நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
வெள்ளி, 22 ஜூன், 2012
வாசகர்களுக்கு மூன்று கேள்விகள்::06
பத்திரிகைகளுக்கு நாம் கேள்விகள் அனுப்பினால், அது பிரசுரமானால், அந்தக் கேள்விகளுக்கு அவர்கள் பதில் சொல்வார்கள்.
இங்கு ஒரு மாறுதல்.
இங்கு எங்கள் கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லுங்களேன்.......!
1) கல்கி, தேவன், சுஜாதா போன்றோரிடம் அப்போது இருந்த நகைச்சுவை இன்றைய
எழுத்தாளர்கள் யாரிடம் இருக்கிறது என்று நினைக்கிறீர்கள்? உங்களைப்
பொறுத்தவரையில், இந்தக் காலத்தில், மனம் கவர்ந்த எழுத்தாளர்கள் என்று யார் யாரை
வரிசைப் படுத்துவீர்கள்?
2) தாய்ப் பாசம், மனைவி நேசம் எது முதலிடம் பெற்று ஜெயிக்கிறது? மனைவியாக
இருக்கும்போது கணவன் தனக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்று நினைப்பவ(ர்க)ள், தாயானதும் பிள்ளையிடம் அதை எதிர்பார்க்கிறா(ர்க)ளா..?
3) லைப்ரரியில் புத்தகம் சுட்ட அனுபம் உண்டா... ஆம் என்றால் என்ன புத்தகம், எங்கு, எப்படி?
// அது பிரசுரமானால், அந்தக் கேள்விகளுக்கு அவர்கள் பதில் சொல்வார்கள். //
அவர்களிடம் பதில் இருந்தால், பிரசுரமாகும்.
My answers 1 )என்னோட எழுத்தின் சாயல்.. சுஜாதா எதுத்துக்கள் போல இருப்பதாக எனது நண்பர்கள்(சொன்னபடி பணம் அனுப்பிடுறேன்) சொல்லுவார்கள்..
2)ஒவ்வொரு பெண்ணும், தான் மனைவியாகவும், பின்னர் தாயாகவும் இருப்பதற்கு தப்ப மாட்டார்கள். (They wud be both)
3)எங்க ஊரு லைப்ரரில ஒரு நாள் எலெக்ட்ரி ஷார்ட் சர்க்யூட் ஆனதால.. ஒரு சின்ன தீ விபத்து..... நா வேகமா ஓடிப் போயி.. புத்தகத்தலாம் எடுத்து தீ இல்லாத பக்கமா வீசினேன்... அப்புறம் மத்தவங்களோட சேந்து அந்த தீய அணைச்சேன் (with fire extinguisher).. எவ்ளோதான் வேகமா செயல் பட்டாலும் ஒரு புத்தகத்த எடுத்து பத்திரமா வைக்கும்போது தவறுதலா அது கீழ தீயில விழுந்துடிச்சு.. (யாருக்கும்)தெரியாம, நல்லா இருந்து புத்தகத்த சுட்டுட்டேன், தீயில போட்டு. ------- என்ன இந்த 'சுடுதல' எதிர் பாத்தீங்களா..? ( முழுக்க முழுக்க கற்பனையே.. )
ஒவ்வொரு கேள்விக்கும் தனித்தனியே பதில் தந்துள்ளேன் (பாத்து பண்ணுங்க. நீங்க புக் எல்லாம் பரிசு தர்ற வள்ளல்னு சொன்னாங்க) முதல் கேள்வி: கல்கி, தேவன், சுஜாதா அளவிற்கு இன்று நகைச்சுவைக்கு ஒருவர் கூட இல்லை என்று வருத்ததோடு சொல்ல வேண்டியுள்ளது.
இன்று எழுதுவோரில் பிடித்தவர்கள் முறையே எஸ். ராமகிருஷ்ணன்,. பிரபஞ்சன், சுகா.
அன்றும், இன்றும், என்றும் தேவனே. சுஜாதாவின் நகைச்சுவையின் அடியே மெல்லிய சோகம் ஊடாடும். கல்கியின் நகைச்சுவையை விட தேவனே மனதைத் தொடுவார். இப்போதைய எழுத்தாளர்களில் எவரும் இருப்பதாய்த் தெரியவில்லை. அதோடு யாரும் இப்போதெல்லாம் நகைச்சுவையாக எழுதுவதும் இல்லை. நகைச்சுவை என்ற பெயரில் கழுதைக் கூத்து! :(((((
பையரிடம் எப்படி எதிர்பார்க்க முடியும்? பையர்களுக்குக் கல்யாணம் பண்ணுவதே அவர் மனைவியோடு சந்தோஷமாய் இருக்கத் தான். அதுக்கு அம்மா எதுக்கு நடுவிலே? பையர் மதிக்கிறாரா? என்னம்மானு கேட்கிறாரா? சாப்பிட்டியா? உடம்பு எப்படி இருக்குனு கேட்கிறாரா? அதுவே போதும். குழந்தையைப் பார்த்துக்கோ, விளையாட்டுக் காட்டுனு சொல்றாங்களா, அதுவே அதிகம். தள்ளி நின்று ரசிப்பதுவே சுகம், செளகரியம், நிம்மதியும் கூட.
சுட்டதெல்லாம் இல்லை. சேதுபதி ஹைஸ்கூலில் சில சமயம் பழைய புத்தகங்கள் ஏலம் விடுவாங்க. அப்போ அப்பாவை வாங்கி வரச் சொல்லுவேன். எங்கே!! ஒண்ணும் நடக்கலை. மத்தபடி நூலகத்தில் வாங்கறதெல்லாம் கரெக்டா பதிவுத் தேதிக்கு முன்னாடியே கொண்டு கொடுத்துடுவேனாக்கும். :))))))

உண்மையை சொல்லனும்னா ஆண்களுக்கு ஒரு வயதுக்கு மேல் தாய்ப் பாசம், மனைவி நேசம் இரண்டுமே அதிகம் இல்லைன்னு தோணுது. பெண்கள் அளவு (கணவன் மேல் மனைவி / மகன் மேல் அம்மா) பெரும்பாலும் ஆண்கள் பாசம் வைப்ப/காட்டுவதில்லை. தொழில், வியாபாரம், பணம் இவற்றின் பின் தான் முப்பது வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் ஓடுகிறார்கள்
முந்தானை வந்தபின் அம்மா சற்று தள்ளி போவது இயல்பாய் நடக்கத்தான் செய்யுது.
அம்மாக்களுக்கு மகன் மேல் ஓரளவு possessiveness இருந்தாலும் கூட " மகனும் மருமகளும் நன்றாய் இருந்தால் போதும்" என நினைக்கிறார்கள்.
பெண்கள் வேலைக்கு போவதால் தான் (பிள்ளைகளை பார்த்து கொள்ள) கூட்டு குடும்பம் இன்னும் கொஞ்சமாவது மிச்சம் இருக்குன்னு நினைக்கிறேன்
இப்ப இருக்கும் எழுத்தாள பிரபலங்களில் அவர்கள் அளவுக்கு யாரும் இல்லை... பிரபலமில்லாத நிறைய பேர் வலையுலகில் நகைச்சுவையோடு கலந்து கட்டி கலக்குகிறார்கள்.
தாய்ப்பாசம் என்பது பிறந்ததில் இருந்து கடைசி வரை கிடைப்பது. மனைவி நேசம் என்பது இடையில் வந்து நமக்காக வாழ்வது என்பது தாய்ப்பாசத்தைவிட மனைவி நேசம் ஒருபடி மேல்தான்.
லைப்ரரியில் கல்லூரி படிக்கும் போது நடத்திய கையெழுத்துப் பிரதி போட்ட அனுபவம்தான் சுட்ட அனுபவம் இல்லை.
சுஜாதாவின் தாகத்தில் இருந்தே இன்னும் நான் மீள வில்லை. மற்ற எழுத்தாளர்களை விரும்பிப் படித்தாலும் குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு சுஜாதா போன்ற தனித்துவம் பெறவில்லை. ஆனால் பதிவுலக நட்பில் பலரது ரசனை எனக்கு மிகவும் பிடிக்கும்...
பதில் இரண்டு
இந்தக் கேள்விக்கான விடை மிகவும் எளிது. காரணம் எனக்குத் தான் இன்னும் மணமாகவில்லையே. நிச்சயமாக அன்னை தான். அப்போ கல்யாணத்தின் பின் என்று நீங்கள் கேட்பது எனக்குக் கேட்கிறது.. ஹி ஹி ஹி நமக்கு மூச்சும் பேசும் எப்போதுமே ஒன்னு தான் சார்
பதில் மூன்று
கல்லூரி நூலகத்தில் நான் சுட்டதில்லை சுடுவதற்கு உதவி இருக்கிறேன். நான் சுட நினைக்கும் புத்தகம் பொன்னியின் செல்வன் அணைத்து பாகங்களும் எப்ப என்ன கொள்ள விலைக்கு விக்கிராயிங்க
1) 'மாம்பலம் டைம்ஸ்' ஜே.எஸ். ராகவன் தெரியுமோ?.. நீங்கள் குறிப்பிட்டிருப்பவர்கள் எட்டடி என்றால் இவர் பதினாறு அடி.
அடுத்து, நமக்கு ரொம்பவும் தெரிந்த அப்புசாமி & சீதா பாட்டி புகழ் பாக்கியம் ராமசாமி (ஜ.ரா.சு.)
அடுத்து 'கடுகு' பி.எஸ்.ரங்கநாதன். (இவர் இப்பொழுதெல்லாம் எழுதுகிறாரா தெரியவில்லை)
கோமதி ஸ்வாமிநாதன் (குமுதத்தில் நிறைய நகைச்சுவையான நாடகங்கள் எழுதியிருக்கிறார்) நாடோடி, சாவி போன்றோர் நகைச்சுவை எழுத்துக்கள் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவை.
அடுத்து, மனம் கவர்ந்த விஷயம். 'சட்'டென்று சொல்லும் படியாக யாரும் நினைவுக்கு வரவில்லை. அதற்கு சென்ற தலைமுறை பளீரிட்ட பிரகாசம் தான் காரணம். பத்திரிகைகளின் பாராமுகம் இன்னொரு காரணம்.
