29.6.26

"திங்க"க்கிழமை : உருளைக்கிழங்கு சாதம் - ஸ்ரீராம் ரெஸிப்பி

உருளைக்கிழங்கு சாதம் 

ஸ்ரீராம் 

யாரும் வராத நாட்கள்தான் நான் உள்ளே வருகிறேன்!  இன்று வந்து பார்த்தபோது கிச்சன் காலியாக இருந்தது.  சட்டென ஓரமாக வைத்திருந்த உருளைக்கிழங்கு வெங்காயத்தை எடுத்துக் கொண்டு உள்ளே வந்து விட்டேன்!

அன்றொருநாள் இதே வெயிலில் பாஸிருந்தார் என்னருகே...  புதிய முயற்சிகளுக்கு அவ்வளவாக ஆதரவளிக்காத அவர், வழக்கமில்லாத வழக்கமாக "இன்று பொட்டேட்டோ ரைஸ்" என்று அறிவித்து எங்களையெல்லாம் இன்ப அதிர்ச்சிக்கு ஆளாக்கினார்.

அன்று அவர் செய்து நாங்கள் சுவைத்ததை இன்று உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

எங்கள் வீட்டில் ஆறுபேர்.  மாமியார் அசைவம் சாப்பிட மாட்டார் என்பதால் ஐந்து பேருக்கான அளவாக சொல்கிறேன்.

ரொம்ப எளிமையானது. 

நான்கு உருளைக்கிழங்கு, அதற்குத் தக்கவாறு நான்கு பெரிய வெங்காயம் எடுத்துக் கொள்ளவேண்டும்.  உருளைக்கிழங்கை தோல்சீவி அழகாக டைமண்ட் டைமண்டாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.  வாணலியில் சிறிது எண்ணெய் இட்டு மஞ்சள்பொடி, காரப்பொடி, உப்பு போட்டு வதக்கி ரோஸ்ட்டாக்கி ஓரமாக வைக்கவும்.

வெங்காயத்தை நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.  நான்கு அல்லது ஐந்து பூண்டு பற்கள் எடுத்துத் தோலெடுத்து இரண்டாக நறுக்கி எடுத்துக் கொள்ளலாம்.  சிலர் நசுக்கிப் போடுவார்கள்.  இப்படி துண்டாக நறுக்கிப் போட்டால் இளையவன் ரசிப்பான்.  எனவே முந்திரி பருப்பு போல நறுக்கி வைத்துக் கொள்ளவும்.  வாணலியில் பட்டை சோம்பு கசகசா போட்டு தாளிக்கவும்.  பொரிந்ததும் பூண்டு வெங்காயம் போட்டு வதக்கிக் கொள்ளவும்.  தேவையான அளவு வதங்கியதும் ஓரமாக வைத்திருக்கும் உருளைக் கிழங்கை இதில் சேர்த்துப் போட்டு கலக்கவும்.  இரண்டு பிரட்டு பிரட்டியதும் அதில் அது தாங்கும் அளவு சாதம் போட்டு பிரட்டவும்.  தேவையான உப்பு சேர்க்கலாம்.  கொத்துமல்லி தூவி இறக்கி விடலாம்.

தொட்டுக் கொள்ள வெங்காய ரைத்தா செய்து கொண்டோம்.















இதைப் படித்ததும் இன்ஸ்டன்ட்டாக கீதா வீட்டில் இருந்த ஒரு உருளையை வைத்து, பாஸ்மதி அரிசியில் கொஞ்சமாக, ஒரு ஆளுக்கு வருவது போல செய்து படம் அனுப்பி வைத்திருக்கிறார்.  நன்றி கீதா.  இதோ அந்தப் படம்.






===============================================================================

பாரதியாரும் நாமக்கல்லாரும் 


அந்த மகாகவிஞர் பெயருடன். இவர் பெயரையும் சேர்த்துப் பேசியது இந்த இளம் கவிஞருக்கு இன்பம் ஊட்டியது. இந்தப் பாட்டு இலட்சக்கணக்கில் அச்சிடப் பட்டு தமிழ்நாடு எங்கும் வழங்கப்பட்டது.

மகா கவிஞர் பாரதியாரும் நாமக்கல்லாரின் பாட்டை ஒரு முறை புகழ்ந்து, போற்றி, பாராட்டி இருக்கிறார்.

பாரதியார் காரைக்குடியில் கானாடுகாத்தானில் தங்கி இருந்தபோது, அவரைத் தரிசிக்க இந்தக் கவிஞர் சென்றார். சென்ற இடத்தில் 'ஓவியக் கலைஞர்' என்று பாரதியாருக்கு இவரை அறிமுகப்படுத்தினார்கள்.

'ஓ! ஓவியக் கலைஞரா! வருக கலைஞரே! தமிழ்நாட் டின் அழகே கலையழகுதான்!'' என்று பாரதியார் சொன்ன போது, கவிஞர் அவருக்கு முன்னால் வந்து வணங்கினார். அவரது கால்களைத் தொடப் போன நாமக்கல்லாரின் கையைப் பிடித்துக் கொண்டு, அருகில் அமர்த்தி,''பிள்ளைவாள், நீர் நம்மை ஓவியத்தில் தீட்டும்; நாம் உம்மைக் காவியத்தில் தீட்டுவோம் " என்று பாரதியார் சொல்லி விட்டுக் கலகலவென்று சிரித்தார்.

அப்பொழுது, "ராமலிங்கம் பிள்ளை கூடப் பாட்டுக்கள் செய்வார்" என்றாராம், அவரை அழைத்துப் போனவர்.

உடனே பாரதி "அப்படியா ? ஓவியக் கலைஞர், காவியக் கலைஞருமா? எதைப் பற்றிப் பாடி இருக்கிறீர்?... எங்கே, ஒன்று பாடும், கேட்போம்" என்றார்.

