25.2.26

உணவு உடை இருப்பிடம் தவிர வேறு எது எதற்கு முக்கியத்துவம் தரவேண்டும்?

 

கேள்வி பதில்கள் : 

 நெல்லைத்தமிழன் : 

1. அனேகமா ஒவ்வொரு வீட்டிலும் (நான் சொல்வது பிராமணர்கள் மத்தியில்) பசு இருந்த காலம் போய், பிறகு ஊரில் உள்ள பால் பண்ணை அல்லது வீட்டிற்குக் கொண்டு வந்து தரும் பால் சாப்பிட்டதுபோக, தற்காலத்தில் பாக்கெட் பாலில் காலத்தைக் கழிக்கிறோமே. இது வளர்ச்சியா இல்லை உடல்நலத்தைக் கெடுத்துக்கொள்ளும் பாதையா?   

# வீட்டில் மாடு வளர்க்க இயலாத சூழ்நிலையில் வேறு வழியில்லையே !  பாக்கெட் பாலில் சில தில்லு முல்லுகள் நடக்கின்றன எனும் சந்தேகம் மிகவும் வலுவாக  இருக்கிறது. கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.

2. போர்ன்விட்டா, பூஸ்ட், ஹார்லிக்ஸ் என்று வித வித விளம்பரங்கள் பார்க்கிறேன். ஒரு காலத்தில் அவைகள் உடலுக்கு மிகவும் நல்லவை என்று நம்பிக்கொண்டிருந்தேன். அதுபோல தினமும் பால் அருந்துவதும் உடல் நலத்திற்கு நல்லது, கால்ஷியம் சேரும் என்றெல்லாம் நம்பினேன். உண்மையில் போர்ன்விட்டா போன்றவைகள் நம் உடலுக்குக் கேடு என்றே இப்போது நம்புகிறேன். உங்கள் எண்ணம் என்ன?  

# கேடு என்பது உண்மையோ பொய்யோ தெரியவில்லை.  ஆனால் நிச்சயம் பண விரயம். நன்மை என்பது இருந்தாலுமே கூட மிக மிகச் சொற்பம் என்று உறுதியாகச் சொல்லலாம். இது போன்ற பொருள்கள் விளம்பர யுகத்தின் வெற்றிகள்.

3. தற்போதைய வாழ்க்கை முறையில் கூட்டுக்குடும்பம் சரிப்படுமா? பெரியோர்களிலிருந்து சிறியோர்கள் வரை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றில் ஆர்வமும், விட்டுக்கொடுக்காத தன்மையும் இருப்பதால் இந்தக் கேள்வி.  

# அவரவர்களுக்கு வேண்டிய இடைவெளியைத் தரவல்ல  வசதியான வீடு இருந்து, அங்கே கூட்டுக் குடும்பமாக  இருப்பதே சிறப்பு என்று நான் கருதுகிறேன்.

ஆனால் ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள சூழ்நிலைகள் அதற்கு ஒத்துப் போவதாக இருக்க வேண்டும்.  அது எல்லா இடத்திலும் இருப்பதற்கு வாய்ப்பு இல்லாமலும் இருக்கலாம்.

4. எதற்கு கோவில் கோவிலாகச் செல்லவேண்டும்? இருக்கும் இடத்திலேயே இறைவனை நினைத்துக்கொண்டு இருந்தால் போதாதா என்ற கேள்வியைச் சிலர் கேட்கின்றனர். நீங்களும் வாசகர்களும் என்ன நினைக்கிறீர்கள்? 

# இறைவனை வணங்க மட்டும் கோயிலுக்கு போகிறோம் என்று சொல்ல முடியாது.  அங்கே இருக்கிற சூழ்நிலையில் அங்கு வழங்கப்படும் பிரசாதம் பட நமக்கு பிடித்த விஷயங்கள் இருந்தால் கோயிலுக்கு போக நாம் ஆசைப்படுகிறோம் என்பதே உண்மை.

5. வாழ்க்கையில் உணவு உடை இருப்பிடம் தவிர வேறு எது எதற்கு முக்கியத்துவம் தரவேண்டும்?

# பண வசதி, ஆரோக்கியம், மன அமைதி இவை  மிகவும் முக்கியம்.

= = = = = = =

படமும் பதமும் : 

நெல்லைத்தமிழன் : 


அட... ஒரு மதிய உணவு ப்ளேட்டுல என்ன அதிசயம் இருக்கு என்று நினைக்கிறீர்களா?  நான் பொதுவா பழங்களையும், ஜூஸ்களையும் ப்ரெட்களையும் வைத்து என்னுடைய வெளிநாட்டுப் பயணங்களின்போது சமாளித்துக்கொள்வேன். இருந்தாலும் செல்லும் நாட்டில் நம் வெஜிடேரியன் உணவு கிடைக்கும் என்றால், பயணம் செய்து அங்குபோய் மதிய உணவு சாப்பிடுவேன். இது பாரீஸ் பயணத்தின்போது, சங்கீதாவின் மதிய உணவு. என்ன சார்..தயிர் இல்லையா என்றேன். நீங்கதான் முதல் ஆள் பாரீஸ்ல மீல்ஸுக்கு தயிர் கேட்டது. நம்ம ஊர்க்காரர். உங்களுக்கு இல்லாததா என்று சொல்லி தயிர் கொடுத்தார்கள். விலை 12 யூரோ என்று நினைவு. 



= = = = = = = =


பாரீஸில் புகழ் பெற்றது லூவர் மியூசியம். அதில் உள்ளவற்றில் கொஞ்சம் அதிகமாகவே புகழ் பெற்றது ஓவியர் லியனார்டோ டாவின்ஸியின் இந்த ஓவியம் மோனா லிஸா.  இந்த மியூசியத்துக்கு நான் மூன்று முறை சென்றிருக்கிறேன். இது பற்றி ஒரு தொடர் எழுத எண்ணியிருக்கிறேன். ஆனால் ஓவியங்கள், சிற்பங்களை ரசிக்க கலைக்கண் வேண்டும். அதற்குத் தயார் என்றால் நான் தொடர் எழுதுகிறேன். 



மோனாலிஸா ஓவியம் சிறியது. அதன் எதிரே இந்த மிகப் பெரிய ஓவியம் இருக்கிறது. ஆனால் பாருங்க, மோனா லிஸா உலகப் புகழ் பெற்றதாக இருக்கிறது. அளவு முக்கியம் இல்லை, அல்லவா?

= = = = = = = = =



சுஜாதா இரண்டு சரித்திரத் தொடர்கதைகள் எழுதி இருக்கிறார் அல்லவா...  இதோ இன்னொரு செமி சரித்திரக்கதை!  வஸந்த் வஸந்த் என்கிற கதை.  இதில் சுஜாதா சிவப்பு கருப்பு வெளுப்பு நிறுத்தப்பட்டதை ஓரிரு வார்த்தைகளில் சொல்கிறார்.  தொடர்ச்சியை எதிர்பார்க்காதீர்கள்.  ஆங்காங்கே கொஞ்சம் கொஞ்சம்...


'சுந்தர சோழன் தனது மூத்த புதல்வனது வீரச் செயலையும் ஆற்றலையும் உணர்ந்து கி.பி. 966-ல் அவனுக்கு இளவரசுப் பட்டம் கட்டினான். மற்றொரு மகனாகிய அருள்மொழித் தேவன் என்பவனே பின்னர் எத்திசையும் புகழ் பரப்பி இனிது வாழ்ந்த முதல் ராஜராஜ சோழன் ஆவான்.'

எஸ்டேட் டியூட்டி ஆக்ட்டில் ஆழ்ந்திருந்த கணேஷ் எரிச்சலுடன் நிமிர்ந்து 'வஸந்த்! இப்ப நிறுத்தப் போறியா இல்லையா?' என்றான்.

"ரொம்ப சுவாரஸ்யமா இருக்குது பாஸ்! இந்த ஆதித்த கரிகாலன் 969-ல் க்ளோஸ்! நாலு பேர் சேர்ந்து ஆளைத் தீர்த்துட்டாங்க! இதில ஒரு பெரிய சஸ்பென்ஸ் கதையே இருக்கு. உத்தம சோழன் ஏன் அந்த நாலு பேருக்கும் தண்டனை கொடுக்கலை? அதுலதான் பாஸ் இருக்கு மர்மம்.

'வஸந்த்! நிஜமாச் சொல்லு. திடீரென்று உனக்கு ஏன் சரித்திரத்தில் இத்தனை ஈ.பா?'

'என்ன பண்றது பாஸ் ? சரித்திரக் கதையெல்லாம் இப்பப் படக்குன்னு நிறுத்திர்றான்களே! அதான் சொந்தமாகவே படிச்சுக்கலாம்னுட்டு... எல்லாக் காரியங்களையும் சொந்தமா செஞ்சுக்கிறது நல்லதில்லையா?'

'ஏய்! நிஜமாவே உனக்குச் சரித்திரத்தில இன்ட்ரஸ்ட்டா?'

'பின்னே?'

'நான் நம்பலை. ஏதாவது சரித்திரம் படிக்கிற பொண்ணை ஸைட் அடிக்கிறியா?'

நடு சென்டர்லே குத்திட்டிங்களே, பாஸ். நான் சரித்திரம் படிக்கிறதுக்குக் காரணம் ஒரு பெண்ணில்லை. அவ அப்பா!"

