11.6.26

லபோ லபோ லப் ஜனகா கதா பினா ஜாம் ஜனகா ஒயிலாலோ  ஒயிலாலோ  

 

சென்ற வருடம் செப்டம்பர் கடைசி வாரத்தில் விட்டு விட்டு ஜுரம் அடித்துக் கொண்டிருந்தது.  மகன்கள் 'வா  டாக்டரைப் பார்க்கலாம்' என்று கூப்பிட்டுக் கொண்டே இருந்தார்கள்.  வழக்கம்போல நானும் மறுத்துக் கொண்டே இருந்தேன்.

​ஆனால் அக்டோபர் ஒன்றாம் தேதி இரவு சுத்தமாக மூச்சு விட முடியாமல் அடைத்துக் கொண்டது.  இப்படி வந்தால்  கொஞ்ச நேரத்தில் சரியாகும்.  ஆனால் இந்த முறை நள்ளிரவு தொங்கி காலை வரையும் நீடிக்க, வாயாலேயே மூச்சு வீட்டுக் கொண்டிருந்தேன்.  

நானே மகன்களை அழைத்தது விட்டேன்.  'ஆஸ்பத்திரி போகலாம்'!  

ராமச்சந்திரா சென்றோம்.  அழகாக, உயரமாக, மத்திம வயதுடையவராக இருந்த டாக்டர் சோமு என்னைப் பார்த்தார்.  சாதாரணமாக ஒரு GP யைப் பார்த்து அவர் ஆலோசனை பெற்று அப்புறம் எந்த சிறப்பு மருத்துவரைப் பார்க்கலாம் என்று செல்வது மரபு.  மரபு என்ன...  அப்போதுதான் இரண்டு மருத்துவர்களுக்கு காசு வாங்கலாம்!  நான் நேரடியாக ENT என்றே அனுமதி வாங்கி விட்டேன்!

நான் சென்ற சமயம் எனக்கு முன்னாள் ஒருவர் மட்டுமே இருக்க, சோமு உள்நோயாளியைப் பார்க்க வார்டுக்கு கிளம்பினார்.  'இரண்டே பேர்தான்..  எங்களை பார்த்து விட்டு வார்டுக்கு செல்லலாமே' என்று நான் நர்ஸிடம் சொன்னதை அவர் டாக்டரிடம் சொல்லி இருப்பார் போல.  அவர் மதிக்காமல் கிளம்பியதோடு, என்னை அற்பமாக பார்த்துக் கொண்டே கடந்து போனார்.

"பத்து நிமிஷத்துல வந்துடுவார் டாக்டர்" என்று சமாதானம் சொன்னார் நர்ஸ்.  சுத்தமாக 35 நிமிடங்கள் கழித்து வந்தார் அவர்.

இரண்டு மூக்குத் துளைகளிலும் ஒரு Gauze துணியை சொருகி வைக்கச் சொல்லி (LA வாம்!) பத்து நிமிடம் கழித்து வந்து இரண்டு கம்பிகளுடன் களம் புகுந்தார்.  நான் நெளிய நெளிய ("ஆடாதீங்க") கம்பிகளை உள்ளே செருகி சோதித்து, 'ஹெவியா இன்ஃபெக்ட் ஆகி இருக்கு என்றும்,  ஒரு ஆன்ட்டிபயாட்டிக் ஊசி போடவேண்டுன்றுமெ'ன்றும் 'அது வல்லிய ஊசி, அட்மிட் ஆகணும்' என்றார்.  வீட்டிலிருந்து போட்டுக் கொள்ளலாம்.  ஆனால் காலை மாலை இங்கு வந்துதான் போட்டுக் கொள்ள வேண்டும் என்றார்.  சுமார் இரண்டு மணிநேரம் இரண்டு வேளையும் படுக்கை தேவைப்படும் என்றார்.  ஊசி எழுதிக் கொடுங்கள் வெளியில் ஆள் வைத்து வீட்டிலேயே போட்டுக் கொள்ளலாமா (ராமச்சந்திராவிலிருந்து இதற்காக ஆள் அனுப்ப மாட்டார்களாம்) என்று கேட்டதற்கு 'போட்டுக் கொள்ளலாம்' என்றார்.  சற்று இடைவெளி விட்டு 'அப்படியே வெளியேயே ட்ரீட்மெண்ட்டும் பார்த்துக் கொள்ளலாம்' என்றார்.   Grrrrrrrr...  கொஞ்சம் யோசித்தபோது 'யோசித்துச் சொல்லுங்கள்' என்று சட்டென்று எழுந்து வெளியே போய்விட்டார்.  நர்ஸ் என்னை வெளியே காத்திருக்கச் சொல்ல அடுத்த நோயாளிகளை பார்க்கத் தொடங்கி விட்டார் அவர்.  

அவர் கம்பியை விட்டு குத்தியதில் அடைப்பு சற்று சுமாராக சரியாகி இருந்தாலும் ஹெவி இன்ஃபெக்ஷன் என்கிற வார்த்தை மனதில் மின்னி மின்னி மறைய,  மீண்டும் பிரச்னை வரும் அபாயம் இருந்தது.  மீண்டும் அவர் அழைத்து விசாரித்தபோது சட்டென்று 'சரி' என்றேன்.  என் மகன்கள் என்னை ஆச்சர்யத்துடன் பார்த்தார்கள்.  ஏனென்றால் சற்றுமுன் வரை வராண்டாவில் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாமல் இருந்தது.

இது நான் புதிய மருத்துவ பாலிசி எடுத்து விட்ட சமயம்.  பழைய பாலிசி 24,00 ல் தொடங்கியது இந்த வருடம் 80,000 கட்டவேண்டி இருந்ததது.  அதை நிறுத்தி விடலாம் என்று எண்ணம்.  புதிய பாலிசி 20,000 ரூபாய்தான்.  எப்படியோ அட்மிட் ஆகாமல் காப்பீட்டுத்தொகையை கோரமுடியாது.  போட்ட பணத்தில் கொஞ்சமாவது திருப்பி எடுத்து விடுவது என்றும் முடிவு செய்துகொண்டேன்!

முடிவை சரியாக சொல்லி முதலிலேயே கலந்து பேசாமல் இப்படி நானாக சொன்னால் பெரியவன் முகம் சுணங்குவான்; சுணங்கினான்! ஏதேதோ  மாற்றுக் கேள்விகள் கேட்டு முடிவை ஒத்தி வைக்கச் செய்யப் பார்த்துக் கலைக்கப் பார்த்தான்.  நான் கலையவில்லை!

சோமு கூப்பிட்டுப் பேசும்போது சாண்டில்யனின் உப படைத்தலைவன் போர்த் திட்டத்தை விவரிப்பது போல விவரித்தார்.  மூக்கின் உள் சுவரில் எப்படி இன்ஃபெக்ஷன் ஆகி இருக்கிறது என்று சொன்னார்.  நிறைய சேர்த்து வைத்திருக்கிறேன் என்றார்.  சாதாரண ஆண்டிபயாட்டிக்குக்கு படியாது என்றார்.  நான் வேறு சென்ற வாரம்தான் அஜித்ரோ உபயோகித்திருந்தேன்.  சொன்னேன்.

"ஹெவி ஆன்டிபயாடிக் காலைல ஒண்ணு, ராத்திரி ஒண்ணு..  ஐவில.."

"டாக்ஸிம் இன்ஜெக்ஷனா டாக்டர்?"  - நான் என் அறிவைக் காட்ட அவசரப்பட்டேன்.

"ஏன்?  எது போடலாம் சொல்லுங்கள்..  போட்டுடுவோம்" என்றார் டாக்டர்.

