21.10.25

கஸ்தூரி விஜயம்

முன்னுரை : சென்ற வாரம் பொக்கிஷம் என்ற தலைப்பில் சுஜாதா ரங்கராஜன் சாதாரண எஸ் ரங்கராஜனாக முதன்முதலாக எழுதிய கதையைப் பார்த்தோம்.  அப்போது சொல்லி இருந்தேன், இதை இப்போதுதான் படிக்கிறேன் என்றாலும் இன்றைக்கு சரியாக பத்து வருடங்களுக்கு (6 நாட்கள் குறைவு!) முன் நானும் இப்படி ஒரு கதை எழுதி இருந்தேன் என்று.  அதை இங்கு மீள் பதிவு செய்கிறேன்.  அதற்கு முன் நான் எழுதிய ஒரு கவிதை வடிவத்திலிருந்து இன்ஸ்பைர் ஆகி நான் எழுதிய கதை இது.  அதற்கும் லிங்க் கொடுத்திருக்கிறேன்!

******************************

சென்ற வாரம் வெளியிடப்பட்ட சுஜாதா கதையை படிக்க இங்கு க்ளிக் செய்யவும்.

கற்பழிச்சா எனக்குப் பிடிக்காதே ராகவன்.....


தான் எழுதிக் கொண்டிருந்த தொடர் கதையின் அடுத்த அத்தியாயத்தை எழுதுவதற்காக உட்கார்ந்திருந்தான் ராகவன்.  எதிரில் ஒரு ஷீட் பேப்பர் கொஞ்சம் எழுதப்பட்ட எழுத்துகளுடன் படபடத்துக் கொண்டிருந்தது.
 
வர்ணனை சரியாக வரவில்லை.  இவன் எழுத்துகள் எப்போதும் வரவேற்பையும், எதிர்ப்பையும் ஒரே சமயத்தில் கிளப்பும்.  விபரீத எழுத்தாளன்.  சர்ச்சைகளுக்குப் பேர் போனவன்!   
 
இப்போது அவன் கதையின் நாயகி கற்பழிக்கப்படப் போகிறாள்.  அதை எழுத வேண்டும்.
 
எதிரில் இருந்த ஆப்பிளை எடுத்துக் கத்தியால் தோல் சீவினான்.  கூர்மையான கத்தி விரலைப் பதம் பார்க்க 'ஸ்ஸ்..' என்று கையை உதறி எழுந்து வாஷ் பேசினுக்குச் சென்றான்.
 
விரலை வாய்க்குள் வைத்துச் சப்பிக் கொண்டே திரும்பிப் பார்த்தபோது டேபிளின் அருகே யாரோ இருந்தது போலிருந்தது. 
 
'ச்சே' என்று தலையை உதறிக் கொண்டவன்,  ஃப்ரிட்ஜிலிருந்து பாட்டிலை எடுத்து உதட்டுக்குள் சொருகிக் கொண்டான்.  திரும்பும்போது மறுபடியும் டேபிளின் அருகே நிழலாடியது.
 
அருகில் வந்தான்.  பேப்பர் படபடத்து அடங்கியது.
 
பேப்பரில் பேனாவை வைத்தான்.
 
"... கஸ்தூரி அலுவலகத்தை விட்டுக் கிளம்பினாள்."  என்று எழுதியவன் கொஞ்சம் யோசித்து "இலேசான ஒப்பனை செய்து கொண்ட பின்"  என்று முன்னால் சேர்த்தான். 
 
அவள் புடைவை அணிந்திருக்கும் விதத்தை எழுதி எழுதி அடித்தான்.  பின்னர் சில சினிமாப் பத்திரிகைகளை எடுத்து நடிகைகளின் படத்தை ஆராய்ந்தான்.
 
மீண்டும் சில வரிகள் சேர்த்தான்.  பேப்பரின் எழுத்துகளில் கஸ்தூரியின் கவர்ச்சி கூடிக் கொண்டிருந்தது.
 
"வெளியே செல்ல கதவைத் திறந்தபோது கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே வந்தார் ராமச்சந்திரன். அவர் பார்வையில் சதி தெரிந்தது"
 
கற்பனை மீண்டும் தடைப்பட, ராகவன் எதிர்ச் சுவரையும், சூனியத்தையும் வெறித்தான். 

அருகிலிருந்த ரிமோட்டை எடுத்தவன் டிவியை நோக்கி அதை நீட்டி, பொத்தானை அமுக்கினான்.  ஒன்றும் நிகழாததால், எழுந்து பார்த்தவன், அலுப்புடன் டிவியை நோக்கி நடந்து மேலே அணைத்து வைக்கப் பட்டிருந்த அதன் ஸ்விட்சை ஆன் செய்து திரும்பினான்.
 
சேனல்களில் தாவித் தாவி எங்காவது ஏதாவது கற்பழிப்புக் காட்சி வருகிறதா என்று ஆராய்ந்தான்.  இங்கிலீஷ் சேனல்களில் கற்பழிக்கவே தேவை இல்லாமல் கதாநாயகி இயல்பாய் தானே ஆடை துறந்தாள்.  மீண்டும் ஒரு அலுப்புடன் மலையாளச் சேனல்கள் பக்கம் போனான்.  இசை நிகழ்ச்சிகளாய் தூள் பறந்து கொண்டிருந்தனவே தவிர,  யாரும் கற்பழிக்கப்படக் காணோம்.
 
கதையை ஒரமாக ஒதுக்கி, இன்னொரு பத்திரிகையில் இவன் பதில் சொல்ல வேண்டிய கேள்விகளை எடுத்து மேய்ந்தான். பெரும்பாலான கேள்விகளில் இவனை வம்பிழுத்துக் கேள்வி கேட்டிருந்தார்கள்.  "உங்களை சைக்கோ என்கிறார்களே சிலர்?" என்று கேட்டிருந்தார் அயன்புரம் ச. தத்துவராமன்.
 
மென்று கொண்டிருந்த ஆப்பிளை எச்சிலுடன் சேர்த்து அப்படியே மேசைக்குக் கீழே துப்பியவன், அந்தக் கேள்வியை எடுத்து வைத்துக் கொண்டு காட்டமாக ஒரு பதில் எழுதினான்.
 
பிறகு மீண்டும் தொடர்கதையைத் தொட்டவன், சுவரைப் பார்த்துப் பார்த்து கொஞ்ச வரிகள் எழுதினான். மறுபடியும் சூனியத்தை வெறித்து மறுபடி சில வரிகள் எழுதினான்.
 
எழுந்து மணியைப் பார்த்தவன் சட்டையை மாட்டிக் கொண்டு சாப்பிடக் கிளம்பினான்.
 
வழி முழுவதும் காட்சிகளை யோசித்தபடியே நடந்து, காத்திருந்து, சாப்பிட்டான்.

 யோசித்தபடியே சாப்பிட்டு  விட்டு யோசித்தபடியே திரும்பியபோது மணி பத்தாகி விட்டிருந்தது.  கதவு வெறுமனே சாத்தி இருந்தது. 
 
