ஒரு அவசிய வேலையாக பண்ருட்டி செல்ல வேண்டி இருந்தது.
விழுப்புரம் தாண்டி சென்று கொண்டிருந்த சாலை.
நண்பர் பணம் கொண்டுவர மறந்து விட்டதால், அவர் தேவை இல்லை என்று சொன்னாலும், நீண்ட பயணத்தில் இருக்கிறோமே, எமர்ஜென்சிக்குக் கையில் இருக்கட்டும் என்று முடிவு செய்து, ATM ல் பணம் எடுக்கலாம் என்று அங்கிருந்த KVB ATM சென்றேன்.
முதல் முறை போட்டேன். சத்தம் மட்டும் வந்தது. ரிஸல்ட் எதுவும் வரவில்லை. இரண்டாம் முறை போட்டு 10,000 என்று தொகையையும் குறிப்பிட்டேன். உருளை உருளும் சத்தமும் processing என்று செய்தியும் வந்தது.
பல நொடிகளுக்குப் பின் Sorry, unable to proceed என்ற செய்தியுடன் ஸ்லிப் கையில் வந்து விழுந்தது. என்னவென்று பார்த்தால் மெஷினில் பணம் இல்லையாம்.
வெறுப்புடன் கிளம்பினோம்.
ஒன்றரை மணிநேரம் பயணம் செய்தபின் என்னுடைய அலைபேசியில் பத்தாயிரம் கிரெடிட் செய்யப் பட்டதாக குறுஞ்செய்தி வந்தது. கொஞ்சம் கவலைப் பட்டாலும் சரி என்று விட்டு விட்டேன்.
தொடர்ந்த வேகமான பயணத்தின் இன்னொரு முக்கால் மணி நேரம் சென்றபின், என் அலைபேசிக்கு என் வங்கியிலிருந்து வந்த "உங்கள் கணக்கிலிருந்து 10,000 ரூபாய் கழிக்கப் பட்டது" என்ற குறுஞ்செய்தியைப் பார்த்ததும் திகில் வந்தது.
குறுஞ்செய்தி முன் பின்னாக மாறியிருக்கலாமா, என்ன ஆகி இருக்கும், மெஷினில் வங்கி அலுவலர்கள் வந்து பணம் வைத்ததும் நம்முடைய பணம் வெளியில் வந்து கொட்டி இருக்குமோ போன்ற சந்தேகங்கள் அரித்தன.
வங்கி வீட்டுக்கு அருகிலேயே இருந்ததால் Sorry, unable to proceed என்ற செய்தி வந்த சீட்டையும், வங்கியிலிருந்து பணம் கழிக்கப்பட்டதாக வந்த செய்தியையும் 'வாட்ஸப்' மூலம் சென்னையில் எனது வீட்டுக்கு அனுப்பி, என் அண்ணன் மகனிடம் விவரம் சொல்லி, வங்கிக்குச் சென்று பார்க்குமாறு கூறினேன்.
அவர்கள் நேரம் ஆகிவிட்டது என்று கூறுவார்கள் என்றும் சொல்லி இந்தச் செய்தியைக் காண்பிக்கச் சொன்னேன்.
வங்கியில் அதே போலச் சொன்னாலும் கவலையை உணர்ந்து கணினியில் பார்த்து, வயிற்றில் பாலை வார்த்தார்கள்.
என்ன குறுஞ்செய்திச் சேவையோ, என்ன பணம் வழங்கும் சேவையோ...
என்னவோ போங்க..
===================================================
சமீபத்தில் ராணுவத்தில் பெண்கள் சேர்ந்திருக்கும் நிலையில் முன்பு கரியப்பா இது பற்றி முன்பு சொன்ன ஒரு கருத்தைப் பார்ப்போமா?
