26.2.26

ஓடி ஓடிப் போகாதே ஊமை பெண்ணே நாம் உயிரோடு வாழ்வதற்குக் காதல் சாட்சி

பஜ்ஜி, போண்டா எல்லாம் உடல் நலத்துக்கு தீங்கானது. எண்ணெயில் பொறித்து எடுத்த இவைகளை சாப்ப்பிடுவது உடம்புக்கு ஆகவே ஆகாது.
அதுவும் எந்த எண்ணெயில் பொறிக்கிறார்களோ... எத்தனை நாள் உபயோகித்த எண்ணெயோ..

கொஞ்சம் உடம்பு குறையவேண்டும், B P, ஷுகர் குறையவேண்டும் என்று நடைப்பயிற்சி செய்கிறோம். இதெல்லாம் சாப்பிடுவதால் வரும் வினைதானே அதெல்லாம்.

எல்லாம் சரிதான்.. ஆனால் கண்ணுக்கு முன்னால் இப்படி 'செவசெவ' என்று பொறித்து எடுத்தால் எப்படிங்க சாப்பிடாமல் இருப்பது? இதை எல்லாம் பார்த்துக்கொண்டே தாண்டி வருவதற்குத்தானே நடைப்பயிற்சி தப்பாமல் செல்வது.. அந்த ஆர்வம்தான் தவறாது நடைப்பயிற்சி செய்ய வைக்கிறது..

ஒரு நாள் சாப்பிடுவதில் தப்பு இல்லை.

என்ன சொல்றீங்க...

ஒருநாள் போண்டா.. ஒரு நாள் பஜ்ஜி.... வெள்ளை நிறத்தில் ஒன்று, சிவப்பு நிறத்தில் ஒன்று... அவற்றை சட்னி என்று சொன்னால் அது கோபித்துக் கொள்ளும். கடப்பா என்றும் சொல்ல முடியாது. என்ன செய்ய.. அவர்கள் சொல்வது போலவே சொல்ல வேண்டும் என்றால் இரண்டு சட்னியையும் ஊற்றிக்கொண்டு ஒரு அடி அடித்துவிட வேண்டியதுதான்.. என்ன சொல்றீங்க...

பஜ்ஜியின் மொறுமொறுப்பையும் அனுபவிக்க வேண்டும், கொஞ்சம் ஊறி இருப்பதையும் ரசிக்க வேண்டும்!

தப்புதான்... தப்புதான்.. இப்படி எல்லாம் சாப்பிடுவது தப்புதான்.

வாரத்துக்கு இரண்டு நாள் மட்டும். செவ்வாய்க்கிழமை போண்டா... வியாழக்கிழமை பஜ்ஜி... சரியா?

ஹையோ... உளுந்து வடை கண்ணில் பட்டால் என்செய்வேன்? எப்படி கால்ஷீட் கொடுப்பேன்? அதுதானே எனக்கு ரொம்பப் பிடிக்கும்!

இதையெல்லாம் நிறுத்துங்க என்கிறார் பாஸ்.

'அவங்களை நிறுத்தத் சொல்லு.. நான் நிறுத்தறேன்' என்றேன்!

'புரியவில்லை' என்றார் பாஸ்.

'அவங்களை இப்படி கண்ணுக்கு கவர்ச்சியா எண்ணெய்ல போட்டுப் போட்டு எடுத்து சல்லடைல போடறதை நிறுத்தத் சொல்லு.. நான் சாப்பிடறதை நிறுத்தறேன்' என்றேன்...

​ஏதோ ஒன்று பறந்து வருவது தெரிந்து எஸ்கேப் ஆனேன்.
=====================================================================================

நடைப்பயிற்சியின் நடுவே வடை பஜ்ஜி தான் சாப்பிட வேண்டுமா என்ன?
இப்படி லெமன் ஹனி டீயும் குடிக்கலாம்.
ஒரு கிளாஸ் வெந்நீரில் அரை மூடி எலுமிச்சம்பழம் பிழிந்து, தேனை தாராளமாக ஊற்றி, ஒரு மர ஸ்பூன் போட்டு கலக்கி கொடுத்து 25 ரூபாய் வாங்கி விடுகிறார்கள்...
ஆனால் அதை ஏன் டீ என்று சொல்கிறார்கள்?

===========================================================================================

ஃபேஸ்புக்கில் பார்த்த ஒரு புதிர்...

ஆட்டோக்காரன் பணம் கொடுப்பான்ங்கறீங்க?  அவன் உடனடியா ஜூட் விட்டிருப்பான்!

===============================================================================

என்ன கொடுமை ஸார்...


=============================================================================

ஒரு எழுத்தாளர் நினைவுக்கு வருகிறாரா?


==============================================================================

1999 ல் வெளியான அமர்க்களம் படம் சில சிறப்புகளைக் கொண்டது.

இதில்தான் அஜித்-ஷாலினி காதல் மலர்ந்தது.  ஷாலினி வேடத்துக்கு முதலில் ஜோதிகாவை கேட்டாராம் இயக்குநர் சரண்.  அவருக்கு தேதிகள் இல்லாததால் ஷாலினி.  ரகுவரன் வேடத்துக்கு முதலில் பேசப்பட்டவர் அமிதாப்.   அவரும் ஒத்துக்கொண்டாராம்.  ஏனோ அப்புறம் அவருக்கு பதில் ரகுவரன்.

சரண் சிறந்த இயக்குனர்.  அவர் படங்கள் பார்த்து ரசிக்கும்படி இருக்கும்.  இந்தப் படத்துக்கு முந்தைய படமான காதல் மன்னன் தோல்விப்படமாம்.  ஆனால் நான் இன்றும் ரசிக்கும் படங்களில் அதுவும் ஒன்று.  அந்த தோல்விக்காக அஜித் இன்னொரு படம் நடித்துக் கொடுக்கிறேன் என்று சொல்லி நடித்துக் கொடுத்த படமாம் அமர்க்களம்.

வைரமுத்துவின் பாடல்களுக்கு பரத்வாஜ் இசை.  நல்ல இசை அமைப்பாளர்.  இந்தப் படத்தில் மூச்சு விடாமல் பாடி இருப்பதாய் நம்பப்படும் இன்னொரு பாடலை S P பாலசுப்ரமணியம் பாடி இருக்கிறார்.  அதுதான் 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்'  இதை இரண்டு வருடங்களுக்குமுன் பகிர்ந்திருந்தேன்.  அந்தப் பாடலில் வரும் லொகேஷன் எங்கிருக்கிறது என்று அறியவும் ஆவலாக இருந்ததது.  கவர்ந்திழுக்கும் லொகேஷன்!

இன்று அதே படத்திலிருந்து S P பாலசுப்ரமணியம் பாடிய இன்னொரு பாடல்.  "மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு.."  வரிகள் ஒரு கவர்ச்சி என்றால் சரணத்தில் படிப்படியாக மேலே உயரும் ஸ்ருதி.  உயரத்தில் சரணம் முடியும்போது மறுபடியும் பல்லவி சமதளத்தில் தொடரும் அதிசயப் பரவசம்.  காதலிப்பது போல  உண்மையாகவே தனக்குள் முகிழ்த்துவிட்ட காதலை வெட்டி எறிய முடியாமல் தவிக்கும் முரட்டு உள்ளம் கொண்ட கதாநாயகன்..

வித்தியாசமாக பதிவு செய்யப்பட்ட பாடல்.  SPB யின் குரல் உய....ரத்தில் சஞ்சரிக்கும்போதே அவர் குரலே கீழ் ஸ்தாயியில் பல்லவியைப் பாடும்.

கேளுங்களேன்...

மேகங்கள்
என்னைத் தொட்டுப்
போனதுண்டு - சில
மின்னல்கள் என்னை
உரசிப் போனதுண்டு

மேகங்கள்
என்னைத் தொட்டுப்
போனதுண்டு - சில
மின்னல்கள் என்னை
உரசிப் போனதுண்டு

தேகங்கள்
ஒன்றிரண்டு கடந்ததுண்டு
மனம் சில்லென்று சில
போது சிலிர்த்ததுண்டு
மோகனமே உன்னைப்
போல என்னை யாரும்
மூச்சுவரை கொள்ளையிட்டுப்
போனதில்லை

ஆகமொத்தம்
என் நெஞ்சில் உன்னைப்
போல எரி அமிலத்தை
வீசியவர் எவருமில்லை

மேகங்கள்
என்னைத் தொட்டுப்
போனதுண்டு சில
மின்னல்கள் என்னை
உரசிப் போனதுண்டு

பிரிவொன்று
நேருமென்று தெரியும்
பெண்ணே 
என் பிரியத்தை
அதனால் குறைக்க மாட்டேன்
எரியும் உடலென்று தெரியும்
பெண்ணே என் இளமைக்கு
தீயிட்டு எரிக்க மாட்டேன்

மேகங்கள்
என்னைத் தொட்டுப்
போனதுண்டு சில
மின்னல்கள் என்னை
உரசிப் போனதுண்டு

கண்ணிமையும்
சாமரங்கள் வீசும் காற்றில்
என் காதல் மனம் துண்டுத்
துண்டாய் உடையக் கண்டேன்
துண்டு துண்டாய் உடைந்த
மனத் தூள்களையெல்லாம்
அடி தூயவளே உனக்குள்
தொலைத்து விட்டேன்

மேகங்கள்
என்னைத் தொட்டுப்
போனதுண்டு சில
மின்னல்கள் என்னை
உரசிப் போனதுண்டு

செவ்வாயில்
ஜீவராசி உண்டா என்றே
அடி தினந்தோறும் விஞ்ஞானம்
தேடல் கொள்ளும் உன்
செவ்வாயில் உள்ளதடி
எனது ஜீவன் அது தெரியாமல்
விஞ்ஞானம் எதனை வெல்லும்

எவ்வாறு
கண்ணிரெண்டில்
கலந்து போனேன்
அடி எவ்வாறு மடியோடு
தொலைந்து போனேன்
இவ்வாறு தனிமையில்
பேசிக்கொண்டேன் என்
இரவினைக் கவிதையாய்
மொழிபெயர்த்தேன்

மேகங்கள்
என்னைத் தொட்டுப்
போனதுண்டு சில
மின்னல்கள் என்னை
உரசிப் போனதுண்டு

மூடி மூடி
வைத்தாலும்
விதைகளெல்லாம்
மண்ணை முட்டி முட்டி
முளைப்பது உயிரின் சாட்சி
ஓடி ஓடிப் போகாதே ஊமை
பெண்ணே நாம் உயிரோடு
வாழ்வதற்குக் காதல் சாட்சி

மேகங்கள்
என்னைத் தொட்டுப்
போனதுண்டு சில
மின்னல்கள் என்னை
உரசிப் போனதுண்டு    
   
தேகங்கள்
ஒன்றிரண்டு கடந்ததுண்டு
மனம் சில்லென்று சில
போது சிலிர்த்ததுண்டு
மோகனமே உன்னைப்
போல என்னை யாரும்
மூச்சுவரை கொள்ளையிட்டுப்
போனதில்லை

