முட்டையில்லாத
சாக்லேட் கேக் (Browney)
தேவையான பொருட்கள்:
மைதா அல்லது கோதுமை மாவு. - 1 கப்
சர்க்கரை - 3/4 கப்
கோகோ பவுடர். - 1/4 கபீ
சுட வைத்த பால் - 1 கப்.
தயிர். - 1/2 கப்
சமையல் எண்ணெய் - 1/4 கப்
பேக்கிங் பவுடர் - 1 டீ ஸ்பூன்
பேக்கிங் சோடா - 1/2 டீ ஸ்பூன்
வெனிலா எசென்ஸ் - 1 டீ ஸபூன்
செய்முறை:
முதலில் ஓவனை(அவனை என்றால் எவனை என்று கேட்பார் ஸ்ரீராம்) 180°Cயில் ப்ரீ ஹீட் செய்வதற்காக ஆன் பண்ணி விடுங்கள். ஓவன் சூடாகட்டும்.
ஒரு அகலமான பாத்திரத்தில் சர்க்கரையை போட்டு, அதில் சூடாக்கப்பட்ட பாலை ஊற்றி, சர்க்கரை கரையும் வண்ணம் கலக்கவும்.
பிறகு தயிர், சமையல் எண்ணெய் சேர்த்து கலக்கவும்.
மாவு, கோகோ பவுடர், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா வகையறாக்களை சலித்து, பால், தயிர், சர்க்கரை, எண்ணெய் கரைசலில் இட்டு நன்றாக கிளறவும்.
ஒரு பேக்கிங் ட்ரேயில் இந்த கலவையை ஊற்றி, ஓவனில் 180° C யில் பேக் பண்ணவும். 20 அல்லது 30 நிமிடங்களில் பேக் ஆகி விடும். ஒரு டூத்பிக்கால்(toothpick) அல்லது கத்தியால் குத்தினால் ஒட்டாமல் வர வேண்டும். அப்போது வெளியே எடுத்து ஆற விடவும்.
ஆறியதும், ஒரு கத்தியை கேக்கிற்கும், பாத்திரத்திற்கும் இடையே வைத்து சுழற்றினால் பாத்திரத்தில் ஒட்டிக் கொண்டிருப்பவை விடுபட்டு விடும். பின்னர் ஒரு தட்டில் பேக்கிங் ட்ரேயைக் கொட்டி லேசாக தட்டினால், தட்டில் விழுந்து விடும். அதை நிமிர்த்தி துண்டுகள் போட்டு சுவையான சாக்லேட் கேக்கை சுவையுங்கள்.
அப்படியே சாப்பிட்டால் ப்ரெளனி, நடுவில் கட் பண்ணி வெனிலா சீஸ் அல்லது சாக்லேட் சாஸ் தடவி, மேலே ஐசிங் சுகரால் டிசைன் போட்டால் சாக்லேட் கேக்.
என் மகளின் பிறநந்த நாளுக்கு நான் செய்தேன்.
====================================================================================================================================
ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் நடந்த என்கவுன்டரில், பாதுகாப்புப் படையினரை வழி நடத்தி சென்ற ராணுவத்தின் சிறப்புப் பிரிவு மோப்ப நாய் 'டைசன்' குண்டடி பட்ட போதும், முன்னேறி சென்று பயங்கரவாதிகளை கொல்லஉதவியது.
ஜம்மு காஷ்மீரின் கிஸ்திவாரில் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் மறைந்துள்ளதாக வந்த பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைத்தனர். அப்போது இரு தரப்புக்கு இடையே நடந்த மோதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களில் ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த சைபுல்லா என்பவன் முக்கியமானவன்.
