செவ்வாய், 21 நவம்பர், 2017

கேட்டு வாங்கிப் போடும் கதை : காதல் தீயே.. - பூவிழி - சீதை 28



இந்த வார 'சீதை ராமனை மன்னிக்கும்' கதையை எழுதி இருப்பவர் பூவிழி.


====================================================================

காதல் தீயே ... 
பூவிழி 


அயோத்தியில் சீதை தன் அந்தப்புரத்து தோட்டத்தில் படலுக்கு பின் நிற்க்கும் மானுடன் உரையாடுகிறாள்


"போ போ நானொன்றும் உன்னருகினில் வரமாட்டேன் உன்னை கொஞ்சிட...


ஒரு தடவை உன் அழகை கண்டு நான் பட்ட தலைவலியெல்லாம் போதும் ........நீயும் நிஜமென்று எப்படி நம்புவது ?…..


நான் ஆசைப்படத்தினால்தான் எல்லா துர்வினையும் வந்தது என்று என்னை சொல்கிறார்கள்.


எனக்கொரு சந்தேகம், மாய மானாய் வந்த கயவன் பின்பு வேடம் தரித்து அபகரிக்க வந்தவன் ,காற்றாய் வந்திருந்தால் என்னநடந்திருக்கும்?? நான் வீசியெறிப்பட்டுத்தானே இருப்பேன்.....  கயவன் முடிவெடுத்துவிட்டால் நான் எப்படி பொறுப்பாவேன்?


நானோ நல்லவைகளையே கண்டு வளர்ந்தவள்......சரி போகட்டும் ,அப்படி அவன் வர காரணம் யார்,அண்ணனும் தம்பியும்சேர்ந்து கயவனின் தங்கைக்கு செய்த வினை என் தலைமேல் வீழ்ந்தது. அவள் ஆசைபட்டால்  மறுத்து விட்டு வரத்தெரியாமல் வீரம் காட்ட சொன்னது நானாஅதன் பயனை நானல்லவோ அடைந்தேன்.


இதில் நான் இவர் மேல் கொண்ட காதலால்… என் காதல் பொய்க்காது என்று காத்திருந்தேன் சிறையில்....... நான் மரித்திருக்கவேண்டும் அந்நிலையில் என்று எல்லோரும் சொல்கிறார்கள். 

ஏன்எதற்குஅப்படி நான் மரணித்திருந்தால் என் உடம்புகளங்கப்பட்டு விட்டதோ என்ற சந்தேகத்தை நிரூபித்திருக்குமல்லவா ?


என் நம்பிக்கையை பொய்யாகாமல் என்னை மீட்ட, உன் அரசன் மேல் காதலால் கசிந்துருகி விம்மி நின்ற நேரம்…. என் மனதைதுடிக்காமல் நிறுத்தியவர் உன் அரசர்தான் .....


என்னை தீக்குளிக்க செய்தார் நான் களங்கப்படாதவள் என்று நிரூபிக்க வேண்டுமாம் …எப்படி இருக்கு பார் கதை ?


நான் இவர் மேல் கொண்ட காதல் தீயால் அவன் என்னை அணுக முடியாமல்வெப்பத்தால் தகித்தான்.


காதல் தவ தீயிலேயே  இருந்தவளை புதிதாய் தீக்குளிக்க சொன்னார் உன் அரசர், கேட்டாயா ஹாஸ்யத்தை ....


நானும் ஒரு மடச்சி.. பலகாலம் அவரை பிரிந்திருந்த தவிப்பில் அவரை காண கிடைத்த தவிப்பில் அவரை கண்டவுடன் அவர் கட்டளைக்கும் பணிந்துவிட்டேன். தீயிலேயே இருந்தவளை தீயிலே எழுந்துவா என்றது புதிதாய் தெரியவில்லை அன்று


இப்பொழுது ஏனோ சில நேரம் அடிமனதில் துக்கத்தை கொடுக்கிறது .....அவர் மற்றவருக்காக என்று சொன்னாலும் என்னை  நீச்சம் செய்துவிடபட்டதோ அந்த நிகழ்வு என்று மருக்குகிறது.


நான் அவரை நோக்கி அந்த கேள்வியையோ நிரூபித்தலையோ முன்வைக்கவிலையே, என்னை பிரிந்து இருந்த நேரத்தில் அவரின் ஒழுக்கத்திற்கு சான்று காண்பி என்று அவரிடம் கேட்டேனா சொல் மானே ? என் காதல் நம்பிக்கையை கொடுத்தது, அவர் காதல்?!” என்று இங்கு நிறுத்துகிறாள் அவள் புலம்பலை.


அவள் கண்ணிலோ நீர் படலம்… அந்தப்புரத்து தோட்டத்தின் மறுபுறம் நின்ற ராமனுக்கோ மனதை பிசைகிறது. “பட்டாபிஷேகம் முடிந்து இவ்வளவு நாட்கள் ஆனா பிறகும் இவள் மருகி கொண்டிருக்கிறாளா என்னுடனான வாழ்வில், ஆம்..என் காதல் அவளுக்கானதாக மட்டுமில்லாமல் போனதே” என்று மனது மருகுகிறான். அவளுக்கு முன் செல்கிறான் .