'அட என்னடா' என்று நான் சும்மா இருக்க "ஸீ..  அதெல்லாம் என் பிரச்னை..  நான் பார்த்துக்கறேன்..  நீங்க நான் சொல்றதை மட்டும் செய்ங்க" என்றார்.  பேச்சுவார்த்தை முடிந்தது என்பதுபோல  அத்துடன் பாதியிலேயே பேட்டியை வெட்டிக் கொண்டு "அட்மிஷனுக்கு எழுதித்தருகிறேன் வெளில வெயிட் பண்ணுங்க" என்று துரத்தி விட்டார்!

அட்மிஷன் பேப்ர் கைக்கு வந்ததும் ஆவன செய்யப் புறப்பட்டோம்.  அவர்கள் கொண்டு வந்த படிவத்தில்  நான் தமிழில் 'பாஸ்ரீ' என்று கையெழுத்திட்டேன்.  பல்லாண்டு காலமாக அராசாங்க வேலையில் அப்போது போடப்பட்ட உத்தரவை மதித்து தமிழில் போடத்தொடங்கிய கையெழுத்து.  கையெழுத்து ஒவ்வொவரு இடத்திலும் மாறி மாறிப் போட்டால் பிரச்னை வருகிறது என்று வங்கிக்கணக்கு உட்பட எல்லா இடத்திலும் ஒரே மாதிரி தமிழில் போட பயின்று கொண்டிருந்தேன்.  

அதைப் பார்த்ததும் அந்த உதவி டாக்டர் அந்த ஃபார்மை எடுத்துச் சென்று விட்டு வேறொரு தமிழ் விண்ணப்பத்தை எடுத்து வந்தார்!!  'அட, பார்றா..  இதெல்லாம் இவ்வளவு ஸ்ட்ரிக்ட்டாகவா' என்று நினைத்துக் கொண்டேன்.

மகன் எதையும் கேள்விகள் கேட்டு ஒரு தடவைக்கு இரண்டு தடவை, இரண்டு தடவைக்கு நான்கு தடவை நான்கு தடவைக்கு..  சரி விடுங்கள்..  கேள்வி கேட்டு ஆராய்ந்துதான் செய்வான்.  காப்பீட்டு நிறுவனத்துடன் பேசிக்கொண்டு, மற்ற பார்மாலிட்டிஸ் எல்லாம் முடிந்து நான் ஒரு அறையில்  படுக்க வைக்கப்பட்டபோது மணி இரண்டு!  மகன் பொறுமையாக அவன் ஆபீஸ் காலையும், என் அட்மிஷனையும் சமாளித்தான்....

======================================================================================


என்னென்ன ஜாலம் செய்கிறீர்கள் இளையராஜா..   பெரிய மேதைகளையும் அழைத்து வந்து சிறிய துணுக்குகளாக  சேர்த்து பாடலின் தரத்தை எங் வேறு லெவலுக்கு கொண்டு சென்று..



==========================================================================================

சரத்பாபு - என் பதின்மத்தின் க்ரஷ். ‘செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல் என் மீது வீசுதம்மா’ எனப் பாடியபடி ஜீப்பை ஒடித்து திருப்பும் இலாகவம் கண்டு விழுந்தவள் தான். எழ மனமே வரவில்லை. ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’யில் சிடுசிடு மனைவிக்கும் செல்லத் தங்கைக்கும் இடையே பரிதவிக்கும் அண்ணனாக, சலங்கை ஒலியில் நாயகனின் நண்பனாக, நிழல் நிஜமாகிறது படத்தில் ஷோபாவின் கர்ப்பத்துக்குக் காரணமாக,  பல படங்களில் ரஜினியின் நண்பனாக, செல்ல எதிரியாக, முத்து படத்தில் நாடகப் பிரியராக - எந்தப் பாத்திரத்தை ஏற்றுச் செய்தாலும் அவற்றை நம் மனதில் நீங்கா இடம் பெறச் செய்தவர். 

ஆளவந்தான் திரைப்படத்தில் அவருடைய இணையாக நடிப்பதாக அறிந்தபோது இதயம் ஒரு முறை துடிக்க மறந்து போனது. அவ்வளவு எதிர்பார்ப்போடு அவரை நேரில் சந்தித்து எனக்குள் இருந்த தீவிர ரசிகையை அவருக்குச் சொன்னேன். ஒரு மெல்லிய புன்னகை அவரிடமிருந்து - எத்தனையெத்தனை பெண்களிடம் இந்த அபிமானத்த்தைப் பார்த்திருப்பார். 
அவரது முக ஜாடை அச்சு அசல் என் தம்பி கிஃபிலைப் போலவே இருக்கும். அதைச் சொன்னால் - அதற்கும் புன்னகை தான். 

டெல்லியில் ஆளவந்தான் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு இருவரும் ஒரே விமானத்தில் அருகருகே அமர்ந்து பயணித்தோம். அப்போது  என்றும் மறக்கமுடியாத ஒரு பாடம் சொல்லித் தந்தார். அக்காலத்தில் எல்லா விமானப் பயணங்களிலும் உணவு பரிமாறப்படும்.  இப்பொழுது போல பணம் வாங்கிக்கொண்டு அல்ல. ஏராளமானச் சின்னக் கிண்ணங்கள் பேப்பரால் பொதிக்கப்பட்டு பலவித உணவு ஒரு பெரிய காகிதப் பெட்டியில் ஜரிகைத் தாள் பொதித்துப் பரிமாறப்படும்.  

உணவு முடிந்து காலி கிண்ணங்களையும் அவற்றிலிருந்து பிரித்த ஏராளமான நெகிழித் தாள்களையும் மிக நேர்த்தியாக ஒன்றின் உள் இன்னொன்று வைத்து பெரிய பேப்பர் சதுரக் கிண்ணம் மூடி வந்த சில்வர் பேப்பரை ஜாக்கிரதையாக மீண்டும் பொதித்து அழகாகத் திருப்பிக் கொடுத்தார் - அவற்றைத் திரும்பப் பெற்றுக்கொள்ள வந்த விமானப் பணிப்பெண்ணிடம். 

“அவர்களும் நம்மைப் போன்றவர்களே. நம் எச்சிலை அப்படிக்கப்படியே அவர்களிடம் தரக் கூடாது” என்றார். அதன் பின் நான் எந்த பயணத்தின் போதும், தூக்கிபோடும் குப்பைகளை மிக நேர்த்தியாக பொதித்து, வந்தது போலவே திரும்பத் தருகிறேன். அப்படித் தரும் ஒவ்வொரு முறையும் நண்பர் சரத்பாபு நினைவில் வருவார். மிக நேர்த்தியாக ஆடை அணிவார். மென்புன்னகை தவிர வேறு எந்த பாவனையயும் அவர் முகத்தில் நான் பார்த்ததில்லை. 

அவரது களையான முகத்தைப் பற்றி ஒரு சக நடிகர் சொல்லும் போது - சரத்பாபுவிற்குப் பிறவி ஏழையாக ஒரு கதாபாத்திரத்தைக் கொடுக்கவே முடியாது. அப்படி ஒரு ராஜகளை அவரது முகத்தில் தாண்டவமாடும்.

-பாத்திமா பாபு  - நன்றி கந்தசாமி ஸார், ஃபேஸ்புக்.

===========================================================================================

1991 ல் வெளியான குணா திரைப்படத்திலிருந்து ஒரு பாடல்.  நீங்கள் நினைக்கும் பாடல் இல்லை!

முதலில் இலங்கைப் பிரச்னை பற்றி படமெடுக்க நினைத்து சிபி மலயில் கமல், சப் ஜான் ஆகியோர் துக்ளக் சோ விடம் ஆலோசனை கேட்க அவர் வேண்டாம் என்று சொல்லி விட்டாராம்.  பின்னர் குணாவுக்கான கதையை சப் ஜான் - இவர் கமலின் பழைய சாணக்யா பட அசோசியேட் - சொல்ல, பின்னர் கமலின் டாமினேஷன் காரணமாக சிபி மலயில் வெளியேற சந்தானபாரதி அந்த இடத்தைப் பிடித்தார்.  டப்பிங் விஷயத்தில் நடிகர் சிவாஜிக்கும் ஜனகராஜுக்கும் நடந்த ஒரு தகராறில் சந்தானபாரதியும் கமலும் சிவாஜியை (நடிகர் திலகம் அல்ல) ஆதரிக்க, ஜனகராஜ் கமலுடன் சேர்ந்து நடித்த கடைசிப் படம் இது.