'பூட்டாமலே போய்விட்டேனா?'

உள்ளே நுழைந்து விளக்கைப் போட்டவன் டேபிளின் அருகே நாற்காலியில் அமர்ந்திருந்த நங்கையைக் கண்டு திகைத்துப் போனான்.  திரும்பி, இது தன் ரூம்தானா என்று மறுபடி ஒருமுறை பார்த்துக் கொண்டவன், அவளைக் குழப்பத்துடன் பார்த்தான்.  எங்கேயோ பார்த்த மாதிரி இருந்தது.
 
"வாங்க ராகவன்..  சாப்ட்டாசாச்சா?"
 
"நீங்க...?"
 
"நான் கஸ்தூரி.  உங்கள் கதாநாயகி.."
 
"நான்சென்ஸ்...  யார் நீங்க?"
 
"நம்பலையா?  இந்த...


 இதை எழுதியதும் நீங்கதானே?   உங்க கற்பனை நிஜமாகக் கூடாதா?  இதோ பாருங்க.."  என்றவள் எழுந்து மேஜை மேல் எழுதி வைக்கப் பட்டிருந்த பேப்பருக்குள் மறைந்தாள்.  இவன் திகைத்து நின்றிருக்க,  சில நொடிகளில் பேப்பரிலிருந்து மீண்டும் பிரசன்னமானாள்.
 
"நான்தான்.  ஏற்கெனவே ரெண்டு வாட்டி வெளில வந்து பேச ட்ரை பண்ணினேன்.  நேரம் சரியில்லை.  போயிட்டேன்.  இப்போ கதைல என்னைக் கற்பழிக்கப் போறாங்களா ராகவன்?  கற்பழிச்சா எனக்குப் பிடிக்காதே ராகவன்..   அதுவும் அந்த வயசான ஆளு!  அதோ பாருங்க"  டிவியைக் காட்டினாள்.
 
டிவியில் ஒரு பெண் தன்னைக் கற்பழிக்க வந்தவர்களைப் பந்தாடிக் கொண்டிருந்தாள். 

"இப்படி எழுதுங்க ராகவன்..  இதுதான் நல்லாருக்கு"  என்றாள்.
 
"ஷட்டப்.. உன்னை என்ன செய்யணும்னு தீர்மானிக்க வேண்டியவன் நான்.  நான் உன்னைப் படைத்தவன்"
 
"ஆணவமா ராகவன்?  இது வரை என்னை எவ்வளோ கௌரவமா காட்டிகிட்டு வந்தீங்க?  நானே என்னை ரசிச்சேன்.  இப்போ திடீர்னு ஏன் இப்படி?  அதுவும் ரொம்ப வல்கரா இருக்கு வரிகள்.."
 
"உளறாதே.. கதைக்கு அது தேவை.  உன்னை முன்னால அப்படி உத்தமமா காமிச்சதே இதுக்குத்தான்..  பின்னால நீ அப்படியே உல்டாவா மாறுவே.." 

நீங்க முதல்ல எழுதின வரிகள்ள மோல்ட் ஆயிட்டேன் ராகவன்..  அதுலேருந்து என்னை நான் சேன்ஜ் பண்ணிக்க முடியும்னு தோணலை"
 
"உனக்கு சுய எண்ணம் கிடையாது.  உளறாதே"
 
"வேணாம் ராகவன்..  நான் இப்படியே காணாமல் போயிடுவேன்.." என்று வாசலைக் காட்டினாள்.
 
உரத்துச் சிரித்தான் ராகவன்.  
 
"நீ போயிட்டா?  எங்க போயிட முடியும்? இங்க இருக்க நீ"   பேனாவைக் காட்டினான்.  "இங்க கொண்டு வந்துடுவேன்.."  பேப்பரைக் காட்டினான்.
 
"ஆணவம்தான் உன்னை அழிக்கப் போவுது ராகவன்.."
 
"ஏய்.. என்ன மரியாதைக் குறையுது.."
 
"என்னை மாதிரி கேரக்டருக்கு மரியாதை தெரியாதே ராகவன்..  உனக்குத் .தெரியாததா..  நீதானே படைக்கறவன்.....?  இறைவன்!"   கடைசி வார்த்தை சொல்லும் போது இடது பக்கம் இதழ்கள் ஒதுங்கி,  நக்கலாக ஒரு புன்முறுவல் தெரிந்தது அவள் உதட்டில்.
 
"கெக்கேகேகே...' என்று சிரித்தான் ராகவன்.
 
"அசிங்கமா சிரிக்காதே..   நான் பத்தினியாவே இருக்க ஆசைப் படறேன்."  கத்தியை எடுத்தாள் கஸ்தூரி.   
 
றுநாள் திறந்து கிடந்த கதவைத் திறந்து கொண்டு உள்ளே பெருக்க வந்த வேலைக்காரி போட்ட கூச்சலில் கூட்டம் சேர்ந்தது.
 
ஆப்பிள் வெட்டும் கத்தி சொருகப்பட்டு நாற்காலியில் சரிந்து கிடந்தான் ராகவன்.  நாற்காலியைச் சுற்றிலும் ரத்தம் குளம் கட்டியிருந்தது.  
  
"அரை லூஸு மாதிரி இருந்தான்.  அப்பப்போ பேச்சுக் குரல் கேக்கும்.  அறுத்துகிட்டு செத்துட்டானே குரு.."  கூட்டத்தில் ஒருவன் சத்தமாகப் புலம்பினான்.

****************************************************

பின் குறிப்பு.  'அவன் அறுத்துகிட்டுதான் செத்தான்' என்று மட்டுமே நினைத்து பின்னூட்டங்கள் வந்திருந்தன.  இன்னொரு பரிமாணமும் இருக்கக் கூடும் என்பது போல நினைக்கும்படி முடிவை அமைத்திருந்தேன் நான்.    முடிவை நான் யூகித்தேன் என்று கிட்டத்தட்ட அனைவரும் சொல்லி இருந்தது ஒரு வியப்பு.  அப்படி யூகித்திருக்க முடியுமா என்று இப்போது தோன்றுகிறது.  கனவு, அது இது என்று எப்படி சமாளிக்கப்போகிறான், அல்லது சமாளிப்பான் என்று யூகித்திருக்க முடியுமே தவிர இப்படி டபுள் ஸ்டாண்டர்ட் யூகித்திருக்க முடியாது என்பதே என் நினைப்பு!

அப்போது வந்த பின்னூட்டங்களில் சில...

FaceBook ல் எழுதி இருந்த கவிதையைப் படித்து பரிவை குமார் கொடுத்திருந்த கமெண்ட்டும், அதற்கு என் பதிலும்.



90 கருத்துகள்:

  1. மாலை வணக்கம்.. எல்லோருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள். எங்க்களுக்கு இன்று காலை தான் தீபாவளி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜீவி ஸார்... கங்கா ஸ்நானம் ஆச்சா? இனிய தீவனளித் திருநாள் வாழ்த்துகள்.

