செவ்வாய், 12 நவம்பர், 2024

ஷண்பகா தேவியும் அம்புஜவல்லியும் 

 மாம்ப(பா)லம்

ஸ்ரீராம் 

==============


எல்லோர் முகத்திலும் வெறுமையான பரபரப்பு...  பரபரப்பான வெறுமை... ஏதோ ஒன்று இருந்தது. பீக் அவர்ஸ் அவஸ்தை.  சென்னை பரபரப்புக்கு எத்தனை பஸ், எத்தனை எலெக்ட்ரிக் டிரெயின்கள் விட்டாலும் போதவே போதாது. ஆரம்பமாகி விட்டது மறுபடி ஒரு நாள்...  

வியர்வை நெடி, சாராய நெடி, மல்லிகை வாசனை, வித விதமான பவுடர், சென்ட்களின் நெடி... ஒற்றைக் கையால் மேலே தொங்கிய இரும்பு கைப்பிடிகளைப் பிடித்த படி கர்மவீரர்களாய் மக்கள் வெள்ளம்.

தினசரி குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட ரயிலில் பயணம் என்பதால் பெரும்பாலும் தெரிந்த முகங்கள்..  தினமும் பரபரப்பாய் காலை ஓடுவதும், மாலை களைத்த முகத்துடன் திரும்புவதும் வழக்கம். திரும்பும்போது காலை பார்த்த சில முகங்களுடன் பல புதிய முகங்களும் இருக்கும்.

எந்த ஸ்டேஷனிலும் கூட்டமில்லாமல் இல்லை.  அலை அலையாக மக்கள்...

திடீரென ட்ரெயின் நடு வழியில் நின்று விட்டது. என்ன காரணமோ...

"நின்னு போச்சு...  என்ன இழவாச்சோ...  லேட்டாறதே..." முதல் குரல்.

"தினமும் ரோதனை...  ஒரு நாளாவது ஆஃபீசுக்கு நேரத்துக்குப் போவ முடியாது..." என் ரெயில் தோழியின் குரல்.

"ஏன்..நீ சீக்கிரம் கிளம்பறது..." இன்னொருத்தி.

"இன்னிக்கி பஸ்லயாவது போயிருக்கலாம்..."

"பஸ்லயா... அங்க பார்..." ஒருத்தி கேலியாக அருகில் தெரிந்த ரோடைக் கை காட்டினாள். அனைத்து வாகனங்களும் வரிசை கட்டி அடைத்து நின்றிருந்த காட்சி எந்த ஆபீஸ் போகிறவர்களையும் கலவரப் படுத்தும்! எந்த அரசியல்வாதி நகர்வலம் போறாரோ... இல்லை என்ன போராட்டமோ...  போதாததற்கு வருடக்கணக்காய் நடக்கும் மெட்ரோ ரயில் வேலைகள் வேறு..

"இந்த தினப்படி அவஸ்தைக்கு பேசாம தற்கொலை பண்ணிக்கலாம்.." அகிலா சற்று அதிகப் படியான உணர்ச்சி காட்டினாள்.


எனக்குப் பேசக் கூடப் பொறுமை இல்லை. காலை அவருக்கும் எனக்கும் நடந்த லடாயில் மனம் நின்றிருந்தது. ."இப்படியே சண்டை போட்டீங்கன்னா ஒரு நாள் 'சட்'டென எழுதி வச்சிட்டு தூக்குல தொங்கிடுவேன்.." என்று கத்தி விட்டு வந்திருந்தேன்.  சென்ற வாரம் எங்கேயோ கண்ணில் பட்டு 'ஏதோ அம்மன் கதை' என்று நினைத்துப் படித்த சுந்தா எழுதிய ஷண்பகா தேவி என்னும்  கதை வேறு நினைவில் வந்து நிழலாடியது.  அதுதான் என்னை இந்த வார்த்தைகளை பேச வைத்ததோ என்னவோ....  என் சின்னப் பையன்தான் பயந்து போய் பார்த்துக் கொண்டிருந்தான். 

கிளம்பும்போது மெல்ல அருகில் வந்து "அம்மா...சாயங்காலம் சீக்கிரம் வந்துடு அம்மா...  நீயும் நானும் கோவில் போகலாம்னு சொல்லியிருந்தியே...  போலாம்மா..." என்றான். எனக்கு அவன் கவலையும் பயமும் புரிந்தது. சிரித்துக் கொண்டே அவன் தலையைக் கலைத்து, கன்னத்தைத் தட்டி விட்டு வந்திருந்தேன்.

"ஏய்....  அம்புஜா...  உன்னைத்தான்...என்ன கனவு? தூங்கிட்டியா..." கலாவின் குரல்.

"ச்சே..ச்சே..ஏதோ ஞாபகம்...என்ன..."

"நேத்து நைட்டு டீவில புன்னகை மன்னன் படம் போட்டானே பாத்தியான்னு கேட்டேன்..."

நடந்த சண்டையில் அதுக்கெங்கே நேரம்...

"இல்லை..பார்த்த படம்தானே..அதுக்கென்ன இப்போ..?"

"சகுந்தலாவோட பக்கத்து வீட்டுப் பொண்ணு ரெண்டு நாளுக்கு முன்னாலே கொளுத்திகிட்டு செத்துப் போச்சாம்...  தற்கொலை செய்யறது கோழைத்தனம்னு சொல்லி திட்டிகிட்டு இருந்தா...  அதான் கேட்டேன்...  அதுல எடுத்த உடனே அது மாதிரி சீன்தானே வரும்..?"

