மாளிகைமேடு
மேலைச் சாளுக்கிய நாடு, கீழைச் சாளுக்கிய நாடு ஆகியவற்றைச் சென்ற வாரம் பார்த்துக்கொண்டு வந்தோம்.
வேங்கிநாட்டில் 975ல் அரசாண்டுகொண்டிருந்த தானார்ணவனை இராட்டிரகூட மன்னன் தாக்கிக் கொன்று, வேங்கிநாட்டு மன்னனானான். விரட்டப்பட்ட தானார்ணவனின் மகன்களான சக்திவர்மன் மற்றும் விமலாதித்தன் தக்க காலத்தில், சோழ அரசர்களின் உதவியை நாடினர். இது தங்களின் மேலைச் சாளுக்கிய அரசுக்கு பிற்பாடு ஆபத்தைக் கொண்டுவந்துவிடும் என்று எண்ணிய சத்யாச்ரயன், ஒன்பது லக்ஷம் படைவீர ர்களுடன் சக்திவர்மனுக்கு உதவ வந்த ராஜேந்திர சோழன் படையை எதிர்த்தான். ராஜேந்திர சோழன் கடும் போரில் சத்யாச்ரயன் படையைத் தோற்கடித்தான். சத்யாச்ரயனும் அவனுடைய மிஞ்சி இருந்த படையும் மேலைச் சாளுக்கிய நாட்டை நோக்கி புறமுதுகிட்டனர். ராஜேந்திர சோழன் அங்கும் படையெடுத்து வெற்றி பெற்று பெரும் பொருளை அங்கிருந்து தஞ்சைக்கு வெற்றிப் பரிசாகக் கொண்டுவந்தான். 25 ஆண்டுகாலம் வேறொருவர் கைப்பற்றி இருந்த வேங்கி நாட்டை மீட்டு, ராஜேந்திர சோழன் சக்திவர்மனை அரசனாக்கினான் (கிபி 999ல்).
ராஜராஜ சோழன் அப்போது சோழப் பேரரசன். ராஜேந்திர சோழன் இளவரசன் மற்றும் படைத் தளபதி என்பதை நினைவில் வைக்கவேண்டும். வெற்றியுடன் தலைநகரான தஞ்சைக்கு மீண்ட ராஜேந்திர சோழனுக்கும், அவனது படைத் தளபதிகளுக்கும் பல பரிசுகளை ராஜராஜ சோழன் கொடுத்தான் (அப்படி ஒரு படைத் தலைவனுக்குக் கொடுக்கப்பட்ட இடம்தான் தற்போது ராணிப்பேட்டை அருகிலுள்ள காவேரிப்பாக்கம் என்பது. அது ராஜராஜ சோழன் காலத்தில், படைத் தலைவனுக்கு ‘காவிதி’ என்ற பட்டம் கொடுத்து அதற்குப் பரிசாகக் கொடுக்கப்பட்ட இடம். காவிதிப் பாக்கம் என்பது காவிரிப்பாக்கம் என்று பெயர் மருவி விட்டது. காவிரிப் பாக்கத்தில் பல்லவ அரசன் மூன்றாம் நந்திவர்மனால் அமைக்கப்பட்ட ஏரி உள்ளது. இந்த காவிரிப்பாக்கம் ஏரி, தமிழகத்தின் இரண்டாவது பெரிய ஏரியாகும்.
வேங்கி நாட்டை வெற்றி பெற்று, சக்திவர்மனை அரசனாக்கிவிட்டாலும், அந்த அரசுடன் உறவுத் தொடர்பு இருக்கவேண்டும் என்பதற்காக, ராஜராஜ சோழன் தன்னுடைய மகளான குந்தவையை வேங்கி அரசன் சக்திவர்மனின் தம்பியான விமலாதித்தனுக்கு மணம் செய்து கொடுத்தான். சக்திவர்மன் கிபி 999லிருந்து 1010வரை வேங்கிநாட்டு அரசனாக இருந்தான். அவனுக்குப் பிறகு விமலாதித்தன் வேங்கி நாட்டு அரசனானான் (அதாவது ராஜராஜ சோழனின் மருமகன்).
விமலாதித்தன் கிபி 1011லிருந்து 7 ஆண்டுகள் ஆட்சி புரிந்தான். அந்தச் சமயத்தில் சாளுக்கிய வேங்கி நாடு, சோழர்களுடைய செல்வாக்கின் கீழ் இருந்தது. விமலாதித்தனின் மகன் ராஜராஜ நரேந்திரன் (நினைவிருக்கட்டும், இவர் ராஜராஜ சோழனின் மகளான குந்தவைக்குப் பிறந்தவர்). இவனுக்கு தன் மகளான அம்மங்கா தேவியை ராஜேந்திர சோழன் மணமுடித்துக் கொடுத்தான். அதாவது கிட்டத்தட்ட 250 ஆண்டுகளாக, வேங்கி நாடு (கீழைச் சாளுக்கியம்) ஒரு வகையில் சோழப் பேரரசுடன் மண உறவு கொண்டிருந்தது. ராஜராஜ நரேந்திரனுக்கும் அம்மங்கா தேவிக்கும் பிறந்தவன் ராஜேந்திரன் என்ற பெயர் சூட்டப்பட்டவன். (அதாவது அம்மா வழி தாத்தாவின் பெயர்). அவனுடைய இன்னொரு பெயர் அநபாயன். இவனை சாளுக்கிய ராஜேந்திரன் என்பார்கள். அவன் இளமைக் காலத்தில் கங்கைகொண்ட சோழபுர அரண்மனையில்தான் வாழ்ந்தானாம். வாலிப காலத்தில் சோழப் படையுடன் சேர்ந்து, அவர்களின் ஒரு சேனைத் தலைவனாக பல போர்களில் பங்கேற்றிருந்திருக்கிறான். இதனால்தான், ராஜேந்திர சோழனின் (அதாவது தாத்தாவின்) மகன்கள் மூவரும் ஒருவர் பின் ஒருவராக சோழப் பேரரசை ஆண்டு, கடைசியில் வாரிசு இல்லாத நிலை வந்தபோது, சோழ அரசவைக்குச் சென்று, தனக்கு ஆட்சி உரிமை கொடுக்கக் கோரினான். அவனது வீரம், ராஜேந்திர சோழனுடைய ரத்த உறவு, வேறு வாரிசு இல்லாத தன்மை ஆகியவற்றால், சாளுக்கிய ராஜேந்திரனையே சோழ அரசனாக ஏற்றுக்கொண்டனர். அவனும் குலோத்துங்கச் சோழன் என்ற பெயரில் சோழ அரசனாக ஆனான். (கிபி 1070ல்). கிபி 848ல் விஜயாலய சோழனால் ஸ்தாபிக்கப்பட்ட சோழப் பேரரசு (பல்லவர்களிடமிருண்டு சோழ நாட்டை மீட்டவன் அவன்) ராஜேந்திர சோழனின் கடைசி மகன் அதிராஜேந்திர சோழன் கிபி 1070ல் மறையும் வரை இடைக்காலச் சோழப் பேரரசு என்று அழைக்கப்படுகிறது. அதன் பின்னர், குலோத்துங்கச் சோழனிடமிருந்து சாளுக்கிய சோழப் பேரரசு என்று அழைக்கப்படலாயிற்று.
ராஜேந்திர சோழனை, தனக்குப் பிறகான நான்கு சோழ அரசர்களைப் பார்த்த ஒரே ஒரு சோழ அரசன் என்று சொல்லலாமல்லவா?
ராஜேந்திர சோழன் பொ.ஆ.1012ல் பேரரசனாக முடிசூட்டப்பட்டான். ராஜராஜ சோழன் அரசாட்சியிலிருந்து விலகி ஓய்வு காலத்தை இறைபக்தியில் செலவழித்தான்.