இராமனை கண்டவுடன் இயல்பான பதட்டத்துடன் மானை “போ… போ” என்று விரட்டுகிறாள். அதை கண்ணுற்ற இராமன் மானை பார்த்து “மானே போகாதே உன்னால் என் இனியவளின் மனதில் இருக்கும் துன்பத்தை அறிந்து கொண்டேன். இன்று வரை அதை பகிராமல் தன் காதல் மனதை மட்டும் அளித்துவரும்… உன் அரசியிடம் எனக்கான மன்னிப்பை பெற்று தருவாயா?” என்று மானின் முன் மண்டியிட்டு கேட்க்கிறான். தன் காதல் மனைவியின் முகவடிவைவிட்டு பார்வை அகற்றாமல்.


சீதையின் கண்களும் கண்ணீரை சொரிகின்றன. சொல்லாமல் அங்கு மன்னிப்பு வழங்க படுகிறது அன்று.
​சீதை ராமனை மன்னித்தாள்.​





76 கருத்துகள்:

  1. இனிய செவ்வாய் காலை வணக்கம் :)

    பதிலளிநீக்கு
  2. செவ்வானச் சிவப்பில் சிரிக்கும் செவ்வாய்..
    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  3. இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

    //செவ்வானச் சிவப்பில் சிரிக்கும் செவ்வாய்..//

    ஆஹா.....

    பதிலளிநீக்கு
  4. தீயிலே இருந்தவளை தீயிலே எழுந்து வா...

    புதிய கோணம்.. புதிய பார்வை..

    அருமை.. அழகு!..

    பதிலளிநீக்கு
  5. அன்பின் ஸ்ரீராம்.. வணக்கம்..
    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
  6. இனிய காலை வணக்கம் துரை அண்ணா ..

    பதிலளிநீக்கு
  7. விடியற் காலையில் இங்கே தலைமை சமையல் காரனுக்கும் மேற்பார்வையாளர் ஒருவருக்கும் தகராறு...

    அந்த கலாட்டாவினால் ஒரு நொடி தாமதமாகிப் போனது..

    எப்படியோ வீட்டில் உள்ளவர்களுக்கு விடியற்காலை காபி கிடைத்தால் சரி..

    Good Morning Anju !...

    பதிலளிநீக்கு
  8. அழகான குட்டி கதை பூவிழி வாழ்த்துக்கள் ..
    நிஜத்தில்இன்னொருமுறை மானை பார்த்திருந்தால் சீதை நின்று பேசியிருப்பாரான்னு கூட சந்தேகமே .எந்த மானை பார்த்தாலும் மாயமானாயிருக்குமோனு பயம் வரத்தான் செய்யும்
    ஒரு முறை ஆசைப்பட்டு ..வேதனை பட்டு அனுபவித்தவராயிற்றே .
    பகிர்வுக்கு நன்றி எங்கள் பிளாக்

    பதிலளிநீக்கு
  9. @துரை அண்ணா ..மகளுக்கு நாளைக்கு பரீட்சை அதனாலே நானும் பக்கத்தில் உக்கார்த்திருந்தேன் அவள் படிச்சி முடியும் வரைக்கும் :)
    அதனால்தான் சரியா முதல் பின்னூட்டம் போட முடிந்தது :)
    இப்போ நல்லிரவு எங்களுக்கு நாளை சந்திப்போம்

    பதிலளிநீக்கு
  10. ஓஹோ... மகளுக்குப் பரிட்சையா!..
    தேர்வில் வென்றிட வாழ்த்துக்கள்...

    (அப்படியே நாமும் கொஞ்சம் படிச்ச மாதிரி இருக்கட்டும்!..)

    கவிப்புயல் - எங்கே காணோம்!?..

    பதிலளிநீக்கு
  11. ஹை இன்று ஏஞ்சல் முதலில் வந்துவிட்டாங்களா!!! தேம்ஸ் பூஸாருக்கு தெரியலை போலும் இல்லேனா மூக்கில் வியர்த்து உருண்டு பிரண்டு வந்திருப்பாரே!!! ஹாஹாஹாஹா

    இனிய காலைவணக்கம் ஏஞ்சல் உங்களுக்கு நடு இரவு வணக்கம்...துரை செல்வராஜு சகோ உங்களுக்கும் செவ்வாயின் புன்சிரிப்புடன் இனிய காலைவணக்கம்!! ஸ்ரீராம் அண்ட் எல்லோருக்கும்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  12. ஓ! ஏஞ்சல் மகளுக்குப் பரீட்சையா!! வாழ்த்துகள் சொல்லிடுங்க!!

    பதிலளிநீக்கு
  13. சகோதரி பூவிழி! ரொம்ப நன்றாக எழுதியுள்ளீர்கள். வித்தியாசமான பார்வையில் நல்ல கற்பனை வளத்துடன்! நன்றாக இருக்கிறது! பாராட்டுகள், வாழ்த்துகள்!