'சுருக்'கென்றது. இங்கேயும் அதே டாபிக். என்ன ஒற்றுமை. நான் ஒன்றும் சீரியஸ் ஆக தற்கொலை எண்ணத்தில் எல்லாம் இல்லை என்றாலும், காலைதான் அது மாதிரி பேசியிருந்ததால் என்னிடமிருந்து இப்படி பதில் வந்தது. 

"கோழைத்தனமா...அதுக்கு ரொம்ப துணிச்சல் வேண்டும்..."

"வாழ்க்கைக்கு பயந்து ஓடி பிரச்னைகளை எதிர்க்கத் தெம்பில்லாம சாகறதுக்குப் பேரு துணிச்சலா தங்கம்?" கேலியாகக் கேட்டாள் பிரேமா.

பக்கத்தில் நின்றிருந்த ஆண், பெண் அனைவரும் இப்போது இதை கவனித்ததுடன் அவ்வப்போது அவர்கள் கருத்தையும் சொல்லி வந்தனர்.  எனக்கு ஏனோ இந்தப் பேச்சைத் தொடர விருப்பமில்லை. மனதில் இனம் தெரியாத பயம் இருந்தது.  கதவுக்கு அருகில் நின்றிருந்தோம்.
ட்ரெயின் ஏற்கெனவே கிளம்பி ஓடிக் கொண்டிருந்தது.
    
பேச்சு ரெயில் முன் வந்து விழுபவர்கள், தூக்கில் தொங்குபவர்கள், மருந்து குடிப்பவர்கள் என்று பயங்கரமாகவே போய்க் கொண்டிருந்தது.

"என்ன சொல்லு...  அது ஒரு நொடி எண்ணம்...  அந்த நொடியில தீர்மானிச்சி செய்யறதுதான் தற்கொலை. எவ்வளவு பயங்கரமாயிருந்தாலும்...  அப்போ மட்டும் அவங்களை நிறுத்திக் காப்பாத்திட்டா போதும்..  அப்புறம் அந்த எண்ணம் வராது...  கமல் கூட ரேவதி கிட்ட அதுதான் சொல்லுவார் படத்துல..."

"இல்லடி...  நிறுத்தி திட்டம் போட்டு பல நாள் யோசிச்சி சூசைட் பண்ணிக்கிறவங்க இருக்காங்க... ஜோதி ஞாபகமில்லை உனக்கு...?

"..................................." இலேசான மௌனத் தயக்கத்துக்குப் பின் "இருக்கலாம்டி...  ஆனால் அது ரொம்பக் கம்மி..." என்றேன்.  அது எனக்கு நானே சொல்லிக்கொண்ட தைரியம் போல பட்டது!

எலெக்ட்ரிக் ட்ரெயின் சைதாப்பேட்டையிலிருந்து கிளம்பியது.

"இதையெல்லாம் வரையறை செய்ய முடியாதுங்க..." என் அருகில் நின்றவன் முதல் முறையாகப் பேசினான். இவ்வளவு நேரம் பேச்சை கவனித்துக் கொண்டே வந்திருக்கிறான் போலும். கண்ணாடி அணிந்து லேசாய் தலை கலைந்து நடுத்தர வயதை தொட்டுக் கொண்டிருக்கும் வசீகர இளைஞன்.

ரெயில் மாம்பலத்தை நெருங்கிக் கொண்டிருந்தது.

"எதுக்கு தற்கொலை முயற்சி செய்யறாங்க, என்ன கஷ்டம் இதையெல்லாம் பொறுத்தது...  சில தற்கொலைக்கு காரணமே கண்டு பிடிக்க முடியாது......... இருக்காது..." என்று நிறுத்தி புன்னகைத்தவன்,
'சட்'டெனத் திரும்பி மேம்பாலத்தைக் கடந்து கொண்டிருந்த இரயிலிருந்து கீழே குதித்தான்.

     
கீழே லாரி, பஸ்கள் கிரீச்சிட்டு நிற்கும் தாறு மாறான ஓசை நொடியில் கேட்டு தேய்ந்தது.

79 கருத்துகள்:

  1. ​Memu எலக்ட்ரிக் ட்ரெயின் மேம்பாலத்தில் செல்வதில்லை. மெட்ரோ தான் மேம்பாலத்தில் செல்கிறது. மெட்ரோ ட்ரெயின் ஓடும்போது கதவை திறக்கமுடியாது.
    இக்காரணங்களால் இது "கற்பனையே, கற்பனை அன்றி வேறில்லை" என்ற ஒப்புதலுக்கு உட்படுகிறது.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சைதையிலிருந்து மாம்பலம் செல்லும்போது ஒரு பாலம் வரும்.  கீழே ஜீவி ஸார் கூட கொடுத்திருக்கிறார் பாருங்கள்..  கால் தவறினால் கீழே சாலைதான்!   

      நுங்கம்பாக்கம் சமீபம் கூட ஒரு பாலம் வரும் என்று நினைவு.  சரியாய் நினைவில்லை.

      நீக்கு
  2. விதவிதமாக்க் கதைகள் யோசித்து எழுத வேண்டியதுதான். அதற்காக இப்படியா?

    காலையில் எழுந்தவுடன் படிக்கக்கூடிய கதையா இது?

