புதன், 13 செப்டம்பர், 2017

புதன் கி 170913


குடகு  மலைச் சாரலில் குரங்கு ஒன்றைக்  கண்டேன். அருகே சென்று பார்க்க மலை இறங்கிச் சென்றால் ..... அது  படகில்  ஏறி, மதகு  பக்கம் போயிடுச்சு. 


இதுதான் கு கு அனுப்பிய கு புதிர். 
மதகு தவிர மற்றவைகள எல்லோரும் சரியாகச் சொல்லிட்டீங்க. பால கணேஷுக்கு முதல் சரியான விடைக்கு பாராட்டுகள். 



Vaanmadhi madhivaanan said...

தலைப்பில் ஓரெழுத்து விடுபட்டிருக்கிறது என்று சொல்லவேண்டியதும் புதிரில் அடங்குமா?


Anonymous said...

(ஒன்று) குடகு மலைச் சாரலில் (மூன்றைக்)குரங்கு(கைக்) கண்டேன். அருகே சென்று பார்க்க மலை இறங்கிச் சென்றால் ..... அது (இரண்டில்)படகு(கில்) ஏறி, (நான்கு) (கீழேயிருந்து மேலே ) தெற்கு (ஏனிருக்கக் கூடாது?) பக்கம் போயிடுச்சு. 


இது ஆசிரியர் குழுவிலிருந்து யாரோ எழுதியிருக்கிறார்கள் என்று நினைக்கின்றேன். (நான் இல்லை) எனக்கு இரண்டுபேர்கள் மீது சந்தேகம். 



இந்த வாரம் :

வரிசையில் சேராதவர் யார்? ஏன்? 

1.   ஆடு, மாடு, இலை, ஈ 

2.   சிவாஜி, பத்மினி, எம்ஜியார், சந்தானம் 

3.   Chip, selenium, crystal, gem



18 கருத்துகள்:

  1. வெற்றியாளர்களுக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  2. 1) இலை..
    2) சந்தானம்..
    3) Chip - Children's Health Insurance Program (!?..)

    பதிலளிநீக்கு
  3. கில்லர்ஜி- என்ன என்னோட போட்டி போடறீங்களா.... ஜாக்கிரதை :)

    1. இந்த மாதிரி கேள்வில பல பதில்கள் சாத்தியம். வெறும்ன பதில் எழுதாம காரணமும் எழுதணும். (அ) இலை. அதுவா நகராது (ஆ) ஈ. மற்ற எல்லாவற்றையும் மனிதர்கள் சாப்பிட வாய்ப்பு உண்டு (இ) மாடு அ,ஆ, இ, ஈ வரிசைல, அதாவது முதலெழுத்து ஆரம்பத்துல, மாடு இடைல வந்திருக்கு. (ஈ) மாடு. இன்னைக்குத் தேதில, இதை வெட்டினா, உள்ள அனுப்பிருவாங்க. (உ) இலை. இதை வச்சுத்தான் மெயின் கேரக்டரா வச்சு படம் இதுவரை எடுக்கலை. ஆட்டுக்கார அலமேலு, கோமாதா என் குலமாதா, நான் ஈ. இதுபோல தேர்தல் சின்னம் அப்படி இப்படின்னு வித்யாசம் சொல்லிக்கிட்டே போலாம்.

    2. (அ) சந்தானம்-உயிரோடு இருப்பவர் (ஆ) எம்ஜியார்-முதலமைச்சரா ஆனவர், உடம்பு சரியில்லை என்று அமெரிக்க ஆஸ்பத்திரியில் இருந்த ஒரே ஒருவர்-இந்தக் கூட்டத்தில் (இ) பத்மினி-பெண், அமெரிக்காவில் வசித்தவர் (ஈ) சிவாஜி-இது ஒரிஜினல் பெயர் கிடையாது இதுமாதிரி பல வகைகளில் வேறுபடுத்தலாம்.

