வரலாறு என்று நமக்குச் சொல்லப்படுவது வேறு. நிகழ்ந்த சம்பவங்கள் வேறு என்ற புரிதல் நமக்கு இருக்கவேண்டும். ஒருவரது அரசாட்சியை, வாழ்க்கையை, பல்வேறு வரலாற்றுச் சம்பவங்கள் மூலம் இப்படித்தான் வாழ்ந்தார் என்று ஒரு கோடிட்டு அல்லது விளக்கமாக் காண்பிப்பர். புத்தகங்கள் இப்படித்தான் எழுதப்படுகின்றன. அதனால் இவர் இப்படித்தான் என்று நாம் புரிந்துகொள்கிறோம். இதில் அவரவர் பங்கிற்கு இடைச்செருகல் செய்து இன்னும் புனிதமாகவோ இல்லை மோசமாகவோ சித்தரிப்பர். நாம் புரிந்துகொள்ளவேண்டியது, ஒரு மனிதன் என்பவன் நல்ல கெட்ட குணங்களின் கலவையாகத்தான் பிறக்கிறான். அதுவே ஒரு தலைவன் அல்லது அரசன் என்பவன், தன்னைச் சுற்றியுள்ளவர்களால் கட்டமைக்கப்படுகிறான். மிகவும் கூர்மையாக ஒருவரது வாழ்க்கையைப் பார்க்கும் சந்தர்ப்பம் நமக்கு நேர்ந்தால், அவர் நல்ல, கெட்ட குணங்களைக் கொண்டவர் என்பது புலப்படும். அவரவர் தாங்கள் விரும்பியவாறு சித்தரிக்க, நல்ல அல்லது கெட்ட சம்பவங்கள்/குணங்களை முதன்மைப்படுத்துவர். ஒவ்வொருவர் வாழ்க்கையையே, ‘இவர் நல்லவர்’, ‘இவர் கெட்டவர்’ என்று இரு விதமாகவும் அவரவர் மனோரத த்திற்கு ஏற்றவாறு சித்தரிக்க இயலும். காலம் என்ற கனவான், நம் கண் முன்னால், காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர் என்று ஒரு வரிசையைக் காண்பித்துள்ளதால் நம்மால் ஒப்பீட்டு முறையிலும் பல்வேறு நிகழ்வுகளின் முறையிலும் நல்லவர் யார், அவர் செய்த நன்மை என்ன, தீய சக்தி யார், எப்படி அவர் தன் குடும்பத்தை முன்னேற்றிக்கொண்டார் என்பதையெல்லாம் கண்டுகொள்ள முடிகிறது. இதனை நம் புரிதலுக்காக இங்கு குறிப்பிட்டேன்.
இராஜராஜ சோழன் (அவனுடைய முன்னோர்) மற்றும் அவனுடைய வழித்தோன்றலான இராஜேந்திர சோழன் ஆகியோரை நாம் glorify புனிதப்படுத்துதலைச் செய்கிறோம். இதன் காரணம் அவர்கள் செய்த சாதனைகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளவை, நாம் நம் கண்ணால் காணக்கூடிய அரும் செயல்களைச் செய்துள்ளவையே. ஆனால் பக்கத்திலிருந்து கவனித்த ஒருவரால், இருவருடைய குணநலன்கள், குணக்கேடுகள், செய்த தவறுகள் என்று எல்லாவற்றையும் எழுத முடியும். இதையுமே, அவருடைய கண்ணோட்டத்தில்தான் (அல்லது அவர் நம்பியபடித்தான்) எழுத இயலும். இல்லை, அரசரின் அவையில் அல்லது அவரது நேரடிப் பார்வை படும் இடத்தில் இருப்பதால் கொஞ்சம் அதீதமாக புனைவுகளையும் கலந்து அரசரை மகிழ்விப்பதாகவும் எழுதியிருக்கக் கூடும். அதனால் ஒருவரைப் பற்றி நாம் ஒரு முடிவுக்கு வர, ஒரு சில புத்தகங்கள் மாத்திரம் போதாது, யார் அதனை எழுதியிருக்கிறார் என்பதும் முக்கியம். சரி இப்போ நாம் வரலாற்றுச் செய்திகளுக்கு வருவோம்.
சத்ரபதி சிவாஜி அவர்கள் பற்றி நாம் படித்தவைகள் மற்றும் பார்த்தவைகள் (திரைப்படத்தில்) இவைகளைக் கொண்டு நாம் ஒரு பிம்பம் கொண்டிருப்போம். மராத்திய வரலாறு படிக்கும்போது, நான் படித்தவைகளில் ஒருசிலவற்றை இங்கு பகிரலாம் என்று நினைக்கிறேன்.
மராட்டியர்கள்
வரலாற்றில் யாதவராஜா என்று குறிப்பிடப்படும் லகோஜி ஜாதவ்ராவ் என்பவர் தேவகிரி யாதவ
அரச மரபினைச் சேர்ந்தவர்.
சிந்த்கெட்
என்ற பகுதிக்கு தேஷ்முகியாக இருந்தார். ‘தேஷ்முகி’ என்றால் என்ன? தேசத்தின் தலைவன் (அல்லது பிராந்தியத்தின்
தலைவன்).
இது
பரம்பரை பரம்பரையாக வரும் பொறுப்பு. இதனை நிலப்பிரபுத்துவத்தின் நீட்சி
என்று சொல்லலாம். தேஷ்முகி என்ற பொறுப்புள்ளவருக்கு
படை இருக்கும்.
நிலப்பிரதேசத்திற்கு
அரசர் மாதிரி.
நிலத்தின்
காவல் மற்றும் நீதி பொறுப்பு அவரைச் சார்ந்தது. வரிவசூலிப்பதும் அவரது கடமை. அதில் ஒரு பகுதி அவரைச்
சேரும்.
மிகுதி, பேரரசரை (அதாவது தேஷ்முக்காக
நியமித்த அரசரைச்)
சேரும். அந்தப் பிராந்தியத்தின் அரசர், நிஜாம் ஷா. இவர் பாமினி சுல்தான்களை
வென்று 1494ல் தன் பெயரில் ஒரு
இராஜ்ஜியத்தை ஸ்தாபித்தார். இதன் தலைநகராக அகமது நகர்
அமைந்தது. (அதன் முந்தைய பெயர் பிங்கார்)
முகலாயப் பேரரசன் ஷாஜஹான் 1636ல் நிஜாம்ஷாவைத் தோற்கடித்து இடங்களைக் கைப்பற்றும் வரை இந்த டெக்கான் சுல்தான்களில் ஒருவரான நிஜாம் ஷா பரம்பரை இந்த இடத்தை ஆண்டது. சிந்த்கெட் பகுதிக்கு லகோஜி ஜாதவ்ராவ் என்பவர் தேஷ்முக் என்று சொன்னேன் அல்லவா? இவருக்குத் தலைவர் நிஜாம் ஷா. லகோஜி ஜாதவ்ராவ், 10,000 குதிரைகள் கொண்ட படைக்குத் தலைவர். இவரது ஆதரவில் மாலோஜியும் அவரது தம்பி விட்டோஜியும் இருந்தனர் (இவங்க யார் என்றால், இவர்களும் படைத்திறன் மிக்க தளபதிகள், ஆனால் அரசர்கள் அல்ல என்று வைத்துக்கொள்ளலாம். இவர்களது வரலாற்றுக்குச் சென்றால் தலையைச் சுத்திவிடும்) 1599ல் ஹோலிப் பண்டிகை நடந்த சமயத்தில், மாலோஜி, தன் மகன் ஷாஜியுடன் லகோஜி ஜாதவ்ராவ் வீட்டுக்குச் சென்றார். லகோஜிக்கு ஒரு மகள் இருந்தாள். அவள் பெயர் ஜீஜா பாய். லகோஜி, ஷாஜியை அழைத்து, ஜீஜாபாயின் அருகில் அமர்த்தி. இருவரும் தகுந்த இணையாக இருக்கின்றனர் என்று சொன்னார். இரு குழந்தைகளும் ஹோலிப் பண்டிகையில் ஒருவர் மீது ஒருவர் சந்தனப் பொடியைத் தூவி விளையாடினர். லகோஜி கூறியது மாலோஜியின் மனதில் இருந்த தால், மற்றவர்களுடன் பேசும்போது, யாதவ அரசர் (தேஷ்முக்) லகோஜி, தன்னுடன் சம்பந்தம் கொள்ள உடன்பட்டிருக்கிறார் என்று சொன்னார். இது லகோஜி ராவின் மனைவிக்குத் தெரியவந்து, பெண்ணை எப்படி சாதாரண படைத் தலைவனுக்குக் கொடுப்பது என்று மறுத்தார். மறுநாள், லகோஜி ஜாதவ்ரா, மாலோஜியை விருந்துக்கு அழைத்தபோது, ‘ஷாஜியை மருமகனாக ஏற்றுக்கொண்டால்தான் விருந்துக்கு வரமுடியும் என்று சொன்னார். இதனால் இருவருக்கும் மனவேற்றுமை ஏற்பட்டது. இந்தப் பிரச்சனை நிஜாம்ஷாவின் காதுகளுக்குச் சென்றது.