    என்னவோ ஜீவி சார் (?) இங்கு எழுதியிருந்த ரயில் பயணத்தில் பேய்க்கதை நினைவில் வந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேற்றிரவு செல்வாண்ணாவுக்கு ஒன் டு ஒன் சென்று, 'காலை எங்கள் பிளாக் பதிவை சற்று நேரம் கழித்து படியுங்கள்' என்று சிபாரிசிக்கலாம் என்று நினைத்து மறந்து விட்டேன். 

      உங்களுக்கு(ம்) சொல்லி இருக்க வேண்டும் போல!!

      நீக்கு
  3. இரயில் பயணமென்றதும் 87-91ல் தொடர்ந்து மின்சார இரயிலில் பயணித்த காலங்கள் நினைவுக்கு வந்தன. பீக் அவர்சில் கூட்டம் இருக்கும். ஆனாலும் 90ல் ஒரு சில மும்பை மின்சார இரயில் பயணம் போல வராது. எப்படி ஏறுகிறோம் எப்படி இறங்கும் இடம் கண்டுபிடித்து இறங்குகிறோம் (இறங்குகிறோம் என்ன... கரும்புச் சக்கை போல மொத்தக் கூட்டமும் நம்முடன் பிழிந்து இறங்கும்) என்பதே புரியாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். நானும் அந்த பயணம் பற்றிய படங்களை இணையத்தில் பார்த்திருக்கிறேன். பேஜார்!

      நீக்கு
  4. சைதாப்பேட்டை ரயில் நிலையத்திலிருந்து நான் பயணித்த எலக்டிரிக் ட்ரெயின் இப்பொழுது தான் கிளம்பிய மாதிரி இருந்தது. அதற்குள் மேட்லி சுரங்கப் பாதை மேம்பாலத்தில் கடகடத்துக் கடக்கிறதே! கீழே ரோடின் நெரிசலின் வரிசை கட்டி எத்தனை பேருந்துகள்! அடுத்த வினாடியே மாம்பலம் ரயில் நிலையம். ரயில் நின்றதும் கைப்பையை எடுத்து தோளில் மாட்டிய படியே பிளாட்பாரத்தில் இறங்கினேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேலே காணும் பின்னூட்டம் ஜெஸி ஸாருக்காக.

      நீக்கு
    2. நன்றி ஜீவி ஸார்.    உங்கள் கதையிலிருந்து எடுக்கப்பட்டதா இந்த வரிகள்?

      நீக்கு

    3. ​நன்றி. சென்னைக்கு வந்தே பல காலம் ஆயிற்று. அதிலும் Memu வில் பயணித்தது இல்லை.

      நீக்கு
    4. நன்றி JKC ஸார்...   உண்மையில் நீங்கள் குறிப்பிட்டுள்ள Mainline Electric Multiple Unit.டில் தினசரி பயணம் செய்யும் - அதுவும் பீக் அவர்ஸ் என்று சொல்லப்படும் நரக நேரங்களில் - (துர்ப்) பாக்கியம் எனக்கு இல்லை. 

      அவ்வப்போது ஆறுதலான நேரங்களில் பயணித்த துண்டு.  எங்கள் ஹெட் ஆபீஸ் பெரம்பூரில் இருந்தது.  சகாயமான நேரத்தில் பயணிப்பேன்.  கூட்டம் எனக்கு வெகு அலர்ஜி!

      நீக்கு
    5. //உங்கள் கதையிலிருந்து எடுக்கப்பட்டதா இந்த வரிகள்?//

      இல்லை ஸ்ரீராம். ஜெஸி ஸார் எழுதியிருந்த இன்றைய முதல் பின்னூட்டத்தைப் பார்த்து கதையை எழுதியவர் மனம் சலிக்கக்கூடாதென்ற
      அவசரத்தில் இப்பொழுது எழுதியது தான்.

      நீக்கு
    6. இதை எழுதிய பொழுது நீங்கள் என்று அறியேன்.

      அது ஒரு சக எழுத்தாள ஆறுதலாய் என்னில் வெளிப்பட்டது.

      நீக்கு
    7. ஆஹா! நான் சொன்ன அந்த மேட்லி சப்வே இங்கு ஜீவி அண்ணாவும் சொல்லியிருக்காங்களே!

      கீதா

      நீக்கு
    8. Mainline Electric Multiple Unit.டில் //

      இந்த ரயில் பல பல அனுபவங்களைக் கண்ட ஒரு ரயில் எனலாம் ஸ்ரீராம். பலரது துக்கங்களையும் மகிழ்ச்சியையும், துர்மரணங்களையும் சுமந்து கொண்டு பயணித்துக் கொண்டிருக்கிறது இப்பவும். ஒரு சிலருக்கு முடிவைத் தேடிக் கொள்ளவும், ஒரு சிலருக்கு வடிகாலாகவும்

      கீதா

      நீக்கு
    9. உண்மைதான். சுகமான அனுபவங்கள் கம்மி. கசப்பான, திடுக்கிடும், பதறவைக்கும் அனுபவங்கள் பலப்பல.

      நீக்கு
    10. அது நான் எழுதிய கதையில் வரும் முக்கிய கதாபாத்திரத்தின் வரிகள்! கருத்திற்காக ஸ்ரீராமை சேர்த்து எனலாம் போன்ற வார்த்தைகள் ...

      கீதா

      நீக்கு
    11. திடுக்கிடும், பதறவைக்கும் அனுபவங்கள் பலப்பல.//

      ஆமாம்...