ஆகமொத்தம்
என் நெஞ்சில் உன்னைப்
போல எரி அமிலத்தை
வீசியவர் எவருமில்லை

==============================================================================================

பாலு மகேந்திரா மறைந்தபோது அவரிடம் உதவியாளராய் இருந்த, அவரை ரொம்ப நேசித்த இயக்குனர் பாலா...
"ஹார்ஷாப் பேசாதடா..." -  இரண்டு வாரங்களுக்கு முன்னால், ரத்த வாந்தி எடுத்தவரை மருத்துவமனையில் சேர்த்திருந்தோம். மிக மோசமான உடல் நலிவுடன் கிடந்தார். மாத்திரைகள் சாப்பிட மறுத்தார். ஏன் என்று அதட்டினேன். 'இது எல்லாம் கெமிக்கல்ஸ்டா...' என்றார். 'நீங்க என்ன பச்சப்புள்ளையா... இப்ப சாப்பிடுறீங்களா இல்லியா?' என்று குரலை உயர்த்தினேன். 'ஹார்ஷாப் பேசாதடா...' என்றார். 'எனக்கு இங்க இருக்கவே பிடிக்கலை. ஹாஸ்பிட்டல் யூனிஃபார்ம்ல என்னைப் பார்க்க எனக்கே வெறுப்பா இருக்கு. என் சட்டையை வாங்கிக் குடு...' எனப் பிடிவாதம் பிடித்து வாங்கி அணிந்தார்.
சைவத்துக்கு மாறப் போறேண்டா... சீஃப் டாக்டரைப் பார்க்கப் போனேன். 'உங்க டைரக்டருக்கு ரிலேட்டிவ்ஸ் யாரும் ஃபாரின்ல இருந்தா, அவங்களுக்கு இன்ஃபார்ம் பண்ணிருங்க... அதிகபட்சம் ரெண்டு வாரம்தான் சார் இருப்பார்...' என்றார். அதிர்ந்துபோய் வெளியே வந்தேன். சாருக்கு அதை யாரும் சொல்லவில்லை. மௌனமாக அமர்ந்திருந்த என்னிடம், 'டேய்... நான் சைவத்துக்கு மாறிரலாம்னு பார்க்கிறேன்' என்றார். வேதனையுடன் சிரித்தேன். இன்னொரு தகப்பனான நடிகர் சிவகுமார் சார் சொன்னதுபோல, இதுவும் கடந்துபோகும் என ஒருபோதும் விட்டுவிட முடியாத ஒரு தருணத்தையும் கடக்க வேண்டிய தருணம். என்ன செய்வதெனப் புரியாமல் தவித்தேன்.
ந்தா... போதும் உங்க சண்டை 'அம்மா இங்க வாங்க...' என அழைத்தேன். அகிலாம்மாவும் டைரக்டரும் அவர்களுக்குள் பெரிதாகப் பேசிக்கொள்வது இல்லை அப்போது. 'ந்தா போதும் போதும் உங்க சண்டை... புருஷனும் பொண்டாட்டியும் மொதல்ல நல்லா லவ் பண்ணுங்க...' என்றதும் டைரக்டர் சிரித்துவிட்டார்.
உடனே ஆஸ்பத்திரிக்கு வாப்பா... நாலைந்து நாட்களுக்குப் பிறகு, டிஸ்சார்ஜ் செய்துவிட்டனர். சார் நார்மலாக இருந்தார். சரியாக 10-வது நாள் அதிகாலை 4 மணி... ஏனோ தூங்கப் பிடிக்காமல் அவஸ்தையான ஒரு மனநிலையில் அமர்ந்திருந்தபோது, அகிலாம்மாவிடம் இருந்து போன். பதறியபடி எடுத்தேன்... 'உடனே ஆஸ்பத்திரிக்கு வாப்பா' என்றார். வண்டி எதுவும் கிடைக்காமல், ஜெமினி மேம்பாலம் வரை ஓடி, கிடைத்த ஆட்டோ ஒன்றில் தொற்றிப் போய்ச் சேர்ந்தேன். உயிர் பிரிந்து செல்வதைப் பார்த்தேன் மறுபடியும் அட்டாக்... ஸ்ட்ரோக்... சுவாசம் திணறியது. நினைவிழந்து இருந்தார். ஆறேழு மணி நேரம் அவர் அருகிலேயே அமர்ந்திருந்தேன். அவரின் பாதங்கள் பற்றி முத்தமிட்டேன். 'க்க்க்க்ர்ர்ரக்க்க்க்' எனக் குலுங்கி அடங்கிவிட்டது உடம்பு. ஓர் உயிர் பிரிந்து செல்வதை வாழ்வில் முதன்முதலாக நேரில் பார்த்தேன்.
வள்ளிக்கும், சுப்புவுக்கும் பால் வச்சுட்டு வந்துரவா... அகிலாம்மாவுக்கு அழக்கூடத் தெரியாது. அமைதியாக நின்றவர், 'பாலா... வீட்ல வள்ளியும் சுப்புவும் பசியில கெடக்குங்க... போய் பால் வெச்சுட்டு வந்துரவா?' எனக் கேட்டார். அதுதான் அகிலாம்மா! என்னடா இப்படிப் பண்ற எப்படிச் சொல்வதெனத் தெரியவில்லை.
எனக்குத் தேசிய விருது கிடைத்ததும் நேரே சாரைத்தான் போய்ப் பார்த்தேன். 'சார்... இது இருக்க வேண்டிய இடம் இதுதான்' என அவரின் சினிமா பட்டறை சுவரில் அதை மாட்டினேன். 'என்னடா இப்பிடிப் பண்ற...' என்றவருக்கு சந்தோஷம் தாங்கவில்லை. எனக்கு அன்பை அவ்வளவுதான் சொல்லத் தெரியும். இந்த வாழ்க்கையே அவர் அருளியது. பதிலுக்கு என்ன செய்தேன் எனத் தெரியவில்லை. இதோ இப்போதுகூட அவரின் நினைவாக தொப்பி வேண்டும் என அகிலாம்மாவிடம் வாங்கினேன்.
சந்தோஷமா போய்ட்டு வாங்க சார்... மின் மயானத்தில் அவரின் இரண்டு பாதங்களையும் தொட்டுக் கும்பிட்டு முத்தமிட்டேன். 'சார் சந்தோஷமாப் போயிட்டு வாங்க... உங்ககிட்ட ஒண்ணே ஒண்ணு சொல்லணும் சார். அகிலாம்மாவை இனிமே எங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப் போயிடலாம்னு இருக்கேன். நாங்க அம்மாவை நல்லாப் பார்த்துக்குறோம். அப்புறம்... ஆயிரம் சண்டைகள் போட்டாலும்... ஐ லவ் யூ சார்!'''
நன்றி: பிலிம் பீட் தமிழ்  ;   நன்றி R. கந்தசாமி ஸார்.

========================================================================================
வெங்கட் பதிவில் இந்தப் படம் பகிர்ந்து அதற்கு இணையத்திலிருந்து ஒரு  கவிதை பகிர்ந்திருந்தார்.  நான் அதற்கு முயற்சித்தது கீழே...


விளக்கைப் பார்ப்பதால்
விலகிச் செல்லுமோ
மன இருள்?

என் மதி குழப்பம் தீர
நிம்மதி தேடி வந்த
இடத்தில்
சன்னதி இன்னும் திறக்கவில்லை

காத்திருக்கிறேன் நான்
கதவு திறக்கவும்
என் பால் அவன்
அருள் சுரக்கவும்.

அழுத மனம் இப்போது
தொழுது நிற்கிறது
அருகில் வந்ததுமே
அமைதி திரும்பியதே
உன் ஒளி என்னுள்ளும்
பரவியதே

ஆறுமுகம் நீ கொண்டாய் 
ஆறுதலை என்னுள் 
தந்தாய்!

========================================================================================================

எழுத்தாளர் பிரபஞ்சன் பற்றி எழுத்தாளர் தமயந்தி ...

எந்த உறவைக் குறித்தும் மோசமான அபிப்பிராயங்கள், யாரைக் குறித்தும் கேவலமான பேச்சுகள் பிரபஞ்சனுக்கு ஒருபோதும் இருந்ததில்லை. என்னுடைய தோழி லதா இதைச் சொன்னார். தன்னுடைய தந்தை இன்னொரு பெண்ணுடன் வந்திருக்கிறதை ஒரு தியேட்டரில் சந்திக்கிற ஒரு பெண், அது தொடர்பாக சந்திக்கிற நிறைய பிரச்சனைகள் பற்றிய ஒரு கதையின் வெளியீட்டு விழாவில் பிரபஞ்சன் பேசினாராம். “ஒரு மகளுக்குத் தன்னுடைய தந்தையை இன்னொரு பெண்ணுடன் பார்க்கிறது இயல்பான ஒரு விஷயம்தான். ஆனால், அந்த அப்பாவின் பார்வையிலிருந்து அந்த மகள் அந்த உறவைப் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும்” என அவர் சொன்னாராம். 

இன்றைக்கு இருக்கிற திருமண உறவுகளில் பாதி போலியானவை என்பதை வெட்ட வெளிச்சமாக்கிய சமூகக் கண்ணாடி பிரபஞ்சனின் கையில்தான் எழுத்து வடிவில் இருந்திருக்கிறது.  மற்ற எல்லாரும் திருமணம் புனிதமானது, தெய்வீகமானது என்று சொல்வார்கள். அப்படி ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை என்று அதை உடைத்துப் போட்டவர் பிரபஞ்சன். வெகுஜன பத்திரிகை ஒன்றில் வெளியான அவருடைய ஒரு கதை உண்டு. அதில் ஒரு பெண் தன்னுடைய ஆண் நண்பனுடன் குடித்துக் கொண்டிருப்பாள். இன்றைக்கும்கூட சில வெகுஜன பத்திரிகைகள் இதை வெளியிடுவார்களா என்பது சந்தேகம்தான். 

பெண்கள் தங்கள் வாழ்க்கையை இப்படித்தான் வாழ வேண்டுமென்று பிரபஞ்சனுக்கு ஒரு பார்வை இருந்தது. ஆனால், யதார்த்த வாழ்க்கையில் தான் பார்க்கிற பெண்களிடம் இதை அவர் அறிவுரையாக ஒருபோதும் சொல்லமாட்டார். அவர் அதை உரையாடலாக மாற்றுவார். அந்த உரையாடலின் உச்சம் அவர்களை அந்த எண்ணங்களுக்கு இட்டுச் செல்லும். பிரபஞ்சனுடனான உரையாடல்கள் அவரோடு பழகிய ஒவ்வொரு தனிப்பட்ட மனிதர்களுக்கும் மிகவும் முக்கியமானதாகவே இருக்கும்.

