வெள்ளி, 24 நவம்பர், 2017

வெள்ளி வீடியோ 171124 : சூரியனைப் பார்த்து இந்த நாய் குரைத்தது




     தேங்காய் சீனிவாசன் சில படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.  

     அவரின் ஒரு சில மேனரிஸங்கள் சிலசமயங்களில் ரசிக்கலாம்.   எவை என்று உதாரணத்துக்குச் சொல்லலாம் என்றால் கல்யாணராமன் படத்தில் அவர் டயலாக் டெலிவரி செய்யும் ஸ்டைல்.  

     கெளரவம் படத்தின் "நீயும் நானுமா?  கண்ணா நீயும் நானுமா?" பாடலுக்கு பதில் சொல்வது போல அமைந்த பாடல் இது.  இரண்டு பாடல்களை பாடியதும் டி எம் எஸ் தான்.  "ஜெயிச்சுட்டே,,,,  கண்ணா நீ ஜெயிச்சுட்டே..."    வி.  குமார் இசை.

     தேங்காய் சிவாஜியை இமிடேட் செய்தே நடித்திருப்பார்.  

     படம் கலியுகக் கண்ணன்.  தஞ்சாவூர் ராஜா கலையரங்கம் தியேட்டரில் பார்த்த படம்!  இல்லை யாகப்பாவிலோ?

     படத்தில் ஜெய்சங்கர் இருந்தாலும் தேங்காய்தான் முக்கிய வேடம், ஹீரோ!  கடவுள் மேல் நம்பிக்கை இல்லாத தேங்காய்க்கு  கிருஷ்ணர் நேரில் காட்சி தருகிறார்.  சாதாரண மனிதன் போல அவரிடம் தேங்காய் உரையாடுவார்.  ஒரு அவசரத் சமயத்தில் ஸ்வாமி காசை எடுத்து விடுகிறார் தேங்காய்,.  மனைவி பதறினாலும் இவர் பதறமாட்டார்.  இரவு மொட்டை மாடிக்கு ஸ்ரீ கிருஷ்ணன் விஜயம் நடக்கும்!  எடுத்த காசை திருப்பிக் கேட்டால் தேங்காய் அதைத் தராமல் இழுத்தடிப்பார், ஏமாற்றப் பார்ப்பார்!  அதை கண்ணன் அவன் பாணியில் எப்படி வசூல் செய்து கொள்கிறார் என்பதும், பின்னர் நல்லவராக மாறிய தேங்காய் கண்ணில் அவர் படுவதில்லை என்றதும் தேங்காய் பாடுவதாக வரும் பாடல் இது.  படத்தைப் பார்க்க விரும்பினால் இங்கு முழுப்படத்தையும் பார்க்கலாம்.  வாலி வசனம் என்பதால் நிறைய இடங்களில் ரசிக்கலாம்.

     கிருஷ்ணன் எப்படி இருந்தான்தான்பா?"  என்று ஜெய்சங்கர் கேட்டதும் தேங்காய் "அப்படியே என் டி ராமராவ் மாதிரி இருந்தார்டா" என்பார்!

     பாடல்களுடன் படத்திற்கான கதை வசனமும் கவிஞர் வாலி.

"அகந்தை பிடித்த 
சிறு குழந்தை 
பிடித்த பிடிவாதம்  
தீர்ந்தது இங்கு பாரடா 
உன்னை வென்று நின்றவன் யாரடா..."

"எட்டடுக்கு கட்டிடத்தில் ஒன்பது ஓட்டை இதில் 
நல்ல ரத்தம் உள்ளமட்டும் எத்தனை சேட்டை..."

"கொண்டு வந்ததென்ன 
கொண்டு செல்வதென்ன 
ஒன்றுமில்லையே முடிவிலே 
இதை உணர்ந்த பிள்ளை உன் மடியிலே.." 

"கண்ணா....  உன் நாடகத்திலே 
நான் ஒரு பாத்திரம் 
உனக்குமுன் 
நான் எம்மாத்திரம்?"

"தன்னை அறிந்தவர்க்கு 
தாயாய்  இருப்பவனே 
என்னை உணர்ந்து கொண்டேன் மன்னனே 
எனக்கும் கீதை 
எடுத்துரைத்த கண்ணனே..."









தமிழ்மணம்.

