"அது ஏன்டா எப்பவும் முதுகுல கைக்கு எட்டாத தூரத்துலயே அரிக்குது? மேலேயிருந்து ட்ரை பண்ணினாலும் எட்டலை, கீழேயிருந்து ட்ரை பண்ணினாலும் எட்டலை! கரெக்ட்டா நடு சென்டர்ல அரிக்குது. கொஞ்சம் சொறிஞ்சு விடேன்.."

பஞ்சாபின் ஜிந்த் சமஸ்தானத்தைச் சேர்ந்த மகாராஜா ரன்பிர் சிங் ராஜேந்திர பகதூர் இரண்டாம் வகை. விடிய விடிய முடிந்தவரை குஜால் கூத்தடித்துவிட்டு, விடியலில்தான் படுக்கையில் விழுவார். ஆனால், அவர் தூங்க ஆரம்பித்த நேரத்தில் இருந்து பணியாளர்களுக்கு கிலி பிடித்துவிடும். எப்போது எழுவார் எனத் தெரியாது. எழும் நேரத்தில் இன்னென்ன விஷயங்கள் இம்மி பிசகாமல் சரியாக இருக்க வேண்டும் என்பது ராஜ கட்டளை.
குறிப்பிட்ட பணிப் பெண்கள், குறிப்பிட்ட இடங்களில் அமர்ந்து பதமாக அவரது கால்களைப் பிடித்துவிட்டுக்கொண்டிருக்க வேண்டும். சில குறிப்பிட்ட பணிப்பெண்கள் அவரது தலைமாட்டில் நின்று, குறைவான வால்யூமில் கோரஸாக சில பாடல்களை (மட்டுமே) பாடிக்கொண்டிருக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட பணிப்பெண், எவ்வளவு மணி நேரமானாலும் சரி, 'சூடான' தேநீர்க் கோப்பையோடு காத்திருக்க வேண்டும்.
இந்தப் பணிப்பெண்கள் ஆள் மாறவோ, இடம் மாறவோ கூடாது. மகாராஜா பள்ளியெழுச்சி ப்ரேக்ஃபாஸ்ட்டில் நிகழலாம்; லன்ச்சில் அமையலாம்; அல்லது சாவகாசமாக சாயங்காலம் நிகழலாம். வேறு வழி இல்லை, பணிப்பெண்கள் தேவுடு காத்தே தீர வேண்டும்... ஆறாத தேநீருடன். போனால் போகிறது என மெதுமெதுவாகக் கண்கள் திறக்கும் ரன்பிர் சிங், தன் பார்வையால் சுற்றியிருக்கும் பணிப்பெண்களை நோட்டமிடுவார். அவர்கள் என்னதான் களைப்பாக இருந்தாலும் அப்போது பூத்த மலரைப்போல, வளையோசை கலகல மெட்டில் புன்னகைத்தே தீர வேண்டும். மகாராஜா எழுந்து உட்காரும் வேளையில் நொடி பிசகாமல் ஆவி பறக்கத் தேநீர் நீட்டப்பட வேண்டும்.
ரன்பிர் சிங், தேநீரை உறிஞ்ச ஆரம்பிக்கும் வேளையில், அரண்மனை ஆஸ்தான ஜோதிடர் பண்டிட் கரன் சந்த், மகாராஜாவின் உச்சி குளிர நான்கைந்து நிமிடங்கள் வாழ்த்தித் துதிபாடிவிட்டு, அன்றைய தினப்பலன்களையும் சொல்வார். 'நான்கில் கேது, ஒன்பதில் குரு இருவர் பார்வையும் நீசபங்க ராஜயோகப் பார்வையாக இருப்பதால், சத்ரு ஜெயம், ஆரோக்கிய விருத்தி, அனுகூலத் திருப்பங்கள் உண்டாகும்...' இப்படி ரன்பீர் சிங்கின் பள்ளியெழுச்சிப் பொழுதில் ஏதாவது ஓரிரு குறைகள் நேர்ந்துவிட்டால் அவ்வளவுதான், அன்றைக்கு அரண்மனைப் பணியாளர்களுக்கான ஒட்டுமொத்த தினப்பலன் மரண பயம்.
இன்னொரு நவாப் இருந்தார். அவரது காலைப் பொழுதே மிகவும் வித்தியாசமாகத் தொடங்கும். காலை எழுந்ததுமே ஒப்பனை. அதுவும் இப்படி எல்லாம்கூட ஒப்பனை செய்துகொள்ள முடியுமா என பெண்களே வெட்கி, வெம்பி, வேதனைப்பட்டு தலைகுனியும் அளவுக்கு, தலை முதல் அடி வரை உச்சபட்ச ஒப்பனை. ஆம், அந்த நவாப் ஒப்பனை வெறியர். அவர் பெயர் சாதிக் முகமத் கான் நான்காம் அப்பாஸி. இந்திய சமஸ்தானங்களில் ஒன்றாக இருந்த பஹவல்பூரை (தற்போது பாகிஸ்தானில் ஒரு மாவட்டம்) 1866 - 1899 காலத்தில் ஆட்சி செய்தவர்.
"அதே ரீஸன்தான்பா.. கை எட்டாததால அங்க மட்டும் சரியா தேச்சு குளிக்க மாட்டேங்கறே.."
"ஏதாவது சொல்லு.. சரி கொஞ்சம் சொறிஞ்சு விடேண்டா.. அரிக்குது ரொம்ப.. குளிக்கும்போது அம்மாவை முதுகு தேச்சு விடுன்னாலும் 'பசங்களை வச்சுக்கிட்டு சரஸமா'ன்னு
தொடப்பத்தைத் தூக்கறா... சரசமாடவாடா கூப்பிட்டேன்.. சீக்கிரம் வா.. கொஞ்சம் அந்த சீப்பை எடுத்து.."
"நை நை ங்காதப்பா.. ஆபீஸ் கால் பேசிக்கிட்டிருக்கேன். சொறிஞ்சு விடு சொறிஞ்சு விடுன்னு.. என்ன நினைப்பாங்க?"
"ஏண்டா அவர்களுக்கெல்லாம் அரிக்காதா?"
"சும்மா கம்முனு இருப்பா.. அந்தாண்ட போ.. அம்மாவக் கேளு"
"அம்மாவைத்தானே? அடப்போடா... ஏண்டி.. ச்சே.. ஏன்பா.... இங்கே முதுகு சொரிய ஒண்ணு வாங்கி வச்சிருந்தேன் பார்த்தியா?"
"ஆமாம்.. எனக்கு அதுதான் வேலை.. இன்னும் வாஷிங் மெஷின் போடல.. நேத்து காயப்போட்டு எடுத்து வச்ச துணிய மடிக்கல... முதுகு சொரியணுமாக்கும் முதுகு...?"
"இவங்க அப்பாவும் இப்படிதான்.. முதுகை சொறி,காலை மிதின்னு.. அப்பாவுக்கு பிள்ளை தப்பாம பொறந்துருக்கு..."
