தஹி வாலே ஆலூ
த ஹி வாலே ஆலூ சப்ஜிக்கு முக்கியமாச்
சின்ன உருளைக்கிழங்கு தான் நல்லா இருக்கும். அது கிடைக்கலைனா வேறே வழி இல்லைனா
பெரிய உருளைக்கிழங்கை வேகவைத்துத் தோல் உரித்துக் கொண்டு அதன் சைசுக்குத்
தகுந்தாற்போல் நாலு அல்லது ஆறு துண்டங்களாக வெட்டிக்கொள்ளவும்.
ஒரு சாத்துக்குடி சைஸ் உருளைக்கிழங்கில் சுமார் 2
அல்லது 3 போதுமானது. ஆட்களைப் பொறுத்து ஒன்று கூட்டிக்கலாம் தேவையானால்.
சின்ன உருளைக்கிழங்கு எனில் சுமார் கால் கிலோ அல்லது
பத்து/பதினைந்து உருளைக்கிழங்கை வேக வைத்துத் தோல் உரித்து வைத்துக் கொள்ளவும்.
இதில் உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள்,
மிளகாய்த் தூள், சேர்த்து உருளைக்கிழங்கைக் கலந்து வைக்கவும். இது அவரவர்
விருப்பம் சாதாரண மி.தூள் அல்லது காஷ்மீரி மி/தூள். இதெல்லாம்
இப்போத் தான் பிரபலமாக இருக்கு. நான் சமைக்க ஆரம்பிச்சப்போ எல்லாம் சாதாரண
மிளகாய்த் தூள் தான் பயன்படுத்தினோம். இன்னும் சொல்லப் போனால் நான் காஷ்மீரி
மிளகாய்த் தூளே வாங்கியதில்லை.
உருளைக்கிழங்குகளை எண்ணெயில் போட்டு நன்கு வறுத்துக்
கொள்ளவும். ஒரு சிலர் எண்ணெயில் பொரித்தெடுப்பார்கள். அது அவ்வளவாக எனக்குப்
பிடிப்பதில்லை. சின்ன உருளைக்கிழங்கு கறிக்குச் செய்வதை விட இன்னும் கொஞ்ச நேரம்
வறுத்துக் கொண்டு (கறுப்பாக ஆகாமல் பார்த்துக்கணும்.) தனியாக வைக்கவும்.
இதுக்குத் தேவையான மற்றப் பொருட்கள்.
நல்ல தயிராக மேல் ஆடையை நீக்காமல் இருந்தால் நல்லது. சுமார் அரை லிட்டர் எடுத்துத் தனியாக வைச்சுக்கவும்.
மஞ்சள் தூள் ஒரு தேக்கரண்டி.
தனியாப் பொடி இரண்டு தேக்கரண்டி
வறுத்த சீரகப் பொடி ஒரு ;தேக்கரண்டி,
பெருங்காயத் தூள் தேவை எனில் அரைத் தேக்கரண்டி சேர்த்துக்
கலந்து/கடைந்து வைக்கவும்.
இப்போது மசாலாப் பொருட்கள் தேவையானது.
தக்காளி நல்ல சிவந்த பழுத்த தக்காளி அல்லது கடையில் கிடைக்கும் தக்காளி
ப்யூரி(விரும்பினால்) நான் தக்காளியைத் தான் வெந்நீரில் போட்டுத் தோலை உரித்துக்
கொண்டு மிக்சி ஜாரில் போட்டுப் ப்யூரி எடுத்துக்கணும். பெரிய தக்காளி எனில் 2
சின்ன நடுத்தரத் தக்காளி எனில் 3 அல்லது 4.
ஒரு பெரிய வெங்காயம், சும்மாச் சின்னதாக நறுக்கிக்கலாம். ஏனெனில் இதை
அரைக்கத் தான் பயன்படுத்தப் போறோம்.
பிடித்தமானால் பூண்டு ஒன்றிரண்டு பற்கள். (நான் பூண்டே சேர்க்கமாட்டேன்.)
வதக்கத் தேவையான சமையல் எண்ணை,
ஒரே ஒரு பச்சை மிளகாய்,
ஒரு அங்குலம் இஞ்சித் துண்டு தோல் சீவி.