உங்களுக்கு இப்போது ஒரு நியாயமான சந்தேகம் வரும். 1494ல் பாமினி சுல்தான்களைத் தோற்கடித்து நிஜாம்ஷா அரசு ஸ்தாபிக்கப்பட்ட து. 1599ல் உள்ள பிரச்சனை எப்படி நிஜாம்ஷா காதுக்குப் போயிருக்கமுடியும்? அரசின் பெயர் நிஜாம்ஷா என்பதுதானே தவிர, அரசரின் பெயர் அதல்ல. 1494ல் அஹமது நிஜாம் ஷா, 1553ல் பரஹன் நிஜாம்ஷா…. 7வது அரசரான பர்ஹன் நிஜாம்ஷா II என்பார் காலம் அது.
பரஹன் நிஜாம்ஷா II அல்லது அதற்குப் பின் வந்த நிஜாம்ஷா, மாலோஜியை 5000 குதிரைப் படையுடன் தலைவனாக்கி, பூனா, சூபா, சகன், இந்தபூர் போன்ற பகுதிகளுக்கு ஷாகீர் (தலைவன்) என்று ஆக்கி, ராஜா என்ற பட்டமும் கொடுத்தான் (மாலோஜி அவ்வளவு திறமையானவர், போர்களில் நிஜாம் ஷா அரசர்களுக்கு உதவி வெற்றியைச் சம்பாதித்துக்கொடுத்திருந்திருக்கிறார்). மாலோஜி வசிக்க ஒரு கோட்டையையும் கொடுத்தான்.
இப்போது மாலோஜி அரசன் ஆகிவிட்டதால், தேவகிரி யாதவ அரச மரபினரான லகோஜி ஜாதவ்ராவிற்கு தன் மகளை, மாலோஜியின் மகனுக்குக் கொடுப்பதில் தயக்கம் ஏற்படவில்லை. 1604ல் ஷாஜிக்கும் ஜீஜாபாயிக்கும் திருமணம் நடந்தது.
அது சரி… டெக்கான் சுல்தான்கள் யார் யார்? பீஜப்பூர் சுல்தான், அஹமது நகர் சுல்தான் (நிஜாம் ஷா பரம்பரை), கோல்கொண்டா சுல்தான் ஆகிய மூன்று பிரதேசங்களே டெக்கான் சுல்தான்கள் என்பவர்களால் ஆளப்பட்டன (மூன்று வெவ்வேறு பகுதிகள்)
மராத்திய மன்னர்களுக்கும் இந்தக் கதைக்கும் என்ன சம்பந்தம்? ஷாஜி போன்ஸ்லேவுக்கும், ஜீஜா பாயிக்கும் 1630ல் சிவாஜி பிறந்தார். (அடப்பாவி.. திருமணம் 1604ல், குழந்தை 1630லா என்று சந்தேகம் கொள்ள வேண்டாம். திருமணம் ஆனபோது இருவரும் குழந்தைகள்)
சிவாஜியின் தந்தையும் சுல்தான்களுக்குப் பணி புரிந்தவர் (அவர் சில நேரங்களில் பீஜப்பூர் சுல்தானுக்குச் சாதகமாகவும் நடந்துகொண்டார்). பிற்பாடு அரசனாக ஆன சிவாஜியும் முகலாயர்களுக்குச் சாதகமாக ஆரம்பத்தில் நடந்துகொண்டவர்தாம். டெக்கான் பகுதிகளுக்கு ஔரங்கசீப் படைத்தளபதியாக இருந்தது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அவனே சிவாஜிக்கு ‘ராஜா’ என்ற பட்டமும் கொடுத்தான். பிறகு தில்லியில் வாரிசுப் போர் மற்றும் பேரரசைக் கைப்பற்ற ஔரங்கசீப் சென்றுவிட்டபிறகு, ஔரங்கசீப் வெற்றிபெற்றிருந்த பீஜப்பூர் சுல்தான்கள் வசமிருந்த சில பகுதிகளுக்கும் தானே அரசனாக ஆகி ‘சத்ரபதி’ என்று பெயரும் சூட்டிக்கொண்டார் சிவாஜி. அவருக்கான வரலாறு இப்போதல்ல.
ஔரங்கசீப், தன் தந்தை பேரரசர் ஷாஜஹானின் படைத் தளபதியாக இருந்து டெக்கான் பகுதிகளில் வெற்றியைக் குவித்தார். பிறகு வாரிசு உரிமைக்காக கடைசியில் ஆக்ரா சென்று, ஷாஜஹானைச் சிறைவைத்து பேரரசனாகி தில்லியில் முடிசூட்டிக்கொண்டார். அவரது கடைசி காலத்தில் இந்த டெக்கான் பகுதியில்தான் (அஹமது நகர்) வாழ்ந்தார். அவரது சமாதிகூட அஹமது நகரில்தான் இருக்கிறது. இதனை எழுதும்போது ஔரங்கசீப் எப்படி ஷாஜஹானின் படைத்தளபதியாக, கோல்கொண்டா கோட்டையை முற்றுகை இட்டான் (ஷாஜஹானுக்கு ஔரங்கசீப் விருப்பமான மகனல்ல. அதனால் தலைநகரிலிருந்து அவனைத் தூரத்தில் வைக்கும்பொருட்டு மஹாராஷ்ட்ரா, தக்ஷிணப் பிரதேசங்களுக்கு போரின் சாக்கில் அனுப்பிவைத்துவிடுவான்). இதனைப்பற்றியும் நான் கோல்கொண்டா கோட்டைக்குச் சென்றதைப் பற்றியும் எழுத நினைத்திருக்கிறேன். வாய்ப்பு எப்போது வரும் என்று தெரியவில்லை.
சத்ரபதி சிவாஜியின் படம் (முதலில் உள்ளது) பிரிட்டிஷ் மியூசியத்தில்
அதனால நாம், வரலாற்றில் தேசபக்தியையும் சேர்த்து யாருடைய வாழ்க்கையையும் புரிந்துகொள்ளக் கூடாது. ஆனால் முகலாயர்களை எதிர்த்த (வேறு வழியில்லாமல்) அரசன் சிவாஜி என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. மாலோஜி போன்ஸ்லேயில் ஆரம்பித்து போன்ஸ்லே பரம்பரை வருகிறது. அந்த வரிசையில்தான் தஞ்சையின் மராட்டிய அரசன் வருகிறான்.