பயங்கரவாதிகளிடம் இருந்து ஆயுதங்கள், வெடிமருந்துகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
இந்நிலையில், இந்த மோதலில் ராணுவத்தின் சிறப்புப் பிரிவு மோப்ப நாய் 'டைசன் பயங்கரவாதிகளால் குண்டடி பட்ட போதும் பாதுகாப்புப் படையினரை வழிநடத்தி உள்ளது தெரியவந்துள்ளது. டைசன் தான், வனப்பகுதியில் பயங்கரவாதிகள் இருப்பதை முதலில்உறுதி செய்தது. அடர்ந்த வனப்பகுதிக்குள் பாதுகாப்புப் படையினரை வழிநடத்தி முன்னேறி சென்றது. அப்போது பயங்கரவாதிகள் சுட்ட முதல் குண்டு, மோப்ப நாயின் காலில்பாய்ந்தது. காலில் காயம் ஏற்பட்டாலும், முன்னேறி சென்று பயங்கரவாதிகள் இருக்குமிடத்தை பாதுகாப்புப் படையினரிடம் காட்டிக் கொடுத்தது. ஜெர்மன் ஷெப்பர்டு ரகத்தைச் சேர்ந்த இந்த நாய்க்கு, உடனடியாக ஹெலிகாப்டர் உதவியுடன் உதம்பூரில் அமைந்துள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர்.
இந்த மோப்ப நாய், வெடிகுண்டுகள் மற்றும் வெடிபொருட்களை கண்டுபிடிக்கவும், சந்தேகத்துக்கு இடமான இடங்களை கண்டறிவதுடன், பயங்கரவாதிகளை கண்டுபிடிக்கும் பணிக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளில் இந்த மோப்ப நாய் முக்கிய பங்காற்றி உள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சாக்லெட் கேக் ரெசிப்பி சூப்பர். என்னுடைய தேர்வு எப்போதுமே வெனிலா அல்லது வாழைப்பழ கேக். எண்ணெய் குறைவாக இருக்கணும் என்பேன்.
பதிலளிநீக்குகடையிலிருந்து வாங்கினாலும், ஐசிங் ஷுகர் க்ரீம் போன்ற அலங்காரங்களை எடுத்துவிடுவேன்.
கேக் நல்லா வந்திருக்கு.
ஆமாம், நன்றாக வந்தது. ருசியும் சிறப்பாக இருந்தது. இதிலும் எண்ணெய் குறைவுதான். நன்றி.
நீக்கு//கடையிலிருந்து வாங்கினாலும், ஐசிங் ஷுகர் க்ரீம் போன்ற அலங்காரங்களை எடுத்துவிடுவேன்.// க்ரீம் லேயரை என்ன செய்வீர்கள்?
நீக்குநிஜமாகவே அதனை வழித்து எடுத்துவிட்டுத்தான் சாப்பிடுவேன். எனக்கு எந்த அலங்காரம் இல்லாத கேக் வாங்கணும்னு ஆசை. பார்க்கலாம்... கீதா ரங்கன் தருகிறாரா என்று.
நீக்குகப் கேக், ப்ளம் கேக் போன்றவை எந்தவிதமான அலங்காரங்களும் இல்லாமல் சாப்பிடலாம்.
நீக்குகேக் நன்றாக இருக்கும் போல் தெரிகிறது. எனக்கு என்னமோ ஐசிங் செய்தால் தான் பிடிக்கும். க்ரீம் ஜாஸ்தி இருந்தால் ரொம்பப் பிடிக்கும். ஆனால் மாவு கலக்கையில் எண்ணெய் எல்லாம் சேர்ப்பது பிடிப்பதில்லை. நல்ல சுத்தமான வெண்ணெய் தான் சேர்த்துப்பேன். முன்னெல்லாம் (கல்யாணம் ஆன புதுசில்) குமுட்டி அடுப்பில் சீனாச்சட்டியைப் போட்டு அதில் மணல் பரப்பி மேலே ஒரு தட்டில் நெய் தடவி கேக், பிஸ்கட் செய்வேன். அப்போது குழந்தைகள் ரொம்பச் சின்னவர்கள். அதிலும் பெண் அவ்வளவு சீக்கிரமாய்ச் சாப்பிட மாட்டாள். ரொம்ப அடம். பையர் எல்லாமும் சாப்பிடுவார். பின்னர் பெண் காலேஜுக்கும் பையர் +2வுக்கும் வந்தப்போத் தான் அவன் பஜாஜ் வாங்கினேன். பெண் கல்யாணம் ஆகிப் போனதும் மாமா அதைத் தூக்கி தானம் செய்துட்டார். :( பிட்சா, ஹாட் டாக், ஸ்டஃப்ட் பன் எல்லாமும் அதில் பண்ணுவேன். பிட்சா பேஸ் ஜாம்நகரில் கிடைக்கும். ஆகவே ரொம்பவே எளிதாகச் செய்துடலாம்.
