மீண்டும் ‘புதன் புதிர்’ கேள்விகளோடு வந்திருக்கிறேன். கௌதமன் சார் கேட்பதுபோல், நம்பர்களை வைத்துக் கேட்கவில்லை. சினிமா, ஓவியம் ஆகிய இரண்டை எடுத்துக்கொண்டிருக்கிறேன். சுலபம்தான்.
தெரியவில்லை என்றால், தெரிந்திராத ஒன்றைத் தெரிந்துகொண்ட திருப்தி கிடைக்கும். இதற்கான விடைகள் நாளை மாலைக்குள் இங்கேயே சொல்லுகிறேன். வாழ்த்துக்கள்.
1. ரொம்ப சுலபமான கேள்வி இது. ஓவியர்களின் பெயரைச் சொல்லுங்கள். பத்து (அல்லது அதற்குக் குறைவான) ஓவியர்கள். இதில் எட்டாவது, பிரபல நகைச்சுவை எழுத்தாளர் திரு.பி.எஸ்.ரங்கனாதன் (கடுகு, அவர் தளம் https://kadugu-agasthian. blogspot.com) அவர்களுக்காக ஓவியர் வரைந்த லோகோ (அவர் கதைகளுக்கும் இந்த ஓவியர் படங்கள் வரைந்திருக்கிறார்).
.2. இந்தப் படங்கள் எந்த ஆசிரியரின்(ஆசிரியர்களின்) நாவல்/கதைகளுக்கு வரையப்பட்டவை? ஒவ்வொன்றும் வேறு வேறு தொடராகவோ, கதையாகவோ இருக்கலாம். ஒவ்வொரு படத்துக்கும் ஓவியர் யாரென்று சொல்லமுடிந்தால், நீங்கள் கில்லாடிதான்.
3. சினிமா நிறைய பார்த்து சினிமாச் செய்திகளைப் படித்த அனுபவம் உள்ளவர்களுக்கான கேள்வி இது. இருவரும் இந்தியாவின் ஒரு மானிலத்தில் முதலமைச்சராக இருந்திருக்கின்றனர். அந்த முதலமைச்சர், மற்ற முதலமைச்சரை முதன் முதலில் சந்தித்து காதல் கொண்டது எந்தப் படத்தில்? ‘நீங்கள் நினைக்கும் பதில் தவறாக இருக்கக்கூடும், இருவரும் தமிழர் அல்லர். அவர்கள் காதல் நிறைவேறியது என்பதுதான் க்ளூ. (ஸ்ரீராம்-இது அரசியல் கேள்வியில்லையே? அவருக்கு அரசியல்னாலே அலர்ஜி). இதுக்கு இன்னொரு க்ளூவும் வேணும் என்பவர்களுக்காக கீழே ஒரு படம்.
4. (அ) “நான் கூறப்போவது ஒரு புதுமையான காதல் நவீனம். மற்ற காதல் கதைகளோடு இதை ஒப்பிடமுடியாது. இது ஒரு தனித்தன்மை வாய்ந்த கதை. இதில் வரும் கதாநாயகிக்கு கிட்டத்தட்ட நாற்பத்தெட்டு வயதாகிறது. கதாநாயகருக்கு அவளைக் காட்டிலும் ஏழெட்டு வயது கூட இருக்கும். ஒருவரை ஒருவர் அந்தரங்கமாக நேசிக்கிறார்கள். அதன் விளைவாக மனப்போராட்டங்களுக்கும் கொந்தளிப்புகளுக்கும் ஆளாகிறார்கள். இறுதியில் கதாநாயகி இறந்துவிடுகிறாள். அவர்களிடையே தோன்றும் உணர்வு-அதைக் காதல் என்றும் சொல்லலாம்-அமரத்துவம் பெற்றுவிடுகிறது” – இந்த முன்னுரையைச் சொன்னது சேவற்கொடியோன். அதைவைத்து கதாசிரியர் கதையை ஒரு பத்திரிகையில் எழுதினார்.
கேள்வி: சொன்னது யார், என்ன நாவல்?. எந்தப் பத்திரிகை?, எழுதியது யார்?
5. இந்தப் படம், அந்தச் செய்தியின்போது வெளிவந்து அதிர்வலைகளை ஏற்படுத்தியது. என்ன படம், என்ன செய்தி?
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------
புத்தம் புதிய காலை.. புதன் கிழமை வழக்கம் போல புதிருடன் மலர்ந்துள்ளது.. வாழ்க நலம்
பதிலளிநீக்குவாஷிங்க்டனில் திருமணம் சாவி அவர்களின் புகழ்பெற்ற கதையின் படங்கள். கோபுலு சார் ஓவியம்.
பதிலளிநீக்கு3) MGR அவர்களும் VN ஜானகி அவர்களும் (மருதநாட்டு இளவரசி)..
பதிலளிநீக்குமூன்றாவது எம்.ஜி ராமசந்திரன் அவர்கள்., ஜானகி அம்மாள் அவர்கள் பாட்ம் ராஜகுமாரி என்று நினைக்கிறேன்.
பதிலளிநீக்கு1) திரு. கோபுலு,GK மணி, ஜெ.. ஆகியோரின் கைவண்ணம் புலப்படுகின்றது..
பதிலளிநீக்கு5 வது படம் இந்தி படம் போல் தெரிகிறது, அமிதாபச்சன் என்று நினைக்கிறேன்.
பதிலளிநீக்குஅருமை
பதிலளிநீக்குதம +1
k. சாண்டில்யன் அவர்கள் கதை. i. கருணாநிதி அவர்கள் கதை.
பதிலளிநீக்குமருதநாட்டு இளவரசிதான் சரி. சகோ துரை செல்வராஜூ அவர்கள் சொன்னது சரி என்று நினைக்கிறேன்.
பதிலளிநீக்குமூன்றாவது கேள்வியின் விடையை சொல்ல வந்தேன் அன்பின் ஜி திரு. துரை செல்வராஜூ அவர்கள் சொன்னதால் போட்டியிலிருந்து விலகி கொள்கிறேன் பரிசு பெறாமல்...
