முள்ளும்
மலரும் என்கிற தலைப்புக்கு முள் மற்றும் மலர் என்று ஒரு அர்த்தம், மற்றும்
முள் கூட மலரும் என்று விளக்கம் சொல்வார்கள் அந்தக் காலத்தில்.
அதுபோலவே
இந்தப் புத்தகத்தின் தலைப்பு. பூக்களில் ஆண், பெண் உண்டா என்ற கேள்வி.
பூக்களாகிய பெண்கள் என்று ஒரு அர்த்தம். பெண்கள் எல்லாம் பூப் போன்றவர்கள்
என்று சொல்வது..கவிதைகள் எளிமையாய் இருக்க வேண்டுமா? புரியக் கஷ்டமாய் வார்த்தைகள் இடம்பெற வேண்டுமா?
பிறைசடையில்
இருந்து நழுவி
ஜடை நாகங்களில்
குடியேறி
சுவாசினிகளின்
மருதாணிக் கரங்களின்
வருடல்களில்
வெட்கத்துடன் நான்...
புரியவில்லை!
கவிதை வரிசையில் முல்லைக் கவிதை டாப்.
சப்பாத்திக் கள்ளியின் வழி சொல்லும் சோகம், அதிலேயே தன்னம்பிக்கை - அழகு!
ஆமாம், ஐயங்கார்ப் பெண்களின் மூக்கில் அப்படி என்ன விசேஷம் தேனம்மை?!!
பூசணிப் பூவுடன் விழித்துக் காத்திருக்கும் உழைப்பாளியின் இரவு சுவாரஸ்யம்.
துணையின் மனதறியாத ஆக்கிரமிப்பு அண்மை டேபிள் ரோஸில்! அதில்,
என் கண் எனும் ரிமோட்டில் உன்
மனத்தை எனக்கேற்றதாக மாற்றுகிறேன்
என் கண்ணுக்கு விருந்தாய்..
எப்படி உணர்கிறாய் உன்னை நீ..
அறிய விழைந்ததில்லை..
எப்படி உணர்கிறாய் 'உன்னை' நீ யா? 'என்னை' நீயா?
ஸ்கோர்,
பல்ஸ் போன்ற ஆங்கில வார்த்தைகளும், ஹிஜரப், ஹாசல்நட் போன்ற அந்நிய
வார்த்தைகளும் சில சமயம் கவிதையை சற்றுத் தள்ளி நிறுத்துகின்றன!
அனிச்ச மலருக்கு அடுத்தடுத்து இரண்டு பக்கங்கள். உணர்ச்சி வெள்ளம்!
அந்திமந்தாரையில் கல்கியின் பொன்னியின் செல்வப் பாத்திரங்கள்.
எப்படித்தான் எழுதுகிறீர்களோ இப்படி எல்லாம் கவிதை! படிக்க மட்டுமே தெரிகிறது எனக்கு!
பாராட்டுகள் சகோதரி தேனம்மை.
மிகவும் அருமையான விமர்சனம். பாராட்டுகள். வாழ்த்துகள்.
பதிலளிநீக்குமுதல் படத்தில், பயணத்தில் உள்ள தேனை, அப்படியே சிந்தாமல் சிதறாமல் எப்படித்தான் பிடித்தீர்களோ ! :) ஆச்சர்யப்பட்டேன். மிக்க நன்றி, ஸ்ரீராம்.
ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் !
அத்தி பூத்ததோ! நன்றி வைகோ ஸார்!
நீக்குஅற்புதமான விமர்சனம்
பதிலளிநீக்குஉதாரணத்திற்கு எடுத்துக் கொண்ட கவிதைகள்
முழுக் கவிதைகளையும் படிக்க ஆவலைத் தூண்டிப் போகிறது
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
நன்றி ரமணி ஸார்.
நீக்குநன்றி ரமணி ஸார்.
நீக்குநல்ல விமர்சனம் ஸ்ரீ,
பதிலளிநீக்குவாழ்த்துக்கள், படிக்கனும்,,,
நன்றி சகோதரி மகேஸ்வரி பாலச்சந்திரன்.
நீக்குஎடுத்துக்காட்டிய கவிதைகளை ரசித்தேன்;நீங்களும் ரசித்து எழுதியிருக்கிறீர்கள்
பதிலளிநீக்குசிவனின் சடையிலிருந்து விழுந்த தாழம்பூ (பொய் சொன்னதால் சபிக்கப்பட்டது!).சடையில் பின்னப்பட்டது(தாழம்புதரில் நாகம் வசிக்கும்!),அந்த அழகை கன்னியர் ரசிக்கின்றனர்;இதை விடப்பூஜை மேலா?
ஒரு சந்தேகம் தாழை வாசனை விட ,மகிழம்பூ வாசனை சிறப்பானதா?