இப்போது மசாலாவுக்குக் கொடுத்திருக்கும் பொருட்களை எண்ணெய் விட்டு வதக்கிக்
கொண்டு அரைத்து எடுத்து வைச்சுக்கலாம். அல்லது பச்சையாகவே அரைச்சு விட்டுப்
பின்னர் எண்ணெயில் அந்த மசாலாவைப் போட்டு நன்கு சுருள எண்ணெய் கசியும் வரை
வதக்கிக்கலாம்.
நடுவில் நேரம் கிடைக்கையில் தயிர், மஞ்சள் பொடி, உப்பு, பெருங்காயப்பொடி,
மிளகாய்ப் பொடி அரை தேக்கரண்டி, மல்லிப் பொடி ஒரு தேக்கரண்டி, ஜீரகப் பொடி அரைத்
தேக்கரண்டி அந்தத் தயிரில் சேர்த்து நன்கு கடைந்து வைத்துக்கொள்ளவும்.
இப்போ ஒரு நல்ல வாயகன்ற கடாய் அல்லது வாணலியில் எண்ணெய் ஊற்றிக் கொண்டு
காய்ந்ததும் சர்க்கரை ஒரு தேக்கரண்டி சேர்த்துக் கொண்டு அது உருகிக் கருகும்போது
சீரகம், சோம்பு சேர்த்துக் கொண்டு பெருங்காய்ப் பொடியும் தேவையானால்
போட்டுக்கவும்.
பாதி பெரிய வெங்காயம் எடுத்துக் கொண்டு பொடியாக நறுக்கி முன்னரே தயாராக வைச்சுக்கணும்.
அதை இப்போக் காய்ந்த எண்ணெயில் போட்டுக் கண்ணாடிப் பதம் வரும் வரைக்கும் நன்கு
வதக்கவும்.
தேவையானால் அவரவர் காரத்துக்கு ஏற்றபடி இன்னும் கொஞ்சம் மி.தூள்,
மல்லித்தூள், சீரகத்தூள் அரைத் தேக்கரண்டி சேர்த்து. அரைத்து வைத்துள்ள மசாலா
விழுதைப் போட்டு நன்கு கிளறவும் அடுப்பைக் கொஞ்சம் பெரிதாகவே வைத்துக் கொண்டு
கிளறிக்கலாம். தேவையானால் வெண்ணெய் கொஞ்சம் சேர்க்கலாம். இது வெண்ணெய்/எண்ணெய்
பிரிந்து விழுது சுருள வரும்வரைக்கும் வதக்கணும். இப்போக் கொஞ்சம் தண்ணீர்
சேர்த்துக் கொள்ளவும்.
இப்போது வறுத்துத் தனியாக வைச்சிருக்கும் உருளைக்கிழங்குகளை கொதிக்கும்
குழம்பில் (க்ரேவி) சேர்க்கவும். நன்கு கிளறவும். உருளைக்கிழங்கு உடையாமல்
பார்த்துக்கவும். தேவையானால் ருசி பார்த்துவிட்டுக் காரம் சரியா இருக்கானு
பார்த்துட்டுத் தேவையானால் காரம், உப்புச் சேர்க்கலாம்.
ஆனால் கட்டாயமாக கரம் மசாலா க்ரேவியின் அளவுக்குத் தக்கவாறு ஒரு தேக்கரண்டி
சேர்க்கலாம். நன்கு சேர்ந்து கொதிக்கையில் கசூரி மேதி இரண்டு தேக்கரண்டி எடுத்துக்
கைகளால் கசக்கிச் சேர்க்கவும். வீட்டில் பச்சைக் க்ரீம் இருந்தால் அல்லது
கடையில் ஸ்ப்ரேயரோடு கிடைக்கும் க்ரீம் இருந்தால் அதைக் கீழே இறக்கியதும் சுற்றிக்
கோலம் போட்டாற்போல் போட்டுவிட்டுக் கொத்துமல்லியைப் பொடியாக நறுக்கிச்
சேர்க்கவும். இப்போது உங்கள் தஹி ஆலூ தயார். சமைத்த சூடான சாதம், சப்பாத்தி,
பராட்டா, பூரி ஆகியவற்றோடு சேர்த்துச் சாப்பிடலாம்.