கூசிக் குன்றிக் குலைந்து, வெட்கித்தவராய். நாணத்துடன், "தம்மரசைப் பிறர் ஆள விட்டுவிட்டுத் தாம் வணங்கிக் கை கட்டி நின்ற பேரும்' என்ற முதலடியைக் கூறி முடிப்பதற்குள், பாரதியார் துள்ளித் துள்ளிக் குதிக்க ஆரம்பித்துவிட்டார்!

பாட்டை முடித்தபோது, "பலே, பாண்டியா! பிள்ளை நீர் ஒரு புலவன்! ஐயமில்லை! தம்மரசைப் பிறர் ஆள - விட்டுவிட்டு - தாம் வணங்கி- கைகட்டி -நின்ற பேர்கள் - பலே! பலே! இந்த ஒரு அடியே போதும்' என்று கூறிப் பாராட்டினார்:

இவரைக் காந்திஜியின் பக்கம் இழுத்ததாகக் கூறப்படும் நிகழ்ச்சியானது:

காந்திஜி காசியில் இந்து சர்வ கலாசாலையின் திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசியபோது, அங்கே குழுமி இருந்த, அந்தக் கலாசாலைக்குப் பேரளவுக்கு நன்கொடைகள் வழங்கியிருந்த மகாராஜாக்களைப் பாராட்டாமல் "கோடானு கோடி மக்கள் உண்ணக் கஞ்சியும் உடுக்கக்  கந்தையும் இல்லாமல் தவிக்கும் இந்த நாட்டில் இன்னும் உங்களில் பலர், கோடிக்கணக்கான ஆபரணங்களை அணிந்து கொள்ளும் ஆடம்பரத்தில் வாழ்வது பாபமல்லவா?"  என்று பேசியதேயாகும்.

-இதுவே காந்திஜி ஒரு 'மகா புருஷர்' என்ற எண்ணத்தைக் கவிஞருக்கு உண்டாக்கியது.'

கரூரின் அமராவதி ஆற்றங்கரையில் அவர் நடத்திய பொதுக் கூட்டங்களில் கலந்து கொள்ளாத தலைவர்களே அந்த நாளில் கிடையாதாம்.

***************************

- எங்கே படித்தேன், எதிலிருந்து எடுத்து வைத்தேன் என்று நினைவில்லை! -

88 கருத்துகள்:

  1. உருளைக் கிழங்கு ரைஸ்... இதுவரை சாப்பிட்டதில்லை.

    பூண்டு இல்லாமல், அவல் உப்புமா இந்தச் செய்முறையில் செய்து சாப்பிட்டிருக்கிறேன், குறைந்த அளவு வெங்காயம் அல்லது அது இல்லாமல். ரொம்பப் பிடிக்கும். (ஆனால் வருடத்துக்கு இரு முறை போல அதிசயமா)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை..    அவல் உப்புமாவில் வெங்காயம் சேர்த்ததில்லை.  மோர் அவல், புளி அவல் சாப்பிட்டதுண்டு.  அதைத்தவிர அவலை பாலில் ஊற வைத்து சர்க்கரை சேர்த்து சாப்பிட்டிருக்கிறேன்!

      நீக்கு
    2. எனக்கு ஆல் டைம் ஃபேவரைட் பேப்பர் அவல்னு சொல்ற மெல்லிய அவலை பாலில் ஜீனியோட போட்டு உடனே சாப்பிடுவது ரொம்பப் பிடிக்கும். பெரும்பாலும் வீட்ல ஸ்டாக் வைத்திருப்பேன். இன்னொன்று நைலான் ஜவ்வரிசி பெரியது. இது சேமியா பாயசத்துக்கு

      நீக்கு
    3. அவல் உப்புமா பல விதத்தில் செய்வேன். (இனிப்பு அவல், எலுமி அவல், புளி அவல், தயிர் அவல் என) அதிலும் வெங்காயம் வதக்கிப் போட்டு , வேர்க்கடலை முழுதாக வறுத்துப்போட்டு செய்யலாம். இதற்கு தொட்டுக் கொள்ள தேங்காய் சட்னி நன்றாக இருக்கும்.( கூடவே மெதுவடையும்.) வீட்டில் அவ்வப்போது செய்வதுதான்.

      நீக்கு
    4. இந்த பேப்பர் அவல் பற்களுக்கு இதமானது. வாயில் பட்டவுடன் கரைந்து விடும். ஆனால், எந்த அவலையும் ஒருமுறை நல்ல நீரில் களைந்து விட்டு வடிகட்டிய பின், பிறகு சிறிது நீரில் ஊற வைத்து உபயோகிப்பேன். இந்த பேப்பர் அவல் அவ்வாறு நீரில் களைய இயலாது. அதனால், அதை சுத்தப்படுத்திய பின் வெறும் வாணலியில் கொஞ்சம் லேசாக வறுத்துக் கொண்டு,, மிக்ஸியில் பொடி செய்து, கொஞ்சம் ஜீனியோ, வெல்லம் அதையும் பொடி செய்து கொண்டு, சிறிதளவு உருக்கிய நெய்யை விட்டு அவல் மாலாடு செய்து சாப்பிடுவோம். என் பேத்திக்கும் மிகவும் பிடிக்கும். வாசனைக்கு சிறிது ஏலக்காய் சேர்த்துக் கொள்ளலாம். முந்திரியும் கூடவே வறுத்து சேர்ப்பது அவரவர் சௌகரியம்.

      அட....!இதுவே ஒரு "திங்க" பதிவாகி விட்டதே..! நான் பேசாமல் நிறைய என் வழக்கப்படி தட்டச்சி விட்டேன் போலிருக்கிறது.

