நெல்லைத்தமிழன் :
(1) (2ம் எண் காரர்கள் 7ம் எண்ணை மணக்கலாம்) என்பது போன்று நியூமராலஜி பார்த்து எங்காவது திருமணம் நடைபெறுகிறதா?
# எண் பொருத்தம் ஒரு அடிஷனல் செக் ஆக ஆராயப்பட்டதை அறிவேன்.
$ Numerology நிமித்தம் பார்த்தல். ஜாதகம் ஜோசியம்,குறிகேட்டல் எல்லாமும் சரி, சரியில்லை என்கிற மாதிரி தீர்மானிக்கப் பட்ட விஷயங்களுக்கு பலம் சேர்க்கும் விதமாகவே இருக்கின்றன.
& 'எண்'ண பொருத்தம், மணக்கும் இந்தப் பொருத்தம்!
(2) சிறிய வயதிலேயே இவன் வளர்ந்த பிறகு, இந்த மாதிரி பெரிய ஆளாவான் என்று கணிப்பது சுலபமா?
# சுலபமில்லை மட்டுமல்ல மிகக் கஷ்டம். விதிவிலக்கு இசை ஓவியம் போன்ற செய்நேர்த்தி கைவரப் பட்ட குழந்தைகள். உதாரணமாக ரவிகிரண், மாண்டலின் ஶ்ரீநிவாஸ்.
$ பரம்பரை, பயிற்சி இவற்றால் மேம்படா வாழ்க்கை, பிறந்த நேரம் கொண்டு கணிக்கப் படக்கூடும் என்பது சரியல்ல.
& கணிப்பது சுலபம்தான். ஆனால் கணித்தது போல அமையுமா என்பதே சந்தேகம்.
(3) நமக்கு கடவுள் அவசியமா இல்லை கடவுளுக்கு நாம் அவசியமா? -- என்ன இது ஜி.எம்.பி சாரா இந்தக் கேள்வி கேட்டதுன்னு நினைக்காதீங்க. ஒரு மாறுதலுக்கு நான் கேட்டிருக்கிறேன்.
# நமக்குதான் கடவுள் அவசியம். அவருக்கு நாம் அவசியமாக இருக்க வேண்டும் என்ற கற்பனையில் பல கதைகள் புனைந்திருக்கிறோம்.
$ நாம் கடவுளை சார்ந்திருத்தல் நன்மை பயக்கலாம். கடவுள் என்பதே நாம்தான்.
& உயிருள்ள பொருட்கள், ஜடப்பொருட்கள் எல்லாவற்றிலும் ஒரே பிரம்மம்தான் இருக்கு என்கிறார்கள்.
(4) இது மூட நம்பிக்கை என்று யார் தீர்மானிக்க முடியும்? மூட நம்பிக்கை என்பது ஒவ்வொருவர் கணிப்பிலும் மாறுபடுமா மாறுபடாதா?
# அடிப்படை நியாயம் இல்லாத நம்பிக்கை மூட நம்பிக்கைதான். ராசி சகுனம் ஹோரை என்று பார்ப்பவர்கள் அவற்றுக்கான நியாயங்களைக் கற்பித்துக் கொள்கிறார்கள்.
$ பஸ்சுக்கு காத்திருக்கும் போது இப்படி நடந்தால் நமக்கு இடம் கிடைக்கும், கிடைத்தால் காரிய சித்தி.... இப்படி தொடர்பற்ற விஷயங்களை காரணமாக நினைப்பதும் மூட நம்பிக்கையே.
நான் மூடன். நான் நம்பாதவற்றை என்ன என்று சொல்வது?
& இது மூடநம்பிக்கை என்பதை யாராலும் தீர்மானிக்கமுடியாது. மூடநம்பிக்கை என்பது ஒவ்வொருவர் கணிப்பிலும் மாறுபடும்.
தயவு செய்து அனைத்துக் குழுவினருக்கும் பகிரவும் என்று கண்ட கண்ட வாட்சப் செய்திகளை அனுப்புபவர்கள் பற்றி உங்கள் எண்ணம்?
# நார்ஸிஸம் வாயரிஸம் போன்ற ஒரு வலிய உந்துதல் இந்த பரவல் லைகிஸம்.
& செய்தியின் முக்கியத்துவத்தைப் பொருத்தது அது. உயிர் காக்கவேண்டிய தருணங்கள் (இரத்ததானம் etc) நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போன்ற சமூக உதவி செய்திகள் தகுந்த ஆதாரத்தோடு (தேதி, இடம், நபர் பெயர், மொபைல் எண் விவரங்களுடன் ) அனுப்பப்பட்டால் வரவேற்கலாம். அதை விட்டு, ஊர்ஜிதமாகாத தகவல்களையும் ( ஈரோட்டில் சற்றுமுன் நடந்த விபத்தில் அடிபட்டு நினைவிழந்தவர் ஒருவர் ....... etc) குப்பைகளையும் பகிர்ந்து உண்மையான தமிழன் என்றால் உடனே ஷேர் பண்ணு .. என்று அனுப்புபவர்களை முட்டிக்கு முட்டி தட்டி வைக்கவேண்டும்!
ஏஞ்சல் :
1, குழப்பவாதிகளை நம்பலாமா ?
# கு.வா என்று தெரிந்த பின்பும் நம்புவீர்களா ?
$ Kuzhappavaadhi என்று தெரிந்தும் நம்ப உங்களுக்குப் பைத்தியமா?
& ஏன் இப்படி சுத்தி வளைத்து கேட்கிறீர்கள்? கமல் ட்வீட்களை நம்பலாமா என்றே கேட்டிருக்கலாமே!
2, நம்பிக்கை என்பது எதன் அடிப்படையில் வரும் ?
# அனுபவத்தின் அடிப்படையில் வரும். (" முருகானு சொல்லிட்டுச் செஞ்சால் சரியாயிடும் " எங்கள் தாயார்)
$ நம் திறமை பலம், நமக்கு உதவுபவரின் பலம், திரும்பத் திரும்ப நடைபெறும் நிகழ்வுகள் ஆகியவற்றின் அடிப்படையில்.
3, நேரம் சரியில்லை என்கிறார்களே இதில் நேரம் என்றால் என்ன ?
# நம்பிக்கையின் பாற்பட்ட கிரக சாரம்.
$ நாம் காரியத்தை தொடங்கிய நேரமோ கைவிட்ட நேரமோ எதுவானாலும் சரியான காலத்தில் செய்யாத, அல்லது செய்த .....
ஆமாம், இப்படி சொல்லிக்கொண்டே போனால் நேரம் சரியில்லை என்று .(ஆமாம் உங்களுக்கா, எனக்கா?) தெரிந்து கொள்ளலாம்.
& விதி.
4, தற்கால நாகரீக உலகில் எதற்கு இத்தனை ஏற்றத்தாழ்வு ?
# ஏற்றத் தாழ்வு எப்போதும் இருக்கும். அது அநாகரிகம் அல்ல இயல்பு.
$ நாகரீக உலகத்துக்கும் ஏற்றத்தாழ்வுகள் என்பதற்கும் என்ன தொடர்பு?
# அவை பல நிகழ்வுகளுக்கும் பொருந்தி இருப்பதால் கண்டிக்க ஏதுமில்லை.
$ தாத்தா பாட்டி காலத்தில் நக்கீரர் வந்து சாலை மறியலில் ஈடுபாடு காட்டவில்லை. வேறு வேலை இருந்திருக்கலாம்.
& நீங்கள் கேட்கும் கேள்வி புரிகின்றது. உடல் ஊனத்தை முன் நிறுத்தி இருக்கின்ற சில பழமொழிகள் சரியா என்று கேட்கிறீர்கள். சரியில்லைதான். ஆனால் அந்தக்காலத்தில், சுருங்கச் சொல்லி விளங்கவைக்கவேண்டும் என்று நினைத்த சில அறிஞர்கள், இத்தகைய சொல்லாடல்களை செய்திருக்கலாம். அவர்களின் நோக்கம் ஊனமுற்றவர்களை கேலி செய்யவேண்டும் அல்லது சிறுமைப்படுத்தவேண்டும் என்று இருந்திருக்காது.