பதிலளிநீக்குg. கூடைக்காரி ஓவியம் ஓவியர் ராமு அவர்கள்.
பதிலளிநீக்கு//தெரியவில்லை என்றால், தெரிந்திராத ஒன்றைத் தெரிந்துகொண்ட திருப்தி கிடைக்கும்.//
பதிலளிநீக்குஉண்மை.
k. சாண்டில்யன் அவர்கள் கதைக்கு ஓவியர் லதா. i. கருணாநிதி அவர்கள் கதைக்கு வரைந்தவர் ஓவியர் ஜெயராஜ்
பதிலளிநீக்குஅன்னை தெரசாபடம் ஓவியர் அரஸ் என்று நினைக்கிறேன்.
பதிலளிநீக்குa)கோபுலு c)ஜெ.. d)GK மணி f) மதன் g) ராமு
பதிலளிநீக்குi)மாயா j)லதா k)லதா l) ஜெ.. (என்னா ஒரு அக்குறும்பு)
Artist
பதிலளிநீக்குd) Ramu
k) Maruthi
எங்கள் பிளாக் ஸ்ரீராம் - வெளியிட்டமைக்கு நன்றி.
பதிலளிநீக்குஎல்லோரும் விடை எழுதும்போது, எந்தக் கேள்வி, அதில் எந்தப் பகுதி என்று குறிப்பிடும்படி வேண்டுகிறேன். கேள்வி 1, என்று எழுதி ஓவியர்களின் பெயரைச் சொன்னால் அது a, b, c... எந்த ஓவியத்துக்கு என்று சரியாகக் குறிப்பிடவேண்டும். இதேபோல்தான் மற்ற கேள்விகளுக்கும். நன்றி.
கேஜி கௌதமன் அவர்கள் இதில் பங்குகொள்வார்கள் என்றும் நம்புகிறேன் (எங்களை புதிர் போட்டு வதைச்சீங்க இல்ல.. இப்ப மாட்டிக்குங்க என்று யாரோ/இல்லை எல்லாருமோ மனதில் நினைப்பது எனக்குக் கேட்கிறது. இது எதனால் என்று மருத்துவரிடம்தான் கேட்கணும்)
5) 'Coolie' Movie. Amitabh got severely injured and it was tough to recover from it. But, he made it.
பதிலளிநீக்குஹையோ ராமா அதிகாலையில் எழும்பி இப்பூடி அவதிப்பட வைக்கிறியே முருகா.... ஹா ஹா ஹா இந்தக் கேள்விகள் அனைத்துக்கும் எனக்குத் தெரிந்த ஒரே விடை.... நேக்கு விடைகள் தெரியாது என்பதே.:)...
பதிலளிநீக்குதமனாக்காவுக்கு மை குத்திட்டேன்... எஸ்கேப்ப்ப்ப்ப்:).
வழக்கம் போல புதிர் போட்டியில் கலப்பதில்லை! த ம 9
பதிலளிநீக்கு1) கோபுலு, நடனம் (கடுகை வரைந்தவர்), ராமு, லதா, ஜெயராஜ்.
பதிலளிநீக்கு2) ஏயும் பியும் தெரியவில்லை. சி சாவியின் கேரக்டர் தொடருக்கு கோபுலு கைவண்ணம். டி வாஷிங்டனில் திருமணம் தொடருக்கு கோபுலுவின் கை வண்ணம்.
3) வாத்யாரும் விஎன் ஜானகியும்னு சரியான விடை ஏற்கனவே வந்தாச்சு.
4) இந்தக் கதைக் கருவைச் சொன்ன சேவற்கொடியோன் விகடன் ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியம். எழுதினவர் யாரு..? திங்க்கிங்...
5) கூலி பட ஷுட்டிங் ஸ்டில்னு நெனக்கறேன். அமிதாப் ஸ்டண்ட் சீன்ல செமையா அடிபட்டு ட்ரீட்மெண்டுக்கானப் போன செய்திதான அது..?
பாலகணேஷ்- என்ன..இன்று லேட்டாகிறதே என்று நினைத்தேன். a, b, c என்று முதல் கேள்விக்குக் குறிப்பிடுங்கள்.
பதிலளிநீக்குஇன்னொன்று பாலகணேஷ், (3)-சரியான விடை வந்தாச்சா? வந்தமாதிரி தெரியலையே. (2)-சரியாத்தான் சொல்லியிருக்கீங்களா?
பதிலளிநீக்கு4 அ ..முன்னாள் முதல்வர்கள் எம் ஜி ஆரும் அவர் மனைவி ஜானகி அம்மாவும் .இது ஜானகி அவர்களுக்கு செகண்ட் கல்யாணம்
பதிலளிநீக்குஇருவரும் சேர நன்னாட்டை சேர்ந்தவங்க
2,வாஷிங்க்டனில் திருமணம்
பதிலளிநீக்குத.ம.10
பதிலளிநீக்கு3. எ ம் ஜி ஆர் ஜானகி.....மோகினி
பதிலளிநீக்கு2. வாஷிங்டனில் திருமணம்- சாவி.....நான் ரசித்து வாசித்து சிரித்த தொடர்...
கீதா
கீதா ரங்கன், ஏஞ்சலின், கோமதி அரசு மேடம், துரை செல்வராஜு சார்.....
பதிலளிநீக்குஅந்த அந்தப் பகுதியைக் குறிப்பிட்டு உங்கள் பதிலைச் சொல்லுங்கள். உதாரணமாக கீதா ரங்கன் அவர்களும் ஏஞ்சலின் அவர்களும் வாஷிங்டனில் திருமணம் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். அது சரியோ தவறோ, அது அந்த 4 படங்களுக்கும் பொருந்துமா என்று சொல்லவேண்டுகிறேன். அல்லது முதல் படம், இரண்டாவது படம் என்று குறிப்பிடுங்கள். நான் a, b, c d என்று கொடுத்திருக்கிறேனே. நன்றி.
நெல்லை 3 என்பது மூன்றாவது கேள்விக்கான விடை...