".பாவம்மா. அப்பாவை ஒண்ணும் சொல்லாத.."
"நான் கால் மிதிக்கச் சொல்லி எத்தனை வருஷமாச்சு.. இப்பல்லாம் கேக்கறதே இல்லை. முதுகுதான்... அதுவும் எப்பவாவதுதானே? கொஞ்சம் வாடா..."
".போப்பா.. நீ போதும்னே வேற சொல்ல மாட்டே... இங்கேயிருந்து கால் பேசவே முடியலை.. நான் லாப்டாப்பை எடுத்துக்கிட்டு ரூமுக்கு போறேன்.."
ச்சே.. வச்சிருந்த சொரியானையும் காணோம்.. யாரும் உதவிக்கும் வர மாட்டேங்கறாங்க.. அர்பன் ஆப் ல முதுகு சொரிய வருவாங்களான்னு கேட்டுப் பார்க்கணும்!...
==============================================================================================
விகடன் 2008 இதழில் சுவாரஸ்யமாக ஒரு தலையங்கம்... நம்ம போலீஸ்ல சிலபேர் அப்பவே அப்படிதான்!
வணக்கம்
சமீபத்துச் சம்பவங்கள் சிலவற்றைப் பாருங்களேன்..!
ரோந்து போய்க்கொண்டு இருந்த கோவை போலீஸாரைக் கட்டிப்போட்டு துப்பாக்கியைப் பறித்துக்கொண்டு ஓடியது ஒரு கும்பல். இது சம்பந்தமாக ஒரு ஆசாமியைப் பிடித்து, 'ராஸ்கல்! எப்படிடா கொள்ளை அடிச்சீங்க?" என்று போலீஸார் மிரட்ட... அவனும் பயபக்தியாக கொள்ளை ஸ்தலத்துக்கு கூட்டிச் சென்று நடித்துக் காட்டினான். 'இந்தப் பக்கமா வந்தோமா... இங்கே கட்டிப் போட்டோமா... இதோ, இந்தச் சுவரைத் தாண்டிக் குதிச்சு... இப்படித் தான் ஓடினோம்...' என்றபடியே விட்டான் ரேஸ்! போனவன் போனவனே..!
அடுத்ததும் கோவை குசும்புதான்... கிராமத்தில் ரெய்டு போன போலீஸ், 'எங்கெல்லாம் ஊறல் பானை புதைச்சிருக்கு? யாராவது வந்து அடையாளம் காட்டுங்க!' என்று மிரட்டியது. ஊர்க்காரர்கள் பயந்து நடுங்க... ரொம்பவே உதறிய ஒருவனை வம்படியாகக் கூட்டிப் போனார் கள். முதலில் அலையவிட்டவன், கடைசியாகக் காட்டிய சில இடங்களில் ஊறல் பானை இருக்கவே செய்தது! அதையெல்லாம் உடைத்துவிட்டு, அந்த ஆளையும் வழியனுப்பிய போலீஸ் கம்பீரமாக ஊருக்குள் வர... 'அதெல்லாம் சரி சார்... சாராயம் காய்ச்சறவனைக் கூட்டிக்கிட்டுப் போனீங் களே... அவன் எங்கே?' என்று ஊரார் கேட்டபோதுதான், போலீஸுக்கு தங்கள் 'திறமை' புரிந்தது!
திண்டுக்கல்லிலும் திண்டாட்டம்... டிமிக்கி கொடுத்த இரு குற்றவாளிகளை நைஸாகப் போய் பிடிப்பதற்காக மஃப்டி உடையில் போனது போலீஸ். மாறுவேஷ போலீஸை மறுநிமிஷமே கண்டுபிடித்துவிட்ட குற்றவாளிகள், 'ஐயையோ... யாரோ எங்களைக் கடத்த வர்றாங்க!' என்று கூச்சல்போட... ஊரே கூடி போலீஸுக்கு பரேடு நடத்திவிட்டது!
இது எப்படி இருக்கு?
சமீபத்தில் சிக்கிய மயக்க பிஸ்கட் ரயில் திருடர்களையும் வழக்கப்படி 'நடித்துக்காட்ட'ச் சொன்னதாகச் செய்தி வந்தது. நல்லவேளை அவர்கள் பிஸ்கட் ஊட்ட... போலீஸ் 'ஆ' காட்ட... இன்னொரு கூத்து அரங்கேறாமல் போனதே!
என்னங்க... 'என்னை வெச்சி காமெடி கீமெடி பண்ணலியே..?" என்று வடிவேலு குரல் கேட்குதா..?
என்றும் உங்களுக்காக,
12/03/2008
பா.சீனிவாசன்,
பதிப்பாளர்.
===================================================================================
குறுக்கெழுத்துப் போட்டி - கன்னி முயற்சி! மிகவும் எளிமையாக அமைந்திருப்பதை நினைத்துக் கொண்டிருக்கிறேன். உண்மையா இல்லையா என்று இன்று தெரிந்து விடும்!
1 எம் ஜி ஆர் படம் வலி போய்விட்டது. (4)
2. கவுண்டமணி பாஷை (4)
3. கொனஷ்டை என்றும் சொல்லலாம்.
4. பயிர்கள் வளரத் தேவை (2)
9. தாயின் வயிற்றில்... (2)
,
மேலிருந்து கீழ்
1. மேற்குத் தொடர்சி மலை (5)
5. ஷோபா பற்றிய படம் என்பார்கள் முதல் வார்த்தை மட்டும் . (5)
6. கழகத்துக்கு முன் வார்த்தையில் க் அதிகம்! (5)
7. புளிப்பு (2)
8. கள்ளி
விடை (தேவைப்பட்டால்) 'திங்க' பதிவில்....!
=======================================================================================
கொஞ்சம் கேள்விப்பட்ட கதைதான். அல்லது படித்த கதை? கதையல்ல, நிஜம்!
====================================================================================
இது முன்பு திருமதி சுஜாதா யு டியூபுக்கும், தினகரனுக்கு கொடுத்த பேட்டியிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. இது அவர் மறைந்த உடனேயே விகடனுக்கு கொடுத்த பேட்டி. சுஜாதா நினைவு நாளன்று ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருந்தேன்.
'சுஜாதா பற்றி சுஜாதா!'