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  14. அழகிய கவிதை போன்ற கதை மன்னிப்பை கோர்த்த விதம் நன்று வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  15. பூவிழி முதலில் தலைப்பே அசத்துகிறது!!! கவர்ச்சியாகவும்! இப்போதைய தமிழ்ப்படங்களின் தலைப்பைப் போன்று!! ஹாஹாஹாஹா!! அது உங்கள் கதையின் பார்வைக்கும் பொருந்திவிட்டது! ரொம்ப நல்லா யோசிச்சுருக்கீங்க. ஆம் சீதைக்கு மானைக் கண்டால் பயமாத்தான் இருக்கும்..ஒரு முறை பட்ட வேதனை போதாதா...உண்மையைச் சொல்லவேண்டும் என்றால் நேற்று காலை என் மகனுக்கு ஞாயிறு இரவு என்பதால் நிறைய நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது நான் எ பியில் இப்படி சீராம வந்து கொண்டிருக்கு ஒவ்வொருவரது பார்வையும் வித்தியாசமாக அதாவது ராமாயணத்தை ஒட்டிய கதைகளைச் சொன்னேன். மற்ற கதைகளைப் பற்றியும் சொல்லிக் கொண்டிருந்த போது அவன் என்னிடம் அம்மா கொஞ்சம் ராமாயணத்தை ரீவைன்ட் பண்ணு என்றான். நானும் சுருக்கமாகச் சொல்லி வந்தேன் அப்போ அவன் தீரென்று கேட்டான் அம்மா சூர்ப்பனகை முதலில் வந்தாளா இல்லை மாரீசன் முதலில் வந்தானா என்று. அப்போது நான் சூர்ப்பனகைதாண்டா என்றேன். ஹான் பாத்தியா சூர்ப்பனகைய லட்சுமணன் ஏன் மூக்கை அறுக்கணும் அதான் ராவணனுக்குக் கோபம் வந்துருச்சு மாரீசன் மாய மானா வந்துருக்கான் சீதையைக் கவர்ந்து செல்ல ஸோ சூர்ப்பனகையிடம் லட்சுமணன் பதவிசாக, ஸ்ட்ராங்கா சொல்லி மறுத்து இருக்கலாம்...ஆனால் லட்சுமணன் முன்கோபியாயிற்றே அதான் மூக்கை அறுத்துவிட்டான் சட்டென்று..என்று அவன் சொல்லிக் கொண்டிருந்தான் அப்புறம் சீதைக்கும் அப்புறம் மான் என்றாலே பயம் வந்திருக்கும் என்று மட்டுமல்ல ஒரு பெண்ணாக அதுவும் மென்மையான மனதுடைய அவளுக்கு நிறைய ஷாக்ஸ் மனதுள் இருந்திருக்கும் இல்லையோ என்றும் சொல்லிக் கொண்டிருந்தான்... அவனுக்கு என் குறிப்புகளைப் பற்றியும் சொன்னேன்..இருவரும் மனித மனத்தைப் பற்றி அதாவது ராமாயணத்தில், மற்றும் மகாபாரதத்தில் உள்ள சைக்காலஜி பற்றியும் பேசினோம்...

    பார்த்தால் இன்று நாங்கள் பேசிய கருத்தை ஒட்டிய ஒரு கதை உங்களிடமிருந்து!!! வியப்பாகவும் இருந்தது....அழகா எழுதியிருக்கீங்க...ராமனுக்கும் துயர் இருந்திருக்குமே தன் அன்பு மனைவியின் வேதனை குறித்து. இன்று மகனிடம், அவனுக்கு நேரமிருந்தால் இதைப் பற்றி சொல்ல வேண்டும்...பாராட்டுகள் பூவிழி! வாழ்த்துகளும்!

    கீதா

    பதிலளிநீக்கு
  16. தமிழ்மணம் மொபைல் லிங்க் தனி டாபில் வரலையே ஸ்ரீராம்!!

    கீதா

    பதிலளிநீக்கு
  17. மாறுபட்ட தலைப்பு கதையின்பால் எங்களை ஈர்த்தது.

    பதிலளிநீக்கு
  18. என் கதையும் போட்டு மகிழ்வித்ததற்க்கு எங்கள் பிளாக் ஆசிரியர் குழுவிற்கும் நண்பர் ஸ்ரீராமிற்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  19. நன்றி கரந்தை ஜெயக்குமார் சகோ