வாலியின் பாடலை எஸ் ஜானகி இளையராஜா இசையில் பாடி இருக்கிறார்.  அருமையான மெலடி   உன்னை நான் அறிவேன் பாடல்.  தேவனென்றால் தேவனல்ல தரைமேல் உந்தன் ஜனனம்.. முதல் சரணத்தைத் தொடர்ந்து ஒரு கஜல் துணுக்கு..  தொடர்ந்து ஒரு துள்ளலிசை...  மீண்டும் உன்னை நானறிவேனில் முடியும் பாடல்.
 

=======================================================================================

"இது என் வீடு.. 
நான் 
பார்த்துக் கொள்கிறேன் 
நீ 
சும்மா இரு"

மகனின் வார்த்தைகளில் 
மாற்றமில்லை.
காலமும் சூழலும்தான் 
மாற்றத்தை உணர்த்துகின்றன.
சிறுவயது மழலையில் 
அவன் சொன்னபோது 
மகிழ்ந்த மனம் 
அவனுக்கு திருமணமாகி 
பத்து வருடங்கள் கழித்து 
இதைச் 
சொல்லும்போது 
உடைந்துதான் போகிறது.

======================================================================================

பெய்ஜிங்: சீனாவின் தேசிய பாதுகாப்பு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் ‘மேக்னெடிக் லெவிடேஷன்' எனப்படும் காந்தப்புல தொழில்நுட்பத்தின் அடிப்படையில் 1 டன் எடை கொண்ட ரயிலை இயக்கி சோதனை நடத்தினர். இதில் வெறும் 2 விநாடிகளில் அந்த ரயில் மணிக்கு 700 கி.மீ. வேகத்தை எட்டி உலக சாதனை படைத்தது.

400 மீட்டர் (1,310 அடி) நீளமுள்ள காந்தப்புல ரயில் பாதையில் இந்த சோதனை நடத்தப்பட்டது, மேலும் 700 கி.மீ. வேகத்தை அடைந்த பிறகு ரயில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டது. இதன் மூலம் இதுவரை உருவாக்கப்பட்ட காந்தப்புல ரயில்களில் அதிக வேகம் கொண்ட ரயில் என்ற பெருமையை இது பெற்றது.  இந்த ரயில், தண்டவாளங்களைத் தொடாமல், அதன் மேலே காந்த விசையில் செல்லக்கூடியது. இதன் முடுக்கம் மிகவும் சக்தி வாய்ந்தது. ஒரு ராக்கெட்டை ஏவும் அளவு சக்தி வாய்ந்தது. இந்த வேகத்தில் நீண்ட தொலைவில் உள்ள நகரங்களை சில நிமிடங்களில் இந்த ரயில்கள் மூலம் நாம் இணைக்க முடியும்.

இந்த சாதனையை படைத்த ஆராய்ச்சியாளர்கள் குழு கடந்த 10 ஆண்டுகளாக இந்தத் திட்டத்தில் பணியாற்றி வருகிறது.

===============================================

சுவாரஸ்ய செய்தி - கொஞ்சம் பழசு 


1976 தினமணி 

பசுவதை தடை: கொள்கை அளவில் த.நா. அரசு ஏற்றது - கருத்தரங்கில் முதல்வர் அறிவிப்பு

சென்னை, ஜன. 11 - வாரத்தில் ஒரு நாள் மாமிச கடைகள்
மூடப்பட்டிருக்க வேண்டும், பசுவதை தடை செய்யப்பட வேண்டுமென்பதை கொள்கையளவில் தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொண்டு விட்டதாக முதன் மந்திரி திரு. கருணாநிதி இன்று கூறினார்.

"மஹாவீரர், வள்ளுவர், வள்ளலார் கண்ட அஹிம்சா நெறி" பற்றிய கருத்தரங்கு ஒன்றை சென்னையில் துவங்கி வைத்துப் பேசினார்.

தாம் புலால் உணவு சாப்பிடும் பழக்கமுள்ளவர் என்பதைக் குறிப்பிட்டு, இதுபோன்ற கருத்தரக்கை துவக்கி வைக்க தமக்குத் தகுதி இருக்கிறதா என்ற சந்தேகம் ஏற்படுவதாக கூறினார். ஆனால், ஒருவர் தாம் செய்த செயல்களைக் குறித்து வருத்தமடைய ஆரம்பித்தால் அது அவரை அறவழிக்கு அழைத்துச் செல்லும் என்றும், "நான் இந்த வகையைச் சேர்ந்தவன் போலிருக்கிறது" என்றும் கூறினார்.

மாமிசக் கடைகளை வாரம் ஒரு நாள் மூட வேண்டும், பசுவதைக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை கொள்கையளவில் தமது அரசு ஒப்புக் கொள்கிறது என்றும் இதுபற்றி மேலும் பரிசீலனை செய்யும் என்றும் கூறினார்.

இதுபோன்ற நடவடிக்கைகளால் மாநிலத்திலுள்ள புலாலுண்போரை ஒரு நாளில் அப்பழக்கத்தை விட்டு விடச் செய்ய முடியாது என்பது உண்மையேயானாலும், ஏதாவது ஒரு விதத்தில் முயற்சி துவக்கத்தான் வேண்டும் என்றார்.  அஹிம்சையின் உயர்வைப் பற்றி பெரியோர் கூறியுள்ள நல்லுரைகளை மக்களுக்கு எடுத்துரைப்பதன் மூலமாகவும் படிப்பபடியாகவும் புலாலுணவுப் மக்களிடம் குறையச் செய்யவேணும் என்றார். 

- இணையம் -

====================================================================================

1966 ல் உமா சந்திரனால் கல்கியில் தொடராக எழுதப்பட்ட முள்ளும் மலரும் நாவல் அதே பெயரில் 78 ல் படமானது.  ரஜினி ஷோபா சரத்பாபு நடித்தார்கள்.  பல தடைகளைக் கடந்து படம் வெளியானது.  மகேந்திரன் டைரக்டரான முதல் படம்.  பாலு மெஹந்திரா உதவியுடன் அவர் இயக்கினார்.  வித்தியாசமான இளையராஜா இசை.  படத்தில் நாயகனுக்கும் நாயகிக்கும் டூயட் கிடையாது.  இன்று பகிரும் பாடல் ஜென்சி குரலில் பஞ்சு அருணாச்சலம் எழுதிய "அடி பெண்ணே.."  இளையராஜாதான் முதல் கவர்ச்சி இப்பாடலில்.  அப்புறம் ஜென்சி.  அப்புறம் ஷோபா. 

==========================================================================================

சிவகாமியின் சபதம் - அமரர் கல்கி

முன்னுரை

நீல வானத்திலிருந்து பூரண சந்திரன் அமுத கிரணங்களை பொழிந்து கொண்டிருந்தான். பூவுலகம் மோக நிலையில் மூழ்கி அமைதி குடி கொண்டு விளங்கியது. எதிரே எல்லையின்றிப் பரந்து கிடத்த வங்காளக் குடாக் க் கடலில் சந்திர கிரணங்கள் இந்திரஜால வித்தை செய்து கொண்டிருந்தன. கரையோரத்தில் சின்னஞ் சிறு அலைகள் அதிக ஓசை செய்து அமைதியைக் குலைக் விரும்பாதலை போல இலேசான சத்தத்துடன் விழுந்து கொண்டிருந்தன.

