12.12.25

பாடும் பறவை ஆயிரம் நடுவே நானும் ஒரு பறவை

 

2007 ல் வெளிவந்த 'ஜப் வீ மெட்' என்கிற ஹிந்திப் படதைத் தழுவி, தழுவி அல்ல, அப்படியே தமிழில் பரத்தையும் தமன்னாவையும் போட்டு எடுத்தார்கள்.  R கண்ணன் இயக்கத்தில் வித்யாசாகர் இசை.  படத்தின் பெயர் 'கண்டேன் காதலை' 

இன்று பகிரப்படும் பாடலான "சுத்துது சுத்துது " பாடலை எழுதியவர் நா முத்துக்குமார்.  பாடி இருப்பவர் ஹரிஹரன்.

படத்தில் உம்மணாமூஞ்சி கேரக்டரான பரத் குழந்தைக்கு - அவர் குழந்தை அல்ல - மொட்டை போட்டு காது குத்தும் வைபவத்தில் அழும் குழந்தையை சமாதானப்படுத்த திடீரென எல்லோரும் புருவம் உயர்த்தும் வண்ணம் பாடி ஆடுகிறார்.  முதல் முறையாக பரத் ரசிக்கும்படியான ஒரு பெர்ஃபாமென்ஸ் கொடுத்திருக்கிறார் என்பது என் நினைப்பு!

சுவாரஸ்யமான படம்; சுவாரஸ்யமான காட்சி.

எந்த விதமான ஆரம்ப இசையும் இல்லாமல் சட்டென தொடங்கும் ஹரிஹரன் குரல் டக்கென கவர்ந்து விடும்.அதோடு அவர் ஒரு வார்த்தையின் முடிவில் ஹம்மிங் செய்து அதை வளைத்து வளைத்து நீளமாக இழுப்பபது கவர்ச்சி.

நெல்லையில் அபிமான தமன்னா பாடலில் வருகிறார்.  தமன்னாவின் தாத்தாவாக வருவது காதலிக்க நேரமில்லை ரவிச்சந்திரன்.

கொக்கே கொக்கே பூவ போடு…
மக்கா மக்கா கொலவ போடு…
கெழக்கா மேற்கா வேட்ட போடு…
இதமா பதமா கம்மல் போடு…

விளையாட்டு பயலுங்க யாரு…
வெண்டைக்கா கம்மல போடு…
பணக்காரன் மாமன் யாரு…
வைரத்தில் லோலாக்கு போடு…

வலி ஏதும் இல்லாம…
துளி ரத்தம் சிந்தாமல் தோடு போடு…
சித்தப்பு பெரியப்பு சீரோடு…
விருந்தொண்ணு போடு போடு…

சுத்துது சுத்துது இந்தாறு…
சொக்குது சொக்குது இந்தாறு…
சிக்குது சிக்குது இந்தாறு…
அத சொன்னா கூட தீராது…

சுத்துது சுத்துது இந்தாறு…
சொக்குது சொக்குது இந்தாறு…
சிக்குது சிக்குது இந்தாறு…
அத சொன்னா கூட தீராது…

கத்தி எரிஞ்சது போல…
நீ சுத்தி இழுப்பதினால…
பஞ்சு வெடிப்பது போல…
என் நெஞ்சு துடிப்பதுனால…
அடி மயிலே உன்னால் மனசுக்குள்ள தகராறு…

சுத்துது சுத்துது இந்தாறு…

உனக்கோர் பேர்தான் கிடையாது…
அத நான் சொல்ல முடியாது…
கடல பிடிச்சு கையில் அடக்கிட தெரியாது…

உனக்கோர் பேர்தான் கிடையாது…
அத நான் சொல்ல முடியாது…
கடல பிடிச்சு கையில் அடக்கிட தெரியாது…

விண்ணில் போனா நிலவாகும்…
மண்ணில் வந்தா மழையாகும்…
கோவில் போனா சிலையாகும்…
கொடியில் பூத்தா மலராகும்…

ஒத்த வார்த்தையில் சொல்லச் சொன்னா…
உனது பேரே அழகாகும்…

சுத்துது சுத்துது இந்தாறு…

ஓ… அழகே உனை பார்க்கதானே…
அத்தனை ஊரும் வருகிறதே…
தென்னங்காயில் கூடதான்…
மூணாம் கண்ணும் முளைக்கிறதே…