      நீக்கு
    5. பேப்பர் அவல்?  கேள்விப்பட்டதில்லை.  அதென்னவோ எங்கள் வீட்டில் எப்போதும் கெட்டி அவல் என்று சொல்லி கேட்டுதான் வாங்குவார்கள்.

      நீக்கு
    6. அவல்மா லாடு!  அவல் மாலாடு..  நன்றாகத்தான் இருக்கும் போல.

      நீக்கு
    7. நெல்லை சொல்லியிருப்பது 'போகா' எனப்படும் புளி அவலின் வட இந்திய வடிவம். அதில் நிலக்கடலையையும் சேர்த்து தாளிப்பார்கள். புளி சுவைக்கு எலுமிச்சம்பழம் பிழிவார்கள். நன்றாக இருக்கும்.

      நீக்கு
    8. //பேப்பர் அவல்? கேள்விப்பட்டதில்லை.// பார்த்திருப்பீர்கள் ஸ்ரீராம். கெட்டி அவல் என்பது கனமாக இருக்கும், அதை ஊற வைத்து சமைக்க வேண்டும். கெட்டியாக இல்லாமல், சன்னமாக இருப்பதைத்தான் பேப்பர் அவல் என்று சரியாக குறிப்பிட்டிருக்கிறார் கமலா. அதை ஊற வைக்க முடியாது. வடி கூடையில் அலம்பி உடனே வாணலியில் சேர்த்து விட வேண்டும்.

      நீக்கு
    9. போஹா அவல் தான் இவங்கல்லாம் பேப்பர் அவல் என்கிறார்கள். மஹாராஷ்ட்ராவில் போஹா ரொம்பவே பிரபலம். காந்தா போஹா என்றால் அவலுடன் வெங்காயம் மட்டும் போட்டுப் பண்ணுவது. ஆலு போஹா எனில் உ.கி. போட்டுப் பண்ணுவது. எதாக இருந்தாலும் வேர்க்கடலை கட்டாயம் உண்டு. மஹாராஷ்ட்ராவில் வேர்க்கடலை இல்லாமல் எந்த உணவும் இருக்காது. கேட்கவே வேண்டாம் சாபுதானா கிச்சடி, சாபுதானா வடை ஆகியவற்றில் வேர்க்கடலைப் பொடி சேர்த்துத் தான் பண்ணுவாங்க. பண்ண முடியும். வேர்க்கடலைச் சட்னியும் அங்கே ரொம்பவே பிரபலம். அதுவும் சாபுதானா வடைக்குனு தனியா ஒரு வேர்க்கடலைச் சட்னி பண்ணுவாங்க. கொஞ்ச நாட்கள் முந்தி கேஜிஎஸ் பெண் ராதா என்பவர் ஒரு திங்கள் கிழமைப் பதிவில் அதைப் பகிர்ந்திருந்தார்.

      நீக்கு
    10. எதைக் கொடுத்து விடுவார்கள் என்று பயந்து நாங்கள் 'கெட்டி அவல்' என்று சொல்லி வாங்குகிறோமோ, அதுதான் அது என்று புரிந்து கொள்கிறேன்.  ஊறவைத்த கையேடு மாவாகி விடும்!

      நீக்கு
  2. உருளை, சாதம் இரண்டும் கார்போ. ருசியா இருக்கும்தான்.

    ஒரு நாள் முயற்சித்துப் பார்த்துவிடுவோம்.

    பதிலளிநீக்கு
  3. பூண்டு பற்களை உரிக்கணும்னு செய்முறைல சரியா குறிப்பிடலை.

    ஆடையுடன் கூடிய உருளையை விட ஆடையில்லாத்து படத்தில் அழகு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது சரி...!  பூண்டை உரிக்காமல் போடமுடியுமா என்ன!  இரண்டு துண்டாக நறுக்கிக் கொள்வேன் என்று சொல்லி இருக்கிறேனே...

      நீக்கு
  4. நாமக்கல் கவிஞர் தன் வரலாற்றில் மிகச் சுவையாக அவர் எழுதியிருப்பார். அதைப் படிக்கும்போது பாரதி ஒரு அதீத மனிதர் என்று நம்மால் உணரமுடியும்.

    காந்தி உதாரண புருஷர்தான்...... இருந்தாலும் ஒரு கண்ணில் வெண்ணெய் ஒரு கண்ணில் சுண்ணாம்பு என பல தருணங்களில் நடந்துகொண்டு அநீதி செய்தவர்.

    நல்ல குடும்பத் தலைவராக இல்லை, ஆனால் அது பெரிய விஷயம் அல்ல. பிச்சைக்காரனாய் வந்து கோடிக்கணக்காக ஊழல் செய்து எங்கெங்கோ பெத்ததுகளை பல்லாயிரம் கோடிகளுக்கு அதிபர் ஆக்கியிருந்தால் நல்ல குடும்பத் தலைவர் என நினைக்கும் மக்கள் கூட்டம் உள்ளது தமிழகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் முன்னரும் நான் நேரு, காந்தி ஆகியோர் பற்றிக் குறிப்பிட்ட ஒரு கருத்துக்கு இதே போல் "நோ கமென்ட்ஸ்" சொல்லி இருந்தார். உண்மையைத் தானே சொல்கிறோம். அதுவும் காந்தி தான் பெற்ற மகன்களிடம் நடந்து கொண்ட முறை பற்றி எல்லோருமே எழுதி இருக்காங்க. அதிலும் காந்தியின் பெரிய பிள்ளை ஹரிலால் காந்தி ஓர் குடிகாரனாக மாறியதே காந்தியால் தான். இதனால் காந்திக்கும் கஸ்தூரிபாய்க்கும் வாக்குவாதங்கள் நடந்திருக்கின்றன.