நீக்குஒவ்வொரு நாளும் எவ்வளவு உன்னதம்? வாரத்தின் ஒரு நாளை இப்படிப் போக்கிட்டீங்களா?.. நாளைக்கு என்ன செய்றீங்கன்னு பார்ப்போம்.
பதிலளிநீக்குஆமாம் ஜீவி ஸார்.. வாங்க... கடந்த வியாழன் முதல் தினசரி ஒரு விழா விசிட். எனவே கான்சன்ட்ரேட் செய்ய முடியவில்லை. எனக்கும் வருத்தம்தான்!
நீக்குதற்சமயம் அவசர இடைச்செருகலாக, இடைக்கால நிவாரணமாக ஒரு செய்தி இணைத்துள்ளேன்!!
நீக்குஇன்னிக்குக் காலம்பரவே வர முடியாதபடிக்கு ஊறுகாய் போடும் வைபவம் இருந்தது. அதை முடிச்சுட்டுக் கையோடு சமைச்சுச் சாப்பிட்டுட்டு இப்போத் தான் வர முடிஞ்சது. ஆனால் நினைப்பெல்லாம் இன்றைய பதிவில் ஸ்ரீராம் சமையல் குறிப்பைப் போடுவாரா இல்லை மொத்தமாக உலகச் செய்திகளானு யோசனையாகவே இருந்தது. நல்லவேளையாக அதில் மாற்றவில்லை. பதிவின் கீழே உள்ள டைசன் பற்றிய செய்தி முகநூலில் படிச்ச நினைவு.
நீக்குகேக் கொள்ளாம்.
பதிலளிநீக்குJayakumar
சரியாகப் புரியவில்லை, இருந்தாலும் நன்றி.
நீக்குகொள்ளாம் பாலக்காடு தமிழ் தான். good என்று அர்த்தம்.
நீக்குJayakumar
நன்றி
நீக்குஇந்தியாவில் வீட்டுக்கு ஒருவராவது சர்க்கரை நோயால் பாதிக்கப் பட்டிருக்கும் காலகட்டம் இது. அந்த நோயைக் கட்டுப்படுத்தும் புதிய அரிசி ரகம் ஒன்றைக் கண்டிபிடித்திருக்கிறது மத்திய அரசின் அறிவியல் ஆராய்ச்சி நிருவனம். வாசகர்கள் நடைமுறை வாழ்க்கைக்கு பயன்படும் இந்த மாதிரி புதுப்புது தகவல்களையாவது தெரியப்படுத்ததி இந்த நாளை பயன் உள்ளதாக்கலாம்.
பதிலளிநீக்குகருப்பு கவுனி அரிசி, தீட்டாத அரிசி என்று பலவகை அரிசிகள் இருக்கின்றன. சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த முதலில் அரிசி, கோதுமை பயன்படுத்துவதை மிக மிகக் குறைக்கணும். இந்தியாவில் இனிப்பு இல்லைனா எதுவும் விற்பனையாவதில்லை. பத்து ரூபாய்க்கு உள்ள செரியல் பாக்கெட்டுகளில் எவ்வளவு அதிக இனிப்பு. குளிர்பானங்களிலும் வெளிநாடுகளை விட மிக அதிகமான சர்க்கரை (வெளிநாட்டு பிராண்டுகள் நம் நாட்டில் செய்யும் துரோகம் இது).
நீக்குநம் வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டால் ஒழிய இதற்கு விமோசனம் கிடையாது. நோயைக் கட்டுப்படுத்தும் புதிய அரிசி வந்தால் அதையும் குளம் வெட்டிச் சாப்பிட்டால் எப்படி சர்க்கரை கட்டுப்படும்?