2) முதலிடம் என்றால் தாய்ப்பாசம். ஜெயிப்பது என்றால் மனைவி நேசம். இல்லை, இருவருக்கும் பேலன்ஸான ஒன்று.
ஆமாம். பார்த்தால் அப்படித் தான் தெரிகிறது. முக்கியத்துவம் இல்லை என்றாலும் தான் அலட்சியப்படுத்தப் பட்டு விடக்கூடாது என்கிற ஆவேசம் உண்டு. பல நேரங்களில் அதைத் தான் 'முக்கியத்துவம்' என்று தவறாகப் புரிந்து கொள்கிறோம். வயதானாலே வயப்படும் ஒரு உளவியல் பிரச்னை இது. இதற்கு ஆண் பெண் பேதமில்லை.
3) நூலகங்களுக்கு புத்தகங்கள் கொடுத்த அனுபவம் உண்டு.
நன்றி மாதவன்.... சுட்ட பழத்துக்கு ஸாரி, சுட்ட அனுபவ பதிலுக்கு சிரித்தோம்...
மோகன் குமார்.... ணா.. புக் தர்றது வேற கேள்விகள்ணா... இது மாதாந்திரத் தொடர் பகுதிங்கணா.... இதுல பி டி எஃப் கூட கிடையாதுங்ணா...! :)) எழுத்தாளர் வரிசைக்கு நன்றிங்ணா... ரெண்டாவது கேள்விக்கு வக்கீல் மாதிரி பதில்கள் வரிசை சூப்பருங்ணா... எல்லாமே வாலிட் பாயிண்ட்ஸ்...
வாங்க கீதா சாம்பசிவம்.. ரீடர்ல அப்டேட் ஆகலையா? நீங்க இல்லாம 'எங்கள்' அரட்டை போர் அடிக்குது. அப்பப்போ பாத்துக்குங்க. தவறாம வாங்க. சுஜாதாவின் நகைச்சுவையில் மெல்லிய சோகம்... எப்படிச் சொல்றீங்க? செத்துப் போன அவர் தங்கையைப் பத்திச் சொன்னதை வச்சு சொல்றீங்களோ... ரெண்டாவது கேள்விக்கு பதில் உங்களோட பாணி பதில். ரொம்பப் ப்ராக்டிகல்.
நன்றி கவிதை வீதி சௌந்தர்... கொஸ்டின் பேப்பர் ரொம்ப டஃபோ...! ஒரு கேள்வியாவது அட்டென்ட் பண்ணியிருக்கலாம் நீங்க...!
எல் கே... என்ன அப்படிச் சொல்லிட்டீங்க... ஜெமோ, சுகா, பெருமாள், ராஜு முருகன் எல்லாம் படிக்கறதில்லையா?!
சே. குமார்.. நீங்க சொன்ன முதல் ரெண்டு பதிலுமே உண்மைதான் என்று சொல்ல வைக்கும் ரகம்.
சீனு... //ஆனால் பதிவுலக நட்பில் பலரது ரசனை எனக்கு மிகவும் பிடிக்கும்..// இதை வைத்து அவர்கள் சொல்லும் எழுத்தாளர்களைப் படிக்கலாமே...! இரண்டாவது கேள்விக்கு சுலபமா பதில் சொல்லிட்டீங்க...
ஜீவி மாம்பலம்டைம்ஸ் ஜே எஸ் ராகவன் படித்ததில்லை. உங்கள் பாணியில் எழுத்தாளர்கள் லிஸ்ட் கொடுத்துள்ளீர்கள். சென்ற தலைமுறையின் பளீரிட்டப் பிரகாசம்... உண்மை. ஜெமோ படிக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தீர்களே.. படித்தீர்களா? கடுகு சார் ப்ளாக் எழுதுகிறாரே பார்க்கவில்லையா? 'எங்கள் ப்ளாக்' சைட் பாரில் 'நாங்க அடிக்கடி மேய்வது' பகுதியில் அவரது ப்ளாக் சுட்டி இருக்கிறது பாருங்கள். நேற்று கூட சுடச் சுட தொச்சு பற்றி எழுதியிருக்கிறார் பாருங்கள்.
//என்றாலும் தான் அலட்சியப்படுத்தப் பட்டு விடக்கூடாது என்கிற ஆவேசம் உண்டு. பல நேரங்களில் அதைத் தான் 'முக்கியத்துவம்' என்று தவறாகப் புரிந்து கொள்கிறோம்// குற்ற உணர்வு கோபமாக வரும் போலும்!
நன்றி அனானி
பொதுவாக யாருமே நூலகங்களிலிருந்து புத்தகங்கள் சுடவில்லை என்று தெரியும்போது குற்ற உணர்வாக இருக்கிறது. சே...என்று தோன்றி நூலகங்களிலிருந்து சுட்ட புத்தகங்களை எடுத்து வரிசையாக வைத்து ஒருமுறை பார்த்து விட்டு........
ஜே எஸ் ராகவன் தொடர்ந்து 550 வாரங்கள் நகைச்சுவை column எழுதி வருகிறார், பார்க்க அண்ணா நகர் டைம்ஸ். கடுகு சமீபத்தில் வெளியிட்ட ‘கமலாவும் நானும்’ HILARIOUS புத்தகத்தைப் பற்றி HINDU- வில் வந்ததைப் பாருங்கள்.== குமார்
சீனு சார்! பொன்னியின் செல்வன் பி டி எப் புத்தகம் வேண்டும் என்றால், engalblog@gmail.com மின்னஞ்சலுக்கு உங்கள் மின்னஞ்சலைத் தெரிவியுங்கள். எங்கள் ஆசிரியர்களில் ஒருவர் ஆயிரம் (பி டி எப்) புத்தகங்கள் வைத்திருக்கும் அபூர்வ சிந்தா மணி!
நான் சொல்ல வந்ததெல்லாம் ஜீவி சொல்லிட்டார்:) பழைய எழுத்தாளர்களில் எஸ்வி. எஸ்,கல்கியின் மெல்லிய நகைச்சுவை, இராஜ நாராயணன் ஐய்யாவின் கதைகளில் வரும் இயல்பான நகைச்சுவை இவை பிடிக்கும்.
அம்மாவா மனைவியா என்றால் பாதி பாதின்னு சொல்ல ஆசைதான். அதை அப்படியே ஒத்துகணும்னு அவசியம் இல்லையே. இதே போல அம்மாவா கணவனான்னு ஒரு கேள்வி போடுங்க்கள்:) புத்தகத்தைப் பறிகொடுத்த பழக்கம் தான் உண்டு. சுடுவதாதாவது!!!!
ஹை! நாங்க சுட்ட புத்தகம் எல்லாம் நாங்களே எப்பவும் வெச்சிகிட்டு, படித்து படித்து ஆனந்தம் அடைய வேண்டும் என்று, சுட்டு பத்திரமா வெச்சிருக்கோம். அதை பரிசாகக் கொடுக்க மாட்டோம்! அதே புத்தகம் ஒரு வேளை, வேறொரு இடத்தில் சுட்டோம் என்றால், இரண்டில் எது அழுக்கா இருக்கோ அதை மட்டும் பரிசாகக் கொடுத்துவிடுவோம்!
1) நான் ரசிக்கும் நகைச்சுவை கடுகு மற்றும் பாக்கியம் ராமசாமி. 2) என்னளவில் தாய்ப்பாசமே. 3) சுட்ட அனுபவம் எனக்கில்லை. என்னிடமிருந்து நிறைய சுடப்பட்ட அனுபவம் உண்டுங்க.
எங்கள் ப்ளாக் வாசகர்களில் பெரும்பாலானவர்கள் இவ்வளவு அப்பாவியாக இருக்கிறார்களே! நூலகத்தில் ஒரு புத்தகம் கூட சுட்டதில்லை என்கிறார்களே! மாறாக அவர்களிடமிருந்து புத்தகம் சுடப்பட்ட அனுபவங்கள் அதிகம் என்கிறார்களே! அடுத்த தடவை எங்கள் ப்ளாக் ஆசிரியர்கள் யாராவது புத்தகம் பரிசு கொடுக்கச் சென்றால், தயவு செய்து என்னையும் அழைத்துச் செல்லுங்கள்! என் கைகள் 'நம நம' என்கின்றன.
சென்னை போனதும் ஜெ.மோ. புத்தகங்களைத் தேடிப் படிக்க வேண்டும். என் 'எழுத்தாளர்' பகுதியில் அவரைப் பற்றி எழுத வேண்டும். அதனால் அவரைப் படிக்க வேண்டும் என்கிற உந்துதல் நிறைய இருக்கிறது. அவரது சிறுகதைகள் சில இணையத்திலேயே கிடைக்கின்றன. படித்தேன். இது போதாது. அவர் மனத்தைப் படிக்க நாவல்கள் தாம் லாயக்கு. அதற்காகக் காத்திருக்கிறேன்.
பத்திரிகைகளில் இப்பொழுதெல்லாம் எழுதுகிறாரா என்கிற அர்த்தத்தில் அந்தக் கேள்வி. அகஸ்தியன் சார் பிலாக் எழுதுவது தெரியும். அதனால் தான் பக்கத்தில் பார்த்துக் கொண்டே அவரும் நினைவுக்கு வந்து குறிப்பிட்டேன். இல்லையென்றால் மூன்றாவது இடத்திற்கு போட்டி நிறைய.
மாம்பலம் டைம்ஸ் ஞாயிறுகளில் இலவச விநியோகம். நீங்கள் அவசியம் ஜே.எஸ். ராகவன் கட்டுரைகளைப் படிக்க வேண்டும். ஹாஹா, ஹஹ்ஹா, ஹிஹி, அவுட்டுச் சிரிப்பு, குபீர் சிரிப்பு, குபுக் சிரிப்பு, இதழ் நோகாத புன்முறுவல் என்று எல்லாவகை சிரிப்புகளையும் வாசிப்பவரிடம் வரவழைப்பதில் வல்லுநர் இவர். மற்றவர்களிடம் இல்லாத ஆல் ரவுண்ட் அலசல். கடுகு கூட இவரைப் பற்றி ஒரு பதிவு போட்டிருக்கிறார் என்று நினைக்கிறேன். அதை விட நீங்களே நாலைந்து அவரது படித்து ரசிப்பது தான் சிலாக்கியம். புத்தகமாகக் கூடக் கிடைக்கலாம்.