    3. சிப் - இது இயற்கையாக தயாராவதில்லை. செயற்கையாக வளர்க்கப்படுவது. (இதை ஆங்கிலத்தில் எழுதினால்தான் எல்லோருக்கும் புரியும். நான் சிப் செய்வதற்குத் தேவையான சிலிகான் வளர்த்த கம்பெனியில் வேலைபார்த்திருக்கிறேன்)

    பதிலளிநீக்கு
  4. 1. ஈ (ஆடு,மாடு இலையைத் தின்னும்)
    2. பத்மினி (சிவாஜி,எம்.ஜி.ஆர், சந்தானம் ஆண்கள்)
    3. Selenium - இருக்கலாம்... (இது மட்டுமே கணிப்பொறி தொடர்பானது , Chip என்பது துரை.செல்வராஜூ ஐயா சொன்னது போல் இருந்தால்)

    முதல் முறை முயற்சித்திருக்கிறேன்... பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
  5. ஆடும் மாடும் இலைய தின்பதால் ஒரு கேட்டகிரி.. ஈ கூட்டத்துல சேரல.

    பத்மினி மட்டும் பெண்ங்குறதால அவங்களும் சேரல..

    3வதுக்கு விடை தெரில

    பதிலளிநீக்கு
  6. 1.இலை ஏனென்றால் மற்றவை நெடில், இது மட்டுமே குறில்
    2. சிவாஜி ஏனென்றால் அது அவருக்கு கிடைத்த பட்டப்பெயர். மற்றவர்களுடையது உண்மையான பெயர்.

    பதிலளிநீக்கு
  7. சிப் என்று நினைக்கிறேன். கணினியோடு சம்பந்தப்பட்டது அது மட்டுமே.

    பதிலளிநீக்கு
  8. ஆட்டின் மேலேயும் மாட்டின் மேலேயும் இலையின் மேலேயும் ஈ உட்காருமே! அப்புறமா எப்படிச் சேராமல் போகும்? சரி, ஆடும், மாடும் இலை தின்னும். ஈ தின்னாது! செரியா?

    பத்மினியோட ஜிவாஜியும் எம்ஜாரும் நடிச்சிருக்காங்க. சந்தானத்தோட நடிக்கலை! நல்லவேளைபத்மினி பிழைச்சாங்க! :)

    அடுத்து செலினியம்?

    பதிலளிநீக்கு
  9. இந்தப் புதிர் நிறைய யூகங்கள் விடைகள் கிடைப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கு.

    1. இலை....

    2. சந்தானம்

    3. சிப்...

    கீதா

    பதிலளிநீக்கு
  10. இங்கு பலரது ரீஸனிங்கும் சரியாகத் தோன்றுகிறது....நெல்லையின் பல ரீஸனிங்க் என்று பல சொல்லலாம்....கௌதம் அண்ணா அவருக்குனு தனியா ஒரு விடை வைச்சுருப்பார் அதைக் கொடுத்து எல்லாரையும் ஞே என்று விழிக்க வைப்பார்!!!ஹாஹாஹாஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  11. வாழ்த்துகள்! :)

    முதலாம் கேள்விக்கு என் பதிலாக ஒரு யோசனை! ஈ ஆக இருக்கலாம்! மற்ற மூன்றும் இரண்டு எழுத்துகள், ஈ மட்டும் ஓரெழுத்து!

    த.ம. ஆறாம் வாக்கு!

    பதிலளிநீக்கு
  12. //இது ஆசிரியர் குழுவிலிருந்து யாரோ எழுதியிருக்கிறார்கள் என்று நினைக்கின்றேன்// இல்லை.
    ஆகஸ்ட் 23ந் தேதி புதிருக்கும் பதில் எழுதினேன் - சரியான பதில் வெளியிடப்படவில்லை. :-))
    இந்த வாரப் புதிருக்கு ஒவ்வொரு கேள்விக்கும் நாலு பதில் தரலாம்.

    பதிலளிநீக்கு
  13. 3 ஆவது பிளஸ் வோட் என்னோடதாக்கும்:) தெளிவாச் சொல்லிடோணும்:).

    பதிலளிநீக்கு

  14. // நெல்லைத் தமிழன் said.. // Perfect points sir. I do feel the same for all the questions here.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!