    பதிலளிநீக்கு
  20. ஹா ஹா நண்பர் ஸ்ரீராமை கேளுங்க முதலில் கதையை அனுப்பிட்டு அப்புறம் தலைப்பை அனுப்பி என்று நினைத்து சிரித்திருப்பார் அனுப்பினது ஒருபக்க கதை இதுக்கு எவ்வ்ளவு பில்டப்புனு நான் அப்பவே சொல்லிட்டேன் சிரிக்கப்படாதுனு ரொம்ப யோசித்த அப்போ தோன்றியது ஏதுக்காக சீதை மன்னித்து இருக்க வேண்டும் தன் தன்மானம் அடிபட்டும் அன்பு காதல் இருந்தால் மட்டுமே முடியும் இவ்வளவு பெரிய மன்னிப்பை கொடுக்க பாருங்களேன் உங்க மகனுக்கும் தோன்றியுள்ளது என் கோணம் நானும் என் பிள்ளைகளுடன் இதை பற்றி எல்லாம் பேசி பேசி எனக்கும் அவர்கள் கோணம்தோன்ற ஆரம்பித்துவிட்டது இளைத்தலைமுறைக்கு ஏற்றார் போல் நன்றி கீதா சிஸ்

    பதிலளிநீக்கு
  21. ஆஹா இம்முறை பூவிழியின் கதையோ... யாராக இருக்கும் என ஓசிச்சுக்கொண்டே ஒபின் பண்ணினேன்ன்.. ஓபினிங் சீனிலேயே.. சீதையும் மானும் ஆஹா என் கண்ணில் கற்பனை அப்பூடியே விரியுதே...

    //"போ போ நானொன்றும் உன்னருகினில் வரமாட்டேன் உன்னை கொஞ்சிட...///

    பின்ன?:) சூடு கண்ட பூனையாச்சே.. வெரி சோரி டங்கு ஸ்லிப்ட்:) சூடு கண்ட சீதை ஆச்சே..:)) ஹா ஹா ஹா... ஒரு தடவை பிழை விட்டால் அது தவறு:), திரும்பவும் விட்டால் அது தப்பு:)...

    தவறிச்செய்வது தவறு.... இது மன்னிக்கப்படலாம்...
    தெரிந்தே செய்வது தப்பூ.. இதை மன்னிக்கலாமோ?:)).. அப்போ ராமன் சீதையை தீக்குளிகச் சொன்னது தவறு அல்ல தப்பூஊஊஊஊஊஊஉ:).. நா மன்னிக்க மாட்டேன்ன்:) சரி பார்ப்போம் இங்கு சீதை எப்பூடி மன்னிக்கிறா என...

    ஹா ஹா ஹா நானே தவறா எழுதி டிலீட் உம் பண்ணி...:)

    பதிலளிநீக்கு
  22. //அந்தப்புரத்து தோட்டத்தின் மறுபுறம் நின்ற ராமனுக்கோ மனதை பிசைகிறது. “பட்டாபிஷேகம் முடிந்து இவ்வளவு நாட்கள் ஆனா பிறகும் இவள் மருகி கொண்டிருக்கிறாளா என்னுடனான வாழ்வில், ////

    பின்ன அவர் செய்வதை எல்லாம் செய்து போட்டு, கறுப்புச் சீலையைப் போட்டு மூடிப்போட்டு:) பட்டாபிசேகமும் செய்துபோட்டு.. அனைத்தையும் மறந்திடோணும் எனச் சொன்னால் சீதையால மறக்க முடியுமோ கர்ர்ர்ர்:))


    ///இராமனை கண்டவுடன் இயல்பான பதட்டத்துடன் மானை “போ… போ” என்று விரட்டுகிறாள்.///
    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இப்பூடிப் பண்ணினால் ராமனுக்கு சந்தேகம் வந்திடாது?:))... ஹா ஹா ஹா..

    அழகிய குட்டிக் கதை பூவிழி.. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  23. விடியக்காலையில.. பிபிசி ல சொன்னாங்கோ:) தேம்ஸ் கரையில, நைட் 12.30 போல, யாரோ வெள்ளைச் சேலை உடுத்து, காலில் கொலுசுடன், புகை விட்டபடி:), அங்கும் இங்கும் வேகமாக நடந்ததாகவும்.. :) போலீஸ் பிடிச்சு மிரட்டிக் கேட்ட இடத்தில்.. யாரோ கவிப்புயலின்:) கவிதைக்கு.. இன்னும் யாரோ மூன்றெழுத்துக்காரர்:)... “கவிதையே கவிதை சொல்லுதே” எனச் சொல்லி விட்டாராம் என்பதால் தனக்கு நித்திரை வரவில்லை... எனச் சொன்னதாகவும் சொன்னாங்கோ.. அப்போ நான் அதை நம்பல்லே...

    ஆனா இங்கு வந்தால்.. நம்பிட்டேன்ன்ன்:))..

    ///Angelin said...
    இனிய செவ்வாய் காலை வணக்கம் :)////

    ஹையோ ஹையோ இப்போ புரியுதா துரை அண்ணன்.. ஸ்ரீராம்.. ராத்திரிச் சாமத்தில குட்மோனிங் யாருக்குச் சொல்லியிருக்கிறீங்க என:)) ஹா ஹா ஹா ..