பதிலளிநீக்குஓ புரிந்தது 2 வது கேள்வி படங்கள் ....நெட் இல்லாததால் மொபைலில் பார்த்ததால் சரியாகத் தெரியலை. இப்பதான் கணினியில் பார்க்கிறேன்...
இதோ வருகிறேன்....என் செல்லம்ஃப்ரௌனிக்கு இன்று காலில் ஃப்ராக்சர் சர்ஜரி...போய்விட்டு வந்து பதில்....ஏற்கனவெ அதற்கு பப்பியாக இருந்த போது இடுப்பில் வண்டி மோதி ஏற்கனவே இடுப்பு எலும்பு சரியாக இல்லாததால் ஒரு கால் நொண்டி நடப்பாள் அந்தக் காலில் எலும்பு ப்ரிட்டில் ஸோ உடைந்துவிட்டது....சர்ஜரி....போய்விட்டு வருகிறேன் இரவு பதில்...
கீதா
மிகவும் நன்று
பதிலளிநீக்கு2 A ..வாஷிங்டனில் திருமணம்
பதிலளிநீக்கு@Geethaa ...please give my love to her ..get well soon brownie
பதிலளிநீக்குசேவற்கொடியோன் சொன்னதை வைச்சுக் கதை எழுதியவர் எழுத்தாளர் சாவினு நினைக்கிறேன் கதை விசிறி வாழை! விகடனிலேயே வந்ததாக நினைவு.
பதிலளிநீக்கு5 கூலி படம், அமிதாப் பயங்கரமாக அடிபட்டுப் பல மாதங்கள் ஆஸ்பத்திரியில் இருந்தார். இந்தியா மட்டுமில்லாமல் உலக அளவிலான அவர் ரசிகர்கள் பிரார்த்தனை செய்தனர்.
பதிலளிநீக்கு3 எல்லோரும் சொல்றாப்போல் எம்ஜிஆர், விஎன் ஜானகி! வி என் ஜானகி பாபநாசம் சிவன் அவர்களுக்குச் சொந்தம்னு சொல்வாங்க. அவங்க அப்போத் தமிழர் தானே? குழப்பம்!!!!!!!!!!!
பதிலளிநீக்கு1. a. gopulu, b. nadanam c. theriyalai d. maruthu e. Jeyaraj, F.Madan g. did not coming out, But I know that artist! :( h. thanu? f. gopulu again i.varnam, j.latha, k. jeyaraj again
பதிலளிநீக்கு2. a.sridhar? b.Maya, c. gopulu, it was drawn for Chavi's Article about characters. He wrote about some idli kadai aya! that is the Aya, named ammakannu or so! last one by Gopulu in Washingtanil thirumanam. Loritta tryting half sari and her parents were admiring her and appreciating her.
பதிலளிநீக்குMy poor attempt ad seriatim :
பதிலளிநீக்கு1. a) தெரியவில்லை b) கோபுலு c) & d) : ஜெயராஜ் e) & f) வாணி g) ராமு h) கோபுலு i)வர்ணம் j) & k) : லதா l) ஜெயராஜ்.
2. a) & d) நாவல்: வாஷிங்டனில் திருமணம், ஆசிரியர் சாவி. ஓவியர் கோபுலு.
b) & c) : தெரியாது.
3. மற்றவர்களிடமிருந்து அறிந்தது: எம்.ஜி.ஆர், வி.என்.ஜானகி. எந்தப்படம் – தெரியாது
எம்ஜிஆர்- கேரளா வி.என்.ஜானகி- ஆந்திரப்பிரதேசமாக இருக்கலாம்.( வேறென்ன அருணாச்சல் ப்ரதேஷிலிருந்தா வந்திருக்க முடியும்) ஆனால் அவர்கள் நடிக்க ஆரம்பித்த காலத்தில் சென்னை மாகாணம் மட்டுமே இருந்தது. ஆந்திரா, கேரளா, கர்னாடகா என்றெல்லாம் பிறக்கவேயில்லை!
4. சேவற்கொடியோன், காக்கைக் கொடியோன் என்றெல்லாம் கேள்விப்பட்டதுமில்லை.
5. எல்லோரும் கணித்தது. அமிதாப் பச்சன். ஸ்டண்ட் ஷூட்டிங் போது வயிற்றில் பலத்த அடிபட்டு மாசக்கணக்கில் ஆஸ்பத்திரியில் கிடந்து நாடே பிரார்த்தித்த கதை. படம்: கூலி. படத்தில் அமிதாப் பச்சன். வில்லன் புனீத் இஸ்ஸார்.
@ Thulasidharan V Thillaiakathu : ஃப்ரௌனிக்கு ஏன் இப்படி சோதனை மேல் சோதனை? சர்ஜரி சரியாக நடந்ததா? எத்தனை நாளாகும் குணமாக?
பதிலளிநீக்கு1.
பதிலளிநீக்குa) கோபுலு b) நடனம் c) ஜெயராஜ் d) மணியம் செல்வன் e) ஸாரதி f) ஸ்ரீதர் g) ராமு
(h) ஸாரதி i) கோபுலு j) லதா k) லதா l) ஜெயராஜ்
3)
பதிலளிநீக்குஎம்.ஜி.ஆர் -- வி.என்.ஜானகி
3) எம்.ஜி.ஆர்-- வி.என். ஜானகி சேர்ந்து நடித்த முதல் படம்: மோகினி
பதிலளிநீக்குஆனால் கேள்விக்கான பதில்: மருதநாட்டு இளவரசி
4)
பதிலளிநீக்குசொன்னது: விகடன் எஸ். பாலசுப்ரமணியன்
என்ன நாவல்? : விசிறி வாழை
எந்தப் பத்திரிகை: ஆனந்த விகடன்
எழுதியது: சாவி
2.
பதிலளிநீக்குa) ஓவியர்: மாயா
b) மடிசார் மாமி -- ஸ்ரீதர்
c) ஓவியர் கோபுலு
d) வாஷிங்டனில் திருமணம் -- கோபுலு
1. k. சாண்டில்யன் அவர்கள் கதைக்கு ஓவியர் லதா. l. கருணாநிதி அவர்கள் கதைக்கு வரைந்தவர் ஓவியர் ஜெயராஜ்
பதிலளிநீக்குi கோபுலூ , j. லதா
2. டி. வாஷிங்டனில் திருமணம் சாவி அவர்களின் புகழ்பெற்ற கதையின் படங்கள். கோபுலு சார்
ஓவியம்.