6, கனவுகள் பின்னால் வருவதை முன்னே அறிவிப்பவை என்பது உண்மையா ? அல்லது மனப்பிரம்மையா ?
# கனவின் அடிப்படை ஆசை அல்லது அஜீரணம். எனவே பிரமைதான்.
$ தோழி கண்ட கனவுகள் கானல் நீராவதைக் காண்கிறோம். கனவுகள் நம் உள்ளுணர்வின் வெளிப்பாடாக இருக்க நிறைய வாய்ப்பு.
& எனக்கு வந்த சில கனவுகள் அப்படியே நிகழ்ந்ததை அறிவேன். சில மட்டும்தான்.
7, ஒரு விஷயத்தை முழுமையா குறையின்றி செய்ய இயலுமா ?
# முடியும்.
$ 6 sigma படியுங்கள்.
& நல்ல திட்டமிடுதலும், அதற்கான பொருட்களும் ஆட்களும் இருந்தால் நிச்சயம் செய்ய இயலும்.
ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம் கருதி இடத்தாற் செயின்
8, ஒரு விஷயத்தை முயற்சிக்காம நமக்கு வராதுன்னு கைவிடுவது நல்லதா ? அல்லது முயன்று தோல்வியுறுவது நல்லதா ?
# அது முயன்று தோற்றால் உண்டாகக் கூடிய பின்விளைவுகளைச் சார்ந்தது.
$ முயலும் முன் எண்ணிப்பார்ப்பது தவறில்லை.
& முயன்று தோல்வியுறுவது நல்லது. ஆனால் அதோடு நிறுத்தக்கூடாது. ஒரு தோல்வி நமக்கு இரண்டு பாடங்களைக் கற்றுக் கொடுக்கிறது. ஒன்று - எது வெற்றி பெற வாய்ப்பில்லை என்பது தெரியவரும். இரண்டு, வேறு வழிகளில் நோக்கத்தை அடைய முயற்சி செய்ய ஒரு சந்தர்ப்பம்.
9, முடிவற்ற தன்மை /முடிவிலி என்றால் என்ன ? இந்த சந்தானம் அடிக்கடி infinity பற்றி கேட்கிறான் என்னை அதை உங்ககிட்ட கேட்டுட்டேன் :)
# இன்ஃபினிடி மாய எண் என்று தானே சொல்கிறார்கள். எனவே முடிவற்றது என ஒன்று இராது. நமக்குப் புலப்படாத தொலைவில் சில இருக்கலாம்.
$ இரண்டை மூன்றால் வகுத்துக் கொண்டே ......
& அட ஏனுங்கோ இந்தக் கேள்வியை என்னிடம் கேட்டீங்கோ! நான் என்ன கணித மேதையா!
& அட ஏனுங்கோ இந்தக் கேள்வியை என்னிடம் கேட்டீங்கோ! நான் என்ன கணித மேதையா!
10, மனிதன் மாறிவிட்டான் என்பது உண்மையா ? அவனை மாற்றியது எது ?
# உண்மை. மாற்றுவது காலம், ஆசை, ஆர்வம், அச்சம், சினம்.
$ உண்மை. சந்தர்ப்பம், சூழ்நிலை.
& மனிதன் மாறவில்லை. மாறிவிட்டதுபோல நடிக்கிறான்.
11, பாட்டி வைத்தியம்னு சொல்றாங்களே ஏன் தாத்தா வைத்தியம்னு ஒன்று இல்லை ?தாத்தாக்களுக்கு வைத்தியம் தெரியாதா ?? இது தாத்தாக்கள் சார்பாக எழுப்பப்பட்ட வினா :)))))))
# குடும்பத் தலைவர் அலுவலாக வெளியே செல்வார். சிறு பிரச்சினைகளுக்கு வீட்டு வைத்தியம் தாய்மார்கள் கையில்தான் இருக்க வேண்டும். சீனியர் தாய் பாட்டி தான். எனவே பாட்டி வைத்தியம்.
$ பாட்டிகளுக்குத்தான் பொருள் இருக்குமிடம் தெரியும். எல்லாமே சமையலில் உபயோகிக்கும் பொருள்தானே.
================================================
9, 18, 27 ஆம் தேதியில் பிறந்தவர்கள் பற்றி ...
இளவயதில் பல இன்னல்களுக்கு ஆளாகி வளரும் சூழ்நிலையில் இருந்திருப்பார்கள். ஆனால், எந்த இன்னலையும் எதிர்த்து வெற்றி பெரும் மனிதர்களாக வாழ்க்கையின் பிற்காலத்தில் வாழ்வார்கள்.
யாரிடமும் கைகட்டி சேவகம் புரிவது இவர்களுக்கு பிடிக்காது. தைரிய மனம் கொண்ட போர்வீரர்கள்.
சொல்லிலும் செயலிலும் நிதானம் காட்டாமல் அவசரப்பட்டு ஏதேனும் பேசி, செய்து, அவப்பெயரைத் தேடிக்கொள்வார்கள்.
மற்றவர்கள் இவரை சண்டைக்காரராகத்தான் பார்ப்பார்கள்.
தலைமைப்பதவியை ஒன்பதாம் எண் ஆட்களிடம் கொடுத்து, அனைத்து அதிகாரங்களையும் அவர்களுக்கு வழங்கினால், நிச்சயம் நன்றாக செய்வார்கள். ஆனால் அவர்களை செயல் செய்யவிடாது யாராவது இடைஞ்சல் செய்துகொண்டிருந்தால் எல்லாமே போச்சு!
மார்ச் 18 ல் பிறந்த பிரபலங்கள் என்று தேடினால், சஷிகபூர், கவுண்டமணி, நடிகை மனோசித்ரா, ஏக்நாத் சோல்கர் என்று சில பெயர்கள் கிடைக்கின்றன.
================================================
================================================
9, 18, 27 ஆம் தேதியில் பிறந்தவர்கள் பற்றி ...
இளவயதில் பல இன்னல்களுக்கு ஆளாகி வளரும் சூழ்நிலையில் இருந்திருப்பார்கள். ஆனால், எந்த இன்னலையும் எதிர்த்து வெற்றி பெரும் மனிதர்களாக வாழ்க்கையின் பிற்காலத்தில் வாழ்வார்கள்.
யாரிடமும் கைகட்டி சேவகம் புரிவது இவர்களுக்கு பிடிக்காது. தைரிய மனம் கொண்ட போர்வீரர்கள்.
சொல்லிலும் செயலிலும் நிதானம் காட்டாமல் அவசரப்பட்டு ஏதேனும் பேசி, செய்து, அவப்பெயரைத் தேடிக்கொள்வார்கள்.
மற்றவர்கள் இவரை சண்டைக்காரராகத்தான் பார்ப்பார்கள்.
தலைமைப்பதவியை ஒன்பதாம் எண் ஆட்களிடம் கொடுத்து, அனைத்து அதிகாரங்களையும் அவர்களுக்கு வழங்கினால், நிச்சயம் நன்றாக செய்வார்கள். ஆனால் அவர்களை செயல் செய்யவிடாது யாராவது இடைஞ்சல் செய்துகொண்டிருந்தால் எல்லாமே போச்சு!
மார்ச் 18 ல் பிறந்த பிரபலங்கள் என்று தேடினால், சஷிகபூர், கவுண்டமணி, நடிகை மனோசித்ரா, ஏக்நாத் சோல்கர் என்று சில பெயர்கள் கிடைக்கின்றன.
================================================
இன்றைய கேள்வி பதில் சிறப்பு.
