வெள்ளி, 7 ஆகஸ்ட், 2009

செய்தியும் சிந்தனையும்

  • பன்றிக் காய்ச்சலுக்கு தனியார் மருத்துவமனைகளையும் உபயோகப் படுத்திக் கொள்வது என்று மத்திய அரசு யோசிக்கத் தொடங்கி உள்ளது. பீதி கொண்ட மக்கள் அனைவரும் ஆஸ்பத்திரிக்குப் படை எடுத்தால் அரசு ஆஸ்பத்திரிகள் இடம் போதாது. மேலும் அதற்கான மருந்தையும் (Tami Flu) தனியார் கடைகளில் அனுமதிப்பது பற்றியும் இரண்டொரு நாளில் முடிவு சொல்வார்களாம். பசுவின் சீம்பால் இதற்கு நல்ல மருந்து என்று கண்டு பிடித்திருக்கிறார்களாம். வரும் முன்னரும், வந்த பின்னும் மருந்தாக உபயோகப் படுத்தலாமாம். அலோபதி சிகிச்சையுடன் கூட அதை எடுக்க வேண்டுமாம்.
  • சீம்பாலையும் அரசே வாங்கி மருந்துக் கடையில் விற்குமா?!
  • சென்னை நுங்கம்பாக்கத்தில் சாலையைக் கடக்க உதவும் நடை மேம்பாலப் படிகளில் ஏற முடியாதவர்களுக்கு Lift வசதி செய்கிறார்களாம்.கட்டிக் கொண்டிருக்கிறார்களாம்.
  • இந்த முனை முதல் அந்த முனை வரை நடக்க எஸ்கலேடர் கூட வைக்கலாமே!
  • பிளாஸ்டிக் பாகெட்டுகளில் கடவுள் படம் போடத் தடையாம். குப்பைக்கு போய் விடுகிறதாம்.
  • ஊதுபத்தி சூடப் பொட்டலங்களிலும் மற்ற பொருட்களில் வரும் கடவுள் படங்கள் எங்கு போகிறதாம்?
  • பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்த திருவிழா ஆட்களுக்கு மனித உரிமை கமிஷன் Notice அனுப்பி உள்ளதாம்.
  • தானே முன்வந்து இப்படி செய்து கொள்ளும் பக்தர்களை இந்தக் கமிஷன் என்ன செய்ய முடியும்?
  • மதம் மாறி இரண்டாவது திருமணம் இனி அவ்வளவு சுலபம் அல்ல.
  • அது என்ன இரண்டாவது திருமணம்? திருமணத்துக்காக மதம் மாறுவது தவறு என்று சொன்னாலாவது பரவாய் இல்லை. மதம் மாறுவதே தவறு எனும்போது..
  • டாஸ்மாக்கில் 57 B.E., படித்தவர்களும் 1,129 B.Ed., படித்தவர்களும் supervisor முதல் எடுபிடி வரை வேலை பார்க்கிறார்களாம்.
  • இதற்கு என்ன சொல்ல?
  • வயதுக்கு வந்த பெண்ணோ, வராத பெண்ணோ, திருமணம் செய்து கொள்ள இருக்கும் பெண்ணோடு இன்னொரு பெண்ணை இலவசமாய்க் கொடுத்தால்தான் திருமணமாம் அரியானாவில். என்ன கொடுமை?
  • தேர்தல் வாக்குறுதியாக மற்ற மாநிலங்களிலும் அமுல் படுத்தப் படுமா?

3 கருத்துகள்:

  1. இந்த ஐடியா நன்றாக இருக்கிறது. இது மாதிரி ஆர்டிகிள் அடிக்கடி எழுதுங்கள்.

    http://kgjawarlal.wordpress.com

    பதிலளிநீக்கு
  2. அந்தக் காலத்தில் எம். ஆர. ராதா ரத்தக் கண்ணீர் நாடகத்தில் வரும் ஒரு காட்சி மிகப் பிரபலம். எஸ். எஸ். ராஜேந்திரன் ராதாவின் நண்பனாக வருவர். அவர் பேப்பர் படிக்கப் படிக்க ராதா கமென்ட் சொல்வதுதான் காட்சியின் சிறப்பம்சம். அன்றைய தலைப்புச் செய்திகளை விமர்சித்து ராதா தனக்கே உரிய பாணியில் அபிப்பிராயம் சொல்வது அமோக வரவேற்பைப் பெற்றது.

    பதிலளிநீக்கு
  3. எனக்கு என்று தனி தொலைக் காட்சி சேனல் இருந்தால்தான் கருணாநிதியின் பிதற்றல்களுக்கு பதில் சொல்லி அது மக்களைச் சென்று அடையும் என்று விஜயகாந்த் சொல்கிறாராம்.

    கருணாநிதிக்கு பதில் அளிக்க எண்ணி இவர் பேத்துவதை மக்கள் கேட்கும் அதிர்ஷ்டம் இல்லாமல் போய் விட்டதே!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!