1. //இன்றைய எழுத்தாளர்கள்// இதிலே (என்னைப் போல) ப்ளாக் எழுதுறவங்களும் சேர்த்தியா? ஏன்னா, என் வட்டம் அவ்வளவுதான். :-( :-)
2. இதுக்கு கீதா மேடத்தின் பதிலை ரிப்பீட்டுகிறேன். அநேக இந்திய அம்மாக்கள், பிள்ளைகளைப் பிடித்து வைக்கவேண்டிய மாணவப் பருவத்தில் விட்டுவிட்டுட்டு, விட்டுவிடவேண்டிய ’கணவர்-தந்தை’ பருவத்தில் பிடித்து வைக்க முற்படுகிறார்கள்.
நான் இன்று சொல்வதுபோல அன்று நடந்துகொள்ளக்கூடியவாறு என் உடல்நிலை இருக்க மட்டுமே வேண்டுதல்கள்.
3. புத்தகத்தைச் சுடுவதா? ம்ம்... ஒரு அனுபவம் இருக்கு, சொன்னா இத்தினி நாள் விட்டு வந்த உதாரெல்லாம் போய் அற்பமாப் பாப்பீங்களோன்னு...
அதுவேறொண்ணுமில்லை, காலேஜ் லைப்ரரியில் எடுத்த ஒரு புத்தகத்தின் நடுவில் கொத்தாகச் சில பக்கங்களைக் காணவில்லை என்பதை ‘நல்லெண்ணத்துடன்’ நூலகரிடம் சொல்லப்போக, அவரோ அதை யார் செஞ்சிருந்தாலும், அதுக்கு நானே பொறுப்பு. பதிலுக்கு வேறு புதுபுக் வாங்கித் தந்தேயாகணும்னு சொல்ல... அந்தப் புத்தகமோ ஹைதர் காலத்துக்கும் முந்தையப் பழசு போல இருக்க, அந்த பதிப்பகத்துக்குக் கடிதம் எழுதி கேட்டா (வெளியில் எங்கும் கிடைக்கலை!), அவங்க ‘காந்தி செத்துட்டாரா’ ரேஞ்சில் அதெல்லாம் எப்பவோ நிறுத்தியாச்சுன்னு பதில் எழுதிட்டாங்க!!
கடிதத்தோடு நூலகம் போனால், அப்போது அங்கிருந்த (இன்னொரு) நூலகர் (இவர் ரொம்ம்ம்ப நல்லவர்), ‘இனி இதமாதிரி கிழிஞ்சிருக்கிறதைப் பாத்தா, இப்பிடி உளறிக் கொட்டிகிட்டு இருக்காதே’ன்னு அன்பா அறிவுரை செஞ்சிட்டு அந்த புக்கை வாங்கிட்டு, என் டோக்கனைத் திருப்பித் தந்தார்.
(ஹால் டிக்கெட் வாங்க நூலகரிடமும் NOC வாங்க வேண்டும் என்பதால்தான்...)
//.........அதைத் தான் 'முக்கியத்துவம்' என்று தவறாகப் புரிந்து கொள்கிறோம்// குற்ற உணர்வு கோபமாக வரும் போலும்!//
குற்ற உணர்வு? புரியலை.
சிறியவர்கள் பெரியவர்களை கலந்து பேசாத தருணங்களை மனதுக்குள் உணர்ந்தாலும், அதனால்தான் பெரியவர்களின் அந்த ஆவேச ஆதங்கத்தை உணர்ந்தும், வெளிக்காட்ட முடியாத அந்த சிறியவர்களின் குற்ற உணர்வு கோபமாக மாறும் என்று அர்த்தம் காணவும்! :))
மூணு பேருக்கும் மூணெழுத்துப் பெயர் பொது, மத்தபடி மூணுல ஒரு மூணெழுத்து தான் நகைச்சுவை எழுத்தாளர் என் கணிப்பில். சமீப எழுத்துக்களில் பா.கணேஷின் நகைச்சுவை பிடிக்கும்.
ஹுஸைனம்மா... இதில் அற்பமாக நினைக்க என்ன இருக்கிறது? அந்தப் பழைய நூலகரைத்தான் அபபடி நினைக்க வேண்டும்! இரண்டாவது கேள்விக்கான பதில் நியாயமானதுதான். //நான் இன்று சொல்வதுபோல அன்று நடந்துகொள்ளக்கூடியவாறு என் உடல்நிலை இருக்க மட்டுமே வேண்டுதல்கள்.// இன்ஷா அல்லாஹ்...
குரோம்பேட்டைக் குறும்பன்.... நல்ல ஐடியாவாகத்தான் இருக்கு!
கணேஷ்... இந்தக் கால எழுத்தாளர்களில் உங்களுக்கு யாரையும் கண்ணில் படும் அளவு தெரியவில்லை என்று எடித்துக் கொள்ளலாமா.... இன்றும் எழுதினாலும் கடுகு, பா ரா அந்தக் கால எழுத்தாளர்கள்தானே...!
கேள்விகளையும் பதில்களையும் ரசித்து விட்டு ஒரே ஒரு பதில் மட்டும் சொல்லி மற்ற இரண்டை சாய்ஸில் விட்டு விட்டீர்களே ராமலக்ஷ்மி....!
நன்றி வல்லிம்மா... அடுத்த வாசகர்களுக்கான கேள்வியில் உங்கள் கேள்வியைச் சேர்த்து விடலாம் போல...! எங்கள் நண்பர் ஒருவர் எதையாவது தூக்கி எறிந்து விடலாம் போல இருக்கு என்று சொன்னால் அவர் சொல்வார் "ஆமாம்.. ஆமாம்.. தூக்கிப் போட்டுடு... எங்கே போடறேன்னு மட்டும் என்கிட்டே சொல்லு...." என்பார் அது மாதிரி புத்தகங்களைப் பறிகொடுக்கரவங்களைச் சந்தித்து இனி புத்தகங்கள் கடன் வாங்கலாம் போலே இருக்கே....! (நன்றி கு.கு)
நன்றி வெங்கட்.... இரண்டாவது கேள்விக்கான பதில் சாலமன் பாப்பையா பாணி!
சுஜாதாவின் எழுத்துக்களில் அவருக்கிருந்த நகைச்சுவை உணர்வு வெளிப்படுவதை அவருடைய நகைச்சுவை எழுத்துத் திறமை என்பது கொஞ்சம் மிகையில்லையோ? நாமெல்லாருமே நகைச்சுவையை ரசிக்கலாம். நம் பேச்சிலும் எழுத்திலும் நமக்கிருக்கும் நகைச்சுவை ரசனை வெளிப்படும் சாத்தியம் உண்டு. அதை நகைச்சுவைத் திறமை என்று சொல்ல முடியாது. நகைச்சுவை எழுதுவோருக்கும் நகைச்சுவை எழுத்தாளருக்கும் வித்தியாசம் உண்டு. சிவாஜி கணேசன் காமெடி நடிப்புக்கும் நாகேஷ் காமெடி நடிப்புக்கும் வித்தியாசம் உண்டு. (?)
ஜே.எஸ்.ராகவன் கல்கியில் அடிக்கடி எழுதி இருக்கார்; படிச்சிருக்கேன், என்றாலும் எனக்கு என்னமோ தேவனுக்கு அடுத்துத் தான் மத்தவங்கனு தோணும். :))))))
அப்பாதுரை,
சுஜாதா எழுதின குதிரை கடிச்ச கதை படிச்சதில்லை?? ஏதோ ஒரு கல்கி(?) தீபாவளி மலரில் வந்திருந்தது. அதுக்கு அப்புறமும் ஒரு தீபாவளி மலரில் கோடை விடுமுறைக்கு டெல்லியிலே இருந்து சிறப்பு ரயிலில் சென்னை வந்த அனுபவங்களையும் ஒரு கதை போல் எழுதி இருப்பார். அருமையா இருக்கும். ஆனாலும் தேவன் தேவனே! :)))))
ஜீவி சார் சொன்ன கடுகு பிஎஸ்.ரங்கநாதனின் கமலா, தொச்சு எல்லாரும் எங்க வீட்டிலே ரொம்பவே ஃபேமஸ் தான். அந்த மாதிரி காரக்டர்களை அப்படிப் பெயர் சொல்லியே அடையாளம் காண்போம். ஆனாலும் முதலில் தேவன். அடுத்தாப்போலவே இவங்க வருவாங்க.
ராஜேந்திரகுமாரின் வால்கள் கலாட்டாவும், அதில் வரும் சீதா என்ற சின்னப் பெண்ணின் காரக்டர் "ஙே" என விழிப்பதும் கூடப் பிடிக்கும் தான். உருளைக்கிழங்கு ஸ்ட்ரைக்கரில் கால் வைத்துக் கீழே விழுந்த பெண்ணின் பெயர் தான் மறந்தே போச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்!!
என்னோட சித்தப்பா(அசோகமித்திரன்) கூட ஒரு தீபாவளி மலரில் கர்நாடகாவின் சிறப்புத் தயாரிப்பான கடுபூ என்னுக் கொழுக்கட்டை சாப்பிட நேர்ந்தது குறித்த ஒரு கதை எழுதி இருந்தார்; அதுவும் பத்து வருடங்கள் முன்னர் ஒரு தீபாவளி மலரிலேயே வந்தது. அதுவும் படிச்சுட்டுச் சிரிச்சுட்டு இருந்தோம். :)))) கதை பேர் மறந்து போச்சு!
//ரெண்டாவது கேள்விக்கு பதில் உங்களோட பாணி பதில். ரொம்பப் ப்ராக்டிகல்.//
என்னைப் பொறுத்தவரைக்கும் இதுதான் சரியானது ஆ"சிரி"யரே! :))))நான் மருமகளாய் இருந்தப்போ என்ன எதிர்பார்த்தேனோ அதைத் தான் என் மருமகளும் எதிர்பார்ப்பாள் இல்லையா? ஒதுங்கி இருந்து ரசிப்பது தான் சுகம். :)))))
//அசோகமித்திரன் உங்க சித்தப்பாவா, கீதா சாம்பசிவம்? அதான் இவ்வளவு நல்லா எழுதறாரு.//
ஹிஹிஹி, அப்பாதுரை, அவரா, நானா? :P:P:P என்னோட அம்மாவின் சொந்தத் தங்கை கணவர் அவர். தண்ணீர்த் தட்டுப்பாட்டில் சென்னை உச்சகட்டத்தில் இருந்த அறுபதுகளில் அவர் இந்த நாவலை எழுதினார். ஒவ்வொரு பக்கமும் யோசித்து யோசித்து எழுதுகையில் கிட்ட இருந்து பார்த்ததோடு கையெழுத்துப் பிரதியையும் படித்திருக்கேன். :)))) வாழ்விலே ஒரு முறைதான் முதலில் வெளிவந்த கதைத் தொகுப்பு. என்கல்யாணத்துக்கும் அது தான் தனிப்பட்ட பரிசாய்க் கொடுத்திருந்தார். ஒற்றன் படிச்சுப் பாருங்க. பதினெட்டாவது அட்சக் கோடு கிட்டத்தட்ட சுயசரிதை. அதுவும் படிங்க. மானசரோவர், அருமையா இருக்கும்.