"சேனையில்
சேர்ந்து உழைக்க நம் நாட்டில் நிறைய ஆண்கள் இருக்கிறார்கள். அதற்குப்
பெண்கள் முன்வர வேண்டியதில்லை. ராணுவ மருத்துவத்துறையில் மட்டுமே
அவர்களுக்கு இடம் உண்டு. அவர்கள் சிறந்த மனைவிமாராகவும், தாய்மாராகவும்
விளங்கட்டும்"
அவரின் வேறு சில கருத்துகள் :
"ராணுவத்தில்
அரசியலைக் கலப்பது விஷத்தைக் கலப்பது போன்றது.. அதை விலக்கி
வையுங்கள்.ஆனால் இந்தியப் ப்ரஜைகள் என்ற முறையில் அரசியலை அறிந்து
கொள்ளுங்கள். அதுபோதும்"
"மாணவர்கள் அரசியலில்
ஈடுபடக் கூடாது. சில அரசியல் கட்சிகளின் கோஷங்களில் மயங்கி,அவர்களது
பிடியில் சிக்காமல் இருக்க வேண்டும் என்றே மாணவர்களுக்கு நான் சொல்வேன்"
============================= =======
சில சமயங்களில் atm இப்படிஹ்தான் நம்மை டென்ஷனாக்கி விடுகிறது. எத்தனை எத்தனை டெக்னாலஜியால் சௌகர்யங்கள் இருக்கிறது அதை ஈடு செய்யும் விதமாக தொல்லைகளும் உண்டு.
பதிலளிநீக்குஎனக்கும் இப்படிப்பட்ட அனுபவம் உண்டு.
என்ன தான் ஏ டி எம் சரியா ஒர்க் பண்ணினாலும் அதிலேந்.து பணம் வர வரைக்கும் திக் திக் தான்.
பதிலளிநீக்குஅது மிஞ்சி மிஞ்சிப் போனால் 20 செகண்ட் எடுக்கும். அதுக்குள்ளே நான் என் குலதெய்வம், மலைக்கோட்டை,பிள்ளையார் , திருப்பதி வெங்கடாஜலபதி எல்லாருக்கும் வேண்டிக்கொண்டு விடுவேன்.
எனக்கும் இது மாதிரி பணம் வராம ஸ்லிப் வந்ததும் உண்டு. அதே போல, கார்டு உள்ளே மா ட்டிக்கொண்ட அனுபவமும் உண்டு
பணம் வர வில்லை.கார்டும் போய்விட்டது. வேற பாங்க் எ.டி.எம் அது.
சனிக்கிழமை வேற.
புது கார்டு வாங்க அதுக்கு ஒரு 200 ரூபா அழுது
தொலைத்தேன். அதே பாங்க் டி.எம் .எ.கார்டு ஆக இருந்தால் தான்
காசு இல்லாம கிடைக்குமாம்.
எப்படி எல்லாம் பணம் பண்றாங்க இந்த காலத்துலே
சுப்பு தாத்தா.
எனக்கும் இதுபோன்ற அனுபவம் உண்டு.
பதிலளிநீக்குபலர்க்கும் இருக்கும் என்று நினைக்கிறேன்.
தொடர்கிறேன்.
நன்றி
நீங்க ஏ.டி.எம்.ல பணம் இருக்கான்னு பார்த்துட்டு அப்புறம் எடுத்திருக்கணும். ஏ.டி.எம்.மை உபயோகப்படுத்தும் முன் இதையெல்லாம் தெரிஞ்சு வெச்சுக்க வேண்டாமா?
பதிலளிநீக்குஎனக்கும் ஒரு முறை இதே - திக்.. திக்....
பதிலளிநீக்குவணக்கம் நண்பரே இன்னும் இந்தியாவில் ஏடிஎம்மின் வேலைகள் 100 சதவீதம் சரியில்லை என்பது உண்மையே....