இளவரசனாக இருந்தபோது, இலங்கையுடன் நடந்த போரில், ஐந்தாம் மகிந்தா போரில் தோற்றுப் பின் வாங்கினான். சோழப் படை வட இலங்கையைக் கைப்பற்றியது. மகிந்தா தலைநகரான அனுராதபுரத்தை விட்டுவிட்டு தென்னிலங்கைப் பக்கம் சென்று பொலனருவாவைத் தலைநகராக்கிக்கொண்டான். சோழப் படைக்கோ படைவீரர்கள், அவர்களுக்கான உதவி, தமிழகத்திலிருந்து வரவேண்டும். அதனால் படையை முன்னெடுக்காமல், வட இலங்கையைக் கைப்பற்றியதுடன் நிறுத்திக்கொண்டார்கள்.
பாண்டிய மன்னர்களுடன் தொடர்பு வைத்திருந்த இலங்கை அரசை முழுவதுமாக ஒடுக்க வேண்டும் என்று எண்ணினான். அந்தச் சமயத்தில் ஐந்தாம் மகிந்தா, வட இலங்கையை சோழர் படையிடமிருந்து மீட்க எண்ணி அதன் மீது படையெடுத்தான். இதனை அறிந்த ராஜேந்திர சோழன், தன் கடற்படையின் ஒரு பகுதியை இலங்கைக்கு அனுப்பினான். நடந்த போரில், சோழப் படை வென்று, இலங்கை அரசனைச் சிறை பிடித்தது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு பாண்டியருடன் நடந்த போரில், பாண்டிய அரசன் இலங்கையில் ஒளித்து வைத்திருந்த அவனது ரத்தின ஆரம் கிடைத்தது. இலங்கை முழுவதும் சோழ அரசின் கீழ் வந்தது. சிறைப்பிடிக்கப்பட்ட இலங்கை அரசன் ஐந்தாம் மகிந்தா தஞ்சாவூருக்குக் கொண்டுவரப்பட்டு அங்கு பன்னிரண்டு ஆண்டுகள் சிறையில் இருந்து மடிந்தான். அவனுடைய மகன் இலங்கையில் ரகசியமாக வளர்க்கப்பட்டான். அதே சமயத்தில், ராஜேந்திர சோழன், பாண்டிய அரச மரபினர் கலகம் விளைவித்ததால், அதன் மீது போரிட்டு வென்று, தன்னுடைய மகன் ராஜேந்திர தேவனை சோழ நாட்டின் பிரதிநிதியாக இருந்து அரசாண்டுவரச் செய்தான்.
ராஜேந்திர சோழனுக்கு தன்னுடைய பெயரால் ஒரு தலைநகரம் அமைக்க விரும்பினான். அதற்கு உரிய இடமாக, தன்னுடைய தந்தை அமைத்த ஜெயங்கொண்ட சோழபுரத்தின் அருகிலிருந்த காட்டைத் திருத்தினான். நிலம் பண்படுத்திய பிறகு, அவனுடைய ஆலோசகர்கள், தலைநகரம் கோயில் அமைக்க விரும்பினால் அந்த இடத்தை முழுவதுமாக கங்கை நீர் கொண்டுவந்து தெளித்தல் நலம் என்று கூறினர். அந்தக் காரணத்திற்காக ஒரு படையை அமைத்து அவர்களை கங்கையை நோக்கிச் செல்ல அனுப்பினான்.
வேங்கை நாடு முடிய எதிர்ப்பில்லாமல் சென்ற படையை கோதாவரிக்கு அப்பால் சிற்றரசர்கள் எதிர்த்தனர். அவர்களை வென்று முன்னேறிச் சென்றது ராஜேந்திரனின் படை. ஒரிசா பகுதிச் சிற்றரசர்களையும் வென்றது. அப்போது மேற்கு வங்காளத்தை ஆண்டுகொண்டிருந்த Bபால வம்சத்து அரசனான மஹிபாலன், சோழப் படையின் நோக்கம் அறியாமல், தெற்கிலிருந்து சோழப் படை முன்னேறுவதா என்ற எண்ணத்தில் அதனை தன் கீழ் இருந்த சிற்றரசர்களோடு எதிர்க்கத் துணிந்தான். அவனது அமைச்சர்கள், அரசன் தலைமை இல்லாமல் வரும் படை இது, மிகுந்த வீரத்துடன் கூடியது, அதனால் எதிர்க்க வேண்டாம் என்று சொல்லியும், மஹிபாலன் போர் முழக்கம் செய்தான். கடும் போரில் தோல்வியடைந்து புறமுதுகிட்ட மஹிபாலனைச் சிறைப் பிடித்தது சோழர் பெரும்படை. பிறகு கங்கைக் கரையை அடைந்து தக்கக் குடங்களில் கங்கை நீரை நிரப்பிக்கொண்டு, தோற்ற அரசர்களை அந்தக் குடங்களைச் சுமக்கச் செய்து திரும்பியது சோழர் படை. அதனை ராஜேந்திர சோழன் வேங்கி நாட்டில் எதிர்கொண்டு வரவேற்றான்.
தான் அமைக்க விரும்பிய நகரத்திற்கான இடத்தின் மீது கங்கை நீரைத் தெளித்து கங்கைகொண்ட சோழபுரம் என்ற தலைநகரை நிர்மாணித்தான். அங்கு கங்கை கொண்ட சோழீச்வரம் என்ற சிவன் கோயிலைக் கட்டினான். அதன் அருகிலேயே தன்னுடைய அரண்மனையையும் ஏற்படுத்தினான்.
ஞாயிற்றுக் கிழமை படங்களைக் காணலாம் என்று வந்தால், ஒரே
சரித்திரமாக இருக்கிறதே என்று எண்ணுகிறீர்களோ? சரி.. சரித்திரத்தை
நிறுத்திவிட்டு ராஜேந்திரன் அமைத்த அரண்மனைப் பகுதியில் (மாளிகை
மேடு) இருந்த சிற்பக் கூடத்தைக் காணலாம்.
அகழாய்வில் கிடைத்தவற்றை எழுதிவைத்துள்ளார்கள்.
கங்கைகொண்டசோழீச்வரம் கருவறையின் மேற்புறத் தோற்றம் (விமானம்)
மாளிகை மேடு அகழ்வாய்ந்தபோது எடுத்த படம்
தமிழ் கல்வெட்டும், சிங்க முகமும் (பெரும்பாலும் தூணின் அடிப்பாகம், அல்லது விளக்கேற்றும் கல் என்று பலவற்றிலும் இதனைக் காணலாம்.)
முட்டுவாஞ்சேரியில் கிடைத்த 12ம்
நூற்றாண்டு லிங்கம், அதே நூற்றாண்டைச் சேர்ந்த திருமானூரில் கிடைத்த நந்தி.
ஏலாக்குறிச்சியில் கிடைத்த தட்சிணாமூர்த்தி, 11-12ம்
நூற்றாண்டு. கங்கைகொண்ட சோழபுரத்தில் கிடைத்த 11-12ம்
நூற்றாண்டைச் சேர்ந்த விஷ்ணு சிலை.
பராந்தகன்
காலக் கல்வெட்டு.
மாளிகைமேடு அகழாய்வில் கிடைத்த பராந்தக சோழன் காலக் கல்வெட்டில், இரண்டு வணிகக் குழுக்களை தஞ்சாவூரிலிருந்து கங்கைகொண்ட சோழபுரத்திற்கு குடிபெயர்வு செய்து, அதற்காக அவர்களுக்கு சில வரிகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்ட தும், அவர்கள் இருவித வரிகளை வசூலித்துக்கொள்ளலாம் என்றும், இந்த வணிகக் குழுவிற்கு அரசு தரப்பில் எந்தப் பிரச்சனையும் (அலுவலர்கள்) தரக்கூடாது என்றும் கல்வெட்டில் ஆணை பிறப்பித்து அளித்திருக்கிறார்கள்.