---------


...........................

ஸ்டியரிங்கில் உட்கார்ந்து ஸ்டார்ட்டரை கிர்ர்ர்ரக்கி காரை விரட்டிய வஸந்த், 'இனியா, என் நெத்திலே கவலை ரேகைகள் படிஞ்சிருக்கே கவனிச்சியோ?' என்றான்.

வஸந்த், எனக்கும் கவலையாத்தான் இருக்குது.'

'மெட்ராஸ்ல நடு சென்டர்ல இருந்த ஆளுக்குப் பல்லாவரத்தில் என்ன வேலை? அங்க கல்லை உடைப்பாங்களே தவிர கல்வெட்டு ஏதும் கிடைக்காததே!'

'புரியலையே?'

'அப்புறம் இது என்ன கட்டுரை? ராஜராஜன் கிணறு? கொஞ்சம் சாம்பிள் படி!'

இனியா சற்றுத் தடுமாற்றத்துடன் கையிலிருந்த கட்டுரையைப் படித்தாள்.

'ஸ்வஸ்திஸ்ரீ திருமகள் போலப் பெருநிலச் செல்வியுந் தனக்கேயுரிமை பூண்டமை மனக்கொள காந்தளூர்ச் சாலையும் கலமறுத்தருளி வேங்கை நாடும் கங்கபாடியும் நாளம்பாடியும் தடிகைபாடியும்...'

'நாயுடு ஹால் பாடியும்... ஹோல்டான். நிறுத்து. கார் உதறுது. கட்டுரை பூரா பாடியா?'

'ஆராய்ச்சிக் குறிப்புகள் இருக்கு. South Indian Inscriptions, Vol.III, No. 44 on...'

'ஆமா, எனக்கு ஒரு சின்னச் சந்தேகம். உங்கப்பா தினப்படி இப்படித்தான் எழுதிக்கிட்டிருப்பாரா?'

'ஆமாம்!'

--------------

'பரவாயில்லையே. ஒரு வக்கீலுக்குச் சரித்திரத்திலே ஈடுபா​டா 

'ரெண்டிலேயும் நிறையச் சரடு விடலாம் இல்லையா?"

'சரடா?'

'சரடுன்னா ஐ மீன் நிறையப் படிக்கணும்னு சொல்ல வரேன்! இனியா உங்கிட்டச் சொன்னேனோ இதை? என் ஃப்ரண்ட் சம்பத்துனு பி.ஏ. ஹிஸ்டரி படிச்சிட்டிருந்தான். க்வார்ட்டர்லி எக்ஸாம். ஹிஸ்டரி பேப்பர். மூன்று மணி நேர பேப்பர். Do you consider Rajaraja as the greatest of the Chola Kings?னு ஒரு பெரிய கட்டுரை எழுதச் சொல்லியிருந்தாங்க. இவன் No. I Don'tனு எழுதிட்டு மாட்னிக்குப் போய்ட்டான். ஹ ஹ ஹ'

அந்த வட்டாரத்திலே யாருமே சிரிக்கவில்லை. பேராசிரியர் முகம் சற்றுக் குறுகி, 'யங் மேன்! சரித்திரம் என்கிறது சிரிக்கிற விஷயமில்லை' என்றார்.

'சும்மா சின்னதா ஒரு ஜோக் அடிச்சுப் பார்த்தேன். ஸார் உங்களுக்கு மெக்ஸிகோ தேசத்து லாண்டரி ஜோக் தெரியுமா?'

இனியா அவசரமாக 'வஸந்த்! நீங்க என்னவோ அப்பாவைச் சந்தேகம் கேக்கணும்னீங்களே!' என்றாள்.

'அதான் ஸார்! இந்த உத்தம சோழனைப் பத்தி எனக்கு ஒரு பெரிய சந்தேகம்!'

'என்ன?'

'பிளாகாட் ஆதித்த கரிகாலனைக் கொன்னவங்களுக்கு ஏன் பனிஷ்மெண்ட் கொடுக்கலை? அந்தக் கொலைக்கும் இவனுக்கும் கனெக்ஷன்னுதானே அர்த்தம்?'

'அது அவ்வளவு சிம்பிள் இல்லை வஸந்த். பஞ்சவன் பிரமாதி ராஜன்னு பாண்டி நாட்டு அரசியல் அதிகாரி ஒருவன் அதிலே சம்பந்தப்பட்டிருக்கான்!'

'அப்படியா/ சொல்லுங்க ஸார்! ரொம்ப இன்ட்ரஸ்டிங்!' என்றான்.

இனியா அப்பாவின் பின்புறத்திலிருந்து, 'உன்னை வெட்டறேன் வா' என்று கையைக் காட்டினாள்.

கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டுப் பேராசிரியர் நிறுத்தினார்.கணேஷ் உள்ளே வர 'பாஸ்! உங்களுக்காகத்தான் காத்துக்கிட்டிருக்காங்க!' என்றான்.

**********

'ராஜராஜன் கிணறுங்கிறது என்ன ஸார்?"

'செங்கல்பட்டு ஜில்லாவில் உக்கல்ங்கிற கிராமத்துக்குப் பக்கத்திலே ஒரு பழைய கிணறு அது. ராஜராஜன் காலத்திலே ஆவூர்ல கண்ணல் ஆரூரன்னு ஒரு ஆண் ராஜா போல அதை வெட்டித் தண்ணி இறைக்கறதுக்கு விட்டிருக்கான். அது பத்தி ஒரு கோயில் கல்வெட்டில் எழுதியிருக்கு.'

'கோயில் பேரு?'

'புவனி மாணிக்க விஷ்ணு கிரகம்!'

'சரிதான் சின்னதா இருக்கே!'

அந்தக் கிணறு இ​ன்னமும் இருக்கா?

இருக்கு, அடையாளம் கண்டுபிடிக்கலாம்.

அந்தக் கல்வெட்டில் அதைப்பத்தி வேற விவரம் ஏதாவது இருக்கா?"

வேறு விவரம்னா?'

புதையல் கிதையல், தங்கம் அப்படின்னு.'

'சேச்சே! அதெல்லாம் இல்லை..

'கல்வெட்டு என்ன சொல்றது

'இந்த மாதிரி கிணற்றை வெட்ட வெச்சவன் இவன்.. அதில இருந்து தொட்டிக்குத் தண்ணி இறைக்கிறவனுக்கு எத்தனை மரக்கால், எத்தனை குறுணி நெல் கொடுக்கணும், பந்தல்காரனுக்கு இவ்வளவு-சேதத்துக்கு இவ்வளவுன்னு நெல் கணக்கு... என்னைப்போல் சரித்திர ஆசாமிக்குத்தான் இந்தக் கிணத்திலே செய்தி இருக்கு... புதையலும் கிடையாது! ​ ஒரு மண்ணாங் கட்டியும் கிடையாது. அதான் ரொம்ப ஆச்சரியமா இருக்கு/"

'இப்ப நாங்க என்ன செய்யணும்னு சொல்றீங்க?' என்றான் கணேஷ்.

'அந்தக் குண்டர்கள் எக்கேடு கெட்டுப் போகட்டும். கிணத்துல போய் விழட்டும். ஆனா அந்தக் கட்டுரை எனக்கு அவசியம் திருப்பி வேணும்! அதுக்காக நீங்க உதவி செய்து எப்படியாவது அதைக் கொண்டு​ வந்துறணும்!'

'வஸந்த்/ கேட்டில்ல? ஸார் கவலைப்படாதீங்க. வஸந்த் கெட்டிக்காரன். அதை மீட்டுக்கிட்டு வந்துருவான்.

'ஏன் ஸார், அந்தக் கட்டுரை ரொம்ப அவசியமோ? 'ராஜேந்திரன் கிணறு'ன்னு இன்னொண்ணு எழுதிக்குங்களேன்.'

'இல்லைப்பா, ஆறு மாசம் ஆராய்ச்சி பண்ணி அதை ஆறு பக்கத்திலே சாறாப் பிழிஞ்சு எழுதியிருக்கேன். ராஜராஜன் கிணறு கல்வெட்டில் எத்தனை விஷயம் இருக்கு! புதுக்குப்புறம்னா என்னன்னு தெரியுமா?

'புதுசு, குப்புறப் படுத்துக்கறது?'

'இல்லை. காஸ்ட் ஃபார் ரிப்பேருக்கு செந்தமிழ்த் தொடர். அது அந்தக் கல்வெட்டில் எழுதியிருக்கு!'

[இதன் இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமான பகுதிகளை வெவ்வேறு கிழமைகளில் கொடுக்கிறேன்!

=====================================================================================

KGG பக்கம்: 

(வாடகைத் ) தாயே யசோதா உந்தன் .. ! 

சமீபத்தில் yashoda என்ற தெலுங்குப் படம் Prime Video(?)  வில் பார்த்தேன். 
ஸமந்தா கதாநாயகி. 

வாடகைத் தாய்(கள்) பற்றிய படம். ஆனால் இந்தத் தாய்மார்கள் எல்லோரும் ஏழை மக்கள் - அத்தியாவசிய தேவைகளால் பெரும் பணத்துக்கு ஆசைப் பட்டு, வலையில் வந்து விழுகிறார்கள். அப்புறம் அவர்கள் கதி என்ன ஆகிறது என்பது கதை. 