      இது தனிப்பட்ட விஷயம்னு வைச்சுண்டாலும் தேசத்துக்காக அப்படி என்னத்தைச் செய்துட்டார் காந்தி? நவகாளி அக்கிரமத்தின் போது உண்ணாவிரதம் என்னும் போர்வையில் மக்கள் கொலைச்செய்யப்படுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். நேருவோ வேறே மாதிரி பேசினார். பொறுத்துக் கொண்டு சகிப்புத் தன்மையுடன் இருக்கணும். அப்படி உங்களுக்கு பதிலுக்குப் பதில் கொல்லணும்னா முதலில் என்னைக் கொல்லுங்கள் என்றார். என்னத்தைச் சொல்லுவது?

      நீக்கு
    2. இது எல்லாமே நானும் படித்ததுதான்.  நானும் அதைத்தான் சொல்வேன், சொல்கிறேன்.  மறுபடி மறுபடி சொல்லி என்ன ஆகப்போகிறது என்றுதான் அப்படிச் சொல்கிறேன்.  என் மாமா ராமன், ஜீவி உட்பட பலர் காந்தி நேரு போன்றோர் மேல் பெரும் மதிப்பு வைத்திருப்பவர்கள்.

      நீக்கு
    3. OOOOOOOOOOOOOOOOOOOOOOOKKKKKKKKKKKKKKKKKKK

      நீக்கு
    4. எங்க வீட்டிலும் உண்டு ஸ்ரீராம். என் அப்பாவெல்லாம் காந்தி பெயரைச் சொன்னாலே அழுதவர் தான். :)))

      நீக்கு
    5. என் தாத்தா அவர் உடல் எடுக்கப்படும் வரை சாப்பிடவில்லையாம்.  நரசிம்மன் என்று பெயர் வைத்திருந்த தன் கடைசி மகனுக்கு ஜவஹர்லால் என்று பெயர் வைத்தார்.

      நீக்கு
  5. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா.. வணக்கம். இணைந்து பிரார்த்திப்போம்

      நீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    இன்றைய திங்கள் பதிவில் தங்களது செய்முறையான உ. கி சாதம் நன்றாக வைத்துள்ளது. அடுக்கடுக்கான படங்கள் அனைத்தும் பார்க்கவே நன்றாக உள்ளது. இங்கு குழந்தைகளுக்காக பள்ளிக்கு (மதிய உணவாக) வாரம் ஒருமுறை இப்படி செய்வதுதான். ஆனால், பட்டை சோம்பு வறுத்து சேர்ப்பதில்லை. (அதற்குப் பதிலாக சிறிது கரம் மசாலா பொடி) மற்றபடி இதை பிரகாரந்தான். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.நேற்று கூட உ. கி வெங்காயம் சேர்த்து வதக்கி மதிய உணவுக்கு தொட்டுக் கொண்டோம்.

    உங்கள் செய்முறைபடியும் ஒருநாள் செய்து பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கமலா அக்கா... செய்து பார்த்துட்டு சொல்லுங்க...

      நீக்கு
  7. இந்த வாட்டி, செய்முறை படங்கள் படிப்படியாக அடி பொ ளி, ஸ்ரீராம். சூப்பர் செய்முறை எளிதாகவும் இருக்குல்ல....நம்ம வீட்டில் எனக்கு மட்டும் கொஞ்சமா ஒரே ஒரு உகி (அவ்வளவுதான் இருக்கு) செஞ்சு சாப்பிட ஆயத்தம். இதே முறைல....ஆனா அதுக்குள்ள வழக்கமான நடை இப்ப...போகணும்..

    பின்னர் வருகிறேன். நான் மகனுக்கு டக் புக்குனு செஞ்சு கொடுத்ததையும் சொல்றேன்...கிட்டத்தட்ட இதே போல...முன்ன long long ago....my son demanded....there were just two potatoes அப்படின்னு தொடங்கி கதை சொல்றேன்!!!! ஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா...   'உருளை இல்லா வீடு அது சமையல் செய்யா காடு' என்று ஒரு சீன அறிஞன் சொன்னான்.  எப்படி வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.

      நீக்கு
    2. ஆமாம் ஸ்ரீராம். அது வெர்சடைல் காய்

      கீதா

      நீக்கு
  8. உ.கி. கறி செய்து அதில் சாதத்தைப் போட்டு பிரட்டி பொடேடோ ரைஸ் என்று பெயர் கொடுத்து விட்டீர்கள், கெட்டிக்காரர்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. hehehehehehe.என் வாயிலிருந்து பிடுங்கிய வார்த்தைகள் அவை. இஃகி,,இஃகி,இஃகி,இஃகி. ஆனால் ஸ்ரீராம் சுமார் ஒரு மாசம் முன்னாடியே அல்லது நான் தோஹாவில் இருக்கறச்சேயே இதை எனக்குச் சொல்லியும் படம் போட்டும் காட்டிவிட்டார். இங்கே ரொம்ப லேட்டா வந்திருக்கு. :))))

      நீக்கு
    2. வாங்க பானு அக்கா..

      // உ.கி. கறி செய்து அதில் சாதத்தைப் போட்டு பிரட்டி பொடேடோ ரைஸ் என்று பெயர் //

      அப்படியும் சொல்லலாம்தான்.  ஆனால் செய்யும்போது செய்யும் சிறு சிறு மாற்றங்கள் பெரிய ருசி மாறுதலைக் கொடுக்கும் என்பதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்!!  இதை சரவணபவன் சாம்பார் விஷயத்தில் அனுபவப்பட்ட கீதா அக்கா மறுக்க மாட்டார் என்று நினைக்கிறேன்.