கங்கைகொண்ட சோழபுரத்தில் கிடைத்த பெண்ணுருவம்.
ஏலாமாத்தூரில் கிடைத்த வைஷ்ணவி, வராஹி, கௌமாரி – 11-12ம்
நூற்றாண்டு
விநாயகர் பெரியது,
சண்டிகேஸ்வரர் – கங்கைகொண்ட சோழபுரம், 11ம்
நூற்றாண்டு
தேவி, 11ம் நூற்றாண்டு, பிராமி, 10-11ம் நூற்றாண்டு, பெரியமறை.
கௌமாரி, உமா மகேஸ்வரி, 10-11ம் நூற்றாண்டு, பெரியமறை.
துர்கை-பெரியகுறிச்சி, 10-11ம் நூற்றாண்டு, சண்டிகேஸ்வரர், 10-11ம் நூற்றாண்டு, பெரியமறை.
முருகன், காமராசவல்லி, 12-13ம் நூற்றாண்டு, தட்சிணாமூர்த்தி, 12-13ம் நூற்றாண்டு, கல்லக்குடி (ஊர் நினைவுக்கு வருதா? பெயரும் நினைவுக்கு வரணுமே)
சாமுண்டா, பெரியமறை, 10-11ம் நூற்றாண்டு, ரிஷபாந்தி, 10ம் நூற்றாண்டு, புதுக்கோட்டை
வராகி, தேவி, 10-11ம் நூற்றாண்டு.
ஐயனார், 10-11ம் நூற்றாண்டு, அர்த்தநாரீஸ்வரர், பெரியாறை.
அம்மன், தக்ஷிணாமூர்த்தி
துவாரபாலகர், அரியலூர், துர்கை, 11-12ம் நூற்றாண்டு, அரியலூர்.
இந்தச்
சிற்பத் தொகுதிகளைப் பகிரும்போது, நான் எசாலம் செப்பேடுகள் பற்றி எழுதவேண்டும் என்று
நினைத்தேன். இந்தச் செப்பேடுகள் விழுப்புரம்-செஞ்சி நெடுஞ்சாலையில்
எசாலம் கிராமத்து சிவன் கோயிலை (திருவிராமீசுவரம்) திருப்பணிக்காக 1987ல் தோண்டியபோது கிடைத்தவை. இது இராஜேந்திர சோழனின் 25ம் ஆட்சி ஆண்டில்
எழுதப்பட்டது.
வளையத்தில்
கோர்க்கப்பட்ட 14
தொகுதிகளை
உடையது. இது பற்றி ஏதாவது ஒரு கோயில் பதிவில், இடம் கிடைக்கும்போது
எழுதுகிறேன்.
இந்தப் பயணத்தின்போது சோழகங்கம் என்று அழைக்கப்பட்ட பொன்னேரியைப் பார்க்கவில்லை. ராஜேந்திர சோழனின் மாதண்ட நாயக்கன், கங்கைவரை சென்று வெற்றிபெற்றதன் நினைவாக, அங்கு வென்ற மன்னர்களை கங்கைநீரைச் சுமந்துவரச் செய்து, அந்த நீரின் ஒரு பகுதியை இந்த இடத்தில் விட்டு, ஒரு பெரிய ஏரியை உருவாக்கினான். சோழகங்கம் என்று அழைக்கப்பட்ட அந்த ஏரிக்கு கொள்ளிடம் பகுதியிலிருந்து உபரி நீர் வரும்படியாக மதகுகள் அமைக்கப்பட்டிருந்தன. ஏரி சுமார் 14 அடி ஆழம் உள்ளது. 15 கிமீட்டருக்கும் அதிகமான சுற்றளவுடையது.
தற்போது நீர் வரத்துப் பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. ஏரியும் தூர்ந்துபோய்விட்டதாம். பெரும் மழை வந்தபோதுதான் ஏரியில் நீர் நிரம்புகிறதாம்.
சோழகங்கம் ஏரி-இணையம்.
மாளிகை மேட்டையும் சிற்பக் கூடத்தையும் பார்த்துக்கொள்ளும் அரசுத் துறையைச் சேர்ந்த காண்டிராக்ட் பொறுப்பாளருடன் பேசியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பல்வேறு தகவல்களை அவர் பகிர்ந்துகொண்டார்.
வரும் வாரம், நாங்கள் சென்று பார்த்த பள்ளிகொண்ட பெருமாள் கோயில் பற்றிக் காணலாம்.
(தொடரும்)
காவிரிப்பாக்கம் தகவல் இதுவரை அறிந்ததில்லை, நெல்லை
பதிலளிநீக்குகாவிரிப்பாக்கம் ஏரி பெரிசு. ரொம்ப வருஷம் முன்ன போனது.
குழந்தைகள் பரீட்சைல நல்ல மார்க் வாங்கினா சில பெற்றோர் பரிசு கொடுப்பாங்க ஊக்கப்படுத்த அது போல ராஜ ராஜ சோழன் ராஜேந்திரனுக்கும் கொடுத்திருக்கிறார் போல!!
கீதா
வாங்க கீதா ரங்கன். ராஜராஜசோழன் 1014ல் மறைகிறான். அதற்கு முன் இருபது வருடங்களாகவே ராஜேந்திரன் துணையாக இருக்கிறான். அவனது வீரத்தைப் பலரறிய மெச்சும்போது, அது கொடுக்கும் ஊக்கமே தனி அல்லவா?
நீக்குகண்டிப்பாக ஊக்கத் தொகை நல்லதுதான்,.!
நீக்குகீதா
விமலாதித்தன் குந்தவை நல்லா நினைவிருக்கும்!!!! பின்ன காட்சியாய்க் கண்டது இல்லையா!!!!!!!
பதிலளிநீக்குஆனா அதுக்கப்புறம் உள்ள கதை இப்பதான் தெரிந்து கொள்கிறேன், நெல்லை.
நெல்லை பெரிய பாராவை இனி எழுதறப்ப கொஞ்சம் பிரிச்சிடுங்க மூன்றாக....உடனே எனக்கு வயசாகிடுச்சுன்னு சொல்லப்டாது கேட்டேளா....
கீதா
இனி முடிந்தவரை பிரித்துப் பிரித்து எழுதுகிறேன். ஆனால் பாருங்க, லேப்டாப்பில் இவை ஓகே. மொபைலில் என்றால் ரொம்பப் பெரிய பத்தியாகத் தெரிகின்றன.
நீக்குஉங்களுக்கு வயசாகிடுச்சு என்று சொல்ல மாட்டேன். அப்படிச் சொன்னால் எனக்கும் வயசாகிறது என்று ஒப்புக்கொள்வது போல் அல்லவா?
லாப்டாப்பிலுமே பெரிசாக இருக்கு நெல்லை. மொபைலில் ரொம்ப சிரமம் ...
நீக்கு//உங்களுக்கு வயசாகிடுச்சு என்று சொல்ல மாட்டேன். அப்படிச் சொன்னால் எனக்கும் வயசாகிறது என்று ஒப்புக்கொள்வது போல் அல்லவா?//
ஹாஹாஹா அது!
கீதா
குந்தவை என்ற பெயரைக் கேட்கும் பொழுதெல்லாம் ராஜராஜ சோழனின் தமக்கையார் குந்தவையின் நினைவு மேலிடுவது தான் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலின் வீச்சும் பெருமையும் ஆகும்.
பதிலளிநீக்குவாங்க ஜீவி சார்... தமிழர்களுக்கு வரலாற்றில் ஆர்வம் வந்ததற்கு கல்கிதான் மிகப் பெரிய காரணம் என்றால் அது சரியான பார்வை.