சமந்தா கிட்டத்தட்ட லேடி ஜேம்ஸ் பாண்ட் ஆக வருகிறார். படம் முழுவதும் பரவி இருக்கிறார்! 

வரலக்ஷ்மி சரத்குமார் வில்லியாக வருகிறார். (ஆனால் அவர் வில்லி என்பது படத்தின் இறுதியில்தான் நமக்குத் தெரிகிறது) 


படம் முடியும்போது எனக்கு வந்த சந்தேகம்: அவ்வளவு அடி தடி, உதை, குத்து , பறந்து பறந்து சண்டைகள் போட்ட சமந்தாவின் வயிற்றில் இருந்த செயற்கைக் கரு குழந்தை என்னதான் ஆயிற்று? அது பற்றிய விவரங்கள் எதுவும் சொல்லாமல் படம் முடிந்துவிடுகிறது. 

ஜேம்ஸ் பாண்ட் ரசிகர்கள் / சமந்தா ரசிகர்கள் படத்தைப் பார்த்து ரசிக்கலாம்! 

= = = = = = = = = = =

முதுமையிலே இனிமை காண முடியுமா? 

முடியும் என்கிறார் ஒரு டாக்டர். 

44 வாக்கியங்கள் அதற்காக கொடுத்துள்ளார். 

அவை என்னென்ன என்று பார்ப்போம்! 

உளவியலாளர் ஹிடேகி வாடா "80 வயது சுவர்" என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளார். புத்தகம் வெளியான உடனேயே, அதன் விற்பனை 500,000 பிரதிகளுக்கு மேல் சென்றது, இது அந்த நேரத்தில் அதிகம் விற்பனையான புத்தகமாக மாறியது. இந்த விற்பனைப போக்கு தொடர்ந்தால், இந்தப் புத்தகம் 1 மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் விற்பனையாகி, அந்த ஆண்டின் ஜப்பானின் அதிகம் விற்பனையாகும் புத்தகமாக மாறும்.

61 வயதான டாக்டர் வாடா, முதியோரின் மன நோய்களில் நிபுணத்துவம் பெற்ற ஒரு மருத்துவர். 80 வயதுடையவர்களுக்கான ஒரு "அதிர்ஷ்டமான" வாழ்க்கையின் ரகசியங்களை அவர் 44 வாக்கியங்களில் சுருக்கமாகக் கூறியுள்ளார், அவை கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:

1. தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருங்கள்.

2. கோபம் வரும்போது ஆழமாக மூச்சு விடுங்கள். (deep breathung) 

3. உங்கள் உடல் இறுகிப் போகாதபடி போதுமான உடற்பயிற்சி செய்யுங்கள்.

4. கோடை காலத்தில் ஏர் கண்டிஷனர் பயன்படுத்தும்போது அதிக தண்ணீர் குடியுங்கள்.

5. டயப்பர்கள் நடமாட்டத்தை அதிகரிக்க உதவுகின்றன.

6. நீங்கள் எவ்வளவு அதிகமாக மென்று சாப்பிடுகிறீர்களோ, அவ்வளவு அதிகமாக உங்கள் மூளையும் உடலும் சுறுசுறுப்பாக இருக்கும்.

7. ஞாபக மறதிக்குக் காரணம் வயதல்ல, மூளையைப் பயன்படுத்தாததே ஆகும்.

8. அதிகப்படியான மருந்துகளை உட்கொள்ளத் தேவையில்லை.

9. இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரையை தேவையில்லாமல் குறைக்கத் தேவையில்லை.

10. தனியாக இருப்பது தனிமையல்ல; அது அமைதியாக நேரத்தைச் செலவிடுவது.

11. சோம்பல் ஒரு அவமானமல்ல.

12. ஓட்டுநர் உரிமத்திற்காக பணம் செலவழிக்கத் தேவையில்லை (முதியோர்கள் தங்கள் உரிமங்களைத் திரும்ப ஒப்படைக்க ஜப்பானில் ஒரு பிரச்சாரம் நடந்து வருகிறது).

13. உங்களுக்குப் பிடித்ததைச் செய்யுங்கள்; பிடிக்காததைச் செய்யாதீர்கள்.

14. இயற்கையான ஆசைகள் முதுமையிலும் நீடிக்கின்றன.

15. எந்தச் சூழ்நிலையிலும், எல்லா நேரமும் வீட்டிலேயே உட்கார்ந்திருக்க வேண்டாம்.

16. உங்களுக்குப் பிடித்ததைச் சாப்பிடுங்கள்; லேசான உடல் பருமன் நல்லது.

17. எல்லாவற்றையும் கவனமாகச் செய்யுங்கள்.

18. உங்களுக்குப் பிடிக்காதவர்களுடன் பழக வேண்டாம்.

19. எல்லா நேரமும் தொலைக்காட்சி பார்க்க வேண்டாம்.

20. நோயுடன் போராடுவதற்குப் பதிலாக, அதனுடன் வாழக் கற்றுக்கொள்ளுங்கள்.

21. "வண்டி மலைக்குச் சென்றதும், பாதை தெரியும்" - இது முதியோருக்கான மகிழ்ச்சியின் மந்திரச் சொல்.

22. புதிய பழங்கள் மற்றும் சாலட்களைச் சாப்பிடுங்கள்.

23. குளியல் நேரம் 10 நிமிடங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.  24. உங்களுக்குத் தூக்கம் வரவில்லை என்றால், உங்களை நீங்களே கட்டாயப்படுத்திக் கொள்ளாதீர்கள்.

25. மகிழ்ச்சியைத் தரும் செயல்கள் மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கின்றன.

26. நீங்கள் உணர்ந்ததைச் சொல்லுங்கள்; அதிகமாக யோசிக்காதீர்கள்.

27. கூடிய விரைவில் ஒரு "குடும்ப மருத்துவரைக்" கண்டறியுங்கள்.

28. அதிக பொறுமையுடனும் இருக்க வேண்டாம், அதிக பிடிவாதமாகவும் இருக்க வேண்டாம்; ஒரு "துணிச்சலான மூத்தவராக" இருப்பதும் தவறில்லை.

29. சில சமயங்களில் உங்கள் மனதை மாற்றிக்கொள்வது பரவாயில்லை.

30. வாழ்க்கையின் இறுதி கட்டங்களில், மறதி நோய் என்பது கடவுளின் ஒரு வரம்.

31. நீங்கள் கற்றுக்கொள்வதை நிறுத்தினால், நீங்கள் வயதாகிவிடுவீர்கள்.

32. புகழுக்காக ஏங்காதீர்கள்; உங்களிடம் இருப்பது போதுமானது.

33. அப்பாவித்தனம் முதியோருக்கானது.

34. ஒரு விஷயம் எவ்வளவு கடினமாக இருக்கிறதோ, அது அவ்வளவு சுவாரஸ்யமாக மாறும்.

35. சூரியக் குளியல் மகிழ்ச்சியைத் தருகிறது.

36. மற்றவர்களுக்குப் பயனளிக்கும் காரியங்களைச் செய்யுங்கள்.

37. இன்றைய நாளை வசதியாகச் செலவிடுங்கள்.

38. ஆசைதான் நீண்ட ஆயுளுக்கான திறவுகோல்.

39. மகிழ்ச்சியாக வாழுங்கள்.

40. எளிதாக சுவாசியுங்கள்.

41. வாழ்க்கையின் கோட்பாடுகள் உங்கள் கைகளிலேயே உள்ளன.

42. எல்லாவற்றையும் அமைதியாக ஏற்றுக்கொள்ளுங்கள்.

43. மகிழ்ச்சியானவர்களை அனைவரும் நேசிக்கிறார்கள்.

44. ஒரு புன்னகை நல்ல அதிர்ஷ்டத்தைத் தருகிறது.

வயதாவதென்பது ஒரு வரம்பு அல்ல - அது ஒரு வரம். சரியான கண்ணோட்டத்துடனும் தினசரி பழக்கவழக்கங்களுடனும், 60 வயதுக்கு பிந்தைய ஆண்டுகள் உங்கள் வாழ்க்கையின் மிகவும் பயனுள்ள ஆண்டுகளில் சிலவாக இருக்கலாம். வயதாவதை பயத்துடன் அல்லாமல், கருணையுடனும், நன்றியுடனும், டாக்டர் வாடா தாராளமாகப் பகிர்ந்துகொண்ட ஞானத்துடனும் ஏற்றுக்கொள்வோம்.

 = = = = = = = = = =

115 கருத்துகள்:

  1. ​ 80 நோக்கி விரையும் எனக்கு 60 வயதுக்கு மேல் என்ற அறிவுரைகள் மிகவும் பயனுள்ளவை. GMB இந்த முதுமையில் கடைபிடிக்க நியதிகளை பற்றி பல பதிவுகள் எழுதியிருந்தார்.
    உண்மையில் சாகலாம் என்று 60க்கு முன் சொல்லிக் கொண்டிருந்தவர்கள் 60 வயது கடந்தபின் மரணத்தைத் தள்ளிப்போட முயற்சி செய்கின்றனர். அவர்களுக்கு இந்த அறிவுரைகள் பயன்படும்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
  2. நெல்லை, மாடு எங்க வளர்க்க முடியும்? காலம் மாறிக் கொண்டு வருகிறது. இடம் இலலதப்ப என்ன செய்ய முடியும் இடம் இருந்தால் மட்டும் போதாது பணமும் தேவை இடம் வாங்க!!!!

