வெள்ளி, 15 நவம்பர், 2024

வேனில் காலப் பூஞ்சோலை.... கோடை காலம் நீரோடை..... நினைவெல்லாம் நீ...

ஆத்தூர் M பெரியசாமி பாடலுக்கு இசை அமைத்து பாடி இருக்கிறார்கள் சூலமங்கலம் சகோதரிகள்.

சேவல் கூவியே ஞாலம் விழித்தது,
செந்தில் தேவனின் கோவிலில் பாடலும் ஒலித்தது..
ஒலித்தது. ஒலி...ஒலித்தது, ஒலி...ஒலித்தது,
ஆவலும் மீறிட உள்ளம் துடித்தது
ஆலயங்கள் தோறும் மணிகள் அடித்தது.

ஆறுமுகன் பேர் சொல்லி அடியவர்கள் பாட,
ஆனந்தக் கடலிலே காவடிகள் ஆட,
ஆறுமுகன் பேர் சொல்லி அடியவர்கள் பாட,
ஆனந்தக் கடலிலே காவடிகள் ஆட
தேடுகின்ற கண்களெல்லாம் முருகனையே தேட
தேடுகின்ற கண்களெல்லாம் முருகனையே தேட
சீறுகின்ற சதங்கை ஒலி சேயிழையார் ஆட
சீறுகின்ற சதங்கை ஒலி சேயிழையார் ஆட​ - 
சேவல் கூவியே ஞாலம் விழித்தது

சீராகத் திருப்புகழை தேவர்களும் பாட,
சீறி வந்த சூரனும் பகைவர்களும் ஓட
சீராகத் திருப்புகழை தேவர்களும் பாட,
சீறி வந்த சூரனும் பகைவர்களும் ஓட
சித்தர்களும் வித்தர்களும் முக்தியினைத்தேட
சித்தர்களும் வித்தர்களும் முக்தியினைத்தேட
சித்துகள் விளையாடி வரும் சிவன்மகனை நாட
சித்துகள் விளையாடி வரும் சிவன்மகனை நாட
சேவல்​ கூவியே கூவி ஞாலம் விழித்தது...


===============================================================================================

கடந்த அக்டோபர் 18 ஆம் தேதி பகிர்ந்த 'கழுகு' படத்திலிருந்து இன்னுமொரு பாடல்.  இந்தப் பாடலைப் பாடி இருப்பவர் மேலே தனிப்பாடலைப் பாடி இருக்கும் சூலமங்கலம் சகோதரிகளில் சூலமங்கலம் ராஜலக்ஷ்மியின் மகன் முரளி. 

பஞ்சு அருணாசலத்தின் பாடல் வரிகளுக்கு இசை இளையராஜா.  முழுக்க முழுக்க இளையராஜா இளையராஜா இளையராஜாதான்.  அப்புறம் முரளி.

காதல் என்னும் கோவில் கட்டி வைத்தேன் நெஞ்சில்
காதல் என்னும் கோவில் கட்டி வைத்தேன் நெஞ்சில்
பூஜை செய்தேன் பாட்டிசைத்தேன்
தேவி வந்தாள் நேரில்   -  காதல் என்னும் கோவில்

பூவோடு பொன்னலங்காரம்
பார்த்தாலே என் நெஞ்சாறும்
BHபாவம் ஆயிரம்
வேனில் காலப் பூஞ்சோலை
கோடை காலம் நீரோடை
வேனில் காலப் பூஞ்சோலை
கோடை காலம் நீரோடை
நினைவெல்லாம் நீ   -  காதல் என்னும் கோவில்

காலங்கள் பொன்னாகட்டும்
தீபங்கள் கொண்டாடடும்
நாளும் வாழ்விலே
நீயில்லாமல் நானில்லை
தேனில்லாத பூவில்லை
நீயில்லாமல் நானில்லை
தேனில்லாத பூவில்லை
மனமெல்லாம் நீ    -     காதல் என்னும் கோவில்

39 கருத்துகள்:

  1. சூலமங்கலம் பாடல் ஆஹா... எத்தனை முறை கேட்ட பாடல்.

    சேவல் கூவி ஞாலம்.... கூவியே அல்ல

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) மீதேன் 1ஸ்ட்டூஊஊஊஉ:))

      நீக்கு
    2. வணக்கம் சகோதரி.

      ஆஹா.. சகோதரி அதிரா அவர்களின் இந்தப் பாடலை கேட்டு எவ்வளவு நாட்களாகி விட்டது. வெல்கம் அதிரா சகோதரி. காலை வணக்கம். நன்றி தங்களின் அன்பான வருகைக்கு.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. வாங்க நெல்லை...

      சேவல் கூவி என்றுதான் டைப்பினேன், தலைப்பைப் பார்த்து.  கேட்கும்போது கூவிக்கும் ஞாலத்துக்கும் நடுவில் சில மாத்திரை குறைகிறது.  வி என்கிற எழுத்தை வைத்து பாடலை நீட்டிக்க முடியாது.  சிரமம்.  ஏகாரம் கொஞ்சம் ஒத்து வரும்.  கூவிட என்று யோசித்தால் டகாரமும் சரியாக வராது.  எனவே கூவியே என்று டைப்பினேன்.

