கேள்வி பதில்கள் :
பானுமதி வெங்கடேஸ்வரன்:
பெரும்பான்மையோர் உடல் எடையைக் குறைக்க படாத பாடு படும்பொழுது தனுஷ், எஸ்.ஜே.சூர்யா, பிரதீப் ரங்கநாதன் போன்றவர்கள் மட்டும் எப்படி ஒல்லி குச்சிகளாக இருக்கிறார்கள்?
# விடாமுயற்சி தரும் வெற்றி. டி என் ஏ பிரமாதம்.
& அவர்கள் சாப்பிடுவது எதுவும் உடம்பில் ஒட்டுவது இல்லை போலிருக்கு!
மனதளவில் இளமையாக இருக்கிறேன் என்பது சாத்தியமா? ஏனென்றால் இப்போது 50+ல் இருப்பவர்கள் இளமையாக இருந்தபொழுது அவர்களின் ஆசைகள், கனவுகள், ஏக்கங்கள், ரசனைகள் எல்லாம் இன்றைய காலத்திற்கு கொஞ்சம் கூட பொருந்தாதவை. அப்படியிருக்க மனதால் கூட இளமை சாத்தியமாகுமா?
# மனதளவில் இளமை = உடலளவில் இயலாமை. மூப்பை மீறி மனநிறைவோடு இருக்கும் நல்வாய்ப்பு.
& நானும் கூட வேலை பார்த்த எல்லா வருடங்களிலும், மற்ற எல்லா வேலைகளையும் மனைவி பார்த்துக்கொண்டதால், (வாலண்டரி) ரிடயர் ஆகும் வரை மனதளவில் 18 ஆகவே நினைத்து வாழ்ந்தேன். முதல் பேரன் பிறந்த 55 வயதில் எனக்கும் வயதாகி விட்டது - நான் இனி இளமையான தாத்தா என்று உணர்ந்தேன்!
எம்.ஜி.ஆரை வாத்தியார் என்றார்கள், எஸ்.பி.பியை வாத்தியார் என்கிறார்கள், சுஜாதாவை வாத்தியார் என்கிறார்கள் இவர்கள் ஈடுபட்ட துறையில் இருக்கும் மற்றவர்களுக்கு கிடைக்காத வாத்தியார் பட்டம் இவர்களுக்கு மட்டும் எப்படி கிடைத்தது?
# இது யாரோ கொடுக்கிற பட்டம் இல்லையே. வாத்தியாரே என்றால் மெட்ராஸ் பாஷையில் கெட்டிக்காரர் என்று பொருள். திறமையை மதித்து ஒப்புக் கொண்டவர் வெளிப்படுத்தும் கௌரவம்.
நெல்லைத்தமிழன் :
1. ஓய்வு பெற்று வீட்டில் இருக்கும் ஆண்களும் கிச்சன் வேலைகளில் பங்கெடுத்துக்கொள்ள வேண்டுமா? (இருவரும் வேலைகளைப் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்றால், பெண்கள் ஓயாம பேசிக்கிட்டே இருப்பாங்களே, அதுபோல ஆண்களும் பேச ஆரம்பிக்கணுமா என்ற சந்தேகமும் வருது)
# வீட்டு வேலை செய்வது அகௌரவம் என்ற மனப்பாங்கு இல்லாத வரை, வீட்டு வேலைகள் யாவற்றையும் செய்ய இல்லத்தரசியோ வேறு எவரோ இருந்தால் இந்தக் கேள்விக்கு இடமில்லை. அப்படியில்லாதபோது கணவர் பேப்பர் படித்துப் பொழுதுபோக்கக் கூடாது.
2. முன்பு பால் உடலுக்கு நல்லது என்று சொன்னாங்க. பிறகு ஊசி போட்டு பாலைக் கறக்கறாங்க, அதனால நமக்குத் தெரிந்த வீடுகளில் பால் கறக்கும்போது பெற்றுக்கொள்ளவேண்டும் என்றார்கள். பிறகு ஏ2 பால்தான் நல்லது என்று சொல்றாங்க. இப்படி நினைச்ச போதெல்லாம் முன்னால நாம செய்துகொண்டிருந்தது தவறுனு சொல்றாங்களே.. இவங்கள்லாம் ஒரு முடிவுக்கு வந்த பிறகு பால் பொருட்கள் பக்கம் போலாம் என்று நினைப்பது சரிதானே
# ஒவ்வொருவர் சொல்வதையும் கேட்டு அவதிப்படாமல் முடிவு செய்வதில்தான் சூட்சுமம் இருக்கிறது.
3. சிறு தானியங்கள் உடலுக்கு மிக நல்லது என்று சொல்றாங்களே... உங்கள் அபிப்ராயம் என்ன?