ஓ… அழகே உனை பார்க்கதானே…
அத்தனை ஊரும் வருகிறதே…
தென்னங்காயில் கூடதான்…
மூணாம் கண்ணும் முளைக்கிறதே…

சந்தர்பம் நம்பி போனா…
சந்திரன் வந்து கடை போடும்…
அந்த பக்கம் நீ போனா…
மின்னல் உன்னை எடை போடும்…

ஒத்த வார்த்தையில் சொல்லச் சொன்னா…
எல்லோர் மனசும் தடுமாறும்…



=======================================================================================

கடைசி பாராவில் இரண்டே வரிகள்!  ஆனால் அதுதான் நீளமான பாரா!

தமிழ் திரையுலகின் பொற்காலம் என சொல்லப்படும் 1960களின் மத்தியில் நாயகர்களாக திரைப்பிரவேசம் செய்தவர்கள்தான் நடிகர் ரவிச்சந்திரன் மற்றும் நடிகர் ஜெய்சங்கர். எம் ஜி ஆர், சிவாஜி, ஜெமினிகணேசன், எஸ் எஸ் ஆர் போன்ற ஜாம்பவான் நடிகர்கள் கோலோச்சியிருந்த இந்தக் காலகட்டங்களில் இரண்டாம் கட்ட நாயகர்களாக அறிமுகமான இவ்விருவரில் மிகவும் வித்தியாசமான ஒரு அதிர்ஷ்ட நாயகனாக அறிமுகமானவர்தான் நடிகர் ரவிச்சந்திரன், 

மலேசியாவின் கோலாலம்பூரில் தனது பள்ளிப் பருவத்தை முடித்து, கல்லூரி படிப்பினை திருச்சியிலுள்ள 'செயின்ட் ஜோசப் கல்லூரியில் பயின்று, பின் மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்காக சென்னைக்கு பிரவேசம் செய்தவர்தான் நடிகர் ரவிச்சந்திரன்.

அப்போது புதுமை இயக்குநர் ஸ்ரீதர், தான் எடுக்கப் போகும் புதுப்படம் ஒன்றிற்கு புதுமுகங்களைத் தேடிக் கொண்டிருந்த நேரம். நண்பர்கள் தூண்டுதலின் பேரில், எந்தவித பெரிய எதிர்பார்ப்பும் இன்றி, நடிகர் ரவிச்சந்திரனும் அந்த புதுமுகத் தேர்வில் கலந்து கொள்ள, இவரைப் பார்த்த இயக்குநர் ஸ்ரீதர், தனது புதுப் படத்திற்கு தான் எதிர்பார்த்த வசீகரமான ஒரு துடிப்புமிக்க இளைஞன் கிடைத்துவிட்டான் என்ற முடிவுக்கு வந்து, அவரையே நாயகனாகவும் தேர்வு செய்துவிட்டார். 

அதுவரை பி எஸ் ராமன் என்ற இயற்பெயருடன் இருந்த அந்த இளைஞன், அன்றிலிருந்து ரவிச்சந்திரன் என்ற நட்சத்திரப் பெயர் கொண்டு அழைக்கப்படலானார்.


சினிமா என்ற கனவுலகில் நடித்துவிட மாட்டோமா? என ஏங்கித் தவிக்கும் லட்சக்கணக்கானோர் மத்தியில், எதிர்பார்ப்பு ஏதுமின்றி எடுத்த முதல் முயற்சியிலேயே முழு வெற்றி பெற்ற ஓர் அதிர்ஷ்ட நாயகனாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான நடிகர் ரவிச்சந்திரனின் முதல் திரைப்படமே அவர் முழுநீள நாயகனாக நடித்த திரைப்படம்.  முதல் திரைப்படமே முழுநீள வண்ணத் திரைப்படம், முதல் திரைப்படமே 25 வாரங்கள் ஓடிய வெள்ளிவிழா திரைப்படம் என முழுமையான அதிர்ஷ்டத்தோடு கலையுலகில் கால் பதித்து, 'இதயக்கமலம்", 'குமரிப்பெண்', 'நாம் மூவர்", "அதே கண்கள்", "நான்", "மூன்றெழுத்து" என எண்ணற்ற வெற்றித் திரைப்படங்களைத் தந்து, எம் ஜி ஆர் மற்றும் சிவாஜிக்கு இணையான ஓர் வெற்றியைப் பதிவு செய்த இவர், படிப்பிற்காக சென்னை வந்து, நடிக்கும் வாய்ப்பு கிட்டி நாயகனாக உயர காரணமான 'காதலிக்க நேரமில்லை" திரைப்படம் இவருக்கு கிடைத்த ஓர் மிகப் பெரிய அதிர்ஷ்டம் என்பதில் யாருக்கும் எந்த ஐயமும் இருக்காது என்பதே உண்மை.