      நீக்கு
  2. சென்ற வாரம் வெளியான சுஜாதா கதை (க்கு சுட்டி) என்று போட்டிருக்கலாம். பார்த்த மாத்திரத்தில் இந்தக் கதை தான் சுஜாதா கதை போலும் என்ற தோற்ற மயக்கம் தருவதால்.

    பதிலளிநீக்கு
  3. கதைத் தலைப்பைப் பற்றிக் குறிப்பிட்டு வேறு யாராவது சொல்வார்கள் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சென்ற முறை தந்த தலைப்பை மாற்றி, இந்த தடவை வேறு தலைப்பு கொடுக்கப்பட்டிருப்பதையும் கவனித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன் ஜீவி ஸார்.

      நீக்கு
  4. குமுதத்தின் சமீபத்திய சிறுகதைப் போட்டிக்கு இந்தக் கதை வாசிப்பு யாருக்கானும் தூண்டுதலாக இருந்தால் அவர்கள் விஷயம் தெரிந்தவர்கள். அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்டிப்பாக ஜீ வி அண்ணா. ஸ்ரீராமே கூட எழுதலாம்

      கீதா

      நீக்கு
    2. ஆஹா... இருவருக்கும் நன்றி.

      நீக்கு
  5. ஆட! பத்து வருஷத்திற்கு முன்னாடி நானும் பின்னூட்டம் போட்டிருக்கேனே! இப்பொழுது தான் பார்த்தேன். அப்பொழுது இப்போதைய நண்பர்களில் யாரெல்லாம் 'எங்கள் பிளாக்'கோடு தொடர்பில் இருந்தார்கள் என்று யோசனை ஓடியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏன்..  நீங்கள் அதற்கும் முன்னாலிருந்தே பின்னூட்டம் இட்டு வருகிறீர்கள். 

      முதல் முறை நீங்கள் என்னுடன் அலைபேசியில் பேசியது எனக்கு இன்றும் நினைவில் இருக்கிறது. 

      அப்பாதுரையிடமிருந்து நம்பர் வாங்கி எனக்கு பேசினீர்கள்.  அன்று நான் ஒரு பார்ட்டிக்கு சென்று கொண்டிருந்தேன்.  அங்கிருந்து திரும்பி வந்ததும் உங்களிடம் விளக்கமாக பேசி...  தொடர்ந்தது நட்பு.

      நீக்கு
  6. கவிதை அசாத்தியம் ஸ்ரீராம். அதிலிருந்து பிறந்த கதை அருமை.

    எப்படி எல்லாம் உங்கள் கற்பனை விரிகிறது என்று வியந்த கதை அப்பவும் இப்பவும். அப்ப எல்லாம் ரொம்ப கமென்ட்ஸ் கொடுத்தது இல்லை.

    கதைத் தலைப்பு குமுதம் போன்ற பத்திரிகைகளுக்கான எடுப்பான தலைப்பு. கவர்ந்து இழுக்கும் தலைப்பு.

    கதையை மீண்டும் இங்கு ரசித்து வாசித்தேன் ஸ்ரீராம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கீதா... அசாத்தியம் எல்லாம் இல்லை. சாதாரணம்தான். அப்போதெல்லாம் நிறைய யோசிக்க முடிந்தது!!

      நீக்கு
    2. ஸ்ரீராம் அசாத்தியம் என்று சொன்னது அந்தக் கற்பனையை.

      அப்போதெல்லாம் நிறைய யோசிக்க முடிந்தது!!//

      எனக்கும் இதே எண்ணம். நான் எழுதிய பழைய கதைகளை எல்லாம் பார்க்கும் போது, கீதா நீயா இப்படி எழுதினாய் என்று என்னையே கேட்டுக் கொள்கிறேன். அப்ப எவ்வளவு எழுதியிருக்கிறேன் இப்ப ஒன்று எழுதவே ரொம்ப கஷ்டமாக இருக்கே என்று மனம் ஒத்துழைக்க மறுக்கிறதே என்று.

      கீதா

      நீக்கு
    3. ஹா..  ஹா..  ஹா.. கற்பனை அந்தக் கவிதையிலிருந்து எக்ஸ்டெண்ட் ஆனது!  அந்தக் கவிதை நான் முன்பு கல்கிக்கு அனுப்பிய கவிதையின் மறுவடிவம்!   

      எல்லாம் வாசிப்பின், எழுதித்தின் நீட்சிதான் இல்லையா?!!

      நீக்கு
  7. உங்களுக்கு நல்ல எழுத்துத் திறன். உங்க பெஸ்ட் கதைகளில் இதுவும் ஒன்று.

    க(வி)தை - கவிதைக்குள் கதை, (க)விதை கவிதை விதைத்த கதை!!!!!!

    ச்சே நீங்க இதை எல்லாம் அப்பவே போட்டிக்கு அனுப்பியிருக்கலாம் ஸ்ரீராம். இப்ப கூட பாருங்க குமுதம் வைத்திருக்கும் போட்டி சுஜாதா நினைவு சிறுகதைப் போட்டி.

    அதுக்கு ரொம்பப் பொருத்தமாக இருந்திருக்கும்.

    இப்ப கூட நீங்க இதை பேஸ் செய்து ஒன்று எழுதி அனுப்பலாம் ஸ்ரீராம் குமுதத்திற்கு!!! கண்டிப்பாக உங்க விரலில் தங்க மோதிரம் மிளிரும்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா...   நாம் எல்லோருமே நன்றாகத்தான் எழுதுகிறோம்.  ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை.   
      அப்பவே போட்டிக்கு அனுப்பி இருக்கலாம் என்று சொல்கிறீர்கள்.  இரண்டு விஷயம்.  அப்போ போட்டி எதுவும் கண்ணில் படவில்லை.  இரண்டு எனக்கு அதில் எல்லாம் அப்போது பெரிய இன்டரஸ்ட் இல்லை!

      நீக்கு
    2. கீதா... நாம் எல்லோருமே நன்றாகத்தான் எழுதுகிறோம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை. //

      ஆமாம் அது சரிதான்.

      ஆமாம் அதென்னவோ சரிதான், அப்ப எல்லாம் போட்டிகள் ரொம்பத் தெரியவில்லைதான். அது போல அதற்கு அனுப்பும் ஆர்வமும் இல்லைதான்.

      கீதா

      நீக்கு
  8. 'ஒரு கதையை வாசித்து விட்டு இதே முடிவை நானும் யூகித்தேன்' என்ற சிலரின் வழக்கமான பின்னூட்டங்களில் எனக்கு இப்பொழுது சந்தேகம் ஏற்பட்டிருக்கு. எவ்வளவு சுலபமாக கஷ்டப்பட்டு யோசித்து எழுதியவனின் உழைப்பை ஒரு நொடியில் ஒன்றுமில்லாமல் ஆக்கி விடுகிறார்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதை ஏன் எழுத்தாளர், க்ளிஷே போல ஒரே சப்பை முடிவைக் கொடுத்திருப்பதால்தான் எல்லாரும் ஊகிக்கும்படியாயிற்று என எடுத்துக்கொள்ளக்கூடாது ஜீவி சார்? வித்தியாசமான முடிவு என்பதே எழுத்தாளர்களின் திறமையைக் காட்டுவது, அது ஏற்கும் முடிவாக இருக்கும்வரை.

