சனி, 15 ஜனவரி, 2011

கிஷோர்...கிஷோர்...2

கிஷோர் பாடினால் நாம் ரசிக்கலாம்...நாம் பாடினால் யார் ரசிப்பார்...! (தத்துவம்..!)

ஆந்தி படத்தில் அத்தனை பாடலும் அற்புதமான பாடல். ஆந்தி என்றால் புயல். அரசியல்வாதி மனைவியைத் திருமணம் செய்யும் கணவனாக சஞ்சீவ் குமார்.
"எங்கிருந்து வருகிறோம்...எங்கு போகிறோம்..இந்தத் தகவல் நமக்குத் தெரிவதில்லை.."
குல்சாரின் அருமையான வரிகள்...அரைகுறையாகப் புரியும்போதே இவ்வளவு ரசிக்க முடிகிறதே...அனைத்தும் புரிந்தால்...?


இதே படத்தில் வாழ்வில் பல சங்கடங்களைச் சந்தித்து பின்னர் மனைவியாக இருந்தாலும் நெருங்க முடியாத உயரத்துக்குச் சென்றதால் பிரிந்த மனைவியை சந்திக்கும் போது பழைய நினைவுகளில் மனம் பாடும் (படும்) பாடலாக வரும் பாடல். என்ன பாடல்...என்ன சுகமான ட்யூன்..? லதாவின் குரலுக்குதான் என்ன இனிமை? கிஷோருக்கு கொஞ்சம்தான் சான்ஸ். ஆனால் அவர் பாடும் சரணத்தை நான் இப்படி அர்த்தப் 'படுத்தி' வைத்திருக்கிறேன்..."இரவை நிறுத்தி விடு...நீ என்னுடன் இருக்கும் (பேசும்) இந்த இரவின் சந்திரன் மறையவே கூடாது..இரவு முடியக் கூடாது.."


ஆப் கி கசம் பாடல்கள் அனைத்தும் மிக இனிய பாடல்கள். ஆர் டி பர்மனின் அற்புதங்கள். முதலில் ஒரு காதல் பாடல்.கிஷோர் லதாவின் மிக இனிய பாடல்களில் ஒன்று.


அழகிய மும்தாஜ்..

இதே படத்தில் மனைவியை சந்தேகப் பட்டு அவளைப் பிரிய நேரிட்டு வாழ்வைத் தொலைத்த நாயகன் "வாழ்வின் பயணங்களில் உழன்று" பாடும் பாடல்...
அழகிய ராஜேஷ் கன்னா படிப் படியாக வயதாகி பிச்சைக் காரன் தோற்றத்துக்கு வருவதைப் பாருங்கள்...


சந்தித்து விட்டுப் பிரிவது காதலில் ரொம்பக் கஷ்டமான விஷயம்..."போய் வருகிறேன் என்று மட்டும் சொல்லாதே.." என்று ஒரு பாடலே பாடி விடுகிறான் நாயகன்.."கபி அல்விதா நா கெஹ நா..." என்று உருகும் கிஷோர் குரல்...காட்சி கொஞ்சம் திராபை. பாடலைக் கேட்கத் தவறாதீர்கள்! சல்தே சல்தே படத்தில்...பப்பி லஹரி இசையில்.
"எங்கு போனாலும் எனது இந்தப் பாடலை நினைவில் வை...அழுகையிலும் சிரிப்பிலும் நீ போதும் எனக்கு காதலில்..காதலித்துக் கொண்டே நாம் எங்காவது காணாமல் போய் விடுவோம்..." என்றெல்லாம் இந்தப் பாடலை கொச்சையாக மொழி பெயர்க்கலாம். காட்சியை மறந்து குரலிலும் பாடலிலும் கவனம் வைத்து பாடல் கேளுங்கள்..






19 கருத்துகள்:

  1. ஓ நீங்க பொங்கல் இல்லையா லோஹ்ரி பைசாகியா? பொங்கல் வாழ்த்துக்கள் 'எங்கள் ப்லாக்"! ;)

    பதிலளிநீக்கு
  2. என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். ;-)

    பதிலளிநீக்கு
  3. Porkodi (பொற்கொடி) said...
    ஓ நீங்க பொங்கல் இல்லையா...

    நாங்க 'எங்கள்!'

    பதிலளிநீக்கு
  4. எல்லாமே நல்ல தேர்வுகள். எல்லாமே என்னுடைய தொகுப்பிலும் உண்டு.
    எனக்கு தெரிந்த வரை வேறு யாரையும் விட நடிகர் சஞ்சீவ் குமாருக்கு கிஷோரின் குரல் ஒத்துப்போவது போலவே தோன்றும். இது வெறும் பிரமையா இல்ல உண்மையா நீங்களே சொல்லுங்கள்.

    கரவட்டி பதல் தி ரஹே எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல்.

    இனிய பொங்கல் வாழ்த்துக்கள் ஸ்ரீ ராம்.