    சும்மா அந்தக்காலம் இந்தக்காலம்னுட்டு..ஏதோ இப்ப இருக்கமா...சுவாசிக்கறமா....நலல்தை நினைக்கறமான்னுட்டு போய்க்கினே இருக்கணும்!!! ஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருந்தாலும் அந்தக் காலம் சுகமா இருந்ததுன்னு கற்பனையிலாவது சந்தோஷப்பட விடுங்க சேச்சி.... ஒருவேளை அந்தக் காலத்துக்கு இப்போ போக முடிந்தால், அங்க இருக்கறவங்க, அதற்கு முந்தைய காலத்தை சிலாகிச்சிட்டிருப்பாங்களோ?

      நீக்கு
    2. ஆம், நெல்லை சரியே!

      நீக்கு
    3. சத்தியமாக இல்லை நெல்லை. அது உங்கள் அனுபவம். என் அனுபவம் வேறு.

      கீதா

      நீக்கு
    4. அதுக்காக அந்தக்காலம் நல்ல காலம் இல்லை என்றில்லை. மாடு வயல் என்று அருமையான காலம். ஆனால் அக்காலம் இக்காலம் இரண்டிலும் நல்லவை இருக்கின்றன. ஒவ்வொருவரின் அனுபவங்கள்தான் ....எனக்கும் வயல்வெளிகள் மறைவது மிகவும் வருத்தமான விஷ்யம.

      கீதா

      நீக்கு
    5. கூட்டுக்குடும்பத்திற்கான பதில் - # ஆசிரியரின் பதிலையும் டிட்டோ செய்கிறேன்.

      சின்ன வீட்டில் எப்படி எலலரும் சேர்ந்து வாழ முடியும்? தனித்தனியாகப் போகும் போது அவரவரின் எண்ணங்கள் பொறுப்புகள் வேறுபடும்.

      கீதா

      நீக்கு
    6. நெல்லை, மாடு பிரா௳ணர்கள் மட்டும் வளர்த்தது இல்லையே நெல்லை. கோனார் என்று கேள்விப்பட்டிருப்பீங்களே! பலரும் அதுவும் வயல்வெளிகள் வைத்திருந்த மற்ற சமூகத்தார்களும் மாடுகள் வைத்திருந்தாங்க.

      கீதா

      நீக்கு
    7. மாடு எல்லாரும் வளத்தாங்க. பிராமணர்கள் வளர்த்ததுதான் எனக்கு அதிசயமாகத் தெரிந்தது. அதுக்குக் காரணம் அவங்கள்ட வயல் இருந்தது என நினைக்கிறேன்.

      நீக்கு
    8. சத்தியமாக இல்லை நெல்லை. அது உங்கள் அனுபவம். என் அனுபவம் வேறு.//

      அடடா! இந்தக் கருத்தை நான், நெல்லை எனது கீழ் சொன்ன கருத்துக்குச் சொல்லியிருக்காரோ என்று நினைத்துக் கொடுத்துவிட்டேன் இங்கு.

      அதுக்காக என்று அடித்ததன் முந்தைய வரிகள் என்ன அடித்தேன் என்று தேடுகிறேன்.

      இரண்டு ஐடி யிலிருந்து மாற்றி மாற்றி கருத்து போட வேண்டியதாவதால்....ஒரே குயப்பமா கீது!

      இந்த ஐடி அப்பப்ப முரண்டு பிடிக்கிறது...எனவே மற்ற ஐடியையும் ஓப்பன் செய்து வைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

      கீதா

      நீக்கு
    9. மாடு எல்லாரும் வளத்தாங்க. பிராமணர்கள் வளர்த்ததுதான் எனக்கு அதிசயமாகத் தெரிந்தது. அதுக்குக் காரணம் அவங்கள்ட வயல் இருந்தது என நினைக்கிறேன்.//

      அதேதான் நெல்லை. ஆனால் மாட்டிற்கு ஆள் வைத்திருப்பாங்க. முன்ன பிராமணர்கள் பண்ணையார்களும் உண்டே. நில புலனோடு. பண்ணையார்னே சொல்வதுண்டு.

      எங்கள் குடும்பத்துப் பெண்ணொருவர்க்கு, அப்ப தஞ்சாவூரில் ஏக்கரா கணக்கில் நிலபுலன் களோடு வரன் ஒன்று வந்தது. ;அதில் பையனின் அப்பா தன்னைப் பண்ணையார் என்றே குறிப்பிட்டிருந்தார். பையன் விவசாயப் பட்டப்படிப்பு படித்திருந்தார். ஆனால் ஃபிக்ஸ் ஆகலை.

      கீதா

      நீக்கு

    10. மற்ற ஊர்கள் எப்படியோ தெரியலை. ஆனால் திருச்சி, சுற்றி உள்ள ஊர்களில் இன்னமும் கிராம நடைமுறைகளே உள்ளன. அங்கெல்லாம் பால்காரர்கள் நிறையவே உள்ளனர். சிலர் பண்ணையும் வைத்திருக்கின்றனர். நாங்க தமிழ்நாட்டில் இருந்தவரை பால் பாக்கெட் என்பது எப்போதேனும் தான் வாங்கி இருக்கோம். எப்போவுமே கறந்த பால் தான். இப்போக் கூட ஸ்ரீரங்கம் போவாதற்கு முன்னரே எங்க பால்காரருக்குத் தொலைபேசியில் நாங்க வருவ்தைச் சொல்லிப் பால் கொண்டு வரச் சொல்லிடுவேன். பால், வெண்ணெய், தயிர், நெய் ஆகியவை எப்போவுமே நிறையவே இருக்கும்.

      நீக்கு
    11. நான் கல்யாணம் ஆகி வந்தப்போ என் மாமனார் வீட்டில் உழவு மாடுகள் 2, வண்டி மாடுகள் 2 (இவை மொட்டை மாடுகளாக இருக்கும். தஞ்சை சுற்றுவட்டாரங்களிலேயே இப்படி மாடுகளை வண்டியில் பூட்டியும் பார்த்தேன்.) எருமை மாடுகள் 2, பசு மாடுகள் இரண்டு எனக் கொட்டில் நிறைய இருக்கும். பின்னர் மாமனாருக்கு வயதாகிக் கொஞ்சம் கொஞ்சமாக உடல் தளர்ந்து வர உழவு மாடுகள், வண்டி மாடுகளை விற்றார். எருமை மாடுகளையும் விற்க வேண்டி இருந்தது. எங்க பையர் பிறந்தப்போக் கொட்டிலில் பிறந்தக் கிடாரிப் பசுங்கன்றையும் அதன் அம்மாவையும் வைத்துண்டு மற்றவை விற்கப் பட்டன. தேவைப்படும்போது யாரிடமாவது வாடகைக்கு மாடுகளைக் கேட்டு வாங்கிப்பார். அதிலும் சில பிரச்னைகள் வரவே மொட்டை வண்டி மட்டும் வைச்சுண்டு கூண்டு வண்டிகளை எல்லாம் விற்றார். பின்னர் ஓரிரு ஆண்டுகளில் மொத்தக் குடும்பமும் சென்னைக்கு வந்தாச்சு. அதன் பிறகு ஊரில் உள்ள நில புலன்கள், வீடுகள் எல்லாமும் விற்கப் பட்டன. அதன் பிறகுக் குலதெய்வம் கோயிலுக்குப் போகவே ஊர்ப்பக்கம் போக ஆரம்பிச்சோம். இப்போல்லாம் அது கூட முடியலை.

      நீக்கு
    12. அம்பத்தூருக்குக் குடித்தனம் வந்த புதுசில் வீடுகள் எல்லாம் ரொம்பப் பெரியவையாகச் சுற்றி இருக்கும் நிலமே 2 கிரவுன்டுக்குக் குறையாமல் இருந்தன. அத்தகைய வீடுகளில் கொல்லைப் புறம் மாட்டுத் தொழுவம் இருந்தன. மாடுகளும் இருந்தன. எண்பதுகளில் கூட நாங்க வீடு கட்டி இருந்த காலனியில் சில பால்காரர்கள் மாடுகள் வைத்துப் பராமரித்து வந்தனர்.

      நீக்கு
    13. எங்கள் கிராமத்தில், எங்கள் சித்தப்பா வீட்டில் மாடுகள் உண்டு. அந்தக் காலத்தில், எங்கள் வீட்டிலும் மாடுகள் இருந்தன; என் மாமியார் வீட்டிலும் மாடுகள் இருந்தன என்று கேள்விப்பட்டுள்ளேன். சிறிய வயதில் என்னுடைய மனைவியும், அவங்க தங்கையும் அவர்கள் வீட்டு எருமை மாடுகளின் மீது அமர்ந்து அவற்றை ஓட்டிச் சென்று, ஆற்றில் அவைகளைக் குளிப்பாட்டுவார்களாம்!