# எதானாலும் உடம்புக்கு ஒத்துப் போனால் நல்லதுதான். அரிசியைக் காட்டிலும் வேறு எதுவானாலும் சரிதான் என்று சொல்வது போலாகி விட்டது நிலைமை.
& நல்லதுதான். ஆனால் ஏனோ எனக்கு அவற்றை சாப்பிட்டால் பசி அடங்குவது இல்லை!
4. பொழுது போவதற்கு இது இதற்கு ஒரு நாளில் இவ்வளவு நேரம் ஒதுக்கவேண்டும் என்று நீங்கள் நினைப்பது என்ன என்ன?
# என் வயதில் இதற்கு பதில் அளிப்பது கடினம். எனினும் உடல் சார்ந்த பயிற்சி, மனதை வழிப்படுத்தும் தியானம் முதலானவை, பொருள் பொதிந்த பேச்சு பிரசங்கம், அமைதி தரும் இசை இவற்றுக்கு கொஞ்சமேனும் நேரம் ஒதுக்க வேண்டும். அந்த நேரம் வெட்டி அரட்டை வீண்வம்பிலிருந்து மீட்டெடுக்க வேண்டும்.
& இப்போதெல்லாம் நடைப்பயிற்சி செய்யும் அரை / முக்கால் மணி நேரம், மடிக்கணினியில் தட்டச்சு செய்யும் நேரம் தவிர ஊரில் இருக்கும் நாட்களில் மற்ற நேரங்கள் யாவும் வெட்டிப்பொழுதுதான் எனக்கு!
5. எங்கள் வளாகத்தில் வாரத்தில் சனி (என்று நினைக்கிறேன்) காலைல, சாலை பக்கம் சில அண்டா நிறைய உணவை வைத்துக்கொண்டு வருகின்ற ஆட்டோ மற்றும் மக்களுக்கு உணவு தானம் செய்யறாங்க. இப்படிப்பட்ட தானங்கள் தேவையானவர்களைத்தான் சென்று அடைகின்றனவா?
# இவை கொடுப்பவருக்கு நிறைவையும் மகிழ்ச்சியையும் அளிப்பது பெறுபவரது யோக்கியதாம்சங்களைச் சார்ந்ததல்ல.
& குரோம்பேட்டையில் எனக்குத் தெரிந்த டாக்டர் ஒருவர் (இப்போது அவர் உயிருடன் இல்லை) ஞாயிறுதோறும் வீட்டுக்கு வரும் பிச்சைக்காரர்களுக்கு ஒரு பிரட் பாக்கெட் கொடுப்பார். அவர் வீடு ரயில்வே ஸ்டேஷன் அருகிலேயே இருந்ததால், போகப்போக அவர் வீட்டிற்கு ஞாயிற்றுக் கிழமைகளில், பல்லாவரம் , தாம்பரம் பக்கங்களிலிலிருந்துகூட ரயிலில் பிச்சைக்காரர்கள் வந்து வரிசையில் நின்று அவர் வீட்டிலிருந்து பிரட் வாங்கி செல்வது வழக்கமாக இருந்தது! பிச்சைக்காரர்கள் மட்டும் அல்ல - நம் சாதாரண மக்கள் கூட ஏதாவது ஒன்று ஓசியில் கிடைக்கிறது என்றால் அங்கே கூட்டம் கூடிவிடுகிறார்கள். இதனால் யாருக்கும் எந்த புண்ணியமும் இல்லை என்பது என் கருத்து.
= = = = = = = = = = = =
படமும் பதமும் :
பானுமதி வெங்கடேஸ்வரன்:
பத்து நாட்களுக்கு முன்புவரை இப்படியிருந்த மரங்கள் ..
கிளைகளின் நுனியில் மொட்டு போல காணப்படுவது... இலைகள் ..
இப்போது 'இலை'த்து விட்டது சாரி துளிர்த்து விட்டது!
