிறருக்கு ஆர்வமுடன் தகவல்கள் பரிமாறுவதும்தான் நினைவுக்கு வருது.
ஆமாம், 2023 ஆகஸ்டில் போனோம், குட்டிக் குஞ்சுலுவுக்காக. ஆனால் எங்க இருவராலும் சுத்த முடியலை அப்போவே என்பதால் திரும்பிக் காரிலேயே உட்கார்ந்துட்டோம். அப்போ எடுத்த படம் தான் இப்போது முகநூல் ப்ரொஃபைலில் இருக்கு. அதன் பின்னர் அதே வருஷம் செப்டெம்பரில் சென்னைக்குப் போனோம், ஸ்ரீரங்கத்திலிருந்து காரிலேயே தான் போனோம். 2018க்குப் பின்னர் ரயில் பயணமும் செய்யவில்லை. 2023 செப்டெம்பருக்குப் பின்னர் மருத்துவமனையும் வீடும் தான். குலதெய்வம் கோயிலுக்கு மட்டுமாவது போகப் பெரும் முயற்சி செய்தும் முடியலை. அவரால் கடைசி வரை போக முடியலை என்பது அவருக்கு ரொம்பவே வருத்தம் தான், அதோடு இவங்க அறங்காவலர்களாக இருந்த பெருமாள் கோயிலுக்குக் கும்பாபிஷேஹம் செய்யத் திருப்பணியும் ஆரம்பித்திருந்தது. சென்ற முறை நாங்க முன்னிட்டுக் கொண்டு பணம் வசூல் செய்து எல்லா ஏற்பாடுகளும் செய்து முன்னின்று கும்பாபிஷேஹத்தைப் பெருமாள் அருளால் நடத்த முடிந்தது. அப்போதிலிருந்து கருடசேவைக்கு ஏற்பாடு பண்ணணும் என மாமாவின் ஆசை. ஆனால் முடியலை. கை உடைந்திருந்த பெருமாளைச் செப்பனிட்டு கருடசேவை இம்முறை நடந்திருக்கிறது. அதன் பின்னரும் இரு முறை கருடசேவை நடத்தி இருக்காங்க. வீடியோவில் பார்த்தேன். மாமாவுக்கு அது கூடக் கிடைக்கலை! :(
நீக்குகிட்டத்தட்ட இரண்டு வருடங்கள்...முடிந்த போதெல்லாம் கருவிலிக்குச் சென்றிருக்கிறீர்களே... இது ஒரு புது அத்தியாயம் என நினைத்துக்கொள்ளுங்கள். ஏதேனும் புதிய பதிவுகள் எழுத ஆரம்பியுங்கள்.. நம்பெருமாள் யாத்திரைத் தொடரைத் தொடருங்கள். மனம் ஆறுதல் பெறும்.
நீக்குமேலதிகத் தகவல் என் மாமனாரின் முன்னோர்களில் ஒருத்தரான மஹாகணபதி ஐயர் என்பவர் திருநெல்வேலிப்பக்கமிருந்து சரபோஜி அழைப்பால் தஞ்சைக்கு வந்து அங்கே வைத்தியராக இருந்திருக்கார். அவர் காலத்தில் தான் எங்க வீட்டில் இருக்கும் ஸ்ரீராமர் படம் அவருக்குக் கொடுக்கப்பட்டது என்றோ அல்லது வரையச் சொல்லி வாங்கினார் என்றோ சொல்லுவார்கள். அவருக்கு இறையிலியாகக் கொடுக்கப்பட்ட நிலங்களே கருவிலி, பரவாக்கரை கிராமங்களில் இருந்தன. அதைப் பார்த்துக்கவே என் மாமனாரின் கொள்ளுப் பாட்டனார் ஸ்ரீகிருஷ்ணையர் என்பவர் பரவாக்கரை வந்ததாகச் சொல்லுவார்கள். இவை எல்லாம் வீட்டில் இருந்த பழைய ஓலைச் சுவடிகளில் இருந்திருக்கின்றன. அருமை தெரியாமல் யாரோ கேட்டார்கள் என்பதால் தூக்கிக் கொடுத்துவிட்டார்கள்.
பதிலளிநீக்குநாங்க, அரசர் கேட்டுக்கொண்டார் என்பதற்காக காஞ்சியிலிருந்து கோபாலசமுத்திரம் குடிபோனவல்க. எங்க வீட்டில் மிகப்பெரிய பெட்டி நிறைய ஏகப்பட்ட ஓலைச் சுவடிப் புத்தகங்கள் இருந்தன. நானே பார்த்திருக்கிறேன்.
நீக்குஇராமர் படத்தை நினைவுபடுத்திவிட்டீர்கள். அதனை நான் படமெடுத்திருக்கிறேன் (நன்றாக ஹா ஹா ஹா)