பிற்காலத்தில் பிரிட்டிஷாருடன் ஒப்பந்தம் செய்துகொண்டதால், போர் அச்சம் இன்றி, தஞ்சை நகரத்தில் கலைகளை வளர்க்க அவர்களுக்கு நேரமும் ஆர்வமும் கிடைத்தது. அவர்கள் காலத்து அரசவையை, அரண்மனையைப் படங்கள் மூலம் நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
சக்ரபாணி கோயிலில் இருப்பது நான் என்பது தெரிகிறதா?
சரபோஜி மன்னரின் ஓவியம்
ஒரு சில
படங்களை தொடர்புக்காக இணையத்திலிருந்து எடுத்திருக்கிறேன். இதுவும்
ஒன்று.
இந்த தர்பார் ஹால் எனக்கு மைசூர் அரண்மனையை நினைவுபடுத்தியது. இதற்கான
கட்டிடக்கலை வல்லுநர் யாராக இருந்திருப்பார்? இரண்டாம் சரபோஜி
அவர்கள் வெளிநாட்டு சிற்பக்கலை வல்லுநரை தன்னுடைய உருவச்சிலையை உருவாக்க
நியமித்ததால், இந்த அரண்மனையும் வெளிநாட்டவரால் டிசைன் செய்யப்பட்டிருக்குமா
இல்லை நாயக்கர் கால அரண்மனையில் மாற்றங்கள் மாத்திரம் செய்திருப்பார்களா?
மஹாவிஷ்ணுவின் பரமபத கோலம்
சிவன் கணங்களுடன்
ஓவியங்கள் பலதும் மறைந்துகொண்டுவருகின்றன. அவற்றைச் சீர்படுத்துபவர்
யாரும் இல்லை. சில
பல மேற்கத்தைய தேசங்களில் 500 வருடங்களுக்கு முன்புள்ளவற்றையே மிகப் பெரிய பொக்கிஷம் போன்று
காக்கின்றனர். எதுவும்
நிறைந்து கிடைக்கும் நம் நாட்டில், அவற்றின் மதிப்பு நமக்குப் புலப்படுவதில்லை.
இந்த மாதிரி தூண்களுடன் கூடிய ஹாலைப் பார்க்கும்போது இவற்றின் பின்னால் யாரேனும் கத்தியுடன் ஒளிந்திருந்தால்? என்று தோன்றும். பின்னால் யாரேனும் ஒளிந்திருக்கிறாரா என்பது எப்படித் தெரியும்?
இந்த இடத்தைப் பார்க்கும்போது இதைவிடப் பிரம்மாண்டமாகவும்
அழகாகவும் இருந்த கோல்கொண்டா கோட்டையின் அரண்மனை நினைவுக்கு வந்தது.
கீழே விழுந்துகிடக்கும் சிதைந்த கதவு சொல்கிறது, ஒரு காலத்தில் நானும் என் சகோதரனும் இருக்கும் இடத்தின் இரு புறமும் வாயிற்காப்போன் இருந்தனர். யாரையும் உள்ளே விடுவதற்கு முன்பு அனுமதிச் சீட்டு இருக்கிறதா என்று பார்த்தனர். என்னையும் திறப்பதற்கு முன்பு, மெதுவாக ஒரு பெண்ணைத் தொடுவதுபோலத் தொட்டுத் திறந்தனர். காலம் மாறிவிட்டது. இப்போது நான் கீழே கிடக்கிறேன். என் வரலாறு உணர்ந்து சீர்படுத்துபவர்கள் யாரேனும் வருவார் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறேன்.
தஞ்சை அரண்மனை வளாகத்திலேயே சரஸ்வதி மகால் நூலகம் அமைந்துள்ளது உங்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இது மிகப் பழைமையான நூலகம். நாயக்கர் மற்றும் மராத்திய மன்னர்களின் முன்னூறு ஆண்டுகால சேகரிப்பின் விளைவே இந்த நூலகம். இது 1531லிருந்து 1675 வரை ஆண்ட மராத்திய மன்னர்களால் அரசாங்க நூலகமாக ஆரம்பிக்கப்பட்டு பிற்பாடு மராத்திய மன்னர்களால் விரிவுபடுத்தப்பட்டது. இதில் குறிப்பிடத்தக்க பணி செய்தவர் என்று அறியப்படுகிறவர் இரண்டாம் சரபோஜி (இதன் காரணமும் ஊகிக்கக் கூடியதுதான். பெயரளவுக்கு தஞ்சை நகரத்தின் மன்னர் அவர். போர், படை என்ற கவலையே அவருக்கு இருந்ததில்லை. அதனால் பணத்தைக் கொண்டு திருப்பணிகள், நூலகங்களைச் செம்மைப்படுத்துவது போன்றவற்றில் ஈடுபட்டார்) இந்த நூலகத்தில் அரியவகை ஓலைச்சுவடிகள் உள்ளன. சுமார் 30,000க்கும் மேற்பட்ட சமஸ்கிருத மற்றும் பல மொழி ஓலைச்சுவடிகளும் 5000க்கும் மேற்பட்ட புத்தகங்களும் உள்ள நூலகம் இது. (மருத்துவக் குறிப்புகள், சங்ககால இலக்கியங்கள் போன்றவை). நூலகத்தின் பெருமையை உணர்த்தும் அருங்காட்சியகமும் உள்ளது.
இந்த ஓலைச்சுவடிகளைத் தவிர, நிறைய ஓலைச்சுவடிகள் பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வைத்திருக்கிறார்கள். புகைப்படம் எடுக்க இயலவில்லை. கண்டிப்பாக நாம் பார்க்கவேண்டிய இடம் இது. இங்குள்ள ஓலைச்சுவடிகளை அச்சில் கொண்டு வந்திருக்கிறார்கள் (பல சுவடிகளை). அதில் ஒன்று நான் ஆர்வமுடன் வாங்கிய புத்தகம் ‘திருவாய்மொழி வாசகமாலை’ (இதைப்பற்றி எழுத ஆரம்பித்தேன் என்றால் பதிவு வெகுவாக நீண்டுவிடும்)
சமீபத்திலும் (ஆகஸ்ட் 2025) நான் இந்த இத்திற்குச் சென்றிருந்தேன். இந்த நூலகத்தில் பலவித ஸ்க்ரிப்டுகள் இருக்கின்றன. மிகச் சிறிய, பேப்பரில் தயாரிக்கப்பட்ட நூல்கள், ஓலைகளில் மிக மிக அழகாகவும் மிக மிகச் சிறியதாகவும் கிரந்தத்தில் எழுதப்பட்ட நூல்கள் மற்றும் பல ஓவிய நூல்கள் என்று பலவற்றைப் பார்த்தோம். முயன்றிருந்தால் நான் புகைப்படங்கள் எடுத்திருக்கலாம். என்னவோ எடுக்கத் தோன்றவில்லை. ஒன்று மாத்திரம் நாம் புரிந்துகொள்ளவேண்டும். தமிழகத்தின், பாரதத்தின் கலைப்படைப்புகள், நூல்கள், அறிவுசார் இலக்கியங்கள் மிக மிக மேன்மையானவை. பொதுவாக பலருக்கு குருடனிடம் கிடைத்த ஓவியங்கள் போன்று அவற்றின்மீதான பிரமிப்பு, அவற்றைப் பாராட்டும் தகுதி இல்லை. அவ்வளவுதான் எழுத இயலும்.
