இப்போ முதலில் "பிரியாணி" செய்முறை பார்க்கும் முன்னர் அரிசியைச் சமைத்துவிட்டு அதில் காய்களைப் போட்டுக் கலக்கும் "ப்ரைட் ரைஸ்" எப்படினு பார்ப்போம். இதை 2,3 முறைகளில் பண்ணலாம். காய்களைத் தனியாகக் கூட்டுப் போல் செய்து கொண்டு அரிசியை மட்டும் நெய்யில் வறுத்து மசாலா சாமான்களோடு சேர்த்துப் புரட்டிக் கொண்டு சமைப்பது ஒரு முறை. இம்முறைக்குச் சாதத்தோடு காய்களால் ஆன கூட்டைத் தொட்டுக் கொண்டு சாப்பிட வேண்டும். முதலில் அதைப் பார்ப்போமா?
பாஸ்மதி அரிசி எனில் இதுக்கெல்லாம் நன்றாக இருக்கும். ஆனால் இல்லை
என்றாலும் பரவாயில்லை. நீங்கள் வழக்கமாகச் சமைக்கும் அரிசியையே எடுத்துக்
கொள்ளலாம்.
ஒரு கிண்ணம் பச்சரிசி, அரிசியைக் கழுவிவிட்டு நெய்யில் வறுத்துக் கொண்டு
இரண்டு கிண்ணம் வெந்நீரில் ஊற வைக்கவும்.
அரிசி சமைக்கையில் தாளிக்க நெய் அல்லது சமையல் எண்ணெய் அல்லது இரண்டும்
கலந்து ஒரு மேஜைக்கரண்டி.
தாளிக்க, பிரிஞ்சி இலை எனப்படும் மசாலா இலை ஒன்று நக்ஷத்திரப் பூப் போன்ற விதைகள் ,நக்ஷத்திர சோம்பு என்றும் சொல்வார்கள்.
ஒரு தேக்கரண்டி ஜீரகம், சோம்பு, வகைக்கு ஒரு தேக்கரண்டி, முழு மிளகு அரைத்
தேக்கரண்டி, ஏலக்காய் கறுப்பு எனில் ஒன்று போதும். பச்சை எனில் 2 எடுக்கொள்ளவும். இலவங்கப்பட்டை
ஒரு சின்னத் துண்டு.
கடாயில் அல்லது குக்கரில் அல்லது அடி கனமான பாத்திரத்தில் ஒரு மேஜைக்கரண்டி
எண்ணெய்/நெய் ஊற்றிக் கொண்டு தாளிக்கச் சொல்லி இருக்கும் பொருட்களை ஒவ்வொன்றாகத்
தாளிக்கவும்.
பின்னர் அதிலேயே வெந்நீரில் ஊற வைத்திருக்கும் அரிசியைச் சேர்த்து நன்றாகக்
கலக்கவும். அரைத் தேக்கரண்டி உப்பைச் சேர்க்கவும். குக்கர் எனில் மூடி போட்டு ஆவி
வந்ததும் குக்கர் குண்டை (விசில்) போடவும். இரண்டு சத்தம் போதும். சமயங்களில்
ஒன்றே போதுமானதாக இருக்கும். அது சூடாகக் குக்கருடன் அல்லது சமைத்த பாத்திரத்துடன்
இருக்கட்டும். மூடி வையுங்கள்.
இனி இதற்கான கூட்டு செய்முறை.
அடுத்துக் காய்கள் என்னவென்று பார்ப்போமா? இதற்கு எல்லாக் காய்களும் நன்றாக
இருக்காது. முக்கியமாய் பீன்ஸ், காரட், பட்டாணி ஆகியவற்றோடு சௌசௌ இருந்தால்
அதையும் நறுக்கிச் சேர்க்கலாம். உருளைக்கிழங்கு வேண்டாம். பலரும்
உருளைக்கிழங்கையும் சேர்க்கிறார்கள். அவ்வளவாக நன்றாக இருக்காது. காலிஃப்ளவர்
எனில் தேவையானால் கொஞ்சம் பூவை உதிர்த்து நீளமாக நறுக்கி எடுத்துக் கொள்ளலாம்.
இல்லை என்றாலும் பரவாயில்லை.