      கீதா

      நீக்கு
  5. கதையை எழுதிய மாம்பலம் ஸ்ரீராமிற்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவ்வளவு எளிமையாகக் கூட ஒரு சிறுகதையை எழுதலாம் என்று மற்றவர்களுக்கும் வழிகாட்டியிருக்கும்
      மாம்பலம் ஸ்ரீராமின் கதை அருமை.

      நீக்கு
    2. உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி ஜீவி ஸார்...   அதென்ன மாம்பலம் ஸ்ரீராம்?!!

      நீக்கு
  6. எந்த ஸ்ரீராம் என்று ரொம்ப யோசிக்க வேண்டாம். ஒரு சின்ன க்ளூ மட்டும்.
    அவர் எபி வாசகர். அல்லது எபி சம்பந்தப் பட்ட ஏதாவது குழுவைச் சார்ந்தவர். எபியில் வெளிவந்த சுந்தாவின் ஷண்பகா அருவி கதையை அவர் படித்திருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இதற்கு மேல் அவரவர் யோசனைக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அபுரி.  

      எதிர் வீட்டுக்கு செல்வதற்கு தெருவில் நம் வீட்டிலிருந்து இறங்கி, அப்படியே இடதுபுறம் திரும்பி, நம் தெரு கடந்து அடுத்த தெரு அடைந்து, சுற்றிக்கொண்டு வந்து, நம் தெரு மீண்டும் திரும்பி, எதிர் வீடு அடைவது போல இருக்கிறது!!

      நீக்கு
    2. இதை எழுதும் போது கூட நீங்கள் எழுதினது தான் என்று நிச்சயமில்லாமல் போட்ட பின்னூட்டம் தான் அது.

      இன்னொண்ணு வியாழங்களில் ஆரம்ப கட்டுரைகளையும் இந்த மாதிரி சிக்கனமான வரிகளுடன் முடித்துக் கொண்டால மற்ற விஷயங்களிக்கு அதிகம் இடம் ஒதுக்கலாம்.

      நீக்கு
    3. மனதில் கொள்கிறேன், முயற்சிக்கிறேன்.  நானும் இதை யோசித்ததுண்டு.  ஏற்கெனவே சிலமுறை முயற்சித்ததுண்டு.

      நீக்கு
  7. தற்கொலை செய்து கொள்வது என்பது நெடு நாள் யோசித்து செய்து கொள்வதில்லை.

    விரக்தியில் வெதும்பியிருக்கும் மனம் திடுக்கென்று முனைந்து செயல்படுவது.

    இதை மிகப் பிரமாதமாக எழுத்தோவியமாகத் தீட்டியிருக்கும் கதாசியர் பாராட்டுக்குரியவர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஜீவி ஸார்...   மாம்பலம் ஸ்ரீராமிடம் சொல்லி விடுகிறேன்!

      நீக்கு
    2. இல்லை, எபியின் ரா.கி.ரங்கராஜனிடம் சொல்லி விடுங்கள்.

      குமுதத்திற்கு வாய்த்த ஆபத்பாந்தவனும், அனாதரட்சகனும் அவர் தான்!

      நீக்கு
  8. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா..  வணக்கம்.  நன்றி.

      மெயில் செக் பண்ணுங்கள்.

      நீக்கு
  9. ஸ்‌ரீராம் கதை சூப்பர். எழுதிய விதம் ரொம்ப ரசித்தேன்.

    மேட்லி சப்வே அவன் விழுந்த இடம்!....பீச் டு தாம்பரம் ரயிலில் இடையில் சில சப்வேக்கள் வருமே....ஹையோ கதவருகில் நின்றால் அதைப் பார்க்கறப்ப இப்ப கதையின் முடிவை நினைக்கறப்ப கதி கலங்குகிறது. பயணித்த நினைவுகளும்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கீதா...


      எலெக்ட்ரிக் ட்ரைன் என்றாலே ஏகப்பட்ட நினைவுகள் வரும்.. கதையிலே பாத்திரமாக வந்தால் கேட்கவும் வேண்டுமா!

      நீக்கு
  10. முருகன் திருவருள் முன் நின்று காக்க..

    பதிலளிநீக்கு
  11. கதை வேண்டும் என ஞாயிறன்று கேட்டிருந்தால்
    திங்களன்று கொடுத்திருப்பேனே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிரித்து விட்டேன் நிஜமாகவே....

      அதுசரி, அவ்வளவு மோசமாகவா இருக்கிறது?  இந்த காலை முதல் படிப்பு, அபசகுனம் என்பதை எல்லாம் விட்டு விடுங்கள்!

      நீக்கு
  12. வணக்கம் சகோதரரே

    திக் திக் கதை. கதையும் எலெக்ட்ரிக் ரயிலைப் போலவே விறுவிறுவென்று செல்கிறது. சென்னையில் இருக்கும் போது இந்த ரயிலில் பயணித்து சென்றவர்கள் நினைவுக்குள் வருகின்றன.