இந்தப் புது அரிசி ரகம் பற்றிய செய்திகள் சில தொலைக்காட்சி சானல்களிலும் யூ ட்யூப் மூலமும் பார்க்க நேர்ந்தது. விலை அதிகமா இருக்கும்னு நினைக்கிறேன். ஆனாலும் நாங்க அதிகமாச் சிவப்பரிசி, புழுங்கலரிசி, சிறு தானியங்கள்னு சேர்க்கிறோம். நேற்றுக் கூடச் சோள மாவில் தோசை. மாமா இருக்கும்போது கைக்குத்தல் அரிசி கூடச் சமைச்சிருக்கேன். சீக்கிரமே ஊற வைக்கணும்.
நீக்குஎன் மாமியார், மாமனார் அரிசிச் சாதம் தான் நிறையச் சாப்பிடுவார்கள். மாமனார் 78 வயசு வரைக்கும் திடமாக இருந்தார். தென்னங்கீற்று முடைவதிலிருந்து கயிற்றுக்கட்டில் பின்னுவது வரை எல்லாமும் அவரே தனியாகச் செய்வார். எங்க அம்பத்தூர் வீட்டில் சுற்றுச் சுவர் எடுக்கும் முன்னால் வேலிப்படல் கட்டிச் சுற்றிலும் வேலி போட்டவர் அவர் ஒருத்தர் தான். தனியாகவே முட்செடிகளைப் போய் வெட்டிக் கொண்டு இழுத்து வந்து வேலி கட்டுவார். மாமியாரும் சரி மாமனாரும் சரி, காஃபிக்குச் சர்க்கரை கரண்டியில் தான் போட்டுப்பாங்க. சமையலிலும் எல்லாவற்றிலும் வெல்லம் சேர்ப்பாங்க. இருவருக்கும் கடைசி வரை சர்க்கரை நோய் இல்லை. அவங்க வேலைகளை அவங்களே பார்த்துக் கொண்டாங்க. மாமியார் 93 வயதில் இறந்தார். கடைசி வரை கீழே உட்கார்ந்து தான் சாப்பிட்டார். ஆகவே அரிசி, கோதுமைக்கும் சர்க்கரைக்கும் சம்பந்தம் இருப்பதாய்த் தெரியலை. உணவு முறை மாற்றங்கள் காரணமாகலாம். மேலும் அவங்கல்லாம் சாப்பிட்டது இயற்கை உரம் போட்ட விளை பொருட்கள். எழுபதுகளுக்குப் பின்னர் செயற்கை உரம், யூரியா போன்றவை வந்து நிலமும் மலட்டுத் தன்மை எய்தியதுடன் உணவுப் பொருட்களின் சத்தும் குறைய ஆரம்பித்து விட்டது. இதுவே முக்கியக் காரணம் என என் கருத்து. ஒரு பைசாக் கருத்து. :)))))
நீக்குபாரம்பரிய எண்ணெய் வகைகளை ஒதுக்கிட்டு சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்ப் பயன்பாடு அதிகரித்தது ஒரு முக்கியக் காரணம். இந்த விஷயத்தில் மட்டுமில்லை, இன்னும் சிலவற்றில் நான் சமரசம் செய்துக்கிறதே இல்லை. இபோவும் நல்லெண்ணெய், கடலை எண்ணெய், சுத்தமான தேங்காய் எண்ணெய்ப் பயன்பாடு தான். இக்கே சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் வாங்கினாலும் நான் பயன்படுத்துவது அதிகமா நல்லெண்ணெய் தான்.
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய திங்கள் பதிவில் சகோதரி பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்கள் வீட்டிலேயே செய்த சாக்லேட் கேக் நன்றாக வந்துள்ளது. செய்முறை குறிப்புக்களும் , படங்களும் நன்றாக உள்ளது. தெரிந்து கொண்டேன் சகோதரிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். அவர் மகளுக்கும் என் மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா.
நீக்குஆமா, இல்ல! பா.வெ. உங்கள் மகளுக்கு தாமதமான பிறந்த நாள் வாழ்த்துகளும் ஆசிகளும்.