"சாயங்காலம் ஏழு மணியில இருந்து காலைல ஏழு மணி வரை ஒரு லிட்டர் தண்ணீர் தான் குடிச்சிருப்பார். ஆனா 200 மில்லிதான் வெளியேறித்து. 800 மில்லி உடம்புலயே தங்கிடுத்து. ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ்ல கூட்டிப் போனோம். இதுக்கு முன்னாடிலாம் சந்தோஷமா ஆஸ்பத்திரிக்கு வர்றவர், இந்தத் தடவை ஏனோ .மாட்டேன்னு அடம் பண்ணார். அட்மிட் பண்ணினதும் தூங்கிண்டே இருந்தார். என்ன கேட்டாலும், 'ஊம்... ஊம்!'னு மட்டும் சொன்னார். திடீர்னு 'நீ யாரு?'ன்னு கேட்டார். 'ஏன் இப்படிப் பேசுறீங்க.. என்ன பண்றது சொல்லுங்கோ!'னு நான் பதறி, டாக்டர்களை அழைச்சுண்டு வந்தேன். வாய் கோணித்து.. ஸ்ட்ரோக்குன்னாங்க, கை வரலைன்னதுமே, 'ஐ யம் ட்ராப்டு, எனக்கு இதெல்லாம் புடிக்கலை. வீட்டுக்குக் கொண்டு போ. இனி என்ன இருக்கு சொல்லு'னு புலம்ப ஆரம்பிச்சுட்டார். "அப்டிலாம் சொல்லாதேள். நான் இருக்கேன்ல... நீங்க சொல்லச் சொல்ல... நான் எழுதித் தர்றேன்"னேன். அவருக்குக் கேட்கலியா, கேட்க விரும்பலையான்னு தெரியலை!
ஒரு நிமிஷம்கூட அவரை விட்டுட்டு இருந்ததில்லை. நன்னாத்தான் பார்த்துண்டேன். அவருக்கே அவருக்குனு பார்த்துப் பார்த்துச் சமைப்பேன். ஆனாலும் தப்பிச்சு ஓடிப் போய் எங்காவது போண்டா தின் னுட்டு வந்துருவார். கேட்டா, 'எத்தனை நாள்தான் உப்புச்சப்பில்லாமச் சாப்புடுறது. இந்த 75 கலோரி என்னை ஒண்ணும் பஸ்பமாக் கிடாது"னு சிரிப்பார். நல்ல மனுசன். என்னை நல்லாப் பாத்துக்கிட்டார்.
சின்ன வயசுல எல்லாம் அவ்வளவா காசு பணம் வரலை. ஆனா, ரிட்டயர் ஆனப்புறம் ரொம்ப ஷேமமாப் பார்த்துக்கிட்டார். என்னை ஜப்பானீஸ் கிளாஸ்லாம் சேர்த்துவிட்டார். அங்க சின்னச் சின்னப் பொண்ணுங்கள்லாம் நிறைய மார்க் வாங்குவா. இதைச் சொன்னா, அவாகூட நீ எப்படிப் போட்டி போடலாம். அவாளுக்கெல்லாம் யங் ப்ரைன். உனக்குக் கொஞ்சமே கொஞ்சம் வயசாயிடுத்து இல் லியான்னுவார். அவர் அளவுக்கு எனக்கு பிராட் மைண்ட் கிடையாது. ஒருவேளை அவர் அளவுக்கு இன்டெலிஜென்ட்டா இருந்தா, எனக்கும் பிராட் மைண்ட் இருந்திருக்கும். அவருக்கு உடம்பு படுத்த ஆரம்பிக்கவும் நான் கிளாஸுக்குப் போறதில்லை. அப்படியும் நடுவில் ரெண்டு நாள் அனுப்பினார். இனி எனக்கு என்ன இருக்கு, ஆனாலும் போகணும். அவர் இருந்தா, அப்படித்தான் சொல்வார். ஆனா, இப்போ அவர் இல்லையே!
எந்த நேரமும் ஏதாவது படிச்சுண்டு, பார்த்துண்டே இருப்பார். படுக்கை முழுக்க புஸ்தகங்களா இருக்கும். அதுக்கு இடையில இடம் பண்ணிண்டு படுத்துக்குவார். நடுராத்திரியில நாலு புஸ்தகங்களை மாத்தி மாத்திப் படிச்சுண்டு இருப்பார். ராத்திரி ரெண்டு மணிக்கு எந்திரிச்சு கிரிக்கெட் பார்த்துண்டு இருப்பார். 'உடம்பைப் பார்த்துக்காம இந்த அப்பா ஏன் இப்படிப் பண்றார்?''னு பசங்க கோச்சுக்குவாங்க. 'இப்படில்லாம் இல்லேன்னாதான் அவருக்கு உடம்பு படுத்தும்'னு சொல்வேன்.
இதுக்கு முன்ன ஹாஸ்பிடலுக்குப் போனப்பல்லாம் கொஞ்ச நேரம் இருப்பார், வந்துருவார். அப்புறம் அதைப் பத்தியே ஒரு கதை எழுதிடுவார். ஆனா, இப்ப அவர் இறந்த கதையை யார் எழுதுறது..?
ஒரு தடவை அவருக்கு மாத்திரை கொடுக்க லேட் ஆயிடுத்து. பதறி ஓடி வந்து கொடுத்தா. 'ஒரு வாய் மாத்திரை சாப்பிடலேன்னா, நான் செத்துட மாட்டேன். நீ ஏன் வொர்ரி பண்ணிக்கிற..?'ன்னாரு.
தண்ணி, பேப்பர், ரிமோட், சாப்பாடுனு எது கொடுத்தாலும், சின்னதா 'தேங்க்ஸ்' சொல்வார். 'எதுக்கு என்கிட்டயும் தேங்க்ஸ்?'னு கேட்டா. உன்கிட்டயும் தேங்க்ஸுக்கு ஒரே அர்த்தம்தானே!'னு சிரிப்பார்.
ஐயோ! ஐ ஃபீல் கில்ட்டி... நான் அவரை இன்னமும் நல்லபடியா கவனிச்சுண்டு இருந்திருக்கணும்! என்னை எப்படில்லாம் பார்த்துண்டார். என் பேர்ல எழுதுறதுக்கு அவருக்கு எவ்வளவு பெரிய மனசு இருந்திருக் கணும். நான் பதிலுக்கு அவருக்கு என்ன செஞ்சுருக்கணும். நான் இருக்குற வரை, அவரை போஷிச் சிருக்க வேண்டாமா..!
'பாடி எப்ப வீட்டுக்கு எடுத்துட்டு வருவேள்?”னு ஒருத்தர் கேட்டா. ஆமா, அவர் இப்ப 'பாடி' ஆயிட் டாருல்ல... இனி அவர் வெறுமனே 'பாடி' மட்டும்தானா..? அவர் என் சுஜாதா இல்லையா..?!"
சுஜாதாவின் இந்தக் கேள்விக்கு அந்த 'சுஜாதா' பதில் சொல்லி இருக்கலாம்!
-கி.கார்த்திகேயன் - ஆனந்த விகடன் - ஆனந்த விகடன் - 12- 03 - 08
===================================================================================
ஜெ... யின் ஆரம்ப கால ஓவியங்கள் சில..

==========================================================================================
லக்ஸ் விளம்பரத்தில் ஜெயலலிதா.. இன்னொரு ஆரம்பகால ஜெ...