      நீக்கு
    2. கதாசிரியரின் உழைப்பு என்பதைவிட கற்பனை என்றும் சொல்லலாம் ஜீவி ஸார்.  நெல்லை இதை க்ளீஷே, சப்பை முடிவு என்று சொல்வதும் ஆச்சர்யம்.

      நீக்கு
    3. //நெல்லை இதை க்ளீஷே, // உங்கள் கதை முடிவையல்ல. பொதுவா ஜீவி சார் எழுதியிருப்பதுபோல, 'இதே முடிவை நானும் யூகித்தேன்' என்று ஏதேனும் கதைகளுக்கு வாசகர்கள் கருத்து எழுதினால், அதற்குக் காரணம் எல்லோரும் நினைக்கும்படியான முடிவை கதாசிரியர் எழுதியிருப்பதுதான் என்ற பொருளில் சொன்னேன்.

      நீக்கு
    4. புரிந்துகொண்டேன். நன்றி நெல்லை.

      நீக்கு
  9. உங்க பழைய கதைகளை எல்லாம் பார்த்தப்ப தோன்றியது ச்சே என்ன இது எல்லாத்தியயும் இப்படி இங்கு எழுதி வேஸ்ட் பண்ணிட்டாரே, போட்டிகளுக்கு அனுப்பியிருந்திருக்கலாமே பொதுவெளியிலும் எழுத்தாளர்கள் உலகில் நல்ல அடையாளம் கிடைத்திருக்குமே என்று.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதெல்லாம் ஒன்றும் இல்லை கீதா.  நீங்கள் ஏன் இப்படி சொல்கிறீர்கள் என்று புரிகிறது.

      நீக்கு
    2. உண்மைதான் ஸ்ரீராம் அது. எனக்கு அப்படித் தோன்றியது அதனால் சொன்னேன்.

      கீதா

      நீக்கு
    3. ஆம், நண்பர்களுக்கு உதவுவதிலும், ஊக்குவிப்பதிலும் நீங்கள் முதல் ஆள் கீதா.

      நீக்கு
  10. தலைப்புதான் ரொம்ப ரசனையான தலைப்பு....

    அந்தக் கேரக்டரே வந்து கதையாசிரியரிடம் பேசுவதாக அமைத்ததில் ஒரு உள் விஷயம் இருப்பதும் புலப்படும்.

    ராகவனுக்கு அந்தக் கற்பழிப்புப் பகுதியை எழுதுவதில் சிக்கல் வருகிறது. எப்படி எழுதுவது என்ற குழப்பம். அதற்காக ரொம்ப மெனக்கெடுகிறான் எங்கிருந்தாவது வார்த்தைகள் கிடைக்குமா என்று. சொதப்பிவிடக் கூடாதே என்றும். ஏனென்றால் புகழ்பெற்ற கதாசிரியர்.

    அவன் மனப் போராட்டம். போராட்டத்தில் கஸ்தூரி கதாபாத்திரத்திரம் உயிர்பெறுகிறது. அவன் மனதிற்குள் கற்பழிப்புப் பகுதியை எழுதுவதில் இருக்கும் சிக்கலால், அக்கதாபாத்திரமே பேசுவது போன்று தான் கற்பழிக்கப்படுவதை விரும்பவில்லை என்று சொல்வது போல்....

    ஆனால் அவன் புகழினால் வரும் அவன் குணங்களும் எட்டிப் பார்க்கிறதால் போராட்டம்.

    மனப்போராட்டம் கடைசியில் முடிவு.

    கீதா

    பதிலளிநீக்கு
  11. ராகவன் மனக்குரலை அதாவது கஸ்தூரியின் குரலை உள்வாங்கியிருந்திருந்தால், எழுத்தாளர்களின் மனதிற்குள் கதாபாத்திரங்கள் உலவுவதால்தானே வசனங்கள் வந்து விழுகின்றன இல்லையா அதனால்....அப்படியும் முடிவை மாற்றலாமே அப்படியிருந்திருந்தால், கஸ்தூரியில் குரலை உள்வாங்கியிருந்திருந்தால் முடிவு வேறு மாதிரி செல்ல சான்ஸ் அதிகம். அவன் மதில்தானே அந்தக் கதாபாத்திரம் எனவே வேறு வகையில் தொடர் தொடர்ந்திருக்கவும் சான்ஸ்...

    ஸ்ரீராம் அப்ப எப்படி முடித்திருப்பார் என்ற யோசனையும் எழுகிறது

    கீதா


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜீவி ஸார் தான் நினைத்த முடிவுக்காக கதையை நகர்த்திச் சென்றிருப்பதாகச் சொன்னார்.  பெரும்பாலான சமயங்களில் கதையின் முடிவால்தான் கதை உயிர் பெறுகிறது, மனதில் இடம்பெறுகிறது.  முடிவை மாற்றினால், கதைக்கரு சிதைந்து கதையின் போக்கும் மாறி,  தான் நினைத்ததும் வராமல், மாற்றியதும் சரியாக வராமல் பிள்ளையார் பிடிக்க குரங்காக முடிவது போல ஆகிவிடவும் வாய்ப்பு.

      தொடர்கதையாயிருந்தால் அவ்வப்போது நினைத்தபடி, அல்லது வாசகர் நாடி பிடித்து போக்கை மாற்றி தொடரலாம்.  சிறுகதை சட்டென்று, 'நச்'சென்று முடிய வேண்டுமே...

      நீக்கு
    2. அதேதான். எனக்கு இக்கதையின் முடிவு பிடித்திருந்தது, ஸ்ரீராம்.

      கதையில் ராகவன் தொடர் எழுதுவதாகச் சொல்லியிருப்பதால் அப்படியும் தோன்றியது.

      கீதா

      நீக்கு
    3. ராகவன் தொடர் எழுதினாலும் ஸ்ரீராம் எழுதி இருப்பது சிறுகதையாயிற்றே...    ராகவன் கதையில் கஸ்தூரியை பலாத்காரம் செய்வதை மாற்றி விட்டான் என்று சொல்லி முடித்திருந்தால் கதை எப்படி இருந்திருக்கும்?  எனக்கென்னவோ அப்படி முடித்தால்தான் நெல்லை சொல்லி இருப்பது போல சப்பென்று சப்பையாக இருக்கும் என்று தோன்றுகிறது!!!