    பதிலளிநீக்கு
  24. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் 4 கீதா:)).. இருப்பதே (தெரிஞ்சதே) குட்டியூண்டு ராமாயணம்:) அதைப்போயி:) அக்குவேறு ஆணிவேறா இங்கின சொல்லிட்டால்ல்ல்:)) இனி வெளிவர இருக்கும் எங்கட கதை எல்லாம் என்ன ஆவுறதூஊஊஊ?:)).. ஹையோ ஆரும் ஓடாதீங்க நான் கதை எதுவும் ஜொள்ளல்ல:)..

    பதிலளிநீக்கு
  25. வித்தியாச அணுகுமுறை பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  26. பார்த்தேன்!படித்தேன் நன்று!

    பதிலளிநீக்கு
  27. ஹலோ ஏஞ்சல்! பூஸாரின் செக்கரட்டரி இப்போ எனக்கு ஓர் உண்மை தெரிஞ்சாகணும்!!! அப்பாவி எப்போது கவிப்புயலாக மாறினார்!!?? ஹையோ நம்ம கவிப்புயல் வை மு என்ன சொல்லப் போகிறாரோ!! நல்ல காலம் கண்ணதாசன் மாமா இல்லை!!

    கவிப்புயலே வருக வருக!!! அதான் பார்த்தேன் என்னடா வலையே ஆடுதேனு...!! புயல் வந்தா பின்ன எப்படி இருக்கும்!!

    அது சரி உங்க கர் சத்தம் கேட்டுருச்சு...உங்க கதைக்கு எதுவும் ஆகிடாதூஊஊஊஉ...நாங்க இன்னும் கருத்து வைச்சுருக்கோம்ல ஹிஹிஹிஹிஹிஹி....

    கீதா

    பதிலளிநீக்கு
  28. என்னை தீக்குளிக்க செய்தார் நான் களங்கப்படாதவள் என்று நிரூபிக்க வேண்டுமாம் …எப்படி இருக்கு பார் கதை ?/ கம்பராமாயணத்தில் ராமன் சீதையை சந்தேகப்பட்டுக் கூறிய வார்த்தைகளை வைத்து நான் முதலில் சீதை ராமனை மன்னித்தாள் என்று எழுதி இருந்தேன் அதன்பின் இப்போதுதான் நீங்கள் இப்போது அதுபோல் எழுதி இருக்கிறீர்கள் பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  29. @துரை அண்ணா :) ஆமா படிக்கும்போது நமக்கும் refresh ஆகுதே பாடங்கள் எல்லாம் :)

    பதிலளிநீக்கு
  30. @கீதா :) தாங்க்ஸ் :) பொண்ணு படிக்கும்போது எப்பவும் அருகில் இருப்பது வழக்கம் :) அடிக்கடி டெஸ்ட் வரும் :)
    அந்த கவிப்புயல் பார்த்து மயங்கி விழுந்து எழும்பி இருக்கேன் :) நேற்று மேடம் கவிப்புயல் ஆகிட்டாங்க

    பதிலளிநீக்கு
  31. பூவிழி கதை வெகு அழகு. எப்படிப்பட்ட அன்பு. அழகானகோர்வை. அன்புடன்

    பதிலளிநீக்கு
  32. ஏஞ்சல் நானும் தான் என் பையன் படிக்கும் போது கூடவே முழித்திருப்பேன்! பள்ளியிலும் சரி கால்நடை மருத்துவம் படிக்கும் போதும் சரி...கற்றல் குறைபாடு இருந்ததால் மல்டி டாஸ்கிங்க் ரொம்பக் கஷ்டப்படுவான்...பாடங்கள்ம் அதிகம். 12-16 சப்ஜெக்ட் படிக்கணும், பேப்பர்ஸ் எக்ஸாம்.. எழுதணும்!!

    கீதா

    பதிலளிநீக்கு
  33. அந்த கவிப்புயல் பார்த்து மயங்கி விழுந்து எழும்பி இருக்கேன் :) நேற்று மேடம் கவிப்புயல் ஆகிட்டாங்க// ஹா ஹா ஹா ஹா...நானும் ஷாக்காகிட்டேன்பா..!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  34. வாங்க கவிப்புயல் இன்று கோபபுயலாய் மாறி ஆச்சு ஹை பை நானும் நானும் கோபம் ராமனை மேல் ஆனால் அவளின் அதீத காதல் ஒன்று புரியாமல் மன்னிக்க வைத்து இருக்கும் என்ற ஒரு கற்பனை அதற்கு முன் சீதைக்கு அவருடனான வாழ்வு குழப்பத்தை கொடுத்திருக்கும் அவர் மேல் எப்படி கோபம் கொள்வது என்று ..... நன்றி கவிப்புயல்

    பதிலளிநீக்கு
  35. நன்றி புலவர் இராமாநுசம் ஐயா

    பதிலளிநீக்கு
  36. நன்றி காமாட்சி அம்மா வெகு அழகு என்று வாழ்த்தியத்திற்க்கு மீண்டும் நன்றி

    பதிலளிநீக்கு
  37. உங்கள் கதையில் நிஜ சீதை; நிஜ ராமன்.