தஞ்சை மராத்தியர் அரண்மனையில் (இதனை மராத்தியர்களின் அரண்மனை என்று மாத்திரம் புரிந்துகொள்ளவேண்டாம். நாயக்கர்களும் இங்கிருந்துதான் ஆண்டிருக்கலாம். அதன் பிறகு மராத்தியர்கள் இதனைச் சீர் செய்திருக்கலாம்) தர்பார் மண்டபத்தைப் பார்வையிட்டுவிட்டோம். இனி நாம் கலைக்கூடத்தைப் பார்க்கச் செல்லலாம். அடுத்த பகுதியில் பார்ப்போம்.
(தொடரும்)
காலை வணக்கம், வாத்யாரே.
பதிலளிநீக்குவழக்கம் போல் இந்த வாரமும் அருமை; வரலாற்றுத்தகவல், பார்வைக்கோணம், புகைப்படம் எல்லாமே!
வாங்க திருவாழிமார்பன் சார். நன்றி (இந்தப் பதிவுகளை நான் எப்போதோ எழுதிவிட்டேன். ஜனவரிக்குப் பிறகானதை இன்னும் எழுத்த் தொடங்கவில்லை)
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஆஜர். படங்கள் அட்டகாசம் நெல்லை. மற்றது வாசித்துவிட்டு வருகிறேன்.
பதிலளிநீக்குகீதா
வாங்க கீதா ரங்கன். பல வருடங்களுக்குப் பிறகு இன்றுதான் எட்டு மணி வரை தூங்கினேன். பெங்களூர் குளிர் தூங்கச் சுகம்.
நீக்குகடைசிப்படம் செம்ம...
பதிலளிநீக்குகீதா
வரைபடத்தில் உள்ள அஹ்மத் நகர் (நீல பின்) இப்போது அஹில்யா நகர் (ராணி அஹில்யா பாய் பெயரில்) ஆகியிருக்கிறது போலும். அடுத்து காங்கிரஸ் வந்தால் 'பழைய குருடி கதவைத்திறடி'தானோ?
பதிலளிநீக்குவந்தால்தானே?!
நீக்குபாரம்பர்ய பெயர்கள் எல்லாம் முஸ்லீம் அரசர்கள் ஆண்ட சமயத்தில் பெயர் மாற்றம் கண்டன. இவற்றை மாற்றுவது வரவேற்கத்தகுந்த முயற்சி. தமிழகத்தின் ஒரு பகுதியில் நடப்பதைக் கேள்விப்பட்டால் மனது கொதிக்கும்.
நீக்குவந்தால்தானே.... உறுதியாக எப்படிச் சொல்லமுடியும்? இந்துக்களுக்கு வரலாறும், வரலாற்றாசிரியர்களும் வைத்த பெயர் கோழைகள்.
நீக்குதமிழக மக்களுக்கு இலவச அரிசியும் டாஸ்மாகிற்குக் கொடுக்கப் பணமும் இருந்தால் போதும். வேறேதுவும் வேண்டாம். இதெல்லாம் அவங்களுக்குக் குப்பை. தமில், தமிலன் ஆகியோர் தான் அவங்களுக்குத் தேவை. தமிழோ, தமிழரோ அவங்க கலாசாரமோ தேவை இல்லை.
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குவரலாறு என்று நமக்குச் சொல்லப்படுவது வேறு. நிகழ்ந்த சம்பவங்கள் வேறு என்ற புரிதல் நமக்கு இருக்கவேண்டும். //
பதிலளிநீக்குஅதேதான்.
இதற்கு அடுத்து ஒருவர் சித்தரிக்கப்படுவது பற்றி சொல்லியிருக்கும் வரிகளை அப்படியே டிட்டோ செய்கிறேன் நெல்லை. எனக்கு இக்கருத்து ரொம்பவே உண்டு.
நாம் காணும் மனிதர்களையும் கூட அதாவது புகழ்பெற்றவர்களைச் சொல்கிறேன் ஒப்பீட்டு முறையில்தான் சொல்ல முடியுமே அல்லாமல் இப்படித்தான் என்று சித்தரிக்கவோ மனதில் கொள்ளவோ முடியாது.
மக்களில் பலர் மோகம் பிடித்து அதீத உச்ச உணர்வுகளுக்குள் போய் தங்கள் குடும்பத்தையும் விட்டு எதிர்காலத்தையும் தொலைத்துக் கொள்வதைப் பார்க்கிறோமே.
தலைவர்களை விட்டு, நம் வாழ்க்கையில் நாம் சந்திப்பவர்களை நல்லது கெட்டதோடு அப்படியே ஏற்றுக் கொண்டால் சுகமாகப் பயணிக்கலாம்!
கீதா
வாங்க கீதா ரங்கன். எல்லா மனிதர்களும் குறை நிறை உள்ளவர்கள்தாம். ஆனால் நாம் பெரிய மனிதனாக ஒருவன் ஆகிவிட்டால் நல்ல பிம்பத்தைக் கட்டமைக்க முயல்கிறோம். அதனால்தான் காந்தியை மஹாத்மா என்கிறோம் (மற்றவர்கள் அந்த பிம்பத்தை உருவாக்குவதால்). இந்த மாதிரி உண்மை வெளிப்படக்கூடாது என்பதற்காக நேரு சம்பந்தமான 50+ ஆவணங்களை சோனியா காந்தி சுருட்டிக்கொண்டு சென்றுவிட்டார் என்று செய்திகள் வந்ததே
நீக்குஇந்தியர்களின் மிகப்பெரிய மன்னிக்க முடியாத குறை வெள்ளைத் தோல் உள்ளவர்களை நம்புவதும் அவர்களிடம் ஆட்சிப் பொறுப்பை சந்தோஷமாக ஒப்படைப்பதும் தான். :( அவர்களை மிக உயர்ந்தவர்களாகவும் நினைச்சுக்கிறோம்.
நீக்குஆனால் பக்கத்திலிருந்து கவனித்த ஒருவரால், இருவருடைய குணநலன்கள், குணக்கேடுகள், செய்த தவறுகள் என்று எல்லாவற்றையும் எழுத முடியும். இதையுமே, அவருடைய கண்ணோட்டத்தில்தான் (அல்லது அவர் நம்பியபடித்தான்) எழுத இயலும்.//
பதிலளிநீக்குடிட்டோ.
எந்த ஒரு வரலாற்றிலும் அப்படியும் இப்படியும் இருக்கத்தான் செய்யும் எனவே நாம் அதில் ரொம்ப உணர்ச்சிகளால் கட்டுண்டு கிடக்காமல் எல்லாவித கோணங்களையும் மட்டும் பார்த்துக் கொண்டு கடந்துவிட வேண்டும். அப்படி இல்லாததால்தான் கருத்துவேறுபாடுகள், அனாவசிய தர்க்கங்கள் விவாதங்கள், சண்டைகள், எல்லாம் வந்துவிடுகின்றன. தரக்குறைவான வார்த்தைகள் கூடப் பயன்படுத்தப்படு. பார்க்கிறோமே!
கீதா
ஒருவர் ஒரு பொசிஷனுக்கு வருவதற்கு ஏகப்பட்ட பாலிடிக்ஸ், முதுகில் குத்துவது, துரோகம் போன்றவற்றைச் செய்திருக்க வேண்டும். அதனால யாரையும் தெய்வ நிலைக்கு உயர்த்துவது அர்த்தமற்றது.
நீக்குஇவர்களது வரலாற்றுக்குச் சென்றால் தலையைச் சுத்திவிடும்//
பதிலளிநீக்குஇப்பச் சொல்லுவதே தலை சுத்துது!!!! ஹிஹிஹிஹி....