நீக்குஉங்கள் வாழ்த்தை இப்போதுதான் பார்க்கிறேன். மிக்க நன்றி கீதா அக்கா.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய பதிவில், புது இணைப்பாக வந்திருக்கும் ராணுவ மோப்பநாயின் வீரத்தையும், வீரதீர செயல்களையும் கண்டு வியந்தேன். அது நலமாக குணமடைந்து இன்னமும் அனைவருக்கும் உதவியாக இருக்கவும் இறைவனை பிரார்த்திக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பானுக்கா, கேக் அடி பொளி! சூப்பரா வந்திருக்கு.
பதிலளிநீக்குஅக்கா பேக்கிங்/பட்டர் பேப்பரை கொஞ்சம் கட் பண்ணி பரத்தினால் கேக் சமமாக வரும். அது சரி எப்படி இருந்தா என்ன நாவிற்குச் சுவை வயிற்றிற்குள் போகப் போவதுதானே!!!! இல்லையா!!!
பொதுவாகச் சாக்லேட் கேக் அல்லது எந்த வகை கேக்கிற்கும் எண்ணை பயன்படுத்துவதுண்டு பொதுவாக. நான் வெண்ணை மட்டுமே பயன்படுத்துகிறேன் பானுக்கா. நன்றாகவே வரும். வெண்ணையைக் கொஞ்சம் குறைத்துப் போட்டால் போதும். அல்லது வெண்ணை கேக்கிற்குத் தேவையான வெண்ணை சேர்த்தால் கேக் மாவுக்கலவை கொஞ்சம் கெட்டிப் பதத்தில் இருந்தால் வந்துவிடும்.
நடுவில் உள்ள குழியில் சூடாகச் சாக்லேட் சாஸ் விட்டால் லாவா கேக்னு சொல்லிக்கலாம்!!!!
கீதா
பேப்பரை கட் பண்ணி போட்டிருக்க வேண்டும் என்று பிறகுதான் தோன்றியது ஹிஹி. டேஸ்ட் நன்றாக இருந்தது.
நீக்குநடுக்குழியில் என்னத்தை ஊத்தினீங்கனு கேட்க நினைச்சேன். மறந்துடுத்து. இப்போத் தான் தி/கீ கருத்தைப் பார்த்துத் தெரிஞ்சுண்டேன்.
நீக்குடைசன் செய்தி வாசிக்கும் போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது! பெருமையாகவும்....ராயல் சல்யூட்!!! டைசனுக்கு! சீக்கிரம் குணமடைந்து வர வேண்டும்.
பதிலளிநீக்குஜெர்மன் ஷெப்பர்ட் நன்றாகப் பயிற்சி அளிக்கப்பட்டால் அசாத்தியமாக உழைக்கும்!
மகன் காப்பாற்றி வளர்ப்பது ஜெர்மன் ஷெப்பர்ட். ஆனால் பயிற்சி அளிக்க முடியவில்லை ஏனென்றால் காப்பாற்றும் போதே 1 1/2 வயதாகியிருந்தது ஒரு காலும் இல்லை.
கீதா
கேக் - நன்று. எங்கள் வீட்டில் அவ்வப்போது செய்கிறார்கள் - No Egg, No Oven கேக் தயாரிப்புகள்.
பதிலளிநீக்குடைசன் செய்தி - ஆஹா... தலைநகர் தில்லியில் அவ்வப்போது செல்லங்களுக்கான ஷோ நடக்கும் - சென்று பார்த்து ரசித்ததுண்டு. முந்தைய அலுவலகத்தில் வாரா வாரம் ஒவ்வொரு அறையாக, செல்லங்கள் கொண்டு வந்து பாதுகாப்பு சோதனைகள் செய்வது வழக்கம். அப்படி அவை வரும்போது, தடவிக் கொடுத்து பேச்சுக் கொடுப்பதுண்டு. Trainers உடன் இருக்கும்போது தான்! இல்லை என்றால் அவற்றை நெருங்குவது இல்லை! :)
நன்றி. ஆதி ஒரு முறை கேக் ஒன்று பகிர்ந்ததைப் பார்த்து அதை முயற்சிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.
நீக்குஆதி மிகச் சமீபத்தில் குக்கீஸ் பண்ணினாங்கனு நினைக்கிறேன். இங்கே மருமகள் கு.கு.வுக்குப் பிடிக்கும் என்பதால் அது தான் அடிக்கடி பண்ணுவாள். ஆனால் இனிப்புக் குறைவாகத் தான் போடுகிறாள்.