    தற்கொலை பற்றிய எண்ணங்களுடேனேயே இருக்கும் அந்தப் பெண்ணிற்கு (கதை சொல்லும் பெண்ணிற்கு) ஏதேனும் தற்செயலாக நடந்து விடுமோ என நம் மனம் எண்ணும் முன்பு, மாறுபட்ட வகையில் எதிர் பாராமல் வேறொரு மரணம். நிறைய பேர் கஸ்டங்களுக்கு, பிரச்சனைகளுக்கு தீர்வாக இப்படித்தான் முடிவெடுக்கிறார்கள். ஆனால், சில சமயம் அந்த நேரத்திலும் உயிரை "பறிப்பவனின்" முடிவால் காப்பாற்றப்பட்டு விடுகிறார்கள். உலகில் பிறந்த எவரின் விதியை மாற்ற யாராலும் முடியாது. அவர்கள் முடிவும், ஆண்டவன் முடிவும் ஒன்று போல் அமைந்தால் அவர்கள் பிரச்சனைகள் சால்வாகலாம். (அவர்களை சார்ந்த மற்றவர்களுக்கு அது ஒரு புது பிரச்சனையாகும்.) ஆக பிரச்சனைகள் ஒரு தொடர்கதைதான்.

    நல்ல கற்பனை உணர்வோடு விரைவாக முடிந்(த்)து விடும் கதை எழுதிய தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். வாழ்த்துகள். கதை பகிர்வுக்கு நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "பயணித்து சென்றவைகள்" என திருத்திப் படிக்கவும்.

      நீக்கு
    2. // ஆனால், சில சமயம் அந்த நேரத்திலும் உயிரை "பறிப்பவனின்" முடிவால் காப்பாற்றப்பட்டு விடுகிறார்கள்.//

      ​விதி!

      //அவர்கள் முடிவும், ஆண்டவ//

      Correct. யாரார்க்கு எதுவென்று விதி போடும் பாதை.. போனாலும் வந்தாலும் அதுதான்!

      //பாராட்டுக்கள். வாழ்த்துகள். //

      நன்றி.

      நீக்கு
  13. ஸ்ரீராம் கதையை வாசித்த போது யதார்த்தம் அப்படியே....எனக்கு நிறைய உண்டு இந்த ரயிலில் பயணித்த அனுபவமும், பறக்கும் ரயிலில் பயணித்த அனுபவமும். அதுவும் பரபரப்பான காலை வேளையில். பறக்கும் ரயிலில் பேசப்படுவதை விட பீச் தாம்பரம் ரயிலில் தான் வேலைக்குச் செல்லும் பெண்கள் பேசிக் கொண்டே வருபவை பெரும்பாலும் இப்படித்தான் வீட்டுக் கதைகள், இந்த ரயிலில் தற்கொலைகள் அதிகம் என்பதால் அதைப் பற்றியும் பேசுவாங்க.

    எனவே கதையோடு ஒன்றி வாசிக்க முடிந்தது. யதார்த்தம்.

    பூ விற்பவர்கள் பூ தொடுத்துக் கொண்டே பேசுவாங்க. சிலர் அவசர அவசரமாகக் காலை உணவைச் சாப்பிடுவாங்க. சிலர் அப்போதான் தலைமுடியை விரித்துக் கட்டிக்குவாங்க...இப்படிப் பல சீன்கள் பார்க்கலாம். நானும் என் அனுபவம் வைத்து எழுதி வைத்திருந்தேன் முடித்தேனா? இல்லையான்னு நினைவே இல்லை எந்த டிஸ்கில் இருக்கோ? ஹிஹிஹி. அதன் ஒரு பகுதிக் கதை எபியில் வந்தது.. பாருங்க எனக்குத் தலைப்பே மறந்து போச்சு. பார்க்க வேண்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நானும் என் அனுபவம் வைத்து எழுதி வைத்திருந்தேன் முடித்தேனா? இல்லையான்னு நினைவே இல்லை எந்த டிஸ்கில் இருக்கோ? ஹிஹிஹி//

      ஹா..  ஹா..  ஹா..  இதுவுமா?

      நீங்கள் சொல்லி இருக்கும் வர்ணனைகளில் ஒன்று விடுபட்டு போயிருக்கிறது.  சிலர் குழுவாக பாடிக்கொண்டே வருவார்கள்.  சிலர் சீட்டாடுவார்கள்.  சிலர் ஹிந்து, நக்கீரன், ஜூவி, துக்ளக் படித்துக் கொண்டே பயணிப்பார்கள்!

      நீக்கு
    2. ஹையோ அதை நான் கீழெ சொல்ல வந்தேன் இது கண்ணில் பட்டுவிட்டது. பார்வைத் திறன் இழந்தவர்கள் உட்பட பாடிக் கொண்டே வருவாங்க பிழைப்பிற்காக.

      எழுதி வைச்சிருக்கேனே....ஆனால் கதை இப்படி இல்லை அது வேறு விதம் ஸ்ரீராம். ஏனென்றால் அப்போது பெரிதாக இருந்ததால் அதன் ஒரு பகுதியைத் தனிக் கதையாகப் பிரித்து இங்கு வந்தது. தலைப்பு என்னன்னு மறந்து போச்!

      கீதா

      நீக்கு
    3. எழுதிய வரை திருத்தி அனுப்புங்களேன்...

      நீக்கு
  14. பழைமை, கலாச்சாரம் என்பதிலேயே ஊறிக் கிடந்து விட்டேன்...

    என்னை என்னால் உலர வைத்துக் கொள்ள முடியவில்லை ஸ்ரீராம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதெல்லாம் யதார்த்தம் செல்வாண்ணா...  இன்றைய காலகட்டத்தில் இதெல்லாம் சகஜமாகி விட்டன. 

      நீக்கு
  15. கதையில் அந்தப் பெண் பேசுவதிலிருந்து தெரிந்தது அவள் கண்டிப்பாகத் முடிவுக்குத் தயாரில்லை என்று. அந்தப் பையன் என்ட்ரி கதையில் வந்ததும் கரெக்ட் இந்தப் பையன் தான் என்று முடிவு செய்தப்ப....கதை முடிந்துவிட்டது!