தினமலர் - ஃபிளாஷ்பேக் 

==========================================================================================

செம்பருத்தி என்று ஒரு படம் 1972 ல் வெளியானது- மலையாளத்தில்! மது, ரோஜா ரமணி நடித்த இந்தப் படத்தை கமல், ஸ்ரீகாந்த், நாகேஷ், ரோஜா ரமணியை வைத்து தமிழில் பருவகாலம் என்று தயாரித்தனர்.

G. தேவராஜன் இசை. தமிழில்  புலமைப்பித்தன் பாடல்களை எழுதி இருந்தார்.  மலையாளத்தில் 8 பாடல்கள்.  தமிழில் நான்கே பாடல்கள்.  அதிலும் ஒன்று இன்று பகிரும் பாடலின் சோக வெர்ஷன்.  மலையாளத்தில் ஏகப்பட்ட விருதுகளை அள்ளியது.  தமிழில் சீந்துவாரில்லை! ஜோஸ் பெர்னாண்டோ இயக்கம்.  

லாட்ஜில் நடந்த ஒரு கற்பழிப்பு மற்றும் கொலையின் குற்றவாளியை கண்டுபிடிக்கும் கதை.  கமல்தான் குற்றவாளி என்று ஞாபகம்.

பாடலைப் பாடி இருப்பவர் மாதுரி.  இனிமையான குரல்.  இனிமையான பாடல்.  சிலோன் ரேடியோவில் சொல்வது போல "கேட்டு மகிழுங்கள்..."

வெள்ளி ரதங்கள் அழகு மேகம்
செல்லும் வீதி சிவந்த வானம்
பாவை நெஞ்சில் இளமை ராகம்
பாட வந்தது பருவ காலம்

வெள்ளி ரதங்கள் அழகு மேகம்
செல்லும் வீதி சிவந்த வானம்
பாவை நெஞ்சில் இளமை ராகம்
பாட வந்தது பருவ காலம்

பாடும் பறவை ஆயிரம் நடுவே
நானும் ஒரு பறவை
பாசம் பொழியும் உயிர்களுக்கெல்லாம்
தந்தேன் எனதுறவை

எங்கோ இருக்கும் மனிதர் யாரும்
இங்கே வரவேண்டும்
இனி எல்லா நலமும் எல்லா வளமும்
எவரும் பெறவேண்டும்…
எவரும் பெறவேண்டும்…ஆ…ஹா…ஹா..ஹா
ஆ…ஹா…ஹா..ஹா ஆ….ஆ……ஆஅ…..ஆ…..

வெள்ளி ரதங்கள் அழகு மேகம்
செல்லும் வீதி சிவந்த வானம்
பாவை நெஞ்சில் இளமை ராகம்
பாட வந்தது பருவ காலம்…
பருவ காலம்…பருவ காலம்…

முல்லைக் கொடியும் என்னைப் பார்த்து
சிந்தும் புன்னகையோ
அலை மோதும் அருவி என்னைப் போலே
இளமைக் கன்னிகையோ

அன்னை மடியில் பிள்ளை இருந்தால்
அன்பு பெருகாதோ
கொடி ஆசை கொண்டு தழுவும் பூவின்
உள்ளம் உருகாதோ..உள்ளம் உருகாதோ……
ஆ…ஹா…ஹா..ஹா
ஆ…ஹா…ஹா..ஹா ஆ….ஆ……ஆஅ…..ஆ…

வெள்ளி ரதங்கள் அழகு மேகம்
செல்லும் வீதி சிவந்த வானம்
பாவை நெஞ்சில் இளமை ராகம்
பாட வந்தது பருவ காலம்…
பருவ காலம்…

38 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா. வணக்கம். பிரார்த்திப்போம்.