      நீக்கு
  9. ​அருமையான கண்டுபிடிப்பு உருளை சாதம். இது ஒரு மெகா சீரியலையே தொடங்கிவைக்கலாம். கத்தரிக்காய் சாதம், சேனைக்கிழங்கு சாதம், சிறு கிழங்கு சாதம், கோஸ் சாதம் என்று பள்ளி மதிய உணவு போன்று செய்து வெளியிடலாம்.
    நான் முன்பே கூறிய கோயில் பிரசாதம் செய்முறைகளை இணையத்தில் பிடித்து பதிவிடலாம். உதாரணமாக காஞ்சி குடலை இட்லியில் தொடங்கலாம்.
    இன்றைய பதிவில் நிறைய எழுத்துப்பிழைகள்.

    Jaya​kumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க JKC ஸார்.. வழக்கமான உங்கள் பாணி கமெண்ட்.

      பிழைகளை திருத்தி இருக்கிறேன்.

      நீக்கு
    2. குடலை இட்லி உட்பட்ட பிரசாதங்கள் வகையறா கீதா அக்கா ஏராளமாக அவரின் 'சாப்பிட வாங்க' பகுதியில் வெளியிட்டிருக்கிறார்.

      நீக்கு
    3. ​அதனால் என்ன அவற்றை மீள் பதிவாக்கலாமே. கீதா மேடம் கட்டாயம் அனுமதிப்பார். நமக்கும் ஒரு திங்க பதிவு ஆன்மீக வாசனையுடன் கிடைக்கும், ஞாயிறு கோயில் பட உலாவின் தொடராக.

      Jayakumar

      நீக்கு
    4. பார்க்கிறேன். யாரும் திங்க பதிவு அனுப்பாவிட்டால் நான் செய்யும் ரகளையைப் பார்த்து பயந்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது!!!

      நீக்கு
  10. நாமக்கல் கவிகஞர்,பாரதி பற்றிய தகவல்கள் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  11. முட்டைக்கோஸ், காலிஃப்ளவர் ஆகியவற்றில் இப்படிச் செய்திருக்கேன், பூண்டு இல்லாமல் தான். :) உ.கி.யில் இப்படிப் பண்ணியதில்லை. சப்பாத்திக்குத் தொட்டுக்கக் கறி இப்படிப் பண்ணி இருக்கேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கறிதான் எப்பவும் செய்வோமே...   அப்படிக் கறி செய்த வாணலியில் பாஸ் கொஞ்சம் சாதத்தை போட்டு பிரட்டி சாப்பிடுவார்.  இதில் என்று இல்லை, புளிக்காய்ச்சல் செய்த வாணலி, மாங்காய் தொக்கு செய்த வாணலி ..

      நீக்கு
    2. என் வாயிலிருந்து பிடுங்கிய வார்த்தைகள் அவை. இஃகி,,இஃகி,இஃகி,இஃகி. ஆனால் ஸ்ரீராம் சுமார் ஒரு மாசம் முன்னாடியே அல்லது நான் தோஹாவில் இருக்கறச்சேயே இதை எனக்குச் சொல்லியும் படம் போட்டும் காட்டிவிட்டார். இங்கே ரொம்ப லேட்டா வந்திருக்கு. :))))

      நீக்கு
    3. யாராவது 'திங்க' வுக்கு அனுப்பினால் நான் ஏன் இப்படி உங்களை எல்லாம் பயமுறுத்தப் போகிறேன்!

      நீக்கு
    4. திரு ஜேகேசி பல மாதங்களாக/நாட்களாகச் சொல்லிண்டு இருப்பதால் நான் இன்னிக்கே காஞ்சிபுரம் இட்லி செய்முறை அனுப்பி வைக்கிறேன். முன்னாடி அனுப்பினேனா என்பது நினைவில் இல்லை. இருந்தாலும் பரவாயில்லை.

      நீக்கு
    5. ஹல்லோ கீதா சாம்பசிவம் மேடம்.. செய்து படங்களோடு அனுப்பவும். அப்படி இல்லைனா இன்றைக்கு ஆரம்பிக்கிற கர்நாடகா யாத்திரைல இரவுக்கு காஞ்சீபுரம் இட்லி என்று சொல்லியிருக்கிறார் (இரயிலில் சாப்பிட). அதன் படத்தை அனுப்பி வைக்கிறேன்.

      நீக்கு
    6. இதுவரை கீதா அக்காவிடமிருந்து ரெசிப்பி வரவில்லை.  அன்பால் இன்னும் நேரம் இருக்கிறதுதான்.

      நீக்கு
    7. கர்நாடகா யாத்திரையா?  நெல்லை..  கர்நாடகாலதான  இருக்கீங்க?   அங்கேயே யாத்திரையா?  வீட்டில் தங்குவதே இல்லையா?

      நீக்கு
  12. அந்தக் கதையை நான் சில்லு சில்லாய்க்கு மாற்றிவிட்டேன் ஹிஹிஹி கொஞ்சம் பெரிசா வருவதால்...நமக்கும் ஒரு பதிவாச்சே...

    ஸ்ரீராம், பட்டை சோம்பு பிரிஞ்சி இலை கண்ணில் படுதே படத்தில், ஆனா குறிப்பில் இல்லையே அப்ப பிரிஞ்சி இலையும் சேர்த்துதான் இல்லையா? ஆனா கச கசாவைக் காணலை.....எங்கிட்ட கச கசா இல்லை...

    கிட்டத்தட்ட இதே முறைல திடீர்னு மகன் பள்ளிக்கு மதிய உணவாக எடுஹ்துச் செல்லக் கேட்டதால் டக்கு புக்குனு இப்படித்தான் ஆனால் ஒரே ஒரு கிராம்பும் சேர்த்துக் கொண்டேன் கசகசா சேர்க்கலை ஆனால் என் பையனுக்கு வாயில் அகப்படாம இருக்கணும் என்பதால் எல்லாத்தையும் பொரித்துப் பொடித்துத் தூவி உ கி யை ஃப்ரெஞ்ச் ஃப்ரைக்கு செய்வது போல நீளமாக - அவனுக்கு அது கவர்ச்சி அப்ப - ஃப்ர்ஞ்ச் ஃப்ரை போல செய்து மத்ததெல்லாம் வெ நாவையும் நீள நீளமாக நறுக்கி வதக்கி....செர்த்து...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எந்தக் கதையை?