கடல் ஓரத்து வெண் மணலில் நாங்கள் உட்கார்ந்திருந்தோம். ரஸிகமணி ஸ்ரீ டி.கே. சிதம்பரநாத முதலியார் அவர்களும் இன்னும் இரு நண்பர்களும் நானும் இருந்தோம். வேறு மனிதர்களோ, பிராணிகளோ கண்ணுக்கெட்டிய தூரம் காணப்படவில்லை.

மாமல்லபுரத்துக் கடற்கரை, பன்னிரண்டு வருஷங்களுக்கு முன்னம் நடந்த சம்பலம். ரஸிகமணி அவர்கள் வழக்கம் போல் கவிதைகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்.

"விதியின் எழுத்தைக் கிழித்தாச்சு! - முன்பு 
விட்ட குறை வாது தொட்டாச்சு!''

என்ற ஸ்ரீ கோபாலகிருஷ்ண பாரதியாரின் பாடல் வரிகளே அழுத்தம் திருத்தமாக எடுத்துரைத்தார்கள்.

"முன்பு விட்ட குறை வந்து தொட்டாச்சு  என்னும் ரி ஒரு சக்தி வாய்நத மந்திரத்தைப் போல் என்னை மதி மயங்கச் செய்தது அந்தக் கடற்கரை மணலில் அதே மாதிரி வெண்ணிலவில் இதற்கு முன் எத்தனையோ தடவை நான் உட்கார்ந்திதாகத் தோன்றியது. முந்தைய பிறவியின்  விட்ட குறைதான் இங்கே என்னைக் கொண்டு வந்து சேர்த்து இன்று இந்தக் கடல் ஓரத்திலே உட்காரச் செய்திருக்கிறது என்றும் தோன்றியது.

கடலிலே ஆயிரமாயிரம் படகுகளும் அலைகளும் திடீரென்று காட்சி அளித்தன. கரையிலே கூட்டங் கூட்டமாக ஆடவரும் பெண்டிரும் நடமாடிக் கொண்டிருந்தார்கள். சற்று தூரத்தில் மாட மாளிகைகளும் கூட கோபுரங்களும் எழுந்தன. அவற்றின் உச்சியில் ரிஷபக் கொடிகளும் சிங்கக் கொடிகளும் உல்லாசமாகப் பறந்தன. இனிமை ததும்பிய இசைக் கருவிகளிலிருந்து எழுந்த சங்கீதம் நாற்புறமும்  சூழ்ந்து போதையை உண்டாக்கியது. கண்ணுக்குத் தெரிந்த பாறைகளில் எல்லாம் சிற்பிகள் கையில் கல்லுளியை வைத்து கொண்டு வேலை செய்தார்கள். எங்கேயோ யாரோ காலில் கட்டிய சதங்கையோடுஒ நடனமாடிக் கொண்டிருந்தார்கள்.

சிறிது நேரத்துக்கெல்லாம் அந்த கட்சிகள் தெளிவடைத்தன. உருவங்கள் முகங்களும் இனம் தெரியுமாறு எதிரே தோன்றின.

ஆயனரும் சிவகாமியும் மகேந்திர பல்லவரும் மாமல்லரும் பார்த்திபனும் விக்கிரமனும் அருள்மொழியும் குந்தவியும், பொன்னனும் வள்ளியும் கண்ணனும் கமலியும் புலிகேசியும்  நாகநந்தியும் என்னுடைய மனக்கண் முன்னால்  பவனி வந்தார்கள். அப்படி பவனி வந்தவர்கள் என் உள்ளத்திலேயே குடிபுகுந்தும் விட்டார்கள்.

குடைந்தெடுத்த 

இரண்டு தினங்கள் மாமல்லபுரத்தில் தங்கியிருந்தோம்.  அற்புத சிற்பங்களைத் தாங்கிய கற்பாறைகளைப் பார்த்தோம். குன்றில் கோயில்களையும் விமானங்களையும் பார்த்தோம். ஒவ்வொரு கல்லும் ஒரு கதை சொல்லிற்று. ஒவ்வொரு சிற்பமும் ஓர் இதிகாசத்தை எடுத்துரைத்தது. பார்க்கப் பார்க்க வியப்பு மிருந்தது ; கேட்க் கேட்கப் பரவசமாயிற்று.  கையில் பிடித்த கல்லுளிகளையே  மந்திரக் கோல்களாகக் கொண்டு எந்த மகா சிற்பிகள் இத்தகைய மகேந்திர ஜாலங்கள செய்தார்களோ என்று நினைத்த போது அவர்களை கையெடுத்துக் கும்பிடத் தோன்றியது. அந்தச் சிற்பியிடம் தோன்றிய பக்தியினால் தலை தானாகவே வணங்கிற்று.

*


"சிவகாமியின் சபதம் என்னும் பெயர் தாங்கிய இந்த நூலை ஏதேனும் ஒரு வழியிலே பெற்றுக் கையில் ஏந்திக் கொண்டிருக்கும் அன்பர்கள் இது 'அபாரமான புத்தகம்' என்று உடனே தீர்மானித்துவிடக் கூடும். ஆயிரத்துக்கு மேல் மேல் பக்கங்கள் உள்ள புத்தகம் அல்லவா? அதற்குத் தகுந்த கமும் இருக்கத்தானே செய்யும்?

இவ்வளவு பாரத்தையும் ஏறக்குறைய பன்னிரண்டு வருஷ காலம் என் உள்ளத்தில் தாங்கிக் கொண்டிருந்தேன். "சிவகாமியின் சபத"த்தில் கடைசிப் பாகம் கடைசி அத்தியாயம் கடைசி வரியை வரியை எழுதி "முற்றும் என்று கொட்டை எழுத்தில் போட்ட பிறகுதான் பன்னிரண்டு ஆண்டுகளாக நான் சுமந்து கொண்டிருந்த பாரம் என் அகத்திலிருந்து நீங்கியது.

மகேந்திரரும் மாமல்லரும் ஆயனரும் சிவகாமியும் பரஞ்சோதியும் பார்த்திபனும் விக்கிரமனும் குந்தவி யும் மற்றும் பல கதாபாத்திரங்களும் என் நெஞ்சிலிருந்து கீழிறங்கி "போய் வருகிறோம்" என்று அருமையோடு சொல்லி விடைபெற்றுக் கொண்டு சென்றார்கள். வுருத்து கீழிறங்கி, "போய் வருகிறோம் 

ஆகா அந்தப் பழத் தமிழ் நாட்டுப் பிரமுகர்கள், பெயருக்கும் புகழுக்கும் மிக்க ஆசை கொண்டவர்கள் போலும் ! என்றென்றும் அழியாத கற்பாறையிலே அல்லவா தங்களுடைய புகழை அவர்கள் எழுதி வைத்து விட்டுச் சென்றார்கள்! வேண்டுமென்று செய்தார்களோ, வேண்டாமலே செய்தார்களோ, நினைத்துச் செய்தார் களோ, நினையாமலே செய்தார்களோ - அவர்கள் செய்துவைத்த காரியங்கள் நீடூழி காலம் அவர்களுடைய நினைவை நிலைநாட்டுமாறு அமைந்திருக்கின்றன.

*


ல காலமாகப் பண்டைத் தமிழகத்தின் பெருமையைப் பற்றியும் பண்பாட்டின் சிறப்பைப் பற்றியும் கேள்விப்பட்டுக் கொண்டிருந்தேன்; படித்துமிருந்தேன். ஆனாலும், கேட்டது படித்தது எதுவும் உள்ளத்தில் நன்கு பதியவில்லை!நம்பிக்கையும் அவ்வளவாக உண்டாகவில்லை.