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    இன்றைய வெள்ளி பாடல் பகிர்வில் முதல் பாடல் இதுவரை கேட்டதில்லை. இப்போது கேட்டு ரசித்தேன். நடனமும் நன்றாக உள்ளது. என்னபடமென்று தெரியவில்லையே..!! குறிப்பிட்டிருக்கலாம் . தமன்னா அழகாக இருக்கிறார். பரத்தும்தான்.

    இரண்டாவது பாடல் அடிக்கடி கேட்டுள்ளேன். அதில் பாடகி மாதுரி அவர்களின் இனிமையான குரலென்று இப்போதுதான் அறிகிறேன். படமெல்லாம் பார்த்ததில்லை. தொலைக்காட்சியில் பாடல் கேட்டுள்ளேன்.

    நடிகர் ரவிச்சந்திரன் பற்றிய விபரங்கள் தெரிந்து கொண்டேன். அப்போதையவர்களுக்கு இவரின் ஸ்டைல் பிடிக்கும். (எங்கள் வீட்டில் எனக்கும், அண்ணாவுக்குந்தான்.) அதே கண்கள் படத்தில் பாடல்கள் அனைத்தும் நன்றாக இருக்கும். பிறகு வந்த படங்களில் குணச்சித்திர நடிகராகவும் வில்லனாகவும் நடித்திருக்கிறார. வில்லனாக இவருக்கு அவ்வளவாக நடிக்க வராது. ஒவ்வொருவர் பாணி அப்படி.

    இன்றைய அருமையான பாடல்களுக்கும், செய்திகளுக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா...  படத்தின் பெயர் 'கண்டேன் காதலை'...  பதிவில் சேர்க்க மறந்திருக்கிறேன்.  சேர்த்து விட்டேன். __/\__

      நடிகர் ரவிச்சந்திரன் பற்றி சொல்ல வேண்டுமென்றால் அப்போதைய கனவு நாயகன்.  சாக்லேட் பாய்!

      நீக்கு
  3. பதில்கள்
    1. இன்றைய பாடல்களைக் கேட்டதே இல்லை...

      நீக்கு
    2. வாங்க செல்வாண்ணா...  வணக்கம்.

      முதல் பாடலையாவது கேட்டதில்லை என்று சொல்லலாம்.  இரண்டாவது பாடலைக் கூட கேட்டதில்லையா?

      நீக்கு
  4. ரவிச்சந்திரன் படங்களில் மிகவும் பிடித்தது அதே கண்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காதலிக்க நேரமில்லை பிடிக்காதா? நாம் மூவர்?

      நீக்கு
  5. காதலிக்க நேரமில்லை///

    இது தனி ரகம்...
    நிகரில்லா திரைப்படம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். அன்றும், இன்றும், என்றும் ரசிக்க வைக்கும் படம்.

      நீக்கு
  6. பதில்கள்
    1. இன்னும் இருக்க்கிறதே..   அதே கண்கள், சபதம், 

      நீக்கு
  7. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  8. இரண்டு பாடல்களும் கேட்டு இருக்கிறேன். இரண்டு படமும் பார்த்து இருக்கிறேன்.
    முதல் பாடல்வரிகளில் உறவுகளை சொல்லி இருப்பது நன்றாக இருக்கிறது. அடுத்த பாடலும் பாசம், அன்பை சொல்கிறது.

    ரவிசந்திரன் பற்றிய செய்திகள் படித்தேன்.

    பதிலளிநீக்கு
  9. காதலிக்க நேரம் இல்லை, உத்தரவின்றி உள்ளே வா தொலைக்காட்சியில் வைக்கும் போது எல்லாம் பார்த்து விடுவேன். சிரிப்பாக இருக்கும்.
    பாடல்களும் நன்றாக இருக்கும்.
    அதே கண்கள் படம் போன மாதம் வைத்தார்கள், பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  எல்லாமே சுவாரஸ்யமான படங்கள்.

      நீக்கு
  10. பரத்தும், தமன்னாவும் அக்கா தம்பி போல இருக்கிறது.
    இரண்டாவது பாடல் கேட்ட ஞாபகம் வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பரத்துக்கு சின்ன முகம்! நன்றி ஜி.