உணர்வு சார்ந்த எந்தவொரு உறவையும் அவர் கொச்சைப்படுத்தியதே இல்லை. அதுதான் அவரது முதிர்ச்சியின் அடையாளம். அவருடன் நான் நிறையவே வாதிட்டிருக்கிறேன்.

அக்கினிப்பிரவேசம் கதையை நான் மிகக் கடுமையாக விமர்சித்திருக்கிறேன். அவருக்கு ஜெயகாந்தன் ஆதர்சம் என்று எனக்குத் தெரியும். ஆனாலும் என்னால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று நான் சொல்லும்போது, “அந்தக் காலகட்டத்தில், அதுவும் ஒரு பிராமண சமூகத்தில் அது ஒரு புரட்சிதான்” என்று சொல்லுவார். குமுதத்தில் அட்டைப்படத்தில் ஒரு பெண்ணின் முதுகுப் படத்தைப் போட்டு, “யாருடைய முதுகு இது? பார்க்க... பக்க எண்” என்று போட்டு, அந்தப் பக்கத்தில் ‘நிர்மலா பெரியசாமி’ என்று போட்டிருந்ததைக் கண்டித்து அவர் குமுதத்திலிருந்து வெளியே வந்தார். ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கும் எத்தனைப் பேருக்கு இப்படிச் செய்யும் துணிச்சல் வரும்? அத்தனை துணிச்சல் கொண்டவர் பிரபஞ்சன். அதனாலேயே இப்படிப்பட்ட மனிதரை அவருடைய குடும்பம் சற்று அந்நியமாகவே பார்த்தது. ஏனென்றால், நம்முடைய குடும்ப அமைப்பில் ஆண் என்பவன் பொருளாதாரத்தை ஈட்டிக் கொடுப்பவன். அந்தப் பொருளாதாரத்தை ஈட்டிக் கொடுப்பதன் மூலம் ஒரு வசதியான உறைவிடம், உணவுப் பழக்கத்தை அவன் அந்தக் குடும்பத்திற்குக் கொடுக்கிறான். ஆனால், எழுத்தாளனாக மட்டுமே இருக்க வேண்டும் என்று நினைக்கிற ஒருவருக்கு எப்படித் தன் குடும்பத்திற்கு அத்தனை சவுகரியங்களையும் கொடுக்க முடியும்? கொடுக்க முடியவில்லை என்பதுதான் உண்மை.

ராணி அக்காவை நான் பல முறை பார்த்திருக்கிறேன். நான் அங்கு போகும்போது அவ்வளவு ருசியாக கோழிக்கறிக் குழம்பு சமைத்து அன்புடன் பரிமாறுவார். அந்தப் பரிமாறுதலில், நாம் வேறு ஒன்றிற்காக வைத்திருந்த பணத்தை இவர்களுக்காக செலவு செய்துவிட்டோமே, நம்முடைய குழந்தைக்காக வைத்திருந்ததை கொடுக்க வேண்டியதாகிவிட்டதே என்பன போன்ற எந்தவொரு உணர்வும் இருக்காது. அது பிரபஞ்சனுடைய தன்மையின் நீட்சியாகவே நான் பார்க்கிறேன். ராணி அக்காவைப் பற்றி பிரபஞ்சன் சொல்லும்போதெல்லாம், “நான் அவளுக்கு நல்ல கணவனாக இருந்ததில்லை. வேறு யாரையாவது அவள் திருமணம் செய்திருந்தால் சிறப்பாக வாழ்ந்திருப்பாள்” என்று சொல்வார். அவர்களுடைய மரணத்தின்போது நான் போக முடியவில்லை. பின்னதாக சதீஷின் திருமணத்திற்குப் பிரபஞ்சன் அழைத்தார். தன்னுடைய பல தனிப்பட்ட பிரச்சனைகளை என்னிடம் பேசியிருக்கிறார். நானும் கிட்டத்தட்ட என்னுடைய எல்லாத் தனிப்பட்ட பிரச்சனைகளையும் அவரிடம் சொல்லியிருக்கிறேன். அது அந்த அறைக்குள்ளேயே முடிந்துவிடும். அதை வெளியே இன்னொருவரிடம் போய் சொல்லும் பழக்கமே பிரபஞ்சனிடம் கிடையாது. யாரைப்பற்றியும் அவர் ஒருபோதும் சொன்னதில்லை.

அவருக்கு மிகவும் பிடித்தமான சிலர், அதிலும் குறிப்பாக தமிழ்நதி, ஜோதி போன்ற எழுதுவதில் சிலர் இருந்தார்கள். “ஜோதி அரசியலுக்கு வந்ததால்தான் எழுதுவதை விட்டுவிட்டாளோ? அரசியல் அவசியந்தான். ஆனால் எழுதுவது அரசியல்தானே?” என்ற கேள்வி அவருக்கு இருந்தது. “ஜோதியைப் பார்க்கும்போது எழுதச் சொல்லுங்கள்” என்று அடிக்கடி சொல்வார். தமிழ்நதியின் எழுத்துகள்மீது அவருக்கு மிகப்பெரிய பிடித்தம் உண்டு. புதிதாக தமிழில் எழுத வரும் யாருடைய புத்தகங்களையும் வாங்கி படிக்கக்கூடிய பரந்த வாசிப்பு அனுபவம் பிரபஞ்சனுக்கு உண்டு. நடப்பு விஷயங்களை அறிந்துகொள்வதில் உள்ள ஆர்வம் அது.

- தமயந்தி  ;  நன்றி திரு R. கந்தசார், ஃபேஸ்புக்.

===================================================================================

பாரதியாரின் 'சின்னஞ்சிறு கிளியே' எம் எல் வசந்தகுமாரி குரலில் கேட்டிருக்கிறேன்.  ரொம்பப் பிடிக்கும்.  உடன் V N சுந்தரம் பாடுவார்.  

சமீபத்தில் இந்த சகோதரிகளின் குரலில் பாடலைக் கேட்டேன்.  காணொளியிலேயே வரிகளும், பாரதியார் பற்றிய விவரங்களும், அதைவிட எந்ததெந்த இடங்கள் என்னென்ன ராகம் என்கிற விவரமும் இருந்தது.  பல்லவியும் முதல் சரணமும் காபி ராகம்.  S. -சௌந்தர்யா  S. அனுசுயா. இந்த சகோதரிகளின் குரலில் பாடல் பரமசுகம்.  

கேட்டுப்பாருங்களேன்.  மென்மையான குழலோசையுடன் இனிமையான பாடல்.  காரணம் .தேர்ந்தெடுத்த ராகங்கள்.

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
செல்வ களஞ்சியமே
சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
செல்வ களஞ்சியமே
சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
செல்வ களஞ்சியமே
என்னை கலி தீர்த்தே உலகில்
என்னை கலி தீர்த்தே உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்…..….
என்னை கலி தீர்த்தே உலகில்
என்னை கலி தீர்த்தே உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்…..….

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
செல்வ களஞ்சியமே
சின்னஞ்சிறு கிளியே

பிள்ளை கனி அமுதே கண்ணம்மா
பேசும் பொற்சித்திரமே…..…..
பிள்ளை கனி அமுதே கண்ணம்மா
பேசும் பொற்சித்திரமே…..…..
அள்ளி அணைத்திடவே என் முன்னே
ஆடி வரும் தேனே……….
அள்ளி அணைத்திடவே என் முன்னே
ஆடி வரும் தேனே……….  

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
சின்னஞ்சிறு கிளியே [இதுவரை காபி ராகம்]

ஓடி வருகையிலே கண்ணம்மா
உள்ளம் குளிருதடி…..
ஓடி வருகையிலே கண்ணம்மா
உள்ளம் குளிருதடி
ஆடி திரிதல் கண்டால் உன்னை போய்
ஆடி திரிதல் கண்டால் உன்னை போய்
ஆவி தழுவுதடி  [மாண்டு ராகம்]

உச்சி தன்னை முகர்ந்தால்
கருவம் ஓங்கி வளருதடி
உச்சி தன்னை முகர்ந்தால்
கருவம் ஓங்கி வளருதடி
மெச்சி உன்னை ஊரார் புகழ்ந்தால்
மேனி சிலிர்க்குதடி
மெச்சி உன்னை ஊரார் புகழ்ந்தால்
மேனி சிலிர்க்குதடி  [வசந்தா ராகம்]

கன்னத்தில் முத்தமிட்டால்
உள்ளம்தான் கள்வெறி கொள்ளுதடி
கன்னத்தில் முத்தமிட்டால்
உள்ளம்தான் கள்வெறி கொள்ளுதடி

உன்னை தழுவிடிலோ கண்ணம்மா
உன்மத்தம் ஆகுதடி…..….
உன்னை தழுவிடலோ கண்ணம்மா
உன்மத்தம் ஆகுதடி…..….  [திலங் ராகம்] 

உன் கண்ணில் நீர் வடிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
உன் கண்ணில் நீர் வடிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
என் கண்ணிற் பாவையன்றோ கண்ணம்மா
என் கண்ணிற் பாவையன்றோ கண்ணம்மா
என்னுயிர் நின்னதன்றோ [ நீலமணி ராகம் ]


==========================================================================================

ஜோக்ஸ்...

"என்னடா இது..  நம்ம வாத்தியார் கல்யாண காரியத்தை கவனிக்காம என்னமோ எழுதிக்கிட்டு இருக்கார்?"


"கல்யாணத்துக்கு யார் யார் வந்திருக்காங்கன்னு அட்டெண்டன்ஸ் எடுத்துக்கிட்டு இருக்கார்"



விருந்தாளி :  "அந்த நாய் ஏன் என்னைப்பார்த்து அப்படிக் கத்துது?  கொஞ்சம் கெட்டியா பிடிச்சுக்கோப்பா!"

சின்னப்பையன் : "சீக்கிரம் சாப்பிடுங்க மாமா!  தான் சாப்பிடற தட்டிலே இன்னொருத்தர் சாப்பிட்டா அதுக்கு கோபம் வராதா?"



140 கருத்துகள்:

  1. பிரபஞ்சன் என்றாலே நம் நினைவுக்கு வரும் படைப்பு எதுவென்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
    அந்த முக நூல் பதிவில் என் கருத்தைப் பார்த்திருப்பீர்கள். அதனால் அது இங்க்ற் வேண்டாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கருத்தை அங்கு நான் பார்த்த நினைவில்லை.  அவரின் பெயர் பெற்ற படைப்பான வானம் வசப்படும் நான் இன்னும் வாசிக்கவில்லை.  பெயர் நினைவில் இல்லாத சில கதைகள் வாசித்திருக்கிறேன்.  ஆனால் பிரபஞ்சன் என்றதும் சட்டென நினைவுக்கு வருவது  அந்த ஜோல்னாப்பையும், அவர் எழுதிய மகாபாரத மாந்தர்களும்.

      நீக்கு
  2. பஜ்ஜி போண்டா எல்லாம் வெளியில் சாப்பிடுவது ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப அபூர்வம்....வீட்டிலும் செய்து ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நாளாச்சு...