நீக்குமுருகா சரணம்
பதிலளிநீக்குபரோட்டா பிரட்
பதிலளிநீக்குபோன்றவைகளை
முற்றாக விலக்கி வைத்து
ஆறேழு ஆண்டுகள் ஆகின்றன...
பரோட்டா பிரட், மாதத்திற்கோ இல்லை இரு மாதங்களுக்கு ஒரு முறையோ சாப்பிடாவிட்டால் அப்புறம் என்ன இருக்கிறது?
நீக்குஅதைச் சொல்லுங்க ... இப்பதான் ஆறுதலா ஒரு பின்னூட்டம்!!!
நீக்குநான் மைதா மாவே சுமார் பத்தாண்டுகளுக்கும் மேல் வாங்குவதில்லை. ஐடிசியின் கோதுமை மாவே பல சமயங்களிலும் மைதா மாவு போலவே இருக்கு. அதைப் பயன்படுத்தலாம். ஆனால் பராத்தா எனில் கோதுமையைச் சுத்தம் செய்து மிஷினில் மாவாக்கிச் செய்வது தான் ஒரிஜினல் பராத்தா. தமிழ்நாட்டில் கொடுப்பதெல்லாம் பரோட்டா அல்லது புரோட்டா! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். இங்கேயும் தோஹா சரவண பவனில் இருக்குனு சொல்றாங்க.
நீக்குஇந்தியாவிலேயே ப்ரவுன் ப்ரெட் கிடைப்பதால் நாங்க ப்ரெட் எப்போவும் ப்ரவுன் ப்ரெட் தான் வாங்குவோம். இங்கேயும் அது தான் வாங்கறாங்க.
நீக்குபிரவுன் ப்ரெட் கூட நாம் நினைப்பது போல் அவ்வளவு நல்லதில்லை என்றும் செய்திகள் வந்தன.
நீக்குஅப்படியா? இது எனக்குப் புதிய செய்தி. மருத்துவர் பரிந்துரைத்ததால் தான் ப்ரவுன் ப்ரெடே சாப்பிடுகிறோம். அதுவும் ஸ்ரீரங்கத்திலேயே மாடர்ன் ப்ரெடில் ப்ரவுன் ப்ரெட் நன்றாகவே இருக்கிறது. மாடர்ன் மில்க் ப்ரெட் வாங்குவதில்லை. ப்ரவுன் ப்ரெட் தான் வாங்குவோம். அதுவும் எப்போதேனும் காலை வேளை சான்ட்விச் பண்ணவோ மாலைக் காஃபி, தேநீருடன் ப்ரெட் பகோடா, அல்லது ஸ்டஃப்ட் சான்ட்விச்சோ சாப்பிடனு வைச்சுப்போம். இங்கே தோஹாவில் தான் ப்ரெட் தினமும். கார்ன்ஃப்ளக்ஸ் இருந்தால் அது. ஓட்ஸ் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். பின்னர் நிறுத்திட்டோம்.
நீக்குரயில் பயணங்களின் போது
பதிலளிநீக்குமூன்று பிஸ்கட் மட்டும்...
பேக்கிங் சோடா பவுடர் இவற்றுடன் கோதுமை மாவு
பதிலளிநீக்குசேர்ப்பதனால் மட்டும் சிறப்பு என்று ஆகி விடுமா?...
மைதாவை தவிர்க்கலாமே? மேலும் தினமும் சாப்பிடுவதில்லையே. எப்போதோ ஒரு முறை பேக்கிங் சோடா சாப்பிடலாம் இல்லையா?
நீக்குவறட்டு முட்டைகளை கலப்பதனால் பிழை ஏதும்
பதிலளிநீக்குஇல்லை என்று நினைக்கின்றேன்...
வாழ்க வாழ்க
வாலறுந்த நரி போல எதையோ
பதிலளிநீக்குசொல்லி இருக்கின்றேன்...
பிழை தனை மன்னிக்கவும்..
அப்படியெல்லாம் இல்லை சார்.