இதற்குத் தேவையான பொருட்கள்/
ஒன்று அல்லது 2 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு
மேஜைக்கரண்டி வெங்காயம் நறுக்கியதைத் தனியாக வைக்கவும்.
தக்காளிச் சாறு அல்லது 2 நடுத்தர அளவுத்தக்காளி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
உப்பு, தேவைக்கு. மஞ்சள் பொடி அரைத் தேக்கரண்டி, மிளகாய்த்தூள் ஒரு
தேக்கரண்டி, 2 தேக்கரண்டி தனியாத்தூள். கரம் மசாலாப் பொடி கால் தேக்கரண்டி.
தாளிக்க, வதக்க எண்ணெய் இரண்டு மேஜைக்கரண்டி. அல்லது வெண்ணெய் பாதி,
எண்ணெய் பாதி!
ஜீரகம், சோம்பு, பட்டை, ஏலக்காய், கிராம்பு, மசாலா இலை தாளிப்பில் போட அரைக்கப்
பச்சை மிளகாய் ஒன்று அல்லது இரண்டு. ஒரு அங்குலத்துண்டு இஞ்சி தோல் சீவி
எடுத்துக்கொள்ளவும். பூண்டு பிடித்தால் 2,3 பல் சேர்க்கலாம். இல்லாவிட்டாலும்
பரவாயில்லை. கொத்துமல்லித் தழை பொடியாக நறுக்கியது ஒரு சின்னக் கிண்ணம். இதில்
பாதியை அரைக்க எடுத்துக் கொள்ளவும். தேங்காய்த் துருவல் இரண்டு தேக்கரண்டி,
முந்திரிப்பருப்பு 2 அல்லது 3. கசகசா ஒரு தேக்கரண்டி. முன் கூட்டியே ஊற வைக்கவும்.
இவற்றை மிக்சி ஜாரில் போட்டு நன்கு நைசாக விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
அடுப்பில் அடிகனமான பாத்திரத்தை வைத்து அல்லது குக்கரில் எண்ணெய் ஊற்றவும்.
தாளிக்கக் கொடுத்திருக்கும் பொருட்களை ஒவ்வொன்றாகப் போட்டுத் தாளிக்கவும். மசாலா
சாமான்கள் வறுபட்டு வாசனை வரும்போது அரைத்து வைத்த விழுதைப் போட்டு பச்சை வாசனை
போக வதக்கவும். மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், தனியாத்தூள் சேர்த்து நன்கு
வதக்கவும். நன்கு வதங்கியதும் நறுக்கிய காய்களைச் சேர்த்து இன்னும் ஐந்து
நிமிடங்கள் வதக்கிக் கொள்ளவும். தக்காளிச் சாறு அல்லது நறுக்கிய
தக்காளித்துண்டங்களைச் சேர்த்து வதக்கவும். எண்ணெய் போதவில்லை என்றாலோ அல்லது
எண்ணெய் அதிகம் வேண்டாம் என்றாலோ வெண்ணெயைச் சேர்க்கவும்.காய்கள் வதங்கும்போது
இரண்டு தேக்கரண்டி சர்க்கரையைச் சேர்க்கவும். தக்காளிச் சாறில் காய்கள்
வதங்கும்/வேகும்/ தக்காளித்துண்டங்களைப் போட்டால் அவை நன்கு குழையும் வரை
அரைக்கிண்ணம் நீர் ஊற்றி மூடி வைத்து வேகவிடவும்.
இப்போது காய்கள் அரை வேக்காடு வெந்திருக்கும். தேவையான உப்பைச் சேர்த்து
இன்னும் கொஞ்சம் நீர் சேர்க்கவும். மூடி வைத்து வேகவிடவும். காய்கள் எல்லாம்
சேர்ந்து கூட்டுப் பதம் வந்ததும். அதனுடைய கெட்டித்தன்மையைச் சோதிக்கவும். நீர்க்க
இருந்தால் இரண்டு தேக்கரண்டி சோளமாவைக் கரைத்து ஊற்றலாம். இப்போது கரம்
மசாலாத்தூளை நினைவாகச் சேர்த்து மீதம் இருக்கும் கொத்துமல்லித்தழையையும்
சேர்க்கவும். தேவையானால் புதினாவும் சேர்க்கலாம். சூடான சாதத்துடன் இந்தக்
கூட்டைத் தொட்டுக்கொண்டு சாப்பிடப் பரிமாறவும்.