    ஆனா நீங்க சொல்றாப்ல செவ செவ ந்னு மொரு மொறுன்னு பார்க்கறப்ப ஆசை வருகிறதுதான். ஆசையை அடக்கு! அடக்க வழி ஒன்றும் அறிந்திலேன் நான்....அடக்கியாச்சு......ஆனால் அதற்கும் மேல் விடுபட ........ம்ஹூம்...

    எ..........ப்............ப.........வா.......ச்..............சு..............ம்..........அதானே எப்பவாச்சும் ஒரு முறை சாப்பிட்டா தப்பில்லை.....மனசுக்கு சமாதானம் சொல்லிட்டு..........அன்று அதற்கு ஏற்ப ஒரு சில நடவடிக்கைகள்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா...    ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப உணர்ச்சியோடு பதில் சொல்லி இருக்கீங்க..  இல்லையில்லை, அந்த பஜ்ஜி, அதன் நிறம், அதன் ஆகர்ஷணம் அப்படி சொல்ல வைத்திருக்கிறது!!!

      நீக்கு
    2. பஜ்ஜி மாமாவுக்காக அமாவாசை அன்று கட்டாயமாய்ப் பண்ணித் தருவேன். அதுவும் வாழைக்காய் என்றால் அவருக்கு உயிர். நெல்லை சொல்றாப்போல் வாழைக்காய் நீளத்துக்குப் பெரிதாகத் தான் போட்டுக் கொடுத்திருக்கேன். மற்ற நாட்களிலும் உண்டு தான். அநேகமாக வட மாநிலங்களில் போடப்படும் பஜியா அல்லது நம்ம ஊர் தூள் பஜ்ஜி. எனக்கு இந்தத் தூள் பஜ்ஜி ரொம்பப் பிடிக்கும். போண்டா, வடை எல்லாம் எப்போதாவது தான். முப்பருப்பு வடைக்கு அரைச்சால் அந்த மாவை மிச்சம் வைச்சு மறுநாள் வெங்காயம் சாப்பிடும் நாளாக இருந்தால் மசால் வடை பண்ணிடுவேன். அடிக்கடி தவலை வடை இருக்கும். இந்த என்னோட தவலை வடை நவராத்திரியில் நான் பண்ணி இருப்பது தெரிந்தால் வர முடியலைனு சொல்றவங்க கூட அன்னிக்கு வந்து தாம்பூலம் வாங்கிட்டுத் தவலை வடை வாங்கிட்டுப் போவாங்க. குழந்தைகள் மறுபடினு கேட்கும்படி இருக்கும். அவ்வளவு பிரபலம். இப்போ எதுவுமே இல்லை. நினைச்சுப் பார்ப்பதோடு சரி. :))))

      நீக்கு
    3. அடடே...  நானும் பாஸ் கிட்ட சொல்லி அமாவாசைக்கு அமாவாசை பஜ்ஜி கேட்கிறேன்.  எம் அம்மா திவஸத்துக்கு முதலிலேயே பஜ்ஜி சேர்த்திருந்தோம்.  இப்போது நிறுத்தி இருக்கிறோம்!!
      கத்தரிக்காய் பஜ்ஜி சாப்பிட்டு நாளாச்சு!

      நீக்கு
  3. அட! அட! ஸ்ரீராம்....செவ்வாயின் பாதிப்பு இன்னும் விலகலை பாருங்க!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் நினைச்சேன்.. நீங்க சொல்லிட்டீங்க!

      நீக்கு
    2. செவ்வாயின் பாதிப்பு? புரியலையே!

      நீக்கு
    3. கீதா சொல்லி இருக்கும் பதிலில்  இருக்கும் பாணி  செவ்வாய்க்கதையின் தீமை ஒட்டி இருக்கிறது என்கிறார்.

      நீக்கு
  4. ஹையோ... உளுந்து வடை கண்ணில் பட்டால் என்செய்வேன்? எப்படி கால்ஷீட் கொடுப்பேன்? அதுதானே எனக்கு ரொம்பப் பிடிக்கும்!//

    ஹாஹாஹாஹா......நான் என் உடலோடு உள்ளிருக்கும் மனசோடு பேசுவேன்...உள்ளிருப்பதுதானே கட்டளை இடுகிறது எனவே.....இங்க பாரு குழந்தே கீதே.....ஒரு தனி அறை அதுக்குன்னு ஒன்னு கிரியேட் பண்ணக் கூடாதா....ஏன் இப்படி என்னை கலவரப்படுத்தற!?

    அதுவும் யுட்யுபை தொறந்தாலே ஒவ்வொரு டாக்டரும் வந்து பயமுறுத்தறாங்களே gut gut ன்னு....cut பண்ணச் சொல்றாங்களே!!!!

    //'அவங்களை நிறுத்தத் சொல்லு.. நான் நிறுத்தறேன்' என்றேன்!//

    ஹாஹாஹா....மணி எங்க இருக்கீங்க!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கே பேச முடியுது கீதா...   சமீபத்துல நான் கடைப்பிடிக்க ஆரம்பிச்ச உணவுக் கட்டுப்பாடு கூட உடைந்து விட்டது.  எடை ஏறுகிறது.  ஆனால் எடை குறைந்தால்தான் பயப்படணும்னு சமாதானப்படுத்திக்கறேன்.  இருக்கும் வரை சாப்பிட்டு அனுபவித்து விடுவோமேன்னு தோணுது..  வைகோ ஸார் சொல்றா மாதிரி!

      நீக்கு
    2. ப்ளீஸ்.....ஸ்ரீராம்....எடை கூடுவது இருக்கட்டும்....மன எடை நோய் எடை கூடாமல் இருந்தால் போதும் அதைப் பார்த்துக்கோங்க....பாருங்க நீங்க இன்னும் எழுத வேண்டும்....உங்கள் எழுத்து எல்லாரையும் மகிழ்விக்க வேண்டும் அதாவது எழுத்தின் அழகை ரசித்து மகிழ வேண்டும். இதை மனசுல ஆழமா போட்டு வைச்சுக்கோங்க....உங்க வருங்கால அடுத்த சந்ததிக்கு அது எப்ப வருதோ....வரப்ப வரட்டும் அதுக்குக் கவிதை எழுதணும்....பாட வேண்டும் நிறைய....என்று மனசுல ஆழமா போட்டுக்கோங்க....அந்த உந்து சக்தி தானாகவே நம் ஆரோக்கியத்தைப் பார்த்துக்க உதவும்...

      கீதா

      நீக்கு
    3. ஹா.. ஹா.. ஹா... பிடிவாதமா சொல்லவில்லை.. நிஜமா சொல்றேன்.. என் நாக்கு எல்லாவற்றையும் வெல்லும் சக்தி படைத்தது! மனதுக்கு ரொம்ப இரக்க ஸ்வபாவம்!!

      "ச்சீ பாவம்" னு நாக்குக்கு விட்டுக் கொடுத்து விடும்.

      நீக்கு
  5. ஸ்ரீராம் படம் ஆஹா! ஆனா இதை வீட்டுல செஞ்சு சாப்பிடுங்களேன்...எப்பவா............ச்சும்.

    இங்க நம்ம வீட்டுப் பக்கத்துல நமஸ்தேன்னு ஒரு உணவகம்.....நாங்க கலர், சோடா உப்பு, எம் எஸ் ஜி.....கெமிக்கல். பாமாயில் எதுவும் பயன்படுத்துவதில்லைன்னு ஆங்காங்கே எழுதி வைச்சிருக்காங்க. நாம தோசைக்கு எண்ணை நெய் ஊத்தாம சும்மா காமிச்சு செஞ்சு கொடுங்க என்றால் அப்படியே செய்தும் தறாங்க.....இதெல்லாம் வீடு மாத்தினப்ப ஒரே ஒரு நாள்...மதிய சாம்பார்ல நோ வெல்லம்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீட்டுலயும் செய்வோமே... விடுவோமா என்ன.. ஆனால் ரொம்ப அபூர்வம். பாஸை ரொம்ப தாஜா பண்ணனும்!

      // சாம்பார்ல நோ வெல்லம்... //

      தயிர் சாதத்துல போட்டிருப்பாங்க...!

      நீக்கு
    2. அது தெரியும், ஸ்ரீராம்.... நீங்க வீட்டில் செய்வீங்கன்னு....

      தயிர் சாதத்துல நோ வெல்லம்...இந்த உணவகம் பரவால்ல. நீங்க ஒரே ஒரு உணவகத்துல பார்த்துட்டு.....அதுவும் அன்னிக்கு தயிர் இருந்திருக்காது உடனே இந்த தயிர் வடை...சாட்டுக்கு சீனி போட்ட தயிர் வைச்சிருப்பாங்களே அதை ஊத்தி கலந்துருப்பாங்களோ என்னவோ!!!!

      கீதா

      நீக்கு
    3. நமக்கு அப்படிதானே வாய்க்கும்!

      நீக்கு
  6. கல்கத்தாவில் ஸ்ரீவேணுகோபாலன் போய்ப் பார்த்து விலாவரியாக எழுதிய
    சட்டபூர்வமாக அனுமதிக்கப் பட்ட மன இருட்டுப் பகுதி இருக்கிறது.
    இன்னும் எந்தந்த மாநிலங்களில் இவை இருக்கின்ற என்பதும் உங்களுக்குத் தெரியும். அரசுமருத்துவ வசதிகள் கூட. எல்லா விஷயங்களிலும் ஆண் அப்படித்தான் செய்வான் என்று அனுமதிக்கிற தேசத்தில் இதையெள்ளாம் பற்றிப் பேசாமல் இருப்பதே உத்தமம். போதாக்குறைக்கு அப்பப்போ 'இரு கட்சிக்கும் பொதுவில் வைப்போம்' என்று கூப்பாடு வேறே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் 'திருமணத்துக்கு மீறிய உறவை'ப்பற்றி சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன்!  என்றால், அது என்ன என்று கடுமையாக சொல்லி விட்டீர்கள்.

      நீக்கு
    2. நான் சொன்னது 'பச்சை விளக்கு' பகுதிகளின் பச்சையான நடைமுறைகளைப் பற்றி..

      நீக்கு
  7. தேனா.......!!! உங்கள் வார்த்தைகள் தேனாய் இருக்கட்டும் ஆனால் தேன் சர்க்கரைக்கு ஆவாதே!!!

    இன்னொன்று இப்ப புதுசா ஒன்று வருதே பார்த்திருப்பீங்க, ஸ்ரீராம். சர்க்கரை நோய்க்கு நேரடியாக இல்லைனாலும் விட்டமின் டி2, டி 3 (மொத்தத்தில் விட்டமின் டி) குறைபாடுதான் முக்கியமான காரணமாம்....டைப் 2 சர்க்கரை நோய்க்கு என்று

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவிங்கவிங்களுக்கு எது விக்கலையோ அதையெல்லாம் கொண்டு வருவானுங்கோ...   அப்பப்போ தோண்றதை அப்பப்போ சொல்லிக்கினே இருப்பானுங்கோ...