      நீக்கு
    4. கதையின் இந்த முடிவு ரசிக்கும்படி இருந்தது. இதுபோல, பிறரைப் பற்றி தவறுதலாக யூடியூப் வெளியிடுபவர்கள் மீது அந்த யூடியூபிலிருந்தே 'எதிர்ச்சக்தி' வெளிப்பட்டு இந்த மாதிரி நடந்தால்.. எவ்வளவு நல்லா இருக்கும்.

      நீக்கு
    5. ஹா.. ஹா... ஹா.. அப்படி இருந்தால் போட்டு தள்ளிடலாம்.

      நீக்கு
  12. ஸ்ரீராம், நீங்க சில மாதங்கள் முன் போன வருஷமோ? ஒரு எழுத்தாளர் மனநலக்காப்பகத்தில்...அறையில் பேப்பர் கேட்டுத், தானே பேசுவதாக வந்து ரகளை பண்ணுவதாக எழுதியிருப்பீங்களே ........அதுவும் கிட்டத்தட்ட இந்த ரகம் தான்!!!!!!!!!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடவுளே...   எனக்கு எந்தக் கதை என்று நினைவில்லையே....  வாட்ஸாப்பில் சொல்லுங்கள்!!

      நீக்கு
    2. இருங்க யோசித்து எப்ப வந்ததுன்னு பார்த்து அனுப்புகிறேன், ஸ்ரீராம். ஆனால் நல்ல நினைவு இருக்கு கதையின் அம்சம். சின்ன கதைதான்.

      அப்ப நானும் கருத்து இட்டிருந்த நினைவு, இப்படி என்றில்லை கிட்டத்தட்ட அப்படியான ஒரு கருவில் கதை குறிப்புகள் எழுதி வைத்திருக்கிறேன் என்று சொன்ன நினைவு.

      கீதா

      நீக்கு
    3. அறை எண் 7? என்று நினைவு. அறை எண் 7 ல இருக்கறவர் ஒரே தொல்லை சார், ராத்திரி எல்லாம் மனுஷன் தூங்கவே விடலைன்னு.....

      கீதா

      நீக்கு
    4. வணக்கம் சகோதரரே

      எனக்கும் அந்த மனநலகாப்பகத்தில் இருக்கும் எழுத்தாளரின் கதை நினைவு இருக்கிறது. அந்தக்கதையும் வித்தியாசமாக நன்றாக இருக்கும்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    5. அந்தக் கதைய படிச்சிட்டு ஜெ கே அண்ணா, நெல்லை எல்லாம் தலைய பிச்சுக்கிட்டாங்க!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

      கீதா

      நீக்கு
    6. வாங்க கமலா அக்கா... எனக்கு இன்னமும் நீங்கள் இருவரும் சொல்லும் கதை எனக்கு ஞாபகத்துக்கு வரவில்லை. அவ்வளவு மறதியா? என்ன ஆச்சு எனக்கு?!!!

      நீக்கு
    7. // அந்தக் கதைய படிச்சிட்டு ஜெ கே அண்ணா, நெல்லை எல்லாம் தலைய பிச்சுக்கிட்டாங்க!!!!!!!!!! //

      இது வேறயா?  ஹைய்யோ..  எனக்கு சஸ்பென்ஸ் கூடிகிட்டே போகுதே....

      நீக்கு
    8. வணக்கம் சகோதரரே

      அந்தக் கதையின் பெயர் அரசல் புரசலாக நினைவுக்கு வந்தது. "மனிதன் பாதி, மிருகம் பாதி" என்ற கமல் பாடலுடன்.உங்களின் அந்தக் கதையில், கமலின் படங்களும் இடம் பெற்றிருக்கும். இப்போது நினைவுக்கு வருகிறதா? நினைவுபடுத்திக் பாருங்கள். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    9. என் நினைவில் அந்தப்பாடல் (க. பா. ம. பா) வந்ததும், உடனே ஓடிச் சென்று, பழைய பகுதிகளுக்குள் (கஸ்தூரி மாதிரி) குதித்து (மார்ச்சுவரியில் ஸாரி மார்ச்சில்) "கதையில் பாதி, நிஜத்தில் பாதி" என்ற உங்களின் கதை தலைப்பை தேடி கொண்டு வந்தேன். சரியா என்பதை நீங்களும் கண்டு சொல்லுங்கள்.

      நீக்கு
    10. ஸ்ரீராம், கஸ்தூரி நாயகி இந்தக் கதையில்....

      கமலாக்கா அதேதான் நானும் அதைத் தேடிக் கொண்டிருந்தேன்....ஸ்ரீராமிடம் பேசினப்ப உங்க கருத்தும் வந்திருக்குன்னு சொல்ல....அவரே எடுத்துவிட்டார்.

      மற்ற கதையில் அதாவது கதையில் பாதி நிஜத்தில் பாதியில் நாயகன் வருகிறான்!!!!!!!

      கீதா

      நீக்கு
    11. அவ்வளவு மறதியா? என்ன ஆச்சு எனக்கு?!!!//

      கதைக்கான கரு.....பின்னி எடுக்கலாம்....யோசிங்க ஸ்ரீராம்...

      கீதா

      நீக்கு
    12. கமலா அக்கா..  பின்னிட்டீங்க... அசத்திட்டீங்க....  அதே கதைதான்.  எனக்கு நினைவில்லையே தவிர, உங்களுக்கெல்லாம் நினைவில் இருந்திருக்கு.  சாதாரணமாக கீதாதான் முதலில் எடுத்துத் தருவார்.  அவரே தேடிக்கொண்டிருந்தார்.  பேசிக்கொண்டிருந்தோம்.

      நீக்கு
    13. கீதா நெல்லை, JKC கமெண்ட்ஸை வரி மாறாமல் சொல்லி இருக்கிறார்!  அப்போதெல்லாம் நினைவில்லையே தவிர, ஏனெங்கள் சொல்லி அங்கு சென்று பார்த்ததும் எனக்கும் நினைவு வந்து விட்டது!

      நீக்கு
    14. கமலா அக்கா.. பின்னிட்டீங்க... அசத்திட்டீங்க.... //

      அதேதான் ஸ்ரீராம். நிஜமாகவே!!! சூப்பரா எடுத்துட்டாங்க.

      எனக்குக் கதை நினைவில் இருந்ததே தவிர அந்த வார்த்தைகள் பிடிகிட்டலை. மொட்டைப் படமும் நிழலாக நினைவுக்கு வந்தது ஆனால் அந்தச் சமயத்தில் டக்கென்று சொல்லவும் வரவில்லை......கிட்டியிருந்தா எடுத்திருக்கலாம் அறை எண் 7 நினைவுக்கு இருந்தது. அப்படிப் போட்டும் கிடைக்கவில்லை

      //அந்த ஏழாம் நம்பர் ரூம் எழுத்தாளர்//

      இப்படி நீங்க எழுதியிருந்ததால் இப்படி அல்லது ஏழாம் நம்பர் என்றாவது அடிச்சிருக்கணும். 7 என்று போட்டால் எப்படிக் கொடுக்கும்!!!!