நீக்குகல்கி அவர்களின் எழுத்து வீச்சைப் பற்றிச் சொல்லவேண்டுமென்றால், நமக்கு இப்போது அகழ்வாய்வில் செப்புப் பட்டயமோ அல்லது கல்வெட்டோ கிடைத்து, குந்தவைதான் ஆதித்தன் இறப்புக்குக் காரணம், அல்லது அருண்மொழித் தேவன் சொல்லித்தான் இந்தக் கொலை நிகழ்ந்தது என்று இருந்தால், நாம் உடனேயே, இந்தக் கல்வெட்டு, செப்புப் பட்டயம் போலி, வெளிநாட்டுச் சதி என்றே முடிவுக்கு வருவோம்.
கிட்டத்தட்ட இப்படித்தானே "காலச்சக்கரம்" எழுதி இருக்கார்! ஆனாலும் என் மனசு ஒத்துக்கலை அதை எல்லாம். இன்னொரு விஷயம். இவை எல்லாம் வருவதற்குப் பல ஆண்டுகள் முன்னரே மாம்மல்லன் தன் மகளுக்குக் "குந்தவி" எனப் பெயர் வைத்திருந்தான். குந்தவை இல்லை. குந்தவி. அவளைத் தான் விக்ரமசோழனுக்கு மணம் முடித்துக் கொடுப்பான். கல்கி எழுதிய "பார்த்திபன் கனவு" இதைத் தான் சொல்லும். இதன் பின்னர் "சிவகாமியின் சபதம்" எழுதிட்டுத் தான் கல்கி "பொன்னியின் செல்வன்" எழுதி இருக்கார். எனக்குச் சரித்திரத்தில் ஆர்வமும், அதைப் பற்றிய கொஞ்ச நஞ்ச அறிவும் கல்கி, சாண்டில்யன், அகிலன், ஜெகசிற்பியன் ஆகியோரைப் படித்ததால் தான். விக்ரமனும் எழுதினார். ஆனால் என்னைக் கவரவில்லை.
நீக்குகாலச்சக்கரம் அவர்கள் மிக அருமையாக எழுதியிருந்தார். ஆனால் பாருங்க.. இந்த கல்கி நம் மனதில் ஆணியைக் கொண்டு ஒவ்வொரு மாந்தர்களின் குணங்களை உருவங்களைப் பதிப்பித்துவிட்டுச் சென்றுவிட்டார். அதனால் அந்த நிகழ்வுகளுக்கு மாற்றாக யார் எழுதினாலும் நாம் ஒப்புக்கொள்ள மாட்டோம்.
நீக்குசரித்திர நாவலாசிரியர்களில் கல்கி, சாண்டில்யன் தவிர, அகிலன் ஜெகசிற்பியன் தவிர வேறு யார் யார் நன்றாக எழுதியிருக்கிறார்கள்?
கந்கைகொண்ட சோழபுரம் பத்தி இங்கு வந்துகொண்டிருக்கிறதே படங்களோடு...
பதிலளிநீக்குபடங்களைப் பெரிசு படுத்தி வாசிக்க முடியலையே நெல்லை. அதுதானே முக்கியமான தகவல்கள் இல்லையா அறிந்து கொள்ள ஆர்வம் இருப்பவர்களுக்காக சொல்றேன்., நெல்லை. பரவால்ல பதிவு நீளமானாலும் பரவால்ல.
சில படங்களைப் பெரிசு பண்ணிப் பார்க்கறா மாதிரி அமைச்சா நல்லாருக்கும்னு தோணுது.
கீதா
உங்கள் கருத்தில் அர்த்தம் இருக்கிறது. ஆனால் பல படங்கள் இருப்பதால், சிலவற்றை இரண்டு படங்களாகச் சேர்த்துப் போடுகிறேன். எல்லாவற்றையும் பெரிது படுத்திப் பார்க்க முடியும் என்றே நினைக்கிறேன் சேச்சி. உண்மையாகவே நீங்கள் பலவற்றையும் முயன்றுபார்க்கிறீர்கள். தெக்கினிக்கு சொல்லிக்கொடுத்தால் செய்கிறேன்.
நீக்குஇல்லை நெல்லை பெரிது படுத்த முடியலை.
நீக்குநானும் முன்ன இப்படிச் சேர்த்துதான் கொடுத்துக் கொண்டிருந்தேன் இடம் அடைக்கிற்தே பதிவு நீயீயீயீயீயீயீளமாகிடுமேன்னு அப்ப ஜெ கே அண்ணாதான் சொன்னார் தனித்தனியாகக் கொடுங்க அப்ப பெரிது படுத்திப் பார்க்க முடியும் என்று.
மற்றொன்று, படங்களை வேர்டில் இணைத்தால் சில சமயம் அதன் பிக்சல் மாறும்.தனித்தனியாகப் போடும் போதும் படங்களின் பிக்சலை மாற்றினால் அதாவது ப்ளாகருக்கான பிக்சலுக்கு மாற்றினால் பெரிதாக்கிப் பார்க்க முடியாது.
எனவே நான் அப்படியே ஒரிஜினல் சைசை போட்டுவிடுகிறேன், நெல்லை
கீதா
படங்கள் எல்லாம் சூப்பர் நெல்லை. கௌமாரி, பார்த்துக் கொண்டேன்.
பதிலளிநீக்குசாமுண்டா, பெரியமறை, 10-11ம் நூற்றாண்டு, ரிஷபாந்தி, 10ம் நூற்றாண்டு, புதுக்கோட்டை//
இதுவரை இப்பெயர்கள் கேட்டதில்லை, நெல்லை
சோழகங்கம் என்று அழைக்கப்பட்ட பொன்னேரியைப்//
பொன்னேரிக்கு சோழகங்கம் என்ற பெயர் இப்பதான் தெரிந்து கொள்கிறேன்.
எல்லாமே சூப்பர் நெல்லை
கீதா
சாமுண்டா சப்த கன்னிகளில் ஒருத்தியான சாமுண்டி தான். இவளும். அந்தக் கால சிவன் கோயில்களில் பெரும்பாலான கோயில்களில் சப்த கன்னியர் இடம் பெற்றிருக்கின்றனர். அதோடு ஜேஷ்டா தேவியும் கூட. ஜேஷ்டா தேவி வழிபாடு முன் காலத்தில் பிரபலமாக இருந்திருக்கிறது. இப்போவும் வட மாநிலங்களில் ஜேஷ்டா தேவி எனில் தனியாக மரியாதை செய்வார்கள். கேட்டை நக்ஷத்திரத்தை உயர்வாகவும் சொல்லுவார்கள். நம்ம பக்கம் கேட்டை நக்ஷத்திரத்தில் பிறந்தவங்களே செருப்படி வாங்கணும். அதுவும் பெண்ணாக இருந்துட்டா கேட்கவே வேண்டாம். ஏதோ வேண்டிக்கொண்டு பிறந்துட்டாப்போல் பேசுவாங்க.
நீக்குகீதா ரங்கன்..மிக்க நன்றி
நீக்குகீசா மேடம்...நட்சத்திரத்தை வைத்துச் சொல்லும் பழமொழிகள் எல்லாமே அனர்த்தமானவை என்பது என் அபிப்ராயம். ஆண் மூலம் அரசாளும் பெண் மூலம் நிர்மூலம் என்பது போல.
நீக்குஇன்றைய பதிவு சிறப்பு. சாதாரணமாக வெகுஜன வாசிப்பில் கிடைக்காத வரலாற்று நிகழ்வுகளை சங்கிலி போலக் கோர்த்து அழகாக சொல்லியிருக்கிறீர்கள். இராஜேந்திரனின் இலங்கைப் படையெடுப்புகளைப் பற்றி வாசிக்கும் பொழுது இக்காலத்திய சொல்லாடலான 'தொப்புள்கொடி உறவு' என்ற வார்த்தை என் நினைவுக்கு வந்து போயிற்று.