=========================================================================================
இதுதான் ராஜவாழ்க்கை - முகில்
வரலாறு
கொக்கரக்கோ...கோ என சேவல் சாதகம் பண்ணும் அதிகாலையில் ஒரு மகாராஜா என்ன செய்துகொண்டிருப்பார்? சூரிய நமஸ்காரம், யோகா, உடற்பயிற்சி... சேச்சே, ஏதோ ஒன்று இரண்டு 'உத்தம' மகாராஜாக்கள் அப்படி வேண்டாத வேலை செய்திருக்கலாம். அசல் ..-9001 மகாராஜா எனப்படுபவர், அந்த நேரம் குப்புறப்படுத்து, குதூகலமாகத் தூங்கிக் கொண்டிருப்பார் அல்லது நள்ளிரவு எல்லாம் குடித்துக் கொட்டமடித்துவிட்டு அப்போதுதான் தூங்கவே ஆரம்பித்திருப்பார்.
பஞ்சாபின் ஜிந்த் சமஸ்தானத்தைச் சேர்ந்த மகாராஜா ரன்பிர் சிங் ராஜேந்திர பகதூர் இரண்டாம் வகை. விடிய விடிய முடிந்தவரை குஜால் கூத்தடித்துவிட்டு, விடியலில்தான் படுக்கையில் விழுவார். ஆனால், அவர் தூங்க ஆரம்பித்த நேரத்தில் இருந்து பணியாளர்களுக்கு கிலி பிடித்துவிடும். எப்போது எழுவார் எனத் தெரியாது. எழும் நேரத்தில் இன்னென்ன விஷயங்கள் இம்மி பிசகாமல் சரியாக இருக்க வேண்டும் என்பது ராஜ கட்டளை.
என்னென்ன?
குறிப்பிட்ட பணிப் பெண்கள், குறிப்பிட்ட இடங்களில் அமர்ந்து பதமாக அவரது கால்களைப் பிடித்துவிட்டுக்கொண்டிருக்க வேண்டும். சில குறிப்பிட்ட பணிப்பெண்கள் அவரது தலைமாட்டில் நின்று, குறைவான வால்யூமில் கோரஸாக சில பாடல்களை (மட்டுமே) பாடிக்கொண்டிருக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட பணிப்பெண், எவ்வளவு மணி நேரமானாலும் சரி, 'சூடான' தேநீர்க் கோப்பையோடு காத்திருக்க வேண்டும்.
ஜிந்த் மகாராஜா ரன்பீர்சிங்
இந்தப் பணிப்பெண்கள் ஆள் மாறவோ, இடம் மாறவோ கூடாது. மகாராஜா பள்ளியெழுச்சி ப்ரேக்ஃபாஸ்ட்டில் நிகழலாம்; லன்ச்சில் அமையலாம்; அல்லது சாவகாசமாக சாயங்காலம் நிகழலாம். வேறு வழி இல்லை, பணிப்பெண்கள் தேவுடு காத்தே தீர வேண்டும்... ஆறாத தேநீருடன். போனால் போகிறது என மெதுமெதுவாகக் கண்கள் திறக்கும் ரன்பிர் சிங், தன் பார்வையால் சுற்றியிருக்கும் பணிப்பெண்களை நோட்டமிடுவார். அவர்கள் என்னதான் களைப்பாக இருந்தாலும் அப்போது பூத்த மலரைப்போல, வளையோசை கலகல மெட்டில் புன்னகைத்தே தீர வேண்டும். மகாராஜா எழுந்து உட்காரும் வேளையில் நொடி பிசகாமல் ஆவி பறக்கத் தேநீர் நீட்டப்பட வேண்டும்.
இன்னொரு நவாப் இருந்தார். அவரது காலைப் பொழுதே மிகவும் வித்தியாசமாகத் தொடங்கும். காலை எழுந்ததுமே ஒப்பனை. அதுவும் இப்படி எல்லாம்கூட ஒப்பனை செய்துகொள்ள முடியுமா என பெண்களே வெட்கி, வெம்பி, வேதனைப்பட்டு தலைகுனியும் அளவுக்கு, தலை முதல் அடி வரை உச்சபட்ச ஒப்பனை. ஆம், அந்த நவாப் ஒப்பனை வெறியர். அவர் பெயர் சாதிக் முகமத் கான் நான்காம் அப்பாஸி. இந்திய சமஸ்தானங்களில் ஒன்றாக இருந்த பஹவல்பூரை (தற்போது பாகிஸ்தானில் ஒரு மாவட்டம்) 1866 - 1899 காலத்தில் ஆட்சி செய்தவர்.
காலைக்கடன்களை எல்லாம் கடகடவென முடித்துவிட்டு, ஆளுயரக் கண்ணாடி முன் சென்று நவாப் நிற்கும் வேளையில், சகல சௌந்தர்ய ஏற்பாடுகளுடனும் 'பல பேர் கொண்ட ஒப்பனைக் குழுவினர்' தயாராக இருக்க வேண்டும். அங்கே ஒப்பனைப் படையெடுப்பு ஆரம்பமாகும். முதலில் உடையலங்காரம். ரகரகமான மஸ்லின் கால்சட்டைகள், வகைவகையான முழுநீள பட்டு ஜிப்பாக்கள், தகதகவென வெல்வெட் மேலங்கிகள். அவற்றில் நவாப் தேர்ந்தெடுக்கும் உடை, அவர் மேலேறும். அவருக்குச் சற்றே நீண்ட கூந்தல். ஆக, உடையலங்காரத்துக்குப் பின் சிகை அலங்காரம், அடுத்து நகை அலங்காரம், பின் மிகை அலங்காரம். நவாபுக்குத் திருப்தி உண்டாகும் வரை ஒப்பனை மணிக்கணக்கில்கூட நீளும். ஒரு சில சமயங்களில் ஒப்பனை செய்யும் பணியாள், களைப்பில் மயங்கி விழுந்ததும் உண்டு.
நவாப் அசரவே மாட்டார் கிண் என்று நிற்பார். அவர் உடலில் எங்கு எல்லாம் அணிய முடியுமோ அங்கு எல்லாம் நகை ஜொலிக்கும். அத்தனையும் விதவிதமான, நவாபுக்காகவே வடிவமைக்கப்பட்ட தனித்துவ ஆபரணங்கள். இறுதியாக, வைரமும் மரகதமும் பதிக்கப்பட்ட ஒன்பது பவுண்ட் எடையுள்ள தங்கக் கிரீடம் தலையேறும். ஏதாவது அவசர காரியம் என்றாலும்கூட, பல மணி நேர ஒப்பனையில் திருப்தி ஏற்பட்ட பிறகே நவாப் நகர்வார். அப்படிப்பட்ட அதகள் நவாப், தான் இரவில் படுத்து உறங்குவதற்காகவே பிரத்யேக டிசைனில் கட்டில் ஒன்றை பாரீஸில் ஆர்டர் செய்தார். அந்தக் கட்டில் தயாராகி வருவதற்கு முன்பாக, வெவ்வேறு அரண்மனைகளில் எத்தனை விதமான கூத்துகள் எல்லாம் நிகழ்ந்தன என, ஓர் எட்டு பார்த்துவிட்டு வரலாம்.
விகடன் 2016 தீபாவளி மலரிலிருந்து.