      நீக்கு
    14. //அம்பத்தூருக்குக் குடித்தனம் வந்த புதுசில் வீடுகள் எல்லாம் // கீதா சாம்பசிவம் மேடம் அம்பத்துர் வீடு பற்றி எழுதியதைப் படித்த பிறகு, எங்களில் யாராவது அந்த வீட்டுக்குப் போனால், அந்த வீட்டை வாங்கி இப்போ குடியிருக்கறவரிடம், அந்த வீட்டைப் பற்றிப் புட்டுப்புட்டு வைத்து, எங்கள் வீடுதான் இது என்று நிரூபிக்க முடிந்துவிடும் போலிருக்கு. ஹா ஹா ஹா. அம்பத்தூர் வேப்பமரம் பற்றி இப்போல்லாம் சிலாகிப்பதில்லையே

      நீக்கு
    15. நான் சொல்வது எழுபதுகளில் இருந்த அம்பத்தூர் நெல்லை. அப்போல்லாம் அது டவுன்ஷிப் தான். அருமையா இருக்கும் சாலைகள், நீர் ஆதாரங்கள் நிரம்பிய கிணறுகள், 2 கிரவுன்ட், 3 கிரவுன்ட் இடத்தில் நடுவே முக்கால் கிஅவுண்டுக்குள் கட்டிய வீடுகள், சுற்றிலும் மரங்கள், அநேகமாக மாமரங்கள், ஒவ்வொரு மாங்காயும் கையால் தூக்க முடியாத அளவுக்குப் பெரிதாக, ரொம்பவே பெரிதாக இருக்கும். எப்படி அதைச் சொல்றதுனு தெரியலை. ஒரு மாங்காய் 2, 3 கிலோ இருக்கலாம் உத்தேசமாக. நாங்க குடி இருந்த வீட்டில் 14 மாமரங்கள். வீடு கட்டியதும் சொந்த வீட்டுக்குப் போனதும் எண்பதுகளின் மத்தியில். எங்க வீட்டை பில்டருக்கு விற்றதால் அவர் வேப்பமரத்தை வெட்டிட்டார். (நாங்க எல்லோருமே பையர், பெண் உள்பட அதை வெட்டாதீங்கனு கெஞ்சினோம்.)ஆகவே இப்போப் போனால் எங்களுக்கு வேண்டுமெனில் அடையாளம் தெரியும். உங்களால் கண்டு பிடிக்க முடியாது. பதிவுலகின் ஆரம்ப கால நட்புக்கள் பலரும் அங்கே வந்திருக்காங்க. எங்க குருநாதர் உள்பட. அந்த வீட்டிலேயும் நேரம், காலம் பார்க்காமல் இரவு பனிரண்டு மணி வரை சத்சங்கம் நடந்திருக்கு.

      நீக்கு
  3. கூட்டுக் குடும்பம் என்பது புரிதல் இருந்தால் எக்காலத்திலும் சரிப்படும். புரிதல் என்பது விட்டுக்கொடுக்காதது என்பதில்லை. விடுக்கொடுத்தல் எதில் தேவையோ அதற்கு மட்டும். விடுக்கொடுக்கிறேன் என்று நம் சுயத்தை இழக்கக் கூடாது அதுதான் முந்தைய தலைமுறையில் நடந்தது.

    ஒருவருக்கொருவர் மரியாதை கொடுத்து அவரவர் முன்னேற்றத்திற்கு கூடி இருப்பவங்க பெரியவங்களும் சரி சிறியவங்களும் சரி உதவி புரிந்தால் கண்டிபபக வலுப்பெறும். முடியாது என்றில்லை எல்லாமே மனம் சார்ந்த ஒன்று.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியான கருத்து.

      நீக்கு
    2. கூட்டுக்குடும்பம் நிறைகள், குறைகள்னு எழுத ஆரம்பிச்சா லேசில் முடியாது. ஆகவே நான் விடு ஜூட்!

      நீக்கு
    3. எழுதுங்க கீசா மேடம்... நல்லாத்தான் இருக்கும்.

      நீக்கு
  4. உ, உ , உ - இந்த மூன்றும் தான்...

    பதிலளிநீக்கு
  5. முதுமையிலே இனிமை என்பது அவரவர் விதிப்பயன்...

    பதிலளிநீக்கு
  6. ராஜராஜன் மெய்கீர்த்தில தட்டச்சு?த் தவறுகள் இருக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ம்ம்... இருக்கட்டுமே... எவ்வளவு தவறுகள் இருக்கோ அவ்வளவு பின்னூட்டம் போடுங்களேன்... ஹிஹிஹி...

      நீக்கு
    2. //'ஸ்வஸ்திஸ்ரீ திருமகள் போலப் பெருநிலச் செல்வியுந் தனக்கேயுரிமை பூண்டமை மனக்கொள காந்தளூர்ச் சாலையும் கலமறுத்தருளி வேங்கை நாடும் கங்கபாடியும் நாளம்பாடியும் தடிகைபாடியும்...'//

      காந்தளூர் சாலை கலமறுத்தருளி-ஆயுதங்கள் இல்லாமல் அழித்தது, காந்தளூர்ச் சாலையில். ஆதித்தன் கொலைக்கு ஒரு வகையில் பழி.
      தடிகை பாடியும் நுளம்பபாடியும். நாளம்பாடி-ன்னு ஒண்ணு இல்லை. நுளம்பபாடி தற்கால கர்நாடகா ஆந்திரா வரை பரவியிருந்த குறுமன்னர்கள் ஆட்சி செய்த இடம். ஒரு காலத்தில் அது தமிழகத்திலும் பரவியிருந்தது-கொங்குப் பகுதியில் என்கிறார்கள்.(மேலைச் சாளுக்கியர்களின் ஆதரவு பெற்றிருந்த இடம்). தடிகை பாடி-மைசூர் ஹசன் மற்றும் குடகுப் பகுதி.

      மெய்கீர்த்தியில் வரிசை மிக முக்கியம். ஒவ்வொரு நாடாகக் கைப்பற்றக் கைப்பற்ற மெய்கீர்த்தியின் நீளம் அதிகமாகும். தடிகை பாடியும், நுளம்ப பாடியும் என்பதுதான் சரியான வரிசை.

      சோழ அரசர் வரலாறுகளைப் படித்துப் படித்து இவையெல்லாம் நினைவுக்கு வருகின்றன.

      நீக்கு
  7. வண்ணானுக்கு வண்ணாத்தி மேல கண்ணு. வண்ணாத்திக்கு கழுதை மேல கண்ணு என்பதுபோல, ரசிகர்களுக்கு சமந்தா, அடிதடி படத்தில் கண்ணுனா, உங்களுக்கு மாத்திரம் செய்ற்கை கரு குழந்தை மேல கண்ணு போலிருக்கு.

    பதிலளிநீக்கு
  8. ராஜராஜன் கிணறு சுவாரஸ்யம்...

    பதிலளிநீக்கு
  9. நெல்லைத் தமிழன் என்று ஒருவர் இருப்பதால் புதன் வண்டி ஓடுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்! நீங்களும் ஒரு சப்போர்ட்!

      நீக்கு
    2. அட? நானும் நிறையக் கேள்விகள் வைச்சிருக்கேன். கேட்கத் தான் மறந்துடுது. நெல்லைக்குக் கேள்வியின் நாயகன் பட்டம் கொடுத்திருப்பதால் அவரும் அதைத் தக்க வைச்சுக்கப் போராடுகிறார் போல.

      நீக்கு
    3. //கேள்வியின் நாயகன் பட்டம் கொடுத்திருப்பதால் // அந்தக் கேள்வியின் நாயகனிடம், இந்தக் கேள்விக்குப் பதில் ஏதையா என்று எதையாவது கேளுங்களேன் கீசா மேடம்.

      நீக்கு
  10. பிராமணர்கள் மட்டுமே மாடு வைத்திருந்தார்கள் என்பது சரியில்லை என்றே நினைக்கிறேன். கிராமங்களில் மாடு வைத்துக் கொள்ள முடிகிறவர்கள் மாடு வைத்துக் கொள்வார்கள். அதனால்தான் மாடு என்றாலே செல்வம் என்று பொருள் வந்தது. இப்போது நாய் வைத்து பராமரிப்பது காஸ்ட்லி, அதற்காக நாயை செல்வம் என்று சொல்ல முடியுமா?
    எங்கள் வீட்டில் 1983 வரை மாடு வைத்துக் கொண்டிருந்தோம். பின்னர் பராமரிப்பு கஷ்டமாக இருந்ததால் விட்டு விட்டோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தகவல்களுக்கு நன்றி

      நீக்கு
    2. அக்கா எல்லா விலங்குகளுமே ஏதோ ஒரு வகையில் செல்வம் தான். இயற்கையின் படைப்பில் எல்லாத்துக்குமே வேல்யு உண்டு. மீன் தொழில் ஒரு சிலருக்குச் செல்வம். கோழி வளர்ப்பு ஒரு சிலருக்குச் செல்வம். ஆடு, என்று பல

      நாய், பூனைகளினால் மருத்துவ நன்மைகள் உண்டு. மன ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்கள், மூளை குறைபாடு உள்ளவர்கள், இவர்களுக்கு மன ரீதியாகசில ட்ரீட்மென்ட் கொடுக்கப் பயன்படுத்தப்படுகின்றன. They provide emotional support and trauma என்று பயன்படுத்தப்படுகின்றன. நோய்க்குப் பயன்படுவதும், மனரீதியான நல்ல ஆரோக்கியமும் செல்வம் தானே.