    ஆனால் நிஜ சீதை ராமனை மன்னிப்பது என்பதைப் பற்றி நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டாள்! அதனால் தான் 'சொல்லாமல் அங்கு மன்னிப்பு வழங்க படுகிறது அன்று' என்று எழுதி விட்டீர்களோ?..

    பதிலளிநீக்கு
  38. வித்தியாசமான பார்வை அக்கா...
    நல்ல கதை.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  39. அன்பு பூவிழி,
    சீதை அழுது நான் பார்த்த படம் லவகுசா.
    பூமி தேவியின் மகளாகச் சித்தரிக்கப் படுகிறவள் எல்லாவற்றையும் தாங்கி
    ராமனைவிட உயர்ந்த இடத்தைப் பிடித்தவள்.
    தாயாகவே இருந்து அவனைப் புரிந்து மன்னிக்கிறாள்.
    படிக்கும் நமக்குத்தான் அவளுக்கு வரவேண்டிய ரோஷமும்,தாபமும் மேலிடுகிறது.

    அதை அழகாக சாரத்துடன் சொல்லி இருக்கிறிர்கள். மனம் நிறைந்த
    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  40. @ பூவிழி:

    வித்தியாசமாக சிந்தித்து கச்சிதமாக முடித்திருக்கிறீர்கள்

    பதிலளிநீக்கு
  41. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அஞ்சூஊஊ... கீதாஆஆஆ:))... கொமெண்ட்ஸ்ல அநாவசியப் பேச்செல்லாம் இருக்கப்பூடா ஜொள்ளிட்டேன்ன்:)).. அதிராவைப் பார்த்தாவது நல்ல விசயங்களைக் கற்றுக்கொள்ளுங்கோ:))...

    ஹையோ.. சுனாமிபோல தெரியுதே.... நான் இனி அடுத்த மண்டே தான் வருவேனாக்கும் அதுவரை ட்றம்ப் அங்கிளோடு அவசர மீட்டிங் ஒன்றுக்காக அப்புறிக்காஆ பயணமாகிறேன்ன்ன்ன்ன்:)).

    பதிலளிநீக்கு
  42. //அப்புறிக்காஆ பயணமாகிறேன்ன்ன்ன்ன்:)).//

    ஹாஹா :) ஜிம்பாப்வே போறீங்க னு தெரியுது போங்க போங்க :) முகாபே அங்கிளோட உங்களையும் சேர்த்து கூண்டில் அடைக்கபோறாங்க

    பதிலளிநீக்கு
  43. வாங்க ஜீவி சார் சீதை அன்று மன்னித்தாலும் பின்னர் மன்னிக்கவில்லை ஒருதரம் தன் காதலுக்கு தானே மரியாதையை செய்து கொள்கிறாள் மனம் ஒப்பாமல் இருந்திருக்கலாம் என்றே வைத்து கொண்டாலும் நன்றி

    பதிலளிநீக்கு
  44. ஆம்..என் காதல் அவளுக்கானதாக மட்டுமில்லாமல் போனதே” என்று மனது மருகுகிறான்.//

    உண்மை, ஒரு அரசனுக்கு நாட்டுமக்களுக்கு பின் தான் மனைவி, மக்கள் எல்லாம்.
    வித்தியாசமான கோணத்தில் கதை சூப்பர் பூவிழி.

    பதிலளிநீக்கு
  45. அருமையான கோணம் பூவிழி. கம்பராமாயணத்தில் மட்டுமில்லாமல் மற்றுமுள்ள ராமாயணங்களிலும் ராமன் சீதையைத் தான் ஏற்க முடியாது என்றே சொல்கிறானே தவிர, தீக்குளிப்பது என்பது சீதையாக எடுத்த முடிவு. இதை யாருமே புரிந்து கொள்ள முயற்சிப்பது கூட இல்லை. ராமன் தான் தீக்குளிக்கச் சொன்னான் என்றே இன்று வரை சொல்கின்றனர்.

    பதிலளிநீக்கு
  46. சீதை ராமனைப் பிரிந்த பின்னர் ராமன் வாழ்ந்தது தவ வாழ்க்கை தான் என்பது ராமாயணத்திலேயே சொல்லப்படுகிறது. பெரும்பாலான காலம் சீதையைத் தேடுவதிலும், அவளைக் கண்டடைவதிலும், அவளை மீட்டுக் கொண்டு வரச் செய்யப்போகும் போருக்கான ஆயத்தங்களிலும், போரிலும் செல்கிறது. ஆகையால் சீதை ராமனைச் சந்தேகித்துக் கேட்க வேண்டும் என்ற கேள்வியே இங்கே அபத்தமானது! காட்டில் வாழ்கையில் தன்னந்தனியாக மனைவி இல்லாமல் வாழ்கையில் ராமன் இன்னொரு பெண்ணை ஏறெடுத்துப் பார்த்திருப்பான் எனில் அதை முதலில் வால்மீகியும், பின்னர் அவர் அடிகளை ஒட்டி எழுதிய கம்பனும், துளசியும் குறிப்பிடாமலா இருந்திருப்பார்கள்?