தேவன் தவிர எந்த எழுத்தாளர் அதிகபட்சம் நகைச்சுவையாகவே எழுதியிருக்கார்? தேவனே கூட ராஜத்தின் மனோரதத்தில் நகைச்சுவை 'கலந்து'தானே எழுதியிருப்பார்? கோமதியின் காதலனில் அதுவும் இருக்காது! எஸ் வி வி, ந்சாடோடி இருவரும் கூட நகைச்சுவைக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார்கள் என்றும், எஸ் வி வி ஆங்கிலத்தில் எழுதிக் கொண்டிருந்தவரைக் கல்கிதான் தமிழில் எழுதச் சொன்னதாக பாஹே சொல்கிறார்!
எஸ் வி வியை கல்கிதான் அறிமுகப் படுத்தினார் என்று சொன்னபோது சாவி ஞாபகம் வந்து விட்டது.கேள்வியிலும் அவரை விட்டு விட்டோமே என்றும் தோன்றியது.... வாஷிங்டனில் திருமணம் அவர் மாஸ்டர் பீஸ் இல்லையா?!
தேவன் நகைச்சுவை எழுதினால் நகைச்சுவையாகவே எழுதினார். சமூகம் காதல் எழுதினால் வேறே எதுவும் இழைந்தோடி குழப்பாமல் எழுதினார் என்று நினைக்கிறேன். தேவன் படித்து நாளாகிவிட்டது.
அப்பாதுரை சொல்வது சரிதான். தேவனின் லக்ஷ்மி கடாக்ஷம், மிஸ்டர் வேதாந்தம் போன்ற ஓரிரண்டு நாவல்கள் தவிர மற்றவை நகைச்சுவையே. கோமதியின் காதலனில் இல்லாத நகைச்சுவையா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :)))))) கல்யாணியின் கதாநாயகன் அசடு வழிவது ஒண்ணு போதுமே! அதுவும் அந்த மானேஜரை மூக்கைப் பிடிச்சு இழுத்துட்டு, அவர் மூக்காலேயே பேசி!!!!!!!!!!!! அப்புறமா போலீஸ் ஸ்டேஷனிலே சுந்தரம் உளறிக் கொட்டிக் கிளறி மூடுகையில்...... இப்போப் படிச்சால் கூடச் சிரிப்பு வருதே.
அந்த மாதிரி இப்போ சமீபத்தில் வாஷிங்டனில் திருமணம் (பதினைந்து நாட்கள் முன்னர் தான் படிச்சேன்) படிக்கையில் சிரிப்பு வரலையே? எஸ்.வி.வி. வெங்காய சாம்பார் சாப்பிடறதைப் பத்தி எழுதி இருப்பார் பாருங்க. அது சூப்பரோ சூப்பர் காமெடி! :)))) உல்லாஸ வேளையில் வருதுனு நினைக்கிறேன்.
மறுபடி கேள்வியைப் போய்ப் பார்க்கும்போது முழுக்க முழுக்க நகைச்சுவை என்று கேட்கவில்லை என்று தோன்றுகிறது... உதாரணத்துக்கு மூன்று எழுத்தாளர்களைச் சொல்லி அப்போது இருந்த நகைச்சுவை உணர்வு மிநிமல் அளவில் கூட இன்றைய எழுத்தாளர்களிடம் இருக்கிறதா என்பதுதானே கேள்வி.... அதனோடு கூட நகைச்சுவை என்று இல்லாமல் இன்றைய எழுத்தாளர்களில் யாருக்கு மவுசு (மௌஸ் அல்ல!) இருக்கிறது என்றும் பார்க்க நினைத்த கேள்விதானே அது? எங்கே திசை மாறியது?!!
லேட்டாதான் கவனிக்கிறேன். அப்பாதுரை ஸார்... சுஜாதா ஆதலினால் காதல் செய்வீர்ன்னு நகைச்சுவை தொடர்கதையே குமுதத்துல எழுதியிருக்கார். ரசிச்சுப் படிக்க முடியும். படிச்சுப் பாருங்க.
// அது பிரசுரமானால், அந்தக் கேள்விகளுக்கு அவர்கள் பதில் சொல்வார்கள். //
பதிலளிநீக்குஅவர்களிடம் பதில் இருந்தால், பிரசுரமாகும்.
My answers
1 )என்னோட எழுத்தின் சாயல்.. சுஜாதா எதுத்துக்கள் போல இருப்பதாக எனது நண்பர்கள்(சொன்னபடி பணம் அனுப்பிடுறேன்) சொல்லுவார்கள்..
2)ஒவ்வொரு பெண்ணும், தான் மனைவியாகவும், பின்னர் தாயாகவும் இருப்பதற்கு தப்ப மாட்டார்கள். (They wud be both)
3)எங்க ஊரு லைப்ரரில ஒரு நாள் எலெக்ட்ரி ஷார்ட் சர்க்யூட் ஆனதால.. ஒரு சின்ன தீ விபத்து..... நா வேகமா ஓடிப் போயி.. புத்தகத்தலாம் எடுத்து தீ இல்லாத பக்கமா வீசினேன்... அப்புறம் மத்தவங்களோட சேந்து அந்த தீய அணைச்சேன் (with fire extinguisher).. எவ்ளோதான் வேகமா செயல் பட்டாலும் ஒரு புத்தகத்த எடுத்து பத்திரமா வைக்கும்போது தவறுதலா அது கீழ தீயில விழுந்துடிச்சு.. (யாருக்கும்)தெரியாம, நல்லா இருந்து புத்தகத்த சுட்டுட்டேன், தீயில போட்டு.
------- என்ன இந்த 'சுடுதல' எதிர் பாத்தீங்களா..? ( முழுக்க முழுக்க கற்பனையே.. )
ஒவ்வொரு கேள்விக்கும் தனித்தனியே பதில் தந்துள்ளேன் (பாத்து பண்ணுங்க. நீங்க புக் எல்லாம் பரிசு தர்ற வள்ளல்னு சொன்னாங்க)
பதிலளிநீக்குமுதல் கேள்வி:
கல்கி, தேவன், சுஜாதா அளவிற்கு இன்று நகைச்சுவைக்கு ஒருவர் கூட இல்லை என்று வருத்ததோடு சொல்ல
வேண்டியுள்ளது.
இன்று எழுதுவோரில் பிடித்தவர்கள் முறையே எஸ். ராமகிருஷ்ணன்,. பிரபஞ்சன், சுகா.
அன்றும், இன்றும், என்றும் தேவனே. சுஜாதாவின் நகைச்சுவையின் அடியே மெல்லிய சோகம் ஊடாடும். கல்கியின் நகைச்சுவையை விட தேவனே மனதைத் தொடுவார். இப்போதைய எழுத்தாளர்களில் எவரும் இருப்பதாய்த் தெரியவில்லை. அதோடு யாரும் இப்போதெல்லாம் நகைச்சுவையாக எழுதுவதும் இல்லை. நகைச்சுவை என்ற பெயரில் கழுதைக் கூத்து! :(((((
பதிலளிநீக்குபையரிடம் எப்படி எதிர்பார்க்க முடியும்? பையர்களுக்குக் கல்யாணம் பண்ணுவதே அவர் மனைவியோடு சந்தோஷமாய் இருக்கத் தான். அதுக்கு அம்மா எதுக்கு நடுவிலே? பையர் மதிக்கிறாரா? என்னம்மானு கேட்கிறாரா? சாப்பிட்டியா? உடம்பு எப்படி இருக்குனு கேட்கிறாரா? அதுவே போதும். குழந்தையைப் பார்த்துக்கோ, விளையாட்டுக் காட்டுனு சொல்றாங்களா, அதுவே அதிகம். தள்ளி நின்று ரசிப்பதுவே சுகம், செளகரியம், நிம்மதியும் கூட.
சுட்டதெல்லாம் இல்லை. சேதுபதி ஹைஸ்கூலில் சில சமயம் பழைய புத்தகங்கள் ஏலம் விடுவாங்க. அப்போ அப்பாவை வாங்கி வரச் சொல்லுவேன். எங்கே!! ஒண்ணும் நடக்கலை. மத்தபடி நூலகத்தில் வாங்கறதெல்லாம் கரெக்டா பதிவுத் தேதிக்கு முன்னாடியே கொண்டு கொடுத்துடுவேனாக்கும். :))))))
அன்றும், இன்றும், என்றும் தேவனே. சுஜாதாவின் நகைச்சுவையின் அடியே மெல்லிய சோகம் ஊடாடும். கல்கியின் நகைச்சுவையை விட தேவனே மனதைத் தொடுவார். இப்போதைய எழுத்தாளர்களில் எவரும் இருப்பதாய்த் தெரியவில்லை. அதோடு யாரும் இப்போதெல்லாம் நகைச்சுவையாக எழுதுவதும் இல்லை. நகைச்சுவை என்ற பெயரில் கழுதைக் கூத்து! :(((((
பதிலளிநீக்குபையரிடம் எப்படி எதிர்பார்க்க முடியும்? பையர்களுக்குக் கல்யாணம் பண்ணுவதே அவர் மனைவியோடு சந்தோஷமாய் இருக்கத் தான். அதுக்கு அம்மா எதுக்கு நடுவிலே? பையர் மதிக்கிறாரா? என்னம்மானு கேட்கிறாரா? சாப்பிட்டியா? உடம்பு எப்படி இருக்குனு கேட்கிறாரா? அதுவே போதும். குழந்தையைப் பார்த்துக்கோ, விளையாட்டுக் காட்டுனு சொல்றாங்களா, அதுவே அதிகம். தள்ளி நின்று ரசிப்பதுவே சுகம், செளகரியம், நிம்மதியும் கூட.