      கீதா

      நீக்கு
    3. trauma healers என்று வன்ட்திருக்கணும்

      கீதா

      நீக்கு
    4. என்னதான் நேய், பூனைகள் செல்லமாக இருந்தாலும் அவற்றால் உடல் நலம் கெட்டுப்போகும் என்பதும் உண்மை. சில வளர்ப்புச் செல்லங்களால் ரேபீஸ் நோய் வரவும் வாய்ப்பு உண்டே. (எங்க வீட்டில் 98 வரை நாய் வளர்ப்பு இருந்தது என்பது முக்கியத் தகவல்)

      நீக்கு
    5. நாய் என்பது நேய் ஆகிடுச்சு. :(

      நீக்கு
  11. இருந்த இடத்திலேயே இறைவனை காண மனம் முதிர்ச்சியடைய அல்லது பக்குவப்பட வேண்டும். அது வரை யந்திரங்களாலும், மந்திரங்களாலும் செறிவூட்டப்பட்டு, ஆழ்வார்களாலும், நாயன்மார்களாலும் பெரியோர்களாலும் பாடல்பெற்ற தலங்களை தரிசிப்பது உசிதமே. அதற்கும் பாக்கியம் இருந்தால்தான் கிடைக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேவாரத் திருத்தலங்கள், திவ்யதேச தரிசனம்னு ஆரம்பிச்சோம். முடிக்க முடியலை. கோயில்களுக்குப் போயே நாலைந்து வருடங்கள் ஆகி விட்டன. முகநூல் மூலமே இப்போல்லாம் இறை தரிசனம்.

      நீக்கு
  12. யசோதா பழைய படமாயிற்றே?
    முதுமையில் இனிமை காண 44 வாக்கியங்கள் ஏற்கனவே இரண்டு வாட்ஸாப் குழுவில், வந்து, முகநூலில் வந்து, இங்கேயுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 2023 படம். 44 நமக்குத் தெரிந்ததை மற்றவர்களும் தெரிந்து கொள்ளட்டுமே!

      நீக்கு
    2. பானுக்கா சிலர் பார்த்திருக்க மாட்டாங்க இல்லையா....

      கீதா

      நீக்கு
    3. ஆமாம், முதுமையில் இனிமை பலராலும் எடுத்து ஆளப்பட்டதே. யசோதா படம் சில ஆண்டுகள் முன்னாலே வந்ததுனு நினைக்கிறேன். கணேஷ், வசந்த், ராஜராஜன் கிணறு படிச்ச நினைவு. பேசாமல் முழுக்கதையையும் கொடுத்திருக்கலாமோ?

      நீக்கு
  13. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம். பிரார்த்தனைக்கு நன்றி.

      நீக்கு
  14. 'வசந்த் வசந்த்' படித்திருக்கிறேன், கேட்டேன்.. இப்போது இங்கே.. என்னைப் பொறுத்தவரை இன்றைய பதிவு மீள் பதிவாகி விட்டது.

    பதிலளிநீக்கு
  15. உணவு, உடை, உறையுள்!...

    இவற்றுக்கு மேலே
    அனைத்தும் ' உ ' தான்!..

    பதிலளிநீக்கு
  16. நெல்லை, பாரீஸ் சங்கீதா அந்த சாப்பாட்டுப்படம் நல்லாருக்கே....ஓ அங்கு நம்ம மக்கள் தயிர் சாப்பிட மாட்டாங்களா? நமக்குத் தயிர் இல்லைனா கஷ்டம்.

    சங்கீதா உணவு நல்லாருந்துச்சா?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அங்க தயிர் சாப்பிட மாட்டாங்களோ இல்லை மதிய உணவுல கிடையாதோ. வெளிநாட்டுப் பிரயாணங்கள்ல நம் உணவு கிடைத்தா நல்லாருக்கும். ஏமாற்றமடைந்தது பாரிசில் பாண்டிச்சேரி உணவகம் ஒன்றில் சாப்பிட்ட ரசம். பச்சைப்புளி ரசம். கொதிக்க விடலை.

      நீக்கு
    2. பாண்டிச்சேரி மக்கள் அங்கு நிறைய....ஓ அதான் காரணமா இருக்கும் தயிர் கொடுக்காதது....

      பாண்டிச்சேரில இருந்தப்ப என் நட்பு வீட்டில் பச்சைப்புளி ரசம்னு ஒன்று செய்வாங்க. என் பாட்டி கூடச் செய்வாங்க.

      கீதா

      நீக்கு
    3. சங்கீதா என்பது அடையார் ஆனந்த பவன் போல் தமிழகம் முழுதுக்கும் ஒரே பெயருடன் நடக்கிறதா? ஏனெனில் திருச்சியிலும் சங்கீதா ஓட்டல்கள் நிறையவே உள்ளன. சென்னையில் அடையார் சங்கீதா கொஞ்சம் பரவாயில்லை ரகம். எழும்பூரில் ஸ்டேஷனுக்கு நேரே உள்ள சங்கீதா ப்ரான்சைஸ் ஆக இருந்தவரை நன்றாக இருந்தது. அப்போல்லாம் செல்ஃப் செர்வீஸ் தான். பின்னர் முறையாக ஓட்டல் கொண்டு வந்த பின்னர் தரம் கீழிறங்கி விட்டது. நான் எப்போவுமே ஓட்டல்களில் சாப்பாடு சாப்பிடத் தயங்குவேன். அவ்வளவும் என்னால் சாப்பிட முடியாது. அநேகமா மினி மீல்ஸ் தான். சில சமயங்களில் அதுவும் கூடச் சாப்பிட முடியாமல் போயிடும்.

      நீக்கு
    4. பச்சைப் புளி ரசம் எப்படிச் செய்யறது தி/கீதா?

      நீக்கு
    5. சங்கீதா பெயரிலேயே இரு பிரிவுகள் இருக்கின்றன என்று நினைக்கிறன்.  அப்புறம் சங்கீதா தேசி மனே.  அப்புறம் சங்கீதா குடும்பத்தில் சண்டை வந்து அதுவே இரண்டானது.  கீதம், சங்கீதா!

      நீக்கு
    6. கீதாக்கா ரொம்ப ஜிம்பிள்! நீங்க செய்யறதுதான். ரெண்டு கப் ரசத்துக்கு, நெல்லிக்காய் சைஸ் புளிய ஊற வைச்சு முதல்ல கெட்டியா கரைச்சுக்கோங்க. பொடி உப்புனா...இப்ப போட்டுக்கோங்க. துளி - ரெண்டு சிட்டிகை மஞ்சள் பொடி. பெருங்காயம் பொடி 1/4 ஸ்பூன் போட்டுக்கோங்க. இது பாத்திரத்துல இருக்கட்டும்.

      உங்க காரத்துக்கு ஏற்ப (காரம் ஆகாதுன்னு தெரியும்.) சின்ன்ன்ன்ன்ன துண்டு பச்சை மிளகாய், சின்ன கிள்ளல் சிவப்பு மிளகாய் ஒத்துக்காதுன்னா விட்டிடலாம். 1 ஸ்பூன் ஜீரகம், 1/2 ஸ்பூன் மிளகு, கொஞ்சம் கருகப்பிலை, பொடி உப்பு போடலைனா கல் உப்பு தேவையானது.

      இது எல்லாத்தையும் கருகப்பிலை தவிர மத்தது எலலத்தையும் சின்ன கல் உரல் இல்லைனா இடிக்கற சின்ன உரல் மெட்டல்ல இருக்குமே அது இருந்தா அதுல போட்டு தட்டிக்கோங்க. நன்னா சதைஞ்சதுக்கப்புறம், அதோட கருகப்பிலையும் போட்டு தட்டிக்கோங்க. இதை அந்த புளித்தண்ணி இருக்கற பாத்திரத்துல இடிச்சது போட்டிருக்கோமே அதுல போட்டு, ஒரு தக்காளிய நாலா வகுந்து அந்த புளித்தண்ணியோடு போட்டு நல்லா கையால பிசைஞ்சுக்கணும். இல்லைனா தக்காளிய மிக்ஸில ஒரு ஓட்டு ஓட்டி கலந்து கூடவே கொத்தமல்லி பொடியா நறுக்கிப் போட்டு மேல கொஞ்சம் தண்ணி விட்டு, மொத்தம் 1 1/2 கப் - 2 கப் வராப்ல விட்டு கலந்து ஒரு 1/2 மணி நேரம் வைச்சுடலாம். அவ்வளவுதான். இதுல பாட்டி நெய்ல கடுகு, கருகப்பிலை ஒரு துளி பெருங்காயம், ஒரு வத்தல் மிளகாய கிள்ளி தாளித்து போடுவாங்க. ரசம் கொதிக்க வைக்க வேண்டாம்.

      கிட்டத்தட்ட பச்சை புளிக்கோஸு போலதான்...( எபில நான் திங்க பதிவுல போட்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன்)

      நான் சில சமயம் சின்ன வெங்காயம் 2, 3, 2, 3 பூண்டு தட்டி இதுல சேர்த்துப்பேன்.