      நீக்கு
    4. வாங்க அதிரா, வாங்க கமலா அக்கா...  .!   வணக்க்க்க்க்க்க்க்க்க்கம்.

      நீக்கு
    5. நன்றி கமலாக்கா நன்றி ஸ்ரீராம்.... நித்திரை வரவில்லை, அதனால எட்டிப் பார்த்திட்டு ஓடிட்டேன்")

      நீக்கு
  2. பாட்டு வரிகளைப் படித்தபின்னும் இரண்டாவது பாடல் நினைவுக்கு வரவில்லை. ஹாஸ்டலில் இந்தப் பாடலை ஒலிக்கவிடவில்லை எனத் தோன்றுகிறது. காணொளி கேட்டபின், பாடலை முன்பு கேட்ட நினைவு வந்தது. அருமையான பாடல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். 

      இளையராஜா சூலமங்கலம் ராஜலக்ஷ்மி மகனுக்கு வாய்ப்பு கொடுத்திருப்பதோடு, இந்தப் பாடலின் bhaaவத்துக்கு ஏற்ற குரல்.

      நீக்கு
  3. பதில்கள்
    1. பர்ஸ்ட்டூ, செகண்டூ  எல்லாம் ஓகே மேடம்...   ஏதாவது கருத்து சொல்லுங்கோ....

      நீக்கு
    2. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:), பூஜை ஆகமுன்னம் சன்னதம் கொள்ளக்கூடா தெரியுமோ:)

      நீக்கு
  4. இரு பாடல்களும் கேட்டதாக இல்லை, சூலமங்கலம் சகோதரிகளின் கந்தசஸ்டி கவசம் தான் அடிக்கடி கேட்பேன்....
    ரஜனி அங்கிள் உப்பூடி உருண்டு பிரள்றாரே ஹா ஹா ஹா எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்... நான் பின்பு வருகிறேன்ன்:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சூலமங்கலம் சகோதரிகளின் 99& பாடல்கள் கேட்க மிக இனிமையானவை. பக்திப்பாடல்களுக்கென்ற கடவுள் கொடுத்து விட்ட குரல்.

      நீக்கு
  5. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள் அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    இன்றைய வெள்ளி பாடல் பகிர்வில் முதல் பாடல் அடிக்கடி கேட்டு ரசித்திருக்கிறேன். ஒலித்தது என்ற இறுதி வார்த்தைகளின் எக்கோ அருமையாக இருக்கும். அடிக்கடி கேட்ட பாடல்.

    இரண்டாவது திரைப்பட பாடல் இதுவரை கேட்டதில்லை. இப்போதுதான் கேட்கிறேன். சூலமங்கலம் சகோதரியின் மகன் முரளி அவர்களின் குரலில் பல பாடல்கள் உள்ளதென நினைக்கிறேன். எனக்குத்தான் சட்டென சொல்லத் தெரியவில்லை. பாடலைப் பற்றி தாங்கள் தந்த விபரங்களுக்கு நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அக்கா...  அந்த 'ஒலித்தது...   ஒலி...  ஒலித்தது' என்னும் இடம் ரசிக்கத்தக்கதாயிருக்கும்.

      முரளி எனக்குத் தெரிந்து இந்த ஒரு பாடல்தான் பாடி இருக்கிறார்.  அவர் ஒரு இசைக்குழு வைத்திருக்கிறார் என்று படித்திருக்கிறேன்.

      நீக்கு
  7. முருகன் திருவருள் முன் நின்று காக்க

    பதிலளிநீக்கு
  8. நேற்று அதிகாலையில் இருந்து மதியம் வரை நல்ல மழை..

    இன்றும் அப்படியே...

    மகிழ்ச்சியாய் இருக்கின்றது...

    வறட்டு சென்னையில் பெய்வதற்கு தஞ்சைப் பகுதியில் பெய்வது எவ்வளவோ நல்லது..

    வாழ்க வளம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // வறட்டு சென்னையில் பெய்வதற்கு //

      Grrrrrr... நிலத்தடியில் தண்ணீர் வேண்டாமா... இங்கிருக்கும் ஓராயிரம் பிளாட்களில் இருக்கும் பல்லாயிரக்கணக்கான குடும்பங்களுக்கு தண்ணீர் வேண்டாமா?

      நீக்கு
  9. முதல் பாடல் பலமுறை கேட்டு திளைத்த பாடல்..

    இது பிராய்லர்களின் காலம்..

    சேவலாவது கோழியாவது?

    பதிலளிநீக்கு
  10. ரசினியின் ஒருசில படங்களே மனதுக்கு நெருக்கமானவை..

    அந்தப் பட்டியலில் கழுகு காக்காய் இல்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படம் கமர்ஷியல் மசாலா.  அதையும் ரசிக்கலாம்.

      ஆனால் இங்கு படமோ, ரஜினியோ மேட்டர் அல்ல.  இளையராஜாவும், பாடலும்தான்.