      நீக்கு
    2. கில்லர்ஜி இப்படி பல படங்களைக் கூர்ந்து கவனித்தால், ரஜினியின் கதாநாயகிகள் பெரும்பாலும் அவருடைய பெண் அல்லது பேத்தி போல இருக்கிறார்கள், கமலின் கதாநாயகிகள் பெண்கள் போல இருக்கிறார்கள் என்றெல்லாம் சொல்வாரோ?

      நீக்கு
  11. அனைவருக்கும் வெள்ளி மதிய வணக்கம்.

    முதலாவது பாடல் இப்பொழுதுதான் கேட்கிறேன். பாடலும் காட்சிப் படுத்தலாம் நன்று.

    இரண்டாவது பாடல் கேட்டு இருக்கிறேன்.
    " சிலோன் ரேடியோவில் சொல்வது போல கேட்டு மகிழுங்கள்" :) அட...டா! இலங்கை தமிழ் வந்துவிட்டது. நன்றி.

    இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பாக்குவார்கள் கேட்டு இருக்கிறேன். அருமையான பாடல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கமாதேவி... வணக்கம். சிலோன் ரேடியோ பற்றி சொல்லும்போது உங்களை மறந்து விட்டேன் பாருங்கள்! கேட்டு ரசித்ததற்கு நன்றி.

      நீக்கு
  12. ஹரிஹரன் குரலுக்கு மயங்காதோர் யார்!

    எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

    இந்தப் பாட்டு இப்பதான் கேட்கிறேன் ஸ்ரீராம்.

    நடன இயக்குநர் யாரோ? பார்க்கிறேன். டான்ஸ் மூவ்மென்ட்ஸ் நல்லாருக்கு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா... ஆஹா... ஒரு நல்ல பாடலை உங்களை கேட்க வைத்து விட்டேன். இல்லையா?

      நீக்கு
  13. அம்பி சுந்தர் என்று சொல்கிறது கூகுள்! டான்ஸ் நல்லாருக்கு. பரத்தும் நல்லா ஆடுகிறாரே.

    தமன்னா ரொம்ப அழகா இருக்காங்க....

    ஃபுல் பாட்டும் கேட்டுவிட்டு வருகிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். நடனம் சுவாரசியமாகவே இருக்கும். தமன்னா இதன் ஹிந்தி பதிப்பான ஜப் வி மெட் படத்தின் நாயகி கரீனா கபூர் சாயலிலேயே இருப்பார்.

      நீக்கு
  14. இரண்டாவது பாடலைக் கேட்டிருக்கிறேன். முதல் பாடலைக் கேட்ட நினைவே இல்லை.

    பதிலளிநீக்கு
  15. வித்யாசாகர் நிறைய நல்ல பாடல்கள் போட்டிருக்கிறார்.

    இந்தப் பாட்டும் நல்லாருக்கு. ஏதோ ஒரு ராகம் அடிப்படையில். டக்குனு பிடி கிட்டியில்லா..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்... வித்யாசாகர் நிறைய மெலடி கொடுத்திருக்கார்.

      நீக்கு
  16. ரவிச்சந்திரன் பற்றிய தகவல்கள் புதிது. இத்தனைப்படங்கள் நடித்திருக்கிறாரா! காதலிக்க நேரமில்லையில் அவர் நடித்திருக்கிறார் அதுவும் முதல்படம் என்பதுமட்டும் தெரியும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 2010, 2011 ல் கூட நடித்திருக்கிறார் என்று ஞாபகம்.

      நீக்கு
  17. வெள்ளி ரதங்கள் - வரிகள் பார்த்ததும் தெரியவில்லை கேட்டதும் அட கேட்டிருக்கிறேன். என்று நினைவு வந்தது.

    இதே மெட்டில் வேறு பாடல் உண்டோ என்றும் மனம் யோசிக்கத் தொடங்கியது.
    கொஞ்சம் வாணி ஜெயராமின் குரல் ஹை பிச் போன்று தோன்றும் டக்குனு.

    அழகான பாடல். மோகனம் பேஸ் போல் இருக்கு.

    கீதா

    பதிலளிநீக்கு
  18. பாடல்கள் தெரிந்த பாடல்கள். Jab We Met பார்த்து இருக்கிறேன். தமிழிலும் சில காட்சிகள் பார்த்ததுண்டு.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!