      நீக்கு
    2. ஹாஹா...அதே....ஆனா நாம் விழ மாட்டோமே அதுக்கெல்லாம்

      கீதா

      நீக்கு
    3. இந்த லெமன் டீ குடிக்க ஏன் வெளியே வாங்கறீங்க? வீட்டில் எலுமிச்சம்பழமோ, தேனோ, வெந்நீரோ இருக்காதா என்ன? வீட்டிலேயே காலை எழுந்ததும் போட்டுக் குடிச்சுக்கலாம். கூடவே க்ரீன் தேயிலைப் பாக்கெட் வாங்கி இருந்தால் அதைப்போட்டும் கொதிக்க வைத்துக் குடிக்கலாம்.

      நீக்கு
    4. பொதுவாக நான் வீட்டில் குழந்தைகள், மாமனார், மாமியார், மைத்துனர்கள், ஓர்ப்படினு இருந்தப்போ எதையுமே வெளியில் வாங்கிச் சாப்பிட்டதில்லை. நான் இல்லைனா அப்போக் குழந்தைகளுக்குக் கடையில் இருந்து இட்லியோ அல்லது ப்ரெட், பட்டர் ஜாமோ பள்ளிக்குப் போகையில் உணவாகக் கொடுப்பாங்க. அப்போத் தான் வாங்குவோம். மற்றபடி நான் வீட்டிலேயே எல்லாமும் பண்ணிடுவேன். பின்னாட்களில் அதாவது 98/99 க்குப் பின்னர் எனக்கு ஆஸ்த்மா தொந்திரவு அதிகாரித்த பின்னர் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்தது.

      நீக்கு
    5. கீதா அக்கா..     நடைப்பயிற்சியில் நடுவே ஒரு நாள் ஒரு டீக்கடையில் நின்று டீ குடிக்கும் அனுபவம் பெற பாஸ் விரும்பினார்.   அப்படி குடித்தது இது.  அவர் ஜிஞ்சர் டீ தெரிவு செய்ய, நான் 5தெரிவு செய்தது இது.  வீட்டிலும் இது போட்டு குடிப்பதுண்டு.

      நீக்கு
    6. என்னைப் பொறுத்தவரை வெளியில் சாப்பிடுவதை தப்பான விஷயமாக நினைத்ததில்லை.  22 வயது வரை வெளியில் சாப்பிடுவது என்பதே பெரும் கனவாக இருந்தது!  அதை உடைத்தவர் சுகுமார்.  அப்புறம் நான் தனியார் அலுவலகத்தில் வேலை பார்த்த நாள் முதல் டீ குடிப்பது, கரும்புச்சாறு குடிப்பது என்று வீர சாகசம் தொடங்கியது!  அப்போது  அதில்  ஒரு பெருமை!

      நீக்கு
    7. தப்புனு எல்லாம் சொல்லலை. அப்போக் கூட்டுக் குடும்பம் என்பதால் நாங்க வெளியிலே வாங்கினால் அப்போதைய நிலவரப்படி சுமார் 150 முதல் 200 ரூ வரை செலவாகும். செல்வை மிச்சப்படுத்தத்தான். மற்றபடி கல்யாணம் ஆன புதுசிலே தனிக்குடித்தனத்தில் இருந்தப்போச் சென்னை பாரிஸ் கார்னரில் ஒரு ஓட்டல் விடாமல் போயிருக்கோம். தேடித் தேடிப் போவோம். ராமகிருஷ்ணா லஞ்ச் ஹோம், அம்பீஸ் கஃபே, சிடி கஃபே, அர்மெனியன் தெருவில் பாலிமர் ஓட்டல். சென்ட்ரல் பக்கத்தில் இருந்த பிக்னிக் ஓட்டல் ரூஃப் கார்டன் எனப் போவோம். பட்ஸ் ஓட்டல் எங்கே இருந்தாலும் தேடிப் பிடிச்சுப் போவோம்

      நீக்கு
    8. நாங்க குழந்தைங்களா இருக்கிறச்சே அப்பா எங்களை ஒவ்வொரு ஆங்கிலப் புத்தாண்டுக்கும் ஓட்டலுக்கு அழைத்துச் சென்று விரும்பியதை வாங்கிக் கொடுத்திருக்கார். அண்ணா 1967/68 இல் வேலைக்குப் போகும்வரை இது தொடர்ந்தது. அப்புறமா நானும், தம்பியும் தானே. அவ்வளவாய் ரசிக்கலை. விட்டுட்டோம்.

      நீக்கு
  8. கவிதை என்றால் இன்னும் இன்னும் அழகுச் சிறகுகள் அங்கங்கே அலங்கரிக்க வேண்டும். எழுத்தில் வெகு சுலபத்தில் திருப்தி அடையாதவராக இருந்தால் தான் மேலும் மேலும் அழகு கூட்ட முடியும். எழுத்துக் கலைஞர்களைப் பொருத்தமட்டில் இது எழுதப்படாத விதி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான்.  எனக்கு வாய்க்காதது அது!

      நீக்கு
  9. இருங்க அடுத்த சவாரிய முடிச்சுட்டு வாரேன் கணக்குப் பண்ணி பைசா தருவதற்கு!!! விடு ஜீட் நீங்க சொல்றாப்ல!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தோ பாருங்க..  இந்த ஆன்சரெல்லாம் என்னாண்ட கேட்கக்கூடாது, ஆமாம், சொல்லிட்டேன்!

      நீக்கு
    2. புதிர் கணக்கில் 21 முட்டைகள் என்பது சரியாய் இருக்குமோனு நினைக்கிறேன். ஏழு ஏழாக 3 வரிசையோ அல்லது 3, 3 ஆக ஏழு வரிசையோ வைச்சால் மிச்சம் வராது.

      நீக்கு
    3. அந்த ஃபேஸ்புக் பதிவில் இதுதான் சரியான விடை என்று சொல்லப்படாவிட்டாலும், 49 என்பது பெரும்பான்மையாக இருந்தது.

      நீக்கு
  10. நம்ம ஊர்ல என்னங்க இது கோர்ட் ஸ்ரீராம்? நீதி என்ன இது? இவ்வளவு கேவலமாகவா இருக்கு? ச்சே!!! என்று சொல்ல வருது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் அப்படித்தான் தோன்றியது.  வரவர மாமி என்று போய்க்கொண்டிருக்கிறது.  திட்டமிட்ட நகர்வுகளோ என்னவோ...

      நீக்கு
  11. விஞ்ஞானி செய்தி வந்ததுமே வாசித்தேன்....

    எழுத்தாளர் ...ம்ம்ம் ஸ்டெல்லா ப்ரூஸ்?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர்தான்.  ஆனால் வேதனைப்படுத்தும் செய்தி.

      நேற்று இன்னொரு செய்தி படித்தேன்.  வீட்டில் வயதானவர்கள் இறந்தால் சரியான காரணம் சொல்ல வேண்டுமாம்.  அரசு அறிவித்திருக்கிறது என்று படித்தேன்.  ஒன்றியவா குன்றியவா என்று தெரியவில்லை.

      நீக்கு
    2. அச்செய்தி கொஞ்சம் ஷாக்காகவும் இருந்தது ஸ்ரீராம். ஏன் யோசிக்காமல் இப்படி ஒரு முடிவு என்று. அரசு வேலை பார்த்தவருக்குப் பென்ஷன் வருவதில் கொஞ்சமேனும் சேமிப்பு இருந்திருக்கும் இல்லையா? இப்போது எத்தனையோ வசதிகள்...என்னவோ போங்க...

      கீதா

      நீக்கு
    3. சேமிப்பும் இருந்திருக்கும், பென்ஷனும் வரும். வேறே ஏதோ அழுத்தமான, ஆழமான காரணம்.

      நீக்கு
  12. சரணின் இந்தப் பேட்டியை பார்த்திருக்கிறேன், ஸ்ரீராம். சரண் பாலசந்தர் ஸ்கூல்.

    ஒரு சில சீன்கள் பார்த்திருக்கிறேன். முழுப்படமும் பார்த்ததில்லை. ஒரு சில சீன்கள் பார்த்ததில் நல்ல டீசன்ட் இயக்குநர்....மற்றும் காட்சி அமைப்பு வைப்பதிலும்...

    பார்க்க நினைத்திருந்த படங்கள். எப்ப என்றுதான் தெரியவில்லை....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒருமுறை தாராளமாக பார்க்கலாம் என்கிற அளவில் நல்லதொரு பொழுது போக்கு படம்.  ரகுவரன்,அஜித், ஷாலினி எல்லோரும் நன்றாய் செய்திருப்பார்கள்.

      நீக்கு
  13. சரண் அவர்களை ஒரே ஒரு முறை வடபழனி சரவணபவனில் பார்த்திருக்கிறேன்....ஆனால் பேசியதில்லை. அவரும் கூட ஒருவருமாகப் பேசிக் கொண்டே காஃபி!!!

    இந்தப் பாடல் இப்பதான் கேட்கிறேன், ஸ்ரீராம். ஹை பிச் பாடல். தலைவர் கலக்கல்.

    ஒரு சில இடங்களில் காட்சி .....பாடல் ஹை பிச் போகும் போது சீன் கீழ காட்டுவது....அது போல நீங்கள் சொல்லியிருப்பது போல் ஹை பிச் லோ பிச்.....

    இன்னொன்றும்...முதல் ஹை பிச்சில்...கேமரா ஜூம் அவுட்...கொஞ்சம்....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காட்சிகளை விடுங்கள் கீதா.. அது ஒரு பக்கம்.

      தலைவரின் குரல்..

      நீக்கு
  14. இன்றைய வியாழன் பதிவு லைட்டான சப்ஜெக்டில் ஆரம்பித்து போகப் போக அடர்த்தியாக இருந்தது. மிக அருமையான காம்பினேஷன். நகைச்சுவையோடு வியாழனை முடிக்கணும்னு கட்டாயமா என்ன? இந்த வாரத்துக்கு அது பொருந்தலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை..   நகைச்சுவையோடு முடிக்கலைன்னு கட்டாயம் இல்லைதான்.  அது (ஜோக்ஸ், பொக்கிஷம்) இல்லாவிட்டால் எங்கேன்னு கேட்கும் நணபர்கள் இருக்கிறார்கள்.  அதை முதலில் போட்டு பிறகு இன்னொன்று என்று வந்தாலும் நீங்களே கூட ஒரு முறை ஆர்டரை மாற்றாதீர்கள் என்றீர்கள்!