மகாபலிபுரம் என்று வழங்கும் மாமல்லபுரத்துக்குச் சென்று கண்ணால் நேரிலேயே பார்த்த பிறகு நம்பிக்கை ஏற்பட்டது. ஆயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னால் நமது செந்தமிழ் நாட்டில் இவ்வளவு அற்புதமான சிற்பங்களைச் செய்த மகா சிற்பிகள் இருந்தார்கள்! அவர்களை ஆதரித்துப் போஷித்து உற்சாகப்படுத்தி அவர்களுடைய கலைத் திறனைப் பிரகாசிக்கச் செய்த மன்னர்களும் இருந்தார்கள்

அப்படியென்முக. அந்தக் காலத்தில் தமிழகத்தின். பண்பாடும் சமூக வாழ்க்கையும் எவ்வளவு மேம்பட்டடிருக்க வேண்டும்! அத்தகைய மேம்பாட்டை ஒரு சமூகம் அடைய வேண்டுமானால் அதற்கு எத்தனை நூற்றண்டுகளுக்கு முன்னாலிருந்து சமூகத்திலே கலையும் கல்வியும் நல்லரசாட்சியும் நல்லொழுக்கமும் வளர்ந்து வந்திருக்க வேண்டும்!   இதையெல்லாவற்றையும் 
 தீக்கிரையாகியது; (8) தளபதி பரஞ்சோதி பிற்காலத்தில் சேனாதிதி உத்யோகத்தை விட்டுத் தமது சொந்தக் கிராமமாகிய திருச்செங்காட்டங்குடிக்குச் சென்று சிவநேசச் செல்வராக வாழ்க்கை நடத்தியது ஆகிய இவையெல்லாம் சரித்திரபூர்வமான உண்மைச் சம்பவங்கள்.

இந்தச் சம்பவங்கள் நிகழ்ந்த காலத்தில் தென்னாடு கலை வளத்தின் தலைசிறந்து விளங்கியது என்பது சரித்திரம் ஐயமற அறிவிக்கும் உண்மையாகும். சிற்பம், சித்திரம், சங்கீதம் நடனம் ஆகிய அழகுக் கலைகள் எல்லாம் தமிழகத்தில் அப்போது வளம் பெற்றிருந்தன. இந்தக் கலைகளுள், முக்கியமாகச் சிற்பமும் சித்திரமும், வித்திய பர்வதத்திலிருந்து இலங்கை வரையில் ஏறக்குறைய ஒரே விதமாகப் பரவியிருந்தன என்பதும், ஒரே பாணியில் அமைந்திருந்தன என்பதும் சரித்திர பூர்வமாகத் தெரிய வருகின்றன அஜந்தாவின் குகை மண்டபங்களிலும் தமிழத்தில் இப்போது சிற்றன்ன வாசல் என வழங்கும் சித்தர் வாச மலையிலும், இலங்கையில் உள்ள ஸ்ரீகிரி மலையிலும் ஒரேவிதமான சித்திரங்கள் அழியா வர்ணங்களில் எழுதிய அற்புதக் கலைப் பண்பு வாய்ந்த சித்திரங்கள் காணப்படுகின்றன, உலகத்தில் வேறு எங்கேயும் இத்தகைய பண்டைச் சித்திரங்களை காண முடியாது என்று கலை நிபுணர்கள் சொல்கிறார்கள்.

ஏறக்குறைய ஒரே காலத்தில் அஜந்தாவிலும் எல்லோராவிலும் வாதாபியிலும் கிருஷ்ணை நதிக்கரையிலுள்ள நாகார்ஜுன மலையிலும் மாமல்லபுரத்திலும் குன்றுகளைக் குடைந்து விமானங்கள் அமைக்கும் கலை பரவி மகோன்னத நிலையை அடைந்திருந்தது என்பதையும் சரித்திர ஆராய்ச்சியிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.


மேற்கூறிய சரித்திர உண்மைகளையெல்லாம் இந்த இரண்டு கதைகளிலும் கொண்டு வர முயன்றதன் பயனாக வாழ்க்கையிலேயே ஒப்பற்ற அநுபவம் ஒன்று எனக்குக் கிடைத்தது. அதுதான அஜந்தா யாத்திரை. அஜந்தா சித்திரங்களைப் பற்றிப் புத்தகங்களில் படித்ததை ஆதாரமாகக் கொண்டே, சிவகாமியின் சபதம்" எழுதுவதற்கு ஆரம்பித்தேன். ஆனால், கதையை எழுதிக் கொண்டு போகப் போக, ஆயனருக்குப் பிடித்தது போன்ற அஜந்தா பைத்தியம் என்னையும் பிடித்துக் கொண்டது. கதையில் நேர்முகமாக அஜந்தா வைப் பற்றிச் சொல்லும் கட்டம் வருவதற்கு முன்னால் அங்குள்ள சித்திரங்களை, அற்புதங்களை நேரிலே பார்த்துவிட வேண்டும் என்ற விருப்பமும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருந்தது. அந்த விருப்பமும் நிறை வேறுவதற்கு இறைவன் திருவருள் துணை புரிந்தது.

ரா. கிருஷ்னாமூர்த்தி
5-3-1948
*கல்கி"

=========================================================================================

பொக்கிஷம்  :

"காடெல்லாம் பிச்சிப்பூவு கரையெல்லாம் ஷெண்பகப்பூவு நாடே மனக்குதில்ல இந்த நலமாக போற பாத..."  இளையராஜா குரல் காதில் ஒலிக்கவில்லை?


ஷ்யாம் ஓவியம் 


ஸிம்ஹா ஓவியத்துக்காக...





தமிழில் பக்க எண்கள்.

பரபரப்பாக அந்நாட்களில் வனஸ்பதி விற்றாலும் நாங்கள் வாங்கினதே இல்லை!

ராமு ஓவியம்.  சுருட்டுடன் ஒரு கதாபாத்திரம்.

கன்டின்யுட்டி மாறாமல் அடுத்த ஓவியத்தில் ஓடும்போதும் வாயில் சுருட்டு!!








62 கருத்துகள்:

  1. காலை வணக்கம்.

    சரத்பாபு பற்றி பாத்திமாபாபு சொன்னதைப் படித்தேன். இந்த சரத்பாபு மீதுதானே மருமகள் கொடுமையோ என்னவோ... போலீஸ் கேஸ்லாம் போனது.

    எதற்கும் இரண்டு பக்கங்கள் உண்டோ?

    பதிலளிநீக்கு
  2. இனிய காலை வணக்கம்.......

    பதிவின் பகுதிகள் நன்று. மருத்துவமனை அனுபவங்கள்...... சில மருத்துவர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள். அப்பா/அம்மா மருத்துவமனையில் இருந்த நாட்களில் நிறையவே அனுபவங்கள்...... :(

    சரத்பாபு குறித்த செய்தி ...... நன்று.

    குணாவில் வரும் பாடல் எனக்கும் பிடிக்கும். பல சமயங்களில் மனதிற்குள் இந்தப் பாடல் ஓடும்.

    பதிலளிநீக்கு
  3. ஜெ..வின் முதல் ஓவியம்... ஜெ சித்திரங்களில்தான் இப்படிச் சீலை அணிந்திருக்கும் பெண்களைக் காண இயலும்.

    அடுத்து வந்த ஷ்யாமின் ஓவியம் வரைவது கஷ்டம். புகைப்படம் போல உயரம் உருவம் பொசிஷன் எல்லாம் சரியா அமையணும். ராமுவின் ஓவியமும் நன்று. இருந்தாலும் அவரின் ஓவியங்கள் பரவாயில்லை ரகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சீலைக்கும் சேலைக்கும் வித்தியாசம் உண்டா, நெல்லை?

      நீக்கு
    2. சீலை தமிழ். சேலை திரிபு சார். திரைப்படப் பாடல்களில் சேலை என்று உபயோகிக்கின்றனர்

      நீக்கு
    3. திரைச்சீலைக்கும் நீங்கள் சொல்லும் சீலைக்கும் என்ன வித்தியாசம்?

      நீக்கு
    4. ஒன்றை மறைக்கும் துணிக்குப் பெயர் சீலை.
      அது ஜன்னலை மறைத்தால் திரைச்சீலை.
      பெண்ணை மறைத்தால் சேலை.
      சொல்லப்போனச்ல் சீரை என்ற வார்த்தை தான் மறுவி சீலை ஆகியிருக்கிறது.