நறுக்கிய காய்கள் இரண்டு கிண்ணம், இரண்டு பெரிய வெங்காயம் பொடியாக
நறுக்கியது அல்லது நீளமாக நறுக்கியது. இரண்டு நடுத்தர அளவுத்தக்காளியில் சாறு அல்லது பொடியாக நறுக்கியது.
தேவையான பொருட்கள் தாளிக்க/வதக்க எண்ணெய்/வெண்ணெய் கலந்து இரண்டு மேஜைக்கரண்டி. ஜீரகம், சோம்பு, கிராம்பு, லவங்கப்பட்டை, ஏலக்காய், மசாலா இலை/கிடைத்தால்
நக்ஷத்திர மசாலா விதைகள். மிளகாய்த் தூள் ஒரு தேக்கரண்டி, தனியாத்தூள் 2
தேக்கரண்டி, கரம் மசாலாத் தூள் அரைத் தேக்கரண்டி. மஞ்சள் தூள் அரைத்தேக்கரண்டி.
உப்பு தேவைக்கு. கொத்துமல்லித் தழை பொடியாக நறுக்கியது. இரண்டு தேக்கரண்டி
சர்க்கரை. பச்சை மிளகாய் இரண்டு நடுவிலே கீறி இரண்டாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி
ஒரு துண்டு தோல் சீவிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டு பிடித்தால் நாலைந்து
பற்கள் இரண்டாகக் கீறிக்கொள்ளவும்.
அடுப்பில் அடி கனமான பாத்திரம் அல்லது குக்கரில் எண்ணெய்/வெண்ணெய் ஊற்றிக்
கொண்டு காய்ந்ததும் முதலில் சர்க்கரையைச் சேர்க்கவும். சர்க்கரை கரையும்போது
தாளிக்கக் கொடுத்திருக்கும் பொருட்களை ஒவ்வொன்றாகப் போட்டுத் தாளிக்கவும். நல்ல
மணம் வந்ததும் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்க்கவும். பூண்டு பிடிக்காதவர்கள்
பூண்டைத் தவிர்க்கலாம். நன்கு வதக்கிக் கொண்டு வெங்காயத்தைச் சேர்க்கவும்.
வெங்காயம் சுருள வதங்கவேண்டும். வதங்கியதும் காய்களைச் சேர்க்கவும். காய்களை நன்கு
வதக்கவும். மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள் சேர்த்துக் காய்களை
வதக்கவும்.
இப்போது நறுக்கிய தக்காளித்துண்டுகள் அல்லது தக்காளிச் சாறைச் சேர்க்கவும்.
நன்கு கிளறிவிட்டுத் காய்கள் அரை வேக்காடு வேகும் வரை வதக்கிவிட்டு ஊற வைத்த
அரிசியைச் சேர்க்கவும். உப்புத் தேவையானதைச் சேர்க்கவும். அரிசி உடையாமல்
கிளறிவிட்டு அடுப்பில் இன்னொரு பக்கம் நீரைச் சுட வைக்கவும். அதைக் கிளறிய
அரிசியில் சேர்க்கவேண்டும்.
அல்லது ஏற்கெனவே அரிசி வெந்நீரில் ஊறி இருந்தால் அந்த நீரோடு அப்படியே
சேர்க்கவும். நன்கு கிளறிவிட்டுக் குக்கரானால் மூடியைப் போட்டு மூடி ஒரு விசில்
வந்ததும் நிறுத்தவும். பாத்திரமானால் மேலே ஒரு தட்டைப் போட்டு மூடி அதிலும் நீரைச்
சுட வைக்கவும். அடிக்கடி திறந்து பார்த்துக் கிளறவும். நன்கு கிளறி அரிசி வெந்து
தனித்தனியாக ஆனதும் கரம் மசாலாப் பொடியைச் சேர்க்கவும்.குக்கரானால் குக்கரைத்
திறந்து கரம் மசாலாப் பொடியையும் கொத்துமல்லியையும் தூவவும். நன்கு கிளறவும்.