சும்மா சொன்னேன்....ஆனால் பெயர்கள் எல்லாம் நினைவில் இருக்க வேண்டுமே. நம்ம நினைவுத்திறன் ரொம்ப ரொம்பக் குறைவு. அதான் படிப்பு மண்டைல ஏறலை. படிக்கும் காலத்தில் ஏன் கஷ்டப்பட்டேன்னு இப்ப புரிஞ்சு என்ன பயன்! டூ லேட்!!!!!! பல்லைக்காட்டும் பொம்மை இங்கு!
இதனால் இருவருக்கும் மனவேற்றுமை ஏற்பட்டது. //
ஆஹா, எதிரிக்கு எதிரி நண்பன்ற ரீதியில் போயிருக்குமோ?
கீதா
அடுத்த வரிகளில், கடைசில சுபம்னு ஆகியது தெரிகிறது.
நீக்குகீதா
மிகச் சுருக்கிய வரஙாறே தலைசுற்ற வைக்கிறதா? சுபம் சும்மா வரலை, ஸ்டேடஸ் சரியாகிவிட்டதால் வந்தது
நீக்குஅவர்கள் காலத்து அரசவை அரண்மனை இப்பவும் இப்படி இருப்பதே பெரிய விஷயம் தான் இல்லையா நெல்லை? நல்லா பராமரிக்கறாங்களோ?
பதிலளிநீக்குசக்ரபாணி கோயிலில் இருப்பது நான் என்பது தெரிகிறதா?//
யாருங்க?!!!! ஹாஹாஹா
இந்தப் படம் பிரமாதமான கோணம். அழகா வந்திருக்கு.
இதற்கு அடுத்த படங்களும்
கீதா
கீதா
நன்றி கீதா ரங்கன்.
நீக்குஅந்த வர்ணங்கள் எல்லாம் செமையா இருக்கு இப்பவும் கலர்ஃபுல்லாக.
பதிலளிநீக்குசரபோஜி மன்னரின் ஓவியம் படமும் நல்ல ஆங்கிள்!
கீதா
இந்த ஓவியம் பராமரிக்கப்படலையோ?
நீக்குஅடுத்தாப்ல வரும் மேற்தளம் படம் அட்டகாசம்...
கீதா
படங்களும், தகவல்களும் பிரமாதம்! நீங்கள் படித்தவற்றை சரியாக உள்வாங்கி, உங்கள் கருத்துகளோடு எல்லோருக்கும் புரியும் வண்ணம் எழுதியிருக்கும் மெனகெடலுக்கு பாராட்டுகள்!
பதிலளிநீக்குவாங்க பானுமதி வெங்கடேஸ்வரன் மேடம். நன்றி.
நீக்குஅடுத்து வரும் தெய்வ சிற்பங்கள் இருக்கும் ரொம்ப அழகு.
பதிலளிநீக்குதர்பார் ஹால் படங்களைப் பார்த்ததும் மைசூர் அரண்மனை எனக்கும் நினைவுக்கு வந்தது.
ஓவியங்கள் இன்னும் பராமரிக்கப்பட்டால் நன்றாக இருக்கும்.
தூண்கள் உள்ள படமும் ஆஹா!
//இவற்றின் பின்னால் யாரேனும் கத்தியுடன் ஒளிந்திருந்தால்? என்று தோன்றும். //
கடவுளே!! அரண்மனைன்றதுனால இப்படியான எண்ணம் வருதோ...
எனக்கு இங்கு தூணின் மறைவிலிருந்து சின்னக் குழந்தை எட்டிப் பார்ப்பது போன்ற படம் இல்லைனா ஒரு வயதுப் பெண் அங்கிருந்து எட்டிப் பார்ப்பது போன்றும் படம் கற்பனையில் வந்தது இது எப்பவுமே வரும்.
முன்பு ஸ்ரீராம் பகிர்ந்திருந்த ஒரு படத்திற்கும் இப்படிச் சொன்ன நினைவு.
கீதா
அரண்மனை என்றாலே பாதுகாப்பு பலமாகத்தான் இருந்திருக்கும். இருந்தாலும் அரசர் மிக முக்கியமல்லவா?
நீக்குபடங்களை ரசித்தமைக்கு நன்றி
மைசூர் அரண்மனை இன்னமும் அழகாக அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டு இருக்கும் இல்லையோ? இதோடு மைசூர் அரண்மனையை ஒப்பிட முடியாது. கடைசியாக 2006 இலோ அல்லது 2007 இலோ போனோம். மைசூரிலேயே ஒரு செர்வீஸ் அபார்ட்மென்டில் தங்கி அங்கேயே வீடெல்லாம் பார்த்தோம். அதுக்குப் பின்னர் தொட்டமளூர் வரை 2,3 முறை போனாலும் மைசூருக்குப் போகலை.
நீக்குஅடுத்த அந்தத் தூண்கள் படமும்
பதிலளிநீக்குகீழே விழுந்துகிடக்கும் கதவு பேசும் சிவப்பு வரிகளை ரசித்தேன், நெல்லை
சரஸ்வதி மகால் பற்றிக் கொஞ்சம் தெரியும் என்றாலும் இங்கு விவரங்கள் அறிய முடிகிறது. குறிப்பாக ஓலைச்சுவடிகள் அச்சில் கொண்டுவரப்பட்டது.
சரஸ்வதி மகால் - இந்திரா சௌந்தரராஜன் கதை என்று நினைக்கிறேன் - ஓலைச்சுவடிகளை வைத்தும் மர்மக்கதைகள் எழுதுபவராயிற்றே....அப்படி ஒரு சிறிய கதாபாத்திரமாக வும் வாசித்த நினைவு.
கீதா
ஓலைச் சுவடிகளை அச்சில் கொண்டுவந்த பணி அறுபதுகளுடன் முடிந்துவிட்டது. அதற்குப் பின்பான அரசுகளுக்கு நம் பாரம்பர்யத்தைப் பற்றி என்ன கவலை?
நீக்குஇந்திரா சௌந்தர்ராஜன் அமானுஷ்யக் கதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.
ஓலைச்சுவடிகள் சேகரிப்பும் அவற்றை மின்னாக்கம் செய்ததும் மின் தமிழ்க் குழுமத்தில் 2010 ஆம் ஆண்டு வரை நடந்தது. சரஸ்வதி மஹாலில் கூட அவங்க பணி நடந்தது நினைவில் இருக்கு. இதில் நானும் சிறிய மிகச் சிறிய பங்கேற்றிருக்கேன். இப்போவும் மின் தமிழ்க் குழுமம் இருந்தாலும் இப்படியான ஆக்கபூர்வமான செயல்பாடுகள் அறவே இல்லை. :(
நீக்குதஞ்சை மராட்டிய மன்னர்களின் அரண்மனை மற்றும் சுவர் ஓவியங்கள் படங்கள் அழகாக உள்ளன. இவ்வாறு பழைய அரண்மனைகளாக நமக்கு பார்க்க கிடைப்பவை தமிழகத்தை ஆண்ட தமிழகம் அல்லாத வேறு பிரதேசங்களை தாயகமாக கொண்டவர்களின் கோட்டைகள் மற்றும் அரண்மனைகள். ஒரு தமிழ் மன்னனின் அரண்மனையோ, கோட்டையோ இதுவரை கண்டு பிடிக்க முடியவில்லை. இது ஏன் என்று தெரியவில்லை.
பதிலளிநீக்குஇந்த வார மராட்டிய பரம்பரை சரித்திரம் கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது. சிவாஜியின் அம்மா ஜீஜீ பாய் என்றே நான் சரித்திர பாடம் படித்திருக்கிறேன்.