      நீக்கு
    5. தமிழ் அறிஞர்கள் விவாதிக்கும் இடத்தில் என்னைப் போன்ற Gzero க்களுக்கு இடம் இல்லை!

      நீக்கு
    6. ஜீவி சார்... உங்கள் பதில், என் மெமெரியைச் சோதித்ததால், நான் எப்படி என் நினைவு தவறாக இருக்க இயலும் என்று சோதித்தேன். சீலை என்பது திரிபு. சேலை என்பது வடமொழி திரிபு. உண்மையான தமிழ் வார்த்தை நீங்கள் சொல்லியிருப்பதுபோல சீரை. இதுதான் இலக்கியங்களில் இருக்கிறது.

      சீலை, சேலை இரண்டுமே சமஸ்கிருதச் சொல். அப்படீன்னாக்க இவை தமிழ் பெண்கள் உடையில்லையா? உதாரணமா பேண்ட், டி.ஷர்ட், ஷர்ட் போன்றவை தமிழர்கள் உடை இல்லாததால், இவற்றிர்க்கு தமிழ் வார்த்தை இல்லாததுபோல.

      சீரை என்பதன் உண்மையான அர்த்தம் மரவுரி. சீலை என்பதன் அர்த்தம் கந்தை அல்லது பழைய ஆடை. இது எப்படி இருக்கு?

      நீக்கு
    7. நல்லா இருக்கு!

      நீக்கு
    8. சமஸ்கிருதம், தமிழ் என்ற வேறுபாடுகள் எல்லாம் பிற்காலத்து அரசியல் கூப்பாடுகள் தாம். சமஸ்கிருதமும் தமிழும் சகோதரிகள்.

      நீக்கு
  4. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    இன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை. தங்களின் மருத்துவ அனுபவங்களை படித்து தெரிந்து கொண்டேன். அலோபதி மருத்துவம் பயமுறுத்தும். ஆனாலும், இந்த அவசர யுகத்தில் அந்த மருத்துவந்தான் பயனுள்ளது.

    தங்கள் மகனின் சுதாரிப்புகள் பாராட்டுக்குரியது. உங்களை அருகிலிந்து நன்றாக, கவனமாக பாதுகாத்துள்ளார். பாராட்டுக்கள். மீதி மருத்துவமனை வாசகங்கள் அடுத்த வாரம் தொடருமோ. ?

    இன்றைய கவிதை மிக அருமை. நம் மனதுதான் வருடப் போக்கில் எத்தனை மாறுதல்களை சந்திக்கிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    இன்றைக்கு திருமணவிழா காணும் உங்கள் இளைய மகனுக்கு எங்கள் அன்பான வாழ்த்துகள். சீரும் சிறப்புமாக வாழ்க வளமுடன்.. நன்றி.

    அன்புடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா, ஆஹா வாழ்த்துகளுக்கு எங்கள் நன்றி.

      நீக்கு
  7. "யாரும் வனஸ்பதி கொடுங்க..' என்று கடைகளில் கேட்டு வாங்கியதை நான்
    பார்த்ததில்லை.
    எங்களுக்கெல்லாம் டால்டா தான்.
    எவரெடி
    வெட்டும் புலி
    நரசுஸ்
    இதயம்
    SVS
    ஆவின்
    ஸ்வஸ்த்திக்
    LG
    --- இதெல்லாம் பெயரைச் சொன்னாலே இன்ன்ச் பொருள் என்று புரியும் புகழ்பெற்ற பிராண்டுகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செராக்ஸ் Xerox விட்டுட்டீங்க. வில்ஸ், 7 ஓ க்ளாக் ம். முன்னால டால்டா போட்டுச் செய்யும் இனிப்பு பட்சணங்கள் நெய் வாசனைபோல ரொம்ப நல்லா இருக்கும். பிறகுதான் வனஸ்பதி உடலுக்குக் கெடுதல் என்று கண்டுபிடித்தாங்க. பாமாயில் வந்ததிலிருந்து உடலுக்கு நல்லதல்ல என்ற பெயர் உண்டு.

      நீக்கு
  8. ஜெ-யின் அவலட்சணங்களெல்லாம் மறந்து போன AI-யின் ததரூப காலம் இது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சார்... இதுக்கு நீளமான பதில்தான் சரியா இருக்கும். மொத்தம் மூடிக் கிடந்தபோது முகம் கால்னு வர்ணித்தனர். பிறகு இடுப்பு. அப்புறம் ஓவியர்களில் ஜெ போன்றவர்கள் கொஞ்சம் கொஞ்சமா முன்னேறி இளவட்டங்களின் ஆர்வத்தை அதிகமாக்கினர். அதை ரொம்பவே அதிகமாக ஷ்யாம் போன்ற ஓவியர்கள் நக்கீரன் போன்ற மஞ்சள் பத்திரிகையில் கொண்டுசென்றனர். அதற்கு அடுத்த நிலை செல்லும்போது ஆர்வம் போய்விட்டது.

      ஜெயமாலினி ஜோதிலட்சுமி செஞ்ச வேலையை கதாநாயகிகள் போட்டி போட்டுக்கிட்டு செய்வது போன்று.

      நீக்கு
    2. நெ த சொல்வது சரி.

      நீக்கு
  9. ஶ்ரீராமின் இளைய மகன் திருமணத்திற்கு மனமார்ந்த வாழ்த்துகள். பத்திரிகை நேரில் கொடுக்க முடியாமல் போனாலும் மூத்த மகன் திருமணத்திற்கு கும்பகோணம் வந்த நாங்கள், இளைய மகன் திருமணத்திற்கு நேரில் பத்திரிகை கொடுத்தும் நேரில் வரமுடியாதது சங்கடமாக இருக்கிறது. காரணம், முன்னமே ஏற்பாடு செய்துவிட்ட அந்தமான் பயணம்.

    எப்போதும் ஒரு நல்ல நிகழ்வு இன்னும் சில நல்ல நிகழ்வுகளைக் கொண்டுவரும். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  10. 'சிவகாமியின் சபதம்'. கல்கியில் வெளிவந்த காலத்து கல்கி என்று தான் கதாசிரியரின் பெயர் போட்டிருக்கும்.

    அவர் காலத்திற்குப் பிறகு அதே கல்கி பத்திரிகை அந்த நாவலை மறுபிரசுரம் செய்கையில் அமரர் கல்கி என்று போட்டார்கள்.

    தமிழ் எழுத்துலகில் அமரர் என்று போட்டு வேறு எந்த எழுத்தச்ளரின் நாவலாவது மறுபிரசுரம் ஆகியிருப்பின் உங்கள் நினைவுக்கு வந்தால் சொல்லு க்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொஞ்சம் நகைச்சுவைக்காகச் சொல்கிறேன்.

      கல்கிக்கு (பத்திரிகை) சொந்தமா எந்த நாவலும் மனதில் தோன்றாததால், கல்கி எழுதிய நாவல்களையே மாற்றி மாற்றி பிரசுரம் செய்துகிட்டிருந்தாங்க. கல்கி இல்லாதபோது அமரர் கல்கினு பெயர் வச்சாங்க. கல்கிக்கு ஸ்டாம்ப் வெளியிடும் வரை, திமுக கருணாநிதிக்கு ஜால்ரா அடிச்சாங்க. அவரது நாவல்களை நாட்டுடமையாக்கி எல்லாம் செய்த பிறகு, நடுநிலைக்கு மாறிட்டாங்க. ஹா ஹா ஹா

      நீக்கு
    2. என் நினைவுக்கு தெரிந்த வரையில் கல்கியின் எழுத்துக்களை நாட்டுடமையாக்க அவர்கள் குடும்பம் முடிந்த வரை ஒத்துழைக்காமலே இருந்தார்கள். பொன்னியின் செல்வனை திரைப்படமாக்க அவர்கள் குடும்பம் வகுத்த விதிமுறைகள் எங்கேயாவது கிடைத்தால் வாசித்துப் பாருங்கள்.
      இத்தனையும் தாண்டி கல்கி இல்லையென்றால் சோழ வம்சத்திற்கு இத்தளவுக்குக் கீர்த்தி கிடைத்திருக்காது என்பதை மனமார உணர்கிறேன்.

