செல்ஃபோன் கேம்சிலிருந்து நிமிர்ந்து தொ(ல்)லைக்காட்சியைப் பார்த்தார் வாசு. சிறையில் ஓமகுச்சி நரசிம்மன், 'அத்தை செத்துப் போய்ட்டார்' என்று அழுது கொண்டிருந்த காட்சி. 'எப்படிச் செத்தார்?' என்றால், 'கொலை ஆயிட்டார்'. 'கொலையாளியைப் பிடிச்சாச்சா?', 'பிடிச்சாச்சு', 'எங்க இருக்கார்?', 'இங்கதான்', 'யாரு?', 'நாந்தாங்க அது'...'ஏண்டா விளையாடறியா?' என்றால், 'சும்மா இழுக்கலாம்னுதான் !' எனும் காட்சி.
நகைச்சுவையாம்.
சுசி சீரியலுக்கு நடுவே யதேச்சையாக வைத்த சானல்.
அலுப்புடன் எழுந்தார். ஒரு 'தம்' அடிக்கலாம் போலத் தோன்றியது. சட்டையை மாட்டிக் கொண்டு செருப்பைப் போட்டுக் கொண்டு கிளம்பினார். ஓய்வு பெற்று இரண்டு வருடங்கள் ஆகின்றன. சில சமயங்களில் பொழுதைத் தள்ளுவது மிகச் சிரமமாக உள்ளது.
கடையில் ரேவதிதான் இருந்தாள். கடைக் காரரின் பெண். சூட்டிகையான பெண். ஏதாவது தொண தொண வென்று கேள்வி கேட்டு பேசிக் கொண்டிருப்பாள். இவரைப் பார்த்ததும் ஒரு அறிமுகப் புன்னகையுடன் வழக்கமான சிகரெட்டை எடுத்து நீட்டினாள். வாங்கிப் பற்ற வைத்துக் கொண்டார். புகையை உள்ளே இழுத்து வெளியில் விட்டார். 'அப்பாடா...'
ரேவதியின் மேல் கவனம் சென்றது. ஏதோ பரீட்சை எழுதி இருந்தாளே....
"எக்ஸாம் முடிஞ்சிடுச்சு இல்லே...?"
"எக்ஸாமா... அங்கிள் ரிசல்டே வந்துடிச்சு...."
"ஓ....என்ன எழுதினே..?"
"+2 தான் அங்கிள்..." கடையில் வியாபாரம் கவனித்துக் கொண்டே பதில் சொன்னாள் ரேவதி. மதிய நேரம் என்பதால் அவ்வளவு கூட்டமில்லை.
"என்ன ஆச்சு ரிசல்ட்?"
"எதிர்பார்த்ததுதான் அங்கிள்..."
எதிர்பார்த்ததுதான் என்றால்.... அடுத்த கேள்வி பார்வையிலேயே இருக்க நிமிர்ந்து பார்த்த ரேவதி புன்னகைத்தாள்.
"ஃபெயில் அங்கிள்.."
"அடடா....என்ன ஆச்சு?...எதுல போச்சு?.." பரவாயில்லை புன்னகையுடன் சொல்கிறாளே என்று நினைத்துக் கொண்டார் வாசு.
"மேத்ஸ்லதான் அங்கிள்.." யாரும் இல்லாததால் அவளும் ஸ்டூலில் அமர்ந்தபடி பேசினாள்.
"ஓ...எவ்வளவு... ரீ வேல்யுவேஷனுக்குத் தரலாமே... எவ்வளவு வந்தது.." சிகரெட் தீர்ந்து விட்டதால் இன்னொன்று வாங்கி பற்ற வைத்துக் கொண்டார்.
"பதினேழு மார்க் அங்கிள்..."
"ஓ..." லேசான தயக்கத்துடன் மேற்கொண்டு என்ன பேசுவது என்று யோசித்தபடி புகையை இழுத்தார்.
(ரெண்டு சிகரெட் வாங்கிட்டார் இந்த இடத்துல இந்த கேப்ஷன் வரணுங்க.....)
"புகைப் பிடித்தல் உடல்நலத்திற்குத் தீங்கானது - எங்கள் ப்ளாக்"
"அப்போ மற்ற சப்ஜெக்ட்ல எல்லாம் எவ்வளவு..."