நல்ல பிஞ்சு வெண்டைக்காய் பொதுவாக வடமாநிலங்களில் ஒரே சீராகக் கிடக்கும். அவற்றை வாங்கிக் கழுவிக் காய வைத்துவிட்டு (துணியால் துடைச்சு) பின்னர் நுனியை மட்டும் கீறி விட்டு வெண்டைக்காயை இரண்டாகப் பிளந்து உள்ளே காரப்பொடி+மல்லிப் பொடி+மஞ்சள் பொடி+சீரகப் பொடி+ கரம் மசாலா+ உப்பு+ பெருங்காயம் சேர்த்தக் கலந்த மசாலாப் பொடியை அடைத்துவிட்டுச் சிறிது நேரம் வைத்துவிட்டு வாணலியில் கொஞ்சமாக எண்ணெய் விட்டுக் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு வதக்கி எடுத்துக் கொண்டு மற்றவை இதே போல் க்ரேவி செய்து கொண்டு பரிமாறும் முன்னர் வெண்டைக்காய் போட்டுக் கிளறிவிட்டுப் பரிமாறலாம். கொத்துமல்லி எல்லாம் தூவித் தயாராக வைச்சுக்கணும். ஏனெனில் வெண்டைக்காயை முன்னாடியே போட்டுட்டாப் பின்னர் அது உள்ளே போய் ஊறிக் கொழகொழவென ஆக வாய்ப்பு இருக்கு.
=======================================================================================
குறியீடு

அனைவருக்கும் இனிய காலை வணக்கம். நல்லதே நடக்கட்டும்.
பதிலளிநீக்குவாங்க வெங்கட்.. வணக்கம். பிரார்த்திப்போம்.
நீக்குதஹி வாலே ஆலு - சுவையான குறிப்பு. எங்கும், எதிலும் ஆலு....... 😃
பதிலளிநீக்குஉருளை சேர்ப்பதில் வடக்கர்கள் பிரதானமானவர்கள். தினம் தினம் மூன்று வேளை கூட உருளை சாப்பிட அவர்கள் தயங்குவதில்லை. கலங்குவதும் இல்லை.
இப்போதெல்லாம் வாங்கும் உருளை இரண்டு நாளில் அழுகி விடுகிறது.. சமைத்தாலும் கல் போல இருக்கிறது... என்ன மாயமோ..
நீக்குகுறியீடு - பலரின் நிலை கூட இப்படித்தான் ஆகிவிடுகிறது என்பது நிதர்சனம்.
பதிலளிநீக்குஆமாம்!
நீக்குWhat a coincidence! இன்று எங்கள் வீட்டில் தஹி ஆலுதான். அதை சப்பாத்தியோடு சப்பிட்டுக் கொண்டுதான் கீதா அக்காவின் சமையல் குறிப்பை. என் மகள் ஏதோ காணொளியை பார்த்து செய்தாள். கீதா அக்காவின் அதே முறை. காரம் கொஞ்சம் தூக்கலாக இருந்தது.
பதிலளிநீக்குஅடடே ஆச்சர்யக்குறி. வாங்க பானு அக்கா..
நீக்குசப்பிட்டுக் !!!!
நீக்கு*சமையல் குறிப்பை படித்தேன் என்று வந்திருக்க வேண்டும்.
பதிலளிநீக்குசரி!
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா.. வணக்கம். இணைந்து பிரார்த்திப்போம்.
நீக்குமுருகா சரணம்
பதிலளிநீக்குவாங்க செல்வாண்ணா வணக்கம்.
நீக்குநலம் வாழ்க...
பதிலளிநீக்குசோர்வு நீங்கியதா? களைப்பு காணாமல் போனதா,,, வாழ்க நலம்.
நீக்குதஹி வாலே ஆலு - அருமை.
பதிலளிநீக்குஎங்கும் ஆலு, எதிலும் ஆலு......
முழங்காலில் வலி என்றாலும் .
ஆலுவை விடுவதில்லை...
வாழ்க ஆலூ!..
கரெக்ட். ஆனால் உருளை என்னை பெருமளவு கவர்வதில்லை!
நீக்குஅட! ஆலுன்னா உருளையா?