பதிலளிநீக்குஅபுதாபியில் எனது நண்பரொருவர் வங்கியில் இரவு நேர செக்யூரிட்டி வங்கியின் உள்ளே அவர் மட்டும் உட்கார்ந்து கொண்டு இருக்கும் பொழுது அவருக்கு துபாய் ப்ராஞ்சிலிருந்து போண் எடுத்துக்கேட்டால் என்ன செய்து கொண்டு இருக்கின்றாய் ? வெளியே ஒருவன் அரை மணி நேரமாக மிஷினைக் குடைந்து கொண்டு இருக்கிறான் போய்ப்பார் என்ற அதட்டல் அந்த அளவுக்கு பெருகி விட்டது விஞ்ஞானம் நாமென்ன பணத்தில் குறைவானவர்களா ? உலகிலேயே ஸ்விஸ் கணக்கு வைத்து இருப்பவர்களில் இந்தியர்களே முன்னிலை.
இன்னொரு atm மெசினில் பாலன்ஸை பார்த்துக்கிட்டா ,அலைச்சல் மிச்சமாகுமே :)
பதிலளிநீக்குHow to find out the ATM has cash inside or empty?
பதிலளிநீக்குNamakkal Venkatachalam
திக் திக் விடயம் எனக்கு பக் பக்கென்று இருக்கு சகோ!
பதிலளிநீக்கு/How to find out the ATM has cash inside or empty?//
பதிலளிநீக்குEasy. If there is cash, cash will come. Otherwise, sorry slip will come.
subbu thatha.
இந்த ஏடிம் அனுபவம் அண்ணனுக்கு இருக்கு. பெரிய தொகை எடுப்பதாக இருந்தால் சின்ன தொகை எடுத்துவிட்டு (நூறோ இருநூறோ) பெரிய தொகைக்கு போவதுதான் வழக்கம்
பதிலளிநீக்குஎனக்கும் இது போன்ற அனுபவம் உண்டு நண்பரே
பதிலளிநீக்குநன்றி
தம +1
பதிலளிநீக்குalwaysuno said...
//நீங்க ஏ.டி.எம்.ல பணம் இருக்கான்னு பார்த்துட்டு அப்புறம் எடுத்திருக்கணும். ஏ.டி.எம்.மை உபயோகப்படுத்தும் முன் இதையெல்லாம் தெரிஞ்சு வெச்சுக்க வேண்டாமா?//
ஏடிஎம்மைத் திறந்துதானே பணம் இருக்கா இல்லையான்னு பார்க்கணும்? அதை எப்படித் திறக்கறதுன்னு alwaysuno உங்களுக்குத் தெரியும் போல இருக்கு. அந்த வித்தையை பரம ஏழையான எனக்கும் கொஞ்சம் கத்துக் குடுத்தீங்கன்னா, எப்படியோ தினம் ரெண்டு ஏடிஎம்மை வச்சுப் பொழச்சுக்குவேன்.
கரியப்பாவின் கருத்து எக்காலத்திற்கும் பொருந்தும். நன்றி.
பதிலளிநீக்குகார்டு சிக்கி தண்டம் அழுத
பதிலளிநீக்குஅனுபவம் எனக்கும் உண்டு
இதெல்லாம் யோகம் துரதிஷ்டம்
சம்பத்தப்பட்ட விஷயம் போல்
ஆகிக் கொண்டிருப்பதுதான் கவலை அளிக்கிறது
வாழ்த்துக்களுடன்...
வங்கித் திகில்கள் தவிர்க்க முடியாதவை ஆகி விட்டன.
பதிலளிநீக்குதிகில் அனுபவம்தான். பலருக்கும் இதுபோன்ற அனுபவங்கள் வாய்த்திருக்கும்போலிருக்கிறதே...
பதிலளிநீக்குஹஹஹா.. இப்போதான் எல்லா வங்கிக்கும் App இருக்கே.. இல்லாவிட்டாலும் மொபைல் மூலம் பார்த்துடலாமே.. ஆனாலும் அது திக்..திக் தான்..
பதிலளிநீக்குரொம்ப நாள் கழிச்சு இப்பத்தான் ஏடிஎம் கார்டு வாங்கி இருக்கேன்! இப்படி பயப்படுத்தறீங்களே!