"அதெல்லாம் பரவாயில்லை அங்கிள்... இதை விட மற்ற எல்லா சப்ஜெக்ட்ல எல்லாம் ரெண்டு மூணு மார்க் கூட..."
வாசுவின் சிகரெட் நழுவியது. கேட்டிருக்கவே வேண்டாம் என்று தோன்றியது.
"அப்போ ஏன் மேத்ஸ் மட்டும் சொன்னே..." எரிச்சலைக் காட்டாமல் கேட்டார்.
"அதுலதான அங்கிள் ரொம்பக் கம்மி.... டோட்டல் நூத்தி எண்பத்தாறு அங்கிள்..." வந்த கஸ்டமரை கவனிக்க எழுந்தாள்.
'இதுக்கு ஓமகுச்சி ஜோக்கே தேவலாம்...' சிகரெட்டைக் கீழே போட்டு தேய்த்து விட்டு கிளம்பினார் வாசு.
(ஓமகுச்சி கொஞ்சம் 'இழுப்பதைப்' பொறுக்காமல், வாசு கொஞ்சம் சிகரெட் 'இழுக்கலாம்' என்று கடைக்குப் போனால், ரேவதி அவரை இப்படி 'இழுத்து' விட்டாளே! அதை வைத்து நாங்களும் ஒரு பதிவு 'இழுத்து' விட்டோமே! எங்களை 'இழுக்க' நினைப்பவர்களுக்கு நல்ல சந்தர்ப்பம் - பின்னூட்டங்கள் மூலமாக.)
முக்கியமான, பதிவுபூர்வமான எச்சரிக்கை: "புகைப் பழக்கம் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும். முக்கியமாக உங்களைச் சுற்றியுள்ளவர்கள் உடல் நலத்திற்கு!"
neengalumaa :P
பதிலளிநீக்குஹஹஹ.... ரொம்ப இழுத்துட்டீங்க....:)))
பதிலளிநீக்குஹா ஹா ஹா.... சூப்பர் இழுவை...
பதிலளிநீக்கு"புகைப் பிடித்தல் உடல்நலத்திற்குத் தீங்கானது - எங்கள் ப்ளாக்"
பதிலளிநீக்குதமிழக வலைப்பூக்களில் முதல் முறையாக எங்கள் ப்ளாக்கில் தான் இப்படி எச்சரிக்கை. சரியா.
"புகைப் பிடித்தல் உடல்நலத்திற்குத் தீங்கானது - எங்கள் ப்ளாக்"
பதிலளிநீக்கு......நல்லா இழுத்து உங்கள் ப்லாக், அவங்க ப்லாக், இவங்க ப்லாக் எல்லாத்திலேயும் சொல்லுங்க... :-)
இப்படி இழு..இழுன்னு இழுத்திட்டீங்களே!! நானா உங்களை இழுக்க மாட்டேன்.யாராவது இழுத்தா
பதிலளிநீக்குதடுக்கவும் மாட்டேன்!!
எப்படி நம்ம இழுப்பு! ஹி..ஹி..ஹீ...
அன்புடன்,
ஆர்.ஆர்.ஆர்.
Javoooo
பதிலளிநீக்குஅரு..........மை
பதிலளிநீக்குபுகைப் பிடித்தல் உடல்நலத்திற்குத் தீங்கானது - எங்கள் ப்ளாக்..
பதிலளிநீக்குஇப்படி நல்ல கருத்துக்களை நல்லவே பரப்புங்க நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பு இல்லன்னு நாயகன்ல தலைவர் சொல்லிருக்கார்லே!கவலை இல்லாம இழுத்து இழுத்துச் சொல்லுங்க..என் புல் ஸபோர்ட் உங்களுக்குத்தான்.
Please see my updated awards post..ungala vida mudiyala..am impressed..
பதிலளிநீக்குசரி...சொல்லிட்டீங்க.இனி புகை பிடிக்கிறவங்க பக்கம் கூடப் போகல.சரியா !
பதிலளிநீக்குஇங்கே புகை பிடித்தலைக் கட்டுப்படுத்த நிறையத் திட்டங்கள் போடுறாங்க.ஆனாலும் ஊதுறவங்க ஊதிக்கிட்டேதான்.
உங்க பதிவை எப்படி சொல்றது? அருமைன்னு சொல்றதா, அறுவைன்னு சொல்றதா, நல்லா எழுதியிருக்கீங்கன்னு பாராட்டறதா, இப்படியுமா யோசிப்பாங்கன்னு சொல்றதா, நல்லாதான போய்கிட்டு இருந்துச்சுன்னு நக்கலா சொல்றதா, என்னன்னு சொல்றது?