இது பின்னர் 'அகம், புறம், அந்தப்புரம் என்னும் பெயரில் பெரிய புத்தகமாக வந்ததது. எங்கள் வீட்டு கிரஹப்ரவேசத்துக்கு என் மாமா KGY இந்தப் புத்தகத்தை எனக்கு பரிசளித்தார். 1000 பக்கஙகள்.















புது ரத்தம் பாய்ச்சிக் கொண்டிருக்கும் வெள்ளியை வரவேற்கிறேன்.
பதிலளிநீக்குவாங்க பானு அக்கா... நன்றி.
நீக்குஹா ஹா ஹா. புது ரத்தம்... முதுகு சொறிவதாலா.? :))
நீக்குஹா.. ஹா.. ஹா... கமலா அக்கா.. சட்டுனு தோணுது உங்களுக்கு!
நீக்குமுதுகு சொறிந்து கொள்வது கஷ்டம்தான். மற்றவர்களிடம் சொன்னாலும் சரியான இடத்தை புரிய வைப்பது பெரும் பாடு. "இன்னும் கொஞ்சம் மேல, கொஞ்சம் கீழ, இங்க இல்ல, இடது பக்கம்.." என்று போராட வேண்டும். சிலர் பிராண்டி விட்டு விடுவார்கள். அவஸ்தை. அதுவும் நான் இப்போது இருக்கும் ஊரில் குளிருக்காக ஸ்வெட்டர் போட்டுக் கொண்டு, அதைக் தாண்டி சொறிந்து கொள்வது ரொம்ப கஷ்டம். இருங்கள், முதுகின் இடது பக்கம் பக்கம் அரிக்கிறது, சொறிந்து விட்டு வருகிறேன்.
பதிலளிநீக்கு// குளிருக்காக ஸ்வெட்டர் போட்டுக் கொண்டு, அதைக் தாண்டி சொறிந்து கொள்வது ரொம்ப கஷ்டம் //
நீக்குஹா ஹா ஹா.. உண்மை.
//முதுகின் இடது பக்கம் பக்கம் அரிக்கிறது, சொறிந்து விட்டு வருகிறேன்.//
ஹா.. ஹா.. ஹா... கொட்டாவி விட்டாலோ கேட்டாலோ, படித்தாலோ நமக்கும் கொட்டாவி வரும் சரி, இதுவுமா?!!
சுகி சிவன் ஜோக், சுஜாதா பற்றி சுஜாதா இரண்டுமே ஏற்கனவே கெட்டது, படித்தது, இருந்தாலும் ரசனைக்குரியது.
பதிலளிநீக்குஜெ.ஓவியமும், ஓவியம் போன்ற ஜெ.யும் அழகு. ஆரம்பகால ஜெ.. படங்களில் மாயா சாயல் அடிக்கவில்லை? குறிப்பாக பெண்களின் முகங்கள்.
அட்டகாசம் செய்திருக்கும் ராஜாக்களின் வாரிசுகள் இப்போது என்ன செய்கிறார்கள் என்று ஏதாவது தகவல் உண்டா?
குறுக்கெழுத்து புதிர் அத்தனை சுலபமாக இல்லை.
ஆம், சுஜாதா முகநூலிலும் பகிர்ந்திருந்தேன். மற்றபடி இதை அப்போது நீங்கள் விகடனில் வாசித்திருந்திருக்கலாம்.
நீக்குஜெ படங்களில் அவர் படங்களின் சாயலே இல்லாமல்தான் இருந்தது ஆரம்பத்தில். கொஞ்சம் கொஞ்சம் 'கல்பனா' என்றொரு ஓவியர் இருந்தாரே, நினைவிருக்கிறதா, அவர் சாயல் இருப்பது போல எனக்குத் தோன்றியது.
ராஜாக்களின் வாரிசுகளின் கொட்டம் அப்புறம் அடக்கப்பட்டு விட்டது என கேள்வி! ராஜாக்கள் என்றில்லை, அதிக பணம் இருந்தாலே இந்த கொட்டங்கள் இருக்கும்தானே!
குறுக்கெழுத்துப் புதிர் சுலபமாக இல்லையா.. ஆ...
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள் அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா.. வணக்கம். பிரார்த்தனைகள்.
நீக்குஹாஹாஹா முதல் பகுதி சிரித்துவிட்டேன் ஸ்ரீராம்....
பதிலளிநீக்குவெள்ளி ப்ரைட்!!!
இப்படியான என் தர்மசங்கடத்தையும் எழுதி வைத்து.....வீட்டில் பெண்களே இல்லையே!!!! ஸோ அப்படியாக எழுதி வைத்த்டதால் போடாமல் அப்படியே கிடக்கு...
அதுவும் எனக்கு தோள்பட்டை வேறு பிரச்சனையா....ஒரு நீட்டக் கை வாங்கி வைச்சிருந்தேன் ஸ்ரீராம் அது குளிக்க்கும் போதும் பயன்படுத்தவும்..முதல்ல ப்ளாஸ்டிக்கில் வாங்கி வைச்சு அது பயன்படுத்தியதும் முதுகில் கொஞ்சம் ரத்தம்... உடனே...வேறு ரப்பரில் வாங்கினேன் ஆனால் அது ..போச்...போயே போச்....
கீதா
வாங்க கீதா... நன்றி. அந்த நீட்ட கை நான் மூன்று வாங்கி வைத்திருக்கிறேன். ஹாலில் ஒன்றுl பெட்ரூமில் ஒன்று, கம்பியூட்டர் கிட்ட ஒன்று என்று!
நீக்குஹா ஹா ஹா... எனக்கு ஒரு பழக்கம். இன்றியமையாத்து, நினைத்த உடன் கிடைக்கணும் என்றவற்றை பல எண்ணிக்கையில் வாங்கி பல இடங்களிலும் வைத்திருப்பேன். சுவர் கடிகாரம், கத்தரிக்கோல், சமீபத்தில் காக்ரோச் ஹிட், கொசு மட்டை..... இப்படி ஒரு லிஸ்ட் (பெல்ட், சார்ஜர்..ஸ்கேல், .) ஒரே இடத்தில் வைக்கலாமே எனக் கேட்பவர்களுக்கு என்னிடம் பதிலில்லை.
நீக்குபதில் இருக்கிறது. மூக்கு கண்ணாடி கூட அப்படிதானே.. ஆங்காங்கே ஒன்றில்லா விட்டால் ஒன்று..
நீக்குஆமாம், செல் எவ்வளவு வைத்திருக்கிறீர்கள்?
இதோடு காலைல கொடுத்த கருத்து வரவே இல்லை. இப்படித்தான் இந்த ஐடி பல சமயங்களில் படுத்துது.
நீக்குநமக்குதான் இந்தப் பிரச்சனை....நாய், பூனைங்கள பாருங்க ஜாலியா சொரிஞ்சுக்கும்!!!! அது போல மாடு பாத்திருப்பீங்க....உரசி உரசி சொரிஞ்சுக்கும். ஹூம் நமக்கு அந்தக் கொடுப்பினை இல்லையே!