ஏ.பி, சி, டி எல்லா படமும் கோபுலு சார் தான்.
g. கூடைக்காரி ஓவியம் ஓவியர் ராமு அவர்கள்.
d. அன்னை தெரசாபடம் ஓவியர் அரஸ் என்று நினைக்கிறேன்.
3.மூன்றாவது எம்.ஜி ராமசந்திரன் அவர்கள்., ஜானகி அம்மாள் அவர்கள்
4. தெரியவில்லை.
5.5 வது படம் இந்தி படம் போல் தெரிகிறது, அமிதாபச்சன் என்று நினைக்கிறேன்.
உங்க பதிலுக்கு காத்திருக்கிறேன் ஓவியத்தில் 2,3 தான் தெரிந்தது கீழே அமிதாப் ....சோலே படமா
பதிலளிநீக்குகலந்துகொண்டு விடையளித்த, முயற்சித்த, கருத்து எழுதிய அனைவருக்கும் நன்றி. சிலரைப் பார்க்க இயலவில்லை.
பதிலளிநீக்குஇந்த வாரம் சுலபமான கேள்விகள்தான். இருந்தாலும் அந்த அந்த எண்ணைக் குறிப்பிட்டு விடையளிக்கவில்லை என்றால், எந்தப் படத்திற்கு இவர்கள் விடையளித்தார்கள் என்பது தெரியாமல் போய்விடும். மிடில் கிளாஸ் மாதவி சென்ற வாரம் சொன்னதுபோல் கூகிளாண்டவர் துணையைத் தேடியிருக்கலாம். இருந்தாலும் முயற்சிதான் முக்கியம் என்று நான் நினைக்கிறேன்.
அனைவருக்கும் பாராட்டுகள்.
வருகைக்கு நன்றி
பதிலளிநீக்குதுரை செல்வராஜு சார் (ஜெ. படம் அக்குறும்பு.... சார் நீங்கள் உங்கள் இடுகையில் வெளியிட்ட ஓவியர் மாருதி வரைந்திருந்த படம், வெறும் முகம் மட்டுமேயானாலும் என் மனதில் இருக்கிறது. ஜெ. எப்போதும் வாசகர் எதைப் பார்ப்பார்களோ அதை நிறைவாக வரைவார் அல்லவா?)
நன்றி கோமதி அரசு மேடம் (சாரின் உதவியைப் பெறவில்லையே?)
நன்றி கரந்தை ஜெயக்குமார் சார்
நன்றி கில்லர்ஜி. (உறவைச் சொல்லி எல்லோருக்கும் தலையைச் சுற்றச் செய்தவரல்லவா நீங்கள்)
நன்றி மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன்.
நன்றி அதிரா. முயற்சித்திருக்கலாமல்லவா?
நன்றி புலவர் இராமானுசம் ஐயா
நன்றி பாலகணேஷ் (கட கட வென்று நிறைய விடைகளைச் சொன்னதற்கு)
நன்றி ஏஞ்சலின்
நன்றி தமிழ் இளங்கோ சார்
நன்றி தில்லையகத்து கீதா ரங்கன் (பிரௌனி நலமா?)
நன்றி அசோகன் குப்புசாமி
நன்றி கீதா சாம்பசிவம் மேடம் (இப்படி கட கடவென விடைகளைச் சொல்லி, நிஜமாகவே 'ஏற்கனவே படித்திருக்கிறேன்' என்பதை மெய்ப்பித்துவிட்டீர்கள்)
நன்றி ஏகாந்தன் (நல்ல முயற்சி. நிறைய விடைகளைச் சொல்லியிருக்கிறீர்கள்)
நன்றி ஜீவி சார் (நிறைய விடைகளைச் சொல்லியிருக்கிறீர்கள்)
நன்றி பூவிழி
நன்றி மீள்வருகை புரிந்து விடையைச் சொல்ல முயற்சித்த அனைவருக்கும்.
கேள்வி 3 - இரண்டு முதலமைச்சர்களைப் பற்றியது. இருவரும் பிறப்பால் தமிழர் அல்லர். எம்ஜி ராமசந்திர மேனன், ஜானகி அம்மையார் (ஜானகி அவர்கள் நாயர் வகுப்பைச் சேர்ந்தவர்) - இங்கு ஜாதி குறிப்பிடுவதன் காரணம் வெறும் புரிதலுக்காகத்தான். நாயர், மேனன், நம்பியார் (எம்.என். நம்பியாரை ஞாபகம் இருக்கிறதா) மூன்றும் ஒரே வகுப்புதான். ஜானகி அவர்கள் அம்மா நாராயணி அம்மையார் (நாயர்). நாராயணி அம்மையாரின் இரண்டாவது கணவர் பாபனாசம் ராஜகோபாலய்யர். இவர் பாபனாசம் சிவன் (பாடகர், பல்கலை வித்தகர்) அவர்களின் சொந்தச் சகோதரன். ஜானகி அவர்களுக்கு நடிக்கவேண்டும் என்ற பேரார்வம். அவருக்கு கார்டியன் என்று சொல்லப்படுபவர் அவரது முதல் கணவரா என்பது இப்போது எனக்கு ஞாபகம் இல்லை. ஆனால் அவர்தான் மேனேஜர் போல் செயல்பட்டு, ஜானகி அவர்கள் சார்பாக எல்லா கான்டிராக்டுகளிலும் கையெழுத்திட்டு, பெரும்பாலான பணத்தைத் தனதாக்கிக்கொண்டவர் (ஜானகி அவர்களுக்குச் சேராமல்)
பதிலளிநீக்கு1941ல் தொடங்கிய 'மோகினி' என்ற படத்தில்தான் ஜானகி அவர்களும் எம்ஜியார் அவர்களும் சேர்ந்து நடித்தனர். ஜானகியின் வசீகரத்தில் மயங்கிய எம்ஜியார் ரொம்ப நாள் காத்திருந்தபிறகுதான் அந்தப் படத்தில் இருவரும் சேர்ந்து பேசும்/நடிக்கும் சீன் எடுக்கப்பட்டது. கார்டியன்/அடியாள் பாதுகாப்பையும் மீறி இந்தச் சமயத்தில்தான் எம்ஜியார் ஜானகியிடம் தன் காதலைச் சொன்னார். இந்தக் காதல் பலவகைகளிலும் வளர்ந்து 1950ல் எம்ஜியார் கதாநாயகனாக நடித்த 'மருத நாட்டு இளவரசி' என்ற படத்தில் நாயகி வி.என்.ஜானகி என்று முடிவானது. விஷயத்தை அறிந்திருந்த கருணானிதி அவர்கள், காதல் காட்சிக்கான வசனங்களைச் சிறப்பாக அமைத்தார். இதற்கு முன்பாகவே ஜானகி அவர்கள் கதானாயகியாக நடித்த 'ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி' படம் பெரிய வெற்றியும் ரசிகர்களின் பாராட்டுதலையும் பெற்றிருந்தது. திருமணம் ஆன சமயத்தில் ஜானகி அவர்கள் புகழ் வாய்ந்தவர், எம்ஜியார் அவர்கள் அப்போதுதான் புகழ் ஏணியில் ஏற ஆரம்பித்திருந்தார்.