பதிலளிநீக்குசரி, ஒரு ஸ்மைலி போட்டுடறேன், வேணாம் நாலஞ்சு ஸ்மைலி போட்டு வைக்கிறேன், வேணவே வேணாம், அது நல்லா இருக்காது. அதுக்காக ஒண்ணும் சொல்லாம போகவும் கூடாது, என்ன செய்ய?
..
..
..
..
..
..
..
ஆங், அதுதான் சரி, இப்படி எழுதிடறேன்!
சும்மா ஜவ்வ்................னு சாரி ஜிவ்வ்........னு இருந்துசுங்கோவ்!
//Hema Said - ஆனாலும் ஊதுறவங்க ஊதிக்கிட்டேதான்//
பதிலளிநீக்குஹேமா, நான் விட்டு ஏழு மாதம் ஆக போகின்றது !!. நான் டென்னிஸ் விளையாடும் இடத்தில் ஒருவர் மொத்தமாக விடபோகின்றேன் என்று நினைக்காமல் - ஒவ்வொரு நாளும், நான் இன்று பிடிக்க மாட்டேன் - அதேபோல் அடுத்த நாளும் என்று செய்ய சொன்னார்.
டிசம்பர் மாதம் முதல் வாரம் ஒரு நாள் இப்படி ஆரம்பித்து - ஆகிவிட்டது ஏழு மாதம். என் பெரிய மகன் என்னை ஒரு நாளை போல் அந்த காலத்தில் கேட்டுக்கொண்டு இருந்தபோது விடவில்லை. இப்போது ஒரு வழியாக அந்த சனியனை விட்டு விட்டேன்.
- சாய்
இழுத்தல் பற்றிப் பதிவா. இல்லை படிக்காதது பற்றிப் பதிவான்னு கொஞ்சம் குழப்பமாப் போச்சு.
பதிலளிநீக்குயாரு சொல்லி யாரு நிறுத்தப் போறாங்கன்னு நினைப்பு வந்தாலும், ஒரு வயசே நிரம்பிய குழந்தை இந்தப் புத்திமதி சொல்வது அருமை.
பாதிக்கப் படுவது குழந்தைகள் தான் முதலில்.
நான் பார்த்துக் கொண்டிருக்கும்போதே ஒரு பேரன் அவன் தாத்தாவைச் சரமாரியாகத் திட்டியது எனக்கு ரொம்ப்பப் பிடித்தது:)
அருமை. good story .
பதிலளிநீக்கு//"புகைப் பிடித்தல் உடல்நலத்திற்குத் தீங்கானது//
பதிலளிநீக்குசீக்கிரம் இந்த பழக்கத்தை விட்டுடுறேன்
நன்றி....நன்றி....நன்றி...
பதிலளிநீக்குLK
நாஞ்சில் பிரதாப்.
அப்பாவி தங்கமணி.
தமிழ் உதயம்.
Chitra.
ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி.
இர்ஷாத்.
உலவு.காம்.
காயத்ரி.
ஹேமா.
பெயர் சொல்ல விருப்பமில்லை.
சாய்ராம் கோபாலன்.
ஜெயசங்கர் ஜெகன்னாதன்.
நன்றி... நன்றி... நன்றி.
நன்றி வல்லிசிம்ஹன்
பதிலளிநீக்கு//"புகைப் பிடித்தல் உடல்நலத்திற்குத் தீங்கானது - எங்கள் ப்ளாக்"//
பதிலளிநீக்குஆமா அதனால நான் புகையை இழுழுழுழுழுத்த்த்து விட்டுடுவேன்.....
/////"புகைப் பிடித்தல் உடல்நலத்திற்குத் தீங்கானது - எங்கள் ப்ளாக்"//
பதிலளிநீக்குஆமா அதனால நான் புகையை இழுழுழுழுழுத்த்த்து விட்டுடுவேன்....//
நீங்கள் இழுப்பது புகை என்றால் ..விட்டு விட வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகிறீர்கள். 'எங்களை' மாதிரி காற்று என்றால் உடனே விட்டு விட வேண்டிய அவசியமில்லை - ஆனால் உங்கள் பெயரை மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கும். 999/1000 or 0.999