      நீக்கு
  15. சரண் படங்கள் எப்போதுமே அருமையாக இருக்கும் (எந்த எந்த ஆங்கிலப் படங்களிலிருந்து சுருட்டினாரோ... அது வேறு விஷயம்)

    எல்லாவற்றையும் பலமுறை பார்க்க வைத்திருக்கிறது. காதல் மன்னன் படம் தோல்வி என்பதே ஆச்சர்யமாக இருக்கிறது. அதை எத்தனை முறைகள் பார்த்தாலும் சலிக்காது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​உண்மை. எனக்கும் அந்தப் படம் பிடிக்கும். சரண், லிங்குசாமி எல்லாம் எங்கே போனார்களோ...

      நீக்கு
  16. பெங்களூர் சமாச்சாரம். இன்னொரு வெட்கக்கேடு! பராசக்தி திரைப்படத்தில் சின்னஞ்சிறு கைக்குழந்தை என்றால்...

    திருமணம் என்ற பந்தம் ஏற்பட்டு விட்டால் போதும்.. என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற அதிகாரத்தை இந்த ஆணுக்குக் கொடுத்தது யார்? யார்?..
    பாரதி!.. இந்த நூற்றாண்டுக்கும் நீ ஒரு புது அவதாரம் எடுக்க மாட்டாயா?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எடுத்தால் அவரையும் சோஷியல் மீடியாவில் நாறடித்து விடுவார்கள்.

      நீக்கு
  17. பாலா, பாலுமகேந்திராவின் மீதும் அவர் மனைவியின்மீதும் மிகுந்த பாசம் வைத்திருந்தது நெகிழ்த்தியது, நல்ல செயல்தான். ஆனால் அதற்காக பாலுமகேந்திரா தாலிகட்டிய நடிகையை இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளாமல் செய்தது ரவுடித்தனம் இல்லையா? நல்ல இயக்குநர் என்றால் பலரின் வாழ்க்கையைச் சீரழிக்கலாம் என்ற உரிமை தன்னால் வருகிறதா? ஒவ்வொரு மனிதனுக்கும் மறுபக்கம் உண்டல்லவா? வெறும்ன அப்பா என்று அழைத்தால் போதுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கரெக்ட்டா சொன்னீங்க...  என்னவோ நெனப்பு அவங்களுக்கு.  பாலாவே சற்று வித்யாசமான மனநிலை கொண்ட மனிதர்தான் என்று எனக்குத் தோன்றும்.

      நீக்கு
  18. நீதிமன்றத்தில் ஒரு சில நீதிபதிகள் அபத்தமாகத் தீர்ப்புகள் தருவதும், பிறகு உயர் கோர்ட்டுகளால் அவை திருத்தி எழுதப்படுவதும் நடக்கிறதே.

    நீதிபதிகளின் சொந்த குடும்பத்தில் இவை நடக்கும்போதுதான் சரியான தீர்ப்புகள் வருமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கட்சி அல்லது அரசுகளின் தலையீடு இருக்கிறதோ என்று சந்தேகம்.  ஆனாலும் இது ரொம்ப ஓவரான தீர்ப்பு.  மகளிர் உரிமை அமைப்புகள் எல்லாம் பெயரளவில்தான் இயங்குகின்றன போலும்.  உச்ச நீதிமன்றம் திருத்தாத  எவ்வளவோ தீர்ப்புகள் இன்னும் அபத்தமாகவே தொடரும் என்றும் தோன்றுகிறது.

      நீக்கு
    2. இன்ஒரு தீர்ப்பு முன்பு ஒரு நீதிபதி தந்திருந்தார். கையால் பெண் உடல் மீது படுவதோ இல்லை என்ன செய்தாலும் பாலியல் குற்றம் இல்லை என்று. பிறகு உயர் கோர்ட் அதனை தடை செய்தது.

      நீக்கு
    3. பத்துப் பனிரெண்டு வருடங்களுக்கு முன்னால் ஒரு தீர்ப்பு வந்ததது.  பதினைந்து வினாடிகள் தொடர்ந்து ஒரு பெண்ணைப் பார்த்தாலே குற்றம் என்று..  அதை வைத்து நான் கூட ஃபேஸ்புக்கில் கொஞ்சம் வம்பளந்து கொண்டிருந்தேன்!

      நீக்கு
  19. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா.. வணக்கம். இணைந்து பிரார்த்திப்போம்.

      நீக்கு
  20. பெங்களூர்க்கார்ர்்செய்தது, அவருக்கே வினையாகிவிட்டதே... அது சரி... பென்ஷன் பணம் மனைவிக்கும் வருமே. அது பிற்காலத்தில் அவருக்குப் போதாது என்றால் அவரே விருப்பமான முடிவு எடுத்துக்கொள்வாரே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜீவி ஸார் கேட்பது போல இந்த அதிகாரத்தை இவருக்கு கொடுத்தது யார்?  மனைவியின் விருப்பம் என்னவாக இருந்திருக்கும்?  உருக்கமான, உண்மையான அன்பு, அவள் கஷ்டப்படக்கூடாது என்று நினைக்கும் அளவு காதல் என்று ஜல்லியடிப்பார்கள்.

      நீக்கு
    2. விசாரணையில் உண்மையான காரணம் தெரியலாம். ஆனால் அதை வெளியிடுவாங்களானு தெரியலை.

      நீக்கு
  21. நடைப் பயிற்சிக்குப் பிறகு எதையும் சாப்பிடுவது பிரயோசனமில்லை என்பது என் கட்சி.

    லால்பாக்கில் நடந்துவிட்டு, முடிவில் உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு வருவோம் என்ற கான்சப்டே எனக்குப் பிடிப்பதில்லை.

    அது சரி... வெங்கட்ரமணா கும்பகோணத்தில் எப்படி அவ்வளவு மொறுமொறுப்புடன் வடை செய்கிறார்கள்? மடத்துத் தெரு அன்பா ஸ்நாக்ஸில் பஜ்ஜி...

    வீட்டில் கைக்கு அடக்கமாகச் செய்யும் பஜ்ஜி சுமார்தான். வாழைக்காய் பஜ்ஜினா அது வாழைக்காய் நீளத்துக்கு இருக்கணும். உங்க பஜ்ஜி ஆசை நியாயமானதுதான். ஜமாய்ங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // நடைப் பயிற்சிக்குப் பிறகு எதையும் சாப்பிடுவது பிரயோசனமில்லை என்பது என் கட்சி.//

      உண்மை.  நானும் அதே கட்சிதான்.  "புத்திக்கு தெரியுது..  மனசுக்கு (நாவுக்கு) தெரியலையே...."

      // ஜமாய்ங்க //

      அதெல்லாம் விடறதே இல்லை!  ஜமாய்ச்சுட்டேன்.  

      நீக்கு
  22. பாலாவின் பகுதி ரொம்பவே நெகிழ்ச்சி. ஆமாம் அவருக்கு பாலுமகேந்திரா அவர்கள் அப்பா போன்று. அவரது பேட்டிகள் சிலதில் வாசித்ததுண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லையின் கேள்வியை கவனிங்க கீதா...

      நீக்கு
    2. இந்த கீதா ரங்கன் க்கா, பெங்களூர்கார்ரின் மனைவியின் மீதான பாசத்தையும் சிலாகித்து எழுதுவாரோ?

      நீக்கு
    3. அவர் - விஞ்ஞானி -  முதலில் ஒரு மாதிரி பார்த்து விட்டு தன் மீது பிரயோகித்திருக்கிறார் போல...!!  அதீத புத்திசாலித்தனத்துக்கும் கிறுக்குத்தனத்துக்கும் சிறிய கோடுதான் வித்தியாசம் என்பார்கள்.

      நீக்கு
  23. கவிதையை ரசித்தேன் ஸ்ரீராம். நல்லாருக்கு...

    வழக்கம் போல்.....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​சுமார்தான் கீதா..

      நீக்கு
    2. ம்ம்ம்ம்ம் என்னைப் பொருத்தவரை கருத்து முக்கியம்....எனக்கு இப்பலாம் எழுத வருவதில்லை எனவே பிடித்திருக்கு ஸ்ரீராம்...இது என் கருத்து...

      கீதா

      நீக்கு
  24. எம் எஸ் அவர்களின் பேத்தியின் இப்பாடலைக் கேட்டிருக்கிறேன். ரொம்பப் பிடித்திருந்தது. இப்பவும் கேட்டு ரசித்தேன்....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேத்திகள்...

      கீதா

      நீக்கு
    2. என்ன..  அவர்கள் எம் எஸ் அவர்களின் பேத்திகளா?  செய்தியெனக்கு!  அறியேன் நான் இதையிதுவரை!

      நீக்கு
    3. ஐஷ்வர்யா சௌந்தர்யா இல்லையோ?

      அனுசூயாவா?

      கீதா

      நீக்கு
    4. தப்பா எழுதி இருக்கேனா?  மறுபடியும் செக் செய்யணும் போலவே...

      நீக்கு
  25. திடீர் திடீர்னு இப்படி ஐடி கருத்து போட அடம் பிடிக்கும் போது மாற்றி மாற்றி ரொம்ப டைம் எடுக்குது....ம்ம்ம்ம்ம்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்களாவது அடுத்த தளத்தில்.  எங்கள் தளத்திலேயே எனக்கு அவ்வப்போது "பிழை ஏற்பட்டது..  போய் காய்கறி நறுக்கிட்டு அப்புறம் வா" என்கிறது 

      நீக்கு
    2. வேலையை முடிக்காமல் கணினி முன் உட்கார்ந்தால் எனக்கும் இப்படித் தான் உடல், மனம் இரண்டும் பொருந்தாது.

      நீக்கு
  26. "சீக்கிரம் சாப்பிடுங்க மாமா! தான் சாப்பிடற தட்டிலே இன்னொருத்தர் சாப்பிட்டா அதுக்கு கோபம் வராதா?"//

    அடப்பாவி!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது அப்புறம் உருமாறி மறுபடி மறுபடி வந்தது என்று நினைவு.

      நீக்கு
  27. ஜோக்ஸ் - புன்சிரிக்க வைத்தன....

    ஸ்ரீராம் நான் இனி அப்பீட்டு ஓகே வா....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கீதா.. உங்கள் பிஸியான வேலைகளுக்கு நடுவில் வந்து கருத்திட்டு சென்றதற்கு நன்றி.

      நீக்கு
  28. வணக்கம் சகோதரரே

    இன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை. நடைப்பயிற்சியின் போது கண்ணில்பட்ட பஜ்ஜிகள் பார்க்கவே அழகாகத்தான் இருக்கிறது எந்த எண்ணெய்யில் பொரிக்கிறார்களோ என்ற எண்ணத்தை ஒரு நொடி உண்டாக்கி விட்டு சாப்பிட தூண்டும் வண்ணம் இருக்கிறது. ஆனால், நடைப்பயிற்சி செல்வதே உடம்பை சீராக வைத்திருக்கத்தானே..! அதையும் நினைவில் கொள்ள வேண்டும். வாரத்தில் மூன்று நாட்கள் நடைக்கு நடுவே இந்த உணவெனில், நடையை சாற்றி (நிறுத்தி) விடலாம். :))

    /இதையெல்லாம் நிறுத்துங்க என்கிறார் பாஸ்.