உங்கள் புண்ணியத்தால் ஞாயிறு தோறும் நிறைய படங்களை பார்த்து ரசிக்க முடிகிறது. நன்று,
Jayakumar
வாங்க ஜெயகுமார் சார். தமிழக மன்னர்கள் ஆண்ட காலங்கள் ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு. சேர மன்னருடைய (திருவிதாங்கூர்) பத்மநாப்புரம் அரண்மனை பார்த்திருக்கிறேன். இன்னும் எழுதலை. திருமலை நாயக்கர் மகால் மதுரை மற்றும் ஶ்ரீவுல்லிபுத்தூரில் இருக்கின்றன, இன்னும் பார்க்க சந்தர்ப்பம் ஏற்படலை.இதுபோல் இராமநாதபுரம் மன்னர் சேதுபதி அரண்மனையும் உண்டு
நீக்குஇந்தப் பதிவிலும் ஜீஜி பாய் என்றுதானே வருகிறது..
நான் குறிப்பிட்டது தமிழை தாய் மொழியாக கொண்ட தமிழ் நாட்டில் பிறந்த தமிழ் மன்னர்கள். புதுக்கோட்டை ராமநாதபுரம் மன்னர்களை குறு நில பிரபுக்கள் என்று கூறலாம். நாயக்க மன்னர்கள் தெலுகு தாய் மொழி. திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மா மலையாளம் தாய்மொழி.
நீக்கு// 1604ல் ஷாஜிக்கும் ஜீஜாபாயிக்கும் திருமணம் நடந்தது.// ஷாஜி போன்ஸ்லேவுக்கும், ஜீஜா பாயிக்கும் 1630ல் சிவாஜி பிறந்தார்.//
Jayakumar
பாண்டிய மன்னர்கள் அரண்மனை இருந்ததற்கு குறிப்புகள் உண்டு. மதுரை மாநகரத்தில் கோட்டைச் சுவர்கள் பழுதடைந்த நிலையில் 60 வருடங்களுக்கு முன்பும் இருந்தது. பிறகு ஆக்கிரமிப்பில் ஒவ்வொன்றாக காணாமல் போய்விட்டது. பாரிஸில், ஒரு பெரிய கடையில் (எங்கள் அலுவலக சம்பந்தம் உள்ள பிராண்ட்) பாரிஸின் பழங்காலத்து எல்லைச் சுவர்/கோட்டைச் சுவரை அப்படியே பாதுகாத்துவைத்திருக்கின்றனர். அது இருந்த இடத்தைவிட்டு மற்ற இடங்களையே உபயோகத்தில் வைத்துள்ளனர்.
நீக்குவருடப் பிரச்சனையைக் குறிப்பிட்டிருக்கிறேனே. குழந்தைத் திருமணம். வயது வந்ததும் குழந்தை பிறந்தது. ஜீஜா/ஜீஜீ எல்லாம் ஒன்றுதான்.
இந்த வரலாறுகளை எழுதுவதற்கு எந்தெந்த புத்தகங்கள் படித்தீர்கள் என்று குறிப்பிடுங்கள். இதைத் தொகுத்து எழுத எவ்வளவு நாள் எடுத்துக் கொண்டீர்கள்? ஏனென்றால் நீங்கள் தொடர் பயணத்திலேயே இருக்கிறீர்கள். எப்படி நேரம் கிடைத்தது? பானு அக்கா சொல்லி இருப்பது போல நன்றாக உள்வாங்கி சிந்தித்து படிப்பவர்கள் ஏற்றுக்கொள்ளும்படியானது கருத்துகளுடன் எழுதி இருக்கிறீர்கள். பிரமிப்பாய் இருக்கிறது.
பதிலளிநீக்குவாங்க ஶ்ரீராம். முதலில் படங்களைக் கோர்த்துக்கொண்டுவிடுவேன். இப்படி அமைப்பது பத்து அல்லது பனிரண்டு பதிவுகளுக்கு வரும். பிறகு பல நேரங்களில் அதற்கான அல்லது பொருத்தமான சரித்திரங்களைப் படிக்கும்போது பதிவில் எழுதிக்கொண்டே வருவேன். பத்து பதிவுகளுக்கும் எழுதியதும், சீராக்கி அதனை அனுப்பிவிடுவேன். எப்போது நேரம், எழுதும் மூடு அமையும் என்று சொல்வது கடினம்.
நீக்குஅயர்ச்சியாக இருக்கும்போது சொந்தக் கதைகளை எழுதுவேன். அப்படி எழுதிய பதிவு சரியாக வந்திருக்கிறதா என உங்களைக் கேட்டிருக்கிறேன், காத்திருக்கிறேன்.
ஷாஜிக்கு திடீரென்று போன்ஸ்லே பெயர் எப்படி ஒட்டிக் கொண்டது? முன்னதாக அது பற்றி குறிப்புகள் இல்லையே... சிவாஜி வேறு வழியில்லாமல் மொகலாயர்களை எதிர்த்தது பற்றி எழுதி இருக்கிறீர்கள். உண்மை. அப்படி தானே நம்ம ஊர் கட்டபொம்மு, மருது சகோதரர்கள் போன்றவர்களும் ஆங்கிலேயர்களை எதிர்த்தது..
பதிலளிநீக்குபோன்ஸ்லே வம்சம். எழுதும்போது ஆரம்பத்திலிருந்து அதனைக் குறிப்பிடவில்லை.
நீக்குஇதைப்பற்றி எழுதும்போது எனக்கு இன்னொன்று நினைவுக்கு வருது. பழைய நூல்களைப் படிக்கும்போது, குறிப்பாக குருபரம்பரை அல்லது வரலாற்று நூல்களைப் படிக்கும்போது, ஒரு அரசரை அல்லது ஆச்சார்யரை வெவ்வேறு பட்டப்பெயர்களை வைத்து ஒவ்வொரு இடத்திலும் எழுதுகிறார்கள். இதில் அவருடைய ஒரிஜினல் பெயரே மறந்துவிடுகிறது, மற்றவர்களுக்குத் தெரிவதுமில்லை.
// சக்ரபாணி கோயிலில் இருப்பது நான் என்பது தெரிகிறதா? //
பதிலளிநீக்குநடுவில் இந்த வரி. புரியவில்லை. நான் எதையாவது மிஸ் செய்கிறேனா?
இதற்கு முந்தைய பதிவில் ஒன்றில், கும்பகோணம் சக்கரபாணி கோவில் கருவறைக்கு முன்பாக சரபோஜி மற்றும் அவர் மனைவி/மகள் வெண்கலச் சிலையைப் பகிர்ந்திருந்தேன்.
நீக்கு// மாலோஜி போன்ஸ்லேயில் ஆரம்பித்து போன்ஸ்லே பரம்பரை வருகிறது. அந்த வரிசையில்தான் தஞ்சையின் மராட்டிய அரசன் வருகிறான். //
பதிலளிநீக்குஓ.. கீழே எழுதி இருக்கிறீர்கள். முதல் வாசிப்பில் பார்க்கவில்லை.
ஆமாம் ஆஷா போன்ஸ்லேவுக்கும் இவர்களுக்கும் சம்பந்தம் உண்டா இல்லை தங்கர் பச்சான் அமிதாப்பச்சன் போலதானா?!!
போன்ஸ்லே வம்சம் இன்னும் உண்டு. ஆஷா அந்த பரம்பரையைச் சார்ந்தவராக இருக்கலாம். நீங்கள் உங்கள் பணியின்போது சந்தித்த எளிய மனிதர் சோழ அரசர் பரம்பரையாக இருந்திருக்கவும் கூடும்.
நீக்குதூண்கள் பின்னால் கத்தியுடனா.. ஆங்காங்கே காவலர்கள் நின்றிருந்திருப்பார்களே... காவலரே துரோகியாய் மாறினால் சாத்தியம்.