      கமலாக்கா உதவியால் கிடைச்சிடுச்சு!! என்னை விட இன்னும் மெமரி கூடுதல் கமலாக்காவுக்கு! அக்கா சூப்பர்க்கா

      கீதா

      நீக்கு
    15. நீங்கள், கமலா அக்கா, பானு அக்கா..  எல்லோரும் மெமரி மன்னர்கள்...  இல்லையில்லை, மன்னிகள்!  ஹா..  ஹா..  ஹா... 

      எனக்குதான் நான் எழுதியதே நினைவில் இருக்க மாட்டேன் என்கிறது!

      நீக்கு
    16. நன்றி. நன்றி. இந்த "வலை" உலகம் வந்த பின் "பின்னுவதையும்" உங்களைப் பார்த்துதான் கற்றுக் கொண்டேன்.இதற்கு உங்கள் அனைவருக்குந்தான் முதலில் நன்றி கூற வேண்டும்.

      நீக்கு
  13. இன்றைய சிறுகதை மிக வித்தியாசமாக அமைந்திருக்கிறது.

    சிறுகதையின் நடையும் வித்தியாசம். கதை எழுத இவ்வளவு மெனெக்கிடுவார்களா எழுத்தாளர்கள் என யோசிக்க வைத்தது (கூடவே கதையின் ஒரு பகுதியை எப்படி எழுதுவது என்பது தெரியாத்தால் கிடப்பில் கிடக்கும் என் கதை நினைவுக்கு வந்தது)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை.  நன்றி.  இது 2015 ல் எழுதியது! 

      நாம் எழுதுவதற்கு நிறைய படிக்க வேண்டும் என்பார்கள்.  என்னளவில் அது மிகவும் உண்மை.  சமீப காலங்களில் வாசிப்பு குறைந்திருப்பதும் உண்மை!

      நீக்கு
    2. நெல்லை, கண்டிப்பாக மெனக்கெடல்கள் உண்டு. ஸ்ரீராம் சொல்லியிருபப்து போல் வாசிப்பு. வாசிக்க வாசிக்க நமக்கும் நிறைய வரும் மனதில்.

      கூடவே ஒரு சில விஷயங்கலைப் பற்றி எழுத வேண்டும் என்றால் அதைப் பற்றிய சிறு ஆராய்ச்சி தேடல்கள் மிகவும் முக்கியம்.

      எனக்கு அதில்தான் நிறைய நேரம் போகும் கதைஎ ழுதத் தொடங்கினால்!!! கிடப்பில் இருக்கும்.
      வாசிக்கிறேன் நேரம் கிடைக்கும் போதெல்லாம். அதனால்தான் எழுதுவதற்கு நேரம் ஒதுக்க முடியவில்லை மற்ற வேலைகளும் சேர்ந்துவிடுமே....

      கீதா

      நீக்கு
    3. நீங்கள் எல்லா படைப்புகளையும் ஆழ்ந்து வாசித்து அலசுகிறீர்கள் கீதா.  இது அபூர்வமான குணம்.

      நீக்கு
    4. நன்றி ஸ்ரீராம்.

      ஆழ்ந்து வாசிப்பதால், எழுதுவதால்தான் நேரம் நிறைய எடுக்கிறது ஸ்ரீராம். ரூம் போட்டு யோசிக்கறாங்கன்னு நாம நகைச்சுவையாகச் சொல்வோம் இல்லையா அதிலும் கூட அர்த்தம் இருக்குன்னு தோணும்.

      ஒவ்வொரு கதையையும் ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும், பல பரிமாணங்களில் அந்த எழுத்தாளரின் சிந்தனைகள் வியக்க வைக்கும். எனக்கு வாசிக்கவே நிறைய டைம் எடுக்கும் வாசிக்கும் போதே மனம் அதில் லயித்தும் விடும் காட்சிகளாக ஓடவும் செய்யும். ஹாஹாஹா

      கீதா

      நீக்கு
    5. சரியான பாதையில் பயணம் செய்கிறீர்கள். எனக்கு என்னவோ அவசரம், அவசரம் என்று அடுத்த விஷயத்துக்கு மனம் தாவிக்கொண்டே இருக்கும்!

      நீக்கு
    6. ஸ்ரீராம் எனக்கும் அந்த விஷயம் உண்டு. அவசரத்தில் ஒவ்வொரு விஷயத்திற்கும் மனம் தாவிக் கொண்டே இருக்கும். இருக்கிறது அதனால்தான் என்னால் சமீபகாலங்களில் பதிவு கூட எழுத முடியலை ஸ்ரீராம்.

      அதுக்குத்தான் எனக்கு ஒரு ப்ரைவட் டைம் ஸ்பேஸ் வேண்டும் என்று தோன்றியதுண்டு. இல்லைனா மத்தவங்க என்ன சொன்னாலும் எனக்கு மண்டையில் உரைக்காதே!!!!!!! கேக்காது ....அதாவது செவி கேக்காதுன்னு இல்லை, கவனம் செல்லாது,

      கீதா

      நீக்கு
    7. நீங்க மொட்டை மாட்டில உக்காந்து வாசிப்பீங்களே ஏகாந்தமாகக், காக்கையுடன் பேசிக் கொண்டு....!!!!!! உங்கள் கற்பனைகளில் உலா வந்த காலம் உண்டு என்பது நினைவுக்கு வருகிறது.

      கீதா

      நீக்கு
    8. இப்போது இந்த வீட்டில் மொட்டை மாடியில் தனிமை கிடைப்பதில்லை.  பக்கத்து, கீழ் வீடுகளின் இளம் பெண்கள், பேரிளம் பெண்கள் வந்து துணி உலர்த்துவதும், நடை பயில்வதும்..  அங்கு செல்வதை நிறுத்தி விட்டு விட்டேன்.

      நீக்கு
    9. ஹாஹாஹாஹா......

      நீங்க சொல்லியிருப்பதைப் பார்த்தால் உங்களை அங்கிள்னு கூப்பிடும் வயதினரும், மாமா (அதாவது மாமி மாமான்னு சொல்வது....) என்று கூப்பிடும் வயதினரும் போல!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

      கீதா

      நீக்கு
    10. /இப்போது இந்த வீட்டில் மொட்டை மாடியில் தனிமை கிடைப்பதில்லை. பக்கத்து, கீழ் வீடுகளின் இளம் பெண்கள், பேரிளம் பெண்கள் வந்து துணி உலர்த்துவதும், நடை பயில்வதும்.. அங்கு செல்வதை நிறுத்தி விட்டு விட்டேன்./

      ஹா ஹா ஹா. ஆனால், அவர்களுக்கெல்லாம் உங்களைப் போல காக்காய் (பார்ப்பது) பிடிப்பது எப்படியென தெரியாது போலும்.!!

      நீக்கு
    11. சொல்லிக் கொடுக்கலாம் !! ஆனால் 'ரிஸ்கா'ச்சே...