    முடித்த விதம் சூப்பர். வாசகர்கள் எப்படி வேண்டுமானாலும் ஊகித்துக் கொள்ளலாம்.

    படத்தில் கமலும் ரேகாவும் தற்கொலையில் கமல் மரக்கிளையில் மாட்டிக்கலையா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவள் கண்டிப்பாக தயாரில்லை என்று உறுதியாக சொல்ல முடியாது கீதா... இதற்கு இன்னும் இரண்டு முடிவுகள் பின்னர் யோசித்தேன். ஆனால் மாற்ற மனம் வரவில்லை!

      நீக்கு
  16. ஸ்ரீராம் குடோச் கை கொடுத்துப் பாராட்டுகிறேன் உங்க திறமைக்கு என்னன்னு புருவம் உயர்த்துகிறீர்களா கேள்வி குறியாய்!!!! எனக்கு இந்தத் திறமை கிடையாது அதாங்க செண்பகா தேவி கதையை ன் வாசித்ததும் டக்குன்னு உங்களுக்கு உதிச்சிருக்கு பாருங்க அந்தக் கற்பனையை...

    எனக்கும் அந்தக் கதையை வேறொரு ஆங்கிளில் ட்ரீட் பண்ண தோன்றியது ஆனா பாருங்க....எழுத முனையவில்லை. வழக்கமான பிள்ளையார்ச்சுழி கூடப் போடலை!

    பாராட்டுகள் ஸ்ரீராம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு உதித்த கற்பனை....   ம்ம்ம்..  சரிதான்.  தோன்றும்தானே?

      நீக்கு
  17. தற்கொலை செய்து கொள்வது என்பது நெடு நாள் யோசித்து செய்து கொள்வதில்லை.

    விரக்தியில் வெதும்பியிருக்கும் மனம் திடுக்கென்று முனைந்து செயல்படுவது.//

    இந்த வரிகளும், கடைசி வரியில் //சில தற்கொலைக்கு காரணமே கண்டு பிடிக்க முடியாது......... இருக்காது..." அந்தப் பையன் சொல்வது மிக மிக யதார்த்தமான உளவியல் ரீதியான ஒன்று, ஸ்ரீராம். வரிகள் எல்லாமே ரொம்ப யதார்த்தம்.

    //வியர்வை நெடி, சாராய நெடி, மல்லிகை வாசனை, வித விதமான பவுடர், சென்ட்களின் நெடி... //

    அப்படியே! டிட்டோ. ஹையோ அதுவும் ஆண்கள் நடுவில் நாம் சிக்கிக் கொண்டால் சாராய நெடி....ஹூஃப்....

    வீட்டில் முதல் நாள் கணவனுக்கும் மனைவிக்கும் நடந்த சண்டைகள் கோபம் எல்லாம் ரயிலில் தான் பேசப்படும் ஒரு வடிகால் என்றும் கூடச் சொல்லிக் கொள்ளலாம். பெண்கள் பெட்டி என்றால் இன்னும் பல கதைகள் கிடைக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பெண்கள் பெட்டி என்றால் இன்னும் பல கதைகள் கிடைக்கும். //

      ஹிஹிஹி...   நான் கொஞ்சம் கூச்ச ஸ்வபாவம்!  அதோடு TTR விடமாட்டாரே...

      நீக்கு
    2. ஹாஹாஹாஹ சிரித்துவிட்டேன் ஸ்ரீராம்.

      கீதா

      நீக்கு
  18. ​நான் படிச்ச கதை பகுதியில் வந்த எம் வி வெங்கட்ராமின் "பயித்திக்கார பிள்ளை" ராஜம் ட்ரைனில் விழுந்து இறப்பது பற்றி யாரும் சொல்லவில்லையே?

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அண்ணா கதை நினைவு இருந்தது. அந்த அம்மா கேரக்டர். அவள் வாயில் வரும் வார்த்தைகள்....ராஜம் கேரக்டர். அவன் ரயிலில் இருந்து விழமாட்டானே, ரயில் வரும் போது நிற்பான் ஆனால் எஞ்சின் கடந்துவிடும், அதன் பின் பெட்டிகளுக்கு நடுவில் விழுவான். கதையின் தலைப்புதான் டக்கென்று பிடிபடவில்லை... இப்ப நீங்க இங்க சொன்னதும் ஆ என்று நினைவுவந்தது தலைப்பு.

      கீதா.

      நீக்கு
  19. மிக அருமையாக கதையை நடத்திச் சென்றிருக்கிறீர்கள் ஸ்ரீராம்! தற்கொலைக்கான பயம், தற்கொலையைக்கூட ஒருவன் திட்டமிட்டு அசால்ட்டாக செய்து கொண்ட விதம் என்று பல்வேறு மன உனர்வுகளை அருமையாக கையாண்டிருக்கிறீர்கள்!
    பல சமயங்களில் அந்த நேரத்து மன அழுத்தத்தில் பல தற்கொலைகள் நடந்தாலும் சில சமயங்களில் இப்படித்தான் தான் இறக்க வேண்டும் என்று திட்டமிட்டும் நடக்கின்றன!
    பல வருடங்களுக்கு முன்னால் என் அப்பாவின் சினேகிதர் -எங்கள் நிலங்களை குத்தகை பார்த்துக் கொண்டிருந்தவர்- திடீரென்று ஒரு போஸ்ட் கார்டில் ' குத்தகை பண விவகாரங்கள், கணக்குகள் எல்லாவற்றையும் விவரமாக எழுதி, ' உங்களிடம் எல்லாவற்றையும் ஒப்படைத்து விட்டேன். சுவாமி மலை முருகனிடம் என்னை ஒப்படைத்துக்கொள்ளப்போகிறேன்' என்று அறிவித்திருந்தார். என் அப்பா கண்ணீருடன் அங்கே போனபோது முருகன் சன்னதி எதிரே அவர் மரணித்திருந்தார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி மனோ அக்கா..    பாராட்டுக்கள் ஊக்கமளிக்கின்றன...