சுட்டதெல்லாம் இல்லை. சேதுபதி ஹைஸ்கூலில் சில சமயம் பழைய புத்தகங்கள் ஏலம் விடுவாங்க. அப்போ அப்பாவை வாங்கி வரச் சொல்லுவேன். எங்கே!! ஒண்ணும் நடக்கலை. மத்தபடி நூலகத்தில் வாங்கறதெல்லாம் கரெக்டா பதிவுத் தேதிக்கு முன்னாடியே கொண்டு கொடுத்துடுவேனாக்கும். :))))))
ஹிஹிஹி, ஃபாலோ அப் கொடுக்கிறச்சே கமெண்ட் ரெண்டு தரம் வந்திருக்கு. :)))))
பதிலளிநீக்குஇரண்டாம் கேள்வி:
பதிலளிநீக்குPh D மேட்டரை ஜஸ்ட் லைக் தட் கேட்டா எப்படி?
உண்மையை சொல்லனும்னா ஆண்களுக்கு ஒரு வயதுக்கு மேல் தாய்ப் பாசம், மனைவி நேசம் இரண்டுமே அதிகம் இல்லைன்னு தோணுது. பெண்கள் அளவு (கணவன் மேல் மனைவி / மகன் மேல் அம்மா) பெரும்பாலும் ஆண்கள் பாசம் வைப்ப/காட்டுவதில்லை. தொழில், வியாபாரம், பணம் இவற்றின் பின் தான் முப்பது வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் ஓடுகிறார்கள்
முந்தானை வந்தபின் அம்மா சற்று தள்ளி போவது இயல்பாய் நடக்கத்தான் செய்யுது.
அம்மாக்களுக்கு மகன் மேல் ஓரளவு possessiveness இருந்தாலும் கூட " மகனும் மருமகளும் நன்றாய் இருந்தால் போதும்" என நினைக்கிறார்கள்.
பெண்கள் வேலைக்கு போவதால் தான் (பிள்ளைகளை பார்த்து கொள்ள) கூட்டு குடும்பம் இன்னும் கொஞ்சமாவது மிச்சம் இருக்குன்னு நினைக்கிறேன்
இந்த ஆட்டத்துக்கு நான் வரலீங்க...
பதிலளிநீக்குபொது நூலகத்தில் புத்தகங்கள் சுட்டதில்லை. வீட்டுக்கு கொண்டு வந்து போடும் சர்குலேஷன் லைப்ரரியில் வெகு அரிதாய் பிடித்த புத்தகங்கள் சுட்டதுண்டு.
பதிலளிநீக்குஎன் வீட்டில் வைத்திருக்கும் லைப்ரரியில் (க்கும்) நம் நண்பர்கள் சுட்டது நிறைய ! படித்தவை தான் என்பதால் அதை பெரிதாய் எடுத்து கொள்வதில்லை
சாதா கேள்விகளுக்கே பரிசு தரும் வள்ளல், இந்த முறை மூணு கேள்விகளுக்கு பரிசு தர மாட்டாரா என்ன ?
பதிலளிநீக்குசொக்கா.. அந்த பரிசு எனக்கே கிடைக்கிற மாதிரி வழி பண்ணுப்பா...
இப்ப இருக்கறாங்க எழுதறதை படிக்கறதே கஷ்டம். இதில் நகைச்சுவையா
பதிலளிநீக்கு2nd choicela vittutten
3rd no
இப்ப இருக்கும் எழுத்தாள பிரபலங்களில் அவர்கள் அளவுக்கு யாரும் இல்லை... பிரபலமில்லாத நிறைய பேர் வலையுலகில் நகைச்சுவையோடு கலந்து கட்டி கலக்குகிறார்கள்.
பதிலளிநீக்குதாய்ப்பாசம் என்பது பிறந்ததில் இருந்து கடைசி வரை கிடைப்பது. மனைவி நேசம் என்பது இடையில் வந்து நமக்காக வாழ்வது என்பது தாய்ப்பாசத்தைவிட மனைவி நேசம் ஒருபடி மேல்தான்.
லைப்ரரியில் கல்லூரி படிக்கும் போது நடத்திய கையெழுத்துப் பிரதி போட்ட அனுபவம்தான் சுட்ட அனுபவம் இல்லை.
பதில் ஒன்று
பதிலளிநீக்குசுஜாதாவின் தாகத்தில் இருந்தே இன்னும் நான் மீள வில்லை. மற்ற எழுத்தாளர்களை விரும்பிப் படித்தாலும் குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு சுஜாதா போன்ற தனித்துவம் பெறவில்லை. ஆனால் பதிவுலக நட்பில் பலரது ரசனை எனக்கு மிகவும் பிடிக்கும்...
பதில் இரண்டு
இந்தக் கேள்விக்கான விடை மிகவும் எளிது. காரணம் எனக்குத் தான் இன்னும் மணமாகவில்லையே. நிச்சயமாக அன்னை தான். அப்போ கல்யாணத்தின் பின் என்று நீங்கள் கேட்பது எனக்குக் கேட்கிறது.. ஹி ஹி ஹி நமக்கு மூச்சும் பேசும் எப்போதுமே ஒன்னு தான் சார்
பதில் மூன்று
கல்லூரி நூலகத்தில் நான் சுட்டதில்லை சுடுவதற்கு உதவி இருக்கிறேன். நான் சுட நினைக்கும் புத்தகம் பொன்னியின் செல்வன் அணைத்து பாகங்களும் எப்ப என்ன கொள்ள விலைக்கு விக்கிராயிங்க
படித்துப் பாருங்கள்
வாசிக்க வாசிக்க வானம் வசப்படும்
1) 'மாம்பலம் டைம்ஸ்' ஜே.எஸ். ராகவன் தெரியுமோ?.. நீங்கள் குறிப்பிட்டிருப்பவர்கள் எட்டடி என்றால் இவர் பதினாறு அடி.
பதிலளிநீக்குஅடுத்து, நமக்கு ரொம்பவும் தெரிந்த அப்புசாமி & சீதா பாட்டி புகழ் பாக்கியம் ராமசாமி (ஜ.ரா.சு.)
அடுத்து 'கடுகு' பி.எஸ்.ரங்கநாதன்.
(இவர் இப்பொழுதெல்லாம் எழுதுகிறாரா தெரியவில்லை)
கோமதி ஸ்வாமிநாதன்
(குமுதத்தில் நிறைய நகைச்சுவையான நாடகங்கள் எழுதியிருக்கிறார்) நாடோடி, சாவி
போன்றோர் நகைச்சுவை எழுத்துக்கள் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவை.
அடுத்து, மனம் கவர்ந்த விஷயம்.
'சட்'டென்று சொல்லும் படியாக யாரும் நினைவுக்கு வரவில்லை.
அதற்கு சென்ற தலைமுறை பளீரிட்ட பிரகாசம் தான் காரணம். பத்திரிகைகளின் பாராமுகம் இன்னொரு காரணம்.
2) முதலிடம் என்றால் தாய்ப்பாசம். ஜெயிப்பது என்றால் மனைவி நேசம்.
இல்லை, இருவருக்கும் பேலன்ஸான ஒன்று.
ஆமாம். பார்த்தால் அப்படித் தான் தெரிகிறது. முக்கியத்துவம் இல்லை என்றாலும் தான் அலட்சியப்படுத்தப் பட்டு விடக்கூடாது என்கிற ஆவேசம் உண்டு. பல நேரங்களில் அதைத் தான் 'முக்கியத்துவம்' என்று தவறாகப் புரிந்து கொள்கிறோம். வயதானாலே வயப்படும் ஒரு உளவியல் பிரச்னை இது. இதற்கு ஆண் பெண் பேதமில்லை.
3) நூலகங்களுக்கு புத்தகங்கள் கொடுத்த அனுபவம் உண்டு.
<>
பதிலளிநீக்குகடுகு தாளிப்பு BLOG பாருங்கள். மனுஷன் , 220000 ஹிட்ஸ்--- மணா
<<>>>
பதிலளிநீக்குகடுகு இந்த 80வது வயதிலும் ஆக்டிவ்வாக
மனுஷன் சூப்பராக எழுதிக் கொண்டிருக்கிறார்.
அவருடைய கடுகு தாளிப்பு BLOG பாருங்கள்,
2,20,000 ஹிட்ஸ்
--- மணா
நன்றி மாதவன்....
பதிலளிநீக்குசுட்ட பழத்துக்கு ஸாரி, சுட்ட அனுபவ பதிலுக்கு சிரித்தோம்...
மோகன் குமார்....
ணா.. புக் தர்றது வேற கேள்விகள்ணா... இது மாதாந்திரத் தொடர் பகுதிங்கணா.... இதுல பி டி எஃப் கூட கிடையாதுங்ணா...! :))
எழுத்தாளர் வரிசைக்கு நன்றிங்ணா...
ரெண்டாவது கேள்விக்கு வக்கீல் மாதிரி பதில்கள் வரிசை சூப்பருங்ணா... எல்லாமே வாலிட் பாயிண்ட்ஸ்...
வாங்க கீதா சாம்பசிவம்..
ரீடர்ல அப்டேட் ஆகலையா? நீங்க இல்லாம 'எங்கள்' அரட்டை போர் அடிக்குது. அப்பப்போ பாத்துக்குங்க. தவறாம வாங்க.
சுஜாதாவின் நகைச்சுவையில் மெல்லிய சோகம்... எப்படிச் சொல்றீங்க? செத்துப் போன அவர் தங்கையைப் பத்திச் சொன்னதை வச்சு சொல்றீங்களோ...
ரெண்டாவது கேள்விக்கு பதில் உங்களோட பாணி பதில். ரொம்பப் ப்ராக்டிகல்.
நன்றி கவிதை வீதி சௌந்தர்...
கொஸ்டின் பேப்பர் ரொம்ப டஃபோ...! ஒரு கேள்வியாவது அட்டென்ட் பண்ணியிருக்கலாம் நீங்க...!
எல் கே...
என்ன அப்படிச் சொல்லிட்டீங்க... ஜெமோ, சுகா, பெருமாள், ராஜு முருகன் எல்லாம் படிக்கறதில்லையா?!