பதிலளிநீக்குஎண் கணித சோதிடத்துக்கு வாசகர் கான்ட்ரிப்யூஷன் காணோமே
வரும் என்று எதிர்பார்ப்போம்.
நீக்குகாலை வணக்கம் அனைவருக்கும்.
பதிலளிநீக்குஎண்ணித் துணிக கரும்ம் துணிந்தபின்
எண்ணுவம் என்ப திழுக்கு
(துரை செல்வராஜு சார் வர நேரமாகுமோ என்ற எண்ணத்தில்)
அன்பு முரளிமா ,மற்றும் அனைவருக்கும்
நீக்குஇனிய காலை வணக்கம். கேள்விகள் பதில்கள் நறுக்
நறுக் சுவாரஸ்யம்.
+++++++++++++++++++
நானும் 9 ஆம் தேதிக்கு உரியவள் தான். நீங்கள் சொல்லி
இருப்பது எனக்குப் பொருந்தும்.
9 ஐ விட 18க்கு உழைப்பு ஜாஸ்தி,
27க்கு பலன் நிறைய.
நல்ல பலமுள்ள நம்பர். சிக்கலில் இருந்து விடுவித்துக் கொள்ள
அசராமல் முயற்சி எடுப்போம்.
வாழ்வில் சாலஞ் வேண்டும். இல்லாவிட்டால்
போரடிக்கும்.
எங்களுடன் வாழ்வது எளிதில்லை.
எல்லோரும் உண்மையாக இருக்க வேண்டும், நம் எதிர்பார்ப்புகளுக்கு
ஏற்ற விதத்தில் இருக்க வேண்டும் என்று நினைப்போம்.:):)
நன்றாக சொன்னீர்கள் !
நீக்கு//எங்களுடன் வாழ்வது எளிதில்லை.// ரொம்ப சரி. ஏனென்றால் பெரும்பான்மையோர் ரூல்ஸ் ராமானுஜர்கள்.
நீக்குஅன்பு பானுமா, மிக மிக நன்றி.
நீக்குவிடாக் கொண்டர்கள் என்றும் சொல்லலாம்.:)
:))
நீக்குவாட்சப் செய்தி பகிர்தல், முடவன் கொம்புத் தேனுக்கு... ஆகிய இரு கேள்விகளுக்குக் கொடுக்கப்பட்ட பதில் சிறப்பாக இன்று அமைந்துள்ளது.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குJaya Bhachan 9th April.
பதிலளிநீக்குஓ ! தகவலுக்கு நன்றி.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக இருக்கவும் இறைவனை மனதாற பிரார்த்தித்து கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பிரார்த்தனைகளுக்கு நன்றி.
நீக்குஅனைவருக்கும் காலை வணக்கம்.
பதிலளிநீக்குகாலை வணக்கம்.
நீக்குஉங்களுக்கும் வணக்கம் சொல்ல விட்டுப் போயிற்று கௌதமன் ஜி. நன்றி.
நீக்குயார் யாருக்கு வணக்கம் என்று சொன்னாலும் அது எங்கள் ப்ளாக் மூலம் நடைபெறுவதால், நாங்க பேதம் பார்ப்பதில்லை. எல்லாம் எங்களுக்கும் சேர்த்துதான் எடுத்துக்கொள்கிறோம்.
நீக்குமூன்றாவது கேள்வியின் மூன்று பதில்களும் சிறப்பு...
பதிலளிநீக்குநன்றி.
நீக்குபாட்டி வைத்தியத்தின் அருமை உங்கள் பதிலில் இருக்கிறது. நாள் நேரம் பார்த்து செய்தாலும் இறை அருள் இல்லாமல் எதுவும் நடக்காது.
நீக்குநன்றி.
நீக்குபிப்ரவரி 18-ல்:
பதிலளிநீக்குஅலெஸ்ஸாந்த்ரோ வோல்ட்டா (Alessandro Volta) மின்கலம் கண்டுபிடித்த விஞ்ஞானி, இத்தாலி)
கலீலியோ கலீலி (Galileo Galilei-வானியல் நிபுணர், நவீன இயற்பியலின் தந்தை, (இத்தாலி)- நிலவு வெண்மையாகவோ, வழவழப்பாகவோ இல்லை; கரடுமுரடான வெளியில், பெரும் மலைகளும், பள்ளத்தாக்குகளும் நிறைந்தது என்று கண்டுபிடித்துச் சொன்னதால் தேவாலயப் பெரிசுகளினாலும், ஊர் பிரபலங்களாலும் அவமதிக்கப்பட்டவர். போதாக்குறைக்கு வியாழ கிரகத்தை ’நான்கு பெரும் நிலாக்கள்’(later known as 'Galilean Moons') சுற்றிவருகின்றன என்றும் வாயைத்திறந்ததால், நன்றாக மொத்தப்பட்டவர்).
ராமகிருஷ்ண பரமஹம்சர்.
மே 18: பெட்ரண்ட் ரஸ்ஸல் (Betrand Russel), ஆங்கில தத்துவஞானி, எழுத்தாளர் (In Praise of Idleness).
செப். 18: சாமுவேல் ஜான்சன் (Samuel Johnson, ஆங்கில எழுத்தாளர், கவிஞர்)
தகவல்களுக்கு நன்றி.
நீக்கு*Bertrand Russell
பதிலளிநீக்குநன்றி.
நீக்கு
பதிலளிநீக்கு8, ஒரு விஷயத்தை முயற்சிக்காம நமக்கு வராதுன்னு கைவிடுவது நல்லதா ? அல்லது முயன்று//
இதற்கான பதில் அருமை.
நன்றி.
நீக்குகீதாமா வைக் காணோமே.
பதிலளிநீக்குகீசா மேடம் கஹாங் கயீ?
நீக்குஅம்பேரிக்காலேர்ந்து வந்தப்பறம் இணையத்தில் எழுச்சியா வருவது குறைகிறதே.. இணையத்துக்கு வந்தாலே கொரோனா வரும்னு தவறா புரிஞ்சிக்கிட்டிருப்பாங்களோ?
கீதா அக்கா உறவில் ஒரு சங்கடம். அதனால் வடநாடு சென்றிருக்கிறார்கள்.
நீக்குஉடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே
பதிலளிநீக்குஇடுக்கண் களைவதாம் நட்பு..
வாழ்க நலம்...
நெல்லைத் தமிழன் அவர்களுக்கு நன்றி...
உங்கள் நினைவு காலையில் வரும் என்பதற்கான உதாரணம் அது துரை செல்வராஜு சார்
நீக்கு:))
நீக்குஅனைவருக்கும் அன்பின் வணக்கம்...
பதிலளிநீக்குஅன்பின் வணக்கம்.
நீக்குசற்று நேரமாகி விட்டது...
பதிலளிநீக்குவழக்கம் போல சிந்திக்கவும் சிரிக்கவும் வைக்கும் விடலைகள்... ஓ!.. விடைகள்...
நன்றி ... ஹா ஹா !
நீக்கு>>> சுருங்கச் சொல்லி விளங்கவைக்கவேண்டும் என்று நினைத்த சில அறிஞர்கள், இத்தகைய சொல்லாடல்களை செய்திருக்கலாம். அவர்களின் நோக்கம் ஊனமுற்றவர்களை கேலி செய்யவேண்டும் அல்லது சிறுமைப்படுத்தவேண்டும் என்று இருந்திருக்காது..<<<
பதிலளிநீக்குவள்ளுவரும் ஔவையாரும் கூட இப்படிச் சொல்லிச் சென்றிருக்கின்றார்கள்...
இந்த ஊனமுற்றவர்களைக் கேலி செய்யும் போக்கு சினிமாவில்தான் அதிகம்.
நீக்குஒரு திருநங்கை ஶ்ரீநாத் த்வாரகை சன்னதி முன்பு வந்தபோது அனைவரும் வழிவிட்டனர். அவர் ஆடுவதற்கு அத்தனை கூட்டத்திலும் இடைவெளி கொடுத்தனர்.
