புதன், 21 ஜூலை, 2010

உள் பெட்டியிலிருந்து....இந்த மாதம்.

பொது அறிவுக் கேள்வி. 

கண் தெரியாத, காது கேட்காத, படிக்காத, ஊமைப் பெண்ணை ஒரு வாலிபன் காதலிக்கிறான். அவளைத் தொடாமல் அவளிடம் தன் காதலைச் சொல்ல வேண்டும். எப்படி?
=========================================================================
ஊக்க வரிகள்: 


இப்போது இல்லை என்றால் எப்போது? உன்னால் முடியாதென்றால் யாரால் முடியும்?
======================================================================
இரண்டாவதாய் வருபவன் சொல்வது..."முடியும்...ஆனால் கஷ்டம்.."

முதலாவதாய் வருபவன் சொல்வது,"கஷ்டம்..ஆனால் முடியும்"
============================================================
கனவுகளைக் கண்ணில் தேக்கினால் கண்ணீராய் கீழே விழுந்து விடும். அதையே இதயத்தில் நிறுத்தினால் ஒவ்வொரு இதயத் துடிப்பும் அந்தக் கனவுகளை நினைவு படுத்திக் கொண்டே இருக்கும். (யாரோ)
============================================================
நல்ல எண்ணமா, நடிப்பா?

தோற்றவன் புன்னகையைத் தொலைக்காமல் இருந்தால், வென்றவனுக்கு வெற்றி பெற்ற திருப்தியோ / சந்தோஷமோ  இருக்காது.
=========================================================
நேசிப்பது எல்லாம் கிடைத்து விட்டால் கண்ணீர்த் துளிகளுக்கு மதிப்பில்லை. கிடைப்பதை எல்லாம் நேசித்து விட்டால் கண்ணீர்த் துளிகளுக்கு வேலை இல்லை.
=========================================================  
ஷேக்ஸ்பியர் :
காரணமே இல்லாமல் வருவதுதான் உண்மையான அன்பு. காரணம் இருந்தால் அது உண்மை அன்பு அல்ல. (அப்படியா?)
==========================================================
ஜப்பான் பஸ்-ஸ்டாப்பில் பார்த்த வாசகம்: 
இங்கு பஸ்கள் மட்டுமே நிற்கும். உங்கள் நேரம் அல்ல. உங்கள் இலக்கை நோக்கி நடந்து கொண்டே இருங்கள்.  
======================================================
அனுபவங்கள் ஆண்களை முழுமையானவனாக்குகின்றன. பெண்கள்? அவர்கள் பிறக்கும்போதே முழுமையானவர்களாகத்தான் பிறக்கிறார்கள். (perfect)
=====================================================
மும்தாஜ் ஷாஜஹானின் ஏழு மனைவிகளில் நான்காவது மனைவி.
ஷாஜஹான் மும்தாஜை மணக்க அவரது முதல் கணவனை போரில் கொன்றுவிட்டுதான் அவர் கைப் பிடித்தார். மும்தாஜ் தன் பதினாலாவது பிரசவத்தின்போது இறந்து போனார்.
தாஜ் மஹால் காதலின் சின்னம்தானே! 
==========================================================
உங்களுடைய தவறுகளை அறிந்து கொள்ள உங்கள் எதிரிகளின் பேச்சைக் கேளுங்கள். உங்கள் தவறுகளை உங்களை விட அறிந்தவர்கள் அவர்கள்தான்.
=================================================================.
ஒவ்வொரு மழைத்துளியும் உன் புன்னகை என்றால், உன் வாழ்வில் கண்ணீர்த்துளிகளுக்கு இடமே இல்லாமல் பெரு மழை பெய்ய வேண்டுகிறேன்.
========================================================
நீங்கள் சரியாயிருக்கும் பட்சத்தில் கோபப் பட வேண்டிய தேவை இல்லை. நீங்கள் தவறாயிருக்கும் பட்சத்தில் கோபப் பட உரிமையில்லை. - மகாத்மா காந்தி.
====================================================
பாதை அழகாயிருந்தால் அது எங்கு செல்கிறது என்று உறுதி செய்து கொள்ளுங்கள். ஆனால் இலக்கு சரியானதாக இருந்தால் பாதை எப்படி இருந்தாலும் கவலைப் படாதீர்கள். (யாரோ)  
=========================================================
குறு விளக்கங்கள் :
*மரணம் : வாழ்க்கை முடியுமிடம்.
*வெறுப்பு : அன்பு முடியுமிடம்.
*விவாகரத்து : திருமணம் முடி(றி)யுமிடம்.
*கடல் : நிலப்பரப்பு முடியுமிடம்.,
*நட்பு : "நான்" மறைந்து "நாம்" ஆரம்பிக்குமிடம்.
======================================================
அடுத்தவர் திறமையை அடியொற்றுவது ஆரம்பம் என்றால் நம் திறமையை அடுத்தவர் அடிக்கொள்வது முடிவு...கே. ஜி. ஜவர்லால்.
=======================================================
வாழ்க்கை ரசாயனம் :
துன்பங்களை நீர்த்து, கவலைகளை ஆவியாக்கி, தவறுகளை வடிகட்டி, மமதையைக் கொதிக்க வைத்தால் மகிழ்ச்சி எனும் படிமங்களைப் பெறலாம்.
============================================================
எல்லோரையும் திருப்திப்படுத்த நினைப்பது என்பது ஒரு நோயாக உன்னைத் தின்று விடும். இது எப்படி என்றால் கெட்ட பெயரோடு நல்ல வாழ்க்கை வாழ்வதை விட நல்ல பெயரோடு மோசமான வாழ்க்கை வாழ்வது என்பதைத்தான் தரும்.
===============================================================
தாமதமாக உணரும் உண்மை...தத்துவம்!
சிறுவயதில் எப்போதடா பெரியவனாக ஆவோம் என்று ஏங்குகிறோம். ஆனால் இப்போது நினைத்துப் பார்க்கும் போது, உடைந்த இதயங்களையும், கசப்பான கண்ணீர் அனுபவங்களையும் விட உடைந்த பென்சில்களும் முடிக்காத வீட்டுப் பாடங்களுமே தேவலாம் என்று தோன்றுகிறது!