நெல்லைத்தமிழன் :
என் பெண், திருமணத்துக்கு முன்பு வேலையை ரிசைன் செய்துவிட்டு, கடைசி வாரத்தில் எங்களை அவள் வேலை பார்த்த வளாகத்துக்கு வரச்சொன்னாள். அங்கு இருந்த பிட்சா பேக்கரி என்ற கடையில், ஐயோ பாவம், மோனாலிசா அந்தக் கடையில் பிட்சா சாப்பிடுவதுபோல ஓவியங்கள் இருந்தன. லூவரில் நான் பார்த்த ஒரிஜினல் மோனா லிசா ஓவியம் எங்கே... இங்கே பரிதாபமாக பிட்சா கடையில் இருக்கும் இந்த ஓவியம் எங்கே!
KGG பக்கம்:
பரோபகார சிந்தனை பரிதாபமான சிந்தனையாகிவிட்டதா எனத் தெரிந்துகொள்ளும் ஆவல் வருகிறது.
பதிலளிநீக்குபார்ப்போம்!
நீக்குமனதளவில் இளமை என்றால் பா.வெ மேடம் அந்த ஆளுக்கு இளமை ஆசைகள் கனவுகள்லாம் இருக்கும்னு நினைத்துவிட்டார்கள் போலிருக்கு.
பதிலளிநீக்குதான் வயதாகிவிட்டோம் என நினைக்காமல், இளையவர்களிடம் அவர்களோடு ஒத்திசைந்து பேசும் தன்மை, புலம்பல் வனஜாவாக இல்லாமல் கவலையற்று மனதை வைத்துக்கொள்வது என்பதைக் குறிக்கும்.
தனக்கு வயதாகிவிட்டது என நினைப்பவர்கள் போலி மரியாதையை எதிர்பார்ப்பார்கள், நான் அந்தக் காலத்திலே.. என்று ஆரம்பிப்பார்கள். இளையோர்கள் செய்வதில் பெரும்பாலானவற்றில் குற்றம் கண்டுபிடிப்பார்கள். அடிக்கடி உடல் நிலை பற்றி அலுத்துக்கொள்வார்கள், எப்போதும் உடல் பிரச்சனை என்பதையே பேசுவார்கள்.
நல்ல பதில் நெல்லை. ஆனால் பாருங்கள் நாம் என்னதான் நம்மை அப் டு டேட் ஆக வைத்துக் கொண்டாலும், "ஆ! ஆண்டி! யூ ஆர் கரெண்ட்!" என்று பாராட்டுவார்களே தவிர, நம்மை அவர்கள் கூட்டத்தில் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். :(( மேலும் age is a number என்பது பெண்களுக்கு பொருந்துவதில்லை. வயது வேலையை காட்டத்தான் செய்கிறது. இதைத் தவிர வேறு பல விஷயங்களில் எங்கள் காலத்தையும், இந்த காலத்தையும் கம்பேர் பண்ணாமல் இருக்க முடிவதில்லை. ஒரு சின்ன விஷயம் சொல்கிறேன், இந்த ஊரில் தலையை விரித்துப் போட்டுக் கொண்டு பள்ளிக்கு வரும் பெண் குழந்தைகளை பார்க்கும் பொழுது தலையை நுனி வரை கருப்பு ரிப்பன் வைத்து பின்னி, மடித்துக் கட்டிக் கொள்ள வேண்டும் என்ரு படுத்திய பி.டி. டீச்சர் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. அதை ஒரு பெரிய விஷயமாக பேசுவது கிடையாது என்பது வேறு விஷயம்.
நீக்குவயது ஒரு எண்தான் என்பது ஆண்களில் பலருக்கும் பொருந்துவதில்லை. ஆனால் அதைப்பற்றி நினைக்காமல் நம்மை சுறுசுறுப்பா வைத்துக்கொண்டால் நம் அளவில் நல்லது.
நீக்குஎன்னதான் அவர்கள் லெவலுக்கு பழகினாலும் அவர்கள் தலைமுறை, சிந்தனை வேறு, நம் தலைமுறை, சிந்தனை வேறு. என் உறவினர்களில் (மனைவியின்) நான் என் தலைமுறையில் சிறியவர்களுக்கு இணையாக நினைத்துக்கொள்வேன். எனக்கு முந்தைய தலைமுறை, என் வயது இருந்தாலும் முந்தைய தலைமுறைதான். உறவில் இன்னொருவர், தன்னை வயதான மூத்தவன் என நினைத்துக்கொண்டு முந்தைய தலைமுறையுடன் நெருங்கிப் பழகுவார். அது நம்மை இன்னும் வயதாக்கிவிடும் என்பது என் எண்ணம்.