பதிலளிநீக்குஏடிஎம் பணம் தரமாட்டேன்னு மட்டும் சொல்றதில்லை; இவ்வளவு தான் எடுக்கணும்னு வேறே நிபந்தனை விதிக்கும். இங்கே கேவிபி ஏடிஎம்மில் பத்தாயிரம் ரூபாய் வேண்டும்னா ஒரே முறையாக எடுக்க முடியாது! இரண்டு தரம் கார்டைப் போடணும்! :)
பதிலளிநீக்குஇந்த திகில் அனுபவம் எங்களுக்கும் உண்டு. பணம் நம் அக்கவுண்டில் வந்து சேரும் வரை திக் திக் பக் பக் தான்...
பதிலளிநீக்குகரியப்பா அவர்களின் வார்த்தைகள் 100% சரியே.
கீதா: கார்ட் சிக்கிக் கொண்டு, உள்ளேயே மெஷின் முழுங்கியதும் உண்டு. பசித்திருக்குமோ...வங்கியிடம் மீண்டும் ஒரு கார்ட் வாங்க ரொம்ப ப்ரொசீஜர். அப்படியே விட்டுவிட்டோம். நீங்கள் சொல்லி இருப்பது போல் சத்தம் மட்டும் வரும் பணமே வராது. எரர் வரும். நிறைய குளறுபடிகள் நடக்கின்றதுதான். ஏடிஎம் மெஷினில். பல இடங்களில் செக்யூரிட்டியே இருப்பதில்லை. கரியாப்பா அவர்கள் சரியப்பா...
நான் ஏடிஎம் பக்கமே போவதில்லை!
பதிலளிநீக்குஒரு பெண் பாங்கில் ஆபிஸரிடம் சொல்லின் கொண்டு இருந்தார், இதே அனுபவம் 5000 ரூபாய் எடுக்காமலே எடுத்ததாய் கணக்கு காட்டுகிறது என்று.
பதிலளிநீக்குநாங்கள் இன்னும் வங்கிக்குப் போய் செக் கொடுத்து டோக்கன் வாங்கி....இந்தத் தொல்லையில் மாட்டிக்கொள்ளவில்லை. ஆனால் என் பெண்ணிற்கு இதுபோல ஆயிற்று என்று சொல்லியிருக்கிறாள். வயதான காலத்தில் ஆபத்தை நாமே விலைகொடுத்து வாங்குவானேன் என்று ATM போவதில்லை.
பதிலளிநீக்குஎ.டி.எம்.-யை நம்பி வெளியூரில் பணம் இல்லாமல் அலைந்த அனுபவமும் உண்டு. விழிப்புணர்வு பதிவு!
பதிலளிநீக்குத ம 13
வங்கிகளின் ஆட்டோமேட்டிக் மெசேஜ் வசதியால்தான் இந்தப் பிரச்சினை...
பதிலளிநீக்குதவறாக கிரெடிட் ஆன ரூ.10000/= சரியாக டெபிட் ஆகி விட்டது. அவ்வளவு தானே?.
பதிலளிநீக்குகுறுஞ்செய்தி ஏற்பாடு பலவிதங்களில் மிக மிக உபயோகமான ஒன்று. .யார் நம அக்கவுண்ட்டில் பணம் எடுத்தாலும் தெரிந்து விடும்; அதே மாதிரி நம் அக்கவுண்ட்டில் கிரெடிட் ஆகும் பணத்தையும் வங்கிக்குப் போகாமலேயே தெரிந்து கொள்ள வசதி.
நல்ல வசதி தான் என்றாலும் பல சமயங்களில் தொல்லைகள் உண்டு. Automation என்று சொன்னாலும், இன்னும் பல இடங்களில் எல்லாமே மனிதர்களு மூலம் தான் செய்ய வேண்டியிருக்கிறது...
பதிலளிநீக்குஅந்த நிமிட பதட்டம் தவிர்க்க முடியாதது. அலுவலக நண்பர் ஒருவருக்கு ஏற்பட்ட அனுபவம் கொஞ்சம் வித்தியாசமானது. அது பற்றியும் விரைவில் எழுதுகிறேன்...