50 கருத்துகள்:

  1. வெள்ளி விடிந்தது துள்ளி - அது
    நலங்களைத் தந்தது அள்ளி..

    பதிலளிநீக்கு
  2. ​நன்றி துரை செல்வராஜூ ஸார். காலை வணக்கம்.​

    பதிலளிநீக்கு
  3. நானும் இந்தப் படத்தைப் பார்த்திருக்கின்றேன்... ஆனால் ராஜா கலையரங்கமா!.. நினைவில்லை...

    தேர் ஒட்டிய கண்ணன் கார் ஓட்டுவான்..
    அந்தக் காட்சியில் தியேட்டரே ஆரவாரிக்கும்...

    பதிலளிநீக்கு
  4. தமிழ்மணம் பட்டை எனக்குத் தெரியவில்லை. நண்பர்கள் யாராவது தமிழ்மணத்தில் இந்தப் பதிவை இணைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  5. சக்தி இருந்தப்போ புத்தி இல்லே..
    புத்தி இருக்கிறப்போ சக்தி இல்லே!..

    - இந்த வசனம் மிகவும் பிரசித்தம்..

    பதிலளிநீக்கு
  6. இப்படம் நான் பார்த்ததில்லை தேங்காயின் நடிப்பு வித்யாசமானது.

    ராணுவவீரன் ஸூட்டிங்கில் "அவனுக்கு கண்ணு குருடு, உனக்கு புத்தி குருடு" என்ற வசனத்தை ரஜினி சொல்லத் தெரியாமல் சொதப்பியதில் இருவருக்கும் சண்டை வந்து விட்டது.

    பதிலளிநீக்கு
  7. அருமையான பாடல்.
    பகிர்வுக்கு நன்றி.
    நீங்கள் சொன்னது போல்
    வாலியின் வசனம் நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  8. டிஎம்எஸ் குரலின் கம்பீரமும் வாலியின் பாடல் வரிகளும் காட்சியோடு அப்படியே கட்டுப்போட்டுவிடுகிறது. பாடல் பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  9. மீள்வருகை / மீள்கருத்துக்கு நன்றி துரை செல்வராஜூ ஸார்.

    பதிலளிநீக்கு
  10. வாங்க கில்லர்ஜி. படம் பார்க்கவில்லை என்றால் நான் இங்கு கொடுத்திருக்கும் லிங்க்கில் சென்று படம் பார்க்கலாம். சுவாரஸ்யமாய் இருக்கும்!

    பதிலளிநீக்கு
  11. வாங்க கோமதி அரசு மேடம். படத்திலும் நிறைய வசனங்கள் மனத்தைக் கவரும்.

    பதிலளிநீக்கு
  12. வாங்க கீதமஞ்சரி. நீண்ட நாட்களுக்குப் பின் ஒரு வருகை. நன்றி.

    பதிலளிநீக்கு
  13. நான் படம் பார்த்த ஞாபகம் இல்லை. வாலி கதை, வசனம், பாடல்கள், தயாரிப்பு என்று ஞாபகம். தேங்காயைக் கதாநாயகனாகப் போட்டு 100 நாள் ஓட்டுவது என்ற அதிசயம் (75 நாளோ) இந்தப் படத்தில் நடந்தது என்று வாலி குறிப்பிட்டிருந்தார்.

    தேங்காய் சீனிவாசனும் குடியினால் மத்திம வயதிலேயே இறந்தவர்.

    பதிலளிநீக்கு
  14. Carla driver illaama odina scene gnapagam irukku, romba sinna kuzandai naan padam partha podhu!! Sayani theater I think....

    பதிலளிநீக்கு
  15. தேங்காய் பற்றி வேறு சில தகவல்களும் உண்டு. அந்நாளில் அவர் எம் ஜி ஆர் கோஷ்டியைச் சேர்ந்தவர். பின்னர் சிவாஜியை வைத்து சில படங்கள் எடுத்தார், நிறைய சிவாஜி படங்களில் நடித்தார். அவர் ஐம்பது வயதில் மறைந்ததாய் விக்கி சொல்கிறது.

    நன்றி நெல்லை. இந்தப் பாட்டு கேட்டிருக்கிறீர்களா?