மக்கள் மனதில் ஈரம் இருக்கு. மன ஊனம் உள்ளவர் மட்டுமே உடல் ஊனமுற்றவர்களைக் கேலி செய்வர்
முற்றிலும் உண்மை.
நீக்கு>>> நேரம் சரியில்லை என்கிறார்களே!... <<<
பதிலளிநீக்குகாலங்கருதி இடத்தாற் செய்க...
- வள்ளுவம்...
அதே, அதே.
நீக்குபுதன் நம்ம ஏரியா இல்லை என ஶ்ரீராமும் நினைக்கிறாரோ? அவரையும் காணலையே... காலை வணக்கத்துக்கு பதிலாவது போடுவாரே
பதிலளிநீக்குஎனக்கும் அதே சந்தேகம்தான். பார்ப்போம் .... எப்போ வருவாரோ?
நீக்குஏற்கெனவே சென்ற வாரம் எல்லாம் வந்திருக்கிறேன். நேரம் கிடைக்காத பட்சத்தில் மட்டம் போட்டு விடுகிறேன்.
நீக்குகேள்வி பதில் அருமை
பதிலளிநீக்குநன்றி.
நீக்கு//மனிதன் மாறவில்லை. மாறி விட்டது போல நடிக்கிறான்//
பதிலளிநீக்குநூறு % உண்மை
நன்றி.
நீக்குகேள்வி பதில்கள் சிறப்பு.
பதிலளிநீக்கு"எண்'ண பொருத்தம், மணக்கும் இந்தப் பொருத்தம்! " நல்ல பதில்.
நன்றி.
நீக்குகேள்விகளும் , பதில்களும் அருமை.
பதிலளிநீக்கு'//எண்'ண பொருத்தம், மணக்கும் இந்தப் பொருத்தம்!
உயிருள்ள பொருட்கள், ஜடப்பொருட்கள் எல்லாவற்றிலும் ஒரே பிரம்மம்தான் இருக்கு என்கிறார்கள்.
பாட்டிகளுக்குத்தான் பொருள் இருக்குமிடம் தெரியும். எல்லாமே சமையலில் உபயோகிக்கும் பொருள்தானே.//
ரசித்த பதில்கள்.
மிக்க நன்றி.
நீக்கு//(1) (2ம் எண் காரர்கள் 7ம் எண்ணை மணக்கலாம்) என்பது போன்று நியூமராலஜி பார்த்து எங்காவது திருமணம் நடைபெறுகிறதா?//
பதிலளிநீக்குபொருத்தம் பார்ப்பதென்பது நம் சமயத்தில் மட்டும்தானே ஜாதகம் பொருத்தம் என்றெல்லாம் இருக்கிறது நெ தமிழன், ஆனா சில இடத்தில், ஜாதகப்பொருத்தம் கொஞ்சம் குறைவாக இருப்பினும் நம்பர் பொருத்தம் சூப்பராக இருக்கிறது என மனதை சாந்தப்படுத்தி திருமணத்துக்கு ஒத்துக் கொண்டதாக அறிஞ்சேன்.. ஆனா பொதுவா, மன ஒற்ருமை இருக்கும் இடங்களை ஆராய்ந்தால் அங்கு நம்பர் பொருத்தம் கட்டாயம் இருப்பதைக் காணலாம்..
பிஞ்சு பேச்சாளர் + எண் கணித ஜோதிடர் அதிரா வாழ்க!
நீக்கு//மன ஒற்ருமை இருக்கும் இடங்களை ஆராய்ந்தால் அங்கு நம்பர் பொருத்தம் கட்டாயம் இருப்பதைக் காணலாம்..// சரியாக சொல்லியிருக்கிறீர்கள் அதிரா. ஜாதகப் பொருத்தம் மட்டும் பார்த்த பல திருமணங்களில் அவர்களை அறியாமலேயே எண் கணித பொருத்தமும் அமைந்திருக்கும்.
நீக்குஉண்மை பானு அக்கா.. நம் வீட்டிலும்:))
நீக்கு//கௌதமன் 18 மார்ச், 2020 ’அன்று’ பிற்பகல் 2:13
நீக்குபிஞ்சு பேச்சாளர் + எண் கணித ஜோதிடர் அதிரா வாழ்க!//
ஷை ஷையா வருதெனக்கு:))
:))
நீக்கு//(2) சிறிய வயதிலேயே இவன் வளர்ந்த பிறகு, இந்த மாதிரி பெரிய ஆளாவான் என்று கணிப்பது சுலபமா? //
பதிலளிநீக்குஇந்தியாவிலிருந்து ஒரு பெண் நம் ஊர்களுக்குள் வந்து கை பார்த்து சாஸ்திரம் சொலுவார், கொடுக்கும் காசையும் உணவையும் வாங்கிப் போவா.. அவவுடைய வாக்கு பலிக்கிறதென ஊரில நம்மவர்களுக்கு ஒரு நம்பிக்கை, நான் ஒரு 12,13 வயதாக இருந்தபோது, என் கையைக் காட்டச் சொல்லிக் காட்டினேன்.. அவ சொன்னா “உனக்கு டாக்டர் அல்லது எஞ்சினியர்தான் மாப்பிள்ளையாக வருவார்” என.. ஹா ஹா ஹா..
அட!
நீக்கு//தயவு செய்து அனைத்துக் குழுவினருக்கும் பகிரவும்//
பதிலளிநீக்குஇப்படியான வரி பார்த்தாலோ இல்லை யூ ரியூப்பில் எடுத்த எடுப்பில் சொல்லுவினம், “இந்த வீடியோவை ஸ்கிப் பண்ணாமல் முளுமையாகப் பாருங்கோ நிறைய விஷயம் சொல்லப்போகிறேன்”.. என
இப்படியானவற்றைப் பார்த்தவுடன் எனக்கு, கெட்ட கோபம் வரும் உடனேயே டிலீட் அல்லது குளோஸ்தான் பண்ணுவேன் ஹா ஹா ஹா..
நானும் அப்படித்தான்.
நீக்கு//ஏஞ்சல் :
பதிலளிநீக்கு1, குழப்பவாதிகளை நம்பலாமா ?//
# கு.வா என்று தெரிந்த பின்பும் நம்புவீர்களா ?//
ஹா ஹா ஹா அஞ்சூ யூப்பர் மாட்டீஈஈஈஈஈ ஹா ஹா ஹா அதானே தெரிஞ்சுகொண்டும் எதுக்கு சேற்றில கால் வைக்கோணும்:))
//2, நம்பிக்கை என்பது எதன் அடிப்படையில் வரும் ?/
நம்பிக்கையின் அடிப்படையிலதான் வரும்:))... ஒருதடவை நம்பிக்கையை இழந்துவிட்டால், பின்னர் வாயால சொன்னாலும் உள்ளத்தால் நம்ப மாட்டோம்..
//3, நேரம் சரியில்லை என்கிறார்களே இதில் நேரம் என்றால் என்ன ?//
காலம் ...என நினைக்கிறேன்ன்..
அதிராவின் அதிர் பதில்கள் பலே!
நீக்குஅது நான் வேறொரு குழப்பவாதிய நினைச்சு கேட்டேன் :) ஆனா கமல் அங்கிள் வந்துட்டார் ஹாஆஆ
நீக்குஹா ஹா !
நீக்குநீங்கள் யாரை குழப்பவாதியாக நினைத்துக் கேட்டீர்களோ அவர் உண்மையான குழப்பவாதியாக இல்லாமல் இருந்ததால்தான் நான் குழம்பிப்போய் வேறு ஒருவரை குழப்பவாதியாக நினைத்து பதில் எழுதி குழப்பிவிட்டேனோ என்று நினைத்து இப்போ குழம்பிக்கொண்டிருக்கிறேன் என்பதை இப்போ தெளிவாகக் கூறிவிடுகிறேன்.