கடைசியில் இருவரின் காதலும் நிறைவேறி, ஜானகி அவர்களை எம்ஜியார் அவர்கள் திருமணம் செய்துகொண்டார். இதில் குறிப்பிடத்தக்க விஷயம், ஜானகி அவர்கள் எம்ஜியாருக்கு மூன்றாவது மனைவி. இரண்டாவது மனைவி உயிருடன் இருக்கும்போதே இந்தத் திருமணம் நடந்தது, ஒரு வருடத்துக்கு மேல், ஜானகி, சதானந்தவதி மற்றும் எம்ஜியார் ஒரே வீட்டில் வசித்தார்கள் (திருமணத்துக்கு எஸ்.எஸ்.வாசன் அவர்களும் உறுதுணையாக நின்றார் என்பது ஆச்சர்யம். எஸ்.எஸ்.வாசன் அவர்கள் கோடீஸ்வரர், பெரும் பட அதிபர். எம்ஜியார் அவர்கள் சாதாரண நடிகர் அப்போது. ஜானகிக்காக எஸ்.எஸ்.வாசன் அவர்கள் கோர்ட்டில் சாட்சி சொல்ல முன்வந்தார் என்பதைப் படித்தபோது எஸ்.எஸ்.வாசன் அவர்களின் மாண்பை நினைத்து புல்லரித்தது. மேலோர் என்றும் மேலோர்தான். வாசன், ஏவியெம், நாகிரெட்டி போன்ற பலர் மாண்புடைய பெரியோர்.
விடை: எம்ஜியார், ஜானகி, படம் 'மோகினி'. எம்ஜியார் இலங்கையில் பிறந்தவர், பிறப்பால் மலையாளி, ஜானகி கேரளத்தில் பிறந்தவர், மலையாளி.
துரை செல்வராஜு சார், கோமதி அரசு மேடம், கில்லர்ஜி, பாலகணேஷ், ஏஞ்சலின், தில்லையகத்து கீதா ரங்கன், கீதா சாம்பசிவம் மேடம், ஜீவி சார் ஆகியோர் விடை சொல்ல முயற்சித்திருக்கின்றனர். பாராட்டுகள்.
கீதா ரங்கனும், ஜீவி சாரும் சரியான விடை சொல்லியிருந்தாலும், ஜீவி சார் 'மருத நாட்டு இளவரசி' என்பது பதில் என்று சொல்லியதால், கீதா ரங்கன் சரியான விடை சொல்லியிருக்கிறார் என்று தீர்மானிக்கிறேன். பாராட்டுகள் கீதா ரங்கன்.
மிக்க நன்றி.
யப்பாடி! எவ்வளவு ஆராய்ச்சி! பெரும்பாலும் இந்தக் கிசுகிசுக்களை எல்லாம் நான் படிச்சது இல்லை. அதே போல் சினிமாப் பத்திரிகைகளையும். அதிலும் பேசும்படம்னு ஒண்ணு வந்துட்டு இருந்தது. அதுவும், பொம்மைனு ஒரு பத்திரிகை, குமுதம் இவை எல்லாத்துக்கும் எங்க வீட்டில் நிரந்தரத் தடை. குமுதம் தொடர்ந்து படிக்க ஆரம்பிக்கையில் எனக்கு முதல் குழந்தை பிறந்து இரண்டாம் குழந்தையும் வயிற்றில் வந்து விட்டது! :)))) ஆகவே இந்த விஷயத்தில் எல்லாம் எனக்கு மதிப்பெண்கள் கிடைப்பது கஷ்டம்! அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கொஞ்சம் கொஞ்சம் தெரிந்து வைச்சிருக்கேன். அம்புடுதேன்! :))))
பதிலளிநீக்குகேள்வி 4 - “நான் கூறப்போவது ஒரு புதுமையான காதல் நவீனம். மற்ற காதல் கதைகளோடு இதை ஒப்பிடமுடியாது. இது ஒரு தனித்தன்மை வாய்ந்த கதை. இதில் வரும் கதாநாயகிக்கு கிட்டத்தட்ட நாற்பத்தெட்டு வயதாகிறது. கதாநாயகருக்கு அவளைக் காட்டிலும் ஏழெட்டு வயது கூட இருக்கும். ஒருவரை ஒருவர் அந்தரங்கமாக நேசிக்கிறார்கள். அதன் விளைவாக மனப்போராட்டங்களுக்கும் கொந்தளிப்புகளுக்கும் ஆளாகிறார்கள். இறுதியில் கதாநாயகி இறந்துவிடுகிறாள். அவர்களிடையே தோன்றும் உணர்வு-அதைக் காதல் என்றும் சொல்லலாம்-அமரத்துவம் பெற்றுவிடுகிறது” – இந்த முன்னுரையைச் சொன்னது சேவற்கொடியோன். அதைவைத்து கதாசிரியர் கதையை ஒரு பத்திரிகையில் எழுதினார்.