    பதிலளிநீக்கு
  16. ஓ... நீங்க சின்ன வயசிலிருந்தே சென்னைவாசியா மிகிமா? நானும் அந்தக் காட்சிகளையும், ஜெய்சங்கர் கிருஷ்ணன் கையால் சில சேஷ்டைகள் செய்யவைக்கப் படுவதையும் பார்த்து ரசித்த நினைவு இருக்கிறது. அப்போதெல்லாம் சண்டைக்கு காட்சிகள் இருந்தால்தான் படம் எங்களுக்கு ரசிக்கும். என்போன்ற ரசிகர்களுக்காகவே ஜெய் ஆரம்ப காட்சியில் ஒரு சண்டை செய்வார்!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. We moved from Chennai when I was very little and now back in Chennai.. I don't remember other things abt the film, in fact, I didn't even remember Jaisankar😃

      நீக்கு
  17. நல்ல நடிகர். இந்தப் பாடலிலும் நன்றாக
    நடித்திருப்பார். ரசித்தேன் மா.

    பதிலளிநீக்கு
  18. நன்றி வல்லிம்மா. நீங்கள் இந்தப் படம் இதுவரை பார்த்ததில்லை ஆயின், ஒருமுறை பார்க்கலாம்!!!

    பதிலளிநீக்கு
  19. பாடலைக் கேட்டிருக்கிறேன். ரசித்திருக்கிறேன். வித்தியாசமான பகிர்வு.

    பதிலளிநீக்கு
  20. இப்படத்தினைப் பார்த்துள்ளேன். உங்கள் பகிர்வு அந்நாள்களை நினைவுபடுத்தியது.

    பதிலளிநீக்கு
  21. நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

    பதிலளிநீக்கு
  22. அருமையான பாடல் பாராட்டுகள் த.ம. வாக்கு பட்டை காணோம்

    பதிலளிநீக்கு
  23. சிவாஜி அங்கிளின் கெளரவப் பாடல் போலவே இருக்கு... இதுவும் நல்லா இருக்கு ஆனா முன்பு பார்த்ததில்லை.

    போத்தல் இருக்கு ... உள்ளே மை இல்லையே:)...ஏன்ன்ன்ன்ன் ஏன்ன்ன் ஏன்ன்ன்ன்?:)..

    /// நாய் குலைத்தது////
    அச்சச்சோஒ அச்சோ டமில்க் கொலை அதுவும் தலைப்பிலேயே கொலை... ஹையோ வலையுலகில் அதிரா இல்லை எனில் டமிலைப் புதைச்சுப்போடுவினம் போல இருக்கே... விட மாய்ட்டேன்ன்ன்ன் டமிலை வாழ வைப்பேன்ன்ன்ன்ன்... தோஓஓ புறப்படுறேன்ன்ன்ன்:)...

    பதிலளிநீக்கு
  24. தேங்காயின் அதீத நடிப்பைப் பார்த்தாலே எரிச்சல் வரும்! :) ஹெஹெஹெஹெ!

    பதிலளிநீக்கு
  25. தேங்கா சீனவாசன் நடிப்பு அருமை!

    பதிலளிநீக்கு
  26. என்.எஸ்.கே, சந்திரபாபு, நாகேஷ், தேங்காய் என தமிழ்க் காமெடியன்கள் திறமை வாய்ந்தவர்கள். ஹீரோவாகப் போட்டாலும் படம் ஓடும் எனும் தைரியத்தைக் கொடுத்தவர்கள். ஓட்டியும் காண்பித்தவர்கள்.

    தேங்காயிடம் சிவாஜியிடம் இருந்ததைப் போல ஓவர்-ஆக்டிங் உண்டு. அது ஓவர்-ஆக்டிங் எனப் பார்க்கப்படாத காலமது.

    தமிழ்ச் சினிமா உலகில் இந்தக் குடி நிறைய பேரைக் காவு வாங்கியிருக்கிறது. இத்தகைய கலைஞர்களின் வண்டிகளில் ஆக்ஸலரேட்டர் இருந்திருக்கிறது. ப்ரேக் இல்லாது போனது. சோகம்.

    பதிலளிநீக்கு
  27. எனக்கு தேங்காய் ஸ்ரீனிவாசன் அவர்களை தில்லுமுல்லு படத்தில் பிடிக்கும் .
    அப்புறம் ரேடியோவில் ஒரு பாட்டு போடுவாங்க நலல இருக்கும் .அடிக்கடி கேப்பேன்
    அதை நெட்டில் தேடிப்பார்த்தா இவர் பாடறார்
    அந்த பாட்டு சின்ன புறா ஒன்று .. பாலசுப்ரமணியம் பாடினது ஹீரோயின் சித்தி :) ராதிகா

    பதிலளிநீக்கு
  28. நன்றி நண்பர் அசோகன் குப்புசாமி ஸார்.