இளைய தலைமுறை ஸ்மார்ட். அவங்க லெவலில் பழகினாலும் நம்மிடம் எதைச் சொல்ல வேண்டும் எதைச் சொல்லக்கூடாது என்பது தெரியும். நாமும் என்னதான் மனத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டாலும் நம் கொண்டையை மறைக்க முடியாமல் அட்வைஸ் பண்ணுவோம், சில நேரங்களில்.
நல்ல கருத்துரைகள்! நன்றி.
நீக்குவெட்டிப் பொழுது போக்குவது என்றால் என்ன? உதாரணமா இந்த வயசுல ஜெர்மன் மொழி கத்துக்கிட்டு பிரயோசனமில்லை என்றாலும் மொழி கற்றுக்கொள்ள தினம் ஒரு மணி நேரம் செலவழிப்பது வெட்டியா போக்கும் பொழுதா? இல்லை ஒரு மணி நேரம் உபயோகமான தகவல்களை யூடியூபில் பார்ப்பது வெட்டியா? எது வெட்டிப்பொழுது போக்கல்?
பதிலளிநீக்குஇரண்டுமே வெட்டி அல்ல.
நீக்குநெ த - புதன் கேள்வியா?
நீக்குஇன்றைய பதிலில் வெட்டியாகப் பொழுது கழிகிறது என்று எழுதியிருந்தீர்களே... அதனால் எழுந்த சந்தேகம். வெட்டியாகப் பொழுதைப் போக்க இயலுமா?
நீக்குஅநேகமாகத் தொலைக்காட்சியில் படங்கள் பார்ப்பதோ அல்லது புத்தகம் படிப்பது, மொபைலை நோண்டுவது ஆகியவற்றை பானுமதி சொல்கிறாரோ?
நீக்கு//உதாரணமா இந்த வயசுல ஜெர்மன் மொழி கத்துக்கிட்டு பிரயோசனமில்லை என்றாலும் மொழி கற்றுக்கொள்ள தினம் ஒரு மணி நேரம் செலவழிப்பது வெட்டியா போக்கும் பொழுதா?//
நீக்குஜெர்மன் தான் கத்துக்கணுமா என்ன? ஹிந்தி தெரியலைனா அதைக் கத்துக்கலாம். அல்லது சம்ஸ்கிருதம் கத்துக்கலாம். ஸ்லோகங்களை அர்த்தம் புரிஞ்சு தெரிஞ்சுக்க முடியும். "பெண்"களூரில் இருப்பதால் கன்னடம் கத்துக்கலாம். எத்தனையோ இருக்கு.
கலாம், கலாம், கலாம்!!
நீக்கு"இலைத்தது" நல்ல வார்த்தைப்பிரயோகம்.
பதிலளிநீக்குநன்றி! பூ பூக்கும் பொழுது, இலை இலைக்கக் கூடாதா? ஹி ஹி!
நீக்குSriram நேற்று நன்றாக கதை பண்ணியிருந்தீர்கள்.
நீக்குநானும் இலைத்ததை இரசித்தேன்!
நீக்குகாலை வணக்கங்கள்
பதிலளிநீக்குமனோபலம் தேகபலம். என்பார்கள்.
மனதில். பலம் இருந்தால் எதையும் சாதிக்கலாம்.
தேகத்தில் பலம் இல்லாவிட்டாலும்.
யாரையேனும் How old are you என்று கேட்டால்
எனக்கு பிடிக்காது. How Young are you என்று கேட்கலாமே
என்று கூறுவேன். அதுவே. அவர்களுக்கு பாதி பலம்
கூடிவிடும்.
கே. சக்ரபாணி
நல்ல கருத்து. நன்றி! ரொம்ப நாட்களுக்குப் பின் திரும்ப வந்திருக்கிறீர்கள்! தொடர்ந்து வரவும்; கேள்விகள் கேட்கவும்!