    பதிலளிநீக்கு
  47. இப்போது ஆள்பவர்களுக்குக் குடும்பம் தான் முன்னால் வருகிறது. ஆகையால் இப்போதைய காலகட்டத்திற்கு ஏற்பச் சிந்திப்பவர்களுக்குத் தன் குடிமக்களின் நலனே முக்கியம் எனச் சிந்தித்த ராமன் ஓர் கொடுமைக்காரனாகத் தென்படுவதில் வியப்பு ஏதும் இல்லை.

    பதிலளிநீக்கு
  48. மற்றபடி உங்கள் கதையைப் பற்றி என் கருத்து: மிக அழகாகக் கோர்வையாக, வளமான சிந்தனைகளைக் கொண்டு எழுதுகிறீர்கள். தொடர்ந்து எழுதுங்கள். சொல்ல வேண்டிய கருத்தை ரத்னச் சுருக்கமாகச் சொல்லி விடுகிறீர்கள். மனமார்ந்த பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  49. நன்றி கோமதி சிஸ் இரவு பார்க்கவில்லை தாமதம்மாகிவிட்டது

    பதிலளிநீக்கு
  50. வாங்க கீதா ச சிஸ் இப்ப உடம்பு பரவாயில்லையா ?ரொம்ப சந்தோசம் உங்களை இங்கு பார்த்ததில் இன்று நன்றி சிஸ் கருத்துக்களுக்கு

    பதிலளிநீக்கு
  51. சிஸ் இப்பொழுது என் ஆதங்கத்தை முன் வைக்கிறேன் காலங்காலமாய் செவி வழியாகவும் வரலாறு வழியாகவும் எது உணர்த்த பட்டதோ விவாத்திற்கு எடுத்து கொள்ள படடதோ அதிலிருந்து தோன்றியது தான் என் கற்பனை ......
    வீட்டில் ஒரு மனைவி கணவனிடம் கோபித்து கொள்ளமாட்டாளா தனக்கு தோன்றும் மன குறையை மனதிற்குள் புலம்ப மாட்டாளா என்ன நீ என்று ? இங்கு சீதை ஒரு மனைவி அரசி என்பதெல்லாம் பிறகு எல்லா நேரமும் அரசியாகவே திங் பண்ண முடியாது இல்லையா ?தன் கணவனை நினைத்து மருகுகிறாள் அவனால் ஏற்பட்ட காயங்களை நினைத்து ..... ஒரு மனைவிக்கு உண்டான புலம்பல்......... கண்டிப்பாய் சீதை என்ற கதாபாத்திரம் இப்படித்தான் புலம்பியிருக்கவேண்டும் ஒரு நேரமில்லையென்றால் ஒரு நேரம்.
    ராமர் தவசீலனாயில்லை என்று நான் சொல்லவில்லை சீதை அவள் கண்ணால் காணாத காட்சியை பற்றி மட்டுமே புலம்புகிறாள்
    மக்களும் ராமனை பார்கவில்லை அவர் திரும்பி வரும் வரை அவரை நம்ப முடிந்த மக்களுக்கு சீதை நம்ப முடியாதா ? அப்படி பார்த்தால் ராமரும் தானாகவே முன் வந்து தீயில் குளித்து அவளும் நானும் ஒன்றுதான் என்று உணர்த்தி இருக்கவேண்டும் மூடர்களாய் இருந்தவர்களுக்கு தனித்து அவளை கைவிட்டு இருக்க கூடாது ஒரு மனைவியை எந்த அளவுக்கு மதிக்க கூடியவர் ராமர் உத்தமத்திற்கு உதாரண புருஷனென்றால் உண்மையில் இவர்தான் இவரை பின்பற்றவேண்டும் என்ற கோட்பாடு தோன்றியிருக்கும் இப்படித்தான் புராணம் வந்திருக்க வேண்டும் என்பதே என் ஆதங்கம்

    பதிலளிநீக்கு
  52. கம்பராமாயணத்தில் ராமன் சீதையை தீக்குளி என்று சொல்ல வில்லை ஆனால் இறந்து போ என்னும் படிக் கூறி இருக்கிறான் சீதை தீக்குளிப்பதைத்தேர்ந்தெடுத்தாள்

    பதிலளிநீக்கு
  53. சீதையை இறந்து போக சொன்னதும் அவள் தீ மூட்டி (லக்ஷ்மன் தீ ஏற்றுவான் )அதில் குதிக்கிறாள் .... அக்னி தேவன் வந்து சீதை அப்பழுக்கு அற்றவள் என்று ராமனிடம் கூறிய பின் அவளை ஏற்கிறான்

    இதில் நீங்க சொல்ல வருவது புரியவில்லை ...அவளை இறந்து போ என்று சொன்னது தவறு இல்லை ... அதற்க்கு மாற்றாக அவள் தீ குளித்தது தவறு என்கிறீர்களா ...