நீக்குமைதா மாவு சோடா இரசாயனங்களால் உடல் நலக் குறைவு
பதிலளிநீக்குஉண்டானது...
அதனால் இந்த ஆதங்கம்...
புரிகிறது.
நீக்கு=
பதிலளிநீக்குகாயம்பட்ட போதிலும் துணிச்சலுடன்
முன்னேறிய டைசனுக்கு சல்யூட்
மைதா, பேக்கிங் ரசாயனம்
பதிலளிநீக்குஇவைகளிடம் கவனமாக இருத்தல்
வேண்டும் என்பதற்காக சற்றே
அதிகமாக சொல்லி விட்டேன்...
ஆனந்த விகடன் இதழ் வாசகர் நலனை கருத்தில் கொண்டு மிகுந்த பொறுப்புணர்வுடன் மது, சிகரெட் விளம்பரங்களை ஒரு காலத்தில் நிராகரித்தது நினைவுக்கு வருகிறது.
பதிலளிநீக்குஅப்போ ஆசிரியர் பாலசுப்பிரமணியம் அவர்கள். எனக்கும் இது நினைவில் இருக்கு.
நீக்குஇப்போது கூட ஆ.வி.யில் சிகரெட் விளம்பரம் வருவதில்லை என்றுதான் நினைக்கிறேன்.
நீக்குவிகடனெல்லாம் பார்த்தேப் பல வருஷங்கள் ஆகின்றன. "கல்கி" மட்டும் 2010 வரை வாங்கினோம். பின்னர் அதுவும் நிறுத்தியாச்சு. இந்துப் பத்திரிகை எல்லாம் படிப்பதை நிறுத்தி 25 வருடங்கள் ஆகின்றன. எப்போதேனும் டைம்ஸ் ஆஃப் இந்தியா.
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குசாக்லேட் கேக் நன்றாக இருக்கிறது பானு, உங்கள் மகளுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குபாராட்டிற்கும், வாழ்த்திற்கும் நன்றி, __/\__ __/\__
நீக்குஅந்தக் காலத்தில் #₹%& கபே
பதிலளிநீக்குஎன்று கடைகள்... சாப்பிடுவதற்கு மன நிம்மதி..
இப்போது டீக்கடையில் கூட முட்டை போண்டா
சிக்கன் பகோடா, பீப் வறுவல்....
எங்கெங்கு பார்த்தாலும் புலால் மயம்...
சைவ உணவு உண்போர்க்கு
மிகவும் கஷ்டம்..
ஆமாம், அள்விற்கு அதிகமான அசைவ உணவு கடைகள். மெரினா பீச்சில் முன்பெல்லாம் அங்கொன்றும். இங்கொன்றுமாக பஜ்ஜி கடைகள் இருக்கும், அவைகளும் வாழைக்காய், மிளகாய் பஜ்ஜிகள்தான். இப்போது போய்ப் பாருங்கள், கடலை ஒட்டி மீன் பஜ்ஜி கடைகள். தண்ணீரில் நிற்க முடியாமல் மீன்வாசனை. இதனாலேயே நான் மாலை நேரங்களில் பீச்சுக்கு செல்வதை தவிர்த்து விட்டேன்.
நீக்கு
பதிலளிநீக்கு//குண்டு காயம்பட்ட போதிலும் துணிச்சலுடன் முன்னேறிய
மோப்பநாய்: டைசனுக்கு சல்யூட்//
நானும் அதற்கு வணக்கம் தெரிவிக்கிறேன். விரைவில் நலமடைந்து நல்லபடியாக பணியாற்ற வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.
திருமதி. பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்களின் சாக்லேட் கேக் சூப்பர்.அவரின் மகளின் பிறந்தநாளுக்கு வாழ்த்துகள் தெரிவிக்கிறோம்.
பதிலளிநீக்குடைசன் காயப்பட்ட பின்பும் தளராது தனது பணியை திறம்பட ஆற்றியுள்ளது சொல்ல வார்த்தைகள் இல்லை. விரைவில் நலமடையட்டும்.
பாராட்டிற்கும், வாழ்த்திற்கும் நன்றி மாதேவி.
பதிலளிநீக்கு