நீக்குமுருகா சரணம்
பதிலளிநீக்குசரணம் ஷண்முகா
நீக்குஶ்ரீராம், கீதா ரங்கனை வியாழன் பதிவுக்கு வந்தால் போதும் எனச் சொன்னதை எல்லோரும் கடைபிடிக்க ஆரம்பித்துவிட்டார்களா? பிரார்த்தனை செய்பவர்கூட நாளை வந்தால் போதும் என நினைத்துவிட்டாரோ?
பதிலளிநீக்குஅதானே! :))))
நீக்குகீதா லாங் லீவ் கேட்டார். எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். 14 ஆம் தேதி வாருங்கள் போதும் என்று சொன்னேன்!
நீக்குஎதையும் விரும்பிப் படிக்கின்ற
பதிலளிநீக்குமனநிலை இல்லை...
விருப்பங்கள் திரும்ப வர முருகனை வேண்டுவோம்.
நீக்குநன்றி கௌதம் ஜி
நீக்குவிரும்பாமல் வருவதில்லை
நீக்குவிருப்பங்கள்
விரும்பினால் வரும்
திருப்பங்கள்.
துரை செல்வராஜு சார்... மனதில் வெறுமை வரத்தான் செய்யும். அதை விரட்ட நான் செய்வது, ஞாயிறு, சனி தொடர்களை எழுதுவது. என் மகன், என்னை ஓவியம் கற்றுக்கொள்ளுங்கள் என்கிறான் (அதாவது பெயிண்டிங் மற்றும் இன்னும் டெக்னிக்குகளை). இதுதான் நம் மனதைப் புத்துணர்வோடு இருக்கச் செய்யும்.
நீக்குஇல்லைனா, வேற வேலை நமக்குக் கிடையாது இல்லையா (சாப்பிடுவது ஓய்வெடுப்பது தவிர).
நீங்கள் உங்களுக்கு திறமை இருப்பதால், நிறைய கதைகள் எழுதலாம். உங்கள் கதைகள் அருமையாக இருக்கும். அதற்கு கீதா ரங்கன் அழகிய கிராமப் பெண்கள், சூழ்நிலையோடு படங்கள் அனுப்பலை என்றால் நான் தேடி அனுப்புவேன். இதைச் செய்யுங்கள்.
எனக்கும் தினம் தினம் காலையில் 5 மணிக்கு முன்னால் எழுந்து என்னுடைய ரொட்டீன்களை 11 மணிக்குள் செய்துமுடித்து, பிறகு பிரபந்த வகுப்புக்கு உட்கார்ந்து, 12 1/4 க்கு மேல்தான் ஃப்ரீ ஆவேன். ஆனால் இந்த ரொட்டீனும் போரடிக்கும். அப்படி மனது நினைக்காமல், நாம் செய்தே ஆகவேண்டும் என்று தொடர்வேன்.
நீக்குஎனக்கு எப்போவுமே ரொடீன் என்பதால் பிரச்னைஇல்லை. என்ன ஒண்ணு, இங்கே வந்ததில் இருந்து காலம்பர நாலரைக்கு எழுந்துண்டு வேலையை ஆரம்பிப்பதில்லை. இங்கெல்லாம் வாசல் தெளிக்க முடியாது என்பதோடு அல்லாமல் அவ்வளவு சீக்கிரம் வேலை ஆரம்பிக்கணும்னு அவசியமும் இல்லை. ஓரோரு நாள் ஸ்வாமி விளக்கேத்திட்டு வந்து மறுபடி படுத்துடுவேன்.
நீக்குதகவல் சுருளில் எனது தளம் பற்றி தகவல் வருவதில்
பதிலளிநீக்குதாமதம் ஏற்படுகின்றது
என்ன என்று பார்க்கிறோம்.
நீக்குஇது நம் கையில் இல்லை என்று நினைக்கிறேன். மற்ற தளங்களும் உடனுக்குடன் வருவதில்லை. அதனால் தாமதம் தவிர்க்கமுடியாதது.
நீக்குகௌதமன் நல்ல இடத்தில் நிறுத்தி இருக்கார். அந்தச் சின்னப் பையர் அவங்க பெற்றோரால் கூட ஒதுக்கப்பட்டிருப்பாரோ என்னும் எண்ணத்தையே என்னால் தாங்க முடியலை. என்னதான் நடந்திருக்கும்? அடுத்தவாரம் வரை காத்திருக்கணும் போல.
பதிலளிநீக்குகாத்திருக்கவும்.