(விளக்கத்துக்கும்) நன்றி சென்னை பித்தன் ஸார். தாழை வாசனை மயங்க வைக்கும். மகிழம்பூ வாசனை கிறங்க வைக்கும்! :))
நீக்குபூக்களில் ஆண் பூ, பெண் பூ என உண்டு அருமையான இந்தக் கவிதைத் தொகுப்பின் விமரிசனத்துக்கு நன்றி. எங்கிருந்து தான் தேடிப்பிடிப்பீர்களோ! அதை விட விமரிசனமே ஒரு வசன கவிதையாக இருக்கிறது. நல்ல ரசனைதான் உங்களுக்கு! சிவனுடைய வழிபாட்டுக்குத் தான் தாழம்பூ உதவாது. அம்பிகைக்குத் தாழம்பூ உண்டு. வரலக்ஷ்மி விரதத்தின் போது என் அம்மாவும் தாழம்பூ வைப்பார். பெண்களும் தாழம்பூ வைத்துப் பின்னிக் கொள்வார்கள் ஒரு காலத்தில்! நான் தாழம்பூ வைத்துப் பின்னிக் கொண்டிருக்கேன். :)ஆகவே பெண்களின் கைகளில் தாழம்பூ வருவதை ரசனையோடு சொல்லி இருக்கார். :)
பதிலளிநீக்குதேனம்மை ஏதாவது வித்தியாசமான விளக்கம் சொல்வாரோ என்று பார்த்தேன். நன்றி கீதா மேடம்.
நீக்குவிமர்சனமே படிக்கும் ஆவலைத் தூண்டுகிறது
பதிலளிநீக்குசகோ தேனம்மை அவர்களுக்கு வாழ்த்துகள்
நன்றி கில்லர்ஜி.
நீக்குஅருமையான விமர்சனம்.
பதிலளிநீக்குநன்றி நிஷா.
நீக்குஅருமை
பதிலளிநீக்குநன்றி நாபா! (நாகேந்திர பாரதி)
நீக்குஅருமையான விமர்சனம் . தேனம்மைக்கும், உங்களுக்கும் வாழ்த்துக்கள். படங்கள் அழகு.
பதிலளிநீக்குநன்றி கோமதி அரசு மேடம்.
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஐயா
விமர்சனம் மிக அருமையாக உள்ளது படிக்க படிக்கத்தான் சொல்கிறது.த.ம5
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன்.
நீக்குசகோதரிக்கு என் அன்பான வாழ்த்துகள்...
பதிலளிநீக்குநன்றி தித! :)))
நீக்குகவிதை எழுதும் போது இருந்த மகிழ்ச்சியைவிட உங்கள் விமரிசனம் தேனம்மைக்கு இனித்திருக்கும் வாழ்த்துக்கள் இருவருக்கும்
பதிலளிநீக்குஹா.... ஹா.... ஹா...
நீக்குநன்றி GMB Sir!
சகோதரி தேனம்மையின் கவிதைகளைப் படித்ததாலோ என்னவோ உங்கள் விமர்சனத்திலும் கவிதை வாசம் வீசுகிறது. நூலினை அனைவரும் படிக்க வைக்கும் விமர்சனம். நானும் விரைவில் இந்த நூலினை வாங்கிப் படிக்கிறேன். சகோதரி தேனம்மைக்கு வாழ்த்துக்கள். உங்களுக்கு நன்றி.
பதிலளிநீக்குஎன்னைப் பாராட்டியதற்கும் நன்றி தமிழ் இளங்கோ ஸார்.
நீக்குஅருமையான கவிதைகளுக்கு அழகானதொரு மதிப்புரை. இருவருக்கும் வாழ்த்துகள்!
பதிலளிநீக்குநன்றி ராமலஷ்மி.
நீக்குபடிக்கும் ஆவலை தூண்டிய விமர்சனம். தேனம்மைக்கும் வாழ்த்துகள்!
பதிலளிநீக்குத ம 8
நன்றி செந்தில் குமார்.
நீக்குபூக்களைப் பாட 'தேன்'னம்மைக்கு சொல்லியா தரணும்:)
பதிலளிநீக்குஆஹா.... அதானே...
நீக்குநன்றி பகவான்ஜி.
அருமை சிறப்பாகவுள்ளது
பதிலளிநீக்குநன்றி வஸாந்த்!
நீக்குஅருமை சிறப்பாகவுள்ளது
பதிலளிநீக்குஅருமையான விமர்சனம். மிகமிக ரசித்து எழுதியிருக்கின்றீர்கள்.
பதிலளிநீக்குகீதா: பிறைசடையிலிருந்து நழுவி.....உங்களுக்கா புரியவில்லை ஸ்ரீராம் சும்மா....அட தேனம்மையின் தளப்பெயர் வந்துவிட்டதே ஹஹஹ்
நல்ல வாசம் வீசுகின்றது அவர்களது கவிதைகள் மட்டுமல்ல உங்கள் விமர்சனமும்...
நன்றி கீதா.
நீக்குநன்றி கீதா.