பதிலளிநீக்குஜீவி சார் வாயால் இத்தகைய கருத்துக்களைப் பெறும்போது அது தரும் திருப்தியே தனி.
நீக்குஉண்மையாகவே இலங்கை அரசர்களுக்கும் பாண்டிய அரசுக்கும் தொப்புள்கொடி உறவு. பாண்டியன் போருக்கு இலங்கை அரசன் படையுடன் துணைக்கு வருவதும், பாண்டியன் தன் மணிமுடி, இரத்ன ஹாரத்தை இலங்கை அரசனிடம் கொடுத்து வைத்திருப்பதும் எத்தகைய வரலாற்று நிகழ்வுகள் பாருங்கள்.
அகிலனின் "வேங்கையின் மைந்தன்" நாவலைக் கிடைச்சால் படிங்க நெல்லை. இவை எல்லாமுமே அதில் வரும். வந்தியத் தேவனும், குந்தவையும் அதில் வயதான தம்பதிகளாக வருவார்கள். ராஜேந்திரன் மகளில் ஒருத்திக்கு அருள்மொழி என்றும் இன்னொருத்திக்கு அம்மங்கா தேவி என்றும் பெயர். இவர்களைப் பற்றியும் அதில் வரும். மகிந்தன் சோழ நாட்டில் சிறை இருந்ததாக அந்தக் கதையில் மறைமுகமாகச் சொல்லுவார்கள். அரச பரம்பரை என்பதால் மாளிகைச் சிறை. மகிந்தனின் பெண் கொடும்பாளூர் இளவரசனை விரும்புவதாக வரும். கதைப்படி அவள் இறந்து விடுவாள்.
நீக்குகீசா மேடம்... நிறைய புத்தகங்கள் பிடிஎஃப் வடிவத்தில் இருக்கின்றன. அவைகளை இன்னும் படிக்கவில்லை. படிப்புதான் ஒருவருடைய அறிவை வளர்க்கும் என்று சும்மா சொல்லவில்லை.
நீக்குவேங்கையின் மைந்தன் நாவலை எழுத, அகிலன் நிறைய வரலாற்றுச் செய்திகளைப் படித்திருப்பார். நமக்கு அந்த ஒரு நாவலைப் படித்தால் எத்தனையோ செய்திகள் தெரிந்துவிடும்.
இப்படித்தான் ஒரு நாவலில் சாண்டில்யன் அவர்கள், திருவரங்கம் மூலவர் ரங்கநாதனின் கண்களில் விலை உயர்ந்த இரண்டு கவசம் (மாணிக்க அல்லது நீல நிறக் கற்களைக் கொண்டு உருவானது) இருந்ததாகவும், அதில் ஒன்று ரஷ்யாவிற்குச் சென்றுவிட்டது என்றும் எழுதியிருந்தார்.
சிற்பக்கூட படப்பதிவுகள் 'ஓகோ' ரகம். இங்கு அவற்றை வெளியிட்டிருப்பதற்கு பின்னாலான உழைப்பும் ஆர்வமும் பாராட்டப்பட வேண்டியது. கொடுத்து வைத்த "எபி'. வாழ்த்துக்கள் நெல்லை.
பதிலளிநீக்குஅதற்கு இடம் கொடுத்து, கேஜிஎஸ் அவர்கள் வசம் இருந்த ஞாயிறை, நெல்லை எழுதட்டும் எனக் கொடுத்தது எங்கள் பிளாக்அல்லவா?
நீக்குஅழகாக சரித்திர நிகழ்வுகளை எழுதியுள்ளீர்கள் நெல்லை. பாராட்டுகள். நான் படித்த காலத்தில் ஒரே வரியில் (கங்கை நீரை தான் ஜெயித்த அரசர்கள் தலைச்சுமையாகக் கொணர்ந்தான்) முடித்து விடுவார்கள். நான் படித்த வரையில், கோதாவரிக் கரை வரைக்கும் படைக்கு ராஜேந்திர சோழனே தலைமை தாங்கிச் சென்றதாகவும், அதற்கு வடக்கே வங்காளத்துக்குத்தான் தன் படைத்தலைவனை மட்டும் அனுப்பியதாகவும் நினைவு. தொடர்கிறேன்.
பதிலளிநீக்குவாங்க சூர்யா அவர்கள். சில ஒஆரங்களாக உங்களைக் காணோமே என நினைத்துக்கொண்டேன். பயணமா?
நீக்குவரலாற்றை, அதிலும் பலர் எழுதிய புத்தகங்களைப் படிக்கப் படிக்க புதிய தகவல்களை அறிந்து ஆச்சர்யப்படுவேன். இந்தப் பகுதியில் பகிர்வேன்.
/கல்லக்குடி (ஊர் நினைவுக்கு வருதா? பெயரும் நினைவுக்கு வரணுமே)/
பதிலளிநீக்குஹா ஹா.....பேர் மட்டுமா? நாகூர் ஹனீபா பாட்டும் ஞாபகத்துக்கு வந்தது. நல்ல செய்திகளின் ஊடே திருஷ்டிப் பூசணிக்காய் போல இந்த வரியை நுழைத்தீர்கள் என்று கொள்கிறேன். நெல்லை சிறப்பாக எழுதுகிறார் என்று பலரும் பாராட்டும்போது உங்கள் மேல் கண் த்ருஷ்டி படாமல் இருக்கட்டும்.
//நாகூர் ஹனீபா பாட்டும்// தனக்கு நல்லது செய்த அவருக்கு, மோசமான எம்.எல்.ஏ சீட் ஒன்றைக் கொடுத்து அவருடைய சொத்தை அழித்துவிட்டார் அவருடைய தலைவர். நாகூர் ஹனீபாவின் நல்ல நேரம், அவர் கலாம் இறந்த சமயத்தில் இறந்தது. அரசியலுக்கு உபயோகப்படுத்த, கலாமைப் பற்றிக் கவலைப்படாமல், நாகூர் ஹனீபா இறப்புக்குச் சென்றார் (அன்பால் அல்ல, கலாமைப் புறக்கணிக்கணும் என்று)
நீக்குதூய சவேரியார் பள்ளியில் படித்தேன் என்று எழுதியிருந்தீர்கள் நெல்லை. பாளையங்கோட்டையில்தானே அந்த ஸ்கூல்? அப்போ நாகூர் ஹனீபாவின் இன்னொரு பாட்டும் ஞாபகம் இருக்கணுமே (பல்லி + பாம்பு)
நீக்குபாளையங்கோட்டை ஜெயிலில், பாராடிய தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் அடைக்கப்பட்டு இருந்தபோது பார்க்கச் சென்ற நினைவு மங்கலாக இருக்கிறது.
நீக்குபல்லியையும் பாம்பையும் சுவற்றில் கைதிகள் வரைந்து வைத்திருந்தார்களாக இருக்கும்.
நல்ல பாடலுக்கான வார்த்தைகளுக்கு, அந்தமான் தனிச் சிறையில் அடைக்கப்பட்டிருந்திருக்கலாம்.
முருகா சரணம்
பதிலளிநீக்குசரணம் சண்முகா. நலமா துரை செல்வராஜ் சார்.
நீக்கு@ சூர்யா
பதிலளிநீக்கு/// உங்கள் மேல் கண் த்ருஷ்டி படாமல்
இருக்கட்டும்... ///
நெல்லை அவர்கள் அருட் கடாட்சம் பெற்ற வித்தகர்...
ஒரு குறையும் இராது...
ஓம் ஹரி ஓம்..
நான் எழுதுவது சாதாரண எழுத்து. ஆனால் அதற்காக நிறைய மெனெக்கிடுகிறேன். திறமை இருப்பவர்கள் மிக நன்றாகவும் கோர்வையாகவும் எழுதுவார்கள். இருந்தாலும் எழுதும்போது உணர்வு பூர்வமாகவும், நான் மனதால் நினைப்பதை, நம்புவதை எழுத்தில் கொண்டுவர முயல்கிறேன். மிக்க நன்றி துரை செல்வராஜ் சார்.