என் பெரிய மாமா ட்யூஷன் எடுக்கும் போது முதுகு அரிச்சா உடனே ஸ்கேலை வைத்து சொரிந்து கொள்வார். அது போல எங்கள் ஊரில் ஒரு பையன் உண்டு...கொஞ்சம் மந்தமான பையன். இப்பவும் இருக்கிறானா என்று தெரியவில்லை. அவனைக் குறித்து ஒன்று எழுதத் தொடங்கி அப்படியே நிக்குது. அவன் தனக்கு அரிப்பெடுத்தால் யாரிடம் கேட்கட் தெரியும்? அந்த உணர்வு இல்லையே அவனுக்கு அவன் சட்டை போட்டுப் பார்த்த நாளே கிடையாது...அவன் மரத்தில் சாய்ந்து சொரிந்து கொள்வான்...
கீதா
பூனை நம்மை சொரிந்து விடச் சொல்லும்! நம் கைக்கு அருகில் கொண்டுவந்து சொரிய வேண்டிய இடத்தை கைகளில் உரசி வேலை வாங்கும்!
நீக்குமூக்கு கண்ணாடி எழுத விட்டுப்போச்சு. ஆதாரும். மனைவி, பெட்டி, மேசை, படுக்கை (இதுல ஆதார் இல்லை)
நீக்குமுருகா சரணம்
பதிலளிநீக்குவாங்க செல்வாண்ணா.. வணக்கம்.
நீக்குதலைப்பு நவீன கவித்துவம்.,
பதிலளிநீக்குஹிஹிஹி... பாட்டுண்ணே அது!
நீக்குஜெ.... சித்திரங்கள் மலரும் நினைவுகள்..
பதிலளிநீக்குஜெ.ஜெ. அழகு...
சும்மா ஜேஜே ன்னு இருக்குன்னு சொல்லுங்க!!
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய வெள்ளி பதிவு அருமை. முதுகு சொறியும் பிரச்சனை இயல்பாகவே எல்லோருக்கும் வரும் ஒரு சங்கடம் போலும். அந்தக்காலத்தில் என் மாமியாருக்கு அடிக்கடி இதே உதவிகள் நான்தான் செய்திருக்கிறேன். நான் வீட்டின் பிற வேலைகளில் இருக்கும் போது என் குழந்தைகள் அவரிடம் கொஞ்சம் அன்பளிப்புகள் (ரொம்ப இல்லை. ஒரு பத்து பைசா இல்லை ரொம்ப பிகு இவர்கள் செய்து கொண்டால் ஒரு நாலனா) வாங்கிக் கொண்டு செய்திருக்கிறார்கள். ஹா ஹா ஹா. இப்போது நமக்கு முதுகு அரிப்பு வந்தால் நம் கையே நமக்குதவி.
ஆமாம்.. அது என்ன படம். இப்படி ஒரு பாடலா? பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அந்த ஒரு நிமிடம் படத்தில் 'அலைகளில் மிதக்குது நிலவொண்ணு குளிக்குது' என்னும் தத்துவப் பாடல் கமலா அக்கா. இளையராஜா. SPB .
நீக்குஅந்தக் காலத்தில் கிச்சன் கில்லாடிகளுக்கு முதுகு சொரிய சல்லடை கரண்டி, தோசை திருப்பிகள் உதவும்.
முதுகு சொரிதல் வாசித்தபோது ஒரு பழைய வாரியார்(?
பதிலளிநீக்கு) நகைச்சுவை நினைவில் வந்தது.
நாஸ்திகன் கடவுளை கண்டால்தான் நம்புவேன் என்று கூறியதற்கு
வா : இந்த சரீரம் உன்னுடையுது தானே?
நா: ஆம்
வா: உன்னுடைய உடம்பின் எல்லா பாகங்களையும் நீ பார்த்திருக்கிறாய் அல்லவா?
நா: ஆம்
வா: நீ உன் முதுகைப் பார்த்திருக்கிறாயா?
ஆ: இல்லை
வா: சரீரத்தின் முக்கிய பாகம் எது?
நா: தலை
வா: தலையில் உள்ள முகத்தைப் பார்த்திருக்கிறாயா?
நா: இல்லை
வா: அடுத்தவர் உதவி இன்றி உன்னுடைய உடம்பையே உன்னால் முழுதும் பார்க்கமுடியவில்லை. எப்படி உன்னால் உனக்குள் உள்ள கடவுளைக் கண்ணால் காண முடியும்.
இன்றைய பதிவு 2008 ஸ்பெஷல் ஆகிவிட்டது. 2008இல் ஏதாவது முக்கிய நிகழ்ச்சி வீட்டில் நடந்ததா?
JJ படம் அழகு.
Jayakumar
வாங்க JKC ஸார்.. நேற்று காணோமே...
நீக்குஇரண்டு விஷயம் 2008 விகனலிருந்து வந்திருக்கிறது அவ்வளவுதானே!
வாரியார் சொல்லிதான் நமக்கு இது தெரிய வேண்டுமா என்ன!!!
என்னிடம் ஒரு குணம் உண்டு. ஒருத்தரைப் பிடிக்காது என்று தீர்மானம் செய்துவிட்டால், நான் தேடிக்கொண்டிருக்கும் ரெசிப்பி, செய்தி என எதுவும் அவர் சொல்லியிருந்தாலும் கண்டிப்பாகப் பார்க்கமாட்டேன். உதாரணமா ப.சி, இந்த பாஜகவைப் பற்றியோ, பொருளாதாரத்தைம் பற்றியோ, மற்றவற்றிலோ கருத்துச் சொன்னால், பதவி இருந்தபோது என்ன கிழிச்சான், ஊரைப் பத்திப் பேச இவனுக்கு என்ன யோக்கியதை என்று மனசில் எழுவதால் அதை கவனிக்கவே மாட்டேன்.
பதிலளிநீக்குஅப்படிப்பட்ட ஒரு ஆள் இந்த சகி சிவம். பிறந்த குலத்தை அழிக்க முனைபவன். காசுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் துணிந்துவிட்டவன். இவன் சொல்லி என்ன கேட்கிறது?
ஹா... ஹா.. ஹா.. உங்க குணம் உங்களுக்கு. வாங்க நெல்லை.. எனக்கும் சுகி சிவம் பிடிக்காது. ஏன், அவர் அண்ணன் பெருமாளையும் பிடிக்காது.. அதனாலென்ன!
நீக்கு
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
நல்ல தர்ம சங்கடமான நகைச்சுவையை ரசித்தேன்.
/ச்சே.. வச்சிருந்த சொரியானையும் காணோம்.. யாரும் உதவிக்கும் வர மாட்டேங்கறாங்க.. அர்பன் ஆப் ல முதுகு சொரிய வருவாங்களான்னு கேட்டுப் பார்க்கணும்!...