நீக்கு'எங்கும் ஆலு ; எதிலும் ஆலு !' என்று கொண்டாடியதைப் பார்த்து வெங்காயமோ என்று நினைத்தேன்
இன்று வெங்காயத்தை நறுக்கிக் கலந்து மையாய் பக்குவப்படுத்திய அவக்கோடாவை தொட்டுச் சாப்பிட்ட போதை வேறு!..
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குஇன்றைய திங்கள் பதிவில் தங்களது செய்முறையான தஹி ஆலூ நன்றாக உள்ளது. உருளைக்கிழங்கை வைத்து எப்படி செய்தாலும் சுவையானதாகத்தான் அமையும். எனக்கும், எங்கள் வீட்டில் மற்றவர்களுக்கும் உ. கி யை மிகவும் பிடிக்கும். பிறகு ஆங்காங்கே அது நம்மையும் பிடித்தவாறு மகிழும்.
உங்கள் விபரமான குறிப்புக்கள் அருமையாக இருக்கிறது. தக்காளியை மசாலா சாமான்களை சேர்த்து வதக்கி வரும் அந்த கிரேவியில் உ. கி சேரத்த பிறகு, தயாராக இருக்கும் தயிருடன் கலக்க வேண்டுமா? . காரப்பொடி, தனியா பொடி சேர்த்து கலந்து வைத்த அந்த தயிரைப்பற்றி நீங்கள் ஏதும் குறிப்பிடவில்லையே.! நான் தக்காளி கிரேவியில் கொண்டைக்கடலை, உகி சேர்த்து சப்பாத்தி, பூரிக்கு இப்படி செய்திருக்கிறேன். ஆனால் தயிர் சேர்த்ததில்லை. அதனால்தான் விபரம் கேட்டேன். நானும் இப்படி -( உங்கள் பாணியில்) ஒரு முறை செய்து பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நல்ல தயிராக மேல் ஆடையை நீக்காமல் இருந்தால் நல்லது. சுமார் அரை லிட்டர் எடுத்துத் தனியாக வைச்சுக்கவும்.
நீக்குமஞ்சள் தூள் ஒரு தேக்கரண்டி.
தனியாப் பொடி இரண்டு தேக்கரண்டி
வறுத்த சீரகப் பொடி ஒரு ;தேக்கரண்டி,
பெருங்காயத் தூள் தேவை எனில் அரைத் தேக்கரண்டி சேர்த்துக் கலந்து/கடைந்து வைக்கவும்.
நடுவில் நேரம் கிடைக்கையில் தயிர், மஞ்சள் பொடி, உப்பு, பெருங்காயப்பொடி, மிளகாய்ப் பொடி அரை தேக்கரண்டி, மல்லிப் பொடி ஒரு தேக்கரண்டி, ஜீரகப் பொடி அரைத் தேக்கரண்டி அந்தத் தயிரில் சேர்த்து நன்கு கடைந்து வைத்துக்கொள்ளவும்.
நீக்குதயாராக வைத்திருக்கும் தயிர்க்கலவையைச் சேர்க்கணும் இறக்கும் முன்னர் என்பதை எழுத விட்டிருக்கேன். மற்றபடி தயிரைத் தயார் செய்வது பற்றி இரண்டு முறை சொல்லிட்டு இதை விட்டிருக்கேன். சுட்டிக்காட்டியதற்கு; நன்றி கமலா ஹரிஹரன்.
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்குவணக்கம் சகோதரி
நீக்குநாம் தயிர் பச்சடிகள் செய்யும் போது, குறிப்பிட்ட காய்களை வதக்கி இறுதியில் தயிருடன் சேர்ப்போம். இதில் தயிரை பற்றி நீங்கள் இரு தடவைகள் சொல்லியும் பிறகு எப்போது அந்த தயிரை சமையலில் சேர்க்க வேண்டுமென சொல்லவில்லையே என ஆர்வமாக கேட்கத்தோன்றியது.