நீக்குஅப்போ அவர் வருவாரா ?? எப்போ அதையும் குழம்பாம சொல்லிடுங்க ::))))))))))))))
நீக்கு’தேவன் வருவாரா?’ என்றொரு சிறுகதை-ஜெயகாந்தன்- நினைவில் வருகிறது. அந்தக் கதையையும் கொண்டு, அதே தலைப்பில் ஜெயகாந்தனின் சிறுகதைத் தொகுப்பு ஒன்றை மீனாட்சி புத்தக நிலையம் வெளியிட்டிருக்கிறது. ஏஞ்சல் படிப்பாரா?
நீக்குபுது புத்தகமா ?? இப்போ உடனே கூகிளினத்தில் ஆடியோ கிடைத்தது .படிக்க /கேட்கப்போறேன் :)
நீக்குhttps://www.youtube.com/watch?v=IrpJVfwTjBI
நீக்குஆடியோ வடிவில் கேட்டேன் .மனசுக்கு என்னமோ செய்தது .எப்போதாவதே ஜெயகாந்தனை வாசிப்பதுண்டு இன்று உங்களால் கிட்டியது .மனதில் தோண்டிய /தோன்றிய சிந்தனை அழகம்மா ஆலிஸ் ஆகவோ அல்லது amy /அபிகெல் ஆகவோ இங்கே இருந்திருந்தா அப்பாவாக்கிய கய(தே)வனை தேடியிருக்க மாட்டா :( இவர்களை பயன்படுத்தி வீசும் கயவர்களை என்ன ஜென்மங்களில் வகையில் சேர்ப்பது ?நல்லதொரு கதையை பரிந்துரைத்ததற்கு நன்றி சார் .
கொஞ்சம் நாளைக்கு இந்த கேரக்டர்ஸ் மனதை விட்டு அகலாது அதுதான் ஜெயகாந்தனின் எழுத்து
நீக்கு@ ஏஞ்சல்:
நீக்குசுடச்சுடத் தேடி, கேட்டதற்கு/படித்ததற்கு நன்றி. மனதை பாதிப்பது இலக்கியம்.
//
பதிலளிநீக்கு6, கனவுகள் பின்னால் வருவதை முன்னே அறிவிப்பவை என்பது உண்மையா ? அல்லது மனப்பிரம்மையா ?//
சிலது நடக்கிறது பலது நடப்பதில்லை:)).. அனுபவம்:))
//8, ஒரு விஷயத்தை முயற்சிக்காம நமக்கு வராதுன்னு கைவிடுவது நல்லதா ? அல்லது முயன்று தோல்வியுறுவது நல்லதா ?
# அது முயன்று தோற்றால் உண்டாகக் கூடிய பின்விளைவுகளைச் சார்ந்தது.//
பதில் சூப்பர்..
//& அட ஏனுங்கோ இந்தக் கேள்வியை என்னிடம் கேட்டீங்கோ! நான் என்ன கணித மேதையா! //
ஹா ஹா ஹா இதுக்கும் கண் + நாடி போட்ட பூஸாருக்கும் ஏதும் ஜம்பந்தம் இருக்கோ?:)
ரசிப்புக்கு நன்றி.
நீக்குஆவ்வ் வல்லிம்மா 9ம் நம்பராமே..
பதிலளிநீக்கு9ம் திகதியில் பிறந்தோர் பலன் நன்று, இன்னொன்றும் அறிஞ்சேன், இவர்கள் படிப்பில் எப்பவும் கெட்டித்தனமாக அல்லது நடுத்தரமாக எனினும் இருப்பார்கள், மொக்குகளாக இருக்கவே மாட்டார்கள்...
அட! அப்படியா!
நீக்கு//எப்பவும் கெட்டித்தனமாக//உண்மையே எங்க மகள் :)
நீக்குஎன் மகளும் 18-ல் பிறந்தவள். படிப்பில் சூரி! International Baccalaureate-ஐயே விளாசியவள். மேற்படிப்பில் MS, FRM என. தற்பெருமைக்காக சொல்வதாக நினைக்கவேண்டாம். Simple fact.
நீக்குஉண்மைதான் அஞ்சு...
நீக்குஏகாந்தன் சார், வாழ்க, வளர்க.
நீக்குஉண்மை ஏ அண்ணன், நான் பல விஷயங்கள் சும்மா சொல்வதில்லை, அலசி ஆராய்ஞ்சே பேசுவேன்ன்..
நீக்குஅதிரா மேடம், நீங்கள் வல்லி மாமியை பார்த்திருப்பீர்கள் என்று எண்ணுகின்றேன். அவரை சுற்றி ஒரு 5 அல்லது 6 km பரப்பளவு positivityதான். அவர் positivityஇன் உயிர் நாடி. மற்றும் மிகவும் கலகலப்பான ஒரு மனுஷி. யாரையும் கவரும் உள்ளம் கொண்டவர். எனவே நீங்கள் சொல்வது அத்தனையும் முழுக்க முழுக்க உண்மை.
நீக்கு@ரமா அக்கா உண்மைதான் .வல்லிம்மா குரல் கேட்டாலே சுற்றி நந்தவனத்தில் இருக்கும் உணர்வு
நீக்கு@ஏகாந்தன் சார் . அதேபோல் இரண்டு famous டாப் யூனிகளில் டைரக்ட் செலக்சனில் வந்தும் இவள் வேறு இடத்தில விருப்பப்பாடத்தை எடுத்தா .உங்கள் மகளுக்கும் வாழ்த்துக்கள் .குழந்தைகள் எல்லா இறை ஆசீர்வாதத்துடன் இருக்கணும்
நீக்குஆஆஆஆ மீ மேடமாஆஆஆஆஆ கடவுளே இது கொரொனாவை விட மோசமாக இருக்கே:)).. ரமா அக்கா நான் மேடம் இல்லை கன்னீஈஈஈஈஈஈ:)) ஹா ஹா ஹா..
நீக்குஉண்மைதான் வல்லிம்மாவை நான் நேரில் பார்த்ததில்லை, ஆனா வலை உலகில் பார்த்திருக்கிறேன், இப்போ கொஞ்சக்காலமாகத்தான் அவவின் வீட்டுக்கும் போய்ப் பேசி வருகிறேன்.... அன்புக்கு வல்லிம்மா..
@ கௌதமன் : நன்றி சார்.
நீக்கு@ அதிரா: //.. நான் பலவிஷயங்கள் சும்மா சொல்வதில்லை. அலசி ஆராய்ஞ்சே..//
அறிந்த, அல்லது ஆராயும் நபர்தான் நீங்கள் என்பதை நாங்களும் அறிந்திருக்கிறோம்தானே..!
எனக்கொரு டவுட்டூஊஊஊஊஊஊஊ:)..
நீக்குமீ 9ம் நெம்பரூ இல்லை, ஆனா எப்பூடி இவ்ளோ புத்திசாலியாக இருக்கிறேன் என அடிக்கடி வியர்க்கிறேன்ன் சே.. சே டங்கு ஸ்லிப்பாகுதே வியக்கிறேன்ன்:))..
ஹா ஹா ஹா ஹையோ இப்போ எதுக்குக் கல்லெடுக்கிறீங்க எல்லோரும்:)).. பிளீஸ் கீழே போடுங்கோ பேசித் தீர்த்திடலாம்ம்:))
//அறிந்த, அல்லது ஆராயும் நபர்தான் நீங்கள் என்பதை நாங்களும் அறிந்திருக்கிறோம்தானே..!//
நீக்குஅச்சச்சோ இதென்ன இது புயு வம்பாக்கிடக்கூஊஊஊஊ.. புளியடி வைரவா என்னைக் காப்பாத்துங்கோ:))
http://1.bp.blogspot.com/-l4KMjTBz_1Q/TwHKgcZcJQI/AAAAAAAAC6M/xYwj3lCjIMA/s1600/cute+baby+animals++024+-+kitten+.jpg
/எனவே நீங்கள் சொல்வது அத்தனையும் முழுக்க முழுக்க உண்மை.// வெய்ட் வெய்ட்! எனக்கு குழப்பமாக இருக்கிறது. அதிரா ஒன்பதாம் எண்காரர்களைப் பற்றி ஒரே ஒரு விஷயம்தானே சொல்லியிருக்கிறார்?