சே. குமார்..
நீங்க சொன்ன முதல் ரெண்டு பதிலுமே உண்மைதான் என்று சொல்ல வைக்கும் ரகம்.
சீனு...
//ஆனால் பதிவுலக நட்பில் பலரது ரசனை எனக்கு மிகவும் பிடிக்கும்..// இதை வைத்து அவர்கள் சொல்லும் எழுத்தாளர்களைப் படிக்கலாமே...! இரண்டாவது கேள்விக்கு சுலபமா பதில் சொல்லிட்டீங்க...
ஜீவி
மாம்பலம்டைம்ஸ் ஜே எஸ் ராகவன் படித்ததில்லை.
உங்கள் பாணியில் எழுத்தாளர்கள் லிஸ்ட் கொடுத்துள்ளீர்கள். சென்ற தலைமுறையின் பளீரிட்டப் பிரகாசம்... உண்மை. ஜெமோ படிக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தீர்களே.. படித்தீர்களா? கடுகு சார் ப்ளாக் எழுதுகிறாரே பார்க்கவில்லையா? 'எங்கள் ப்ளாக்' சைட் பாரில் 'நாங்க அடிக்கடி மேய்வது' பகுதியில் அவரது ப்ளாக் சுட்டி இருக்கிறது பாருங்கள். நேற்று கூட சுடச் சுட தொச்சு பற்றி எழுதியிருக்கிறார் பாருங்கள்.
//என்றாலும் தான் அலட்சியப்படுத்தப் பட்டு விடக்கூடாது என்கிற ஆவேசம் உண்டு. பல நேரங்களில் அதைத் தான் 'முக்கியத்துவம்' என்று தவறாகப் புரிந்து கொள்கிறோம்//
குற்ற உணர்வு கோபமாக வரும் போலும்!
நன்றி அனானி
பொதுவாக யாருமே நூலகங்களிலிருந்து புத்தகங்கள் சுடவில்லை என்று தெரியும்போது குற்ற உணர்வாக இருக்கிறது. சே...என்று தோன்றி நூலகங்களிலிருந்து சுட்ட புத்தகங்களை எடுத்து வரிசையாக வைத்து ஒருமுறை பார்த்து விட்டு........
மீண்டும் உள்ளே வச்சாச்சு........ ஹி...ஹி...!
ஜே எஸ் ராகவன் தொடர்ந்து 550 வாரங்கள் நகைச்சுவை
பதிலளிநீக்குcolumn எழுதி வருகிறார்,
பார்க்க அண்ணா நகர்
டைம்ஸ்.
கடுகு சமீபத்தில் வெளியிட்ட ‘கமலாவும் நானும்’
HILARIOUS புத்தகத்தைப்
பற்றி HINDU- வில்
வந்ததைப் பாருங்கள்.== குமார்
'கமலாவும் நானும்' புத்தகமே 'எங்கள்'கையில் இருக்கிறது!
பதிலளிநீக்குநன்றி குமார். அண்ணா நகர் டைம்ஸ் சுட்டி கிடைக்குமா?
லைப்ரரியில் புத்தகங்கள் சுட்டதில்லை... என் சொந்த புத்தகங்களைச் சுட்ட நண்பர்களைத் தேடிக்கொண்டு இருக்கிறேன்... :)))
பதிலளிநீக்குதாய்ப் பாசம் - மனைவி நேசம் - 50 - 50! Equal distribution :)))
பாக்கியம் ராமசாமி, அகஸ்தியன் என இப்போதும் நிறைய பேரை ரசிக்கிறேன்....
சீனு சார்! பொன்னியின் செல்வன் பி டி எப் புத்தகம் வேண்டும் என்றால், engalblog@gmail.com மின்னஞ்சலுக்கு உங்கள் மின்னஞ்சலைத் தெரிவியுங்கள்.
பதிலளிநீக்குஎங்கள் ஆசிரியர்களில் ஒருவர் ஆயிரம் (பி டி எப்) புத்தகங்கள் வைத்திருக்கும் அபூர்வ சிந்தா மணி!
நான் சொல்ல வந்ததெல்லாம் ஜீவி சொல்லிட்டார்:)
பதிலளிநீக்குபழைய எழுத்தாளர்களில் எஸ்வி. எஸ்,கல்கியின் மெல்லிய நகைச்சுவை, இராஜ நாராயணன் ஐய்யாவின் கதைகளில் வரும் இயல்பான நகைச்சுவை இவை பிடிக்கும்.
அம்மாவா மனைவியா என்றால் பாதி பாதின்னு சொல்ல ஆசைதான்.
அதை அப்படியே ஒத்துகணும்னு அவசியம் இல்லையே.
இதே போல அம்மாவா கணவனான்னு ஒரு கேள்வி போடுங்க்கள்:)
புத்தகத்தைப் பறிகொடுத்த பழக்கம் தான் உண்டு.
சுடுவதாதாவது!!!!
கேள்விகளும் பதில்களும் சுவாரஸ்யம்:)!
பதிலளிநீக்குபுத்தகங்கள் சுடப்பட்டிருக்கின்றன:)! சுட்டதில்லை.
eluthara velaiyai mattum panna padikalam. athai thavirthu matthathu ellaam pandranga ivanga athan pidikarathillai
பதிலளிநீக்குபரிசு இல்லையா? இது தெரியாம நிறைய டைப் பண்ணிட்டேநேப்பா.
பதிலளிநீக்குநீர் பரிசு தரும் புத்தகம் எல்லாம் இப்படி சுட்ட புத்தகமா? பரவால்ல. அதில நமக்கு ஒன்னு அனுப்பி வைங்க.
ஹை! நாங்க சுட்ட புத்தகம் எல்லாம் நாங்களே எப்பவும் வெச்சிகிட்டு, படித்து படித்து ஆனந்தம் அடைய வேண்டும் என்று, சுட்டு பத்திரமா வெச்சிருக்கோம். அதை பரிசாகக் கொடுக்க மாட்டோம்! அதே புத்தகம் ஒரு வேளை, வேறொரு இடத்தில் சுட்டோம் என்றால், இரண்டில் எது அழுக்கா இருக்கோ அதை மட்டும் பரிசாகக் கொடுத்துவிடுவோம்!
பதிலளிநீக்கு1) நான் ரசிக்கும் நகைச்சுவை கடுகு மற்றும் பாக்கியம் ராமசாமி. 2) என்னளவில் தாய்ப்பாசமே. 3) சுட்ட அனுபவம் எனக்கில்லை. என்னிடமிருந்து நிறைய சுடப்பட்ட அனுபவம் உண்டுங்க.
பதிலளிநீக்குஎங்கள் ப்ளாக் வாசகர்களில் பெரும்பாலானவர்கள் இவ்வளவு அப்பாவியாக இருக்கிறார்களே! நூலகத்தில் ஒரு புத்தகம் கூட சுட்டதில்லை என்கிறார்களே! மாறாக அவர்களிடமிருந்து புத்தகம் சுடப்பட்ட அனுபவங்கள் அதிகம் என்கிறார்களே! அடுத்த தடவை எங்கள் ப்ளாக் ஆசிரியர்கள் யாராவது புத்தகம் பரிசு கொடுக்கச் சென்றால், தயவு செய்து என்னையும் அழைத்துச் செல்லுங்கள்! என் கைகள் 'நம நம' என்கின்றன.
பதிலளிநீக்குசென்னை போனதும் ஜெ.மோ. புத்தகங்களைத் தேடிப் படிக்க வேண்டும். என் 'எழுத்தாளர்' பகுதியில் அவரைப் பற்றி எழுத வேண்டும். அதனால் அவரைப் படிக்க வேண்டும் என்கிற உந்துதல் நிறைய இருக்கிறது. அவரது சிறுகதைகள் சில இணையத்திலேயே கிடைக்கின்றன. படித்தேன். இது போதாது. அவர் மனத்தைப் படிக்க நாவல்கள் தாம் லாயக்கு. அதற்காகக் காத்திருக்கிறேன்.
பதிலளிநீக்குபத்திரிகைகளில் இப்பொழுதெல்லாம் எழுதுகிறாரா என்கிற அர்த்தத்தில் அந்தக் கேள்வி. அகஸ்தியன் சார் பிலாக் எழுதுவது தெரியும். அதனால் தான் பக்கத்தில் பார்த்துக் கொண்டே அவரும் நினைவுக்கு வந்து குறிப்பிட்டேன். இல்லையென்றால் மூன்றாவது இடத்திற்கு போட்டி நிறைய.
மாம்பலம் டைம்ஸ் ஞாயிறுகளில் இலவச விநியோகம். நீங்கள் அவசியம் ஜே.எஸ். ராகவன் கட்டுரைகளைப் படிக்க வேண்டும்.
ஹாஹா, ஹஹ்ஹா, ஹிஹி, அவுட்டுச் சிரிப்பு, குபீர் சிரிப்பு,
குபுக் சிரிப்பு, இதழ் நோகாத புன்முறுவல் என்று எல்லாவகை சிரிப்புகளையும் வாசிப்பவரிடம் வரவழைப்பதில் வல்லுநர் இவர்.
மற்றவர்களிடம் இல்லாத ஆல் ரவுண்ட் அலசல். கடுகு கூட இவரைப் பற்றி ஒரு பதிவு போட்டிருக்கிறார் என்று நினைக்கிறேன். அதை விட நீங்களே நாலைந்து அவரது படித்து
ரசிப்பது தான் சிலாக்கியம். புத்தகமாகக் கூடக் கிடைக்கலாம்.
//குற்ற உணர்வு கோபமாக வரும் போலும் //
குற்ற உணர்வு? புரியலை..
1. //இன்றைய எழுத்தாளர்கள்//
பதிலளிநீக்குஇதிலே (என்னைப் போல) ப்ளாக் எழுதுறவங்களும் சேர்த்தியா? ஏன்னா, என் வட்டம் அவ்வளவுதான். :-( :-)
2. இதுக்கு கீதா மேடத்தின் பதிலை ரிப்பீட்டுகிறேன். அநேக இந்திய அம்மாக்கள், பிள்ளைகளைப் பிடித்து வைக்கவேண்டிய மாணவப் பருவத்தில் விட்டுவிட்டுட்டு, விட்டுவிடவேண்டிய ’கணவர்-தந்தை’ பருவத்தில் பிடித்து வைக்க முற்படுகிறார்கள்.