பதிலளிநீக்கு"காவலரே வேஷமிட்டால் கள்வர்களும் வேற்றுருவில் கண்முன்னே தோன்றுவது சாத்தியமே" என்று கண்னதாசன் பாட்டி இருக்கிறாரே....
பல்வேறு இடங்களில் காவலர்கள் கண்ணும் கருத்துமாகக் கண்காணித்திருந்தால் இந்தப் பிரச்சனை எழாது. காவலரே துரோகியாக மாறுவது இரண்டு சந்தர்ப்பங்களில்தான் நடக்கும். ஒன்று, அவர்கள் பாதிக்கப்பட்டிருக்கவேண்டும். இரண்டாவது அரச விசுவாசத்தை மீறி, அவர்களுக்கு மதம் பிடித்திருக்கவேண்டும்.
நீக்குஅது சரி.. இத்தனை இடத்தையும் தினசரி யாராவது மாப் போடுவார்களா? பெருக்குவார்களா? என்ன செய்திருப்பார்கள்? சமையல்காரர், வேலையாட்கள், துப்புரவு, காவல், என்று எதெதற்கெல்லாம் வேலையாட்கள் வைத்திருந்திருப்பர்கள்?!
பதிலளிநீக்குநீங்கள் சொல்வது, அரசர் காலத்தில் என்றால், ஆம், ஒவ்வொரு வேலைக்கும் ஆட்கள் இருக்கும். கிருஷ்ணதேவராயர் காலத்தில், இளவரசனை அரண்மனையில் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குத் தூக்கிச் செல்ல பெண்மணிகள் இருந்தார்கள் என்பது தெரியுமல்லவா? (அவங்க முதுகில் தூக்கிச் செல்வார்கள்). - ஆனால் அதனை நினைக்கும்போது அசூயையாக இருக்கிறது. குழந்தைகள் என்றால் ஓகே. பெரியவர்களுக்குமா?
நீக்குஎதெதற்கோ வெளி காண்ட்ராக்ட்டுக்கு விடுகிறார்கள். இந்த தொல்லியல் பாதுகாப்புகளை நிர்வகிப்பையும் யாராவது தனியார் வசம் ஒப்படைக்கலாம். காசு கேட்டாலும் நன்றாக வைத்திருப்பார்கள்.
பதிலளிநீக்குநம் தொல்லியல் துறையே செம்மையாகச் செயல்படுகிறது என்பது என் எண்ணம். அதிகமான ஆட்கள், பட்ஜெட் இருந்தால் இன்னமும் மிக நன்றாகச் செய்வார்கள். தற்போது எவனும் ஆக்கிரமிக்காமல் இருக்கக் காரணமே தொல்லியல் துறைதான்.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா ஹரிஹரன் மேடம். பிரார்த்தனைக்கு நன்றி
நீக்குமுருகா சரணம்
பதிலளிநீக்குசண்முகா சரணம்.
நீக்குஎன்ன எழுதி என்ன பயன்?...
பதிலளிநீக்குசரஸ்வதி மகாலின் பெருமைகளை முற்றாக
உணர்ந்தார் எவருமில்லை
"யாரைச் சொல்லி என்ன பயன்.. என் வழக்கு தீரவில்லை" என்று பாடுகிறாரா செல்வாண்ணா?!!
நீக்குஅது நம் பாரம்பர்ய பொக்கிஷம். அங்கு உள்ள சில ஓலைச் சுவடிகள் என் கண்ணை மிகவும் கவர்ந்தன. அடுத்த முறை செல்லும்போது உங்களையும் சேர்த்துக்கொள்கிறேன்.
நீக்குசரஸ்வதி மகாலைத் தொடர்ந்து சங்கீத மகால்... அழிவின் மிச்சம்...
பதிலளிநீக்குஅங்கும் சென்றீர்களா?!...
ம்ம்ம்... என்ன செய்ய துரை செல்வராஜு சார்.
நீக்கு/// ஓவியங்கள் பலதும் மறைந்துகொண்டுவருகின்றன. அவற்றைச் சீர்படுத்துபவர் யாரும் இல்லை. ///
பதிலளிநீக்குஉண்மை.. உண்மை
எனக்குத் தோன்றியது.... ஓவியக் கல்லூரியில் பயிலும் மாணவர்களை இங்கெல்லாம் ஓவியங்களைப் பராமரிப்பதை இண்டெர்ன்ஷிப் ஆக வைத்தால் என்ன? அவர்கள் திறமையும் வெளிப்படும், அரசுக்கும் ரொம்ப செலவு இல்லை (ஆனால் வரவு கிடைக்காது)
நீக்குதஞ்சை ஓவிய பரம்பரையைச் சேர்ந்தவர் ஒருத்தர் ஸ்ரீரங்கத்தில் பாரம்பரியமான தஞ்சை ஓவியம் வரையக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார். அவர் இறந்து விட்டதால் தற்சமயம் வாரிசுகளால் அது நடத்தப்பட்டு வருகிறது. இப்படியானவர்களைத் தேடிக் கண்டு பிடித்துத் தஞ்சை அரண்மனை ஓவியங்களைச் செப்பனிட முயற்சிக்கலாம். மதுரையில் பொற்றாமரைக் குளத்தைச் சுற்றி இருந்த நாயக்கர் கால ஓவியங்களை முற்றிலும் அழித்தாற்போல் தஞ்சை அரண்மனையில் உள்ள பாரம்பரிய ஓவியங்களை அழிக்கும் முன்னர் யாரானும் முயன்று இதைச் செய்ய வேண்டும். மத்தியத் தொல்லியல் துறை செய்தால் உண்டு.
நீக்குஅரசு, அதிலும் தமிழக அரசு, இப்போதைய அரசு உட்பட வேறே எந்த அரசு வந்தாலும் இதை எல்லாம் முன்னெடுத்துச் செய்யாது. அவங்களைப் பொறுத்தவரை தமிழகத்துக்கு நூறு வருடங்கள் முன்னர் இருந்தே கலாசாரம் ஆரம்பித்திருக்கு. மற்ற சங்க காலத் தமிழ், இடைக்காலம், சேர, சோழ, பாண்டியர்கள் காலம், நாயக்கர் காலம், மராட்டியர் காலமெல்லாம் தேவை இல்லாத வரலாறுகள்.
நீக்குமீண்டும் அரண்மனைக்குள் புகுந்து வந்த மாதிரி இருக்கின்றது...
பதிலளிநீக்குபடங்கள் தெளிவு..
இப்போது அரண்மனையைச் சீர் செய்துகொண்டு இருக்கிறார்கள். இன்னும் சிறப்பாக இருக்கும் என்று நம்புவோம்.
நீக்குஅரண்மனை வெளிப்புறச் சுவர் சீர் செய்யப் பட்ட சில நாட்களில்
பதிலளிநீக்குசுவரொட்டிகளால் பாழாக்கப்பட்டது...
தஞ்சை மருத்துவ மனையின் வெளிப்புறச் சுவர்
108 கரண ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டதையும்
நாசமாக்கி விட்டனர்...
வித்தியாசமான மிருகங்கள்
துரை செல்வராஜு சார்.. நம் மாணவர்களுக்கு வரலாற்றுச் சிறப்புகளைச் சொல்லி வளர்ப்பதில்லை. சமூக நடத்தையையும் கற்பிப்பதில்லை. அப்புறம் எப்படி அவர்களால் சமூக சிந்தனை ஒழுக்கத்தைப் பேண இயலும்?
நீக்குஇரண்டாம் நிலை மாநகர்களில் மிக அதிக அளவில் வெளிநாட்டு/ மாநில சுற்றுப் பயணிகள் வரவைக் கொண்டது தஞ்சை...