      மசாலா, பூண்டு ஆகியவை சேர்ப்பது நம் விருப்பத்தைப் பொறுத்தது.  அது மட்டுமல்லாமல் வெவ்வேறு வகைகளில் இப்படி சேர்த்து, சேர்க்காமல் என்று தனித்தனியாகவும் செய்யலாம்.  மட்டுமின்றி புதினா சேர்ப்பது, கொத்துமல்லி அரைத்து விடுவது என்று இன்னமும் இம்ப்ரொவைஸ் கூட செய்யலாம்!

      நீக்கு
    2. நான் பொதுவாக இப்படியான பிசைந்த சாதசெய்முறைகளுக்குக் கொத்துமல்லி, புதினா, இருந்தால் பார்ஸ்லி போன்றவற்றைப் பொடியாக நறுக்கிச் சேர்த்துடுவேன். வெங்காய ஷாலட்ஸ் இருந்தாலும் நறுக்கி வெங்காயம் வதக்காமல் இதைப் போட்டு வதக்கிடலாம்.

      நீக்கு
    3. பையன் சின்னவனா இருக்கும்போது கிடைத்ததையெல்லாம் வாணலியில் பிரட்டி சாத்துல கலந்து கொடுத்துட்டீங்க. பெரியவனா னப்பறம் இப்படீல்லாம் திப்பிச ஏமாற்று வேலை நடக்காது.

      நீக்கு
    4. ஸ்ரீராம் நான் சொன்னது என் பையன் கதையை...

      நீங்க சொல்லிருக்காப்லதால் எப்படி வேணாலும் செய்யலாம்..ஒவ்வொரு சுவை ஒவ்வொன்றிலும் இருக்கும்...இதிலேயே கூட கொத்தமல்லி புதினா அரைச்சு விடலாம் அப்படியே எல்லாம் கலந்து தம் போட்டு எடுக்கலாம்

      கீதா



      நீக்கு
    5. பையன் சின்னவனா இருக்கும்போது கிடைத்ததையெல்லாம் வாணலியில் பிரட்டி சாத்துல கலந்து கொடுத்துட்டீங்க. பெரியவனா னப்பறம் இப்படீல்லாம் திப்பிச ஏமாற்று வேலை நடக்காது.//

      எனக்கா சொல்றீங்க நெல்லை...ஹிஹிஹி

      அதெல்லாம் இல்லை நெல்லை எங்க பையன் இப்பவும் எதையும் ரசித்துச் சாப்பிடுவான்...அவனே சொல்லுவான், அம்மா இது இல்லைனா டக்குனு இப்படி மாத்திடலாம் அப்படி மாத்திடலாம் கைல இருக்கறத வைச்சு டக்குனு ஒன்னு அம்புட்டுதான் அப்படினு...

      யார் வீட்டுக்குப் போனாலும் ரசித்துச் சாப்பிடுவான்....குறிப்பா எங்க அம்மா பண்றாப்ல இல்லைனு சொல்ல மாட்டான்!!! ஹாஹாஹாஹா....நம்மவரும் அப்படிச் சொன்னதில்லை. ஆனா நானாக மாமியாரிடம் கற்றுக் கொண்ட செய்முறைகள் நிறைய உண்டு.

      கீதா

      நீக்கு
    6. கீதா ரங்கன்... ஒண்ணு அவங்களைவிட நீங்கள் நல்லா பண்ணறீங்க. அல்லது பையனுக்கு வெளீல எங்க சாப்பிட்டாலும்.....

      ஆனால் பொதுவா வெளிநாட்டில் படிக்கிற வேலை பார்க்கிறவங்களுக்கு நம்ம உணவு கிடைப்பது கடினம். அதனால அவற்றை விரும்பி ரசித்துச் சாப்பிடுவாங்க. அவங்களே சமைத்த அனுபவம் உண்டு என்பதால் திப்பிசமும் தெரியும்

      எனக்கு அவை தெரிகிறது

      நீக்கு
    7. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....வெளீல எங்க சாப்பிட்டாலும்...அந்த டாக் புரியுது என்ன சொல்ல வரீங்கன்னு!!!!!! ஸ்வீட் சாப்பிட்டீங்களோ!!!

      அவன் இங்க இருக்கும் போதே உறவினர் வீடுகளுக்குப் போகும் போது அதைச் சொன்னேன்.. அங்க அவன் யார் வீட்டுக்கும் போகலை நேரம் இல்லை...அருகில் யாரும் இல்லை. எல்லாத்துக்கும் பறக்கணும்.

      கடைசி வரி சரிதான்....கோல்மால் நாங்க சொல்வது...ஆனா இங்க இருக்கும் போதே கூட அவன் எனக்குச் சொல்வான்...நம்மவர் அதுல எக்ஸ்பெர்ட்!!!

      கீதா

      நீக்கு
  13. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  14. Breaking News :

    முக்கியமான விஷயம் பிரேக்கிங் நியூஸ்.... பதிவில் சமையல் பகுதியில் இப்போது முக்கியமான விஷயம் சேர்க்கப்பட்டுள்ளது. அனைவரும் பார்க்கவும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னிக்குப் பௌர்ணமி. ஆதலால் நினைச்சாலும் சாப்பிடவோ செய்யவோ முடியாது. கீதா கொஞ்சம் செய்முறையில் மாற்றி இருப்பாங்கனு நினைக்கிறேன். உருளையோடு அது என்ன? கீழே இருக்கும் படத்தில்? குடமிளகாய்? கத்தரிக்காய்?