நீக்கு//அதிரா ஒன்பதாம் எண்காரர்களைப் பற்றி ஒரே ஒரு விஷயம்தானே சொல்லியிருக்கிறார்? //
நீக்குஹையோ ஏதோ இண்டைக்குப் பார்த்து, ரமா அக்கா “நாலு வார்த்தை” அதிராவைப் புகழ்ந்திருக்கிறா:)) அதைப் பொறுக்காமல் இதில டவுட்டோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா இல்லை ஒரு வார்த்தைதானே எனக் கேய்க்கக்கூடாதாக்கும்:))
ஓஹோ. நன்றி அன்பு அதிரா.
நீக்குபுத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை.
வெற்றி பெற்ற மனிதரோடு
வாழ்ந்த பாக்கியம் உண்டு.
அவர் 5 ஆம் எண்காரர். எதையும் எல்லா கோணத்திலும் பார்த்து
ஆராய்ந்தே செய்வார்.
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்கு@ ஏஞ்சல் : //..உங்கள் மகளுக்கும் வாழ்த்துக்கள் .குழந்தைகள் எல்லா இறை ஆசீர்வாதத்துடன் இருக்கணும் //
நீக்குநன்றி ஏஞ்சல். உங்களது பெண்ணிற்கு மனமார்ந்த வாழ்த்துகள். இறையருள் பரிபூரணமாகக் கிடைக்கட்டும்.
Thanks sir :)
நீக்குஅது கேள்வி அவசரமா கேட்டதில் முற்றுபெறலை கேட்கவந்தது //குழப்பவாதிகள நம்பும் அறிவீலிகள் என்று நினைச்சிட்டு வேறே கேள்வியா வந்துடுச்சு :))))))
பதிலளிநீக்குகெள அண்ணன் ஓடி வாங்கோஓஓஓஓஓஓ.. இப்பூடித்தான் எப்பவும் தான் மாட்டிவிட்டால் தப்பி ஓட வழி தேடுவா:)) ஆனா அதிரா இருக்கும்வரை அது நடக்காது:).. பூட்டி வச்சு அடிப்பேனாக்கும் ஹா ஹா ஹா.. இன்று நான் ஸ்கூல் போகவில்லை, மற்றும் ஜிம், யோகா எங்கும் போகவில்லை.. இப்போ பொது இடங்கள் அனைத்தையும் மூடி வருகிறார்கள்.. அதனால அஞ்சுபாடு இனி அதோகதிதான்:)).. பின்ன மீக்குப் பொழுது போக வேண்டாமோ:)) ஹா ஹா ஹா விடமாட்டேனெல்லோ:)) பூஸோ கொக்கோ:)).. அதிரா புதனில வேர்க்குக்குப் போயிடுவா என அஞ்சு நினைச்சிருந்தா, நான் லீவு போட்டுவிட்டேனாக்கும்:))
நீக்குபாத்துடுவோம் (ஒரு ஓரமா நின்னு!)
நீக்குஹா ஹா ஹா கெள அண்ணன் களத்தில குதிக்கப் பயப்புடுறார்ர்ர்ர்ர்ர்ர்:)).. சே..சே.. அதிராவைப்போல தெகிறியஜாலி:) இங்கின ஆருமிலைப்போல:))
நீக்குகட்டிலுக்கு அடியில் ஒளியவேண்டியதுதான். .....
நீக்குஅது என்னன்னா அரசியல் ஊடே வந்த கேள்வி ஹாஆஆ எதுக்குங்க அரசியல்னு தவிர்த்ததில் கேள்வி முற்று பெறலை :)நான் குழப்பவாதின்னு யாரை பற்றி நினைச்சு கேட்டிருப்பேன்னு ஸ்ரீராமுக்கு நிச்சயம் தெரிஞ்சிருக்கும்:)))))))))))))))))))))))))
நீக்கு//..நான் குழப்பவாதின்னு யாரை நினைச்சு கேட்டிருப்பேன்னு ஸ்ரீராமுக்கு நிச்சயம் தெரிஞ்சிருக்கும்:)) //
நீக்குஅதனாலதான் ஆளக் காணலே!
haaaaaaa :))
நீக்குஅச்சச்சோ... மண்டை வெடிச்சுடும் போலிருக்கே....
நீக்குchithappaa :) chithaps
நீக்குசும்மா சொல்லக்கூடாது, ஏன்ஜெல் கேள்வியின் நாயகிதான். நல்ல கேள்விகள், ரசிக்கக்கூடிய பதில்கள்.
பதிலளிநீக்குதேங்க்ஸ் அக்கா :)
நீக்குஅதே, அதே.
நீக்கு//
நீக்குAngel18
தேங்க்ஸ் அக்கா :) //
பானு அக்கா வெயிட் வெயிட்:)) எதுக்கும் கொமெண்ட்டை ஒருதடவை மறுபரிசீலனை செய்யுங்கோ பிளீஸ்ஸ்:)).. ஹையோ இப்போ இதுக்காகவே இப்பவே கூடையில 10 கேள்விகள்.. இல்ல இல்ல இப்ப ஒன்று கூட்டி விட்டா 11 கேள்விகளைக் காவி வரப்போறாவே.. என் ஹொலிடே போச்சே:)) ஹா ஹா ஹா..
:))
நீக்கு//தைரிய மனம் கொண்ட போர்வீரர்கள். //
பதிலளிநீக்கு100% true
நிறைய சொல்லலாம் .எனக்கே சிலசமயம் என் வாரிசா இவ்ளோ தைரியம்னு டவ்ட் வந்திருக்கு
ஹா ஹா ! வாழ்த்துகள்.
நீக்கு@ ஏஞ்சல் ,ரமா ஸ்ரீனிவாசன்
நீக்குஇந்த அன்பு செய்யும் ஜாலம் என்னை
உரம் கொடுத்து ஊக்குவிக்கிறது.
இது போல நல்வார்த்தைகள் கேட்க நிறையப் புண்ணியம்
செய்திருக்கணும். நன்றி மா.
வாழ்வில் நிறையப் பார்த்த பிறகு ரூல்ஸ்களைத்
தளர்த்தி விட்டேன்.
இப்போ என் தலை ஆமாம் மட்டுமே சொல்கிறது:)
எல்லோரும் வளமுடன் இருங்கள். ஏஞ்சல் மகளுக்கும், ஏகாந்தன் சார் மகளுக்கும் அன்பு ஆசிகள்.
@ வல்லிசிம்ஹன்: //..இந்த அன்பு செய்யும் ஜாலம் என்னை..//
நீக்குதூய அன்பு ஒவ்வொரு ஜீவனுக்கும் உயிரூட்டுகிறது. ஒளி தருகிறது.
அன்பு ஆசிகளுக்கு மனம் நிறைந்த நன்றிகள்.
//சொல்லிலும் செயலிலும் நிதானம் காட்டாமல் அவசரப்பட்டு ஏதேனும் பேசி, செய்து, அவப்பெயரைத் தேடிக்கொள்வார்கள்.//
பதிலளிநீக்குஇதுஇல்லை என் மகள் கிட்ட ..பயங்கர பொறுமை .நான்தான் அவசரப்பட்டு ஏதாச்சும் சொல்லி மாட்டிப்பேன் அவள்கிட்ட :)))
ஓ ! அப்படியா!