போகிற போக்கில் இதற்கும் இந்த மாதிரி சௌகரியங்கள் வந்து விடும். ஆனால், மாதத்திற்கு ஒரு முறை இந்த பயன்பாடு என்பது செல்லுபடியாகுமா? தினமும் வரச்சொல்லி அழைக்க வேண்டும். அதுவும் எந்த நேரம் என குறிப்பிட முடியுமா.? பேசாமல் அவருக்கும் உணவளித்து, ஊதியமும் தந்து அருகிலேயே வைத்துக் கொள்ள வேண்டியதுதான். அதற்கும் செலவுகள் கட்டுப்படியாகுமா ? கஸ்டந்தான் என யோசிக்க வைக்கிறது. :))
இதில் மனிதனை விட மாடு புத்திசாலித்தனமானது. அதுவும் எ. மா. அது யார் உதவியையும் நாடாது என்றெல்லாம் யோசனை வருகிறது. ஹா ஹா ஹா.
நான் பள்ளியில் படிக்கும் போது ஒரு ஆசிரியைக்கு தினமும் இதே பிரச்சனைதான். அப்போது அவர்களுக்கு உதவுவது எங்களின் முழுஅடிஸகேல்தான். இதற்கு பயந்தே நான் முழுஅடிஸ்கேலை அந்த ஆசிரியை வகுப்பு நாள்வரும் போது பள்ளிக்கு கொண்டு போவதில்லை.ஏன் கொண்டு வருவதில்லையென அந்த ஸ்கேலினால் (அது உடன் படிக்கும் பிள்ளைகளுடையது) என் முதுகில் செல்லத்தட்டுக்கள் வேறு வாங்கியுள்ளேன். உங்களின் பகிர்வை படித்தவுடன் நிறைய சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன. ஹா ஹா ஹா பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இந்த கஹ மேடம் எழுதியிருப்பதும் ஆச்சர்யமா இருக்கு. மாடுகள் கம்பத்தில் சொரிந்துகொள்வதைக் கண்டதில்லையா? நிலைப்படி முக்கு, கதவு என எத்தனை இருக்கு ஆண்களுக்கு முதுகு சொரிந்துகொள்ள. தாய்வான் போயிருந்தபோது, இரவு மார்கெட்டுகளில் பலவித விளையாட்டுக் கடைகள் உண்டு. அதில் ஒன்றில் வெற்றி பெற்ற மகளுக்கு முதுகு சொறிந்துகொள்ளும் ஒரு கோல், அதில் சிறிய கை போன்ற அமைப்பு கொடுத்தார்கள். (2014). எங்க இருக்குன்னு தெரியலை.
நீக்குஏன், நாமே சமயங்களில் சுவரில் முதுகை தேய்த்துக் கொள்வதில்லையா என்ன! அப்பாவுக்கு முதுகு சொரிந்து சொரிந்து வரிவரியாக ரத்தக்கோடுகளே தெரியும். ஆனாலும் அவர் சளைக்க மாட்டார்! நாங்கள்தான் எஸ்கேப் ஆவோம்!
நீக்குநான்தான் நானே மூன்று பெரிய கை வைத்திருக்கிறேன் என்று சொல்லி இருக்கிறேனே நெல்லை..
நீக்குஅதேதான் நானும் என் கருத்தில் சொல்லியுள்ளேன். மாடுகள் புத்திசாலிதனமாக யார் உதவியையும் நாடாது சுவற்றில், விளக்கு கம்பத்தில் சொரிந்து கொள்ளுமென... கவனிக்கவில்லையா.?
நீக்குஎனக்கு தமன்னா பிடிக்கும் என்றால் 2026ல் தமன்னா படம் பகிர்வதுபோல, அனுஷ்கா பிடிக்கும் என்றால் இஞ்சி இடுப்பழகி ஸ்டில்லைப் போடுவது போல, எங்கள் ஜெ...... வரைந்த ஆயிரக்கணக்கான படங்கள் இருக்க, ஆரம்ப கால சப்பைப் படங்களைப் பகிர்வது நியாயமா?
பதிலளிநீக்குஅதே ஜெ.. அதே அவர் கைகள் வரைந்த ஓவியங்கள்.. அப்புறம் என்ன...
நீக்குநாமே பனிரெண்டாம் வகுப்பு படிக்கும்போது எப்படி இருந்தோம், இப்போது எப்படி இருக்கிறோம் என்று கண்ணாடியை பார்க்காமல் இருக்கிறோமா என்ன!
ஆஹா கமலா அக்கா மாதிரி எனக்கும் சிந்தனை வெள்ளம் ஊற்றெடுக்கிறதே...!
இந்த "இஞ்சி இடுப்பழகி" என்றதும் அனுஷ்கா நடித்த அந்தப்படத்தை பாதி வரை நான் பார்த்து பிறகு போரடித்ததில் நிறுத்தியுள்ளதும் நினைவுக்கு வருகிறது . அதில் அவர் முகம் அற்புத அழகு. அதற்குப் பின்தான் அவர் நிஜமாகிலுமே இஞ்சி இடுப்பழகியாக வலம் வந்தாரோ .? ஆமாம் அதென்ன.. இ. இ.? இஞ்சிக்கு கௌரவம் அளிப்பதற்காக வந்த பெயரோ.? ஆகா.. இன்று புதிது புதிதாக சிந்தனைகள் வருகிறதே..!
நீக்குநேற்றுத்தான் "கேள்விக்கு ஒரு பதிலென சிக்கன வார்த்தை" உங்கள் பதிவாக வந்தது. இன்றே சற்று எல்லை மீறுகிறோமோ எனவும் நினைக்க வைக்கிறது. ஹா ஹா ஹா.
நான் அந்தப் படத்தின் பக்கமே போகவில்லை!
நீக்குசில மகாராஜாக்கள் ஆடின ஆட்டங்கள் படித்திருக்கிறேன். அந்தக் காலத்திலேயே புத்தகங்கள் எழுதி அவை கிடைத்திருந்தால், ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் இத்யாதி மன்னர்கள் போர் போர் என்றும் கலை கலை என்றும் வாழ்ந்திருக்க மாட்டார்களோ?
பதிலளிநீக்குஒரு அரசனுக்கு தினமும் இமயமலைப் பகுதியிலிருந்து பனிக் கட்டிகளைக் கொண்டுவந்து நீச்சல் குளத்தில் விட்டபிறகு பெண்களுடன் குளிப்பானாம். இ,பலிகேசி படம் பார்க்கும்போது, அட வடிவேலுக்கு வந்த வாழ்வு என நினைத்துக்கொண்டேன், நீச பங்க ராஜ யோகம் போல, படத்தில் நடிப்பதுபோல ஒரு சில நாட்களாவது அவருக்கு இது வாய்த்திருக்கிறதே என்று.
நாம் வரலாற்றில் படிப்பது பொதுவான விஷயங்கள்தானே.. எனக்கும் தோன்றும், காலை எழுந்து குளித்து, அந்தக் காலத்து டிபனை வேகமாக முடித்து, துவைத்து வைத்திருப்பதில் நல்ல உடையாக அணிந்து, குதிரை ஓட்டத்தெரிந்தால் குதிரையில், அல்லது ஒரு வண்டியில் அரண்மனைக்கு வெளியாட்கள் -மந்திரி, தளபதி உட்பட - வருவார்கள் என்று தோன்றும்.