      உங்கள் அப்பாவின் நண்பர் வாழ்வின் முடிவு சோகம்.  ஆனால் கோவிலுக்குள்ளா மரணம் நிகழ்ந்திருந்தது?  எப்படி ஆயினும் அவருக்கு எப்படி முன்னரே தெரிந்திருந்தது?  முன்னரே அறிந்து கொண்ட முடிவா, தற்கொலையா?

      நீக்கு
    2. நான் தான் தெளிவாகக் குறிப்பிடவில்லை போலிருக்கிறது ஸ்ரீராம்! அவர் கோவிலுக்குள் தூக்கு மாட்டிக்கொண்டு இறந்தார் என்று தான் பின்னால் அப்பா சொன்னார்கள்!

      நீக்கு
  20. தற்கொலை என்பது மனத்தாக்கத்தால் ஏற்படுவதுதான். உடனே உயிரைமாய்ப்போரும். பலநாள் மனத்தாக்கத்தால் பாதிக்கப்பட்டு மாய்போரும் உள்ளனர்தான்.

    இக் கதை இதைப்பற்றிய அலசல்களுடன் சென்று,

    இறுதியில் பதறவைத்தது கதை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தனிமைப்பட்டு தத்தளிக்கும் மனம் என்ன முடிவு எப்போது எடுக்கும் என்று சொல்ல முடியாது அல்லவா மாதேவி? 

      சிலருக்கு வாழ்வைத் தொடரும் தைரியம்..  சிலருக்கு முடித்துக் கொள்ளும் தைரியம், அவசரம்.. அவலம்.

      நீக்கு
  21. உங்களுக்கு நேரமில்லை என்பதற்காக, அவசர அவசரமாக ஒருவரைக் கீழே தள்ளி விட்டுக் கதையை முடிக்கலாமோ ஹா ஹா ஹா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அதிரா... எனக்கு நேரமில்லை என்பது தவறு. அவன் நேரம் முடிந்து விட்டது! ஹா.. ஹா.. ஹா...

      நீக்கு
  22. மாம்பலம் ஸ்ரீராம், எனப் பார்த்ததும், இது எங்கள் புளொக் ஸ்ரீராமில்லையாக்கும்... ஏழில ஒன்றாக்கும் என அவசரப்பட்டு நினைச்சிட்டனே:))...

    குட்டிக் கதை நன்றாக இருக்குது ஸ்ரீராம், ஓவராக அலட்டாமல், ஜவ்வுபோல இழுக்காமல் ஒரு குட்டிக் கட்டுரையாக எழுதியிருக்கிறீங்கள்...
    என்னதான் கற்பனைக் கதை எனினும், டெய்லி வாழ்க்கையில் நடப்பவற்றைத்தான் கோர்த்து எழுதியிருக்கிறீங்க, முடிவு தவிர்த்து கதை நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் அதில் சுட்டி கொடுத்திருக்கும் செண்பகா தேவி கதை சென்று வாசித்தீர்களோ....

      மாம்பாலம் என்பது தலைப்பாக்கும்!

      நீக்கு
    2. சுட்டி எங்கே ஸ்ரீராம்?? தேடிப் பார்த்தேன் தெரியவில்லை...

      நீக்கு
    3. கதையில் இரண்டாவது படத்துக்கு கீழே உள்ள பாராவில் "சுந்தா எழுதிய ஷண்பகா தேவி" என்னும் வரியில் சுட்டி இருக்கிறது அதிரா.

      நீக்கு
    4. ஹையோ ஸ்ரீராம், கொஞ்சம் இங்கின வாங்கோ ஸ்ரீராம்:), நீங்கள் இப்போ ஓய்வாகி இருப்பதால் நேரம் இருக்கும்தானே, வந்து என் ஜொந்தக் கதை ஜோகக்கதையைக் கொஞ்சம் கேளுங்கோ.. ஹா ஹா ஹா.

      அதுக்கு முன்னர் ஒன்று ஜொள்ளுறேன் கேளுங்கோ, எப்பவும் சுட்டி இணைச்சால், அந்த சொற்களுக்கு கலர் கொடுக்கோணும் அத்தோடு அண்டலைன் பண்ணி விடோணும் அப்போதான் பார்ப்போர் கையை வச்சு அமத்திப் பார்ப்பினம், இது எந்த மாற்றமுமில்லாமல் சுட்டி இணைச்சால், பேசாமல் வாசிச்சுப்போட்டுப் போய்விடுவோமெல்லோ... எப்படித் தெரியும் சுட்டி இணைச்சிருப்பது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

      அதிரா புளொக் எழுதாமல் விட்டதாலதான் இவ்ளோ பிரச்சனை நாட்டில நடக்குது போலும்:).. சரி சரி நான் மற்றருக்கு வாறேன்...அடுத்து..