பதிலளிநீக்குகேள்வி: சொன்னது யார், என்ன நாவல்?. எந்தப் பத்திரிகை?, எழுதியது யார்?
சேவற்கொடியோன் என்பது விகடன் ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியம் அவர்களின் புனைப்பெயர்களில் ஒன்று. அவர், சாவி அவர்களிடம் இந்த முன்னுரையைச் சொன்னதும், சாவி அவர்கள், 'காதற்பருவத்தைக் கடந்தவர்களின் காதலை எழுத மிகுந்த ஆற்றலும் அனுபவமும் வேண்டும்' என்று சொன்னார்கள்.
அதற்கு பாலசுப்ரமணியம் அவர்கள், 'இதை நான் எழுதுவதாக உத்தேசமில்லை. அதற்கு வேண்டிய ஆற்றலோ அனுபவமோ எனக்குக் கிடையாது. நீங்களோ அல்லது ஜெயகாந்தன் அவர்களோதான் இதனை எழுத வேண்டும்' என்று தன்னடக்கத்தோடு சொன்னார். கதையின் புதுமை, கவர்ச்சி காரணமாக சாவி அவர்கள் இந்தக் கதையை எழுத முனைந்தார். ஆனால், வாசகர்கள் இதனை 'நகைச்சுவைக் கதை' என்று நினைத்துவிடக்கூடாது என்பதால், கதை ஆரம்பத்திலேயே, இந்தக் கதையைப் படித்து யாராவது ஒருவர் ஒரு சொட்டுக் கண்ணீர் விட்டாலும் அது என் எழுத்துக்குக் கிடைத்த பரிசு என்று சொல்லிவிட்டே சாவி அவர்கள் எழுத ஆரம்பித்தார். தான் எழுதப்போகிறேன் என்று சொன்னவுடனேயே, தலைப்பு 'விசிறி வாழை' என்று சொல்லிவிட்டார்.
கதைத் தலைப்பின் காரணம்... விசிறி வாழை அழகாக இருக்கும், வீட்டின் தோட்டத்தில் அலங்காரமாகவும் இருக்கும். ஆனால் அதனால் ஒரு பிரயோசனமும் இல்லை. அதுபோல் இவர்களுக்கு ஏற்படுகிற காதலினால் பிரயோசனம் கிட்டாது என்றும் சொன்னார். தலைப்பும் காரணமும் ஆசிரியர் எஸ். பாலசுப்ரமணியம் அவர்களைக் கவர்ந்ததில் ஆச்சர்யம் என்ன இருக்கிறது?
இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல முயற்சித்தவர்கள் பாலகணேஷ், கீதா சாம்பசிவம் மேடம் மற்றும் ஜீவி சார். பாலகணேஷ் யார் 'சேவற்கொடியோன்' என்பதை மட்டும் கண்டுபிடித்தார். கீதா சாம்பசிவம் மேடம் யார் 'சேவற்கொடியோன்' என்று மட்டும் எழுதவில்லை (ஒருவேளை ஏற்கனவே இன்னொருவர் எழுதிவிட்டார் என்பதாலா என்பது தெரியவில்லை). இருவருக்கும் பாராட்டுக்கள். ஜீவி சார் எல்லாக் கேள்விகளுக்கும் சரியான பதில் சொன்னார். நல்ல வாசிப்பனுபவம். வாழ்த்துக்கள்.
கேள்வி 5 - இந்தப் படம், அந்தச் செய்தியின்போது வெளிவந்து அதிர்வலைகளை ஏற்படுத்தியது. என்ன படம், என்ன செய்தி?
பதிலளிநீக்குஇந்தியாவின் நான்கு அதிசயங்களாக ஆங்கில சினிமாப் பத்திரிகை எழுதியது, தாஜ்மகால், பிரதமர் இந்திரா, சத்யஜித்ரே மற்றும் ஆறடி இரண்டு அங்குல உயரமுள்ள இந்தியாவின் அப்போதைய சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் அவர்கள்.
இந்தித் தயாரிப்பாளர் மன்மோகன் தேசாயின் 'கூலி'-(1982) படத்தின் அமிதாப்-வில்லன் சண்டைக் காட்சிகளின்போது, குட்டி வில்லன் புனித் இஸ்ஸார்மீது அமிதாப் ஒரு அடி கொடுக்க, புனித் திரும்ப அடிக்கும்போது அமிதாப் தன் வயிற்றைப் பிடித்துக்கொண்டு குப்புற விழ வேண்டும். அடி வாங்கிய அமிதாப் அருகில் இருந்த ஸ்டீல் மேசைமீது விழுந்து, பிறகு எழுந்து கீழே துடிதுடித்துச் சாய்ந்தார். அதற்கப்புறம் 'ப்ரீச் காண்டி' ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, ஏகப்பட்ட பிரச்சனைகளுக்குப் பின், கடவுள் அருளால் உயிர் பிழைத்தார்.
அப்போது அவருக்கு இருந்த அரசியல் செல்வாக்கு காரணமாக, அந்த ஹாஸ்பிடலில் மனைவி ஜெயபாதுரி, அன்னை, சகோதரர் ஆகியோர் தங்குவதற்கும் வழக்கத்துக்கு மாறாக ஒரு அறை ஒதுக்கப்பட்டது. தன் அமெரிக்கச் சுற்றுப் பயணத்தை 'கட் ஷார்ட்' செய்து அமிதாப்பை வந்துபார்த்தார் ராஜீவ் காந்தி. பிரதமர் இந்திராவும் அமெரிக்காவிலிருந்து திரும்பியபின் அமிதாப்பை வந்து பார்த்தார் என்பது கூடுதல் செய்தி. அமிதாப்பின் அப்பா காலத்திலிருந்தே அவர்கள் நேரு குடும்பத்தின் நண்பர்கள்.