நீக்குமகாராஜாவும் வேலைக்கார்ர்களும் படம்.... ஒருத்தி கூட இல்லை. அந்தப் புறத்தில் தும்மினாலும் இவங்கள்லாம் ஓடி வந்துடுவாங்களோ? இசட் பாதிகாப்புன்னு எப்போதும் கூடவே பல காவல்கார்ர்களை வைத்திருப்பது ஆச்சர்யமா இருக்கும். ப்ரைவசி வேண்டாமா?
பதிலளிநீக்குஅவங்களுக்கு எது ப்ரைவஸி? ப்ரைவஸி பற்றி அவர்களுக்கு அக்கறையுமில்லை. ஒரு பொருட்டில்லை!
நீக்குநம்ம போலீஸார் சில பேர் - சிரிப்பு போலீஸ் போல இருக்கு!! இதிலிருந்துதான் நம்ம மதனுக்கு கார்ட்டூன் கார்ட்டூன் போட இன்ஸ்பிரேஷன் கிடைத்திருக்குமோ!!
பதிலளிநீக்குகீதா
சிரிப்பு போலீஸ் எப்பவுமே உண்டு போல! :))
நீக்குஅதேதான் ஸ்ரீராம்...இப்பவும் கூட...நீங்க சொல்லிருப்பது போல்...
நீக்குகீதா
அது எதுக்கு நடிச்சுக் காட்டச் சொல்றாங்க? புரியலை
பதிலளிநீக்குகீதா
நிரூபணம். அது போலீஸ் விசாரணையின் ஒரு அங்கம்!
நீக்குபுதிர் இப்ப கொஞ்சம் முயற்சி செய்தேன்....சிலது ஆப்டலை...எனவே மத்ததுக்குப் போய்விட்டு அப்பால அதுக்கு விடை சொல்ல முடியுமான்னு பார்க்கிறேன், ஸ்ரீராம்
பதிலளிநீக்குகீதா
ஒண்ணு மாட்டிடுச்சின்னா அதுலேருந்து மத்தவைகளை பிரிச்சு மேய்ஞ்சுடலாம்!
நீக்குஆமா எனக்கு ரெண்டு மாட்டலையே அதான் பிரிச்சு மேய முடியாம....தனித்தனியா இருக்கதுங்க வந்திருச்சு...முயற்சி விட மாட்டேனே.... இன்னும் ப்ளாக் முழுசும் முடிக்கலை வெங்கட்ஜி வேற பார்க்கணும்...சில வேலைகள் இன்று
பதிலளிநீக்குகீதா
ஒரு எழுத்து - ஒரு வார்த்தையின் ஒரு எழுத்து - தெரிஞ்சுடுச்சுன்னா மத்தது தானா வந்து உட்கார்ந்துடும்!
நீக்குசுகி சிவம் - சொல்லும் உண்மைக் கதையை ரசித்தேன். புதிய தகவல் வி கே ஆரும் சாண்டில்யனும் நெருங்கிய நண்பர்கள் என்று. சாண்டில்யன் ரொம்ப நகைச்சுவையாகப் பேசுவார்னு வாசித்த நினைவுண்டு
பதிலளிநீக்குகீதா
அப்படிதான் நானும் படிச்சிருக்கேன்!
நீக்குதிருமதி சுஜாதா அவங்களோட இந்தப் பேட்டி ரொம்ப வித்தியாசமா இருக்கு. எழுத்திலா இது? காணொளினும் சொல்லிருக்கீங்க. ஆனா நான் பார்த்திருந்த காணொளிகளில் இருந்து இது வித்தியாசம்.
பதிலளிநீக்குநெகிழ்ந்துவிட்டேன் வாசித்து.
கீதா
ஜெ ஓவியம் என்றே சொல்ல முடியலை இல்லை? ஆணின் முகம் கொழுக் மொழுக்குன்னு அமுல்பேபி மாதிரி....வரைந்திருக்கிறார்!
பதிலளிநீக்குகீதா
அடுத்த படத்துலயும் பெண்ணின் முகம் அமுல்பேபி! ஆண் கொஞ்சம் பரவால்ல.
நீக்குஅதுக்கு அடுத்த படமும் அதுக்கு அடுத்த படமும் அந்தக்கால சினிமா ஹீரோ ஹீரோயின் போல ...
அந்த ஜிப்பா மனிதர் இருக்கும் படம் வேறு ஒரு ஓவியரை நினைவு படுத்துகிறது
அதுக்கு அடுத்த படம் வாணி ஸ்ரீ கொண்டை!
அதுக்கு அடுத்த படம் - ஆங்கில அந்தக்கால ஹீரோ போல
கடைசிப்படம் கண்கள் கொஞ்சம் மாருதி ஸ்டைலோ? ஜெயின் தனி பாணி வரும் முன் வரைந்தவை என்று தோன்றுகிறது
கீதா
ஜெ ஜெ - ஜே ஜேன்னு இருக்காங்க
பதிலளிநீக்குஈதா
அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்கு//கரெக்ட்டா நடு சென்டர்ல அரிக்குது. கொஞ்சம் சொறிஞ்சு விடேன்.."//
பதிலளிநீக்குநல்லாதான் சொறிஞ்சு விட சொன்னீர்கள் மகனை பயந்து ஓட வைத்து விட்டீர்கள்.
சிறு வயதில் இரண்டு கையிலும் மருதாணி வைத்துவிடுவார்கள் அம்மா, அப்போதுதான் உடம்பில் அரிப்பது போல இருக்கும் அம்மா இங்கு அரிக்குது, அங்கு அரிக்கிறது என்று சொல்லி இருக்கிறேன்.
அம்மா உங்களுக்கு மருதாணி வைத்து விட்டு இது வேறு வேலை என்று அலுத்துக் கொள்வார்கள் .சொறிஞ்சுவிட வில்லை என்றால் கையை கழுவி விடுவோம் என்ரால் அம்மா பயந்து வேண்டாம் வருகிறேன் சீக்கிரம் எடுத்து விட்டால் சிவக்காது என்று ஓடி வருவார்கள்.
நம்ம போலீஸ்ல சிலபேர் அப்பவே அப்படிதான்!//
பதிலளிநீக்குபடத்தில் வரும் நல்ல நகைச்சுவை போல இருக்கிறது.
"குளிக்கிற நிலவுக்கு முதுகுல அரிக்குது கைகொடு" என்று பாடும் அனுவுக்கு கமலின் உதவி!//
பதிலளிநீக்குஇந்தப் படத்திலிருந்து பிறந்த கற்பனை முதல் பகுதியோ?! படத்துக்கு மாற்ரிப் போட்ட வரிகளோ? ஒரிஜினல் பாடல் என்னவோ?
கீதா