    'அவங்களை நிறுத்தத் சொல்லு.. நான் நிறுத்தறேன்' என்றேன்!/

    நல்ல பதில். ஹா ஹா ஹா.

    எனக்கும், உ. வடை, வா. பஜ்ஜி என்றால் மிகவும் பிடிக்கும். இங்கு அருகிலுள்ள ஒரு உணவகத்தில் ஒரிரு வருடங்களுக்கு முன்பு (அந்த உணவகம் ஆரம்பித்த வேளையில்) ஒரு பிளேட்டுக்கு மூன்று பஜ்ஜிகள் இது போலவே முப்பது ரூபாய் என விற்றார்கள்.உருவாக்கி தந்த புதிதில் அவ்வளவு நன்றாக இருந்தது. நாங்கள் மூன்று பேர் சென்றால், ஆளுக்கு ஒன்றென வாங்கி சுவைத்தோம். பின் கொஞ்ச நாளில் அதன் தரம் சுவாரஸ்யபடவில்லை. இப்போது அங்கு சென்றே ஒரு வருடத்திற்கு மேலாகி விட்டது. உங்கள் வாழை பஜ்ஜியை பார்த்ததும் எனக்கும் அந்த நினைவு வந்தது. வீட்டில் எப்போதாவது வட்டமாக, நறுக்கி சிறிதான பஜ்ஜிகள்தான் போடுவோம். இதுபோல் போட்டால் கடாயில் நிறைய எண்ணெய் வைக்க வேண்டும். ஆளுக்கு இரண்டென வைத்துக் கொண்டாலும், மீதமான எண்ணெய் வீணாகி விடும். குழந்தைகளுக்கும் ஒன்றுக்கு மேல் தர முடியாது. நிறைய பிரச்சனை. உங்களது பஜ்ஜி படத்தைப்பார்த்து என் ஆசையை தீர்த்துக் கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை கமலாக்கா...  சூடான பஜ்ஜி வடை போண்டா போடும் கடைகளைத் தாண்டி கால்கள் நகராது.  அந்நாட்களில் -  அதாவது கல்லூரி நாட்களில் - சைக்கிள் தானாக நின்றுவிடும்.  இப்போது கால்கள்!

      ஆமாம்.. வீட்டில் போடும் பஜ்ஜிகள் சிறிய சைசில் இருக்கும். கடையில் அவர் வாழைக்காயை நீளவாக்கில் சீவும் லாவகம் பார்த்திருக்கிறீர்களா?

      நீக்கு
    2. அந்த வயதில் சைக்கிள் நிற்கலாம். இப்போது நடக்கும் கால்கள் நிற்கலாமோ. ? :))

      நீக்கு
    3. நிற்கிறதே...   பூஞ்சை மனசு.  நாக்கைத் பார்த்தால் மனதுக்கு ஒரு இரக்க சுபாவம்.

      நீக்கு
  29. வழக்கத்தை விட பெரிய பதிவு...
    பஜ்ஜி போண்டா மகாத்மியம் அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி! இல்லைண்ணா..  உண்மையில் வழக்கத்தை விட சிறிய பதிவுதான்!

      நீக்கு
  30. ​90% சினிமா, 10% தீனி இன்றைய பதிவு.
    திருவனந்தபுரத்திற்கு வந்ததில் இருந்து இந்தத் பஜ்ஜி போண்டா ஆசையே விட்டுப்போய்விட்டது. இங்கு காற்றில் ஈரப்பதம் அதிகம். 90 % சாதாரணம். சுட சுட எடுத்தாலும் தட்டுக்கு வரும்முன்னரே நமுத்துப் போய்விடும். இங்கு இரவு தட்டு தோசைக்கடைகள் தாம் பிரசித்தி.

    விளக்கேற்றி வைக்கிறேன் விடிய விடிய எரியட்டும் பாடல் நினைவில் வந்தது,
    எந்த சென்சார் போர்ட் இன்றைய பதிவை பாஸ் செய்தது? பாஸிடம் காட்டினீர்களா?

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க JKC ஸார்..   நான் அந்த ரேஷியோ எல்லாம் பார்த்து போடுவதில்லை.  கைக்கு கிடைப்பதுதான்.  சென்சார் போர்ட் இதையெல்லாம் பார்க்கவே பிரியப்படுவதில்லை!

      நீக்கு
  31. சாலையோர பஜ்ஜிகளை
    விரும்புவதில்லை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் கண்கள் கண்டு விடும்.  கால்கள் நின்று விடும்.  மனம் விரும்பி விடும்.  நாக்கு சுவைத்து விடும்!  ஆரோக்யமும் காசும் செலவாகி விடும்!

      நீக்கு
  32. வணக்கம் சகோதரரே

    இன்றைய படத்திற்கேற்ற கவிதை அருமை. சகோதரர் வெங்கட்நாகராஜ் அவர்களின் பதிவிலும் படித்து ரசித்து அவருக்குத் தந்த கருத்தில் குறிப்பிட்டேன். இப்போதும் இங்கும் படித்து ரசித்தேன்.

    செய்திகள், நீதிகள் மனதை பதற வைக்கின்றன. இப்படியும் மனித இனங்களா என்ற அதிர்ச்சி வருகிறது.

    அமர்க்களம் படம் தொ. காட்சியில் பார்த்துள்ளேன். எஸ் பி பி அவர்களின் மூச்சு விடாத பாடலை ரசித்திருக்கிறேன். இந்தப்பாடல் நினைவில் இல்லை. கேட்டு விட்டு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கமலா அக்கா..  ஆமாம், அங்கும் பாராட்டி இருந்தீர்கள்.  அமர்க்களம் நானும் 'தொல்லை'க்காட்சியில்தான் பார்த்தேன்!

      நீக்கு
  33. நாங்க வண்ணம், சோடா உப்பு, எம் எஸ் ஜி.....கெமிக்கல். எதுவும் பயன்படுத்துவதில்லை...

    பெரும்பாலும் இயற்கை உணவு தான்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சூப்பர். உங்களைப் போன்ற சிலருக்கு இந்த மனக்கட்டுப்பாடு கைகூடுகிறது.

      நீக்கு
  34. ​இஸ்ரோ என்ஜினீருக்கு வட்டு பிடிச்சுட்டுது, இது போல் நிறைய வட்டு பிடித்தவர்கள் இஸ்ரோ வில் உண்டு.வட்டு என்றால் என்ன என்பதை கீதா ரங்கன் விம் போட்டு விளக்குவார்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வட்டு என்றால் கிறுக்கோ?  பிராந்து சொல்லின் வேறு வகை!

      நீக்கு
    2. வேறு பொருள்: வட்டு (Vatt) என்பது சில இடங்களில் வெறித்தனம் அல்லது பித்துப்பிடித்த நிலை (Madness) என்பதையும் குறிக்கும்
      பொதுவாக, வட்டு என்ற வார்த்தை வட்டமான, தட்டையான வடிவம் அல்லது வட்டுகளைக் குறிக்கவே மலையாளத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

      நீக்கு
    3. ஆம்.. அவரது பயித்தியம் பிடித்த இந்தச் செயலால் யாருக்கு என்ன லாபம்.? இப்போது இவரையே "கவனித்து" கொள்ள நல்ல வாய்பை உருவாக்கி தந்து விட்டார்.

      நீக்கு
    4. எங்கே கவனித்துக்கொள்ள...   ஜெயிலிலா?  நன்றாகவே கவனிப்பார்கள்!

      நீக்கு
    5. ​பின் விளைவுகளைப் பற்றி அறியாமல் ஒரு இன்ஸ்டிக்ட்டில் செயல்படுதல், அல்லது காரணம் இல்லாமல் ஏதேதோ செய்வது போன்ற செயல் தான் வட்டு பிடித்தல் எனப்படுவது. Temporary insanity.

      Jayakumar

      நீக்கு
    6. அந்த முதல் ஜோக் சாஸ்திரிகள், என்னனே புரியலை, படிக்க முடியலை. அடுத்ததைத் தனியாக் கொடுத்தாப்போல் இதையும் கொடுத்திருக்கலாமோ? மற்றவை அதிலும் அந்த நாயின் தட்டு மனதைக் கவரவில்லை.

      எம்.எஸ். அம்மாவின் பேத்திகள் இருவருமே நன்றாய்ப் பாடினாலும் ஐஸ்வர்யா தான் வெளிச்சத்தில் இருந்தார். இப்போ எப்படினு தெரியலை.

      விஞ்ஞானிகளே கொஞ்சம் மன நிலை பிறழ்ந்திருப்பார்கள் என்பதற்கேற்ப இவரும் இருந்திருக்கார். மத்திய அரசு பென்ஷன் கொடுக்காமலா இருந்திருக்கும்? எனக்கு மாமா இறந்த மே மாதம் முழு பென்ஷன் வந்தது. அடுத்த ஜூன் மாதத்திலிருந்து எனக்கென்று நிர்ணயிக்கப்பட்ட பென்ஷன் வந்து கொண்டிருக்கு. அதோடு அந்த விஞ்ஞானியின் மனைவிக்குத் தன்னைப் பார்த்துக்கத் தெரியாதா? அப்படி இல்லைனாலும் ஏதேனும் ஹோமில் சேர்ந்துக்கலாமே? எதுக்குக் கொன்னிருக்கணும்? இது சரியான காரணமாத் தெரியலை. வேறே ஏதாவது இருந்திருக்கணும்.

      நீக்கு
    7. உடனடியாகத் தகவல் கொடுத்துட்டு இறப்புச் சான்றிதழையும் மருத்துவச் சான்றிதழையும் இணைச்சுட்டால் போதும். அடுத்த மாதத்திலிருந்து கணக்காக வந்துடும். மாநில அரசு போல் அலைய விட மாட்டார்கள். அதோடு அந்த விஞ்ஞானி முதலில் சாகாமல் அந்தப் பெண்மணியும் இறந்திருக்கலாம் அல்லவா? இதை எல்லாம் நினைச்சுக் கூடப்பார்க்காமல் எப்படி மனைவியைக் கொல்லுவார்? பேத்தல்!

      நீக்கு
    8. // அந்த முதல் ஜோக் சாஸ்திரிகள், என்னனே புரியலை, படிக்க முடியலை. அடுத்ததைத் தனியாக் கொடுத்தாப்போல் இதையும் கொடுத்திருக்கலாமோ? //

      கொடுத்துட்டேன்! இங்கேயும்...

      "என்னடா இது..  நம்ம வாத்தியார் கல்யாண காரியத்தை கவனிக்காம என்னமோ எழுதிக்கிட்டு இருக்கார்?"

      "கல்யாணத்துக்கு யார் யார் வந்திருக்காங்கன்னு அட்டெண்டன்ஸ் எடுத்துக்கிட்டு இருக்கார்"

      நீக்கு
    9. // இதை எல்லாம் நினைச்சுக் கூடப்பார்க்காமல் எப்படி மனைவியைக் கொல்லுவார்? பேத்தல்! //

      விஞ்ஞானத்தில் ஞானி. பொது வாழ்வில் அஞ்ஞானி!

