பிளாஞ்செட் பலகை என்று ஒன்று. எ, பி, சி, டி எழுத்துக்களும், ஒன்று முதல் ஒன்பது வரை இலக்கங்களும் பூஜ்யமும், ஆம், இல்லை என்று இரண்டு ஆப்ஷன் களும் கொண்டது, கண்ணாடி போல் வழு வழுப்பான பலகையில் இந்த எழுத்துக்கள் பிறவும் ஓட்டப் பட்டிருக்கும். எளிதில் சறுக்கிச் செல்லக் கூடிய ஒரு வஸ்து அதன் நடுவில். இதை நான்கைந்து பேர் கை விரல்களால் லேசாக தொட்டுக் கொண்டிருப்பர்.
அறையில் ஒருவர் "1991 இல காலமான என் தந்தையார் சுப்ரமணிய ஐயர் குமாரர் கோபாலய்யர் அவர்களை அழைக்கிறேன்" என்று தெளிவாகக் கூறுவார்
கொஞ்ச நேரம் கனமான மௌனம். நிசப்தம். திடீரென்று எல்லாரும் (?) லேசாகப் பிடித்திருக்கிற பொருள் நகரத் தொடங்குகிறது.
" நீங்கள் வந்திருப்பது உண்மையானால் உங்கள் பிறந்த வருஷத்தைச் சொல்லுங்கள்" என்று முன்பே கூப்பிட்டவர் கேட்கிறார்.
மீண்டும் நிசப்தம். சஸ்பென்ஸ். மெதுவாக பொருள் நகர்ந்து 1, 9, 0, 8 க்குச் சென்று வருகிறது!
மிகச் சரியான விடை என்று அப்துல் சமத் கூவ வில்லை. ஆனாலும் சரியான விடை தான்.
இனி வரிசையாக கேள்விகள் கேட்கப் பட பதில்கள் இந்த முறையில் வருகின்றன.
இதுதான் அடித்தளம். இதன் மேல் கட்டப் படும் மாளிகைகளின் சிக்கல்கள் நுணுக்கங்கள் ஏராளம். அவற்றை இனி வரும் உள்ளீடுகளில் பார்க்கலாமா?
Yraman
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!