நீக்குகீதா சாம்பசிவம் சகோ தேனம்மை அவர்கள் அவங்க தளத்திலேயே சொல்லியிருந்தாங்க அவங்க இந்த புக் பத்தி....நாங்களும் வாங்க நினைத்த நினைக்கும் புத்தகம்...இன்னும் வாங்கவில்லை ஹிஹி..
பதிலளிநீக்குகீதா
உண்மைதான். நண்பர்களின் இன்னும் சில புத்தகங்களும் பாக்கி! நன்றி கீதா.
நீக்குஉண்மைதான். நண்பர்களின் இன்னும் சில புத்தகங்களும் பாக்கி! நன்றி கீதா.
நீக்குஒரு சந்தேகம் தாழை வாசனை விட ,மகிழம்பூ வாசனை சிறப்பானதா?//
பதிலளிநீக்குசெபி சார் பேசாம சிவனிடமே சொல்லி ஒரு வழக்காடு மன்றம் வைத்துவிட்டால் என்ன? ஓ ! ஏ பி நாகராஜன் இல்லையோ...இருந்திருந்தால் திருவிளையாடலில் வரும் பெண்களின் கூந்தல் ரகசியம் போல இதுவும் அரங்கேறி இருக்குமோ...ஹஹஹ்
கீதா
அஹா! நன்றியும் அன்பும் மகிழ்ச்சியும் ஸ்ரீராம்.
பதிலளிநீக்குபடிக்க படிக்க பாலா சார் சொன்னபடி எழுதியதை விட இன்பமா இருக்கு !
எத்தனை முறை நன்றி கூறுவேனோ தெரியல..
எங்கள் ப்ளாகுக்கும் மிக்க நன்றி இத்தனை பேரிடம் கொண்டு சேர்த்ததுக்கும் அவர்களின் அன்பைப் பெற்றுத் தந்தமைக்கும்.
நன்றி கோபால் சார் !
பதிலளிநீக்குநன்றி ரமணி சார் !
பதிலளிநீக்குநன்றி மகேஸ்வரி !
பதிலளிநீக்குசென்னைப் பித்தன் சார் & ஸ்ரீராம் .. ஈசனின் பூஜைக்கு மறுக்கப்பட்டாலென்ன.. பிறை சடையில் இருந்து நழுவி பெண் குழந்தைகளின் ஜடைநாகங்களில் ( நெத்திச்சுட்டி, பில்லை சந்திர பிரபை சூர்யப் ப்ரபை பட்டையான மலர் அலங்காரம் ) வைத்துத் தைக்கப்பட்ட தாழம்பூ அந்தப் பெண்குழந்தைகளின் மருதாணிக்கரங்களில் வெட்கிச் சிவந்தாகக் கூறி இருக்கிறேன்.
பதிலளிநீக்குமேலும் ஐயங்கார் பெண்களின் மூக்கு நான் பார்த்த வரைக்கும் ஷார்ப்பா நளினமா இருக்கு :)
நன்றி கீதா மேம் அருமையான விளக்கம்.
பதிலளிநீக்குநன்றி கில்லர்ஜி சகோ
பதிலளிநீக்குநன்றி நிஷா
பதிலளிநீக்குநன்றி நாகேந்திர பாரதி
பதிலளிநீக்குநன்றி கோமதி மேம்
பதிலளிநீக்குநன்றி ரூபன் சகோ
பதிலளிநீக்குநன்றி டிடி சகோ
பதிலளிநீக்குமிக இனிமையான கருத்துக்கு நன்றி பாலா சார் !
பதிலளிநீக்குமிக அருமையான கருத்துக்கு நன்றி தமிழ் இளங்கோ சகோ
பதிலளிநீக்குமிக்க நன்றி ராமலெக்ஷ்மி !
பதிலளிநீக்குமிக்க நன்றி செந்தில்
பதிலளிநீக்குமிக்க நன்றி பகவான் ஜி
பதிலளிநீக்குமிக்க நன்றி வசந்த்
பதிலளிநீக்குமிக்க நன்றி கீத்ஸ் என் தளப்பெயரைக் கொண்டுவந்திட்டீங்களே !
பதிலளிநீக்குசீக்கிரம் வாங்குங்க கீத்ஸ் & துளசி சகோ :)
பதிலளிநீக்குஅப்புறம் எனக்கு மகிழம்பூன்னா ஆஞ்சநேயர்தான் ஞாபகம் வர்றார். அதுல ஒரு கவிதை இருக்கு படிச்சி பாருங்க கீத்ஸ் :)
இன்றைய நாளை நிறைவாக்கிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. ஸ்பெஷல் நன்றி ஸ்ரீராமுக்கும் எங்கள் ப்ளாகுக்கும். :)
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும். !
நன்றி தேனம்மை லக்ஷ்மணன்.
பதிலளிநீக்குநல்லதொரு விமர்சனம். சகோ தேனம்மை அவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
பதிலளிநீக்குநன்றி வெங்கட் சகோ :)
பதிலளிநீக்கு