    பதிலளிநீக்கு
  5. பாடலை, படத்தை அனுபவித்து தந்துள்ளீர்கள். பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. நல்ல பதிவு..
    பகிர்விற்கு நன்றி..

    பதிலளிநீக்கு
  7. இந்தியில் பாடலைப் படமாக்க மிகவும் சிரம்பப்படுகிறார்கள். நம் ஊர் ஸ்ரீதர் போல் visualization செய்ய வரவில்லை. கபூர் ஆனந்த் பச்சன் கான் என்று ஸ்டார் பவரை வைத்து பாடல் காட்சிகளை ஒப்பேற்றியிருக்கிறார்கள். நீங்கள் தொகுத்து வழங்கியிருக்கும் பாடல்கள் செவிக்கு இனியவை.

    பதிலளிநீக்கு
  8. குரு தத், ரிஷிகேஷ் முகர்ஜி படங்களில் பாடல் காட்சிகள் நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  9. கபூர் படங்களில் ராஜ்கபூர் படங்களில்(குறிப்பாக நூதனுடன் நடித்தவை:) பாடல் காட்சிகள் நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  10. நர்கீஸ் என்று சொல்ல வந்தேன்.. (யார் இந்த நூதன்? எங்கிருந்து என் மனதுள் வந்தார்?)

    பதிலளிநீக்கு
  11. அப்பாதுரை,
    நூதனா...யார் அது! மிலன் எல்லாம் பார்த்ததுமில்லை அதைப் பற்றி பதிவு வந்த இடங்களில் கமெண்ட் அடித்ததுமில்லை.ஆச்சர்யம். நூடன் ஸ்டவ் என்று கேள்விப் பட்ட நினைவு.

    பதிலளிநீக்கு
  12. நன்றி பொற்கொடி,

    நன்றி ஆர் வி எஸ்,

    நன்றி கக்கு மாணிக்கம். ப்ளேக் மெயில் படத்தின் 'பல் பல் தில் கே பாஸ்' பாடல் முயற்சித்த போது அது ஒட்ட மறுத்து விட்டது! இல்லா விட்டால் அதுவும் லிஸ்ட்டில் இருந்தது!

    நன்றி தமிழ் உதயம்,

    நன்றி மாதவன்,

    நன்றி அப்பாதுரை, காட்சிகள் பெரும்பாலும் நம் மன அலைகளுடன் ஒத்து வருவதில்லை. மீறி சில நல்ல காட்சிகளைக் கொண்ட பாடல்கள் உண்டு. ஆந்தி பாடல் காட்சிகள் நன்றாக இருக்குமே..

    கிஷோர் ரசிகை மீனாட்சி வந்து கருத்து சொல்லுவார் என்று காத்திருக்கிறோம்... இன்னும் காணோம்.

    அனைவருக்கும் எங்கள் பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  13. இந்தி மாலும் நஹி...எஸ்.பி.பியின் எக் துஜே கேலியே தேரே மேரே பீச் மே பாட்டில் மட்டும் சொக்குவேன்...கமல் நடிப்பும் எஸ்.பி.பி குரலுக்குமான போட்டியது....
    http://www.youtube.com/watch?v=Qc2Rl6zXy6Y
    அவருக்கு மிகப் பிடித்தவர் கிஷோர் என்பார்... கேட்டு பழக வேண்டும்...

    இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  14. எங்கள் (கொழுப்பு) ஆசிரியர்16 ஜனவரி, 2011 அன்று 5:44 AM

    // அப்பாதுரை said...
    நர்கீஸ் என்று சொல்ல வந்தேன்.. (யார் இந்த நூதன்? எங்கிருந்து என் மனதுள் வந்தார்?)//

    திருமதி அப்பாதுரை கேட்டிருக்கவேண்டிய கேள்வி. (எங்களுக்கு தெரியாது அப்பா!)

    ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபத்தேழில், மிலன் படத்திற்கு சிறந்த நடிகை ஃபிலிம்ஃபேர் அவார்ட் வாங்கும்பொழுது, நூடன், 'என் நன்றி எல்லாம் அப்பாவுக்குத்தான்' என்றார். இப்போதான் தெரியுது அவர் சொன்ன 'அப்பா' யார் என்று!
    ஹய்யா மாட்டிகிட்டாரு அப்பா.
    நாராயண, நாராயண!

    பதிலளிநீக்கு
  15. superb!!! beautiful songs....

    i ll still add these to that list though:
    Khilte hain gul yahaan (sharmilee)
    Chingari koi bhadke (Amar Prem)
    Kuchch toh log kahenge (Amar Prem)
    Gata rahe mera dil (Guide)
    Tere mere milan ki yeh raina(abhimaan)
    ..... innum evalovo! :)

    happy happy pongal!