    பதிலளிநீக்கு
  54. @பூவிழி, இதைக் குறித்து நான் நிறையவே எழுதிட்டேன்; சொல்லிட்டேன்; ஆனாலும் காட்டிலே வாழ்ந்த ராமனையும் தன்னை நிரூபிக்க வேண்டும் என்று கேட்பது எவ்விதத்தில் சரியாகும்? சீதை ராவணனின் மாளிகையில் அந்தப்புர நந்தவனத்தில் அசோகவனத்தில் இருந்தாள். அம்மாதிரி ராமன் எங்கேயானும் தங்கினானா என்பதைக் கம்பர், வால்மீகி, துளசியை மீண்டும் மீண்டும் படித்து அறிந்து கொள்ளுங்கள். அயோத்தியை விட்டுப் பிரிந்தபோது எந்த தவ வாழ்க்கையை மேற்கொண்டானோ அதே தவ வாழ்க்கையை சீதையைப் பிரிந்த பின்னரும் தொடர்ந்திருக்கிறான். இங்கே சீதையை அவன் சந்தேகப் பட்டதாகக் காட்டிக் கொள்வதே, ராமன் சீதையின் மேல் இருந்த ஆசையினால் அவள் இன்னொருவர் வீட்டில் இருந்தாள் என்பதைக் கூட நினைக்காமல் ஏற்றுக் கொண்டு விட்டான் என மக்களும் உலகமும் பேசுமே என்ற எண்ணத்தால் தான். மற்றபடி அவன் வரையில் இதை அவன் சந்தேகித்ததாய்ச் சொல்லவில்லை. பின்னரும் அயோத்தி திரும்பியதும் சீதையைத் துறந்ததும் நாட்டு மக்களுக்காகவே! அப்போதும் சீதையைப் பிரிந்த பின்னர் வேறொரு திருமணம் செய்து கொள்ளவில்லை. நாமெல்லாம் இக்கால வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டு இப்போதுள்ள சூழ்நிலைக்கு ஏற்ப யோசிப்பதால் ராமனைத் திட்டுகிறோம். ஆனால் அந்தக் கால கட்டத்தில் மன்னனுக்குக் குடிமக்கள் தான் முதல் வாரிசுகள். குடிமக்களின் நன்மைக்குப் பிறகே தன்னைப் பற்றி மன்னன் யோசிக்க வேண்டும். இங்கே ராமன் ஓர் அரசனாகத் தான் தன் கடமையைச் செய்திருக்கிறானே தவிர்த்துக் கணவனாக இல்லை.

    பதிலளிநீக்கு
  55. அன்றும் சரி, இன்றும் சரி, என்றும் சரி சமூகம் பெண்ணைத் தான் குற்றம் சொல்லும். அப்படி ஓர் பழிச் சொல்லைத் தன் மனைவிக்குக் கிடைக்க விடக் கூடாது என்பதாலேயே ராமன் பொதுவெளியில் அவள் தன்னைத் தானே நிரூபிக்கும்படி செய்கிறான்.

    பதிலளிநீக்கு
  56. http://sivamgss.blogspot.in/2008/07/74.html

    http://sivamgss.blogspot.in/2008/07/blog-post_17.html// எழுதியபோது நண்பர் ஒருவர் கேட்ட கேள்விகளுக்கான என் பதில்

    http://sivamgss.blogspot.in/2008/07/blog-post_16.html

    http://sivamgss.blogspot.in/2008/07/blog-post_13.html

    http://sivamgss.blogspot.in/2008/07/72_12.html// நேரம் இருக்கும்போது படிங்க பூவிழி! நன்றி. :)

    பதிலளிநீக்கு
  57. அடடா சிஸ் என்ன இது உடல் நிலை முழுவதும் குணமாகவில்லையென்று இப்போதுதான் புதன் கேள்விகளில் பார்த்தேன் படிச்சேன் இவ்வளவு பெரிய பின்னுட்டம் ஓகே சிஸ் நீங்கள் கொடுத்ததை படித்து பார்கிறேன் எனக்கு ராமனும் சீதையும் விட இப்பொழுது கிடைத்த தோழமையென்றாலும் கூட நீங்கள் தான் முக்கியம் அன்பே கடவுள் என்று நினைப்பவள் எங்குமிருக்கும் சக்தி நீக்கமற இருக்கும் சக்தி ஒரு கூட்டுக்குள் இருப்பதாக நினைப்பிப்பதில்லை உடல்நலமே முக்கியம் நான் உங்களை பார்க்க முடியாது என்றாலும் உணர்வு சொல்லும் சிறு சங்கடங்களும் உடல் நிலை சரியில்லாத போது மனம் துக்கமும் அசூயையும் கொள்ளும் நம்மையும் அறியாமல் சோ பீல் பிரீ

    பதிலளிநீக்கு
  58. வாங்க G.M.B சார் அப்படியா இது இன்னமும் வருத்தமான விஷயம்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!