      கீதா

      நீக்கு
    7. அக்கா நீங்க பச்சைப் புளிக்கோஸு செஞ்சுருப்பீங்களே அது போலதான்.

      கீதா

      நீக்கு
    8. //அரிசி உப்புமா என்றால் அம்மா இதைத் தான் பண்ணுவார். கொதிக்க வைத்துப் பண்ணுவதை விடக் கொதிக்க வைக்காமல் பண்ணுவதே அதிகம். ரொம்பப் பிடிச்சதும் கூட. கொத்துமல்லி சேர்த்த நினைவு இல்லை.//

      கீதாக்கா இது உங்க கருத்து கத்தரிக்காய் புளிகோஸு பதிவில்.

      கீதா

      நீக்கு
    9. கீதா ரங்கன்.... இதை நான் வாழ்நாளில் சாப்பிட்டதில்லை. அதனால் பாரிசில் பாண்டிச்சேரி உணவகத்தில் சாப்பிட்டபோது இது நான் பிராமின் உணவு, முஸ்லீம்கள் இப்படிச் சாப்பிடுவார்களோ என்ற நினைவே எனக்கு அந்த ரசத்தைப் பிடிக்காமல் செய்துவிட்டது (உணவு பற்றி என்னுடைய firm stand பற்றி நிறையவே சொல்லியிருக்கிறேன். என் அம்மா எனக்குப் பண்ணித் தராதவற்றை நான் ஏற்றுக்கொள்ளவே 5-10 வருடங்களுக்கு மேல் ஆகிவிடும், மனைவி செய்துதந்தபோதும். இதனால் நல்லா ஒரு பிடி பிடிக்கும் இளமைக் காலங்களில் மனைவிய பாவ் பாஜி, வட இந்திய சைட் டிஷ், பிரியாணி வகையறா என்று ஒன்றையும் பண்ணச் சொன்னதில்லை. அவள் வீட்டில் செய்வதுபோல புளிசேரிக்கு தேங்காய், மிளகாய், சீரகம் அரைத்தால்-புளிசேரிதான் சேவைக்குத் தொட்டுக்கொள்ள சூப்பர், வெறும் சாதத்துக்கும் சூப்பர், நான் எங்க அம்மா சீரகம் அரைப்பதில்லை என்று சொல்லி அதனைச் சேர்க்கவிட மாட்டேன்). எப்படிப்பட்ட ஜனநாயகவாதி நான் பாருங்கள்..

      நீக்கு
  17. நெல்லை, போடுங்க படங்கள். ஏற்கனவே கொஞ்சம் பகிர்ந்தீங்க இல்லையா? கலைக்கண்கள் தான் எங்க கண்கள்!!! எல்லாமே நாம் அப்படிப் பார்க்கும் போது ...இதோ இங்க நம்ம சாலைல பல மரங்களின் வடிவங்கள் ரொம்ப அழகா வித்தியாசமாக இருக்கு. ஃபோட்டோக்கள் எடுத்து வைத்திருக்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை 'கலைக்கண்' என்று டிஃபன்ஸ் ஸ்ட்ரோக் வைப்பதின் அர்த்தம் புரியவில்லையா கீதா?!

      நீக்கு
    2. ஹாஹாஹாஹா புரிஞ்சுருச்சு ஸ்ரீராம்!!!!!!!

      கீதா

      நீக்கு
    3. ஸ்ரீராம்....அவர் வரட்டும் படங்களோடு அப்ப வைச்சுக்குவோம் சிக்ஸரை!!!!

      கீதா

      நீக்கு
    4. முதலில் ஸ்ரீராமைத் தாண்டணும். கேஜிஜி ஓகே பண்ணணும். அப்படியும் தாண்டினால், ஆசிரியர் குழுவில் இருக்கும் இராமன் அவர்கள் ஒன்றும் சொல்லக்கூடாது. அவர் கர்ர்ர்ர்ர்ர்ர் என்றால் ஆட்டம் கலைத்துவிடுவார்கள்.

      நீக்கு
  18. வணக்கம் சகோதரரே

    இன்றைய கேள்வி பதில்கள் அனைத்தும் எப்போதும் போல் அருமை ஒரு கூட்டு குடும்பத்திற்கான அடையாளமாக முதல் கேள்வி பதிலாக பாலில் இருந்து துவங்கி, இறுதி கேள்வி பதிலாக பணவசதி, நிம்மதி, ஆரோக்கியம் என முடிந்து விட்டது.என் கண்ணோட்டத்தில் அருமை. ரசித்தேன்.

    சகோதரர் நெல்லைத்தமிழரின் பாரீஸ் பயணம், படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. மதிய சாப்பாடும் பார்க்கவே அழகாக உள்ளது.

    வாடகைத்தாய் படம் பார்த்ததில்லை. பார்க்கலாம் என நினைக்கிறேன். ஆனால் இந்த அடி, தடி படங்கள் பார்க்க அலர்ஜியாக உள்ளது.

    வசந்த் படிக்கிறேன். படித்து விட்டு வருகிறேன் ஏற்கனவே படித்த நினைவும் வருகிறது. ஆனாலும் சுஜாதாவிற்காக எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  19. நெல்லை உங்க படங்களைப் பார்க்கறப்ப....அட நெல்லை வெள்ளை முடியுடன்!!!!!! இளமையாகவே இருக்காரே ......இப்பவும் அதே முகத்துடன்!!!! சூப்பர் போங்க..

    கீதா

    பதிலளிநீக்கு
  20. "பார்க்கலாம்" .தவறுதலான வார்த்தைப்பிழையோடு வந்து விட்டது. படிக்கலாம் என வந்திருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  21. நெல்லை, மோனாலிஸா ஓவியம் நல்லாருக்கு. ஆனா அதுல ஸ்பெஷலா என்ன இருக்கு என்று எனக்குப் புரியவில்லை. முக்கியத்துவம் பெற....

    நம்ம ரவிவர்மா ஓவியங்களும் அத்தனை அழகா இருக்குமே! நிச்சயமாக ஓவியர்களை ஒப்பிடவில்லை. முக்கியத்துவத்திற்காகச் சொல்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மோனா லிசா படத்தில் என்ன சிறப்பு என்றால், தனித் தனியே பார்த்தால், முகத்தில் உள்ள எந்த உறுப்பிலும் சிரிப்பு / புன்னகை கிடையாது. ஆனால் மொத்தமாகப் பார்த்தால் ஒரு ஸ்மைல் தெரியும். அதுதான் சிறப்பு.

      நீக்கு
  22. வசந்த் வசந்த் - இக்கதையில் சரித்திரத்திலும் லாயர் மூளையைக் கொண்டு வருவது ரொம்ப ரசித்த பார்ட் ...
    சுவாரசியமான பகுதி....இதிலும் வசந்த் பார்ட் ரொம்பவே கணேஷைப் படுத்தும் பார்ட். சின்ன கருத்து வேறுபாடு கூட வரும்னு நினைக்கிறேன். ஆனாலும் வழக்கம் போல இரண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் இல்லைனா ஆகாது போல சேர்ந்திடுவாங்கன்னு ...இதிலும் வரும்ல?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது வேற கதை. இதுல வஸந்த் ரெண்டு வாட்டி செத்து பொழப்பான்!

      நீக்கு
    2. ஆமாம் ஸ்ரீராம் நினைவுக்கு வந்துவிட்டது.

      கீதா

      நீக்கு
  23. உலகியல் தான் பிள்ளையார் சுழி!

    பதிலளிநீக்கு
  24. 44 பாயின்ட்ஸும் சூப்பர்.

    உண்மையிலேயே நாம் சின்ன வயது கண்டிஷனிங், சோசியல் கண்டிஷனிங் என்று நமக்கு நாமே பல தடைகளைப் போட்டுக் கொண்டு விடுபட முடியாமல்....விடுபட நினைக்காமல்....இப்படி இருக்கக் கூடாது அப்படி இருக்கக் கூடாது என்று.....முதுமையை சுமையாக எண்ணுகிறோம். இதை நாம் மாற்ற முயற்சி செய்ய வேண்டும் with an open mind!

    கீதா

    பதிலளிநீக்கு
  25. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  26. கேள்விகளும் பதில்களும் அருமை.
    அந்தக்காலத்தில் எல்லோர் வீடுகளிலும் மாடு இருக்கும்.
    மாடுகளை பாராமரிக்க வீடுகள் வசதியாக இருந்தன அவற்றை பாதுகாக்க இல்லத்து அரசிகளுக்கு தெம்பும் இருந்தது வேறு வேலைக்கு அவர்கள் போகவில்லை.
    இப்போது வாழ்க்கை முறை மாறி விட்டது. வீடு , அலுவலக வேலை என்று இரட்டை பாரம் சுமக்கிறார்கள் பெண்கள்.