      நீக்கு
    3. ஐந்து ஆண்டுகளுக்குள் எடுக்கணும் என்ற விதியை வகுத்திருந்தனர். கல்கியின் எழுத்து, தேசத்தின் பெருமையை உணரச் செய்த எழுத்து. அவரே சரித்திர நாவல்களுக்குப் பாதை வகுத்தவர். சோழ பல்லவ சாம்ராஜ்ஜியங்களையும் முன்னோர் பெருமையையும் தமிழர்களுக்குக் காட்டிக் கொடுத்தவர் என்பதில் சந்தேகமே கிடையாது ஜீவி சார்.

      நீக்கு
  11. கீதா ரங்கன் என்ன என்ன உணவு என்ற விவரங்களை படத்துடன் எழுதுவாரா இல்லை, எங்க.. சாப்பிடவே நேரமில்லை என்று டபாய்ப்பாரா?

    பதிலளிநீக்கு
  12. சிவகாமியின் சபதம் நாவல் எழுத சொந்த அல்லது பத்திரிகை காசில் பல இடங்களுக்கு கல்கி அவர்கள் பயணித்தார். பாலகுமாரனும் அப்படியே. அதில் நியாயம் இருக்கிறது.

    ஆனால் திரைப்படத்திற்கு பாடல்கள் எழுத என அடுத்தவன் காசில் தான் பார்க்காத நாடுகளைப் பார்க்கச் செல்லும் வயிரமுத்து போன்றவர்களை எந்தக் கணக்கில் சேர்ப்பது?

    பதிலளிநீக்கு
  13. இது என் வீடு.... மனதைக் கொஞ்சம் பாதித்த கவிதை? காரணம் சில நாட்களாக மகன் மகள் என்னைக் கூப்பிட்டு உணவுப் பழக்கங்களை மாற்றச் சொல்வதும், மகன் என் உணவு சாய்ஸை (ஹி ஹி.. குல்ஃபி, ஐஸ்க்ரீம், சாந்தி விலாஸ் மிக்சர், மனோகரம், கடலைமிட்டாய், வறுத்த கடலை, மாம்பழம் போன்றவைகளை) குறை சொல்லி அதனைத் தவிர்கச் சொல்கிறான். புதிதாக ஒரு கெட்ட வழக்கம் போர்ன்விட்டா ஹார்லிக்ஸ் (இவைகளை நம்புவதில்லை. போஷன் பிராண்ட் மத்மிய அரசு மருந்தகங்களில் கிடைப்பது) சில பல ஸ்பூன்கள் வெறும்ன சாப்பிடுகிறேன்.

    சொல்வது நல்லது. இருந்தாலும் நம் கன்ட்ரோல் நம் கையை விட்டு அடுத்த ஜெனரேஷனுக்குப் போகிறது என்பது கவிதை தரும் உணர்வைத் தருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் அடிக்கடி amazon now மூலமாக, sweet kaaram coffee - janaki பாட்டி (!) தயாரிப்பான முறுக்கு வகைகள், (garlic murukku sticks, Andhra spicy murukku, Kai murukku etc), நாடா பக்கோடா போன்றவற்றை வாங்கி சாப்பிடுவது உண்டு. No maida, No palm oil, No preservatives என்பது அவர்களின் உறுதிமொழி.

      நீக்கு
    2. கௌதமன் சார்... பிரச்சனை என்னன்னா நான் சாப்பிட்டால் நிறையச் சாப்பிட்டுவிடுவேன். ஸ்டாக் வைத்துக்கொள்வேன். இதனால் வீட்டு உணவு ஒழுங்கா சாப்பிடறதில்லை. ஆனால் ஃபுல் ஸ்கேன் ரிசல்ட் நல்லா இருக்கு என் உடற்பயிற்சி நடை யோகாக்களால்.

      நீக்கு
    3. தகவலுக்கு நன்றி.

      நீக்கு
  14. பெற்றெடுத்த மகன், மகளை விட வீடு, வாசல், ஆஸ்தி பெரிதாகி விட்டதா, என்ன?..
    மகன், மகள் மொத்த ஆஸ்தியை தங்கள் பொறுப்பில் எடுத்துக் கொண்டால்
    மனம் இந்த மாதிரி அல்லல்களில் சிக்கிக் கொள்ளாமல் இலேசாகிவிடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை சார். இது கொஞ்சம் உணர்வுபூர்வமானது. அடுத்த ஸ்டேஜுக்குப் போகிறோம் என நம்மை உணர வைப்பது. உங்களுக்கு ரேமன்ட் ஓனர், செட்டிநாட்டு சீமான் ஒரு பையனைத் த்த்தெடுத்தபிறகு நடந்த கதை இவைகளெல்லாம் தெரியும் என நினைக்கிறேன்.

      நீக்கு
    2. எனக்குத் தெரியாது.

      நீக்கு
    3. ஹி.. ஹி.. மகன், மகளை நம்பினால் அது அப்புறம் மருமகள், மாப்பிள்ளை வீடுகளாகி விடும் என்று நினைக்கிறோர்களா நெல்லை?

      நீக்கு
    4. பசங்களை நாம குழந்தைகளாக, நாம் எது சரி என நினைக்கிறோமோ அப்படி வளர்த்ததுபோல, நமக்கு வயதாகும்போது அவங்க கண்ட்ரோலுக்குப் போகும். இது இயற்கை. என் அப்பா எனக்கு போதித்துள்ளது, எதுவுமே நாம் இருக்கும் வரை நம் கையில்தான் இருக்கவேண்டும் (பணம் சொத்து போன்றவை). நமக்குப் பிறகுதான் வாரிசுகளுக்கு என்று.

      நீக்கு
    5. வயோதிகத்தில் நாமே அவர்கள் சொத்துக்களாய் ஆகி விடுகிறோம்.
      80 வயதைத் தாண்டிய பிறகு அவர்களே நம் ஊன்றுகோல். ஒழுங்காக 'இறப்பிற்கு பின்' என்று உயில் எழுதி வைத்து விட்டோம் என்றால் நம் சொத்துக்களுக்கு இயல்பாகவே அவர்கள் மேற்பார்வையாளர்களாக ஆகி விடுவார்கள். உப்பு பெறாத விஷயங்களுக்கு விரோதத்தை வளர்க்காமல் அன்பும் அரவணைப்பும் கூடுமானால் எல்லாவற்றின் process-ம் பெரும்பாலும் இயல்பாகவே நகர்ந்து விடும்.

      நீக்கு
    6. உண்மைதான் ஜீவி சார்... நமக்கு எப்போது ஊன்றுகோல் தேவை என்று மனது நினைக்கத்தோன்றுகிறதோ அப்போது அவர்களே நம் ஊன்றுகோல். நம் மக்களின்மீது விரோதத்தை எதற்காக வளர்க்கவேண்டும்? அவர்கள் நம்மை நாம் கண்ணாடியில் பார்த்துக்கொள்வது போலல்லவா?

      நீக்கு
    7. சரியாகச் சொன்னீர்கள்.
      மருமகளை 'இந்த குடும்பத்துப் பிரதிநிதி நீ தான்' என்றும்
      மகளை 'அந்த குடும்பத்துப் பிரதிநிதி நீ தான்' என்றும்
      சரியாக அவர்களுக்குப் புரிய வைத்து விட்டால் ஆதவனைக் கண்ட பனித்துளி போல எல்லா விகல்ப்பமும் பஸ்பமாகிவிடும்.
      தன் உரிமைகளை பெரும்பாலும் விட்டுக் கொடுக்கத் தயாரில்லாத 'என் குடும்பம் எனக்கு மட்டும் தான்' என்று வீம்பு பிடிக்கும் மனைவிமார்களை சரிப்படுத்தி விட்டோமென்றால்...