நீக்குசிறப்பான பதிவு
பதிலளிநீக்குவாங்க துரை செல்வராஜ் சார். மிக்க நன்றி
நீக்குஇந்த ராஜராஜ நரேந்திரன் அம்மங்கா தேவி கதை சம்பந்தப் பட்ட பகுதியைத்தான் சாண்டில்யன் மன்னன் மகள் கதையில் எழுதி இருக்கிறார். ஆனால் நாயகன் கற்பனைப் பாத்திரமான கரிகாலன், விமலாதித்தன் மகளான நிரஞ்சனா தேவி. கதையை ஒரு சுவாரஸ்யமான முடிச்சுடன் எழுதி இருக்கிறார் சாண்டி!
பதிலளிநீக்குவாங்க ஶ்ரீராம். கற்பனை கதாபாத்திரங்கள் மூலம் கதை செல்லும்போது ரொம்பவே சுவாரசியமாக இருக்கும். கல்கிக்கு அடுத்தது சாண்டில்யன்தான்.
நீக்குவேங்கையின் மைந்தனிலும் அம்மங்கா தேவியும் நரேந்திரனும் காதலிப்பதாக வரும். அம்மங்கா தேவியை ஒரு வாயாடியான சுட்டிப் பெண்ணாகக் காட்டி இருப்பார் அகிலன். அதை வைத்துத் தான் ராஜராஜ சோழன் கதாபாத்திரத்தில் லக்ஷ்மி ராஜேந்திரன் மகளாக வரும்போது சுட்டியாகவும் வாயாடியாகவும் இருப்பதாகக் காட்டி இருப்பார்கள்.
நீக்குஇந்த ரத்தினமாலை சாண்டில்யன் கதையில் செங்கதிர் மாலை என்று வருகிறது. அது சேரனுக்கு சொந்தம் என்று எழுதி இருக்கிறார் அவர்.
பதிலளிநீக்குரத்னஹாரம் பாண்டிய மன்னனுடையது என்றுதான் நான் பல இடங்களில் படித்திருக்கிறேன். குலசேகர ஆழ்வார், அதாவது இரண்டாம் சேரமான் பெருமாள், பல்லவர், சோழர் மற்றும் பாண்டியர்களைத் தோற்கடித்தவர் என்று வரலாறு சொல்கிறது.
நீக்குசக்திவர்மன் கிபி 999லிருந்து 2010வரை வேங்கிநாட்டு அரசனாக இருந்தான். அவனுக்குப் பிறகு விமலாதித்தன் வேங்கி நாட்டு அரசனானான் (அதாவது ராஜராஜ சோழனின் மருமகன்).
பதிலளிநீக்குவிமலாதித்தன் கிபி 2011லிருந்து 7 ஆண்டுகள் ஆட்சி புரிந்தான். 2000??
நன்றி. உடனடியாக சரி செய்து விட்டேன். நான் படிக்கும்போது கூட கவனத்தில் பதியவில்லை!
நீக்குவாங்க ஜெயகுமார் சார். தொடர்ந்த தட்டச்சில் வரும் தவறுகளைப் பிறகு சரி செய்வேன். இவை கவனத்தில் வரவில்லை. நன்றி
நீக்கு// கல்லக்குடி (ஊர் நினைவுக்கு வருதா? பெயரும் நினைவுக்கு வரணுமே) //
பதிலளிநீக்குமறக்க முடியுமா? தலைவிதி!
அவருடைய இயற்பெயர் தட்சிணாமூர்த்தி
நீக்கு:)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))000
நீக்குடால்மியா சிமிண்ட் தொழிற்பேட்டை காரணமாக டால்மியாபுரம் (வடக்கத்திய பெயர்) என்றிருந்த ரயில் நிலையப் பெயரை அதன் மூலப்பெயரான கல்லக்குடி என மாற்றம் செய்ய அந்தப் போராட்டம்.
நீக்குவளர வேண்டிய எந்த இயக்கத்திற்கும் எல்லாக் காலங்களிலும் இப்படி ஏதாவது ஒன்று தேவையாகத் தான் இருக்கிறது.
எந்தப் போராட்டமும் நம்பிய கொள்கை வழி அல்லது மக்களின் முன்னேற்றத்துக்கான போராட்டமாக இருக்க வேண்டும். இதில் இயக்கம் வளர்வதைவிட, தான் எப்படி வளர்ந்து கொள்ளையடிப்பது என்ற நோக்கமே விஞ்சி இருந்ததால், பாடலில் மாத்திரமே இருக்கும் விஷயம் மக்கள் மனதில் அறவே இல்லை.
நீக்குஎப்போதாவது, திமுக, கருணாநிதி ஆட்சியைக் கொண்டு வருவோம் என எந்தத் தேர்தலிலாவது சொல்லியிருக்கிறதா?
தனி நபர் வழிபாட்டிற்குப் பழக்கப்பட்ட நம் நாட்டில் கட்சியே அந்த தனி நபர் தான் என்றும் அந்தக் கட்சியின் வளர்ச்சிக்குப் பாடுபட்ட பலர் மறக்கப்படுவதும் இயல்பாகப் போயிருக்கிற சூழலில் எந்தக் கட்சியும் இதற்கு விதிவிலக்கல்ல என்ற உண்மை உதாரணங்களை எடுத்துச் சொல்லாமலே எல்லாருக்கும் தெரிந்திருக்கிறது.
நீக்குஆனால் மாற்றங்கள் இல்லாமல் அடுத்த கட்ட நகர்வு இல்லை என்ற இயற்கை விதி தான் நம்மை ஒவ்வொரு கட்டத்திலும் தனி நபர் வாழ்க்கையிலும் பொது வாழ்க்கையிலும் வழி நடத்திச் செல்கிறது என்ற உண்மை புரிகிறது.
சோழர் சரித்திரம் கல்வெட்டுகள், அகழ்வார்வுகள் , சிலைகள் என பல ஆதாரங்களுடன் காட்சிப்படுத்தப்பட்டு சிறப்பாக தந்துள்ளீர்கள்.
பதிலளிநீக்குவேங்கை நாட்டுக்கு அப்பால் கோதாவரி வரலாறுகள் அறிந்தோம்.
சோழரங்கம் ஏரியும் தகவல்களுடன், படத்துடன் காட்சிப் படுத்தி உள்ளீர்கள்.கண்டுகொண்டோம். நன்றி.
வாங்க மாதேவி அவர்கள். கருத்துக்கு மிக்க நன்றி
நீக்குசோழர் சரித்திரம் கல்வெட்டுகள், அகழ்வார்வுகள் , சிலைகள் என பல ஆதாரங்களுடன் காட்சிப்படுத்தப்பட்டு சிறப்பாக தந்துள்ளீர்கள்.
பதிலளிநீக்குவேங்கை நாட்டுக்கு அப்பால் கோதாவரி வரலாறுகள் அறிந்தோம்.
சோழரங்கம் ஏரியும் தகவல்களுடன், படத்துடன் காட்சிப் படுத்தி உள்ளீர்கள்.கண்டுகொண்டோம். நன்றி.