இதற்குத் தொட்டுக்கொள்ள வெங்காயப் பச்சடி, தக்காளிப் பச்சடி, காரட் பச்சடி,
வெள்ளரிக்காய்ப் பச்சடி ஆகியவை நன்றாக இருக்கும்.
நாடுகள் என்று பிரிந்து கிடக்கும் நந்தவனங்களில் எத்தனையோ வண்ணங்களில் மலர்ந்து செழிக்கும் மனித குல வாழ்க்கை என்னும் மலர்களில் ஊறித் ததும்பும் ஜீவ மதுவின் சுவை நாடி ரீங்கரிக்கும் ஒரு வண்டுபோல்-இசைபாடி எழுந்து விண்ணில் உயர்ந்து சென்ற அந்த விமானம், - பாரீஸை நோக்கி அல்ல; கல்கத்தாவை நோக்கித் திரும்பிற்று!
முற்றும்


பிரையிங் இல்லாமல் பிரைட் ரைஸ்!!! என்னதான் மசாலா சேர்த்தாலும் கூட்டு சாதம் பிரைட் ரைஸ் ஆகாது.
பதிலளிநீக்குJayakumar
பிரைட் ரைஸ், வெஜ் புலாவ், வெஜ் பிரியாணி, ஆகிய மூன்றும் வெவ்வேறு. செய்யும் முறையும் மாறுபடும்.
பதிலளிநீக்குநான் மூணுமே செய்திருக்கேன். மூணும் வெவ்வேறு என்பது தெரியும். வட மாநிலங்களில் பொதுவாக நாம் புலவு என்று சொல்லப்படுவது தான் செய்வார்கள். ஃப்ரைட் ரைஸ் காலையில் வடித்த சாதம் மிஞ்சினால் இரவுக்கு அதை வீணாக்காமல் பலரும் இப்படிச் செய்து விடுவார்கள்.. நான் தனியாகவே ஃப்ரைட் ரைஸ் ரைஸ் குக்க்ரில் வைச்சுச் செய்திருக்கேன். நாங்கள் "ஆர்ட் ஆஃப் லிவிங்" கூட்டங்களுக்குச் செல்லும்போதெல்லாம் இம்மாதிர்ப் பண்ணிக் குக்கரோடு காரில் வைச்சுக் கொண்டு போயிடுவேன்.
பதிலளிநீக்குகூட்டோடு உள்ளதில் அரிசியை நன்கு வறுத்துக்கொள்ள வேண்டும் என முதலிலேயே சொல்லி இருக்கேன். சாதமாக வடிச்சுட்டு அதைக் காய்களோடு சேர்த்து வதக்குவதைத் தான் ஃப்ரைட் ரைஸ்னு சொல்றீங்களோ என்னமோ, தெரியலை. காய்களை வதக்கும்போதே தனியாக வறுத்து வைத்திருக்கும் அரிசியையும் அதில் சேர்த்து நன்கு கலந்து விட்டு வதக்கிட்டுப் பின்னர் குக்கர் அல்லது ரைஸ் குக்கரில் சமைத்து எடுப்பதைத் தான் நாங்க ஃப்ரைட் ரைஸ் என்போம்.
பதிலளிநீக்குஇன்னிக்கு என்ன எல்லோருக்கும் ஓவர் டோஸா? யாருக்கும் பசி இல்லை போல. நான் போயிட்டுப் பின்னர் முடிஞ்சா வரேன். :)))
பதிலளிநீக்குஇன்னைக்கு காலையிலிருந்து இப்போ வரை பிசியா இருந்துட்டேன். ஶ்ரீராம் கீதா ரங்கன் மாதிரி காணாமல் போகலை
நீக்குதவிர்க்க முடியாத நிலை. வரமுடியவில்லை. மன்னிக்கவும்.
நீக்குஎனக்கு ஃப்ரைடு ரைஸ் பிடிக்காது. அதனால் சாப்பிடுவதில்லை.
பதிலளிநீக்குவித வித செய்முறைகள் கொடுத்திருக்கீங்க.