நான் இன்று சொல்வதுபோல அன்று நடந்துகொள்ளக்கூடியவாறு என் உடல்நிலை இருக்க மட்டுமே வேண்டுதல்கள்.
3. புத்தகத்தைச் சுடுவதா? ம்ம்... ஒரு அனுபவம் இருக்கு, சொன்னா இத்தினி நாள் விட்டு வந்த உதாரெல்லாம் போய் அற்பமாப் பாப்பீங்களோன்னு...
அதுவேறொண்ணுமில்லை, காலேஜ் லைப்ரரியில் எடுத்த ஒரு புத்தகத்தின் நடுவில் கொத்தாகச் சில பக்கங்களைக் காணவில்லை என்பதை ‘நல்லெண்ணத்துடன்’ நூலகரிடம் சொல்லப்போக, அவரோ அதை யார் செஞ்சிருந்தாலும், அதுக்கு நானே பொறுப்பு. பதிலுக்கு வேறு புதுபுக் வாங்கித் தந்தேயாகணும்னு சொல்ல... அந்தப் புத்தகமோ ஹைதர் காலத்துக்கும் முந்தையப் பழசு போல இருக்க, அந்த பதிப்பகத்துக்குக் கடிதம் எழுதி கேட்டா (வெளியில் எங்கும் கிடைக்கலை!), அவங்க ‘காந்தி செத்துட்டாரா’ ரேஞ்சில் அதெல்லாம் எப்பவோ நிறுத்தியாச்சுன்னு பதில் எழுதிட்டாங்க!!
கடிதத்தோடு நூலகம் போனால், அப்போது அங்கிருந்த (இன்னொரு) நூலகர் (இவர் ரொம்ம்ம்ப நல்லவர்), ‘இனி இதமாதிரி கிழிஞ்சிருக்கிறதைப் பாத்தா, இப்பிடி உளறிக் கொட்டிகிட்டு இருக்காதே’ன்னு அன்பா அறிவுரை செஞ்சிட்டு அந்த புக்கை வாங்கிட்டு, என் டோக்கனைத் திருப்பித் தந்தார்.
(ஹால் டிக்கெட் வாங்க நூலகரிடமும் NOC வாங்க வேண்டும் என்பதால்தான்...)
//.........அதைத் தான் 'முக்கியத்துவம்' என்று தவறாகப் புரிந்து கொள்கிறோம்//
பதிலளிநீக்குகுற்ற உணர்வு கோபமாக வரும் போலும்!//
குற்ற உணர்வு? புரியலை.
சிறியவர்கள் பெரியவர்களை கலந்து பேசாத தருணங்களை மனதுக்குள் உணர்ந்தாலும், அதனால்தான் பெரியவர்களின் அந்த ஆவேச ஆதங்கத்தை உணர்ந்தும், வெளிக்காட்ட முடியாத அந்த சிறியவர்களின் குற்ற உணர்வு கோபமாக மாறும் என்று அர்த்தம் காணவும்! :))
சுஜாதா நகைச்சுவை எழுதியிருக்கிறாரா? படிக்காமல் போனேனே? விவரம் சொல்லுங்களேன்..
பதிலளிநீக்குமூணு பேருக்கும் மூணெழுத்துப் பெயர் பொது, மத்தபடி மூணுல ஒரு மூணெழுத்து தான் நகைச்சுவை எழுத்தாளர் என் கணிப்பில். சமீப எழுத்துக்களில் பா.கணேஷின் நகைச்சுவை பிடிக்கும்.
பதிலளிநீக்குஹுஸைனம்மா... இதில் அற்பமாக நினைக்க என்ன இருக்கிறது? அந்தப் பழைய நூலகரைத்தான் அபபடி நினைக்க வேண்டும்! இரண்டாவது கேள்விக்கான பதில் நியாயமானதுதான். //நான் இன்று சொல்வதுபோல அன்று நடந்துகொள்ளக்கூடியவாறு என் உடல்நிலை இருக்க மட்டுமே வேண்டுதல்கள்.// இன்ஷா அல்லாஹ்...
பதிலளிநீக்குகுரோம்பேட்டைக் குறும்பன்.... நல்ல ஐடியாவாகத்தான் இருக்கு!
கணேஷ்... இந்தக் கால எழுத்தாளர்களில் உங்களுக்கு யாரையும் கண்ணில் படும் அளவு தெரியவில்லை என்று எடித்துக் கொள்ளலாமா.... இன்றும் எழுதினாலும் கடுகு, பா ரா அந்தக் கால எழுத்தாளர்கள்தானே...!
கேள்விகளையும் பதில்களையும் ரசித்து விட்டு ஒரே ஒரு பதில் மட்டும் சொல்லி மற்ற இரண்டை சாய்ஸில் விட்டு விட்டீர்களே ராமலக்ஷ்மி....!
நன்றி வல்லிம்மா... அடுத்த வாசகர்களுக்கான கேள்வியில் உங்கள் கேள்வியைச் சேர்த்து விடலாம் போல...! எங்கள் நண்பர் ஒருவர் எதையாவது தூக்கி எறிந்து விடலாம் போல இருக்கு என்று சொன்னால் அவர் சொல்வார் "ஆமாம்.. ஆமாம்.. தூக்கிப் போட்டுடு... எங்கே போடறேன்னு மட்டும் என்கிட்டே சொல்லு...." என்பார் அது மாதிரி புத்தகங்களைப் பறிகொடுக்கரவங்களைச் சந்தித்து இனி புத்தகங்கள் கடன் வாங்கலாம் போலே இருக்கே....! (நன்றி கு.கு)
நன்றி வெங்கட்.... இரண்டாவது கேள்விக்கான பதில் சாலமன் பாப்பையா பாணி!
சுட்டது ஆயிரம்.
பதிலளிநீக்குஆமா.. எங்கே எப்படினு விவரம் கேட்டா யாருங்க சுட்டேன்னு சொல்வாங்க..? என்ன கிண்டலா இருக்குதா?
//சுட்டது ஆயிரம்.//
பதிலளிநீக்குஅப்பாடி அப்பாதுரை... எல்லோரும் நல்லவங்களா இருந்து எங்களைக் குற்றவுணர்வில் வைத்திருந்த போது தென்றலாக வந்த ஒரு பதில்!!
//சுஜாதா நகைச்சுவை எழுதியிருக்கிறாரா? //
ஆமாம் சுஜாதாவின் 'மாமா விஜயம்' படிச்சதில்லை? பொதுவாகவே அவர் எழுத்தில் ஒரு மெல்லிய நகைச்சுவை இழைந்தோடுமே........!
மாமா விஜயம் கேள்விப்பட்டதில்லை.. அவசியம் தேடிப் படிக்கிறேன், நன்றி.
பதிலளிநீக்கு..
ஔவை கிட்டே முருகன் "சுட்ட பழம் வேணுமா?"னு கேட்டாரு.. அப்போ முருகன் கெட்டவரா?
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்கு//அவர் எழுத்தில் ஒரு மெல்லிய நகைச்சுவை இழைந்தோடுமே........!
பதிலளிநீக்குஓடுதே? ஆகா.. ஓடிக்கிட்டே இருக்குதே... நிக்க மாட்டேங்குதே?
சுஜாதாவின் எழுத்துக்களில் அவருக்கிருந்த நகைச்சுவை உணர்வு வெளிப்படுவதை அவருடைய நகைச்சுவை எழுத்துத் திறமை என்பது கொஞ்சம் மிகையில்லையோ?
நாமெல்லாருமே நகைச்சுவையை ரசிக்கலாம். நம் பேச்சிலும் எழுத்திலும் நமக்கிருக்கும் நகைச்சுவை ரசனை வெளிப்படும் சாத்தியம் உண்டு. அதை நகைச்சுவைத் திறமை என்று சொல்ல முடியாது. நகைச்சுவை எழுதுவோருக்கும் நகைச்சுவை எழுத்தாளருக்கும் வித்தியாசம் உண்டு. சிவாஜி கணேசன் காமெடி நடிப்புக்கும் நாகேஷ் காமெடி நடிப்புக்கும் வித்தியாசம் உண்டு. (?)
ஜே.எஸ்.ராகவன் கல்கியில் அடிக்கடி எழுதி இருக்கார்; படிச்சிருக்கேன், என்றாலும் எனக்கு என்னமோ தேவனுக்கு அடுத்துத் தான் மத்தவங்கனு தோணும். :))))))
பதிலளிநீக்குஅப்பாதுரை,
சுஜாதா எழுதின குதிரை கடிச்ச கதை படிச்சதில்லை?? ஏதோ ஒரு கல்கி(?) தீபாவளி மலரில் வந்திருந்தது. அதுக்கு அப்புறமும் ஒரு தீபாவளி மலரில் கோடை விடுமுறைக்கு டெல்லியிலே இருந்து சிறப்பு ரயிலில் சென்னை வந்த அனுபவங்களையும் ஒரு கதை போல் எழுதி இருப்பார். அருமையா இருக்கும். ஆனாலும் தேவன் தேவனே! :)))))
ஜீவி சார் சொன்ன கடுகு பிஎஸ்.ரங்கநாதனின் கமலா, தொச்சு எல்லாரும் எங்க வீட்டிலே ரொம்பவே ஃபேமஸ் தான். அந்த மாதிரி காரக்டர்களை அப்படிப் பெயர் சொல்லியே அடையாளம் காண்போம். ஆனாலும் முதலில் தேவன். அடுத்தாப்போலவே இவங்க வருவாங்க.
ராஜேந்திரகுமாரின் வால்கள் கலாட்டாவும், அதில் வரும் சீதா என்ற சின்னப் பெண்ணின் காரக்டர் "ஙே" என விழிப்பதும் கூடப் பிடிக்கும் தான். உருளைக்கிழங்கு ஸ்ட்ரைக்கரில் கால் வைத்துக் கீழே விழுந்த பெண்ணின் பெயர் தான் மறந்தே போச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்!!
ரெண்டு நாள் லீவுக்கப்புறம் வந்துட்டேனே! :))))))
குதிரை கடிச்ச கதையா! சரிதான்.. நிறைய மிஸ் பண்ணியிருக்கேன் போல.