நீக்குமுக்கியமான பலரும் இல்லாமல் எங்கள் ப்ளாகில் பலருக்கும் மன நிறைவு இல்லை. முக்கியமாக ஸ்ரீராமுக்கும், நெல்லைக்கும். :( வேலைப்பளுவோ, அல்லது மனம் உடல்நிலை சரியில்லாமலோ வரவில்லை போல! :( ஆனால் அதிசயமாக வல்லி வந்திருக்கார்.
பதிலளிநீக்குநெல்லை நிறைய கமெண்ட்ஸ் போட்டுள்ளார். மேலே பார்க்கவும்.
நீக்குவல்லியா! எங்கே இருக்கார்!
நீக்குhehehehehe I saw her comments in yesterday's post and thought she came today. :))))
நீக்குபுரியவில்லை கீதா அக்கா... நான் வரவில்லை என்கிறீர்களா? அல்லது எனக்கும் மனநிறைவு இல்லை என்கிறீர்களா?
நீக்கு@Sriram, ரெண்டும் போத்! (மேஜர் குரலில் சொல்லிக்கவும்)
நீக்குஇளமையாக இருக்கும் நினைவு உடல்நலனையும் மனமகிழ்ச்சியையும் தரும்.
பதிலளிநீக்குகாலநிலை மரங்களின் உதிர்வு, தழைப்பு படங்கள் நன்றாக இருந்தன.
பையனுக்கு ஆதரவு குடுத்த கதை....ஆவலுடன் தொடர்வோம் .
நன்றி.
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஓஹோ, வல்லி நேத்திக்குப் பதிவுக்கு வந்திருப்பார் போல. இன்னிக்குக் காணோம். கேள்விகள் எல்லாமும் அசுவாரசியமாக இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. :( மன்னிக்கவும். இந்த உடல் பருமன் என்பதெல்லாம் என்னைப் பொறுத்தவரையில் குடும்ப வாகு. குடும்பத்தில் பலரும் ஒல்லியாக இருந்தால் அதுவே சில தலைமுறைகளுக்காவது கடத்தப்படுகிறது. என் மாமனார், மாமியார் இருவருமே ஒல்லி, உயரம். அதே போல் நம்மவர், அவர் தம்பி, என் கடைசி நாத்தனார் மூணு பேரும் ஒல்லி, உயரமாக இருந்தாங்க. பெரிய நாத்தனார் நடுத்தர அளவு உயரம், இரண்டாவது நாத்தனாரும் அப்படியே, கடைசி மைத்துனர் அவ்வளவு உயரமோ ஒல்லியோ இல்லை. பின்னாட்களில் வியாதியால் இளைச்சாலும் ஆரம்ப காலத்தில் குண்டாகவே இருந்தார். அவங்க எல்லோருமே என்னைக் குண்டுனே சொல்லுவாங்க கல்யாணம் ஆனப்போவே. ஆனால் அப்போ என் எடை 35 கிலோவுக்கும் கீழ். மின்சாரத்துறை வேலைக்குச் சேர்கையில் மருத்துவச் சான்றிதழில் இந்த எடையை ஒத்துக்க மாட்டாங்க என்பதால் மருத்தவர் 45 கிலோ எனப் போட்டுக் கொடுத்தார். பின்னர் எனக்கும் எடை ஏறியதே தவிரக் குறையவில்லை.
பதிலளிநீக்குதகவல்களுக்கு நன்றி.
நீக்குகருத்துக்கு நன்றி கீதா அக்கா.
நீக்கு//ஆனால் அப்போ என் எடை 35 கிலோவுக்கும் கீழ்// அட என்னடா இது. நான் துபாயில் வேலைக்குப் போன அன்று என் எடை 67.5. ஒரு வாரத்தில் எடை70 பிறகு இன்னொரு வாரத்தில் 72 கிலோ. (அப்போ எனக்கு திருமணம் ஆகவில்லை). ஆனால் இவர் என்னடான்னா, திருமணம் ஆகும்போது பாதி எடைக்கும் (35 கிலோ) குறைவு என்கிறார். ஒருவேளை ஒரு கால் எடை மிஷினிலும் இன்னொரு கால் தரையிலும் வைத்திருப்பாரோ? ஹா ஹா ஹா
நீக்குஅப்போப் பத்தொன்பது வயசுத் தானே நெல்லையாரே? என் அண்ணாவே என் கல்யாணம் சமயத்தில் 42 கிலோவோ என்னவோ தான் இருந்தார். தம்பியும் நானும் கிட்டத்தட்ட ஒரே எடை. நாங்க எல்லோருமே அதாவது 3 பேருமே துளிப்போல இருப்போம். இப்போ இருப்பது போலல்லாம் இல்லை.