    பதிலளிநீக்கு
  16. நீங்களும் பொங்கல் பண்டிகை பிஸியில் இருந்திருப்பீர்கள் என்று நினைத்து ப்ளாக் பக்கம் வரவே இல்லை. இப்பொழுதுதான் பார்த்தேன், எங்கள் பொங்கல்
    ஸ்பெஷலை. மிக மிக மிக நன்றி நன்றி நன்றி! (மூன்று முறை சொல்லும் எதுவும் மனதில் தங்கும் என்று சமீபத்தில் படித்ததால்)

    பதிவில் ஆந்தி பட பாடல்கள் இரண்டையுமே பதிவிட்டதற்கு உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி.
    ''தேரே பினா ஜிந்தகி சே.....' இந்த பாடலை எப்பொழுது கேட்டாலும் நான் என்னையே மறந்து விடுவேன். வார்த்தைக்கு வார்த்தை நான் கிஷோர் அவர்கள் குரலை மிகவும் ரசிப்பேன். எனக்கு ஹிந்தி கொஞ்சம் கூட தெரியாததால், நான் முதன் முதலாக இந்த பாடலை கேட்டபோது, ஏனோ இந்த பாடலின் அர்த்தத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் மிகவும் அதிகமாய் இருந்தது. அதனால் என் தோழி ஒருத்தி மூலம் தெரிந்து கொண்டேன். அர்த்தம் புரிந்தவுடன் மேலும் கண் கலங்கி விட்டது.
    'நீயில்லாத வாழ்கையில் எனக்கு எந்த complaint -ம் இல்லை,
    ஆனால் நீயில்லாமல் நான் வாழ்வது வாழ்க்கையே இல்லை' அர்த்தத்தை சரியாக எழுதி இருக்கிறேனா? எந்த காலத்திலேயோ கேட்டது.
    'தும் ஆகையே ஹோ....' இந்த பாடலின் மெட்டு, குறிப்பாக சரணத்தில் மனதை உலுக்கி எடுத்துவிடும்.
    இந்த படத்தின் கதையும், படத்தில் கதாநாயகியாக நடித்தவர் மேக்கப் இரண்டும் இந்திரா காந்தி அவர்களை நினைவூட்டுவதாக இருந்ததால் அப்பொழுது இந்த படத்தை திரையிட தடை செய்து விட்டார்கள். ஹிந்தி பட உலகில் வந்த மிக அருமையான படம் இது.
    இதற்கு மேலும் நான் உங்களை கேட்பது கொஞ்சம் ஓவர்தான். இருந்தாலும் கேட்டு விடுகிறேன், இல்லை என்றால் என் தலை வெடித்து விடும். :)
    கிஷோர்....கிஷோர்.... 3 பதிவிட்டால் 'jaanejaan dhundhta....' பாடலை பதிவிடுங்கள், ப்ளீஸ்!

    பதிலளிநீக்கு
  17. அறுபத்தேழுலயே சொல்லிட்டாங்களா, அடடா! தெரியாம போச்சே.
    நூதன் திரி ஸ்ட்வ்வா இருந்தாலும் பத்திக்குமே? சமையலுக்கு மையலுக்கும் ஸ்டவ் வேணுங்க :)
    சமையல்னதும் நினைவுக்கு வருது. டிவி வந்த நாட்கள். வாரத்தில் ஒரு நாளோ என்னவோ இந்திப்படம் போடுவார்கள். என் நண்பன் வீட்டில் புதிதாக வாங்கியிருந்த ECTVல் அனாரி படம் பார்த்துக்கொண்டிருந்தாம். படத்தில் வரும் 'வோ சாந்த் கிலா' அருமையான பாட்டுக்கு அருமையான நூதன் அருமையாகப் பாடுவது போல் நடிப்பார். 'சம்ஜ்னேவாலே சமஜ்கயே ஹைன், நா சம்ஜே?' என்று முகத்தில் நிலாப்பூசி நிறுத்துவார். இரண்டு மூன்று முறை இதைப் பார்த்துவிட்ட நண்பனின் சித்தப்பா, "டேய் அன்பு, இவ என்னடா நான் சமைஞ்சேன் நான் சமைஞ்சேன்னு பாடிட்டு திரியறா? பொண்ணா இவ?" என்றார். இன்றைக்கும் பாடலைக் கேட்கும் போது சிரிப்பேன். (ஒரு தடவை சிரித்துவிட்டு வருகிறேன்.)

    பதிலளிநீக்கு
  18. பொங்கலுக்கும் ஹிந்தி பாட்டுக்கும் என்ன relation ...????
    இப்படிக்கு,
    கொஸ்டின் கோகிலா

    எனக்கு புரியாத சப்ஜெக்ட் எல்லாம் போட்டா இப்படி தான் கொஸ்டின் கேப்பேன்... ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
  19. சில பாடல்கள் நமக்கு காட்சியைப் பார்க்கிறவரைக்கும் பிடிக்கும். பார்த்ததும் பிடிக்காமப் போயிடும். உதாரணம் பிரின்ஸ் படத்தில் வரும் ரஃபி பாட்டு. சிலது காட்சிக்காகப் பிடிச்சிப் போயிடும். உதாரணம் பாபி படத்தில ‘எ பிரேமு ரோக்’

    http://kgjawarlal.wordpress.com

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!