பதிலளிநீக்குஆயினும், கட்டமைப்புகள் இங்கே சரியில்லை...
அதுக்கு காரணம், இண்டு இடுக்குகளெல்லாம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. தெருவே கோவணம் சைஸுக்கு இருந்தால் எப்படி கட்டமைப்புகள் செய்வது சொல்லுங்க? கோயில், மண்டபங்களையே ஆக்கிரமித்திருப்பதை நான் கண்டேன்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய ஞாயிறு பதிவு எப்போதும் போல் அருமையாக உள்ளது. தஞ்சை அரண்மனை படங்களும், ஓவியங்களும் காண கண் கொள்ளாத காட்சி.
முதல் இரண்டு பாராக்களில் ஒருவரை புரிந்து கொள்ளும் புரிதல் பற்றிய விபரத்தை ரசித்துப் படித்தேன். நன்றாக எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.
மராட்டிய வரலாறும் அருமையாக உள்ளது கவனமுடன் கருத்தூன்றி படித்து, அதை எழுத்தில் கொண்டு வருவதென்பது சாதாரண செயல் அல்ல. அத்திறமையை தாங்கள் கருத்தின் பதிலாக வெளிப்படுத்திய முறை கண்டும் வியந்தேன். உங்களின் அத்திறமைகளுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
படங்கள் அனைத்தும் மிக நன்றாக உள்ளது. இந்த இடத்திற்கு நான் சென்றதில்லை. இப்போது உங்களால், கண்குளிர பார்த்து ரசித்தேன். நல்ல தெளிவான எழுத்து நடையினையும் படித்து ரசித்தேன்.
இந்த மாதிரியான பாரம்பரியமான இடங்களுக்குச் சென்று, அங்கு அழகான சற்றும் கோணங்கள் தவறாத/ மாறாத படங்களை எடுத்து, அதை எங்களுக்கும் பார்வையாக்கி, அதன் வரலாற்றை எங்களுக்கும் அயர்வில்லாமல் தொகுத்துப் புலப்படுத்தும் உங்களின் இந்த அயராத முயற்சிகளுக்கு, என் பணிவான வணக்கங்களுடன் கூடிய நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா ஹரிஹரன் மேடம். உங்களுக்கும் இந்த இடங்களுக்குச் செல்ல வாய்ப்பு கிட்டட்டும். காஞ்சீபுரம் பக்கம் சென்றால் கைலாசநாதர் கோயிலுக்கும் இன்னொரு கோயிலான ஜ்வரதீஸ்வரர் கோயிலுக்கும் செல்ல மறந்துவிடாதீர்கள்.
நீக்கு/உங்களுக்கும் இந்த இடங்களுக்குச் செல்ல வாய்ப்பு கிட்டட்டும். காஞ்சீபுரம் பக்கம் சென்றால் கைலாசநாதர் கோயிலுக்கும் இன்னொரு கோயிலான ஜ்வரதீஸ்வரர் கோயிலுக்கும் செல்ல மறந்துவிடாதீர்கள்./
நீக்குகண்டிப்பாக..!! உங்கள் வாய் முகூர்த்தம் பலிக்கட்டும். இறைவனும் அன்புடன் அழைக்கட்டும் .
படங்கள், தகவல்கள் என அனைத்தும் சிறப்பு. எத்தனை எத்தனை பொக்கிஷங்கள். அவற்றைப் பாதுகாக்க முயற்சிகள் எடுப்பதில்லை என்பது தான் வருத்தம்.
பதிலளிநீக்குவாங்க தில்லி வெங்கட். ஏகப்பட்ட பொக்கிஷங்கள் இருப்பதால் நமக்கும் அரசுக்கும் அதன் மதிப்பு தெரிவதில்லை.
நீக்குசங்கீத மகால்... அழிவின் மிச்சம்...
பதிலளிநீக்குஅங்கு தான் கைவினைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன...
ஆமாம் துரை செல்வராஜு சார். நான் பார்த்தேன்.
நீக்கு///"யாரைச் சொல்லி என்ன பயன்.. என் வழக்கு தீரவில்லை" என்று பாடுகிறாரா செல்வாண்ணா?!!///
பதிலளிநீக்குகளவு போனவற்றை மீட்டெடுத்தாலே
இன்னும் இரண்டு காட்சியகம் கட்டலாம்...
ஹா ஹா ஹா... களவு செய்தவர்கள் அவைகளை மீட்டெடுப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறதா?
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாங்க கோமதி அரசு மேடம் வாழ்க வளமுடன்
நீக்குமுன்னுரை மிக அருமை.
பதிலளிநீக்குமராட்டியர் வரலாறும் அருமையாக சொன்னீர்கள். இந்த பதிவுக்கு நிறைய படித்து தேவையானதை கொடுத்து இருக்கிறீகள்.
படங்கள் எல்லாம் அருமை. இணையத்தில் எடுத்த படங்களும் அருமை.
மன்னரின் ஓவியம் கீழ் பகுதி எல்லாம் பழுது மறைந்து வருகிறது.
அரண்மனை காலத்தை தாண்டி அழகாய் காட்சி அளிக்கிறது.
நூலகம், ஒலைச்சுவடி படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
நீங்கள் வாங்கிய நூல் படித்து கொண்டு இருக்கிறீகளா ?
நல்ல நூலை வாங்கி இருக்கிறீர்கள்.
நான் படித்துக்கொண்டிருக்கிறேன். அது மிக அருமையான நூல். மற்றபடி அரண்மனை ஓவியங்களை நான் மிகவும் ரசித்தேன்.
நீக்குசிதைந்த கதவு பேசுவது அருமை.
பதிலளிநீக்குஅரண்மனை கதவுகள், சாளரங்கள் எல்லாம் கதை சொல்லும் வாய் இருந்தால். எத்தனை காலங்களை அவை பார்த்து விட்டது.
படங்களும் அதற்கு நீங்கள் கொடுத்த வரிகளும் அருமை.
நான் சமீபத்தில் மதுரை மீனாட்சி கோயில் காட்சியகத்தில் சிதைந்த பழைய மிகப் பெரிய கதவைப் பார்த்தேன். அந்த அருங்காட்சியகத்தில் வைத்திருந்தார்கள். ஒரு காலத்தில் மிகவும் புகழ் பெற்றிருந்திருக்கும். நன்றி கோமதி அரசு மேடம்.
நீக்குஅருமையான பதிவு நெல்லை மிகுந்த ஈடுபாட்டுடனும் முக்கியமாக நம் தமிழகத்தில் இப்போதைய நிலை குறித்த ஆதங்கத்துடனும் ஒவ்வொன்றையும் அரும்பாடுபட்டுச் சேகரித்து ஆவணமாக்குகிறார். நம்மால் முடிந்தது எல்லாம் இது இன்றைய தலைமுறைக்கு என்றாவது போய்ச் சேரும், அதன் மூலம் விடிவு காலம் பிறக்கலாம் என்னும் நம்பிக்கை ஒன்றே.
பதிலளிநீக்குஅருமையான பதிவு நெல்லை மிகுந்த ஈடுபாட்டுடனும் முக்கியமாக நம் தமிழகத்தில் இப்போதைய நிலை குறித்த ஆதங்கத்துடனும் ஒவ்வொன்றையும் அரும்பாடுபட்டுச் சேகரித்து ஆவணமாக்குகிறார். நம்மால் முடிந்தது எல்லாம் இது இன்றைய தலைமுறைக்கு என்றாவது போய்ச் சேரும், அதன் மூலம் விடிவு காலம் பிறக்கலாம் என்னும் நம்பிக்கை ஒன்றே.
பதிலளிநீக்கு