நீக்குகடவுளுக்கும் நாம் அவசியம்தான். தனியாக அவருக்கு போரடிக்காதா? யாரோடு விளையாடுவார்? அதனால்தான் இத்தனை வேறுபாடுகளோடு உலகத்தைப் படைத்து, நம்மை அதில் ஆட விட்டு, சமயங்களில் அவரும் அதில் கலந்து கொண்டு களிக்கிறார்.
பதிலளிநீக்குஅதுவும் சரிதான்!
நீக்குஇறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட... அவை இரண்டும் சேர்ந்தொரு பொம்மையைச் செய்தன தாம் விளையாட...!
நீக்கு@ வேணாம் :) இப்போதான் தேவன் வருவாரா படிச்சிட்டு கேட்டுட்டு ஒரு கோபத்தோடு திரியறேன் :)
நீக்கு9ஆம் எண்காரர்கள் கம்பீரத் தோற்றம் கொண்டவர்கள். திட்டம் போட்டு காய்களை நகர்த்தி, வெற்றியை எட்டுவதில் சூரர்கள். சோம்பல் கிடையாது. எந்தத் துறையில் இருக்கிறார்களோ, அதில் நுட்பமான அறிவு கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு இவர்கள் மீது பயமும், மரியாதையும் கலந்த பாசம் இருக்கும். 27ம் எண்காரர்கள் அதிர்ஷ்டம் நிறைந்தவர்கள்.
பதிலளிநீக்குஅன்பு பானு மா.
நீக்குஎல்லாக் கணிப்புகளும் நலம். ஆனால்
என்னைப் பார்த்து எலி கூடப் பயப்படுமா என்று தெரியவில்லை.
நன்றி மா.
பானு,ரமா,அதிரா எல்லோரும் எந்த எண் என்று தெரிய வேண்டுமே
(3) நமக்கு கடவுள் அவசியமா இல்லை கடவுளுக்கு நாம் அவசியமா? -- என்ன இது ஜி.எம்.பி சாரா இந்தக் கேள்வி கேட்டதுன்னு நினைக்காதீங்க. ஒரு மாறுதலுக்கு நான் கேட்டிருக்கிறேன். என் பெயரைசொல்லி கேள்வி கேட்கலாமா எனக்கு இம்மாதிரி சந்தேகங்கள்வருவதில்லை
பதிலளிநீக்குஅதானே!
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய கேள்வி பதில்கள் எப்போதும் போல் அருமை.
" சிறிய வயதிலேயே இவன் வளர்ந்த பிறகு, இந்த மாதிரி பெரிய ஆளாவான் என்று கணிப்பது சுலபமா?" என்ற கேள்விக்கு தந்த பதில்கள் அருமை.
"கணிப்பது சுலபம்தான். ஆனால் கணித்தது போல அமையுமா என்பதே சந்தேகம். என்ற பதில் மிகவும் நிதர்சனம்.
சகோதரி ஏஞ்சல் அவர்களின் திறமையான கேள்விகளும். அதற்கேற்றவாறு எ. பி ஆசிரியர்கள் அனைவரும் தந்த பொருத்தமான பதில்களையும் படித்து புரிந்து ரசித்தேன்.
27ம் எண்ணின் குணாதிசயங்கள் பற்றி தாங்கள் பதிவில் கூறியதும், பதிலாக வந்த கருத்துரைகள் அதை தெளிவாக்கியதையும் பார்க்கும் போது அவையனைத்தும் உண்மைதான் எனத் தோன்றுகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி.
நீக்கு///சகோதரி ஏஞ்சல் அவர்களின் திறமையான கேள்விகளும்//
பதிலளிநீக்குஹலோ @பிஞ்சு பஞ்சு ஓடிவங்க இதெல்லாம் பார்க்காம ஹைடிங் :))
thanks kamalaakaa :)))
அன்பு ஏஞ்சலின் கேள்விகளால்
நீக்குபயன் பெறுவதில் மிக மகிழ்ச்சி.
தேடுவது எனக்குப் பிடித்த செயல்.
தேடாமலே வந்து விழுகிறது , எபியின் பொன்னெனும் புதன்.
நன்றி.
9 ஆம் எண்ணுக்கு உரியவர்கள்
நீக்குபிறக்கும் மாதங்களும் அவர்களது
குணங்களைத் தீர்மானிக்கும். என் அம்மா
தை அதாவது பிப்ரவரி 9.
மகன் ஆகஸ்ட் 18,
மருமகள் ஜனவரி 27.
நாங்கள் அனைவருமே வேறு வேறு பாதையில் பயணிப்பவர்கள்.
அம்மாவைவிட சாது கிடையாது.
அப்பா வாக்குப்படி பிஞ்சிலே பழுத்தவள் நான்,
அதாவது என் வழியே போவேன் என்று பொருள்.
மகன் ,மருமகள் போக்கு வேறு.
மேலும் ஒன்பதை மட்டும் கணக்கில் சேர்த்தால்
போதாது.
நாள்,மாதம் வருடம் சேர்த்து வரும் கூட்டு எண்ணும் அவர்கள் வாழ்வில்
பிரதி பலிக்கும்.
தகவல்களுக்கு நன்றி.
நீக்கு///
நீக்குஹலோ @பிஞ்சு பஞ்சு ஓடிவங்க இதெல்லாம் பார்க்காம ஹைடிங் :))//
கெள அண்ணன்ன்ன்ன்ன்ன்ன் இது கொஞ்சம்கூட நல்லாவே இல்லை ஜொள்ளிட்டேன்ன்ன்ன்.. இப்போ வேர்க்குக்குப் போகிறாவெல்லோ அஞ்சு, அதனால எல்லோருக்கும் கிஃப்ட் வாங்கிக் குடுத்தே இப்பூடிக் கொமெண்ட் போட வைக்கிறா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))
படிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது
பதிலளிநீக்குநன்றி.
நீக்கு1, கற்றல் சிறப்பா? கற்பித்தல் சிறப்பா ?
பதிலளிநீக்கு2, தலையாட்டுதலுக்கும் ஜால்ராவுக்கும் வித்யாசம் இருக்கா ?
3,இதை செய்தா சந்தோஷமும் மனநிம்மதியும் கிடைக்கும்னு தெரிஞ்சும் பலர் அதை செய்யாமலிருப்பதேன் ?
4, நீங்கள் முதல் கேள்வியை படிச்சிட்டு அடுத்த கேள்விக்கு தாவுபவரா அல்லது ஆர்வக்கோளாறில் கடைசி கேள்வி என்னவா இருக்கும்னு அங்கே செல்பவரா ?
5, ஒருவர் செய்யும் விஷயங்களில் அவருக்கு திருப்தி ஏற்படுவது முக்கியமா ? அல்லது அவரை சுற்றியுள்ளவர்களை அது திருப்திப்படுத்தணுமா ? (மனநல சம்பந்தப்பட்டது :)
6, போதும் என்ற மனம் கிடைக்க என்ன செய்யணும் ?
7, நம்மை நடிப்பால் மகிழ்விக்கும் நடிகர்களை/நடிகையர்களை திரையில் ரசிக்கிறோம் ஆனால் அவர்கள் பொதுவாழ்வில் அரசியலுக்கு வருகிறேன் என்றதும் மனதின் மூலையில் எதற்கு என்ற கேள்வி உதிப்பது ஏன் . ???நமக்கு பிடிச்சவங்கதானே என்னும் எண்ணம் இதில் உடைபட்டுவிடுவதேன் ?
8, அதிகாரம் ,பதவி ,முக்கியபொறுப்பு இவை ஒருவரின் குணநலன்களை மாற்றிவிடுமா ?
9, முந்திக்காலத்தில் சீப்பு பிரஷ் இல்லாத காலத்தில் எப்படி தலை வாரி இருப்பாங்க ?