நீக்குநான் வேலையில் சேர்ந்தபோது 39 கிலோ எடைதான் இருந்தேன்!
நீக்குஅப்பாடா. நம்ம கட்சிக்கு ஆள் இருக்கு. :))))
நீக்குஎன்னைப் பொறுத்தவரை இளமை என்பது இப்போதைய டெக்னிகல் விஷயங்கள், மற்றும் சில புதிய நடைமுறைகள் ஆகியவற்றைத் தெரிந்து வைத்துக் கொண்டு இளைஞர்களோடு அதைப் பற்றி உரையாடும் அளவுக்குத் திறன் பெற்றிருப்பதே. ஆனாலும் இன்றைய இளைஞர்கள் என்னதான் நாம் எல்லாவற்றையும் தெரிந்து வைத்துக் கொண்டு இருந்தாலும் அதை மதிப்பதில்லை என்பது வேறே விஷயம்.
பதிலளிநீக்கு:)))
நீக்குமதிப்பதில்லை என்று சொல்ல முடியாது, மதிப்பார்கள். ஆனால் நம்முடைய சிநேகம் பழக வேண்டுமென்றால் நமக்கு கொஞ்சம் கீழே இறங்கி வரத் தெரிய வேண்டும். நகைச்சுவை உணர்ச்சி இருந்தால் விரும்புவார்கள். இது என்னுடைய எண்ணம்.
நீக்குகீசா மேடம்... அவங்க உலகமே வேறு. அதில் உள்ள சப்ஜெக்டுகள் சில நமக்குத் தெரிந்தால் அது பற்றி நாம் பேச முடியும்.
நீக்குநாம ரிசர்வ்ட் ஆகக் காட்டிக்கொள்ளாமல், கொஞ்சம் சிரித்து நகைச்சுவையாகப் பேசணும், அவங்க லெவலுக்குப் பேசணும். ரொம்ப ஜோக் அடித்தால் மதிக்க மாட்டாங்க என்று நினைக்கக் கூடாது.
ஆமாம், சரியே !
நீக்குஇந்த மரங்கள் இலை உதிர்ப்பதும், திரும்ப வருவதும் அம்பேரிக்காவில் பல முறை பார்த்தாச்சு. தலைநகர் தில்லியில் இப்படித் தான் செக்கச்செவேர் என குல்மோஹர் மரங்களின் இலைகள் உதிர்ந்து தெருவெல்லாம் சிவப்புக்கம்பளம் விரிச்சாற்போல் காணப்படும்.
பதிலளிநீக்குகருத்துரைக்கு நன்றி.
நீக்குநெல்லையும் தெரிஞ்சோ தெரியாமலோ ஒரு மரத்தைப் பகிர்ந்திருக்கார். அவர் பெண் சொல்லி இருக்கும் அலுவலக வளாகம் ஏதோ வெளிநாட்டில் இருப்பது போல் இருக்கு. ஆனால் அது "பெண்"களூரோ? தெரியலை. அந்தச் சிற்பம் எங்கோ பார்த்தாப்போல் இருக்கே. ஆனால் என்னனு புரியலை. கண்டு பிடிக்க முடியலை.
பதிலளிநீக்குசிறு தானியங்களிலேயே முழுக்க முழுக்க மூழ்கி இருந்தாச்சு. இப்போவும் இந்தியாவிலிருந்து கொண்டு வந்து பிரிக்காமல் இருக்கு. பையர் சத்தம் போடுகிறார். வீணாகப் போவதற்குள் சமைச்சுடுனு சொல்றார். என் ஒருத்திக்கு ஒரு கரண்டி போதும். அதைச் சமைக்கவும் அவ்வளவு ஆர்வம் இல்லை. :(
:((((
நீக்குநான் எல்லாவித சிறுதானியங்களையும் அரை அரை கிலோ வாங்கிவந்து, ஒரு வாரம் முழுவதும் உணவுக்கு அதனை உபயோகப்படுத்தினேன் (பாக்கியும் நிறைய இருக்கு). ருசியில்லாமல் சப்பையாக இருந்தது. இது என்னடா..நமக்கு இந்தத் தண்டனை எதுக்கு? பேசாமல் சாதம் சாப்பிடுவதையே நிறுத்திவிடுவோம் என்று நிறுத்திட்டேன், பெரும்பாலும்.