    இப்போது பால் நமக்கு தேவை இல்லை மாட்டின் பால் அதன் கன்றுகளுக்கு மட்டுமே என்கிறார் ஒரு மருத்துவர். குழந்தைகள் நிறைய பேருக்கு பால் ஒவ்வாமைத் தொல்லைகள், அஜீரணம் , தொந்திரவுகள் இருக்கிரது அதனால் அவர்களுக்கு தாய்பால் மட்டுமே போதும் என் கிறார்கள். பாலில் உள்ள லேக்டோசை ஜீரணிக்க முடியவில்லை இன்னும் பயமுறுத்தும் செய்திகளை சொல்கிறார்கள்.
    சில மருத்துவர்கள் இன்னும் பாலை குடிக்க சொல்லி கொண்டுதான் இருக்கிறார்கள். வெறும் பால் எனக்கு ஒத்துக் கொள்ளது, முன்பு சிறு வயதில் ஓவல், அப்புறம் மால்டோவா, அப்புறம் பூஸ்ட் போட்டுதான் குடிக்கிறேன். அதில் ஒன்றுமில்லை என்று சொன்னாலும் விட முடியவில்லை.

    பால் இல்லா காப்பி, பால் இல்லா சாயா குடிக்க சொல்கிறார்கள் சிலர் கடைபிடித்து வருகிறார்கள்.

    ஹார்லிக்ஸ் வயதானவர்களை பார்க்க போகும் போதும், ஆஸ்பத்திரி வீட்டில் இருக்கும் நோயாளிகளை பார்க்க போகும் போது முன்பு ஹார்லிக்ஸ் வாங்கி போவோம். பால் இல்லாமல் வெநீரில் கலந்து குடிப்பது நல்லது என்று.
    அவர் அவர்களுக்கு உடம்புக்கு ஒத்துக் கொள்வதை குடிப்பது நல்லது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விளக்கமான கருத்துரைக்கும், தகவல்களுக்கும் நன்றி.

      நீக்கு
  27. இறைவன் எங்கும் இருக்கிறார் என்று நாம் உணர்ந்தாலும் கோயிலுக்கு போய் வந்தால் மனதில் நிம்மதி , மகிழ்ச்சி ஏற்படும். கோவிலில் மனம் ஒரு நிலை படுகிறது.

    உடம்பில் பலம் இருக்கும் போது கோயில்களை போய் பார்த்து வழி பட்டு விட வேண்டும் .அப்புறம் இருக்கவே இருக்கு வீடு அமைதியாக வீட்டில் இருந்து இறைவனை வணங்கலாம்.

    பதிலளிநீக்கு
  28. படமும் பதமும் :

    நெல்லைத்தமிழன் பகிர்ந்த சங்கீதா ஓட்டல் படம் அருமை.
    வடையும் சப்பாத்தியும் சாப்பிட்டாலே வயிறு நிறைந்துவிடும் போலவே!

    //ஓவியங்கள், சிற்பங்களை ரசிக்க கலைக்கண் வேண்டும். அதற்குத் தயார் என்றால் நான் தொடர் எழுதுகிறேன். //
    நீங்கள் பகிர்ந்த ஓவியங்கள் அருமை.
    எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
  29. சுஜாதா கதை படித்து இருக்கிறேன், மீண்டும் படித்தேன்.

    [இதன் இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமான பகுதிகளை வெவ்வேறு கிழமைகளில் கொடுக்கிறேன்!//

    ஒ சரி.

    பதிலளிநீக்கு
  30. கெளதமன் சார் விமர்சனம் செய்து இருக்கும்

    (வாடகைத் ) தாயே யசோதா உந்தன் . இந்த படம் பார்த்தேன்.

    //
    சமந்தாவின் வயிற்றில் இருந்த செயற்கைக் கரு குழந்தை என்னதான் ஆயிற்று? //

    எனக்கும் வ்யிற்றில் குழந்தை என்ன ஆகும் என்ற கவலை இருந்தது.
    சஸ்பென்ஸை உடைத்து விட்டீர்களே!

    அழகு வேண்டியதுதான் அந்த அழகு நிலைக்க அவரக்ள் செய்யும் காரியம் கொடூரம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அழகு நிலைக்க என்பது .. கதைக்காக ஏதோ ஒரு காரணம்!

      நீக்கு
    2. //அழகு வேண்டியதுதான் அந்த அழகு நிலைக்க அவரக்ள் செய்யும் காரியம் கொடூரம்.// கோமதி அரசு மேடம், குழந்தையை வயிற்றில் சுமக்கும் நேரத்தில் இன்னும் 20 கோடி பார்த்துவிடலாம், அழகும் குலையாது என்று 4 கோடியை விட்டெறிந்து இரட்டையர்களை-அதுவும் எதுக்கு ஒவ்வொரு தடவைக்கும் செலவு என்று எண்ணியிருப்பார்களோ? பெற்றுக்கொண்ட நடிகையை மறந்துவிட்டாரோ

      நீக்கு
    3. சார் பகிர்ந்து இருந்த இந்த படத்தில் கருவில் இருக்கும் குழந்தையை வைத்து அழகு சாதனம் தயார் செய்வார்கள். அந்த கொடூரத்தை சொன்னேன் வாடகைதாய் குழந்தை என்ற போர்வையில் ஏழைகளின் பண தேவையை வைத்து. அதை கொடூரம் என்றேன்.

      நீக்கு
    4. நெல்லை நீங்கள் இந்த படம் பார்க்கவில்லை போலூம்.

      //வரலக்ஷ்மி சரத்குமார் வில்லியாக வருகிறார். (ஆனால் அவர் வில்லி என்பது படத்தின் இறுதியில்தான் நமக்குத் தெரிகிறது) //

      வரலக்ஷ்மி சரத்குமார் தான் அந்த படத்தில் தன் அழகை காப்பாற்ற அப்படி செய்வார்.

      நீக்கு
  31. முதுமையை நல்லபடியாக கடக்க மருத்துவர் சொன்ன 44 கருத்துக்களும் அருமை.

    நோயுடன் போராடுவதற்குப் பதிலாக, அதனுடன் வாழக் கற்றுக்கொள்ளுங்கள்.//

    ஆமாம் உண்மை. அதனுடன் வாழ கற்றுக் கொள்ள வேண்டும் மன உறுதியுடன் எதிர் கொள்ள வேண்டும்.
    வந்து விட்டதே! என்று உடைந்து விடக் கூடாது .

    எல்லாவற்றையும் அமைதியாக ஏற்றுக்கொள்ளுங்கள்.//

    ஆமாம் , முதுமையை முதலில் ஏற்றுக் கொள்ள வேண்டும் , அதுதான் முக்கியம்.
    அனைத்தும் அருமை.


    பதிலளிநீக்கு
  32. கணேஷ் வசந்த் முன்பு விரும்பி படித்திருக்கிறேன். பகிர்வுக்கு நன்றி.
    சுவாரசியத்துடன் தகவல்களும்.

    முதுமை அறிவுரைகள் மிகவும் நன்று. பலருக்கும் பயன்படும்.

    இந்தப் படம் பார்த்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  33. நெல்லை உலகம் சுற்றிய விபரங்களை மட்டும் தொகுத்துத் தொடராகப்போடுங்களேன். இந்தப்படத்தில் கொஞ்சம் ஒல்லியாக இருக்கீங்களோ? மோனாலிசா படத்தின் சிறப்புக்கு என்ன காரணம் என்பது எனக்குப் புரிவதில்லை. :(

    எனக்குப் பிடித்த பானம் ஹார்லிக்ஸ் மட்டுமே. அதைப் பாலில் கலந்து சாப்பிடுவது என்பது மிகச் சமீபத்தில் தான் பார்க்கிறேன். மென்னெல்லாம் வெந்நீரில் போட்டுத் தான் சாப்பிடுவோம். சாப்பிட்டிருக்கோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். எனக்கும் பால் ஒத்துக்கொள்ளாது. வெந்நீர் ஹார்லிக்ஸ் மட்டுமே குடிப்பேன்.

      நீக்கு
    2. கீசா மேடம்... நன்றி. ஞாயிறு படப்பதிவுதான். அவ்வப்போது சிறிய தொடராக படங்களுடன் எழுதறேன். உலகமெல்லாம் சுத்தலை. ஆபீஸ் வேலை விஷயமாக என்னை அனுப்பிய நாடுகளுக்குச் சென்றிருக்கிறேன். கொஞ்சம் கூட நேரத்தை வீணாக்காமல் ஒழிந்த நேரத்தில் பார்க்க முடிந்தவைகளைப் பார்த்து படங்கள் எடுத்திருக்கிறேன்.

      நீக்கு
  34. வடக்கில் வீட்டின் அருகே மாடு கொண்டு வந்து, கண்ணெதிரே கறந்து தருவார்கள். அதுவும் அவர்கள் பாத்திரம் எனில் தண்ணீர் பிடித்து வைத்திருப்பார்கள் என தங்களது பாத்திரங்களைத் தருவார்கள் சிலர். என்ன பசும்பால் கிடைப்பது அரிது. எருமைப் பால் தான். திக்காக இருக்கும். சாதாரணமாக ஐம்பது ரூபாய் லிட்டர் என்றால், இது போன்ற நபர்களிடம் சற்று விலை கூடுதலாக எழுபது, எண்பது ரூபாய் லிட்டர் என்று கிடைக்கும். வடக்கில் பால் பயன்பாடு அதிகம் - நான்கு பேர் இருக்கும் வீடுகளில் கூட நான்கு ஐந்து லிட்டர் பால் தினம் வாங்குவார்கள்.

    லூவர் மியூசியம் - படங்களும் ஓவியங்களும் - பகிர்ந்து கொள்ளலாமே நெல்லைத் தமிழன்.

    மற்ற பகுதிகளும் நன்று.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!