    பதிலளிநீக்கு
  29. வாங்க அதிரா... சிவாஜியை இமிடேட் செய்வார் என்று சொன்னேனே..

    //போத்தல் இருக்கு ... உள்ளே மை இல்லையே:)..//

    எனக்கு என் கணினியில் தம பட்டையைப் பார்க்க முடியவில்லை. எனவே சப்மிட் செய்ததே அநேகமாக கில்லர்ஜியாக இருக்கலாம். எனவேதான் இப்படி! தலைப்பில் என்ன கொலை என்று அபுரி.

    பதிலளிநீக்கு
  30. வாங்க கீதாக்கா... அதைத்தான் நானே சொல்லியிருக்கேனே... ஆனாலும் இந்தப் படத்தில் சில இடங்களில் வசனங்கள் நன்றாயிருக்கும். கிருஷ்ணன் தரும் விளக்கங்கள். உங்களுக்குத் பிடிக்கும். வாலி அல்லவா!

    பதிலளிநீக்கு
  31. அதிரா....

    ////ஹெஹெஹெஹெ!//
    சிரிச்சீங்களோ கீதாக்கா?:)​//​

    ஹா..... ஹா.... ஹா.......

    பதிலளிநீக்கு
  32. நன்றி புலவர் ஐயா. நடிப்பைவிட பாடல் வரிகள்!

    பதிலளிநீக்கு
  33. முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர் விஜய் சாரதி. சரியாக சொல்லி இருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  34. வாங்க ஏஞ்சலின்...

    தில்லுமுல்லு போன்ற படங்களில் அவர் சேஷ்டை இல்லாமல் கேபி பார்த்துக் கொண்டிருந்திருப்பார். அன்பே சங்கீதா படம் பற்றி சொல்லி இருக்கிறீர்கள். முத்தான முத்தல்லவோ படத்திலும் "மார்கழி பணியில்" பாடல் காட்சியில் இசை அமைப்பாளராய் வருவார்!

    பதிலளிநீக்கு
  35. தஞ்சை ஜூபிடர் திரையரங்கம் என்று நினைவு. தேங்காய் பின்னியிருப்பார் அந்த படத்தில்...!!!

    பதிலளிநீக்கு
  36. திங்கட்கிழமை திங்கற பதிவுகளுக்குத் தத்தம் பண்ணினது போல, சினிமா விஷயங்களுக்கும் வாரத்தில் ஒரு நாள் ஒதுக்கி விடுங்கள்.

    பதிலளிநீக்கு
  37. ///தலைப்பில் என்ன கொலை என்று அபுரி.//

    நாய் குலைக்காது:) குரைக்கும்:) ஹா ஹா ஹா:) சிமியோன் ரீச்சர் சொல்லித்தந்தவ எனக்கு:)..

    பதிலளிநீக்கு
  38. நன்றி ஜீவி ஸார்... கிட்டத்தட்ட அப்படித்தான்!!!

    பதிலளிநீக்கு
  39. /நாய் குலைக்காது:) குரைக்கும்:) //

    நன்றி அதிரா

    பதிலளிநீக்கு
  40. பாடல் இப்போதுதான் அறிந்தேன். வாலியின் பாடல் வரிகள் அருமை

    பதிலளிநீக்கு
  41. துளசி: இப்படியான பாடல்கள் மறந்த நிலையில் இப்போது நினைவுக்கு வருகிறது...பல வருடங்கள் கழித்து மீண்டும்....வரிகள் நல்ல வரிகள்.

    கீதா: இந்தப்ப்பாடல் இப்பத்தான் முதல் முறையா கேக்குறேன் ஸ்ரீராம்...நீங்கள் சொன்னா மாதிரியே இமிட்டேஷன்!! எனக்குத் தேங்காயை தில்லுமுல்லுவில் பிடிக்கும்...கொஞ்சம் அடக்கி வாசித்திருப்பார்....கே பி படம் என்பதாலோ என்னமோ....

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!