அந்தப்பக்கமாய்க் காரில் போகும்போதெல்லாம் சோழகங்கம் எங்கே இருக்கோ என நினைச்சுப்பேன். இன்னிக்குத் தான் இந்தப் படத்தைப் பார்க்கிறேன். பெரிய ஏரியாக இருக்கும் போல. பாண்டியர்களுக்கும் இலங்கை அரசர்களுக்கும் ரத்தசம்பந்தமான உறவு கூட இருந்ததாகப் படிச்சிருக்கேன். பெரும்பாலும் இப்போவும் திருநெல்வேலி, நாகர்கோயில் பக்கம் உள்ளவர்கள் இலங்கையுடன் நெருங்கிய தொடர்பு வைச்சிருப்பாங்க. சமையல் கூடக் கொஞ்சம் ஒத்துப் போகும். திருநெல்வேலி சொதியே இலங்கையிலிருந்து வந்தது என்பார்கள். திருநெல்வேலிப்பக்கம் துவையலை இலங்கையில் சொல்வது போல் சம்பாரம் என்பார்கள். கொத்துமல்லிச் சட்னியை "சம்பாரப் புளி" எனத் தென் தமிழ்நாட்டவர்கள் சொல்லுவார்கள்.
பதிலளிநீக்கு//சமையல் கூடக் கொஞ்சம் ஒத்துப் போகும்.// கீதா ரங்கனை நினைவுபடுத்துகிறீர்களே கீதா சாம்பசிவம் மேடம். நீங்கள் சொல்லும் சம்பாரம், கொத்துமல்லித் துவையல் அல்ல (அதாவது நீர்விட்டுச் செய்வது) புளி, காரம் போன்றவற்றைச் சேர்த்து அம்மியில் அரைப்பது (நீர் விடாமல்) என்று நினைவு. எனக்கு அது ரொம்ப ரொம்பப் பிடிக்கும். அதிலும் தயிர் சாதத்திற்கு, அல்லது தோசைக்கு, நல்லெண்ணெய் விட்டுச் சாப்பிட்டால்... என் அம்மா நினைவு வரும்.
நீக்குபாண்டியர்களுக்கும் இலங்கைக்கும் ரத்த சம்பந்தம் உண்டு. காரணம், உறவை பலப்படுத்த பாண்டிய இளவரசியை மணம் செய்து கொடுத்தார்கள்.
நம்ம கேஜிஜி சார், புதன் கிழமை தவிர மற்றச் சமயங்களில் இந்தப் பக்கமே வருவதில்லை. ஒருவேளை யூடியூபில் ஆழ்ந்துவிடுகிறாரோ.
நீக்குஎனக்கு வரும் சந்தேகம்.. ஒரு நாட்டின் இளவரசியை இன்னொரு நாட்டிற்கு மணம் செய்து கொடுத்துவிடுகிறார்கள், உறவைப் பலப்படுத்த என்ற பெயரில்.
அந்தப் பெண் மனது எப்படி இருக்கும்? முழுவதும் தெரியாத தேசம். அங்குள்ளவர்களுக்கு இவள் வேற்று நாட்டைச் சேர்ந்தவள், உளவு சொல்லிவிடுவாளோ என்ற எண்ணம் இருக்கும். எல்லோரும் சந்தேகப்படும் ஒரு இடத்தில் அவள் எப்படி நிம்மதியாக வாழ்வாள்?
நமக்கு குந்தவை பற்றி நல்ல எண்ணம் உண்டு. ஆனால் வேங்கி நாட்டவர்களுக்கு அவள் அந்நியள் தானே. அவளுக்கு அதே மரியாதை இருந்திருக்குமா? அவள் தன் கருத்தாகச் சொல்வதை, இது நம்ம நாட்டுக்கு நல்லதா இல்லை அவளுடைய தேசத்துக்கு எது நல்லதோ அதைச் சொல்கிறாளா என்ற சந்தேகம்வரும் அல்லவா?
நீக்குஇதில் உங்களுக்குத் தெரிந்த (சிலருக்குத் தெரிந்திருக்காது) விஷயம் ஒன்றைச் சொல்கிறேன். கலாநிதி மாறன், தயாநிதி மாறன் மீது கருணாநிதி குடும்பம் பகையுணர்வு கொண்டிருந்தபோது, அதனைச் சரிப்படுத்த ஸ்டாலின் சகோதரி செல்வி-இவர் அவர்களுக்கு சித்தி, தந்தையின் தம்பியை மணந்துகொண்டதால், கருணாநிதி வீட்டுக்கு வந்து அவரைப் பார்க்கிறார். அதற்கு கருணாநிதி, என் மகளாக எப்போதும் வீட்டுக்கு வா. ஆனால் இந்த விஷயத்துக்காக இங்கு வரவேண்டாம் என்று சொன்னாராம்)
அவர் தனது புதன் கிழமைப் பணியைக் குறை வைக்காமல் செய்து விடுகிறார். சமீபத்தில் ஒரு புதன்கிழமைப் பதிவில் கீதா ரெங்கனுக்காக ஒரு முக்கியமான குறிப்பு கொடுத்திருந்தேன். அதைப் பார்த்தவர், ' கீதா ரெங்கன் பார்க்கவும்' என்று தானும் ஒரு குறிப்பு கொடுத்திருக்கிறார். கீதா ரெங்கன் தான் இன்னும் பார்த்தாரா தெரியவில்லை.
நீக்குஅன்றன்றைய பதிவு அன்றோடு போயிற்று என்று எண்ணாமல் தனிப் பதிவிடுவோர், அடுத்த நாளும் தன் பதிவுக்கு யாரேனும் ஏதாவது கருத்து சொல்லியிருக்கிறார்களா என்று பார்க்கும் ஆர்வம் கொள்ள வேண்டும்.
(மேலே காண்பது 'நம்ம கேஜிஜி சார்' என்று நீங்கள் சொல்லியிருப்பதற்கானது)
நீக்குபுரிந்துவிட்டது ஜீவி சார். பார்க்க வேண்டியவர் பார்த்தாரா என்பதுதான் சந்தேகம்.
நீக்குஜீவி அண்ணா, நான் ஃபாலோ அப் கமென்ட்ஸ் வைத்திருக்கிறேன் ஆனால் சில சமயங்களில் நான் பார்ப்பது விடுபடும். இங்கு கருத்துகள் வேறு இரு தளங்கள் கருத்துகள் கொடுப்பதே நேரம் சரியாகிவிடுகிறது. எனக்கும் தனிப்பட்ட வேலைகள் நிறைய இருக்கு. என் வாசிப்பு, வீட்டு வேலைகள், வேறு பணிகள் என்று. ஒரே இடத்தில் பல மணி நேரம் செலவிடுவது எனக்குக் கடினம், அண்ணா. அதனால்தான் பல சம்யங்களில் வலைத்தளம் வேண்டாம் நம் வேலையைப் பார்ப்போம் என்று போய்விடலாமா என்றும் தோன்றி இடையில் இடைவெளி கூட விட்டேன்.
நீக்குபார்க்கிறேன் அண்ணா உங்கள் கருத்தை
கீதா
ஆர்வம் இல்லாமல் இல்லை உங்கள் கருத்துகளைப் பார்த்து பதிலும் கொடுத்தேன் ஆனால் அதன் பின் பார்க்கவில்லை....எனக்கு வீட்டில் பொறுப்புகள் உள்ளன. 90 + அப்பா. அவரைக் கொஞ்சம் வெளியில் நடக்க வைக்க அதுவே 1 மணி நேரம் ஆகிவிடும் மெதுவாக நடப்பார் நாமும் கவனமாக இருக்க வேண்டும் என்பதால்...
நீக்குகீதா
படங்களைப் பெரிது பண்ணிப் பார்க்க முடியலை. அநேகமாக ஒவ்வொரு வாரமும் நினைச்சுப்பேன். சில சமயங்களில் சொல்லவும் சொல்லி இருக்கேன். எல்லாப் படங்களும் அபூர்வமாக இருக்கின்றன. இங்கே உள்ள சிவன் கோயிலில் சப்தகன்னிகள் இடம் பெற்றிருந்திருக்கின்றனர். ஆனால் இந்தப் பெரிய மறை, பெரிய குறிச்சி எல்லாம் எங்கே இருக்குனு புரியலை. ஊர்ப் பெயரே புதுசு.