கோமதி அரசு மேடம், மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன், பாலகணேஷ், ஏகாந்தன், கீதா சாம்பசிவம் மேடம் ஆகியோர் முயற்சித்திருக்கின்றனர். பாராட்டுகள். படத்தையும் நடிகரையும் சம்பவத்தையும் சரியாகச் சொன்ன மாதவன், பாலகணேஷ், ஏகாந்தன், கீதா சாம்பசிவம் மேடம் ஆகியோர் வெற்றி பெற்றவர்கள். வாழ்த்துக்கள்.
சேவற்கொடியோன் தான அப்போதைய விகடன் ஆசிரியர் என்பது தெரிந்தது தானே? அதுவும் ஒரு கேள்வியாக இருந்ததை இப்போத் தான் கவனிக்கிறேன். கவனிச்சிருந்தால் சொல்லி இருப்பேன்! அவர் எழுதிய நாவல்கள் உன் கண்ணில் நீர் வழிந்தால், என் கண்ணில் பாவையன்றோ ஆகியவற்றை இன்றும் மறக்க முடியாது. இரண்டாவது நாவல் திரைப்படமாகக் கூட வந்திருக்குனு நினைக்கிறேன், வழக்கம்போல் ஒரு சில மாற்றங்களுடன். :) கல்பனா கதாநாயகியோ?
பதிலளிநீக்குகேள்வி 2 - இந்தப் படங்கள் எந்த ஆசிரியரின்(ஆசிரியர்களின்) நாவல்/கதைகளுக்கு வரையப்பட்டவை? ஒவ்வொன்றும் வேறு வேறு தொடராகவோ, கதையாகவோ இருக்கலாம். ஒவ்வொரு படத்துக்கும் ஓவியர் யாரென்று சொல்லமுடிந்தால், நீங்கள் கில்லாடிதான்.
பதிலளிநீக்குஇதில் முதல் படத்தைத் தவிர மற்றவற்றை மிக சுலபமாகச் சொல்லிவிடலாம். முதல் படத்தை மட்டும் குழப்புவதற்காகப் போட்டிருந்தேன்.
a. ஒரு கதைக்காக நடனம் அவர்கள் போட்டிருந்த ஓவியம் இது. இதை, 'ஓவியத்துக்கேற்ற கதை' என்பதாக எங்கள்கிரியேஷனுக்கு அனுப்பலாம் என்று எடுத்துவைத்திருந்தேன்.
b & c. சாவி அவர்கள் எழுதிய 'கேரக்டர்' என்ற தொடரில், ஓவியர் நடனம் அவர்கள் இரண்டு கேரக்டர்களுக்காக வரைந்தவை. முதல் கேரக்டர் 'ஜம்பம் சாரதாம்பாள்'. இரண்டாவது 'ஆப்பக்கடை அம்மாக்கண்ணு'. இந்த நாவலில் (அல்லது தொடர்) ஒவ்வொரு கேரக்டரையும் சாவி அவர்கள் மிகுந்த சுவாரசியத்துடன் விளக்கியிருப்பார்கள். படித்தால், ஆமாம்.. இதுபோல கேரக்டரை நாமும் சந்தித்திருக்கிறோமே என்று தோன்றும். பின்பு, கடுகு அவர்களும் இதைப்போன்ற ஒரு தொடர் எழுதினார் என்றும் அதை சாவி வெளியிட்டார் என்றும் ஞாபகம்.
d. இது புகழ் பெற்ற ஓவியர் கோபுலு அவர்கள், சாவியின் 'வாஷிங்டனில் திருமணம்' என்ற தொடருக்காக வரைந்தது. பொதுவாக (a) ஓவியத்தைப் பார்த்து அது 'வாஷிங்டனில் திருமணம்' என்ற நாவலுக்காக வரைந்ததாக இருக்குமோ என்று குழம்புவார்கள் என்று நினைத்தேன்.
a. ஓவியர் நடனம் b & c. ஓவியர் நடனம் d. கோபுலு அவர்கள்
இதற்கு கோமதி அரசு மேடம், பால கணேஷ், தில்லையகத்து கீதா ரங்கன், ஏஞ்சலின், கீதா சாம்பசிவம் மேடம், ஏகாந்தன், ஜீவி சார் ஆகியோர் முயன்றிருக்கின்றனர். எந்தப் படம் எந்த நாவல் என்பதைச் சரியாகச் சொல்லவேண்டும் என்பதுதான் கேள்வி.
எல்லோரும் பகுதி விடையை மட்டும் சரியாகச் சொல்லியிருக்கின்றனர். இத்தனை வருடங்கள் கழித்தும் கேரக்டர் மற்றும் வாஷிங்டனில் திருமணம் நாவல்கள் பேசப்படுவதே ஆசிரியர் சாவிக்குக் கிடைத்த வெற்றி. அதிகமான பதில்கள் சொன்னவர்கள் என்ற முறையில் பாலகணேஷும் கீதா சாம்பசிவம் மேடமும் பாராட்டுக்குறியவர்கள். கலந்துகொண்டவர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.
சாரின் உதவியை நாடவில்லை. கதைகள் நான் தான் படிப்பேன்.
பதிலளிநீக்குகேள்வி 1 - ரொம்ப சுலபமான கேள்வி இது. ஓவியர்களின் பெயரைச் சொல்லுங்கள். பத்து (அல்லது அதற்குக் குறைவான) ஓவியர்கள்.