      நீக்கு
    2. அப்போ என்ன இருந்தது இப்போ என்ன என்ன படங்கள் சேர்த்திருக்கிறார்னு பார்க்கறது எவ்வளவு கஷ்டம்... யூடியூபில், இராஜராஜனின் ஆயிரம் ஆண்டு மர்மம் வெளிப்பட்டதுன்னு போட்டு அதுக்குச் சம்பந்தமில்லாம பெரியகோவிலைப் பற்றி கதைப்பது நினைவுக்கு வருது

      நீக்கு
    3. நன்றி நன்றி ஸ்ரீராம், mild masala flavour உடன் சாப்பிட ரொம்ப நல்லா இருந்தது.

      கீதா

      நீக்கு
    4. கீதா கொஞ்சம் செய்முறையில் மாற்றி இருப்பாங்கனு நினைக்கிறேன். உருளையோடு அது என்ன? கீழே இருக்கும் படத்தில்? குடமிளகாய்? கத்தரிக்காய்?//

      இல்லை கீதாக்கா ஸ்ரீராம் கொடுத்திருந்த அதே முறையில் தான் செய்தேன். அரிசி மட்டும் தான் வேறு....நான் பயன்படுத்தியட்து பாஸ்மதி. கசகசா இல்லை என்னிடம் விலை கூடுதல் என்பதால் வாங்குவதில்லை.

      இந்த இரண்டு வித்தியாசங்கள்தான் மற்றபடி அதே முறை

      கீதா

      உகி, வெ னா அவ்வளவுதான் வேறு காய் எதுவும் சேர்க்கலை.

      முன்னர் மகனுக்கும் இப்படி டக்குனு செய்து கொடுத்திருக்கிறேன் ஆனால் அது ஏற்கனவே செய்த உகி கறியை (னீட்டமாக வெட்டிச் செய்ததை) கொஞ்சம் வெங்காயம் மசாலா சேர்த்து வதக்கி நெய் சேர்த்து ஏற்கனவே செய்திருந சாதத்தில் கலந்து கொடுத்தேன் மதிய உணவுக்கு.

      நீக்கு
    5. ஹலோ நெல்லை....நீங்க ஒயிங்கா பதிவை ப் பார்க்கலை. ஸ்ரீராம் க்ளியரா பெரிய எழுத்துல நீலக்கலர்ல கொடுத்திருக்கார்!!!

      கீதா

      நீக்கு
  15. அன்றொருநாள் இதே வெயிலில் பாஸிருந்தார் என்னருகே... //

    அன்றொரு நாள் இதே நிலவில் பாடல் நினைவுக்கு வருகிறது.
    இன்று பெளர்ணமி வேறு.

    //மாமியார் அசைவம் சாப்பிட மாட்டார் //

    மசாலா பொருட்களை அசைவம் என்று சொல்கிறீர்களா? அது இல்லாமல் அவர்களுக்கு செய்து கொடுக்கலாமே!

    செய் முறை படங்களுடன் உருளை கிழங்கு சாதம் மிக அருமை.






    பதிலளிநீக்கு
  16. பாரதியாரும்,நாமக்கல்லாரும் பகிர்வு அருமை.
    கற்றாரை கற்றாரே காமுறுவர் என்பது போல ஒருவரை ஒருவர் புகழ்ந்து பேசி கொண்டதுஅருமை.

    பதிலளிநீக்கு
  17. கீதா உடனே செய்து படம் அனுப்பி விட்டாரா சுறு சுறுப்புதான் கீதா ரெங்கன். ஸ்ரீராம் நீங்கள் பிரட் வறுத்து போட்டு இருந்தால் மேலும் சுவை கூட்டும். எனக்கு பிரியாணி செய்தாலே பிரட் துண்டுகள் நிறைய வறுத்து போடுவேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதிக்கா அதெல்லாம் இல்லை எனக்கு மட்டுமே என்பதால் வீட்டிலிருந்த ஒரே ஒரு உகி யை வைத்துச் செய்தேன் நம்ம வீட்டில் இட்லி அரிசி டொப்பி அரிசி பாஸ்மதி அரிசி கொஞ்சம் இதைத் தவிர வெள்ளை அரிசி யாராச்சும் வருவதாக இருந்தால் மட்டுமே வாங்குகிறேன். எனவே இருந்த பாஸ்மதி அரிசியில் செய்துவிட்டேன்.

      ஒரு சூப் பௌல் அளவுதான்...நம்ம அளவும் அவ்வளவுதான்..எனவே சரியா போச்சு.

      அக்கா நானும் பிரியாணி செய்தால் பிரட் துண்டு நிறைய சேர்ப்பேன் ரொம்பப் பிடிக்கும். ஆனா இப்ப தான் சேர்ப்பதில்லை..

      நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
    2. பிரியாணி வகைகளில் நானும் ப்ரெட் துண்டுகள் வறுத்துப் போட்டதுண்டு.  சுவையாக இருக்கும்.

      நீக்கு
  18. உகிசா- வுக்கு இத்தனை படங்களா!

    பதிலளிநீக்கு
  19. //மாமியார் அசைவம் சாப்பிட மாட்டார் //

    ஸ்ரீராம் சிரித்துவிட்டேன்!!! எங்க உறவினர் மத்தியிலும் இப்படித்தான் சொல்லப்படும்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  வெங்காயம் அசைவம்தான் இவர்களுக்கு!  தான் சாப்பிட விட்டாலும் சாப்பிடுபவர்களை நக்கல் செய்வதில் கில்லாடிகள்!  என்னைக் கேட்டால் அடுத்தவர்கள் சாப்பிடும் உணவு முறைகளில் தலையிடக்கூடாது என்பேன்.  அது அவரவர் விருப்பம்.  தான் செய்யாததால் அது ஒஸ்தி என்றும் மற்றவர்கள் தாழ்த்தி என்றும் நினைக்கிறார்கள்.