மேலும், நான் இதை தங்களுக்கு சுட்டிக்காட்ட வேண்டுமென்ற எண்ணத்தில் குறிப்பிடவில்லை சகோதரி. அந்த தயிரை எப்போது அந்த கிரேவியில் சேர்க்க வேண்டுமென் தெரிந்து கொள்வதற்காக கேட்டேன்.. கேட்டது தவறாயின் மன்னிக்கவும். நீங்கள் எல்லா வித சமையல் செய்வதிலும் எக்ஸ்பார்ட். நான் அப்படியில்லையல்லவா.? அதனால் தெரிந்து கொள்வதற்காக கேட்டேன். நன்றி சகோதரி..
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குகுறியீடு பகுதி வரிகள் படத்துடன் மனதை கனக்கச் செய்தது. உறவுக்காக எவ்வளவு உழைக்கும் மனிதர்களுக்கும் இது பொருந்தும். "இளமை நில்லாது யாக்கை நிலையாது" என்ற சீர்காழி அவர்களின் பாடல் இதற்குப் பொருத்தம். பகிர்வுக்கு நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா அக்கா.
நீக்குஇதுக்கு ஒரு டூப்ளிகேட் உண்டு. உருளைக்கு பதில் சோயா மீல் மேக்கர் உபயோகித்து செய்வது. செய்து பாருங்கள்.
பதிலளிநீக்குJayakumar
நான் இவை எதுவுமே வாங்கியதில்லை. பனீர் கூட வீட்டில் தயாரிக்கும்போது தான் பயன்படுத்துவேன். மற்றபடி பனீர் வெளியே வாங்கியதில்லை. சீஸ் ஸ்லைஸ்கள் எப்போதேனும் சான்ட்விச் பண்ண வாங்குவேன். அதிலும் ப்ரான்ட் மட்டும் தான். அமுல் சீஸ் ஸ்லைஸ்கள் மட்டுமே.
நீக்குஇதே உருளைக்கிழங்கைத் தயிர் சேர்க்காமல் வெறும் மசாலா கிரேவியில் மட்டும் போட்டுக் கலந்து கொதிக்க வைத்துக் கீழே இறக்கி கரம் மசாலாத் தூளுடன், கசூரி மேதியும் போட்டுக் கலந்து கொத்துமல்லி தூவி, மேலே க்ரீமால் அலங்கரித்தால் ஆலு தம் ரெடி.
நீக்கு// சோர்வு நீங்கியதா?
பதிலளிநீக்குகளைப்பு காணாமல் போனதா,,,
வாழ்க நலம்....//
சோர்வும் உடல் நலிவும் ஒட்டிப்
பிறந்தவை..
நலமே வாழ்க
அதுவும் சரிதான்.
நீக்குgrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr@ஸ்ரீராம், லேபிலில் வந்திருக்குன் என்னோட பெயரைச் சரியாப் போடுங்க. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
பதிலளிநீக்குஆ.. மன்னிச்சுக்குங்க... சரி செய்து விட்டேன்.
நீக்குகுறியீடு எல்லாப் பொருட்களுக்கும் பொருந்தியவை தானே. காருக்கு மட்டும் இல்லை.
பதிலளிநீக்குஅது சரிதான். என்ன செய்ய. கார் படம் கிடைத்தது. அதை வைத்து எழுதினேன்!
நீக்குஎனக்கு உருளைக்கிழங்கு சாப்பிடுவதிலோ, வாழைக்காய் சாப்பிடுவதிலோ பிரச்னை ஏற்பட்டதில்லை.
பதிலளிநீக்குஎனக்கும் பிரச்னை எதுவும் ஏற்பட்டதில்லை. உருளை அவ்வளவு ப்ரியமில்லை. அஷ்டே!
நீக்குபெயர் வாயில் நுழயாத ஒண்ணு. கீதா சாம்பசிவம் மேடம் அனுப்பிய செய்முறை. நல்லாத்தான் இருக்கும், யாரேனும் செய்து தந்தால்
பதிலளிநீக்குஆலூ குறிப்பு நல்ல செய்முறை ..
பதிலளிநீக்குஉருளை எங்களுக்கும் பிடித்தமானது தயிர் சேர்த்தும் ,காரத்துக்காக தயிர் இல்லாமலும் செய்வதுண்டு.
அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குதஹி வாலே ஆலூ செய்முறை அருமையாக இருக்கிறது.
பதிலளிநீக்குபடங்களும் அருமை.