பதிலளிநீக்குa. கோபுலு அவர்கள் - காளிமார்க் விளம்பரத்துக்காக வரைந்த படம் b. நடனம் அவர்கள் c. ஜெயராஜ் அவர்கள் d. மணியம் செல்வன் அவர்கள் e. சிம்புதேவன்-இம்சை அரசன் டைரக்டர் அவர்கள் f. விகடன் மதன் அவர்கள்-இவர்கள் சாமானியர்களானால் என்ற தலைப்பில் வரைந்த பல ஓவியங்களில் ஒன்று-கருணானிதி அவர்கள் பேருந்தைப் பிடிக்க ஓடுவதுபோல g. ஓவியர் ராமு h. ஓவியர் நடனம் i. சாவியின் 'வழிப்போக்கன்' நாவலுக்கு-சாவி பப்ளிகேஷன்ஸ்-ஓவியர் கோபுலு வரைந்த அட்டைப்படம் j. சாண்டில்யனின் சித்தரஞ்சனிக்காக ஓவியர் லதா வரைந்த ஓவியம் k. சாண்டில்யனின் கன்னிமாடம் வானதி பதிப்பகம்-அட்டைப்படம்-ஓவியர் லதா l. சாண்டில்யனின் அவனி சுந்தரி-ராணி முத்துவில் வந்த நாவலுக்கு ஓவியர் ஜெயராஜின் அட்டைப்படம்.
ஓவியர் ராமு, தமிழ்வாணனுடைய தொடர்களுக்கு நிறைய படங்கள் வரைந்திருக்கிறார். அதில் சங்கர்லாலுக்கும், தமிழ்வாணனுக்கும் படம் போடும்போது தலை முடி இப்படி வளைந்திருக்கவேண்டும் என்றெல்லாம் ஆர்வத்துடன் ஆலோசனை சொல்லுவாராம் தமிழ்வாணன். அவருடைய துப்பறியும் நாவல்கள் இளம் பருவத்தில் என்னை மிகவும் கவர்ந்தவை.
ஓவியர் லதாவின் உண்மைப் பெயர் ஸ்ரீனிவாசன். அவர் வீரராகவாச்சாரி அவர்களின் புதல்வர். அவர் மேற்கு மாம்பலத்தில் வசித்துவந்தார். அவரது 40 வயதுகளிலேயே மறைந்துவிட்டார். அவரும், என்னைப் பொருத்தவரையில் சாண்டில்யனும் Made for Each Other. சரித்திரப் படங்களில் ஜொலித்தவர் லதா அவர்கள். சாண்டில்யன் வருணனைகளை மனதில் நிறுத்தினால் அதனை அப்படியே ஓவியர் லதாவின் படங்களில் காணலாம். அவருக்கு பொன்னியின் செல்வன்/சிவகாமியின் சபதம் போன்றவற்றை ஜொலிக்கவைக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லையே என்று எனக்குத் தோன்றும்.
திரு. கோபுலு அவர்கள் சகலகலா வல்லவர். ஜோக்குக்கு சித்திரம், அரசியல் கார்ட்டூன், கேரக்டர், நகைச்சுவைத் தொடர், சரித்திரத் தொடர், ஆன்மிகம்னு எல்லாவற்றிலும் சிறந்துவிளங்கியவர்.விளம்பரத்துறையிலும் இருந்திருக்கிறார். இவரது நகைச்சுவைச் சித்திரங்களில் அன்றைய கலாச்சாரப் பதிவை நாம் காண இயலும்.
இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல முயற்சித்தவர்கள், துரை செல்வராஜு சார், கோமதி அரசு மேடம், மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன், பாலகணேஷ், கீதா சாம்பசிவம் மேடம், ஏகாந்தன், ஜீவி சார் ஆகியோர். அனைவருக்கும் பாராட்டுகள். கீதா சாம்பசிவம் மேடம், ஏகாந்தன், கோமதி அரசு மேடம் ஆகியோர் சிலவற்றை சரியாகச் சொல்லியிருக்கிறார்கள். பாலகணேஷ் அவர்கள் எந்த ஓவியம் என்று குறிப்பிடாததால் அவரது விடையை ஒப்பு நோக்க இயலாது.
சொன்னதில் நிறைய விடைகள் சரியாகச் சொன்னவர் ஜீவி சார் (9 ஓவியங்கள்). வாழ்த்துக்கள்.
கீதா சாம்பசிவம் மேடம் மீள் வருகைக்கு நன்றி. நான் எழுதியது 'கிசு கிசு'க்களல்ல. எம்ஜியாரும் அவரது சரிதத்தை ஓரளவு எழுதியிருந்தார், மற்றவர்களும் புத்தகங்களில் எழுதியதுதான் அது.
பதிலளிநீக்குமீள் வருகைக்கு நன்றி கோமதி அரசு மேடம். ஓவியங்கள் என்பதால், சாரின் உதவியை நாடினீர்களோ என்று நினைத்துச் சொன்னேன். அவர் நல்ல ஓவியரல்லவா?
கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி. இந்த வார புதன் புதிர் இன்டெரெஸ்டிங் ஆக இருந்திருக்கும் என நம்புகிறேன்.
பதிலளிநீக்குசிறுகதை, நாவல், கட்டுரை, ஓவியம், ஓவியர், எழுத்தாளர், பத்திரிகை என்று எழுத்து குறித்த எந்த முயற்சியும் ஆரோக்கியமானது தான்.
பதிலளிநீக்குஅந்த முயற்சிக்கான ஆர்வத்தைக் கிளறி விட்ட உங்களுக்கு நன்றி, நெல்லை!..
இந்த வார புதன் புதிர் இன்டெரெஸ்டிங் ஆக இருந்திருக்கும் என நம்புகிறேன்.
பதிலளிநீக்குஆமாம், இன்டெரெஸ்டிங் ஆக இருந்தது.
பாக்கியம் ராமசாமி அவர்கள் கதை
பாத்திரம் சீதாபாட்டி, அப்புசாமியை அப்படியே ஜெ போல் வரைந்து ஒரு நோட்டு முழுவதும் வரைந்து வைத்து இருந்தார்கள் அந்த நோட்டை ஒருத்தர் அவர்கள் குழந்தைகளிடம் காட்டி விட்டு தருக்கிறேன் என்று கொண்டு சென்றவர் பின் கொடுக்கவில்லை.
ஓவியங்கள் பற்றி கேட்டு இருந்தால் சொல்லி இருப்பார்கள் நான் இரவு டைப் செய்தேன் அவர்கள் தூங்கி விட்டார்கள் அதனால் கேட்கவில்லை.
உங்கள் கருத்தை சாரிடம் சொன்னேன் மகிழ்ந்தார்கள் (ஓவியர் என்று கருத்து.)