      நீக்கு
    5. அது என்னவெனில், செண்பகாதேவி கதை படிச்சிட்டீங்களோ எனக் கேட்டீங்கதானே, தெரியாமல் தவிச்சு பின்பு சுட்டி இணைத்துள்ளேன் எனச் சொல்லி, 2ம் படத்துக்குக் கீழே எனக் க்குளூ.. இது வேற குளூவும் தந்ததால, லப்ரொப்பில அவசரமாகத் தேடினேன் கிடைக்கவில்லை...
      விட்டுப்போட்டு, பின்பு கஸ்டப்பட்டு ஐபாட்டில் இந்த போஸ்ட்டைத் திறந்து[பலசமயம் அதில் திறக்காது, இது டக்கெனத் திறந்தது:)].. அப்போ அது ரச் ஸ்கிறீந்தானே... அதனால ..
      கையால தடவினேன் .., திருநாவுக்கரசர் தேவாரம் பாடக் கதவு டமால் எனத் திறந்ததாமே.. அதுபோல திறந்து செண்பகாதேவியிடம் கொண்டு சென்று விட்டது, கதையைப் படிச்சுப் போட்டுக் கொமெண்ட்டை பாதி தட்டியபின் பார்த்தால் அது அதீஸ்பலஸ் மெயிலில நிற்குது.... ஆண்டவா எதுக்காக இவ்ளோ ஜோதனை என நினைச்சுப்போட்டு அனைத்தையும் மூடிட்டு விட்டிட்டேன், பின்பு லப்ரொபிலேயே பதில் போடுவோம் என... ஓடாதையுங்கோ நில்லுங்கோ என் கதை இன்னும் முடியவில்லைத் தொடருது ஹா ஹா ஹா....

      நீக்கு
    6. பின்பு இப்போதான் நேரம் கிடைச்சது, வந்தால் எந்தப் போஸ்ட்டில் சுட்டி இணைச்சனீங்களெனத் தெரியவில்லை:).. அதனால சைட்பார் ல பார்த்தேன் செண்பகாதேவி என இருந்துதா... அதிலதான் சுட்டி இருக்கோணும் எனத் திறந்து வச்சுப்போட்டு... 2 வது படத்துக்கு கீழே எனச் சொன்னது நினைவிருப்பதால், தேடினேன் தேடினேன் ஒரு படம் மட்டும்தான் இருக்கு.. இது என்ன கொடுமை என, நிதானமாக படிச்சால் அதுதான் கதையே ஹா ஹா ஹா [அது பழைய காலத்தில் எப்பவோ எழுதிய போஸ்ட்டாக்கும் என நானே முடிவெடுத்தமையால், சைட் பார்ல இருக்கும் என எதிர்பார்க்கவில்லை]]]...
      பின்புதான், இந்தப் போஸ்ட்டைத் திறந்து இவ்வளவையும் எழுதிட்டேன்.. சரி ஸ்ரீராம் இனிப்போய்ப் புதுப்போஸ்ட்டை ரெடி பண்ணுங்கோ..

      ஏன் இவ்வளவையும் சொன்னேன் எனில், எவ்ளோ கஸ்டப்பட்டு அந்தக்கதை படிச்சேன் என உங்களுக்கும் தெரியோணுமெல்லோ ஹா ஹா ஹா.. இனி கதையில எழுதுகிறேன் கதை பற்றி.

      நீக்கு
  23. ஸ்ரீராம் நீங்க ஓட்டோவில்தானே போய் வருவதாக முன்பு சொன்னதாக ஞாபகம், எப்போ ரெயினுக்கு மாறினனீங்கள்?... அமைதியாக இருந்து, பெண்கள் பேசுவதை எல்லாம் அப்படியே ரெக்கோர்ட் பண்ணிட்டீங்க ஹா ஹா ஹா.. நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் ஓய்வு பெற்று ஆறு மாதங்களாகி விட்டன அதிரா...  எனவே நோ ஆட்டோ!  கொரோனாவுக்கு முந்தையதான மிகப் பழைய அனுபவத்தில் கேட்டவற்றை வைத்து எழுதியதாக்கும் இது.

      நீக்கு
  24. ஏனோ தெரியவில்லை, பல நேரங்களில் என் லப்ரொப் பில் உள்ள தமிழ் பொண்ட் பிரீஸ் ஆகிடுது, ரீ ஸ்ராட் பண்ணினானும் வராதாம், அதனால நிறையத்தடவை விட்டிட்டுப் போயிருக்கிறேன்.
    எனக்கு கொப்பி பேஸ்ட் எல்லாம் பிடிக்காது, வந்தமா... கடகடவென நேரே ரைப் பண்ணி அனுப்பினமா என போயிட்டே இருக்கோணும்:))

    ஓகே மீண்டும் ஜந்திப்போம்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடா...   எல்லோருக்கும் ஏதாவது பிரச்னை வந்து விடுகிறது.  அதிலும் அதிரா இவ்வளவு நாள் கழித்து இந்தப் பக்கம் எல்லாம் வரும்போதா இப்படி பிரச்னை வரவேண்டும்?

      நீக்கு
  25. அவசரமாக எழதப்பட்டதை போல தெரிகிறது. இன்னும் கொஞ்சம் ஊறப்போட்டு விட்டு எழுதியிருக்கலாம். முடிவை யூகிக்க முடிகிறது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!