      நீக்கு
    2. நானும் டிட்டோ செய்கிறேன் ஸ்ரீராம் உங்கள் கருத்தோடு...

      கீதா

      நீக்கு
  20. கீதா ரங்கன் செய்த உ கி சாதம் சைவ மட்டன் பிரியாணி மாதிரி இருக்குது.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா ஜெ கே அண்ணா, cast iron வாணலியில் செய்ததால் இருக்குமோ!! இல்லை இருட்டு அடுக்களையில் எடுத்ததால் இருக்கும் நான் ஃப்ளாஷ் போடாமல் வேறு எடுத்தேன்...

      கீதா

      நீக்கு
    2. உ கி, பனீர் போலத் தெரிகிறதா ஜெ கே அண்ணா?

      கீதா

      நீக்கு
    3. எனக்கு சரியாக தெரிகிறது!

      நீக்கு
    4. ஸ்ரீராம் அது ஜெ கெ அண்ணா சொன்னதால் பொதுவாக அசைவம் சாப்பிடுபவர்கள் பனீரை அப்படி இருப்பதாகச் சொல்வாங்க அதான் அப்படி அவரைக் கேட்டிருந்தேன்!!!

      கீதா

      நீக்கு
  21. படங்கள் நன்றாக உள்ளன.உருளை சாதம் சுவையானது நாங்களும் செய்வோம்.

    அவல் உப்புமா, கரட், பீன்ஸ், உருளை சேர்ப்போம் .தயிர் அவல் ,எலுமிச்சை , புளி,, வெல்லம் தேங்காய், எனச் செய்வோம்.பேப்பர் அவல் இங்கு இருக்கிறதா தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மாதேவி...   Soft அவலில் பாலூற்றி தேங்காய்த்துருவல் தூவி சர்க்கரை போட்டு சாப்பிடலாம்.

      நீக்கு
  22. நாமக்கல் பாரதி பகுதி சுவாரசியம். நான் ஜஸ்ட் வாசித்துத் தெரிந்து கொண்டேன் ஸ்ரீராம். மற்றபடி எனக்கு இதெல்லாம் அவ்வளவாகச் சொலல்த் தெரியாது.

    நல்லதை மட்டும் எடுத்துக்குவோமே!! இல்ல?

    கீதா

    பதிலளிநீக்கு
  23. இப்போதான் திரும்பவும் பதிவைப் படித்து கீதா ரங்கன் க்கா வின் உகி பிரியாணி படங்கள் பார்த்தேன். அருமை. இன்னும் ஒரு வாரத்தில் நான் அனுப்பப்போகும் மைசூர்பாக்கையும் உடனே செய்து படங்கள் அனுப்புவாரா? இல்லை ஸ்ரீராமுக்கு மாத்திரம் அந்த சலுகையா ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உருளைக்கிழங்கு பிரியாணியா? பிரியாணி செய்முறை நெல்லைக்கு அனுப்புங்க கீதா... பாவம் வித்தியாசம் தெரியாமல் தவிக்கிறார்!!!

      //ஸ்ரீராமுக்கு மாத்திரம் அந்த சலுகையா //

      சலுகையா?  இதில் சலுகை எங்கிருந்து வருகிறது?  ஆர்வம் என்று சொல்லலாம்.  அதுவும் செய்வதற்கு எளிதாக இருப்பதால்!

      நீக்கு
    2. ஹலோ நெல்லை....அது பிரியாணி இல்லை !!!!

      நீங்க மைசூர்பாகு எல்லாம் போட்டால் நான் செய்ய மாட்டேன்!!! ஸ்ரீராம் உப்பு சாமான் போட்டிருக்கிறார் அதனால் செய்தேன் ஆர்வத்தில் கூடவே கொஞ்சமாக என்பதால்....

      நீங்களும் இப்படி ஏதாச்சும் போடுங்க நெல்லை....செய்யாம இருப்பமா? உங்ககிட்ட சொல்லிருக்கேன் முன்னரே மிளகாய்ப்பொடி உங்க அளவில் செய்வதுண்டு என்று!!

      அதெல்லாம் கவனிக்கவே மாட்டீங்களே!!!!!!!!!!!!!!! ஹாஹாஹா நல்லா உங்களை இழுத்தாச்சு

      கீதா

      நீக்கு
  24. உருளைக்கிழங்கு சாதம் - சில சமயங்களில் செய்திருக்கிறேன் - பட்டை, சோம்பு, பூண்டு என்று சேர்க்காமல். அது சரி பதிவில் // மாமியார் அசைவம் சாப்பிட மாட்டார் // என்று வந்திருக்கிறதே - இதில் அசைவம் எங்கே வந்தது? வெங்காயம், பூண்டு, பட்டை ஆகியவை சேர்த்ததால் அசைவம் ஆகிவிட்டதா?

    பொதுவாகவே ஆந்திராவில் இது போல ட்ரை சப்ஜி செய்து அதில் சாதம் போட்டு கலந்து சாப்பிடுவது வழக்கம். பல நண்பர்களின் வீடுகளில் பார்த்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  25. /எங்கள் வீட்டில் ஆறுபேர். மாமியார் அசைவம் சாப்பிட மாட்டார் என்பதால் ஐந்து பேருக்கான அளவாக சொல்கிறேன்./
    நான் நினைத்துக் கொண்டேயிருந்தேன்...வெங்கட் என்னை முந்திக்கொண்டார்.
    ஸ்ரீராமுக்கு தைரியம் ஜாஸ்திதான் 😊 அவர் எழுதுவதை மாமியார் படிக்கமாட்டாரோ? அல்லது எழுத்தாளர் கடுகுவின் மாமியார் போல் ஸ்போர்ட்டிவ் டைப்போ?

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!