      நீக்கு
  14. சில திரைப்படங்களில் தேவையில்லாத கதைத் திருப்பத்தைத் தந்த இயக்குநர்கள் மீது கோபம் வரும். எதற்கு இந்த வக்கிர புத்தி என்று. நல்ல கதையை, தோல்விப்படமாக்கி தயாரிப்பாளரைத் துண்டுபோட வைக்கிறார்களே என்று. உதாரணம் கே பி இயக்கிய, பிரகாஷ்ராஜ் தயாரித்த படம். இதுபோல தேவையில்லாத கிளைமாக்ஸ்பேருந்தை தீ வைத்து எரிப்பதாக இன்னொரு இயக்குநர் அமைத்திருப்பார்.

    இந்த மாதிரியானவர்களுக்கு கதை மாந்தர்களே தண்டனை கொடுத்தால் நல்லதுதானே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர்கள் தந்த முடிவு, அல்லது தரும் முடிவு எல்லோருக்கும் பிடிப்பதில்லை.  சிலர் கவிதாவுக்கு திருமணம் செய்து வைத்திருக்கலாம் என்பார்கள்.     சிலர் லலிதா தங்கவேலை திருமணம் செய்திருக்கலாம் என்று சொல்வார்கள்.  சமயங்களில் மனதில் இப்படி நெருடிக் கொண்டே இருப்பதால் அதுவே கதையின் வெற்றியாகவும் ஆகிவிடும்!

      கதை மாந்தர் தண்டனை கொடுப்பதாக எழுதுவதும் அதே எழுத்தாளர்தானே!!

      நீக்கு
  15. வேறு முடிவு என்னவாக இருந்தது, அதை எப்படி எல்லோரும் ஊகித்திருந்தார்கள்? இந்தப் பகுதியை நான் சரியாகப் படிக்கவில்லையோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதையை நான் மாற்றவில்லை நெல்லை. அதே கதை அபப்டியே...

      கடைசி படமும் அதே படம்.

      நீக்கு
  16. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா.. வணக்கம் இணைந்து பிரார்த்திப்போம்.

      நீக்கு
  17. கஸ்தூரி விஜயம் என்ற தலைப்பும் கூட நல்லாருக்கு...கேரக்டர் வருகை! ஆனா மற்றதுதான் செம ஈர்ப்பு!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கீதா...   மறுபடியும் பழைய தலைப்பைக் கொடுக்க எனக்கே தயக்கமாக இருந்தது!!  திருந்திட்டேனோ!!

      நீக்கு
  18. இப்படித் தான் கதை முடிய வேண்டும் என்று தீர்மானித்து அதற்கேற்ப எழுதத் தொடங்கிய கதையை முடிவை நோக்கி நகர்த்திக் கொண்டே வருவது ஒரு முறை.
    குத்து மதிப்பாக எழுத ஆரம்பித்து கதை வளர்கையிலேயே இப்படி முடித்து விடலாமே என்று மனதில் தோன்றி அதற்கேற்ப எழுதுவோன் கதையை முடிப்பது ஒரு வகை.
    இரண்டாவதில் ஒரு கதை தன்னைத் தானே எழுதிக் கொள்ளும் நேர்த்தியைப் பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //  குத்து மதிப்பாக எழுத ஆரம்பித்து கதை வளர்கையிலேயே இப்படி முடித்து விடலாமே என்று மனதில் தோன்றி அதற்கேற்ப எழுதுவோன் கதையை முடிப்பது ஒரு வகை. //

      எனக்கு அது இன்னும கைவரவில்லை.  இலக்கில்லாத பயணம்!  தொடர்கதைக்கு சரி..  ரப்பர் மாதிரி இழுக்கலாம்.  சிறுகதைக்கு???  

      என் வழக்கத்தில் அப்படி ஒரு வரியை யோசித்தால் இப்படி ஒரு முடிவை கொடுத்து விடலாமே என்று தோன்றி விடும்.  முடிந்தவரை அந்த முடிவு  சட்டென எல்லோரும் யோசிக்கும் வகையில் இருக்கக்.கூடாது என்றும் தோன்றும்.

      நீக்கு
    2. ஸ்ரீராம் ஹைஃபைவ். எனக்கும் தொடக்கமும் முடிவும் பெரும்பாலும் வந்துவிடும். நடுவில் கதை அப்படியே என்னை இழுத்துக் கொண்டு போய்விடும் ஆனால் சமீபகாலத்தில் இழுப்பது இல்லை என்பதால் தான் நிறைய எழுத முடியாமல் எல்லாம் பாதியில் நிற்கின்றன.

      இன்னமும் நினைவிருக்கு. எங்கள் தளத்தில் நானெ ழுதிய ஒரு கதையை நீங்கள் வாசித்து முதல் கமென்ட்டாகக் கொடுத்ததும், அதிலிருந்து எபி யில் போட கதைகள் கேட்டதும்....அப்போது நான் எழுதியவை நிறைய. கௌ அண்ணா கரு கொடுத்து எழுதியவை, நீங்க கதையின் முடிவு கொடுத்து எழுதியவை, படம் கொடுத்து எழுதியவை என்று ...

      கீதா

      நீக்கு
    3. ஆமாம் கீதா ! ஆரம்ப காலங்களில் 'சீதை ராமனை மன்னித்தாள்' என்ற வரியில் முடிக்கும்படி கதை எழுத சொன்னதுண்டு. உங்கள் தளங்களில் கதை வாசித்து, உங்களையும் இங்கு இழுத்திருக்கிறேன். நினைவிருக்கிறது. பாரதியார் சொல்லி இருக்கிறாரே, "சென்றிடுவீர் எட்டு பிளாக்கும்... கலைச் செல்வங்கள் யாவையும் கொணர்ந்து எங்களில் சேர்ப்பீர்" என்று!!!!

      நீக்கு
  19. வணக்கம் சகோதரரே

    இன்றைய கதை (உங்களால் அப்போது எழுதப்பட்ட கதை) மிகவும் நன்றாக உள்ளது. வித்தியாசமான கற்பனை. பொதுவாக ஒரு எழுத்தாளராகி கதைகள் எழுதும் போது, அந்தக் கதை மாந்தர்களை உருவாக்கும் போது, அது நம் கற்பனை என்றாலும், நம்மைச் சுற்றிய வாழ்வில் நடப்பதை/நடந்து முடிந்தவைகளை சிறிது கோர்த்து எழுதத்தான் தோன்றும். நீங்கள் இந்தக் கதையில், கதாநாயகிக்கு முக்கியத்துவம் தந்து, அவள் கதைக்குள்ளிருந்து வெளி வந்து ஒரு நியாயப் போர் ஒன்றை செய்து விடும்படி எழுதியிருப்பது அபாரம்.