10, நமது வாழ்நாள் 100 வயது என்பதற்குப்பதில் 300 ஆகிட்டா என்னாகும் ?
11, பணம் கொடுக்கும்போது 101 ,1001,501 என்று ஒரு ரூபாய் சேர்த்து ஒன்றாம் இலக்கத்தில் தரக்காரணம் என்ன ?
12,கலை ஐ மீன் ஆர்ட் மனதுக்கு உற்ச்சாகமூட்டுமா ? கலையென்ற பெயரில் சில கொலைகள் நிகழ்வது எரிச்சலூட்டுவதால் எழுந்த கேள்வி இது .
13, சடங்குகள் சம்பிரதாயங்கள் மன அமைதியை தந்திருக்கா ?உங்கள் அனுபவங்களை பகிரவும். (நான் சடங்கு எனக்குறிப்பது எப்பவும் வீட்டை விட்டு வெளியே கால் வைக்குமுன் ப்ரே செஞ்சுட்டுதான் வெளியேறுவேன் அதுமாதிரி )
14, மந்திர சிந்தனையில் உங்களுக்கு நம்பிக்கையுண்டா ?? உங்களுக்கு எதெல்லாம் மந்திர சிந்தனை என தோன்றும் ? இது ஒரு அளவுடன் இருப்பது நல்லதா ?
15, நீதி கிடைப்பது பழிக்குப்பழி இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கா ?
நமது வாழ்நாள் 100க்குப் பதில் 300 ஆகிட்டா?......
நீக்குசத்தியமா இந்த டூப் என்றும் பதினாறு, என்றும் நாற்பத்தெட்டா மாறாது. அப்போதும் என்றும் பதினாறு என்றே சொல்லிக்கிட்டிருப்பாங்கன்னு நினைக்கறேன்.
நீங்க என்ன நினைக்கறீல்க?
ஹாஆஆஹாஆஅஹாஹ்ஹா :) அதானே நெல்லைத்தமிழன் அந்த லைஃப் span 500 ஆனாலும் பிஞ்சு எழுத்து என்றும் 16 தான்னு :)சொல்லிக்கிடுவாங்க
நீக்குஇங்கின ஆரையோ பற்றி நெ தமிழனும் அஞ்சுவும் கதைக்கினம்:)) நமக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:)) மீ ரொம்ப நல்ல பொண்ணு.. சுவீட் 16 அதிரா வாக்கும்:))
நீக்குஎங்கள் பதில்கள் அளிப்போம், நன்றி.
நீக்கு@ பிஞ்சு எழுத்தாளர் கேட்டுக்கொண்டதற்கிணங்க 15 கேள்விகளை கொடுத்தாச்சு :))))))
பதிலளிநீக்குஅன்புள்ள ஏஞ்சல் சகோதரிக்கு வணக்கம்.
நீக்குஅடுத்த வாரத்துக்காக கேட்டிருக்கும் அத்தனை கேள்விகளும் அருமை. அதற்கு தகுந்த பதில்கள் வர இன்னமும் ஒருவார காலம் இருக்கிறதே என உள்ளது. எனினும் அடுத்த புதனுக்கு நானும் காத்திருக்கிறேன். எப்படி இத்தனை கேள்விகள் தங்களுக்குள் எழுகிறது. மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது..அன்புடன் எனது பாராட்டுகளும், வாழ்த்துக்களும்.
அது சும்மா தானா தோணும்க்கா :) அதை கேட்டிடுவேன்
நீக்குஆஆஆஆஆஆ ஆண்டவா 15 ஆஆஆஆஆஆஅ:)).. கொள்ளிமலைக் கந்தா.. வள்ளி மணாளா:).. இது என்ன எங்கள் புளொக்குக்கு வந்திருக்கும் சோதனை கர்ர்ர்:)).. நான் கஸ்டப்பட்டு நினைச்சு வச்சிருந்த ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணால கேள்வியும் இப்போ மறந்து போச்சே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))
நீக்குஹா ஹா !!
நீக்குஅன்பு ஏஞ்சல் ,அடுத்த புதனுக்கு வெயிட்டிங்க்.
பதிலளிநீக்குநானும் வல்லிம்மா :)
நீக்குஎன் கேள்வியையும் சேர்க்கிறேன்.
பதிலளிநீக்கு1,
கிழமைகளில் நம்பிக்கை, அவ நம்பிக்கை உண்டா.
2, என்னைப் பொறுத்த வரையில் புதன் மேல் ஒரு பயம் உண்டு.
அனேக நெகடிவ் விஷயங்களைக் கண்டதனால்.....
3, ஞானம் தரும் புத பகவான் திருவெண்காட்டு ஈசன் அருகில் எழுந்தருளி இருக்கிறார்.
அவரிடமும் முறையிட்டாச்சு.
நீங்கள் தேடி பதில் சொல்லுங்கள். பானுமா கூட உதவலாம்.
ஆஆஆஆஆஆ இம்முறை வல்லிம்மாவும் கேட்டிட்டா கேள்விகள்...
நீக்குநல்ல சந்தேகம் வல்லிம்மா...எனக்கும் சென்டிமென்ட் இந்த விஷயத்தில் உண்டு. புதன் பார்ப்போம்.
நீக்குஆஆஆஆஆஆ இதென்ன இது அர்த்த ஜாமத்தில நெ தமிழன் கம்பிமேலே.. ஹா ஹா ஹா.. பிரயாணத்தில் இருக்கிறாரோ?:))
நீக்குநானும் புதன் கிழமைக்காக வெயிட்டிங் !
நீக்குதமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை . நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 15 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
பதிலளிநீக்குதற்போது, தங்களது புதன் 200318 : குழப்பவாதிகளை நம்பலாமா ? பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் எமது வலைத்திரட்டியில் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.
உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்
எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்
நன்றி.
நீக்குகெள அண்ணன் என் கொஸ்ஸனையும் நோட் பண்ணிக்கோங்க.. இது ஒன்றுதானே என கைதவற விட்டிடாதீங்கோ கர்ர்ர்ர்:))..
பதிலளிநீக்கு1. கில்லர்ஜியின் போஸ்ட் பார்த்ததும், எனக்குள் எழுந்த கேள்வி இது.. ஒரு பேய்க்கு, இன்னொரு பேயைத் தெரியுமோ? அதாவது கண்ணுக்கு தெரியுமோ? அவர்கள் ஒற்றுமையாக இருப்பினமோ? பேசிக்கொள்வார்களோ? பயப்பட மாட்டினமோ?:)).
2.தண்ணி மட்டும் குடிச்சே ஒருவரால் பல நாட்கள் இருக்க முடியுமோ?
//ஒரு பேய்க்கு, இன்னொரு பேயைத் தெரியுமோ? அதாவது கண்ணுக்கு தெரியுமோ? அவர்கள் ஒற்றுமையாக இருப்பினமோ? //
நீக்குநம்ம ரெண்டுபேரையும் பார்த்தும் யாருக்காச்சும் சந்தேகம் வருமோ மியாவ் :))))))))))
https://tse2.mm.bing.net/th?id=OIP.ISW7yOO6Fgi8WSLesSHU8AHaFD&pid=Api&P=0&w=236&h=162
நீக்குகேள்வி 3. ஒரே கேள்வி என்று சொல்லிவிட்டு ரெண்டு கேள்வி கேட்கிறவங்க, கணக்கில் A வாவது (டி அல்ல) வாங்கியிருக்க வாய்ப்பு உண்டா?
நீக்குஹா ஹா ஹா ! அது!
நீக்குஅதூஊ ஆஸ்க் வன் கெட் வன் ஃபிறீஈஈஈ:))
நீக்குசிறப்பான கேள்வி - பதில்
பதிலளிநீக்குதெளிவு பெற முடிகிறது
நன்றி.
நீக்குகேள்வி பதில்கள் சிறப்பு.
பதிலளிநீக்குநன்றி.
நீக்கு