கீசா மேடம் வட நாட்டில் இருந்திருந்ததால் இதெல்லாம் தெரிஞ்சிருக்கு. இல்லைனா கதம்ப சாதம், எலுமிச்சை ரைஸ்னு பசங்களுக்குக் கொடுத்திருப்பாரோ?
உண்மைதான் நெல்லை. அதிகம் வடநாட்டில் இருந்ததால் அவங்க செய்முறைகள், உணவு வகைகள்னு தெரிஞ்சுக்க முடிஞ்சது. பைங்கன் பர்த்தாவுக்குக் கிட்டத்தட்ட ஒரு கிலோ அல்லது குறைந்த பட்சம் அரைக்கிலோவாவது எடை உள்ள கத்தரிக்காயை அதற்கென்று இருக்கும் அடுப்பில் (கரிதான். அதை மாற்றிப் பார்க்கவில்லை. இப்போத் தெரியாது.) போட்டுச் சுடுவாங்க. சுடும் முன்னர் கத்திரிக்காயைக் கழுவி எண்ணெய் தடவிட்டுச் சுற்றிலும் உள்ளே அரை அங்குலம் அளவுக்குக் கீறல்கள் போட்டுக் கத்திரிக்காயினுள் பச்சை மிளகாய், பூண்டு இரண்டையும் கீறி உப்பு, மஞ்சள் பொடி தடவி உள்ளே வைப்பார்கள். கத்திரிக்காயின் மேல் பாகத்திலும் உப்பு, மஞ்சள் பொடி தடவுவாங்க. சுற்றிலும் கீறப்பட்டுப் பச்சை மிளகாய், பூண்டு ஸ்டஃப் பண்ணிய கத்திரிக்காய்களைச் சுட்டு எடுத்துத் தோல் உரித்துக் கொண்டு ஒரு மண் சட்டி அல்லது அகலமான பாத்திரத்தில் போட்டு உள்ளே உள்ள பச்சைமிளகாய்,, பூண்டை எல்லாம் எடுக்காமலேயே எல்லாவற்றையும் போட்டு நன்கு கடைவார்கள். அதன் பின்னரே தாளிதம் எல்லாம். பொதுவாகத் தக்காளி அதிகம் சேர்க்க மாட்டார்கள். சிலர் ப்ளாஞ்சிங் பண்ணிய தக்காளியைத் தோல் உரித்துவிட்டுச் சேர்ப்பார்கள். பின்னர் தாளித்துக்கொண்டு மசாலாப் பொருட்கள் எல்லாம் சேர்த்து வெங்காயம் சேர்த்தோ அல்லது சேர்க்காமலோ இந்தக் கடைந்த கத்திரி விழுதையும் தக்காளி விழுதையும் சேர்த்துப் போட்டுக்கலந்து கொதிக்க விடுவார்கள். பெரும்பாலும் தக்காளி சேர்க்காமல் எலுமிச்சம்பழம் இறக்கியதும் பிழிவதும் உண்டு.
நீக்குநல்ல வெஜ் பிரியாணி சாப்பிட ஆசை. மனைவியை புளியொதரை பண்ணச் சொல்லவும் ஆசை. ஆனால் சாதம் சாப்பிட்டால் எடை ஏறுவதாலும், இந்த மாத்த்தின் கடைசி இரண்ட்டு நாட்கள் திருமணத்துக்குச் செல்வதாலும், வாயைப் பொத்திக்கொண்டு சும்மா இருக்கேன்.
பதிலளிநீக்குபெங்களூர் கஃபே என்ற உயர்வகை ரெஸ்டாரன்டில் வெஜ் பிரியாணி ரொம்ப நல்லாருக்கும். சாப்பிட்டு மூன்று வருடங்களாகி இருக்கும்.
அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குஃப்ரைட் ரைஸ் - கூட்டு செய்முறை குறிப்புகள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குபிள்ளைகள் வந்தால் தான் இவை எல்லாம். எனக்கு ரசம், கூட்டு, துவையல் தான்.
பாரீஸுக்கு போ கதை படித்து பல வருடம் ஆச்சு.மீண்டும் படிக்க ஆவலை ஏற்படுத்துகிறது. முதலும் , முடிவும் பகிர்வு.
பதிலளிநீக்கு