புதன், 28 ஜூலை, 2010

படப்பெயர்கள் கொண்ட குறுக்கெழுத்துப் புதிர்


மேலிருந்து  கீழ்: 
1) சிவாஜி பாரதியாராக வந்தார் ஒரு பாடல் காட்சியில். (தமிழர், மலையாளத்தவர், தெலுங்கில் பாட்டுப் பாடி போட்டிங் போவது பற்றி.) (படப் பெயர் 9 எழுத்துக்கள்)

2) KSG என்னும் மூன்றெழுத்து இயக்குனர் இயக்கிய நான்கெழுத்து நடிகை நடித்த மூன்றெழுத்துப் படம். அப்புறம் இதே பெயரில் ஒரு தொலைக்காட்சி சீரியலும் பிரபலம்.

4) நடிகர் திலகமும், சூப்பர் ஸ்டாரும் நடித்த நான்கு எழுத்துப் படம். 

5) நல்ல 'குண'மும் 'அழகு'ம் ஒருங்கே கூடிய பெண்.

6) செண்பகப் பாண்டியனுக்கு சந்தேகம் வந்தது. நாகேஷுக்கு நகைச்சுவை சிகரத்தைப் பிடிக்க சந்தர்ப்பம் வாய்த்தது!

8) ஆறோடும் மண்ணில் என்றும் நீரோடும் ....  பாடல் இடம் பெற்ற மூன்றெழுத்துப் படம். இந்தப் படப் பாட்டில் ஒரு சிறப்பு, கதிர் அறுக்கின்ற  நாளை, நெல்லின் மணநாளாக சித்தரித்து ஒரு வித்தியாசமான வரி.

10) அரசி Honey bee 

11) Running river.

12) சிவாஜி. நடிப்பில் அவர் ஒரு - - - - (நான்கெழுத்து) 

13) அந்தக் காலத்தில் வந்த, முன்னாள் முதல்வர் (பேயாக) நடித்த மூன்றெழுத்து பேய்ப் படம்.

14) 16) 17)  சமீப கால sports படம். ( 4 + 3 + 2 ) எழுத்துக்கள்.


19) இதுவும் ஒரு மூன்றெழுத்துப் படம்தான். இரண்டு முறைகள் இதே தலைப்பில் படம் வந்துள்ளது. முன்பு வந்த படத்தில் நடித்தவர் பெயரும் மூன்றெழுத்து + மூன்றெழுத்து. பிறகு நடித்தவர் பெயரும் மூன்றெழுத்து + மூன்றெழுத்து.

இடமிருந்து வலம் :  
1) இந்த மூன்றெழுத்து உள்ள டாக்டர்களுக்கு எப்பொழுதுமே டிமாண்ட் இருக்கும். 

3) ஒரு மூன்றெழுத்து முதல்வரின் மூன்று இலக்க படம். இதில் வந்த ஒரு பாடல் காட்சி, அந்த முதல்வர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நாட்களில் பட்டி தொட்டி எங்கும் பாடப் பெற்றது.

7) சிலர் இந்த மூன்றெழுத்துப் படப் பெயரை விளையாட்டாக '3D' என்பார்கள். 

9) முடி எங்கேயாவது வணங்குமா? அது பற்றி வந்த ஐந்தெழுத்துப் படம். 

15) உயர்ந்த மனிதனில் கலக்கிய இரண்டு நடிகர்கள் இந்த நாலெழுத்துப் படத்தில் ரசிகர்கள் எல்லோரையும் அறுத்து ஓட ஓட தியேட்டரை விட்டு விரட்டினர் என்று சொல்வார்கள். 

18) கமல்ஹாசன், ஸ்ரீப்ரியா நடித்த பாம்புப் படம். ஸ்ரீப்ரியா கண்களில் ஸ்பெஷல் லென்ஸ் பொருத்திக்கொண்டு நடித்தார் என்று சொன்னார்கள். 

வலமிருந்து இடம் :

8) இரவுச் சூரியன் என்பதன் எதிர்ப் பதங்கள். 

மேலிருந்து கீழும் இல்லை; இடமிருந்து வலமோ அல்லது வலமிருந்து இடமோ கிடையாது: 

18) முன்காலத்தில் வந்த ஓரெழுத்துப் படம்.   


மணி (ஆயிரத்தில் ஒருவன்) இந்தப் புதிருக்கு ஏற்கெனவே முழுவதும் விடை சரியாக எழுதிவிட்டார். அவருக்கு எங்கள் ப்ளாக் அளிக்கும் பரிசு 1001 பாயிண்டுகள் உரித்தாகுக! 
ஸ்ரீமாதவன் அவர்களும் நிறைய சரியான விடை அனுப்பி உள்ளார். 


இங்கே க்ளூ கொடுக்கப்பட்டுள்ள இருபது படங்களின் பெயரையும், (அல்லது தெரிந்த அளவுக்கு ) வாசகர்கள், engalblog@gmail.com ஜி மெயிலுக்கு அனுப்பவும். 

கருத்துகள் இல்லை: