பார்லி உப்புமா (காய்கள் கலந்த உப்புமா)
பார்லி
ஆயுர்வேதத்தில்
மிகவும் பரிந்துரைக்கப்படும் தானியம்.
உடல்
எடையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும்.
நார்ச்சத்து
உள்ள தானியம்
Low
glycemic - மெதுவாக,
குறைந்த சர்க்கரையை உயர்த்தும்
குடல்
ஆரோக்கியத்திற்கு உதவும்
கொழுப்பைக்
குறைக்க உதவும்.
இதய
நலத்திற்கும் நல்லது.
கணையம்,
கல்லீரல், சிறுநீரக ஆரோக்கியத்திற்கும் நல்லது
பார்லியை
முழு தானியமாகவோ, உடைத்தோ, ரவையாகவோ பயன்படுத்தலாம். கடைகளில் பார்லி ரவை விற்கப்படுகிறது
ஆனால் எல்லாக் கடைகளிலும் கிடைப்பதில்லை. .
எனவே
நான் முழு தானியமாகவோ இல்லை உடைத்தோ பயன்படுத்துகிறேன். பார்லியை முழு தானியமாக சாதத்திற்குப்
பதில் பயன்படுத்துவதும் உண்டு நம் வீட்டில்.
பார்லியில்
இட்லி, தோசை செய்யலாம் அடிக்கடி செய்வதுண்டு நம் வீட்டில். அடுத்த முறை செய்யும் போது
படங்கள் எடுத்துப் போடுகிறேன்.
இம்முறை
உடைத்த பார்லியில் உப்புமா செய்முறை.
முழுதானியத்தை
மிக்ஸியில் போட்டு இரு சுற்று சுற்றினால் உடைந்துவிடும். இல்லைனா ரவையாகவும் கூட செய்து
கொள்ளலாம்.
உடைத்த
தானியத்தை சல்டையில் போட்டு சலித்துக் கொண்டு தானியத்தை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
சலித்தெடுத்த பொடியை இட்லி தோசை எதற்கேனும் பயன்படுத்திக் கொள்ளலாம். அல்லது பார்லி தண்ணீர்
போட்டுக் குடிக்கலாம். (கணையம், கல்லீரல், சிறுநீரகத்திற்கு நல்லது)
உடைத்த
தானியத்தை தண்ணீரில் அலசி தண்ணீரை வடித்துவைத்துக் கொள்ளவும்.
உப்புமாவிற்குத்
தாளிப்பது போல் சிறிது எண்ணையில் எல்லாம் தாளித்து பச்சைமிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை
எல்லாம் போட்டு வெங்காயத்தைச் சேர்த்து வதக்கிக்கோங்க.
சற்று
வதங்கியதும் காரட், பீன்ஸ், போட்டு வதக்கிவிட்டு தக்காளி சேர்த்து வதக்கி...
முழு
தானியம் என்றால் தண்ணீரில் அலசி 2 மணி நேரம் ஊற வைச்சுடுங்க. வேக வைக்க, ஒரு கப் பார்லிக்கு
3 கப் தண்ணீர்.
உடைத்த
பார்லியாக இருந்தால், ஒரு கப் பார்லிக்கு பொல பொலன்னு செய்ய 2.5 கப். கொஞ்சம் ஒட்டிக்
கொண்டு இருக்கலாம் என்றால் 3 கப் தண்ணீர்.
பார்லி
ரவை என்றால் 2 - 2.5 கப் தண்ணீர். எந்தக் கப்பால் பார்லியை அளக்கிறோமோ அந்தக் கப்பால்
தண்ணீரின் அளவு.
தண்ணீர் சேர்த்துக் கொதிக்கும் போது தேவையான உப்பைச் சேர்க்கவும். மஞ்சள் பொடியும் விருப்பமிருந்தால் சேர்க்கலாம். நான் சேர்ப்பதுண்டு.
பார்லி ரவையாக இருந்தால் வாணலியிலேயே ரவா உப்புமா
செய்வது போல் செய்துவிடலாம், மூடி போட்டு சிம்மில் வைத்து அவ்வப்போது கிளறிக் கொடுத்து
செய்துவிடலாம்.
உடைத்ததாக
அல்லது முழு தானியமாக இருந்தால் வாணலியிலேயே கிளறிடலாம். ஆனால் அப்பாவுக்காக, நன்றாகக் கொதித்து தண்ணீர் வற்றத் தொடங்கிய போது பாத்திரத்தில் கொட்டி குக்கரில் வைத்து 3-4 விசில்
விட்டு எடுத்துவிட்டேன். ரிஸ்க் வேண்டாம் என்று.
டிப்ஸ் - பார்லி தானியத்தில், கலந்த சாதம் செய்வது போல், காய் சாதம் செய்வது போல் செய்யலாம். கதம்ப சாதம், சாம்பார் சாதம், பிஸிபேளாபாத், தயிர் சாதம் என்று வழக்கமான அரிசியில் செய்வது போல் எல்லாம் செய்யலாம்.
=================================================================================
கொஞ்சம் ஜோக்ஸ்...
பின்னே சேர்த்து வைத்திருப்பதை என்னதான் செய்ய!









மிக உபயோகமான உணவுப் பதிவு
பதிலளிநீக்குஊருக்கு வந்தவுடன் செய்யச் சொல்லணும்
நன்றி நெல்லை,
நீக்குநேற்று உங்க கருத்துகளுக்குப் பதில் கொடுக்க முடியாம போச்சு முதல் கருத்துக்குச் சிரித்துக் கொடுத்த பதில் வரலை கரன்ட் போயிந்தி. அப்புறம் லோ வோல்டேஜ்....நல்ல மழை மாலையில்.
ஊருக்கு வந்ததும் செஞ்சு பாருங்க நெல்லை.
கீதா
காய்கறிகளையும் சேர்த்திருக்கீங்க
பதிலளிநீக்குபல்சுவை உணவு.
இதைப் பார்த்தால் பார்லியில் பாயசம் பொங்கல் (சர்க்கரைப் ஹா ஹா ஹா) செய்யலாம் எனத் தோன்றுகிறது
பெரும்பாலும் காய்கள் சேர்க்காமல் உப்புமா செய்வதில்லை நெல்லை.
நீக்குஇதைப் பார்த்தால் பார்லியில் பாயசம் பொங்கல் (சர்க்கரைப் ஹா ஹா ஹா) செய்யலாம் எனத் தோன்றுகிறது//
ஹாஹாஹாஹா நினைச்சேன் இந்தப் பதிவை எழுதினப்ப இது நினைவுக்கு வந்தது நெல்லை இதைச் சொல்லாமல் போகமாட்டார்னு!!!!!
நெல்லை நிஜமாகவே நல்லாருக்கும். அல்வாவும் செய்யலாம் ஆனால் எடை ஏறிப் போகும். எதுக்கு நல்லதுன்னு சொல்றாங்களோ அதே தானியம் இப்படிச் செஞ்சா ஹாஹாஹா...கத்திக்கு இரு பயன்பாடுகள் போலதான் எல்லாமுமே.
இதையும் ஹெல்தி பாயாசம், சர்க்கரைப் பொங்கல்னு யுட்யூபில் போட்டாலும் போட்டிருப்பாங்களா இருக்கும் கண்ணில் படவில்லை.
இந்த பார்லியின் பயன்பாடு எல்லாம் நம்ம குடும்ப ஆயுர்வேத மருத்துவர் (இப்ப இல்லை நம்ம வயசுதான் அவருக்கும்!!) 26 வருடங்கள் முன் நான் ரொம்ப இனியவள் என்று கண்டுபிடித்த போது சொல்லியதுதான்.
கீதா
பார்லியோ ஓட்ஸோ சில சிறு தானியங்களோ கொஞ்சம் விலை அதிகம்.
பதிலளிநீக்குஓட்ஸ் ஒரு காலத்தில் குதிரை உணவு இப்போ மனுஷ உணவானப்பறம் செம விலை
நேற்றைய தேவ கானம், மனுஷ்ய கானம் நினைவுக்கு வருகிறது. குதிரையின் உணவாகிய கொள்ளும் அப்படித்தான். மனிதர்களின் உணவாகிப் போனது. இவை இவைக்கென ஆரம்பத்தில் இறைவன் தந்த உணவு மாறுபட்டுத்தான் போகிறது. இது மனித விருப்பமா? மாறுபடும் காலச்சூழலின் அத்தியாவசியமா? புரியவில்லை.
நீக்குநெல்லை பார்லி விலை ரொம்ப அதிகம் இல்லை அரிசி விலைதான். மொத்த வியாபாரக் கடையில் இதன் விலை ஒரு கிலோ 40-50-60 க்குள்ள கிடைக்குது. ப்ராண்டட் அல்லது சூப்பர் மார்க்கெட்டுகளில் கிலோ 60 முதல் 100 + வரை போகிறது.
நீக்குஓட்ஸ் தான் விலை கொஞ்சம் கூடுதல் நான் அதுவும் அதை உடைத்த தானியமாக வாங்குவதால் ...ஃப்ளேக்ஸ் வாங்குவதில்லை.
கீதா
மனிதர்களின் உணவாகிப் போனது. இவை இவைக்கென ஆரம்பத்தில் இறைவன் தந்த உணவு மாறுபட்டுத்தான் போகிறது.//
நீக்குஇல்லை கமலாக்கா. இவை நம் உடல் நலத்திற்காகப் படைக்கப்பட்டவை. ஆனால் நமக்குச் சிறு வயதில் அறிமுகம் ஆகாதவை அவ்வளவே.
எங்கள் ஊரில் கன்னியாகுமரி/தின்னவேலி (உங்க ஊரும் கூட) கொள்ளை "காணம்" பயிர் என்றும் இதில் தொகையலை வழக்கில் காணாந்துவையல்/தொகையல், காணாம் ரசம் என்றும் சொல்லி செய்வாங்க. என் தோழிகள் வீட்டில் சாப்பிட்டிருக்கிறேன்.
ஆனால் நம் வீடுகளில் இது பயன்படுத்தப்படவில்லை என்பதால் நமக்குத் தெரியவில்லை. ஆனால் நான் மணமாகி தனியாக வந்த பிறகு பயன்படுத்தத் தொடங்கினேன். இதில் புரதம் கூடுதல். எனக்கு என் ஆயுர்வேத மருத்துவர் நிறைய நல்ல விஷயங்களைச் சொல்லியதுண்டு.
//இது மனித விருப்பமா? மாறுபடும் காலச்சூழலின் அத்தியாவசியமா? புரியவில்லை.//
இரண்டுமில்லை....நமக்கு அறிமுகம் இல்லை.
உதாரணத்திற்கு - ஊரில் இருந்தவரை கோவைக்காய்/தொண்டங்காய்/புளிச்ச கீரை/கோங்குரா இதெல்லாம் சுத்தமாகத் தெரியாது. சென்னை வ ந்த பிறகுதான் இவை எல்லாமே அறிந்தேன். இப்போது நாகர்கோவிலிலும் கிடைக்கின்றன. கோவைக்காய் இனியவர்களுக்கு ரொம்ப நல்ல காய்.
அது போல மருத்த்வத்தில் பிரசித்தி பெற்ற காட்டுப் பாவக்காய் இங்கு பெங்களூர் வந்துதான் அறிமுகமானது சந்தையில். அதுவும் ரொம்ப நல்ல காய்.
இப்படி நமக்கு அறிமுகம் ஆகாதவை இயற்கையால்/இறைவனால் நமக்கு நல்லதென்று படைக்கப்பட்டவை நிறைய. நமக்குத் தெரிந்தை கொஞ்சமே!
கீதா
இது மனித விருப்பமா? மாறுபடும் காலச்சூழலின் அத்தியாவசியமா?//
நீக்குகமலாக்கா, இப்போது விழிப்புணர்வு கூடுதல்.....இதைப் பற்றிப் பேசும் மருத்துவர்களுக்கான ஊடகமும் இருப்பதால் நமக்குத் தெரியவருகின்றன. முன்பு இவை கிடையாது.
முன்பும் இப்பொருட்கள் காய்கள் எல்லாமே இருந்தவைதான்.
கீதா
ஆமாம் கீதா ரங்கன் ஆ இல்லை ரெங்கனா?
பதிலளிநீக்குசமையல் குறிப்புனா அதுல சந்தேகம் கேட்காமல் இதென்ன கேள்வி என்கிறீர்களா?
ஹாஹாஹா எப்படி எழுதினால் என்ன!!!!? மலையாள வழக்கில் ரெ என்று வரும் நம்ம ஊர்ல ர அம்புட்டுதான்...
நீக்குநான் எப்பவுமே கீதா என்று மட்டுமே போடுவேன்....அஃபிஷியல் கையெழுத்து தவிர...
கீதா
பார்லி உப்புமா.. நல்ல செய்முறையாகத்தான் தெரிகிறது. முயற்ச்சிக்கிறேன்.
பதிலளிநீக்குநன்றி பானுக்கா. நல்லாருக்கும் செஞ்சு பாருங்க
நீக்குகீதா
படிப்படியாக படங்களை தொகுத்திருக்கும் விதம் அருமை!. விளக்கம் தேவையில்லை, படங்களைப் பார்த்தாலே விளங்கிவிடும்.
பதிலளிநீக்குரொம்ப நன்றி பானுக்கா....
நீக்குகீதா
முருகா சரணம்
பதிலளிநீக்குவாங்க துரை அண்ணா...
நீக்குஇன்று உங்க பதிவின் தலைப்பு சமையல் பார்த்தேன் இனிதான் வாசிக்கணும்
கீதா
பார்லி உப்புமா செய்முறை சிறப்பு..
பதிலளிநீக்குபார்லி உடலுக்கு நல்லது...
ஆமாம் துரை அண்ணா...உடலுக்கு நல்லது
நீக்குபார்லி உப்புமா செய்முறை சிறப்பு..//
மிக்க நன்றி துரை அண்ணா உங்கள் கருத்திற்கு
கீதா
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலாக்கா
நீக்குகீதா
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குஇன்றைய திங்கள் பதிவில் தங்களது செய்முறையான பார்லி உப்புமா நன்றாக உள்ளது.முன்பு அம்மா வீட்டில் இருந்த போது, (நான் குழந்தை உண்டாகியிருக்கும் போது,,) மாதக்கணக்கில் தினமும் பார்லி தண்ணீர் கொதிக்க வைத்து அருந்தியுள்ளேன். மற்றபடி பார்லியை வைத்து சமையல் ஏதும் இதுவரை செய்ததில்லை. .தங்களது விபரம் கண்டு இதன் செய்முறையை அறிகிறேன்.
நல்ல பயனுள்ள, சத்தான உணவாகத்தான் தோன்றுகிறது.( சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லதா.?) படங்கள் அனைத்தும் அருமையாக உள்ளது. படிப்படியாக காய்கறி படங்களுடன், அருமையான விபரமாக தந்துள்ளீர்கள். பாராட்டுக்கள். ஒரு முறை இவ்வாறு செய்து பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன். .
ஆமாம் இனியவர்களுக்கு நல்ல உணவு.
நீக்குஎனக்கும் பிரசவகாலத்தில் பார்லி தண்ணீர் குடித்ததுண்டு. திருவனந்தபுரத்தில் மருத்துவர் சொல்லியிருக்கிறார்..., வீட்டில் பாட்டி அம்மா எல்லாரும் இதைச் செய்து கொடுப்பாங்க மற்ற நேரங்களிலும் கூட.
உங்களுக்கான உணவில் இதைச் சேர்த்துக் கொள்ளலாம். என்னதான் நம்மைச் சுற்றி நம் மக்கள் இருந்தாலும் அவர்களுக்காகச் சமைத்தாலும், நம் உடல்நலனை நாம் தானே பார்த்துக் கொள்ள வேண்டும் இல்லையா?
மிக்க நன்றி கமலாக்கா.
கீதா
கஹ மேடம்.. சர்க்கரை நோயாளிகள்னு சொன்னா ஒரு மாதிரி இருக்கு. இன்சுலின் குறைபாடு உடையவர்கள்னா ஓக்கேயாகத் தோணுது.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குசேர்த்து வைத்த ஜோக்ஸ் அனைத்தும் நன்றாகவே உள்ளது. ஆனால், தலைவரின் பஸ் பயணம் சற்று ஆச்சரியந்தான்.!! ஹேமாவின் நகைச்சுவையும் அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
காலை வணக்கம்.....
பதிலளிநீக்குபார்லி வைத்து உப்புமா.... எனக்குப் புதிது. செய்து பார்க்கச் சொல்ல வேண்டும்.
ஜோக்ஸ் அனைத்தும் ரசித்தேன்.
நன்றி வெங்கட்ஜி. செய்து பார்க்கச் சொல்லுங்க ஆதியிடம்
நீக்குகீதா
வெங்கட் ஜி வடக்கில் பார்லி சூஜி என்றே கிடைக்கிறது. உங்களுக்கும் தெரிந்திருக்கும் என்று நினைத்தேன். அங்கு நம்ம உறவினர் வீட்டில் வாங்குகிறார்கள். என் மகனும் இப்ப இனியவன் இல்லையா? ஸோ கொடுத்துவிட்டாங்க.
நீக்குகீதா
உப்புமாவா? அதுவும் பார்லி உப்புமாவா? பார்லிமென்ட் உப்புமாவா? (பட்ஜெட் அல்வா போல), நோ நோ நோ . ஜோக்குகளை எங்கிருந்து பிடித்தீர்கள்?
பதிலளிநீக்குJayakumar
ஹாஹாஹா ஜெ கெ அண்ணா...பார்லி ரவை உப்புமாவேதான். வடக்கில் பார்லி சூஜி கிடைக்கிறது.
நீக்குவடக்குப் பிரதாபத்தைப் பதிவில் குறிப்பிடவிட்டுப் போச்சு.
நன்றி ஜெ கே அண்ணா
கீதா
ஜோக்ஸ் எல்லாமே ரசித்தேன் ஸ்ரீராம்.
பதிலளிநீக்குஅந்த ஸ்கிப்பிங் - இரு விஷயங்களை நினைவுபடுத்தியது. தில்லியில் நம்ம உறவினர் ரஜோரிகார்டனில் இருந்தப்ப அவங்க வீட்டுக்குக் கீழ இருந்த பஞ்சாபி ஒருவர் இவங்களிடம் சண்டை போடுவார் தினமும்...நீங்க வீட்டுல நடக்கக் கூடாது நடக்கறப்ப அதிருது எனக்குத் தலைவலி வருது என்று!
அது போல அமெரிக்காவில் முதல் மாடி தரைத்தளம் .வீட்டில் கீழிருந்த சைனீஸ் மேலே இருந்த எங்களிடம், நீங்க காலைலயே எழுந்து சமைக்கறீங்க. எங்களுக்குத் தொந்தரவா இருக்கு என்று....அவங்க சமையல் ஜிம்பிள் நம்ம சமையலைப் போலவா!!
கீதா
பார்லி உப்புமா சூப்பராக வந்திருக்கிறது. பார்லி சிறு வயதில் இருந்தே எமது அம்மம்மா அவித்து குடித்திருக்கிறோம். அம்மா தானியங்களில் சாதம் செய்வார்.
பதிலளிநீக்குநாங்கள் உப்புமா செய்து பார்த்ததில்லை .செய்வோம். நன்றி.
பார்லி சிறு வயதில் இருந்தே எமது அம்மம்மா அவித்து குடித்திருக்கிறோம். //
நீக்குஆமாம் அப்போதெல்லாம் பாட்டிகள் பயன்படுத்தியதுண்டு. காய்ச்சல்னா உடனே பார்லி தண்ணீர், ஒழுங்காகக கழிவு வெளியேறவில்லைனா பார்லி தண்ணீர் என்று.
அம்மா தானியங்களில் சாதம் செய்வது நல்ல விஷயம் மாதேவி
நீங்களும் இந்த உப்புமாவைச் செய்து பாருங்க மாதேவி.
பார்லி உப்புமா சூப்பராக வந்திருக்கிறது.//
நன்றி மாதேவி
கீதா
ஜோக்ஸ் ப்ளாட் ... எலுமிச்சம் பழம் தலைக்கு தேய்த்தது ......ஹா...ஹா.
பதிலளிநீக்கு