      நீக்கு
  11. பல்லாயிரக்கணக்கான குடும்பங்களுக்கு தண்ணீர் வேண்டாமா?..

    சென்னையின் நீர் ஆதாரங்களில் போதுமான நீர் இல்லையாமே...

    தொலை நோக்குப் பார்வை அருமை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது என்றைக்கு இருந்திருக்கிறது? 

      கர்நாடகாவிலிருந்து வம்படியாக காவிரி நீர் வாங்கி ஆறு குடம் உபயோகித்து விட்டு ஆயிரம் குடங்களை கடலுக்கு அனுப்பும் பரம்பரை நாங்கள்...

      நீக்கு
  12. வறட்டு சென்னை என்றது விவசாயம் இல்லாத சென்னை என்பதற்காக!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொஞ்சம் சென்னையைச் சுற்றியுள்ள சிறு ஊர்களுக்குள் நுழைந்தால் இன்னமும் பசுமையை தரிசிக்க முடிகிறது.

      நீக்கு
    2. /// சென்னையைச் சுற்றியுள்ள சிறு ஊர்களுக்குள்.. ///
      சென்னையைச் சுற்றியுள்ள சிறு ஊர்கள் - சுற்றியுள்ள ஊர்கள் தான்.. அவை சென்னை என்றாவதில்லை..

      சென்னையை அடுத்துள்ள செங்கல்பட்டு என்பதைப் போலத் தான்..

      அந்ர ஊரின் பசுமை
      அந்த ஊர் மக்களின் உழைப்பு.. அதில் சென்னைக்கு பங்கு எதற்கு?..

      நீக்கு
  13. ஐரோப்பியர்கள் தங்களுக்குள் அடித்துக் கொண்ட போது தற்போதைய சென்னை - சென்னப்ப நாயக்கர் பேரில் மீனவர் கிராமம் தானே..

    அப்போது திருமயிலை திரு அல்லிக்கேணி, திரு ஒற்றியூர் திருவான்மியூர்,திருவேற்காடு
    என்றெல்லாம் பெரிய ஊர்கள் இருந்தனவே..

    பதிலளிநீக்கு
  14. ஸ்ரீராம் முதல் பாடல் ஆஹா ஆஹா பல முறை கேட்டு ரசித்த பாடல்! அதுவும் அந்த ஒலித்தது ஒலித்ததுன்னு சொல்லும் இடம் இருக்கு பாருங்க....

    சூலமங்கலம் சகோதரிகள் பக்தி பாடல்கள் பாடன்னே அண்ட சக்தி இந்த பூமிக்கு அனுப்பிருக்கும்னு நினைக்கிறேன் கணீர் குரல்...பாடும் விதம் எல்லாமே மனதுல் ரீங்காரமிடும்.

    முதல் பாடல் இப்பவும் கேட்டுக் கொண்டே கருத்தை அடித்தே ந். இங்கு போடுகிறேன். மீண்டும் கேட்க தனி டாபில் ஓப்பன் செய்துவைத்துவிட்டேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கீதா.. வழக்கத்துக்கு மாறாக இன்றைய இரண்டு பாடல்களையும் நானே காலையிலிருந்து இரண்டு முறை கேட்டு விட்டேன்.

      நீக்கு
  15. கழுகு பாடலில் ஆரம்ப இசை மெலடியில் தொடங்கி அப்படியே மாறுகிறது! சூப்பர்.

    பாடல் கேட்டதில்லை ஸ்ரீராம். சூலமங்கலம் ராஜலக்ஷ்மியின் மகன் முரளியா! நீங்க சொல்லியிருந்தீங்க முன்பு ஒரு பாடலில் இவர் பாடியதை...அப்போதான் இவரைப் பற்றித் தெரிந்து கொண்டேன்

    குரல் சூப்பராக இருக்கிறது. நன்றாகப் பொருந்திப் போகிறது இல்லையா ஸ்ரீராம்?

    முதல் முறையாகக் கேட்கிறேன் இந்தப் பாடலை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆரம்ப இசை எலும்பில் ஊடுருவும் பனி போல இசை.  அப்புறம் ஆரம்பத்துக்கான ஆரம்பம்.  காதல் என்னும் கோவில் வரியையும் கட்டி வைத்தேன் நெஞ்சில் வரியையும் முதல் முறை பாடும்போது ஸ்பெஷல் இசை இல்லாமல் அப்படியே..  சரணத்துக்குப் பின் இந்த வரிகளுக்கிடையே பரபரப்பான ஒரு வயலின் இசை போடுவார்.  இண்டர்லூடில் இசை நழுவி எங்கோ சென்று சட்டென சரணத்துக்காக ஒரு யு டர்ன் அடித்துத் திரும்பி சிறிய ஓரிழை ஸ்ட்ரிங் இசையைத் தொடர்ந்து வயலினில் நுழைந்து...

      நீக்கு
  16. ஆகா ! வெள்ளி பக்திப்பாடல் கேட்டதில்லை. இப்பொழுதுதான் கேட்கிறேன் அருமை.

    இரண்டாவது பாடல் கேட்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!