    மிக அருமையான கற்பனை. ஒவ்வொரு வரிகளையும் ரசித்துப் படித்தேன். அப்போது நான் உ(எ)ங்கள் தளத்திற்கு வருகை தந்ததில்லையோ என நினைக்கிறேன். வந்திருந்தால், சிறந்த எழுத்தாளர் என்ற பட்டத்தை உங்களுக்கு அப்போதே தந்திருப்பேன். மேலும், கதையுடன் உங்கள் திறமையாக வந்த கவிதையும் நன்றாக உள்ளது கதையை மற்றொரு தடவை படித்துப் பார்த்து விட்டு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா.. ஹா...   கமலா அக்கா.  நன்றி. 

      நீங்கள் வாசிப்பதிலிருந்து நீங்கள் அதை ​யோசிக்கும் விதம் எப்போதுமே வித்யாசமாக இருக்கும்.  விதம் விதமாக வித்தியாசமாகவும் எழுதுவீர்கள், யோசிப்பீர்கள்.  

      பானு அக்கா பேசினார்.  அவர் கருத்தை கவனியுங்கள்.

      நீக்கு
  20. கதை என்னவோ நன்றாகத்தான் இருக்கிறது.ஆனால் சுஜாதா நெடி அதிகம், தவிர்த்திருக்கலாம். சுஜாதா எழுத்தை படித்தவுடன் எழுதினீர்களோ?
    கதாபாத்திரங்கள் உயிர்பெற்று வந்து கதாசிரியரோடு உரையாடுவதைப் போன்ற கதை அமைப்பைக் கொண்டு சமீபத்தில் மாயக் கூத்து என்று ஒரு படம் வந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // சுஜாதா எழுத்தை படித்தவுடன் எழுதினீர்களோ? //

      சமீபத்தில் என்ன..  எப்போதுமே மனதில் நிற்கும் எழுத்துகளாயிற்றே அவர் எழுத்துகள்.  சிவாஜி நடிப்பை, அதன் சாயலை  அப்புறம் வந்த எல்லோர் நடிப்பிலும் சில இடங்களிலாவது காணலாம்.  அது மாதிரிதான் சுஜாதா எழுத்தும்.

      நீக்கு

  21. ​தற்கொலைக்கு வலுவான காரணங்கள் இல்லை. சீரியல் சீன் போல ஆப்பிளும் கத்தியும்!.
    எல்லோரும் சொல்வது போல் முடிவுக்காக கதை என்றே சொல்ல வேண்டி இருக்கிறது.
    கவிதை சரியான படி இல்லை என்பது எனது கருத்து.
    எழுதி முடித்தது எதில்? தண்ணீரிலா? எழுதப்படாமல் நிற்கிறது என் படைப்பு என்று கூறுவதே ஒரு படைப்பு தானே.

    கனவில் வந்த பாத்திரங்கள்
    கற்பனையில் காணாமல் போனார்கள்
    கனவும் மறந்து கற்பனையும் இல்லை
    எழுத ஒரு ஆர்வமும் இல்லை
    வெற்றுத்தாள்கள் படபடக்கின்றன.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தற்கொலை என்றும் சொல்ல முடியாது JKC ஸார்...   அவர் மனா பிம்பத்தில் கஸ்தூரி வந்து கொள்கிறாள்.  சுஜாதா கதையின்படி பரந்தாமன் வந்திருந்தது நிஜம் என்று ஏற்றுக் கொண்டால் கஸ்தூரியும் நிஜம்.

      கொலையுதிர்காலம் படித்திருக்கிறீர்கபாலா?  அதில் ஆவியை வெறும் விஞ்ஞானம் என்று கணேஷ் வாதாடுவார்.  வஸந்த் எல்லாமே ஆவி வேலைதான் எல்லாவற்றுக்கும் ஆதாரம் இருக்கிறது என்று வாதாடுவான் - கடைசி அத்தியாயத்திலும்!  அது போல இதை  வேண்டுமானாலும் எடுக்கலாம்!

      ஆனால் இந்தக் கதையை முடிவுக்காக எழுதி இருக்க முடியாது என்பதை ஒப்புக் கொள்வீர்கள் என்று பார்த்தேன். 
       
      உங்கள் கவிதையை ரசித்தேன்.

      நீக்கு
  22. ​கவிதை சரியே. அ முத்துலிங்கம் கம்ப்யூட்டர் சிறுகதையில் "தொலைந்தது" என்ற தலைப்பில் பாடுபட்டு தட்டச்சு செய்த கதை காணாமல் போய் விடும். பின்னர் ஒரு வேறு ஒரு கோப்பில் கிடைக்கும். அதைப்போல் உள்ளது கவிதை ன்று ஒப்புக்கொள்கிறேன் எழுதியது கப்யூட்டரில் என்றால்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
  23. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  24. கதை நன்றாக இருக்கிறது. என் பழைய பின்னூட்டமும் படித்தேன்.
    நான் அடிக்கடி நினைப்பேன் கதாபாத்திரங்கள் கதை ஆசிரியருடன் பேசினால் என்ன நடக்கும் என்று.

    கதா பாத்திரங்களை கொலை செய்வார்கள், வாழ வைப்பார்கள், எல்லாம் அவர்கள் கையில் தான் இருக்கிறது, படைத்தவருக்கு படைக்கவும் அழிக்கவும் உரிமை இருக்கிறதுதான்.

    கதா ஆசிரியர்கள் அறையில் தாள்கள் கிழித்து கிழித்து போட்டு இருப்பதாய் படித்து இருக்கிறோம்.

    அதை சொல்கிறது உங்கள் கவிதை. எழுதிய வரிகள் எல்லாம் காணமல் போவது

    குமார் சொல்வது போல காணாமல் போனவர்கள் எல்லாம் மீண்டும் உயிர் பெற்று வருவார்கள்



    //ஆப்பிள் வெட்டும் கத்தி சொருகப்பட்டு நாற்காலியில் சரிந்து கிடந்தான் ராகவன். நாற்காலியைச் சுற்றிலும் ரத்தம் குளம் கட்டியிருந்தது. //

    கதாநாயகி உயிர் பெற்று வந்து தன்னை கெட்டவளாக காட்டுவதை பொறுக்காமல் ஆசிரியரை கொன்று விட்டார். என்று நினைத்தால் கதை அமானுஷ்யம்.

    சொருகப்பட்டு எனும் போது கஸ்தூரி தான் கொன்று இருக்கிறாள்
    என்று படிப்பவர்கள் நம்புவார்கள்.


    //"அரை லூஸு மாதிரி இருந்தான். அப்பப்போ பேச்சுக் குரல் கேக்கும். அறுத்துகிட்டு செத்துட்டானே குரு.." கூட்டத்தில் ஒருவன் சத்தமாகப் புலம்பினான்.//

    தான் கொடுத்த முடிவு தனக்கே பிடிக்காமல் கத்தியால் தன்னை மாய்த்து கொண்டாரா?

    புது புது முடிவுகள் கிடைக்கும் ஒவ்வொரு முறை எழுதும் போதும், படிக்கும் போதும்.



    பதிலளிநீக்கு
  25. சூப்பரா சொல்லி இருக்கீங்க... அருமையா சொல்லி இருக்கீங்க... நன்றி கோமதி அக்கா!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!