பிள்ளையாய் இருந்து விட்டால் இல்லை ஒரு தொல்லையடா. 
===============================================================

12 கருத்துகள்:

  1. //பொது அறிவுக் கேள்வி.


    கண் தெரியாத, காது கேட்காத, படிக்காத, ஊமைப் பெண்ணை ஒரு வாலிபன் காதலிக்கிறான். அவளைத் தொடாமல் அவளிடம் தன் காதலைச் சொல்ல வேண்டும். எப்படி?//

    வாயால்தான்.
    (அந்த காதலை அவள் புரிந்து கொள்ள வேண்டும் என்றோ ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றோ சொல்ல வில்லையே?)

    பதிலளிநீக்கு
  2. //கண் தெரியாத, காது கேட்காத, படிக்காத, ஊமைப் பெண்ணை ஒரு வாலிபன் காதலிக்கிறான். அவளைத் தொடாமல் அவளிடம் தன் காதலைச் சொல்ல வேண்டும். எப்படி?//
    அவள் மேல் படாமல் அவள் கழுத்தில் ஒரு பூமாலையை அணிவிப்பதன் மூலமாக அவன் தன் காதலை அவளுக்கு உணர்த்தலாம்.
    ஊக்க வரிகள் எல்லாமே அருமை.
    //எல்லோரையும் திருப்திப்படுத்த நினைப்பது என்பது ஒரு நோயாக உன்னைத் தின்று விடும். இது எப்படி என்றால் கெட்ட பெயரோடு நல்ல வாழ்க்கை வாழ்வதை விட நல்ல பெயரோடு மோசமான வாழ்க்கை வாழ்வது என்பதைத்தான் தரும்.//
    இது மிகவும் அருமை.

    பதிலளிநீக்கு
  3. அவளுக்கு எப்படியோ ஒரு வாசமுள்ள பூவொன்றைச் சேர்த்துவிடுகிறான்.புரிந்துகொள்வாள் !

    உங்கள் பொன்மொழிகளை எப்போதும் நான் எடுத்துக்கொள்கிறேன்.
    நன்றி ஸ்ரீராம் - எங்கள் புளொக்.

    பதிலளிநீக்கு
  4. ஊக்க வரிகள், மனதை ஊக்கப்படுத்துவதாக உள்ளன.

    பதிலளிநீக்கு
  5. //கண் தெரியாத, காது கேட்காத, படிக்காத, ஊமைப் பெண்ணை ஒரு வாலிபன் காதலிக்கிறான். அவளைத் தொடாமல் அவளிடம் தன் காதலைச் சொல்ல வேண்டும். எப்படி?//

    எனக்கு ஒரு பதில் தோணுது.. அப்புறம் நண்பர் 'சாய் ராம்' பாணில / ஸ்டைலுல இருக்குனு என்னை எல்லாரும் கிண்டல் செய்யுவாங்களே..

    வேணாம்.. நா நானாவே இருந்து யோசிச்ச பதில்...... still thinking.. will be back.

    பதிலளிநீக்கு
  6. ஊக்க வரிகள் டாப். நன்றி.

    பதிலளிநீக்கு
  7. மீனாக்ஷி SPS பதிலை வழிமொழிகிறேன்


    விஜய்

    பதிலளிநீக்கு
  8. காதலன் தன் வாயால் சொல்லுவான். கரெக்ட் பதில்னு நினைக்கிறேன். பார்ப்போம்.

    ஊக்க வரிகள் எல்லாம் வைர வரிகள். நல்லாயிருக்கு.

    பதிலளிநீக்கு
  9. பாதை அழகாயிருந்தால் அது எங்கு செல்கிறது என்று உறுதி செய்து கொள்ளுங்கள். ஆனால் இலக்கு சரியானதாக இருந்தால் பாதை எப்படி இருந்தாலும் கவலைப் படாதீர்கள். (யாரோ)


    ..... This is the one, I liked the most. எல்லாமே நல்லா இருக்குதுங்க.... பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  10. //Madhavan said...

    எனக்கு ஒரு பதில் தோணுது.. அப்புறம் நண்பர் 'சாய் ராம்' பாணில / ஸ்டைலுல இருக்குனு என்னை எல்லாரும் கிண்டல் செய்யுவாங்களே.. //

    மாதவா, அதனால தான் உன்னை நல்லவன்னு சொல்லுறாங்க ?

    இதோ என்னுது - "அவ புருஷன் கிட்டே போய் சொல்லுவான் !. பட்லி நல்ல இருந்த நான் என்னவேணா செய்வேன் !!" மனசாட்சி - "சாய் - நீ கேட்ட பயடா !!"

    மாதவன், இப்போ இப்படி வசதி !

    பதிலளிநீக்கு
  11. //அனுபவங்கள் ஆண்களை முழுமையானவனாக்குகின்றன. பெண்கள்? அவர்கள் பிறக்கும்போதே முழுமையானவர்களாகத்தான் பிறக்கிறார்கள். (perfect)//

    என்ன ஸ்ரீராம், எவ்வளவு துட்டு வாங்கினீங்க - மீனாக்ஷி, ஹேமா, அனன்யா மகாதேவன், கீதா சந்தானம் மற்றும் சித்ராவிடம் ? இது ரொம்ப ஜாஸ்தி இல்லே !

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!