பத்திரிகைகளுக்கு நாம் கேள்விகள் அனுப்பினால், அது பிரசுரமானால், அந்தக் கேள்விகளுக்கு அவர்கள் பதில் சொல்வார்கள்.
இங்கு ஒரு மாறுதல்.
இங்கு எங்கள் கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லுங்களேன்.......!
1) கல்கி, தேவன், சுஜாதா போன்றோரிடம் அப்போது இருந்த நகைச்சுவை இன்றைய
எழுத்தாளர்கள் யாரிடம் இருக்கிறது என்று நினைக்கிறீர்கள்? உங்களைப்
பொறுத்தவரையில், இந்தக் காலத்தில், மனம் கவர்ந்த எழுத்தாளர்கள் என்று யார் யாரை
வரிசைப் படுத்துவீர்கள்?
2) தாய்ப் பாசம், மனைவி நேசம் எது முதலிடம் பெற்று ஜெயிக்கிறது? மனைவியாக
இருக்கும்போது கணவன் தனக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்று நினைப்பவ(ர்க)ள், தாயானதும் பிள்ளையிடம் அதை எதிர்பார்க்கிறா(ர்க)ளா..?
3) லைப்ரரியில் புத்தகம் சுட்ட அனுபம் உண்டா... ஆம் என்றால் என்ன புத்தகம், எங்கு, எப்படி?