பதிலளிநீக்குதீபாவளி மலரில் வந்ததால் பார்த்திருக்க மாட்டீங்கனு நினைக்கிறேன் அப்பாதுரை. :)))
பதிலளிநீக்குஎன்னோட சித்தப்பா(அசோகமித்திரன்) கூட ஒரு தீபாவளி மலரில் கர்நாடகாவின் சிறப்புத் தயாரிப்பான கடுபூ என்னுக் கொழுக்கட்டை சாப்பிட நேர்ந்தது குறித்த ஒரு கதை எழுதி இருந்தார்; அதுவும் பத்து வருடங்கள் முன்னர் ஒரு தீபாவளி மலரிலேயே வந்தது. அதுவும் படிச்சுட்டுச் சிரிச்சுட்டு இருந்தோம். :)))) கதை பேர் மறந்து போச்சு!
1. நான் இன்னமும் தமிழில் சுஜாதா, தி.ஜ.ர, ஜெயகாந்தன் தான் படிக்கிறேன்.
பதிலளிநீக்கு2. தாயாக இருக்கும் மனைவிகள் மீதான நேசம் தாய்ப் பாசத்தை ஜெயிக்கிறது.
3. ஊர் மாறும் போது மறதியாக சில புத்தகங்கள் தங்கி விட்டதுண்டு. பெயர் நினைவில்லை. அதை என்னிடமிருந்து சுட்டு விட்டார்கள்.
http://kgjawarlal.wordpress.com
அசோகமித்திரன் உங்க சித்தப்பாவா, கீதா சாம்பசிவம்? அதான் இவ்வளவு நல்லா எழுதறாரு.
பதிலளிநீக்குஅவர் எழுதின 'தண்ணீர்' புத்தகம் ரெண்டு வருஷத்துக்கு முன்னாலே படிச்சேன். ரெண்டு வருஷமா என்னைக் குடைஞ்சிட்டிருக்கு.
//ரெண்டாவது கேள்விக்கு பதில் உங்களோட பாணி பதில். ரொம்பப் ப்ராக்டிகல்.//
பதிலளிநீக்குஎன்னைப் பொறுத்தவரைக்கும் இதுதான் சரியானது ஆ"சிரி"யரே! :))))நான் மருமகளாய் இருந்தப்போ என்ன எதிர்பார்த்தேனோ அதைத் தான் என் மருமகளும் எதிர்பார்ப்பாள் இல்லையா? ஒதுங்கி இருந்து ரசிப்பது தான் சுகம். :)))))
//அசோகமித்திரன் உங்க சித்தப்பாவா, கீதா சாம்பசிவம்? அதான் இவ்வளவு நல்லா எழுதறாரு.//
ஹிஹிஹி, அப்பாதுரை, அவரா, நானா? :P:P:P என்னோட அம்மாவின் சொந்தத் தங்கை கணவர் அவர். தண்ணீர்த் தட்டுப்பாட்டில் சென்னை உச்சகட்டத்தில் இருந்த அறுபதுகளில் அவர் இந்த நாவலை எழுதினார். ஒவ்வொரு பக்கமும் யோசித்து யோசித்து எழுதுகையில் கிட்ட இருந்து பார்த்ததோடு கையெழுத்துப் பிரதியையும் படித்திருக்கேன். :)))) வாழ்விலே ஒரு முறைதான் முதலில் வெளிவந்த கதைத் தொகுப்பு. என்கல்யாணத்துக்கும் அது தான் தனிப்பட்ட பரிசாய்க் கொடுத்திருந்தார். ஒற்றன் படிச்சுப் பாருங்க. பதினெட்டாவது அட்சக் கோடு கிட்டத்தட்ட சுயசரிதை. அதுவும் படிங்க. மானசரோவர், அருமையா இருக்கும்.
கீதா மேடம்.... இவ்வளவு தூரம் வந்து பழைய பதிவுக்கு மட்டும் பதில் சொல்லிட்டுப் போனால் எப்படி? புதுப் பதிவு பார்க்கலையா?!!!
பதிலளிநீக்குஹிஹிஹி, பெரிய இடத்து அழைப்பு வந்தது, பசிக்குதுனு, அதனால் போயிட்டேன். :)))))
பதிலளிநீக்கு//சிவாஜி கணேசன் காமெடி நடிப்புக்கும் நாகேஷ் காமெடி நடிப்புக்கும் வித்தியாசம் உண்டு.//
பதிலளிநீக்குதேவன் தவிர எந்த எழுத்தாளர் அதிகபட்சம் நகைச்சுவையாகவே எழுதியிருக்கார்? தேவனே கூட ராஜத்தின் மனோரதத்தில் நகைச்சுவை 'கலந்து'தானே எழுதியிருப்பார்? கோமதியின் காதலனில் அதுவும் இருக்காது! எஸ் வி வி, ந்சாடோடி இருவரும் கூட நகைச்சுவைக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார்கள் என்றும், எஸ் வி வி ஆங்கிலத்தில் எழுதிக் கொண்டிருந்தவரைக் கல்கிதான் தமிழில் எழுதச் சொன்னதாக பாஹே சொல்கிறார்!
//உருளைக்கிழங்கு ஸ்ட்ரைக்கரில் கால் வைத்துக் கீழே விழுந்த பெண்ணின் பெயர் தான் மறந்தே போச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்!!//
பதிலளிநீக்குரேவம்மா என்கிற ஆந்திரப் பெண்!
எஸ் வி வியை கல்கிதான் அறிமுகப் படுத்தினார் என்று சொன்னபோது சாவி ஞாபகம் வந்து விட்டது.கேள்வியிலும் அவரை விட்டு விட்டோமே என்றும் தோன்றியது.... வாஷிங்டனில் திருமணம் அவர் மாஸ்டர் பீஸ் இல்லையா?!
பதிலளிநீக்கு//எந்த எழுத்தாளர் அதிகபட்சம் நகைச்சுவையாகவே எழுதியிருக்கார்?
பதிலளிநீக்குகொஞ்சம் யோசிச்சீங்கன்னா உங்களுக்கே தெரிஞ்சுரும். ஒண்ணு இல்லே ரெண்டு பேர் இருக்காங்க.
அஞ்சு சான்சு தரேன் :)
தேவன் நகைச்சுவை எழுதினால் நகைச்சுவையாகவே எழுதினார். சமூகம் காதல் எழுதினால் வேறே எதுவும் இழைந்தோடி குழப்பாமல் எழுதினார் என்று நினைக்கிறேன். தேவன் படித்து நாளாகிவிட்டது.
பதிலளிநீக்குபுதுமைபித்தன் கூட நகைச்சுவை இழைந்தோட எழுதினார். அவரை நகைச்சுவை எழுத்தாளர் எனலாமா?
பதிலளிநீக்குஅப்பாதுரை சொல்வது சரிதான். தேவனின் லக்ஷ்மி கடாக்ஷம், மிஸ்டர் வேதாந்தம் போன்ற ஓரிரண்டு நாவல்கள் தவிர மற்றவை நகைச்சுவையே. கோமதியின் காதலனில் இல்லாத நகைச்சுவையா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :)))))) கல்யாணியின் கதாநாயகன் அசடு வழிவது ஒண்ணு போதுமே! அதுவும் அந்த மானேஜரை மூக்கைப் பிடிச்சு இழுத்துட்டு, அவர் மூக்காலேயே பேசி!!!!!!!!!!!! அப்புறமா போலீஸ் ஸ்டேஷனிலே சுந்தரம் உளறிக் கொட்டிக் கிளறி மூடுகையில்...... இப்போப் படிச்சால் கூடச் சிரிப்பு வருதே.
பதிலளிநீக்குஅந்த மாதிரி இப்போ சமீபத்தில் வாஷிங்டனில் திருமணம் (பதினைந்து நாட்கள் முன்னர் தான் படிச்சேன்) படிக்கையில் சிரிப்பு வரலையே? எஸ்.வி.வி. வெங்காய சாம்பார் சாப்பிடறதைப் பத்தி எழுதி இருப்பார் பாருங்க. அது சூப்பரோ சூப்பர் காமெடி! :)))) உல்லாஸ வேளையில் வருதுனு நினைக்கிறேன்.
மறுபடி கேள்வியைப் போய்ப் பார்க்கும்போது முழுக்க முழுக்க நகைச்சுவை என்று கேட்கவில்லை என்று தோன்றுகிறது... உதாரணத்துக்கு மூன்று எழுத்தாளர்களைச் சொல்லி அப்போது இருந்த நகைச்சுவை உணர்வு மிநிமல் அளவில் கூட இன்றைய எழுத்தாளர்களிடம் இருக்கிறதா என்பதுதானே கேள்வி.... அதனோடு கூட நகைச்சுவை என்று இல்லாமல் இன்றைய எழுத்தாளர்களில் யாருக்கு மவுசு (மௌஸ் அல்ல!) இருக்கிறது என்றும் பார்க்க நினைத்த கேள்விதானே அது? எங்கே திசை மாறியது?!!
பதிலளிநீக்குகீதா மேடம்... ரேவம்மா பெயரை 'அக்னாலட்ஜ்' செய்யவில்லையே....!
பதிலளிநீக்கு//உருளைக்கிழங்கு ஸ்ட்ரைக்கரில் கால் வைத்துக் கீழே விழுந்த பெண்ணின் பெயர் தான் மறந்தே போச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்!!//
பதிலளிநீக்குரேவம்மா என்கிற ஆந்திரப் பெண்!//
அட? ஆமா இல்ல? இந்த ரேவம்மாதானே சீதாவைப் பயமுறுத்திட்டே இருப்பா? இப்போ நினைவுக்கு வருது. அது முழுக்கத் தொகுத்தே வைச்சிருந்தேன். யார் சுட்டாங்களோ, அங்கங்கே மாற்றல்னு சட்டி தூக்கியதில் எந்தப் பழைய பேப்பர்காரர் கிட்டே போச்சோ! :)))))
லேட்டாதான் கவனிக்கிறேன். அப்பாதுரை ஸார்... சுஜாதா ஆதலினால் காதல் செய்வீர்ன்னு நகைச்சுவை தொடர்கதையே குமுதத்துல எழுதியிருக்கார். ரசிச்சுப் படிக்க முடியும். படிச்சுப் பாருங்க.
பதிலளிநீக்குநன்றி கணேஷ். இதையும் படிச்சதில்லே.
பதிலளிநீக்கு