நீக்குவெறும் சாதம் போல சிறு தானியத்தைப் பண்ணிக் கொண்டால் அதுக்குக் குழம்பு, ரசம், மோர் சரியா வருமே நெல்லை. என்னைப் பொறுத்தவரை நான் அநேகமாகக் காலம்பர வரகரிசியோட பாசிப்பருப்பு சேர்த்துப் பொங்கலாகப் பண்ணுவேன். அதே மத்தியானம் எனில் சாதமாக வடித்தால் புளிக்காய்ச்சல் சேர்த்தோ அல்லது எலுமிச்சைச் சாதம் மாதிரியே பண்ணிடுவேன். சில நாட்கள் தக்காளி சாதம் மாதிரியோ, வெஜிடபுள் சாதம் மாதிரியோ பண்ணினேன். இதோடு துவாம்பருப்புச் சேர்த்து சாம்பார் சாதம் மாதிரியோ அல்லது வட இந்தியக் கிச்சடி மாதிரியோ பண்ணிடலாம். எல்லாமே நாங்க செய்து பார்த்துச் சாப்பிட்டும் பார்த்தாச்சு.
நீக்குஇவற்றில் சிலதைத் தனியாகவோ அல்லது எல்லாத்திலேயும் கொஞ்சம் போட்டோ இட்லி, தோசை, அடை, குழிப்பணியாரம் போன்றவை பண்ணலாம். வரகரிசியில் தேன்குழல் பண்ணினால் நல்லா வருது. எது வேணா நம்ம இஷ்டத்துக்குப் பண்ணலாம். கினோவா என்றால் அதைத் தனியாகச் சமைத்தால் தான் சரியா வருது.
சுவையான கருத்துப் பரிமாறல்கள் ! நன்றி.
நீக்குஅந்த சிற்பம் பார்ப்பதற்கு ஜெயலலிதா போல இருக்கு. நெல்லை - சரியா?
பதிலளிநீக்குஆஹா... நல்லவேளை... ஜெவும் இப்போ இல்லை. அதிமுகவும் இல்லை. இருந்திருந்தால், பரப்பன அக்ரஹாரத்தை நினைவுபடுத்தத்தான் இந்தச் சிற்பம் வைத்துள்ளார்கள் என்று கௌதமன் சார் எழுதினால் ஆட்டோ அனுப்பியிருப்பார்கள் (ஆனால் ஆட்டோ அனுப்ப இப்போ பெட்ரோல் கிடைக்குமா என்றும் தெரியவில்லை)
நீக்கு:))))
நீக்குஎனக்கும் ஜெ போலத்தான் தோன்றியது.
பதிலளிநீக்குஅதே, அதே!
நீக்குகெளதமன் சார் தோடர்கதை போல எழுதுகிறீர்கள். அடுத்த வாரம் என்ன திருப்பம் என்று தெரிந்து கொள்ள ஆவல் மீறுகிறது.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஅனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவணக்கம் , வாழ்க வளமுடன்!
நீக்குகேள்விகளும் , பதில்களும் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குபடமும் பதமும் பகுதியில் இடம்பெற்ற நெல்லை, பானுமதி அவர்கள் பகிர்ந்த படங்களும் நன்றாக இருக்கிறது.
இலை உதிர்வதும் வண்ணம் மாறுவதும் குச்சி குச்சியாக இருக்கும் மரமும் அழகுதான்.
ஆபீஸ் படங்கள் நன்றாக இருக்கிறது.
இந்தச் சிற்பம் எப்படி இருக்கிறது? யாரையேனும் நினைவுபடுத்துகிறதா?//
தெரியவில்லையே!
கருத்துரைக்கு நன்றி.
நீக்கு
பதிலளிநீக்குபாலசுப்ரமணியன் பெற்றோகளுடன் சேர்ந்தாரா?
பொறுமையாக காத்து இருந்ததுக்கு உங்களுக்கு பலன் கிடைத்ததா என்று படிக்க ஆவலாக இருக்கிறது.
அடுத்த வாரம் தெரியும் .
நீக்கு