      நீக்கு
  35. பஜ்ஜி, போண்டா, உளுந்து வடை - வரிசை நீண்டு கொண்டே போகிறதே.... நடைப்பயிற்சியில் இவற்றைப் பார்த்து ஈர்க்கப்படுவது பலருக்கும் நடக்கிறது. உங்களைப் போல ஒருவர் எங்கள் அலுவலகத்தில் உண்டு! அவர் குறித்தும் எழுத நினைத்திருக்கிறேன்....

    படத்திற்கான கவிதை - குறிப்பிட்டதற்கு நன்றி.

    மற்ற பகுதிகளும் படித்தேன் - ஜோக்ஸ் கவர்ந்தது! நாய் சாப்பிடும் தட்டு - முன்னரும் இது போன்ற சில ஜோக்ஸ் பார்த்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வெங்கட்.  நன்றி.  நீங்கள் எழுதப் போவதைப் படிக்க ஆர்வமாய் இருக்கிறேன்.  கவிதை எழுத ஒரு படம் கொடுத்ததற்கு நன்றி!

      நீக்கு
  36. ///தேகங்கள்
    ஒன்றிரண்டு கடந்ததுண்டு
    மனம் சில்லென்று சில
    போது சிலிர்த்ததுண்டு///

    இதே பொழப்புத் தானோ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹிஹிஹி...   அவன் ரௌடி பாஸ்...   ஆனால் கவிஞர் அந்த இடத்தில் கதாநாயகனின் இமேஜை டாமேஜ் செய்து விட்டார்தான்!

      நீக்கு
  37. தேகங்கள்
    ஒன்றிரண்டு கடந்ததுண்டு
    மனம் சில்லென்று சில
    போது சிலிர்த்ததுண்டு

    தேவாரம் திருப்புகழ்..ந்னு அலைகிற
    மனசுக்கு இதெல்லாம் தேவையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேவை இல்லைதான்.  அது ஆற்றின் மறுகரை!

      நீக்கு
  38. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  39. கவிதை ஓகே ரகம். நீதிமன்றத் தீர்ப்பு குமட்டுகிறது. பிரபஞ்சன் பற்றி முன்னாடியே படிச்சிருக்கேன். பாலாவே கொஞ்சம் அவரை வைத்தே படங்கள் எடுத்திருப்பார்னு நினைக்கும்படி இருக்கார்னு தோணும். விக்ரம் மன நோயாளியாக நடிச்ச அந்த ஒரு படம்! அதில் ஆரம்பிச்சது தான் பிராமணப் பெண்ணைத் துரத்தித் துரத்திக் காதலிப்பதுனு நினைக்கிறேன். தெரியாத்தனமா அந்தப் படத்தைப் பார்த்துட்டு அன்னிக்குப் பூராக் கடுப்பில் இருந்தேன். :((((

    பாலு மகேந்திராவை விட இயக்குநர் மகேந்திரனையும் அவர் படங்களையும் ரொமப் பிடிக்கும். அதிலும் உதிரிப்பூக்கள் படம். அவர் தேர்வில் நடிச்ச அந்த நடிகை அஸ்வினியா? அவர் நடிப்பும் வெகு இயல்பு. வீடு படம் மகேந்திரனா? பாலு மகேந்திராவா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீடு பாலு மகேந்திரா.  நீங்கள் சொல்லி இருப்பது சுவாரஸ்யமாக இருந்தாலும் மகேந்திரன் வேறு ரகம்.  பாலு மகேந்திரா வேறு ரகம்.

      நீக்கு
    2. மகேந்திரன் உயர்ந்த தரம். பாலு மஹேந்திரா ஜன ரஞ்சகம். ஆனால் காமிராவைக் கையாளுவதில் பாலு மஹேந்திரா தனி ரகம்.

      நீக்கு
  40. நான் வாழைஈக்காய் பஜ்ஜி நீளமாகத் தான் போட்டுக் கொண்டிருந்தேன். இன்று உபயோகித்த எண்ணெயை மறுநாளும் வேறே ஏதேனும் செய்து பயன்படுத்திட்டுப் பின்னரும் மிச்சம் இருந்தால் வேலை செய்யும் பெண் வாங்கிக் கொள்வதால் அவங்களுக்குக் கொடுத்துடுவேன்.

    அமர்க்களம் படம் பார்க்கலைனாலும் அஜித், ஷாலினி காதல் பற்றி அறிந்திருக்கேன். இன்றைய பாடலும் அமர்க்களமாக இருந்தது.

    பாலு மஹேந்திரா சொந்த மனைவியை மதிக்காமல் ஷோபா, மௌனிகானு மேலே கல்யாணம் செய்துட்டே இருந்தார் இல்லையோ? அப்புறமா எப்படி அவர் மனைவி சகஜமாகப் பேச முடியும்? ஆண்கள்னாலே எப்படி வேணாலும் இருக்கலாம்னு நினைப்புப் போல

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாலுமகேந்திரா பற்றி நீங்கள் சொல்லி இருப்பது மிகவும் சரி.  கீதாவும் இதையே சொன்னார்.   அமர்க்களம் பாடலை நீங்கள் ரசித்தது மகிழ்ச்சி.  வாழைக்காய் நீள பஜ்ஜி நாங்கள் வீட்டில் செய்தது இல்லை.  அது சரி, அதற்கு வாணலியும் ஒத்துழைக்க வேண்டாமா?!

      நீக்கு
    2. வாணலிக்கெல்லாம் பஞ்சமே இல்லை. இப்போத் தான் போன ஆகஸ்டில் இங்கே வரதுக்கு முன்னால் இரண்டு, மூன்று இரும்பு வாணலிகள் தானம் செய்தேன், சீனாச்சட்டியிலும் பெரீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈசாக 3 இருந்தது. ஒண்ணை மட்டும் வைச்சிருக்கேன். சின்னது ஒண்ணு வைச்சிருக்கேன். தூக்கவே முடியாது.

      நீக்கு
  41. எனக்குத் தெரிஞ்சு பிரபஞ்சனுக்கு இரு மனைவியர். அதாவது அவருடன் எழுத்தைப் பற்றிப் பேச ஒருத்தர் பின்னால் அவர் கல்யாணம் செய்திருப்பார் போல. சிந்துபைரவிப் பாடகர் மாதிரி! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். பாலகுமாரனும் அப்படித் தான் சால்ஜாப்புச் சொல்லுவார். அதிலும் முதல் மனைவிக்கு அவ்வளவாய் ரசிகத் தன்மை இல்லை என்பதை அவர் கதைகளின் மூலம் சொல்லி இருக்கார். அகிலன் முதல் ஜெயகாந்தன் எனப் பல எழுத்தாளர்கள் இப்படித் தான். பெண் எழுத்தாளர்கள் தவிர்த்து. இதைச் சொல்லாமல் இருக்க முடியலை. சொல்ல வேண்டாம்னு நினைச்சுப் பின்னர் சொல்லி இருக்கேன். மன்னிக்கவும். :(((

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எழுத்தாளர்கள் உணர்ச்சி மிகுந்தவர்கள் போல...

      நீக்கு
  42. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  43. இன்றைய தகவல்கள் பகுதி படித்து அறிந்தோம்.

    ஜோக்ஸ் சாப்பிடுகிறதட்டு ..ஹா...ஹா.

    இடுப்பு சாவிக் கொத்து.... சிரிக்க வைத்தது.

    பதிலளிநீக்கு
  44. உடல் நலத்துக்கு நடைபயிற்சி மன நலத்துக்கு பஜ்ஜியா?
    அடிக்கடி சாப்பிடாமல் உடல் நலத்தைப்பார்த்து கொள்ளுங்கள்.
    பாஸ் சொல்வதை நல்லது என்றால் கேட்க வேண்டும்.
    காமடி செய்யக்கூடாது.
    பஜ்ஜி படம் அருமை.

    மாயவரத்தில் இருக்கும் போது ஒவ்வொரு கிருத்திகைக்கும் வைத்தீஸ்வரன் கோயில் போவோம். பகலில் போனால் பஜ்ஜி கிடைக்காது.

    மாலை நேரத்தில் போனால் கோயில் வாசலில் பஜ்ஜி, உளுந்தவடை விற்பார்கள்.சுட சுட போட்டு தருவார்கள் சட்னியோடு சுவையாக இருக்கும் வாங்கி சாப்பிடுவோம்.

    மழை பெய்தால் வெங்காய் பஜ்ஜி. வாழைக்காய் பஜ்ஜி, உருளை பஜ்ஜி என்று செய்ய சொல்வார்கள். தூள் பஜ்ஜி மிகவும் பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தினமுமா பஜ்ஜி சாப்பிடப் போகிறோம்?  அதுவும் சமீபத்தில் நடைபபயிற்சியே நின்று விட்டது!!  இன்னும் சுத்தம்.  

      தூள் பஜ்ஜி வேறுவகை.  அது இன்னும் கூட எண்ணெயுடன் இருக்கும்.  அதற்கு பக்கோடா ஓகே என்று தோன்றும்!

      நீக்கு
    2. எண்ணெயே இல்லாமல் தூள் பஜ்ஜி பண்ணுவேனே! நல்லாவே இருக்கும். முன்னெல்லாம் கோபு ஐயங்கார் கடையில் மத்தியானம் இரண்டு மணிக்கு வெள்ளையப்பம் போட்டால் சரியா நாலு மணிக்குத்தூள் பஜ்ஜி போடுவாங்க. அருமையா இருக்கும். வட மாநிலங்களில் எல்லாம் இந்தக்ட் தூள் பஜ்ஜி தான் பஜியா என்ற பெயரில் நிறுத்துக் கொடுப்பாங்க. எண்ணெயே இருக்காது. ரொம்பவே நன்றாக இருக்கும். கால் கிலோ வாங்கினால் நாங்க நாலு பேரும் சாப்பிடும்படி காணும்.

      நீக்கு
  45. உங்கள் கவிதை வெங்கட் பதிவில் படித்தேன் நன்றாக இருக்கிறது என்று கருத்தும் சொன்னேன் இப்போதும் படித்தேன்.
    பாடல் பதிவு நன்றாக இருக்கிறது. பாரதியார் பாடல் கேட்டேன் அருமையாக பாடினார்கள் இருவரும்.


    விகடன் ஜோக்ஸ் என்று சிரிக்க வைக்க முயன்று இருக்கிறார்கள் சிரித்து இருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா..  ஹா...  அப்போது சிரிக்கா விட்டாலும் மனம் லேசாகி இருப்பார்கள் இல்லையா?  66 ம் வருடம்!

      கவிதையை நீங்களும் அங்கேயும் பாராட்டி இருந்தீர்கள்.  நன்றி கோமதி அக்கா.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!