      நீக்கு



  15. எசப்பாட்டு

    ​பாடுபட்டு ஒரு
    வீட்டைக் கட்டி
    தொல்லை இன்றி
    வசிக்கும் போது
    நம்ம வீடு என்றே கூறினார்
    மகன்கள் இருவரும்.
    தற்போதும் அப்படியே.
    காரணம்
    அவர்களும்
    பாடு பட்டு ஒரு
    வீட்டைக் கட்டி
    என் வீடு , நம்ம வீடு என்று
    வேறுபடுத்தினர்.
    தன் கையே தனக்குதவி.

    பதிலளிநீக்கு
  16. ஸ்ரீராம், ராகுல்? சூப்பர். கேள்விகள் கேட்டு ஆராய்ந்து முடிவெடுப்பது நல்ல விஷயம்...அதுவும் //மகன் பொறுமையாக அவன் ஆபீஸ் காலையும், என் அட்மிஷனையும் சமாளித்தான்..//.

    ரொம்ப மனசுக்கு இதமான வரி ஸ்ரீராம். சூப்பர். ரெண்டு குழந்தைகளும் - - இப்ப நான்கு - குழந்தைகளும் நல்ல குழந்தைகள்! அவர்களுடைய நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதே நடக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  17. மூக்குக்குள்ள இப்படிச் செய்வதெல்லாம் ரொம்ப வேதனையாக இருக்கும்...எப்படியோ கடந்து வந்துட்டீங்க! ஆனா இது மீண்டும் வரும்னு சொன்னதாகச் சொன்னீங்களே...அதை நினைச்சாதான் கடவுளேன்னு இருக்கு

    கீதா

    பதிலளிநீக்கு
  18. அம்மாம் பெரிய இசை மேதை கையாண்ட நுணுக்கங்களை ....இப்படி நாமும் அனுபவித்துக் கேட்க நமக்குப் புரியும்படி சொல்லும் இவரை என்னவென்று சொல்ல? இசை மேதைதான்!! ஒருவரு இசை அமைப்பதில் மற்றொருவர் அதைப் பிரித்து மேய்வதில்! ராஜா இதைப் பார்த்து என்ன சொல்வார்....என்று யோசிக்கிறேன். ரொம்ப ரசித்தேன். இந்த எபிசோடு இன்னும் முழுசா வரலையோ? தேடிப் பார்த்தேன். கீரவாணி எபிசோடு பார்த்திருக்கிறேன்...ஆனால் இது...

    கீதா

    பதிலளிநீக்கு
  19. மகனின் திருமணத்துக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  20. சரத்பாபு பற்றி பாத்திமா பாபு சொல்லியிருக்கும் விஷயம் ரொம்ப நல்ல விஷயம்ல....நம் வீட்டிலும் கடைபிடிக்கும் விஷயம். ,

    நம்ம வீட்டில் விருந்து நடக்கும் போது, பொதுவா எல்லாரும் எழுந்த பிறகு யாரேனும் ஒருத்தர் அந்த இலைகளை எடுப்பாங்க இல்லைனா ஒரு உதவியாளர் எடுப்பார் இல்லையா...நாங்க ஒரு சிலர் மட்டும் எங்கள் இலையை நாங்களே மடித்துக் கொண்டு குப்பைத் தொட்டியில் போட்டுவிடுவோம். பின்னில் சிலர் கமென்டுவார்கள். நாங்கள் கண்டு கொண்டது இல்லை. பல மாற்றங்களை நாம கொண்டு வர வேண்டும் என்று நினைப்பேன். பொதுவெளியிலும். சில இடங்களில் அதைச் செயல்படுத்த முடியாமல் போகிறது. எனக்கு அது வருத்தம் வரவழைக்கும் ஒரு விஷயம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  21. பின்னர் கமலின் டாமினேஷன் காரணமாக சிபி மலயில் வெளியேற சந்தானபாரதி அந்த இடத்தைப் பிடித்தார். //

    சிபி மலயில் அருமையான டைரக்டர். நல்ல முடிவு அவரது முடிவு. அவர் எடுத்த படங்களைப் பார்த்தாலே தெரியும் என்ன ஒரு டைரக்ஷன் என்று. சந்தானபாரதி கமல் சொல்வதைத்தான் செய்வார் அவர் டைரக்டர் என்று பெயர் அவ்வளவே என்றுதான் எனக்குத் தோன்றும்.. நட்பு என்று சொல்லிக்குவாங்க. ஆனால் நட்பிலும் கூட ஒருவருக்கொருவரான மரியாதை இருக்க வேண்டும். தனிப்பட்ட ஸ்பேஸ் திறமைக்குக் கொடுக்க வேண்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  22. ஜனகராஜ் விஷயம் தகவல். இப்படியெல்லாமா என்று தோன்றியது

    கீதா

    பதிலளிநீக்கு
  23. இந்தப் பாடல் கேட்டதில்லை ஸ்ரீராம். அருமையான பாடல் இசை...ஓ இந்தக் கீரவாணி ராகம் பத்திதான் மேலே உள்ள டாக்டர் நாராயணன் பேசியதோ....ஓகே புரிந்தது. அதைத்தான் அவர் ஸ்வரம் போட்டு...

    சூப்பர்....ல. ராஜாவுக்கு எப்படி இப்படி எல்லாம் ....ஃபேன் சுத்தம் சத்தம்...அப்புறம் சுத்தியல் இசை...அப்படியே இசை மாறுகிறது இல்லைஅய.

    இது போல இன்னொரு ஹிந்துஸ்தானி பாடகர் மிகவும் ஃபேமஸ் ஹே ராம் படத்தில் உண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
  24. கவிதை சூப்பர் ஸ்ரீராம்.

    அதே மகன் இப்படிச் சொன்னால் எப்படி இருக்கும் என்று ஒரு கற்பனை...ஹிஹிஹி

    "இது நம் வீடு....நான் பார்த்துக் கொள்கிறேன்....இத்தனை வருஷம் உழைத்து பார்த்துக் கொண்ட நீ ஓய்வெடு" என்று சொன்னால்

    கீதா

    பதிலளிநீக்கு
  25. காந்தப்புல ரயில்களில் அதிக வேகம் கொண்ட ரயில் //

    இதில் பயணித்துப் பார்க்க வேண்டும் ஹிஹிஹி...ஏனென்றால் இப்படி அதிவேகத்தில் பயணித்துவிட்டு இறங்கும் போதும் நம் உடலில் அந்த வேகத்தின் பாதிப்பு இருக்கும் என்று எங்கேயோ வாசித்த நினைவு. ஒரு வேளை அது தெரியாமல்தான் இருக்குமாக இருக்கும் உள்ளே அந்த அதிர்வு...நம்மைப் பாதிக்காமல்..

    கீதா

    பதிலளிநீக்கு
  26. பசுவதை மட்டும் அஹிம்சா?

    அஹிம்சா என்பது மிகப் பெரிய வார்த்தை அல்லவா? சகமனிதனை வார்த்தைகளால் துன்புறுத்தினாலும் அது ஹிம்சை தானே!

    புலால் உண்ணாமை என்ற சொல்லை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அது நடை முறையில் சாத்தியமல்ல.

    கீதா

    பதிலளிநீக்கு
  27. அடிப்பெண்ணே பாடல் பல முறை கேட்டிருக்கிறேன். அருமையான இசை...ரசித்த பாடல் இப்பவும் ரசித்தேன், ஸ்ரீராம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  28. சிரமமான பரிசோதனை. ஊசிக்கு அட்மிஷனா? தமிழில் கையெழுத்து. நல்ல விஷயம்.

    கவிதை யதார்த்தம். அனைத்துப் பகுதிகளும் சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!