பதிலளிநீக்குகல்லக்குடி கொண்டானை மறக்க முடியுமா? அப்படி ஒண்ணு நடக்கலைனா என நினைச்சு வேணா பார்த்துக்கலாம். எல்லாம் நம்ம தலை எழுத்து.
இந்த ஊர்ப்பெயர்களை அந்தச் சிலைகளின் கீழே குறிப்பிட்டிருந்தார்கள். எங்கு இந்த ஊர்கள் இருக்கின்றன என்று ஆராய ஆசை. நேரமில்லை.
நீக்குஎனக்குத் திருப்தியாக இருக்கும் படங்களையே இங்கு பகிர்கிறேன் கீசா மேடம்.
ஐயனார், காமரசவல்லியில் இருந்து முருகன், சப்த கன்னியர் தக்ஷிணாமூர்த்தி எனப் பலரும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னேயே தமிழ்நாட்டில் கோயில்களில் குடி கொண்டிருந்திருக்கிறார்கள். ஆனால் தீராவிடமோ இந்த நாட்டில் இவங்களுக்கெல்லாம் இடமே இல்லை, இப்படி எல்லாம் நடக்கவே இல்லைனு சொல்லிக் கொண்டு காலத்தை ஓட்டுகின்றனர். இவை எல்லாம் மெய்க்கீர்த்தியில் இடம் பெற்றவை என்பது கூடத் தெரியாத சரித்திர அறிவு இல்லாத மக்களா இவங்கல்லாம்? இப்போதைய சரித்திரத்தில் இதை எல்லாம் சொல்லிக் கூடக்கொடுக்க மாட்டாங்க. :(
பதிலளிநீக்குதிருவள்ளுவர், கிறித்துவ மதத்தைச் சேர்ந்தவர், அவர் பாதிரியார்களிடம் கல்வி பயின்றவர் என்று நீங்கள் ஒத்துக்கொள்ளாதவரை திருக்குறளுக்கு தமிழகத்தில் இடம் இல்லை. அதுபோன்ற ஒரு அளவுகோல்தான் எல்லாவற்றிர்க்கும். சோழர்கள் இந்துக்கள் இல்லை என்று சொன்னால்தான் மதிப்பு. இதுதான் கடந்த 60 வருட தமிழகத்தின் தாழ்வு.
நீக்குகல்வெட்டுக்கள், அகழாய்வில் கிடைத்த பொருட்கள்னு எல்லாமும் அருமை. கல்வெட்டுக்களை உங்களால் படிக்க முடிஞ்சதா? கருவறையின் மேற்புறத் தோற்றம் அழகாக இருக்கு. மனதில் பெருவுடையார் கோயில் கருவறையும் நினைவில் வருது.
பதிலளிநீக்குகீசா மேடம்.. கல்வெட்டு எனக்குப் படிக்க இயலவில்லை. அதற்கான கல்வியை ஆரம்பித்து விட்டுவிட்டேன். ஆனால் அங்கிருந்த பொருட்கள் எல்லாமே சரித்திரம் சம்பந்தப்பட்டது.
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவணக்கம் கோமதி அரசு மேடம்...வாழ்க வளமுடன்.
நீக்குவரலாறு அருமை.நீங்கள் எழுதும் கங்ககை கொண்ட சோழபுர பதிவுகள் என் மலரும் நினைவுகளை கொண்டு வந்து கொண்டு இருக்கிறது.
பதிலளிநீக்குநானும் திரும்பி பார்க்கிறேன். நாங்கள் ஜனவரி முதல் தேதியில் போய் வருவதாலும் உறவினர்களை விடுமுறை நாட்களில் தான் அழைத்து செல்ல முடியும் என்பதாலும் சிற்ப கூடத்தை பார்த்தது இல்லை.
உங்கள் பதிவின் மூலம் பார்த்து கொண்டேன்.
https://mathysblog.blogspot.com/2016/01/blog-post.html
சோழகங்கம் ஏரி- . (கோவிலிலிருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது)கங்கையிலிருந்து நீரைக் கொண்டு வந்து இங்கே விடப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
இந்த பதிவில் ராஜேந்திசோழன் 11ம் நூற்றாண்டில் இந்த சோழகங்க ஏரியை உருவாக்கினார் இன்று பொன்னேரி என்று அழைக்கப்படுகிறது.
என்று எழுதி இருப்பேன்
சோழகங்கம் ஏரியின் இரண்டு படங்களை பகிர்ந்து இருப்பேன்.
இந்த இடங்களுக்கெல்லாம் நீங்கள் சென்றுவந்திருக்கிறீர்கள் என்று தெரியும் கோமதி அரசு மேடம். அதுவுமே நான் சென்றதற்கு ஒரு உத்வேகமாக அமைந்தது (நாதமுனிகள் திருவரசு போன்றவை)
நீக்குஅகழாய்வில் கிடைத்தவற்றை காட்சி படுத்தி எழுதி வைத்து இருப்பது அருமை.
பதிலளிநீக்குகங்கைகொண்டசோழீச்வரம் கருவறையின் மேற்புறத் தோற்றம் அருமை. முன்பு மேல் தளம் பார்க்க விடுவார்கள் அப்போது ஒரு துவாரம் இருக்கும் அது வழியாக கோபுர உட்புறத்தை பார்க்கலாம்.
அது போல தஞ்சையில் உள் பகுதியை சுற்றி வர மராட்டிய , சோழ ஓவியங்களையும் கோபுரம் உட் கூடு அமைப்பையும் பார்க்கலாம் பார்த்து இருக்கிறோம். அப்போது எல்லாம் கோயிலில் கூட்டம் இருக்காது அனுமதி கிடைத்தது, இப்போது கூட்டம் அதிகம் வருவதால் தடை செய்து விட்டார்கள்.
என் ஆபீஸில் வேலை பார்த்த ஒருவன், அவனுடைய சொந்தக்காரரிடம் சொல்லி கங்கைகொண்ட சோழீச்வரம் உட்புறம் எல்லாம் பார்க்க அனுமதி வாங்கித்தருகிறேன் என்று பத்து வருடங்களுக்கு முன்பு சொல்லியிருந்தான். அப்போது போகவில்லை.
நீக்குதஞ்சைக்கோயில் உட்புறங்களைப் பார்த்ததில்லை.
தற்போது அனுமதிக்காதது நல்லதுதான். பலருக்கு அந்த இடங்கள் பொழுதுபோக்குக்கானது. வரலாற்றை மதித்து அந்த இடங்களை அக் கண்ணோட்டத்தோடு பார்க்க வருபவர்கள் மிக மிகக் குறைவு.
கோமதி அரசு கொடுத்து வைத்தவர். நான் கோபுரம் மட்டும் தான் பார்த்திருக்கிறேன்.
நீக்குஅவர் கணவர் திருநாவுக்கரசு அவர்களுக்கும் பெரும் ஆர்வம் இருந்ததால் ஆலய தரிசனங்கள் அவருக்கு சாத்தியமானது. அரசு அவர்கள் மிக அழகாக டாக்குமென்ட் செய்திருப்பதை, ஆலய அமைப்பு, சந்நிதி விவரங்கள், அவர் பகிர்ந்திருக்கிறார்.
நீக்குஎங்களுக்கெல்லாம் படிக்கக் கிடைத்த தொடர்கதைகளின் வழி நாங்கள் அறிந்து கொண்டது அதிகம். அதுவும் கதையாகப் படித்ததால் தெளிவு கிடைத்தது.
பதிலளிநீக்குவாங்க வல்லி சிம்மன் மேடம். உரை நடையைவிட, நாவல்கள் மிகச் சுலபமாக சரித்திர விஷயங்களை, ஆழமாகப் புரிந்துகொள்ள வைத்துவிடும்.
நீக்கு